Showing posts with label புதிய முயற்சி. Show all posts
Showing posts with label புதிய முயற்சி. Show all posts

Friday, November 11, 2011

ங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை

அறிமுகம் :

  ”ங்கொய்யால“ இந்த வார்த்தையைக் கேட்டிறாத, அறிந்திறாத மக்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் இறந்துபோன அல்லது இன்னும் பிறக்காதவர்களாகத்தான் இருக்கவேண்டும். அவ்வளவு பிரசித்திபெற்ற வார்த்தையாக வலம்வருகிறது இந்த வார்த்தை. சிறியவர் முதல் பெரியவர் வரை, குழந்தைகள் முதல் கிழவர் வரை, ஆசிரியர் முதல் மாணவர் வரை,  ஆண் பெண் என்கிற பால் வேறுபாடுகள் இன்றி அனைவராலும் பேசப்பட்டு வருவதே இவ்வார்த்தையின் புகழுக்குச் சான்றாகும். சில வார்த்தைகளை துன்பத்தில்தான் பயன்படுத்த முடியும். கோபத்தை வெளிப்படுத்தச் சில வார்த்தைகள் உள்ளன. ஆனால் இன்பம், துன்பம், கோபம், பயம்,வெட்கம்,  இப்படி எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே வார்த்தை ‘ங்கொய்யால’ என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட தெய்வீக வார்த்தையின் வரலாற்றைப் பற்றி எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லிக்கொடுக்காமல் போய்விட்டால் கடவுள் நம்மை மன்னிக்கமாட்டார். எனவேதான் மிகச் சிரமப்பட்டு , பொருட்செலவுகளைத் துச்சமெனக் கருதியதால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகியிருப்பினும், இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

தோற்றம்

  சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் குழப்புவதானால் நாட்டாமை என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ங்கொக்கமக்கா’ என்றொரு கிராமத்தில்தான் இந்த வார்த்தை பிறந்திருக்க வேண்டுமென வரலாறுகள் நமக்குச் சுட்டுகின்றன. அதற்கான அனேக ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவலை அறிந்ததும் நாம் எமது ஆய்வுக்குழுவினருடன் ‘ங்கொக்கமக்கா’ கிராமத்திற்கு விரைந்தோம். முதலில் இந்த வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்பட்டது என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

’ங்கொக்கமக்கா’ என்கிற இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமானால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலெல்லாம் போக வேண்டியதில்லை. அப்படி போகவேண்டுமென்றாலும் நாம் இன்னும் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே வேறுவழியில்லாம் அதன் பரிணாம வளர்ச்சியல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டாமை படத்தைப் பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம். ஏற்கெனவே எனக்கு நாட்டாமை படம் பற்றித் தெரியும் என்றால் இந்த இரண்டு வரிகளையும் படிக்காமல் விட்டுவிடுங்கள். இங்கே SKIP என்ற பட்டனையெல்லாம் என்னால் தரமுடியாது. உண்மையில் நாட்டாமை படம் அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்காற்றியிருக்கிறது. நாட்டாமை படத்திற்கு முன் , நாட்டாமை படத்திற்குப் பின் என்று அவ்வூரின் வளர்ச்சியைப் பிரித்தறியமுடிகிறது. நாட்டாமை படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அமைதியின் உருவமாக இருந்த அக்கிராமத்தில் நாட்டாமை என்கிற பதவிக்குப் போட்டிகள் எழுந்துள்ளன. நாட்டாமைப் பதவியின் அருமை , பெருமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டிய நாட்டாமை என்னும் திரைக்காவியம் தமிழர்கள் ஓயாது பயன்படுத்தும்படியான ஒரு சொல்லையும் ஏற்படுத்தித் தந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.

அதுவரையில் நாட்டாமையாக இருந்த ‘சண்முகம்’ திடீரென இறந்துபோய்விட அவரின் இருமகன்களுக்குமிடையே பதவியாசை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அந்தக் கொழுந்து நன்றாக வளர்ந்ததோ இல்லையோ, ஆனால் அவர்களின் பையன்களுக்கிடையேயும் சண்டை நடக்க ஆரம்பித்தது. அதாவது சண்முகத்தின் பேரன்களுக்கிடையிலும் சண்டை நடந்ததென்று ஔவையாரின் பாடல் ஒன்றின் மூலமாக அறிகிறோம். 

சண்முகத்தின் முதல் மகனின் மகனும், இரண்டாவது மகனின் மகனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டிருக்கிற இந்தச் சொல்லின் பிறப்பு நிகழ்ந்தது என்று அமெரிக்காவில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

பெரிய மகனின் மகனான சின்னச்சாமி , சிறிய மகனின் மகனான பெரியசாமியிடம் “ டேய் , எங்க அய்யாதான் ( அப்பா என்பதை அய்யா என்று அழைப்பர் ) முதல் பையன், அதனால அவருக்குத்தான் நாட்டாமை பதவி கிடைக்கும்! “ என்று தனது கருத்தினை எடுத்தியம்பியிருக்கிறான்.

”ங்கொய்யா ஆள எங்கைய்யா பார்த்துட்டு இருப்பாரா ?“ என்று பதிலுக்குச் சண்டையிழுக்க அது பெரிய சண்டையாகி பின் அந்த ஊரின் அழிவுக்குக் காரணமானதென்று சில கல்வெட்டுக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இந்த இடத்தில்தான் நண்பர்களே தமிழர்களின் இதயத்துடிப்பான சொல் பிறந்திருக்கிறது. ஆம் “ ங்கொய்யா ஆள “ என்ற சொல்லை வேக வேகமாகச் சொல்லிப்பாருங்கள். இதோ வந்துவிட்டதே நமது “ங்கொய்யால!” இப்படியாகத்தான் இந்தச் சொல் பிறந்திருக்கிறது. ஆறுச்சாமி வேண்டுமானால் பிறப்பதற்கு முன்னால் ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஆறாவதாகப் பிறந்து, பீரில் முகம் கழுவி, திருநெல்வேலியின் பிச்சைப் பெருமாளைக் கொன்றிருக்கலாம். ஆனால் பிறக்கும்போதே ஒரு ஊரினையே அழித்துக்கொண்டு பிறந்த பெருமை ‘ங்கொய்யால’வையே சாரும் என்று ஜேம்ஸ் கேமரூன் ‘ அவதார்’ படத்தின் மூலம் அடித்துச் சொல்லுகிறார். 


இக்கட்டுரையின் சிறப்புகள்

  ’ங்கொய்யால' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைப் பற்றி உலக மொழிகளில் முதன் முதலாக வந்தது இந்தக் கட்டுரையே. அது மட்டுமல்லாமல் இக்கட்டுரை உலக மொழிகளான “ ஜெர்மன், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம்,உருது, கிரேக்கம், கொரிய மொழி மற்றும் இன்னும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் முழுமையாகத் தமிழில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை இப்பொழுதுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதன் முழிபெயர்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டது ஆச்சர்யமூட்டுவதாகவும் நம் அனைவருக்கும் ஒருவித நம்பிக்கை ஊட்டுவதாகவும் , சோறூட்டுவதாகவும் , மட்டன், சிக்கன் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.

முப்பரிமாணத் தன்மை

  ’ங்கொய்யால’ என்ற வார்த்தை முப்பரிமாணத்தை உடையது. ஆம்! இதனை ஒருசிலர் ‘ங்கொய்யால’ என்றும் , வேறுசிலர் ‘ங்ஙொய்யால என்றும் இன்னும் சிலர் ’கொய்யால’ என்றும் உச்சரிக்கின்றனர். ஒரே சொல்லின் இத்தகைய முப்பரிமாணத் தோற்றம் அறிவியல் அறிஞர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தமிழின் புகழுக்கு ஓர் சான்றாகும். ’ங்கொய்யால’ என்கிற ஒரு வார்த்தையால் உலக விஞ்ஞானிகளில் பலரும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர் என்று காக்கைப் பாடினியாரும், எரிபத்த நாயனாரும் தமது பாடல்களில் அன்றே சொன்னது இப்பொழுது மெய்யாகிக்கொண்டிருக்கிறது.


நமது கடமை

  'ங்கொய்யால’ என்ற வார்த்தை தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்றாகும். இதன் அருமை பெருமைகளையும், இதன் வரலாற்றைப் பற்றியும் எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லித்தரவேண்டியது நமது கடமையாகிறது. அதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வீட்டில் ப்ரேம் பண்ணி வைத்துக்கொள்வது, துண்டுச் சீட்டுகளில் அச்சடித்து வெளியிடுவது,செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியிடச் செய்வது, இணையத்தில் வெளியிடுவது , புத்தகங்களின் மூலம் விளம்பரப்படுத்துவது , புறாவின் காலில் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குத் தூதனுப்புவது போன்றவற்றின் மூலம் ‘ங்கொய்யால’வை நாம் தலைமுறை தாண்டியும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முடிவுரை 

  இக்கட்டுரையின் மூலம் தமிழில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தாலும் ‘ங்கொய்யால’ என்கிற இச்சொல்லைப் பயன்படுத்தாதவர் தமிழராகவோ, இந்தியராகவோ,ஆசியக்கண்டத்தைச் சேர்ந்தவராகவோ, பூமியைச் சேர்ந்தவராகவோ ஏன் மனிதராகக் கூடக் கருதப்படமாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. எனவே இந்தக் கட்டுரையை சமச்சீர் கல்வியில் சேர்ப்பதன் மூலமும், கல்லூரியில் பாடத்திட்டமாக அமல்படுத்துவதன் மூலமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்றும் கூறிக்கொள்கிறேன். மேலும் ’ங்கொய்யால’ பற்றி ஆய்வுசெய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இக்கட்டுரை பலவிதத்தில் உதவிபுரியும் என்பதும் திண்ணம்.






Thursday, March 3, 2011

கொழுப்புனா என்னனு தெரியுமா ?

மேற்கொண்டு வாசிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்!

Friday, February 25, 2011

SIM ன் தமிழ்ச் சொல்

கொஞ்ச நாள் முன்னாடி எங்கயோ இரண்டுபேர் SIM க்கு தமிழ்ல என்ன பேரு அப்படின்னு பேசிக்கிட்டிருந்தாங்க. அப்புறம் நேத்திக்கு எதேச்சையா ட்விட்டர்லையும் இது பத்தி பேசிக்கிட்டிருந்ததப் பார்த்தேன்.

எனக்கும் ரொம்ப நாளாவே இதுமேல கொஞ்சம் குழப்பம்தான். இதுக்கு உண்மைலேயே தமிழ்ல இன்னும் பேர் வைக்கலியா இல்ல எனக்குத் தெரியலையா ?

*.SIM : Subscriber Identification Module.

*.CDMA - Code Division Multiple Access.

*.GSM - Global System for Mobile Communications

நான் பெரிசா இழுக்க விரும்பல. இங்க நிறைய தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் இருக்காங்க. அதனால இதுவரைக்கும் SIM க்கு பேர் வைக்கப்பட்டிருந்தால் அது என்ன அப்படின்னு சொல்லுங்க , அப்படி இன்னும் வைக்கப்படலை அப்படின்னா இந்தப் பதிவுல விவாதம் பண்ணி ஒரு பேர் வைங்க.

நான் ஏன் சொல்லுறேன்னா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அதுக்குப் பேர் இல்லைனு சொல்லிட்டு இருக்குறது , நாமளா சிந்திச்சு ஒரு பேர் வைப்போமே. என்னடா கோமாளி கூப்பிட்டு நாம வரதா அப்படின்னு யாரும் நினைக்காதீங்க . தயவுசெஞ்சு ஒரு பேர் வைங்க!

இதப் படிக்கிறவங்க எல்லோரும் நீங்க SIM க்கு என்ன பேர் வைக்கலாம்னு நினைக்கிறீங்க அப்படிங்கிறத பின்னூட்டத்துல சொல்லுங்க.


Wednesday, February 16, 2011

பதிவர்களும் SAME TO YOU வும்

முன்குறிப்பு : முதல்ல இந்தப் பதிவு பின்னாடி வர்ற அந்தப் பத்துப் பதிவர்களுக்குத்தான். அது என்ன மேட்டர் அப்படின்னா நீங்களே பாருங்க , நேத்திக்கு சில பதிவர்களோட பதிவுல SAME TO YOU அப்படின்னு சம்பந்தமே இல்லாத கமெண்ட் போட்டேன். அதுக்கு அவுங்களோட பதில்களை பார்க்கலாம்.

1 .முதல்ல நம்ம SPEED MASTER ப்ளாக்ல இந்தப் பதிவுல நான் போட்ட கமெண்ட்க்கு அவரோட பதில் கீழ இருக்கு. இந்தப் பதிவுல வோடபோன் விளம்பரத்துல வர்ற நாயோட படம் போட்டு செம காமெடி பண்ணிருந்தார்.




Blogger Speed Master said...





//


கோமாளி செல்வா said...
SAME TO YOU

இது எதுக்கு??

**********************************************************************************************

2.அடுத்து வேடந்தாங்கல் ப்ளாக்ல இந்தப் பதிவுல போட்ட கமெண்ட். அதுக்கு அவரோட பதில் கீழ. இந்தப் பதிவுல பணம் என்ன மரத்துலயா காய்க்குது அப்படின்னு தோட்டக்கலை பத்தி ரொம்ப அருமையா சொல்லிருந்தார். ஒரு நல்லா பதிவுல இப்படி விளையாடனுமா அப்படின்னு தோனுச்சு , இருந்தாலும் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டார் அப்படின்னு அந்த கமெண்ட் போட்டேன்.

sakthistudycentre-கருன் சொன்னது…




கோமாளி செல்வா சொன்னது…

SAME TO YOU
//புரியல தலைவா?


**********************************************************************************************

3. அடுத்து ஆகாயமனிதனோட இந்தப் பதிவுல.. இந்தப் பதிவுல மூணு போட்டோ போட்டு கமெண்ட் போட்டிருந்தாரு. செம நக்கல் கமெண்ட்ஸ்.






ஆகாயமனிதன்.. said...




athey thaan ungalukku...same to u...selva !

**********************************************************************************************

4. அடுத்து கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவுல.. அதுல துன்பம் இல்லாத வாழ்கை நல்லா இருக்காது அப்படின்னு சொல்லிருந்தார்.. ஒரு அழகான கவிதை. நேரம் இருந்த படிச்சு பாருங்க. எனக்கு பிடிச்சிருந்தது..  சௌந்தர் அண்ணன் SAME TO YOU அப்படிங்கிற கம்மேன்ட்க்கு நிறைய ரிப்ளை பண்ணிருந்தாரு.





////கோமாளி செல்வா said... [Reply to comment]

SAME TO YOU
///////
எனக்கு ஒன்னும் புரியல..
அதைப்பத்தில ஒரு கூட்டம் போட்டு ஒரு தீர்மானம் தீட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் தெரிவிக்கிறோம்..

இல்லை எனறால் உங்களுக்கும் அதே பதில்தான்

SAME TO YOU

**********************************************************************************************

5. அடுத்து நாஞ்சில் மனோ அண்ணா ப்ளோக்ல இந்தப் பதிவுல. இது ஒரு நல்லா நகைச்சுவைப் பதிவு. அவர் காலைல இருந்து பண்ணின லொள்ளு எல்லாத்தையும் எழுதிருப்பார். செம நக்கலா இருக்கும். அதுவும் இல்லாம இந்தப் போஸ்ட் படிச்சுட்டு அதோட கமெண்ட்ஸ் படிச்சு பாருங்க. கண்டிப்பா வயிறு வலிக்க சிரிப்பீங்க.



MANO நாஞ்சில் மனோ said...




//கோமாளி செல்வா said...
SAME TO YOU///


எலேய் மக்கா அப்போ நீயும் இன்னைக்கு இதே மாதிரிதான் காமெடி பீசானியா...ஹா

**********************************************************************************************

6. அடுத்து ஜெய்சங்கர் அண்ணனோட இந்தப் பதிவுல. அது பழைய போஸ்ட்.. இருந்தாலும் சும்மா போய் போட்டுட்டு வரலாம் அப்படின்னு போய் போட்டுட்டு வந்தேன். என்ன ரிப்ளை பன்னிருக்காருனு பாருங்க.




Blogger jaisankar jaganathan said...





@செல்வா


நன்றி

**********************************************************************************************

7. அடுத்து தமிழ்மணி அண்ணனோட விதைகள் அப்படிங்கிற ப்ளோக்ல இந்தப் பதிவுல. இதுல அண்ணன் ஜீவிதம் அப்படின்னு ரொம்ப அழக கவிதை எழுதிருந்தாரு. எங்க ஊருகாரர் வேற. ஹி ஹி.



கோமாளி செல்வா said...




SAME TO YOU
தமிழ்மணி said...




நன்றி செல்வா

**********************************************************************************************

8. அடுத்து பன்னிகுட்டி ராமசாமி அண்ணனோட இந்தப் பதிவுல. அவரோட காதலர்தின சிறப்பு ஒளிபரப்பு. ஹி ஹி 


Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...


SAME TO YOU//////

என்னது சேம் டு யூவா? நான் என்ன ஹேப்பி நியூ இயரா சொல்லிக்கிட்டு இருக்கேன் படுவா, அதுவும் பதிவு போட்டு ரெண்டு நாளாச்சு, எப்போ வந்து சொல்லுது பாரு? என்ன யாருக்காவது ஏதாவது சிகுனல் பாஸ் பண்றியா? பிச்சிபுடுவேன் பிச்சி.....!
**********************************************************************************************

9. அடுத்து நம்ம எஸ்.கே அண்ணனோட எதுவும் நடக்கலாம் ப்ளாக்ல இந்தப் பதிவுல.. இந்தப் பதிவு ஒரு தொடர்கதை.செம திரில்லர் கதையும் கூட. 


எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...




SAME TO YOU//

என்னது சேம் டூ யூவா? எதுக்கு உங்களை யாராவது லூசுன்னு சொன்னாங்களா? என்னையும் கோத்து விடுறீங்களோ?


**********************************************************************************************

10. அடுத்து நம்ம சுற்றுலாவிரும்பி அருண் ப்ளோக்ல இந்தப் பதிவுல.. இது ஒரு செம லவ் ஸ்டோரி. படிச்சா உங்களுக்கும் லவ் பண்ண தோணும்.



Blogger Arun Prasath said...

 வாங்க செல்வா சார் என்ன நடக்குது




**********************************************************************************************


நீதி : இப்படிஎல்லாமா புதிய முயற்சி பண்ணுறாங்க ?

பின்குறிப்பு : இதுல மேல இருக்குற பதிவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.அப்புறம் எஸ்.கே , பன்னிகுட்டிரம்சாமி, அருண் இவுங்க மூணுபேருக்கும் நன்றி செல்லாது. ஹி ஹி. இவுங்களுக்கு எதுக்கு நன்றி சொல்லிட்டு.. இது புதிய முயற்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு எழுதின பதிவு , அதனால யாரும் பீல் பண்ணாதீங்க. விளையாட்டா மட்டும் எடுத்துக்கோங்க.

Friday, February 11, 2011

70 ஆம் வயதில் நான்.!

முன்குறிப்பு : நான் என்னோட 70 வயசுல இருந்து ஒரு பதிவு எழுதினா எப்படி இருக்கும் அப்படின்னு ஒரு கற்பனை. கூடவே இது எப்படி இருந்து அப்படின்னு படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.!இது ஒரு புதிய முயற்சி. அதான் கேக்குறேன்!

நேரம் மாலை 5 மணி.. தேதி 10.12.2057 :

23 வயசுல ப்ளாக் எழுதுறேன் அப்படின்னு வந்தேன். இப்ப 70 ஆச்சு. என்ன எழுதினேன் என்ன தெரிஞ்சிக்கிட்டேன்னு தெரியல. ஆனா உலகம் முழுக்க நண்பர்கள் இருக்காங்க அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அதிலும் நிறைய பேர் அடிக்கடி சந்திச்சுப் பேசுறோம் , ஒரு குடும்ப உறுப்பினர்கள் மாதிரி இருக்குறது அதவிட சந்தோசம்.

நான் ப்ளாக் எழுத வந்த போது இருந்த டெக்னாலஜிக்கும் இப்ப இருக்குற டெக்னாலஜிக்கும் எவ்ளோ வேறுபாடு! நினைச்சுப் பார்க்கவே முடியல. அப்பவெல்லாம் கம்பியூடர் கீ போர்ட்ல இருந்து டைப் பண்ணி எழுதினேன். இப்பவெல்லாம் பேசினா அதுவா எழுதி விதவிதமா ஸ்டைல் மாத்தி என்ன என்னவோ பண்ணுது. இன்னும் நாம நினைக்கிறத கூட எழுதுற மாதிரி இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க. எப்ப விற்பனைக்கு வருதுன்னு தெரியல.

நான் வந்த புதுசுல மொக்கையா தான் எழுதுவேன். என்ன எழுதுரதுனே தெரியாது. ஆனா அதுக்கு ரொம்ப பீல் பண்ணுவேன். நாமளும் நல்லா எழுதணும் எழுதணும் அப்படின்னு நினைப்பேன். ஆனா எது எழுதினாலும் மொக்கயாதான் இருக்கும். ஆனா இப்ப அந்தப் பிரச்சினை இல்லை , மொக்கையா எழுதுறோமே அப்படின்னு எந்த பீலிங்கும் இல்ல. ஏன்னா அது பழகிப்போச்சு?!?

சத்தியமா ப்ளாக் எழுத வரதுக்கு முன்னாடி வேற எந்த ப்ளாக்க்கும் படிச்சது கிடையாது. எந்த ப்ளாக்கரையும் தெரியாது. அப்புறம் அப்படி இப்படி மொக்க போட்டு நிறைய நண்பர்கள் வந்தாங்க. சரி ப்ளாக் பத்தி மட்டுமே சொல்லி என்ன பண்ணுறது. என் வாழ்க்கைல எவ்ளோ மாற்றங்கள் இந்த 47 வருசத்துல என் வாழ்க்கைல எவ்ளோ மாற்றம்.அப்ப இருந்ததுக்கும் இப்ப இருக்குறதுக்கும் எத்தனை விசயங்கள் கடந்து போயிருக்கு. என்னமோ இப்ப ப்ளாக் எழுத வந்ததுமாதிரி இருக்கு.

என்னால இப்பவும் நம்ப முடியல , நான் ரேடியோ ஜாக்கி ஆனது. அப்போ  இருந்த சந்தோசம் சொல்லுறதுக்கு வார்த்தைகளே இல்ல. என்னோட முதல் ப்ரோக்ராம் பண்ணும்போது இருந்த படபடப்பு , ஒரு வேகம் ஐயோ அத இன்னிக்கு நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது. அவ்ளோ ஆசை . நான் நினைச்சது மாதிரியே ஒரு பிரபல ரேடியோ ஜாக்கி ஆகிட்டேன். எத்தன நிகழ்சிகள் அதுல எத்தனை வித்தியாசங்கள் எல்லாமே இன்னும் மனசுல இருக்கு.

இன்னும் அந்த வயசுல மறக்க முடியாத சம்பவம் அப்படின்னு பார்த்தா அவ கிட்ட காதல சொன்னதுதான். அவ்ளோ நாளா பயந்துட்டு இருந்துட்டு அந்த ஒருநாள் மட்டும் எப்படி எனக்கு அவ்ளோ தைரியம் வந்ததுனு இன்னும் வியப்பா இருக்கு. அவள பாக்கும்போதெல்லாம் ஒரு படபடப்பு இருந்துச்சு. ஆனா ஒருநாள் நேரா அவளப் பார்த்து காதலிக்கிறேன் அப்படின்னு சொன்னதும் அவ கண்ணுல முகத்துல காட்டின பாவங்கள என்னால இன்னும் மறக்க முடியல. அதுமட்டும் இல்லாம " பரவால்லையே , இப்பவாவது தைரியம் வந்துசே " அப்படின்னு அவ சொன்னது இன்னும் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு.

அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு அவளப் பத்தி வீட்டுல சொன்னது , எங்க வீட்டுல அவுங்க வீட்டுல எல்லாம் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணினது எல்லாமே இன்னும் மறக்கமுடியாத நினைவுகள இருக்கு. இது மட்டுமா எங்களோட பொண்ணு பிறந்த போது எவ்ளோ சந்தோசமா இருந்துச்சுனு சொல்லவே முடியல. முதல் முதலா ரேடியோ ஜாக்கி ஆனபோது எந்த மாதிரி பீல் பண்ணினேனோ அதவிட கொஞ்சம் அதிகமாவே சந்தோசப்பட்டேன்னுன்னு சொல்லலாம். இன்னும் அந்த நாட்களை நினைச்சா நேரம் போறதே தெரியல.

அப்புறம் என்னோட நீண்டகால லட்சியம் என்னோட நாற்பதாவது வயசுலத்தான் நிறைவேறுச்சு. அதிக அளவுல நிலங்கள் வாங்கி அதுல சொந்தமா இயற்கை முறைல பயிரிட்டு அதுல விளையுற தானியங்கள எங்க மாவட்டத்துலயும் சுத்தி இருக்குற மாவட்ட ஓரங்களிலும் ரொம்ப சுத்தமான கடைகளை கட்டி உற்பத்தி விலையில் இருந்து ஒரு இரண்டு அல்லது மூணு ரூபாய் மட்டுமே லாபம் வச்சு விக்கணும் அப்படிங்கிறது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கின ஒரு விசயம் அப்படின்னா அது இதுதான்.

அப்படி விக்கும்போது அப்போ இருந்த உணவு தானியங்கள் இருந்த விலைல பாதி விலைக்குத்தான் என்னோட கடைல இருந்து வித்தோம். அதுவும் இல்லாம எல்லாமே இயற்கை முறைல இருக்குறதால எல்லோருமே இத விரும்ப ஆரம்பிச்சாங்க. ரொம்ப சீக்கிரமே இது பிரபலம் ஆகிடுச்சு.

அதே மாதிரி பாலிதீன் கவர்ல எந்தப் பொருளுமே தரதில்லை அப்படின்னு சொல்லி அதுக்கு மாற்றுப் பொருள் ஒண்ண கண்டுபிடிக்கறத ஊக்குவிச்சு இப்போ பாலிதீன் அப்படிங்கிற கண்ணாடிப் பைகளே இல்லாமே இருக்குறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. ப்ரைவேட் லிமிட்டடா ஆரம்பிச்ச கம்பனி இப்போ பப்ளிக் லிமிட்டடா  மாறிருக்கு. அதுமட்டும் இல்லாம மாற்றம் நம்ம கிட்ட இருந்தே வரணும் அப்படிங்கிற என்னோட கொள்கைய நான் இதுல நிரூபிச்சிருக்கேன்.

என்னோட பையன் பெரிய டென்னிஸ் வீரனா வரணும்னு சொன்னது அது மாதிரியே இப்ப ரொம்ப பெரிய ஆளா இருக்குறது இது எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சதுதானே , அதான் அடிக்கடி பதிவுபோட்ட்டுடே இருக்கேனே! அப்புறம் அவனோட கல்யாணம் அப்புறம் பேரன் பிறந்தது இப்படி நிறைய சொல்லலாம். பதிவுதான் பெருசா போய்டும்.!

TBTS பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு அதுல நிறைய நல்லது பண்ணனும்னு நினைச்சேன். ஆனா எல்லோருமே பொருளாதார நிலைல சிறப்பா இருக்கறதால விளையாட்டுப் போட்டிகள் , எதாவது கலை நிகழ்சிகள் மட்டுமே நடத்துறோம். ஆனா இது ரொம்ப சந்தோசமானதும் கூட. எந்த மனுசனும் யாரையும் சார்ந்து இல்லாம தன்னிச்சையா நிக்குறது எவ்ளோ பெரிய விசயம்.! சரி நாளைக்கு திங்கள் கிழமை நான் போய் செல்வா கதைகள் எழுதணும். கிளம்புறேன்!!

எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் நான் , சௌந்தர் , எஸ்.கே மூணுபேரும் இன்னும் மொக்கை போடுறது நிறுத்தல. அது அப்ப இருந்து அப்படியே போயிட்டே இருக்கு. எவ்ளோதான் பெரிய ஆளா வந்தாலும் நான் இன்னும் அப்படியே இருக்குறது எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன்னா மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!!

நீதி : நிகழ்காலத்துக்கு வாங்க!! ஹி ஹி ஹி

ஒரு அறிவிப்பு : அந்த அறிவிப்புக்கு முன்னாடி ஒரு நாலு வரி கவிதை .. ஹி ஹி

தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தும்
சேர்த்து ஒரு கவிதை செய்தேன்
ஏதோ குறைந்தது போல் இருந்தது
உன்பெயரை எழுதியதும் நிறைவானது!!

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் அந்த நான்கு
எழுத்துக்கள் மீது பொறாமை கொண்டன
உன்பெயரை அலங்கரிப்பதால்!!
அந்த நான்கு எழுத்துக்கள் ர்ந்தசௌ!

கொஞ்சம் ஓவரா இருக்குல .. ஹி ஹி .. அதுவும் அவன பத்தி சொல்லுறதுக்கு இந்தக் கவிதை எல்லாம் ஓவர்தான்.. சரி விடுங்க .. அவனுக்கு நாளைக்குப் பிறந்தநாள். அதனால அவன ரொம்ப சந்தோசமாகவும் , மகிழ்ச்சியாவும் அவன வாழ்க்கை அமையனும் அப்படின்னு இறைவனை வேண்டி அமர்கிறேன்!!

பின்குறிப்பு : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதலாம் அப்படின்னு ஒரு ஆசை. அதனால நான் வெறும்பய அண்ணனையும் சுற்றுலாவிரும்பி அருணையும் அழைக்கிறேன்!

Wednesday, December 1, 2010

Monday, November 22, 2010

இதுவரை வாங்கிய வடைகள்

முன்குறிப்பு : நான் வாங்கிய வடைகள் பலவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். மேலும் இந்த வடை வாங்கும் போராட்டத்தில் எத்தனை சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்ச்சிப் பதிவு.! 15 .11 .2010 முதல் வாங்கிய வடைகள் மட்டுமே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

*.முதல் வடை : 15.10.2010 அன்று 2.30 மணியளவில் வெறும்பய ப்ளாக்கில் இந்தப் பட்டியலுக்கான முதல் வடை பெறப்பட்டது.! அதே தினத்தில் அதே பதிவில் karthikkumar உடன் கடுமையான சண்டை போட்டு 100 வது கமெண்ட் போட்டதால் எனக்கு மற்றும் ஒரு வடை பரிசளிக்கப்பட்டது. ஆனால் 98 என்ற என்னை காணவில்லை என மேல்முறையீடு செய்து karthikumar அவர்களுக்கு வடை மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் கணக்கு எனது பெயரில் எழுதப்பட்டதால் இனி மூன்றாவது வடை பெற்றதைப் பார்ப்போம்.!

*.மூன்றாவது வடை சிரிப்புப்போலீசின் இந்தப் பதிவில் பெறப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்க்கு இந்தப் பின்னூட்டம் ஆதாரம் //பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… அது சரி, எப்பவும் வட வாங்கற கோமாளி என்னப்பா ஆனாரு?/// ஆனால் அந்தப் பதிவில் ஊசிப்போன வடைகள் தருவதாக நமது ரகசிய வடை திருடும் காக்கைகள் கூறியதால் நாம் அந்தப் பதிவில் வடை வாங்கும் எண்ணம் கைவிடப்பட்டது. சரி மூன்றாவது வடை பெற்ற கதையைக் காண்போம். 16.11.2010 அன்று சிரிப்புப் போலீசின் இந்தப் பதிவில் 96 கம்மேன்ட்டுகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாலும் முதல் வடை வாங்கிய நமது சங்கத்தின் TERROR அவர்கள் வடை மிகவும் சுவையுடன் இருப்பதாகக் கூறியதை அடுத்து நானும் 96 இல் இருந்த எண்ணிக்கையை மிகவும் சிரமப்பட்டு 100 வரை போட்டு வடை பெற்றுக்கொண்டேன்.! அவர்கள் தெரிவித்தது போன்றே அந்த வடை மிகவும் சுவையுடன் இருந்தது கூடுதல் செய்தி.!


*.நான்காவது வடையானது 18.11.2010 அன்று ஜீவன்பென்னி அவர்களது ப்ளோகில் இந்தப் பதிவில் கிடைத்தது. இந்த வடை பெற்றது மிகவும் சுவாரஸ்யமான தகவலாகும். ஏனெனில் நான் அலுவலகம் வந்து Google Reader இல் பார்க்கும்போது இவரது பதிவு இருந்தது. ஆதலால் இந்தப் பதிவில் வடை கிடைக்காது என்று நினைத்துகொண்டு பிறகு படிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு நமது தேவா அவர்கள் இந்தப் பதிவின் இணைப்பினை மின்னரட்டையில் கொடுத்தார். நானும் சரி படிக்கிறேன் என்று அங்கு சென்று பார்த்தால் வடை யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆதாலால் நான் மிகவும் மகிழ்வுடன் அந்த வடயைப்பெற்றுக்கொண்டேன்.!

*.ஐந்தாவது வடை மீண்டும் சிரிப்புபோலீஸ் அவர்களது வலைப்பூவில் பெறப்பட்டது.அவரது இந்தப் பதிவு 48 பின்னூட்டங்கள் பெற்றிருந்தது . நான் வழக்கம் போல மிகவும் சிரமப்பட்டு 49    மற்றும் 50 ஆகிய எங்களை பின்னூட்டமாக இட்டு வடையைத் தட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

*.ஆறாவது வடை 19.11.2010 அன்று மறுபடியும் சிரிப்பு போலீஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. அவரது இந்தப் பதிவில் முதல் பின்னூட்டம் போட்டதற்காக பெற்றுக்கொண்டேன். மேலும் அதே பதிவில் மொக்கராசா அவர்கள் எனக்காக 50 பின்னூட்டம் போடும் போது எனக்கு வடையை விட்டுக்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவரே வடையை எடுத்துச் சென்றது பெருத்த ஏமாற்றம் அளித்தது. சரி ஏழாவது வடையப் பற்றிப் பார்ப்போம்.!

*.ஏழாவது வடையும் 19.11.2010 அன்று நமது பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் அவர்களது வலைப்பூவில் 100 வது பின்னூட்டம் இட்டதற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த வடையைப் பெற்றது மிகவும் சுவாரஸ்யமான விசயமாகும். அவர் பதிவினைப் பார்க்கும் போது முதல் பின்னூட்டம் போட்டு வடையினைத் தட்டிப்பறிக்கலாம் என்று ஓடினேன். ஆயினும் எஸ்.கே அவர்கள் வடையைப் பெற்றுக்கொண்டதாக முறையான அறிவிப்பு வந்தது. அதனால் எனக்கு கொஞ்சம் ஆணிகள் வந்துவிட்ட படியால் சில ஆணிகளைப் பிடுங்கிவிட்டு 50 வது பின்னூட்டம் இட்டு வடை பெறலாம் என்று சிறிது நேரத்திற்குப் பிறகு சென்று பார்த்தேன். ஆனால் அங்கே 82 பின்னூட்டங்கள் வந்திருந்தது. ஒரு 6 அல்லது 7 நண்பர்கள் வடயைக்கைப்பற்ற போராடிக்கொண்டிருந்தது கண்கூடாகத் தெரிந்தது. இதனால் நானு சென்று பின்னூட்டம் இட்டால் அவர்கள் விளித்துக்கொள்ளக்கூடும் என்று 98 பின்னூட்டங்கள் வருவரை F5 என்ற பட்டனை மட்டும் அழுத்திக்கொன்டிருந்தேன்.பின்னர் 100 வது பின்னூட்டத்தை இட்டு வடயைக்கைப்பற்றியது என்னை அளவில்லா மகிழ்ச்சியில்  தள்ளியது .!

*.எட்டாவது வடை நமது சிவா அண்ணனது ப்ளாக்கில் 20.11.2010 அன்று இந்தப் பதிவுல பெறப்பட்டது. இதுல ஒரு விசேசம் என்ன அப்படின்னு பார்த்தா அவரே முதல் கமெண்ட் போட்டு டெஸ்ட் பண்ணிட்டிருந்தார். அப்புறம் போய் நம்ம வடை வாங்கும் கொள்கைகள் குறித்து அவருக்கு விளக்கி அவருடைய பின்னூட்டம் செல்லாது அப்படின்னு சொல்லி என்னோட பின்னூட்டத்துக்கு வடை பெற்றுக்கொண்டேன்.

*.ஒன்பதாவது வடை நம்ம terror அண்ணனோட இந்தப் பதிவுல நம்ம பாபு அண்ணன் வடை வாங்கிட்டார். இருந்தாலும் தேவா அண்ணன் வந்து செல்வா சின்னப் பானா இருக்கான் அவனுக்கு கொடுத்துடு அப்படின்னா பாபு அண்ணன் கிட்ட சொன்னதும் அவரும் மனமுவந்து கொடுத்தார்.

*.பத்தாவது வடை இன்று நமது சுற்றுலாவிரும்பியில் கிடைக்கப்பெற்றது.! மேலும் நமது பன்னிக்குட்டிராமசாமி அண்ணனது ப்ளாக்இல் இன்று இன்னொரு வடை பெற்றுக்கொண்டது மகிழ்வளிக்கிறது.

வடைக்கு என்னுடன் போட்டி போடுபவர்கள் : எனக்கு சரி சமமாக வடைக்குப் போட்டியிடுபவர் நமது சிரிப்புப்போலீஸ் ஆவார். சில சமயம் எஸ்.கே , ஹரீஸ் , Arunprasad , மாதவன் அண்ணன் ,அருண் அண்ணன் போன்றோர் பெற்றுவிடுவது என்னை கொஞ்சம் முகம் வாடச்செயகிறது. இருந்த போதிலும் எனது வடைக்கான தேடல் தொடரும்.

வடை கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றியவர் : நமது அருண் அண்ணன் அவர்கள் இந்தப் பதிவில் பதிவிடுவதற்கு முன்னரே என்னிடம் தனிப்பட்ட முறையில் உனக்கு வடை தருகிறேன் என்று வாக்கு அளித்திருந்தார். ஆனால் நான் அலுவலகம் வரும் முன்னரே அவர் பதிவிட்டு எனக்கு கொடுக்க வேண்டிய வடையை வேறொருவருக்கு கொடுத்ததற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வடை வாங்குதலின் லட்சியம் : இத்தனை இடங்களில் வடை வாங்கிய போதும் தேவா அண்ணனின் ப்ளாக்கிலும் , எங்கள் தலைவர் கோகுலத்தில் சூரியனிலும் வடை வாங்குவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்.!

நீதி : இதெல்லாம் எங்க பாஸ் உருப்படப்போகுது..? போய் ஆணி  இருந்தாப்  பாருங்க .!

பின்குறிப்பு :  இந்தப் பதிவில் 50 வடைகள் பெற்றதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இருந்தபோதிலும் பதிவுலகின் நன்மை கருதி இத்துடன் இந்தப் பதிவினை முடித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.!

Friday, November 19, 2010

இன்றைய செய்திகள்

தினத்தந்தி , தினமலர் போன்ற இதழ்களில் தெரிந்துகொள்ளவும்.! நன்றி.!

Thursday, November 11, 2010

கின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு எழுதிட்டேன் பெரிய பதிவு எழுதிட்டேன் அப்படின்னே சொல்லுறது.?! நான் பெரிய பதிவு மட்டும் எழுதறதில்லை , தலைப்பு கூட பெருசாதான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனா தலைப்புலேயே பதிவு எழுதுவேன்.இவ்ளோ பெரிய தலைப்பு இதுவரைக்கும் யாரும் எழுதிருக்க மாட்டங்க அப்படின்னு நினைக்கிறேன்.அதனால இந்தப் பதிவு கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்போறேன். யாராவது அது எப்படி கின்னஸ் சாதனைக்கு அனுப்பறதுன்னு சொல்லமுடியுமா..?

முன்குறிப்பு : அடுத்து வருவது பதிவு ;

பதிவு : தலைப்பில் உள்ளது ;

நீதி : இப்ப சந்தோசமா..?

பின்குறிப்பு : பதிவு முடிஞ்சது , வீட்டுக்குப் போலாம்.!