Saturday, February 5, 2011

மொபைல் அப்ளிகேசன்ஸ்

முன்குறிப்பு: கண்டிப்பா எல்லோரும் மொபைல் வச்சிருப்பீங்க. அதுல சிலது மல்டிமீடிய மொபைலா இருக்கும் , சிலது சாதாரண போனா இருக்கும். இந்தப் பதிவு மல்டிமீடியா மொபைல் அப்ப்ளிகேசன்ஸ் பத்தினதுதான். ஏற்கெனவே இங்க இத பத்தி எழுதிருக்கேன். அதுல நிறைய அப்ப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருந்தேன். இன்னும் சிலத இங்க பார்க்கலாம்.

ஆல் இன் ஒன் அப்ளிக்கேசன் :
biNu அப்படிங்கிற அப்ப்ளிகேசன் ஒண்ணு இருக்குது. சொல்லப்போனா இதுல இல்லாத வசதிகளே கிடையாது. அத விட இதுபத்தி சொல்லனும்னுதான்  இந்தப் பதிவே. அப்படி என்ன அதுல இருக்குதுன்னு பார்த்தா , முதல்ல கிரிகெட் ஸ்கொர்ஸ் தெரிஞ்சிக்கலாம். அதாவது இப்ப லைவ்ல எந்த டீம் விளையாடிட்டு இருக்காங்க ,எந்த மேட்ச் அப்படிங்கிற  எல்லா தகவல்களும் வந்திடும்.

  அடுத்த விசயம் செய்திகள். அதுவும் தமிழ்ல செய்திகள் படிசிக்கிலாம்.இதுல தினகரன் பேப்பரோட செய்திகள் அப்படியே வரும் . கூடவே BBC தமிழ் செய்திகளும் படிச்சிக்க  முடியும். அதே மாதிரி ஆங்கிலத்திலையும் செய்திகள் படிசிக்கிலாம். அதவிட படிப்பதற்கும் ரொம்ப எளிமையா இருக்குறது இதோட சிறப்பு.

  அடுத்து Dictionary. இதுவும் biNu ல இருக்கு. பொதுவா நிறைய dictionary கிடைக்குது. ஆனா இதுல ஒரே அப்ப்ளிகேசன்ல இருக்குறது சிறப்பு. இதுல விக்கிபீடியாவும் இருக்கு. அதனால அதையும் பயன்படுத்திக்கலாம்.

   அடுத்து weather . இதுவும் ஒரு பயனுள்ள விசயம்தான். அடுத்து கூகுள் சர்ச்ம் இருக்கு. கூடவே Astrology , Forex இதெல்லாம் இருக்கிறதால நான் என்ன சொல்லவரேன் அப்படின்னா நீங்க போன் வச்சிருந்தா கண்டிப்பா இந்த அப்ப்ளிகேசன முதல்ல டவுன்லோட் பண்ணுங்க. பண்ணி பயன்படுத்திப் பார்த்துட்டு சொல்லுங்க. அதோட இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். அங்க போய் உங்க மொபைல் நம்பர் கொடுத்த உங்க மொபைலுக்கு டவுன்லோட் லிங்க் தருவாங்க. அதுல இருந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.  

அந்த முகவரி : http://www.binu.com 

அடுத்து skype :

  இது எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். கம்பியூட்டர்ல பயன்படுத்திருப்பீங்க. ஆனா மொபைல்ல கூட பயன்படுத்த முடியும். அதுக்கு நீங்க www.sharejar.com போய் டவுன்லோட் பண்ணிகோங்க. கண்டிப்பா பயன்படும்னு நினைக்கிறேன். என்னோட மொபைல்ல பேசிருக்கேன். ஆனா எல்லோருக்கும் சரியா வருமா அப்படின்னு தெரியல.

நீதி : இதுக்கெல்லாம் என்ன நீதி சொல்லுறது.

பின்குறிப்பு : மொக்கையின் வளர்ச்சி நிலை விரைவில். 

Wednesday, February 2, 2011

ஆன்மா! ( தேவா ஸ்டைல் )

முன்குறிப்பு : இந்தப் பதிவுல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள் எல்லாமே ஆன்மா , கடவுள் என்னோட புரிதல்கள் மட்டுமே. அது உங்களோட புரிதல்கள் கருத்துக்களுடன் மாறலாம்.

ஆன்மா , ஆன்மீகம், கடவுள் இதுபற்றி சிந்திக்கும்போது எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுது.ஆன்மாவை உணரனும் அதாவது நமது மனம் உடல் சார்ந்த விசயங்களைத் தாண்டி வாழ்வின் ஆதாரம் என்று சொல்லப்படுகின்ற , நம்பப்படுகின்ற ஒரு விசயத்தினை உணரனும்னு சிலசமயங்களில் நினைச்சாலும் பல சமயங்களில் வேண்டாம் அப்படின்னே தோணுது.

 ஆன்மா என்ற ஒன்றுக்கு உங்களோட மனம் பற்றியோ , உடல் பற்றியோ தெரியாது இங்கே மனம் பற்றி ஆன்மாவுக்குத் தெரியாது, அதாவது கவலை இல்லை  அப்படிங்கிற கூற்று உங்களுக்கு குழப்பத்தைத் தரலாம். மனம் அப்படிங்கிற விசயம் எப்பொழுதுமே இந்த வாழ்க்கை நிலையானது , இங்கே சாதிக்கணும் , நிறைய சொத்துக்கள் சேர்த்துக்கனும்னு  நினைக்கக்கூடியது. ஆனா ஆன்மாங்கிறது இந்த வாழ்க்கை போலியானது , அதாவது இப்ப இந்த உடலுள குடிகொண்டுள்ளோம் , காலம் மாறும்போது ஒரு எறும்போட உடலிலும் குடிகொள்ள வேண்டி இருக்கலாம்னு நினைக்கக்கூடியது.

   இதிலிருந்து ஆன்மாவை உணர்வதின் பயன்கள் , நான் ஏன் அத உணரவேண்டாம்னு சொல்லுறேன்னு பார்க்கலாம். ஆன்மாங்கிற விசயத்தைப் பல பேர் பலவிதமா சொல்லுறாங்க. பொதுவா உயிர்தான் ஆன்மா அப்படிங்கிற எண்ணமும் இருக்கு. ஆன்மாவை உணர்வது அப்படிங்கிறது இப்ப நம்ம இருக்குற இந்த உடல் நிலையற்றது. அதனால் வரும் இன்பதுன்பங்களும் நிலையற்றது. நாளைக்கு ஒரு கார் வந்து மோதினாலோ , இல்ல ஒரு நோய் வந்தாலோ இந்த வீட்டிலிருந்து போய்டுவோம். இந்த வாழ்க்கை , பணம் , புகழ் எல்லாமே போலியான ஒண்ணு அப்படின்னு நினைக்கும் போது பெரும்பாலும் ஆன்மா அப்படிங்கிற விசயத்தைப் புரிஞ்சிக்கிறோம்னு நினைக்கிறேன்.

  சரி ஆன்மாவை உணர்வதன் பயன்கள் என்ன ? ஆன்மாவ உணர்ந்தவர் நிச்சயமா எதுக்கும் ஆசைப்படாதவராகத்தான் இருப்பார் அப்படின்னு நினைக்கிறேன். அதே சமயம் எதுக்கும் கோபமோ , இல்ல சந்தோசமோ படமாட்டார். அதாவது பற்று இன்றி இருப்பார். அப்படின்னா சாமியாரா அப்படின்னு கேக்காதீங்க. சாமியார் அப்படிங்கிற நிலை கூட ஆன்மாவை உணர்ந்த நிலைன்னு சொல்லிட முடியாது.

  அதாவது யார் ஒருவர் எந்தவித ஆசையும் இல்லாம , கோபமும் இல்லாம , அதே சமயம் அவரோட வேலைகளை சரியாக செய்துட்டே இருப்பார். அதாவது அவரது வேலைகளில் இருந்து பின்வாங்க மாட்டார். அதே சமயம் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். இப்ப அவர்கிட்ட இருந்து நீங்க ஒரு பத்தாயிரம் ஏமாத்தினா கூட கண்டுக்காம விட்டுடுவார்னு சொல்லுறேன். ஆனா அப்படி இருக்குறவங்கள லூசு அப்படின்னு சொல்லுறோம் , நாம லூசு அப்படின்னு சொன்னா கூட அவருக்கு கோபம் வராது.

  அதே மாதிரி ஆன்மாவை உணர்ந்தவங்க கண்டிப்பா சந்தோசமோ , இல்ல துக்கமோ படமாட்டங்க.சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் அப்பாற்பட்டவர்தானே ஆன்மாவை உணர்ந்தவரா இருக்க முடியும். அதாவது பாசத்துக்கும் கட்டுப்பட்டவரா இருக்க மாட்டாங்க. ஏன்னா அம்மா , அப்பா போன்ற உறவுகள் இந்த உடலுக்கு மட்டும்தானே , ஆன்மாவுக்கு கிடையாதுல. அப்படின்னா யோசிச்சு பாருங்க , எந்த வித உணர்வுமே இல்லாம , சந்தோசத்துல சிரிக்காம , துக்கத்துல அழாம ஒரு கல்லு மாதிரி அதாவது ஒரு ஒருவரால வாழ முடியுமா ?

  எந்த வித உணர்வுமே இல்லாம வாழ்வதற்கா இவ்ளோ போராட்டம் ? அப்படின்னா ஆன்மாவை உணர்வது நன்மை இல்லையா அப்படின்னு நீங்க நினைக்கலாம். உண்மைலேயே நன்மை தீமை , நல்லவன் , கெட்டவன் இப்படி எல்லா விசயங்களையும் தாண்டின ஒண்ணுதான் ஆன்மாவை உணர்வது. அப்படின்னா வாழ்கைய வெறுக்கறதா அப்படின்னு கேக்கலாம். கண்டிப்பா வெறுப்பது கிடையாது. வெறுப்பு வேற உணர்வது வேறு. உங்களுக்கு ஒரு விசயம் பிடிக்கலைனா அது வெறுப்பது. ஆனா ஒரு விசயத்த உங்களுக்கு பிடிக்கவும் இல்ல , அதே சமயம் வெறுப்பும் வரல அப்படிங்கிறது நடுநிலைமை. ஆனா இந்த இரண்டுமே இல்லாம ஒரு விசயத்த விரும்பாம அதே சமயம் வெறுக்காமையும் செய்யுறதுன்னு சொல்லலாம்.

  உண்மைலேயே இந்த நிலைல நிச்சயமா வெளியில இருந்து பார்க்கும்போது எந்தவித சந்தோசமும் இல்லாம தெரியலாம். ஆனா சந்தோசம் , துன்பம் அப்படிங்கிற நிலையை தாண்டின பிறகு எதுக்கு சந்தோசப்படனும். ஆனா இந்த நிலையில் நம்மால வாழ்கைய ரசிக்க முடியாது. அதாவது சிரிக்க வேண்டிய நிலைல சிரிக்காம, அழவேண்டிய நிலைல அழாம எதுக்கு வாழனும் ? ஆனா இது எல்லாமே போலியான ஒண்ணுதான். இருந்தாலும் கூட வாழுரதுக்குனு வந்த பிறகு ஏன் அத விட்டுட்டு வேற நிலைக்குப் போகணும்னுதான் எனக்கு குழப்பமா இருக்கு.

  அப்படின்னா மேல சொன்னது மாதிரி ஆன்மாவை உணர்வது நிச்சயமா ஒரு தவறான ஒரு பாதையைத்தான் காட்டும். அதாவது இந்த உலகம் கண்டிப்பா நிலையானது இல்ல , அப்புறம் எதுக்கு இவ்ளோ முயற்சி செய்யனும் , சிரமப்பட்டு முன்னேறனும் அப்படிங்கிற மாதிரி எதிர் விளைவுகளையும் கொடுக்கும் தானே?

  ஆன்மாவை உணர்வது அப்படிங்கிற விசயத்தை விட நாம பொதுவாவே நமக்கு பிடிச்ச மாதிரி அடுத்தவங்கள எதுக்காகவும் காயப்படுத்தாம , எப்போதுமே சந்தோசமா அதாவது முடிஞ்ச அளவு சந்தோசமா இருந்தாலே வாழ்க்கை நமக்கு பெரிய வரமா அமையும். அதே மாதிரி தியானம் பற்றி பேசிட்டிருக்கும்போது மனிதன் தியானம் பண்ணுறது கூட கடவுளை அடையும் வழி அப்படின்னு சொன்னாங்க. ஆனா உண்மைலேயே கடவுளை அடையணும்னா வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாம அதாவது இத விரும்பாம இருந்தாதானே அது நடக்கும்.

  தியானம் பண்ணுறது மனதினை அடக்கனும்னு சொல்லுறாங்க , ஆனா மனதினை அடக்கி ஒரு அமைதி வரதுக்கும் மனதினை அதான் போக்கிலேயே விட்டு ஒரு அமைதி வரதுக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு நினைக்கிறேன், கண்டிப்பா மனதினை அடக்குவதைக் காட்டிலும் அதை அதான் போக்கிலேயே அதாவது அது எவ்ளோ சிந்திக்குது அப்படின்னு விட்டாதானே நம்மால தாண்டிப் போக முடியும் . அது இல்லாம மனச அடக்குறோம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு வழிய தியானம் பண்ணி அடக்கினாலும் கூட அது இந்த வாழ்கை நிலையானது அப்படிங்கிற ஒரு போலியான விசயத்த உண்மைன்னு நம்புறது மாதிரி தானே.!

  மொத்தத்துல கடவுள நம்புறவங்க நம்புங்க , நம்பாதவங்க நம்ப வேண்டாம். ஆனா கண்டிப்பா ஆன்மாவையோ கடவுளையோ உங்களை தவிர உங்களுக்கு வேற யாராலையும் காட்டிவிட முடியாது. பொதுவா வாழ்வதற்குத் தான் வந்திருக்கோம். சந்தோசமா வாழ்வோம் . அடுத்தவங்களப் பத்தி சிந்திக்கரத விட்டாவே ரொம்ப சந்தோசமா வாழ முடியும். அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க. இதெல்லாம் தூக்கி வீசிடுங்க , எப்ப தேவைப்படுதோ அப்ப மட்டும் காட்டுங்க , அப்பத்தான் மகிழ்ச்சியா இருக்கமுடியும் அப்படிங்கிறது என்னோட கருத்து. மத்த படி ஆன்மா அதான் போக்கிலேயே இருக்கட்டுமே!!

நீதி : மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!

பின்குறிப்பு : நிறைய சொல்லனும்னு தோணுது , ஆனா வார்த்தைதான் இல்லை. இங்க சொன்னது எல்லாமே என்னோட புரிதல்கள் மட்டுமே அதுல தவறுகள் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.