Showing posts with label நக்கலும் நையாண்டியும். Show all posts
Showing posts with label நக்கலும் நையாண்டியும். Show all posts

Thursday, September 9, 2010

கோமாளியும் மாஸ்ஹீரோவும்

அதிமுக்கிய முன்குறிப்பு : இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்களையோ அல்லது இறந்தவர்களையோ குறிப்பிடவில்லை.


நான் நேத்திக்கு ஒரு மாஸ்ஹீரோவை சந்திச்சு கதை சொல்லலாம்னு அவரோட வீட்டுக்குப்போனேன். அங்கு நடந்த உரையாடல்கள் உங்களுக்காக..
நான் அவரோட வீட்டுக்குப் போயிட்டேன். அங்க வாட்ச்மேன் இருந்தார். நான் அவருக்கிட்ட 


"சார் இது பிரபல சூப்பர் ஹீரோ *** வீடுதானுங்களே..? "  என்றேன்.


" ஆமா அதுக்கென்ன..? நீங்க யாரப் பார்க்கணும்..? "


"சார் நான் கதை சொல்லுறதுக்காக வந்திருக்கேன் , அவரு கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன்." 


அவரு என்ன ஒரு மாதிரியா பார்த்துட்டு " ரீமேக் படம்களா.?" அப்படின்னார்.


" இல்லைங்க .. ஏன் .? "


" இல்ல . சார் ரீமேக் படம்னா சீக்கிரமா முடிவு பண்ணிடுவார். அதான் . சரி போங்க " என்று வழிவிட்டார்.


உள்ள அவரோட P .A இருந்தார். அவருகிட்ட விசயத்த சொன்னேன். அதுக்க கேட்ட அவரு 
" இன்னும் மூணு வருசத்துக்கு சார் பிஸி ., நீங்க போயிட்டு அப்புறமா வாங்க.! " அப்படின்னார்.


"சார் சார் ., என்னோட கதை மட்டும் கேட்டீங்கன்னா இந்தப் படத்தைதான் முதல்ல பண்ணனும் அப்படின்னு சொல்லுவீங்க." அப்படின்னேன்.


" இல்லீங்க., நீங்க கிளம்புங்க " அப்படின்னு அவர் சொல்லிட்டிருக்கும் போதே அந்த மாஸ் ஹீரோ (?!?) வந்தார். என்ன மேட்டர்னு கேட்டுட்டு சரி கதைய சொல்லுங்க அப்படின்னு சொன்னார்.


எனக்கு பயங்கர சந்தோசம்.. கதைய சொல்ல ஆரம்பிச்சேன். " சார் , இது ஒரு திரில்லர் , ஏக்சன் , காமெடி, லவ் சப்ஜெக்ட்.! "


" நாளும் கலந்த கலவையா.? சரி  சொல்லுங்க.!"


"இந்தப்படத்துல நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க அப்படின்னே பாதி வரைக்கும் சொல்லுறதில்லை.! "


" ஓ , சஸ்பென்சா.? ஓகே மேல சொல்லுங்க."


"நீங்க ஒரு நாள் பஸ்ல போயிட்டிருக்கீங்க. அந்த பஸ்ல தான் ஹீரோயினும் வராங்க. அவுங்க லேடீஸ் சீட்ல உட்கார்ந்திருக்காங்க.அவுங்களப்பாத்த உடனே உங்களுக்கு லவ் வந்திடுச்சு. அப்பவே அந்த ஸ்பாட்லையே கிஸ் அடிக்கிறீங்க. அந்த இடத்துல ஒரு சாங்.நீங்க கிஸ் பண்ணிட்டிருக்கறதையே லாங் சாட்ல , ஜூம்சாட்ல அப்படி இப்படின்னு ரவுண்டு ட்ராலி போட்டு காட்டுறோம். அந்த சாங்ல டான்ஸ் மூவ்மென்டே கிடையாது. அதையே நாங்க புதுசா பண்ணிருக்கோம் அப்படின்னு பேட்டி கொடுக்கலாம். "


" உண்மைலையே நல்லா இருக்குப்பா, சரி ஏக்சன்னா வில்லன் வரணுமே..? "


" இதோ வில்லன இப்படி இன்ட்ரொடுயூஸ் பண்ணுறோம் சார்., அடுத்த நாள் அதே பஸ். வில்லன் ஜென்ஸ் சீட்டுல உட்கார்ந்திருக்கார். ஹீரோயின் போய் அவரு பக்கத்துல உட்காருறாங்க.அப்ப ஒரு டர்னிங்ல வில்லன் அவுங்க மேல லேசா முட்டிடறாரு. அப்ப ஹீரோயின் உங்க பேர சொல்லு கத்துறாங்க. அடுத்த செகண்ட் வில்லன் ஜன்னல பிச்சுட்டு போய் கீழ விழுறாரு. அவரு விழுந்த உடனே அவரோட கண்ணுக்குள்ள உங்கள காட்டுறோம். "



"அது சரி , நான் கிஸ் பண்ணினப்ப கத்தாத பொண்ணு எப்படி அவர் எதேச்சைய முட்டினதுக்கே கத்துது..? "



" சார் , ஹீரோ எது பண்ணினாலும் அது காதல் , வில்லன் என்ன பண்ணினாலும் எதுவுமே பண்ணாட்டியும் அவர அடிக்கணும் அதுதானே சார் ஏக்சன் ஸ்கிரிப்ட்.!"


" அதுவும் சரிதான் , சரி மேல சொல்லுங்க.." 


" ஆனா கீழ விழுந்த வில்லன் அவரோட ஆளுகள கூப்பிட்டு உங்களை அடிக்க சொல்லுறாரு. அப்ப அந்த இடத்துல ஒரு குச்சி நட்டு வச்சு அதைய நீங்க அடிக்கிறீங்க. அந்த அதிர்வுள அமெரிக்காவுல இருக்குற வில்லனோட அண்ணன் மாடில இருந்து கீழ விழுந்திடராரு. அப்ப " நான் அடிச்சா தாங்க மாட்ட " பாட்ட ரீமிக்ஸ் பண்ணி தூக்குறோம். "


" செம கதையா இருக்குபா , மேல சொல்லு.."


" வில்லனோட அண்ணன் இந்தியா வர்றார். வந்தவுடனே ஒரு கோவிலுக்குப் போறார். சாமி கும்பிட்டுட்டு வெளியே வருபோது ஒரு பிச்சைக்காரன் காசு கேக்குறான். அவனுக்கு வில்லன் ஒரு ரூபாய் மட்டும் போட்டு அவன கேவலபடுத்துறார் . இந்த அநியாயத்தக் கேட்டவுடனே நீங்க அப்படியே பொங்கி எந்திருக்குரீங்க. " ஏன்டா , பிச்சைக்காரன்னா உனக்கு கேவலமா தெரியுதா ..? " அப்படின்னு அவருதான் வில்லனோட அண்ணன் அப்படின்னு தெரியாம அவரு மேல கைய வச்சுடரீங்க .! " அப்ப அவரு கேக்குறாரு " இதெல்லாம் கேக்குரக்கு நீ ஏன்ன கலக்கடராடா ..? " உடனே கலக்கடரா இருந்தாதான் இதெல்லாம் கேக்க முடியுமா அப்படின்னு யோசிச்சிட்டு கலக்கடராக முடிவெடுக்குறீங்க. உங்களுக்குப்பிடிச்ச கலக்டர் படிச்ச ஸ்கூல்ள  போய்   L.K.G சேருறீங்க . அங்கதான் ஹீரோயினும் L.K.G படிக்கிறாங்க. அங்க வச்சு ஒரு லவ் சாங். "


" எல்லாம் சரிதான்யா , ஆனா நான் L.K .G படிக்கிறமாதிரி சீன் வச்சா நம்புவாங்களா ..? "


" என்ன சார் , விஜய் மட்டும் வேட்டைக்காரன் படத்துல அவருக்கு பிடிச்ச போலீஸ் படிச்ச காலேஜ் அப்படின்னு போய் படிக்கிறார். நீங்க படிச்ச நம்ப மாட்டாங்களா..? " 


" அதுசரி , பஞ்ச் டயலாக் இன்னும் வரலையே ..? "


" சார் , உங்க படத்துல பஞ்ச் இல்லாமையா ..? ஒரு சீன்ல நீங்க வில்லன அடிச்சு போட்டுட்டு அவரோட கார திருடிட்டு போறீங்க. நீங்க எதுக்கு திருடரீங்க அப்படின்னு கடைசியா சொல்லுறோம். இந்த தில்லாலங்கடி , ஜென்டில்மன் மாதிரி. கார் திருடும்போது உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது . அப்ப வில்லனோட கார் டிரைவரப்பார்த்து " எடுக்குரியா கார , நடந்து போகட்டுமா ..? " அப்படின்னு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அப்ப DTS சவுண்ட் எபக்ட் போட்டு பிச்சு எடுக்கிறோம்." 


" இந்த பஞ்ச் நல்லாத்தான் இருக்கு , ஆனா இத விட ஏதாவது நல்லதா சொல்லுங்களேன்..? "


" சார் இப்படி வசுசுக்கலாமா ..? கார எடுக்குறியா , போகட்டுமா நடந்து " ..


" இது கலக்கலா இருக்குப்பா . கண்டிப்பா இத 10 வருசத்துக்கு சொல்லிட்டு இருப்பாங்க.. செம ஸ்பீடா இருக்கு , சொல்லுங்க..? "


" சார் அடுத்த சீன் காமெடி பண்ணுறோம் , கொஞ்சம் டபுள் மீனிங்கா , இந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்துல வருமே அதுமாதிரி.. "


" குழந்தைகளுக்கு புரியல , குடும்பத்தோட பாக்க முடியல அப்படிம்பாங்களே .? "


" சார் , சந்தரமுகி படத்துல ரஜினி சாரும் , வடிவேலுவோட பொண்டாட்டியும் ஒரு போர்வைக்குள்ள வச்சு ஒரு காமெடி பண்ணுவாங்களே , அதவிட டபுள் மீனிங் எதுவுமே இல்ல சார். அதையவே நம்ம ஆளுக காமெடி அப்படின்னு சொல்லி ரசிக்கல . அந்த மாதிரி தான் சார். "
அடுத்து ஹீரோயினோட அப்பாவுக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுது , அதனால நீங்க இரண்டு பேரும் செத்துடறீங்க. அதனால நீங்க திருப்பாச்சி படத்துல வர்ற மாதிரி மாறு வேசத்துல ஊர்ல இருக்குற ரவுடிகள கொன்னுடறீங்க.! "


"செம திரில்லிங்யா , கேக்கும்போதே பட்டைய கிளப்புது மேல சொல்லு .."


" அடுத்து கிளைமாக்ஸ் சார் . உங்களை வில்லனோட ஆளுக துரத்துறாங்க , அப்ப பயங்கர வெய்யில் , ஆனா மழை பெய்யுது. அந்த நேரத்துல நீங்களும் ஹீரோயினும் போன படத்துல மீட் பண்ணுன இடம் வந்திடுது , அதைய போட்டு காட்டுறோம். இந்த வில்லு படத்துல காட்டுவாங்களே அது மாதிரி. அப்ப உங்களுக்கு ஹீரோயின் நினைப்பு வந்திடுது. அந்த நேரத்துல வில்லனோட ஆளுக உங்களை சுத்தி வலைச்சுடறாங்க. அப்ப ஒரு கத்தி உங்க நேத்திக்கு நேரா வருது அந்த இடத்துல ஒரு குத்துப் பாட்டு வைக்கிறோம். அந்த பாட்டுல டான்ஸ்ல செம மூவ்மென்ட் வெக்கிறோம். ஜிம்னாஸ்டிக் பண்ணுறோம் . அந்த பாட்டுல உங்களுக்கு வெறும் கோமணம் தான் காஸ்டியூம்." 


" யோவ் என்னையா சொல்லுற ..? " 


" ஆமா சார் .இந்த சிலம்பாட்டம் படத்துல வர்ற Where is The Party பாட்டு மாதிரி வைக்கிறோம். அதுல சிம்பு அவரோட லுங்கிய தூக்கி தூக்கி ஆடுவாருல அதுமாதிரி. அதே மாதிரி இந்த சுறா படத்துல விஜய் தமன்னவோட பேண்ட்ட தூக்கி தூக்கி போடுவாருல்ல , அந்த மாதிரி மூவ்மென்ட் வச்சு தாக்குறோம்.! " 


" அது செம மூவ்மென்ட்யா , கலக்கலா இருக்கும் ." 


" அந்த பாட்டு முடிஞ்சவுடனே உங்களை சுத்தி நின்னுட்டிருந்தவங்கள ஓங்கி அடிக்கிறீங்க. அடிச்ச அடில அங்க இருந்தவங்கள்ள ஒருத்தன் செவ்வாய்லயும் , ஒருத்தன் புதன்லையும் போய் விழுறாங்க.அப்புறமா வில்லன வெட்டிடறீங்க. அப்படியே ரத்தமும் சதையுமா காட்டுறோம். அந்த இடத்துல ஒருத்தன் வந்து உங்களைப் பார்த்து " யாரு நீ ..? " அப்படின்னு கேக்குறான். அவனைப்பார்த்து நீங்க " தமிழ்நாட்டுல என்னைப்பார்த்து இப்படி கேட்ட முதல் ஆளு நீதான்" அப்படின்னு சொல்லி அவன கொன்னுடறீங்க. அப்படியே படத்த முடிக்கிறோம்.! "


இத கேட்ட உடனே அவரு " செம கதைய்யா. கண்டிப்பா 200 டேஸ் ஓடும் . மணி அந்த மத்த 3 படத்துக்கான சூடிங்கயும் தள்ளிப்போடு, முதல்ல இதுதான். இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டுக்குத் தான் நான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.! சரி நீங்க போய் ஸ்டோரி டிஸ்கசனுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க.! " அப்படின்னார்.


"என்னால நம்பவே முடியல , எனக்கே என்னோட கதை புரியலை ,அவருக்கு புரிஞ்சது அப்படிங்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா.? அப்படின்னா வில்லன கொன்னு , பிகர் உசார் பண்ணறதுதான் படமா.? இதுல டவுசர தூக்கி காட்டுற மாதிரி ஜிம்னாஸ்டிக் பண்ணுனா டான்ஸ் . என்ன கொடுமைங்க இது..?!? சரி உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க. ஏன்னா இதே மாதிரி கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... வரப்போகுது. அதுக்கு உதவியா இருக்கும்.


அதிமுக்கியப் பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.!