முன்குறிப்பு : எல்லோரும் கண்டிப்பா போன் வச்சிருப்போம். அதுல நிறைய அப்ளிகேசன்ஸ் வச்சிருப்போம். சிலது நமக்கு தெரிஞ்சிருக்கும் , சிலது தெரிஞ்சிருக்காது. இங்க நான் பயன்படுத்துற சில பயனுள்ள அப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருக்கேன் பாருங்க .!
முதல்ல பிரவுசர் பத்தி பார்க்கலாம்
*.Opera Mini : இது பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துற ஒரு உலவி, பெரும்பாலும் நோக்கியா மொபைல்ல கூடவே வருது.!
*.Bolt Browser : இதுவும் ஒரு நல்ல உலவிதான். இதுல யுடியூப் வீடியோக்கள தரவிறக்கம் செய்யாம பார்க்கலாம்.!
*.UC Browser : இதுவும் ஒரு உலவிதான். இருந்தாலும் ஒபேரா அளவுக்கு வராது.!
மின்னரட்டை ( சாட்டிங் ) :
*.e-Buddy : பெரும்பாலோர் பயன்படுத்துற அப்ளிகேசன் இதுதான். இதுல சாட் பண்ணுறது சுலபமா இருக்கும்.
Nimbuzz : இதுவும் ஒரு அருமையான அப்ளிகேசன் தான். இதுல நம்ம மொபைல்ல இருந்து போட்டோஸ் கூட சாட்டிங் போதே அனுப்ப முடியும். e-Buddy ய விட எனக்கு இது சிறப்பா தெரியுது.
இது தவிர mig33 , MGtalk, Palringo,RocketTalk, WeBuzz இப்படி எக்கச்சக்க அப்ளிகேசன்ஸ் இருக்கு. இது எல்லாத்திலையும் எனக்கு ரொம்ப பிடிச்சது Nimbuzz தான்.!
Dictionary :
நமக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாம இருக்கும் . அதுக்காக நிறைய Dictionary's இருக்கு.இங்க எனக்கு தெரிஞ்சா ரொம்ப ரொம்ப வாய்ப்பே இல்லாத ஒரு Dictionary பத்தி சொல்லுறேன்.
AROMA : அரோமா அப்படின்னு ஒரு Dictionary இருக்குங்க. உண்மைலேயே வாய்ப்பே இல்ல. அவ்ளோ நல்லா இருக்கு. அதில நிறைய விசயங்கள் இருக்கு .அதுல இருக்குற அதாவது ஒரே அப்ளிகேசன்ல இருக்குற விசயங்கள் என்னனு பார்த்தா Jokes , Wikipedia , Local , Funstuff , Lifestyle இப்படி எல்லா விஷயங்களுமே இருக்கு . இதுல Local அப்படிங்கிற Tab ல நம்ம லோக்கல்ல இருக்குற எல்லா விசயங்களையும் அதாவது Pizza கடை எங்க இருக்குது அப்படின்னு கூட தேட முடியும் . உண்மைலேயே ரொம்ப கலக்கலா அப்ளிகேசன் இது . அதே மாதிரி Funstuff அப்படிங்கிற Tab ல Quotes, Facts, Proverbs, Story இப்படி நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கு . அதுவும் On this Day அப்படின்னு ஒண்ணு இருக்கு , அதுல போய் பார்த்தீங்க அப்படின்னா வரலாற்றுல அந்த தினத்துல நடந்த விசயங்கள சேர்த்து வச்சிருக்காங்க. சரி இன்றைய தினத்தோட சிறப்பு என்னனு பார்க்கலாம்னு பார்த்தேன் , கி.பி 600 ல ஆரம்பிச்சு ஒரு 26 நிகழ்வுகள் இருந்துச்சு.! ஆனா இந்த அப்ளிகேசனோட ஒரே பிரச்சினை என்னனா இது ஒரு ஆன்லைன் அப்ளிகேசன்.!
*.Dictionary v3.1 : இது ஒரு offline dictionary . உண்மைலேயே இது ரொம்ப நல்லா இருக்கு . ஆனா அரோமா ல இருக்குற அளவுக்கு நிறைய விசயங்கள் இல்லனா கூட ஒரு Dictionary அப்படிங்கிற அளவுக்கு பயனுள்ளதா இருக்கு. அது உருவாகினது கூட Vikrant Prakash Chavan அப்படின்கிற மகராஷ்டிரா காரர்.!
*.Window XP : என்னடா இது WindowsXp அப்படின்னு பார்க்காதீங்க , அப்படி ஒரு அப்ளிகேசன் இருக்கு. அத ஓபன் பண்ணினா நம்ம WindowsXp கம்பியூட்டர்ல எப்படி தெரியுதோ அதே மாதிரி உங்க மொபைல்ல தெரியும். ஆனா இது எதுக்கு பயன்படுதுன்னு தெரியல . ஒரு அழகுக்காக வச்சிக்கலாம்.!
சரி இவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருக்கே இதெல்லாம் எங்க போய் வாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.com , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.!
நீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.!
சந்தேகம் : இதுக்குப் பேர்தான் நல்லா பதிவா ..?
பின்குறிப்பு : என்னடா கோமாளி கூட நல்லா பதிவு எழுதிருக்கானே திருந்திட்டானோ அப்படின்னு நினைக்க வேண்டாம் .. 2011 வாழ்த்து சொல்லுறதுக்காக ஒரு உருப்படியான பதிவு போடணும்னு நினைச்சேன்.. அதான்.. நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க , வரப்போற ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் அப்படின்னு சொல்லி எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.!
Friday, December 31, 2010
Wednesday, December 29, 2010
நாட்டமையும் தமிழ்படம் நாட்டாமையும் பகுதி - 4
முன்குறிப்பு : நாட்டமையும் தமிழ்படம் நாட்டமையும் பதிவோட முந்தய பதிவுகள படிக்கணும்னு நினைக்கிறவங்க இங்க போய் படிச்சுகோங்க.!
இடம் : எமலோகம். நாட்டாமையும் தமிழ்படம் நாட்டாமையும் எமனின் முன்னால் நிற்கின்றனர்.!
எமன் : என்ன சித்திரகுப்தா இன்று ஒரு ஆள்தானே நமது கணக்கு , இரண்டு பேர் இருக்கின்றனர்.?
சித்திர குப்தன் : யார் நாட்டாமைனு கேட்டா இரண்டுபேருமே நாந்தான்னு சொன்னாங்க அதான் குழப்பத்துல ரண்டுபேரையும் பிடிச்சிட்டு வந்திட்டேன்.
எமன் : சரி விடு , நான் விசாரிக்கிறேன் ..! உங்க ரண்டுபேர்ல யாருயா உண்மையான நாட்டாமை..?
நாட்டாமை பட நாட்டாமை : இதுல என்றா சந்தேகம் உனக்கு , நான் தாண்டா நாட்டமை , இவன் சும்மா டூப்பு.. தென்றா பசுபதி சொல்றா இவன் கிட்ட.!
சி.குப்தன் : யோவ் என்னப் பார்த்தா பசுபதி மாதிரியா தெரியுது , நான் பசுபதி இல்ல . அவன் இன்னும் பூமிலதான் இருக்கான்.!
தமிழ்ப்படம் நாட்டாமை : நீ மொதல்ல நிறுத்துரா , நான் தாண்டா இப்ப நாட்டமை ,இவன்தான் செத்துப்போய்ட்டானே.!
நா.நாட்டாமை : தென்றா பேசற நீயி , பசுபதி இல்லீனா நாங்க எப்பர்றா நாலு எடத்துக்குப் போயி தீர்ப்பு சொல்லுறது..? போ போயி பசுபதிய கூட்டிட்டு வா.
த.நாட்டாமை : அப்பிடியே , அந்த சொம்ப எடுத்துட்டு வாடா.!
நா.நாட்டாமை : ( த.நாட்டமையைப் பார்த்து ) டேய் , டேய் அங்க ஒரு ஆல மரம் இருக்குடா , அத நான்தான் மொதல்ல பார்த்தேன் , அதனால நான் தான் மொதல்ல தீர்ப்பு சொல்லுவேன்.!
த.நாட்டாமை : தென்றா பேசற , மொதல்ல ஆளுக்குப் பாதியா பிரிக்கோனும் , அப்புறம் தீர்ப்பு சொல்லுவோம்.! (இருவரும் ஆல மரத்தடிக்கு ஓடுகின்றனர்.!)
சி.குப்தன் : யோவ் , நில்லுங்கய்யா , இங்க வந்து தீர்ப்பெல்லாம் சொல்லவேண்டாம் , இது எமலோகம்.! இங்க எமன் மட்டும்தான் தீர்ப்பு சொல்லுவார்.
த.நாட்டாமை : உனக்கு வேணா எமன் பெருசா இருக்கலாம் , ஆனா தீர்ப்பு நம்பட கைல.!
எமன் : யோவ் , இரண்டுபேருமே செத்துப் போய்த்தான் இங்க வந்திருக்கீங்க..!
நா.நாட்டாமை : தென்றா லூசாட்டமா பேசுற , நான் செத்துப்போயட்டா ஆர்ரா தீர்ப்பு சொல்லுறது.?
த.நாட்டாமை : நான் சொல்லுவண்டா.!
எமன் : யோவ் , லூசுகலாயா நீங்க , இரண்டுபேருமே செத்துத்தான் இங்க வந்திருக்கீங்க.!
நா.நாட்டாமை : தென்றா மறுக்காலும் மறுக்காலும் அப்படியே சொல்லிட்டிருக்கற , இவன் பதினெட்டு வருஷம் தள்ளி வெக்கரண்டா , இவனோட ஆரும் பேச கூடாது , தண்ணி பொழங்ககூடாது. இதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு.!
த.நாட்டாமை : செல்லாது செல்லாது ,நீ யார்ரா தீர்ப்பு சொல்லுறதுக்கு , நான் தான்டா இங்க நாட்டாமை , நம்பட தீர்ப்புத்தாண்டா செல்லும். இவன கள்ளிப்பால் ஊத்திக் கொன்னுபோடுங்கடா..! தெங்கடா பசுபதி , வந்ததும் அடிசொட்ட சொல்றா.!
சி.குத்தன் : யோவ் , எமனவே கொல்லச்சொன்ன ஆளு நீதான்யா ..? உன்னைய மொதல்ல எண்ணச்சட்டில போட்டு வறுக்கணும்..!
எமன் : ஐயா சாமி , இவனுகள பிடிச்ச இடத்துலேயே கொண்டு போய் விட்டுரு என்று கூறியவாறே மயங்கி விழுகிறார்.!
பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!
Subscribe to:
Posts (Atom)