முன்குறிப்பு : நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் இந்தப் பதிவோட முதல் இரண்டு பகுதிகள படிக்கணும்னா லேபிள்ல பொய் நாட்டாமை அப்படிங்கிறத கிளிக் பண்ணி படிங்க.!
நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ஒரு சுடுகாட்டுல நின்னுட்டிருக்காங்க. அங்க இரண்டுபேர் ஒரு குழில இருந்து பொணத்த தோண்டி எடுத்திட்டு இருக்காங்க. இன்னிக்கு பசுபதி லீவ். அதனால பசுபதிக்குப்பதிலா நம்ம இம்சைஅரசன் பாபு அண்ணன் போறாரு. இனி அங்க நடந்தப் பார்கலாம்.!
நாட்டாமை பட நாட்டாமை : தோன்றா தோன்றா., நல்லா தோண்டு ., நாந்தே தீர்ப்பு சொல்லுவேன்.!
தமிழ்ப்பட நாட்டாமை : தென்றா பேசுற ., நான்தான் சொல்லுவேன்.!
நா.நாட்டாமை : டேய் , நீ தானடா இவன கள்ளிப்பால ஊத்தி கொல்ல சொல்லி தீர்ப்பு சொன்ன., இந்த தடவ நான்தாண்டா சொல்லுவேன்.!
இம்சை பாபு : இப்ப எதுக்கு இங்க வந்து இதைய தோண்டிட்டு இருக்கீங்க..?
நா.நாட்டாமை : இவன் ஒரு தப்புப் பண்ணிடாண்டா., அதான் தீர்ப்பு சொல்லலாம்னு வந்தோம்.!
இம்சை பாபு : அப்படி என்ன தப்பு பண்ணுனான்..?
த.நாட்டாமை : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு அப்படின்னு கேட்டதுக்கு பல் வெள்ளையா இருக்கு அதனால தயிரும் வெள்ளையா இருக்கு அப்படின்னு தப்பா சொன்னதால இவன கள்ளிப்பால் ஊத்தி கொல்ல சொல்லிட்டேன்.!
இம்சை பாபு : சரியாத்தான மக்கா சொல்லிருக்கான்..!
த.நாட்டாமை : தென்றா பேசுற , அப்படின்னா பால்ல இருந்து வர்ற நெய் மட்டும் எப்பர்ரா மஞ்சளா இருக்கு...?
நா.நாட்டாமை : அப்டி கேள்றா..?
இம்சை பாபு : சரி இப்ப இவன எடுத்து என்ன பண்ண போறீங்க..?
நா.நாட்டாமை : எங்களுக்கு வேலை இல்லைடா, அதான் பழைய தீர்ப்பஎல்லாம் மறுபடி பஞ்சாயத்து வச்சு தீர்ப்பு சொல்லப்போறோம்.!
இம்சை பாபு : ஆனா இவன்தான் செத்துட்டானே .?
த.நாட்டாமை : செதவனா இருந்தாலும் உசுரோட இருகரவனா இருந்தாலும் நியாயம் நியாம்தண்டா..!
( அந்த குழிக்குள்ள இருந்து ஒரு எலும்புக்கூட்ட எடுக்குறாங்க., அத பார்த்த உடனே )
த.நாட்டாமை : என்னடா இவன் இன்னும் அப்படியேதான் இருக்கான். வளரவே இல்லையா .?
இம்சை பாபு : செத்ததுக்கு அப்புறமா எப்படிங்க வளருவான்..?
த.நாட்டாமை : அவனுக்கு நான் தினமும் சோறு அனுப்பிட்டு இருந்தன்லடா..? பசுபதி கூட சோறு நல்லா தின்கிரான்னு எங்கிட்ட சொல்லி அடிக்கடி காசு வான்குவான்ல. இப்ப என்னடா வளராம அப்படியே இருக்கறான். இந்த நாத்தம் அடிக்கிது ., தண்ணி கூட வாக்கலையா ..?
நா.நாட்டாமை : நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்.!
இம்சை பாபு : இந்த நேரத்துலயும் நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்னு சொல்லுறானே , என்ன கொடுமைடா சாமி ..?
த.நாட்டாமை : தீர்ப்பு அப்புறம் சொல்லிக்கலாம் , முதல்ல பசுபதி கிட்ட கேளுடா .? இவன் ஏன் வளரலைன்னு..?
நா.நாட்டாமை : தென்றா பாபு , போன போடுறா பசுபதிக்கு..!
(பாபு பசுபதிக்கு போன் போட்டு த.நாட்டாமையிடம் தருகிறார்.)
த.நாட்டாமை : தென்றா பசுபதி , அன்னிக்கு ஒருத்தனுக்கு கள்ளிப்பால ஊத்திக் கொன்னதுக்கு அப்புறம் அவனுக்கு சோறு குடுத்துட்டு இருந்தீள , அவன் வளரவே இல்லையேடா..?
பசுபதி : யாருக்கு கள்ளிப்பால் ஊத்துனீங்க..? உங்களுக்கு யார் வேணும் .? எனக்கு ஒண்ணும் புரியலையே..?
நா.நாட்டாமை : தென்றா பசுபதி , நீ நம்பட பையந்தான. என்ன கூடவா மறந்திட்ட..?
பசுபதி : ஐயோ , நானே ஒச்சாயி படம் ஓடிட்டு இருக்குற தியேட்டர்ல இருக்கேன் ., அப்புறமா கூப்பிடுங்க..! ( போனை கட் செய்து விட்டார் )
நா.நாட்டாமை : தென்றா பாபு , நீ ஆருக்குடா போன் போட்ட ..?
இம்சை பாபு : நடிகர் பசுபதிக்கு தான் போட்டேன்..
நா.நாட்டாமை : அவருக்கு எதுக்குடா போட்ட , நம்பட பையன் பசுபதிக்கு போட வேண்டியதுதானே..!
இம்சை பாபு : அது எவன்டா உம்பட பையன் பசுபதி ..?
நா.நாட்டமை : நீ நாட்டாமை படம் பார்த்தியா இல்லையா .?
இம்சை பாபு :உன்னைய பாக்குறதே பெருசு , அத வேற பாக்கணுமா..?
த.நாட்டாமை : என்னது நாட்டாமை படம் பாக்கலையா ., தென்றா பேசுற ..? இவன புடிச்சு கள்ளிப்பால ஊத்திக் கொல்லுங்கடா ..?
நா.நாட்டாமை : செல்லாது செல்லாது ., நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்.! இவன ஊர விட்டு தள்ளி வெக்கறேண்டா .! ஆரும் இவன்கூட பேசப்படாது.!
இம்சை பாபு : ( லூசா இருப்பானோ , இந்த ஊர்லையே ஒருத்தரும் இல்லைன்னு தான் பொணத்த எடுத்து தீர்ப்பு சொல்லிடு திரியுதுக , என்ன கொடுமையோ , நான் தப்பிச்சேன்.!!)
பின்குறிப்பு : காமெடி பண்ணனுனு ஆரம்பிச்சு மொக்கைல வந்து முடிஞ்சிடுச்சு ..!!
சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)
நீதி : பாவம் நீங்க ..!
44 comments:
இன்னிக்கு நான்தான் முதல் வெட்டு..!!
//காமெடி பண்ணனுனு ஆரம்பிச்சு மொக்கைல வந்து முடிஞ்சிடுச்சு ..!!//
மொக்கையா இருந்தாலும் நிறைய காமெடியாதான் இருக்கு செல்வா..!! தொடர்ந்து அசத்துங்க..!!
மக்கா செல்வா .........இதுக்கு என்னை அந்த குழிக்குள் தள்ளி மூடி இருக்கலாம்
இரு மொதோ வெட்டு வெட்டிட்டு வர்றேன்
வடை போச்சே ,................ பரவா இல்லை இனி இவன் நம்ம நாட்டாமையா பத்தி ஏதாவது தப்பா எழுதினா சுறா படத்த மூணு வாட்டி பாக்க வையுங்கடா
என்ன செய்வேன் நான்?????
ஆனா காமெடி நல்லா இருக்கு! பயமா இருக்கு! மொக்கையும் இருக்கு! ஆனா சிரிப்பா இருக்கு!
இம்சை பாபு : நடிகர் பசுபதிக்கு தான் போட்டேன்..
நா.நாட்டாமை : அவருக்கு எதுக்குடா போட்ட , நம்பட பையன் பசுபதிக்கு போட வேண்டியதுதானே..!////
இம்சையை பற்றி நல்லவே தெரிந்து வைத்து இருக்கே செல்வா
கூப்பிடுங்க நாட்டாமையை செல்வாவுக்கு தீர்ப்பு சொல்வோம் வாங்க இம்சை உங்க தீர்ப்பு சொலுங்க
///மொக்கையா இருந்தாலும் நிறைய காமெடியாதான் இருக்கு செல்வா..!! தொடர்ந்து அசத்துங்க..!!//
ஓ , அப்ப சரிங்க ..!!
மங்குனி அமைசர் said...
வடை போச்சே ,................ பரவா இல்லை இனி இவன் நம்ம நாட்டாமையா பத்தி ஏதாவது தப்பா எழுதினா சுறா படத்த மூணு வாட்டி பாக்க வையுங்கடா//////
சரி சரி இருங்க நாட்டாமை கிட்ட சொல்லி உங்களுக்கு வடை வாங்கி தர சொல்றேன்
//பரவா இல்லை இனி இவன் நம்ம நாட்டாமையா பத்தி ஏதாவது தப்பா எழுதினா சுறா படத்த மூணு வாட்டி பாக்க வையுங்கடா
//
நான் எங்கங்க தப்பா எழுதினேன் ..?
எஸ்.கே said...
என்ன செய்வேன் நான்????////
எஸ் கே... தினமும் உங்களுக்கு செல்வா ஒரு மொக்கை ஜோக் sms அனுப்புவார் அதை படிங்க எல்லாம் சரியா போய்டும்
தம்பி நல்லா இருக்கு....
சாவடிக்கிறாங்களே என்னைய
ஆ செல்வா என்ன இது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..
மொக்கை சூப்பராகீது...
சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)
//
ஏன்.. ஏன்.. ஏண்டா இந்த கொலை வெறி...
//கே.ஆர்.பி.செந்தில் said...
மொக்கை சூப்பராகீது... //
நீங்களுமா கே .ஆர்.பி அண்ணா.......
சாவடிகிரானே என்னை .....
இதுல வேற சௌந்தர் வந்து என்னை தீர்ப்பு சொல்ல கூபபிடுரானே....
ஐயோ தீர்ப்பு ன்னு சொன்னாலே .......நெஞ்செல்லாம் தீபிடிகிற மாதிரி இருக்கே .......
இமசை செத்து போயட்டானைய .....
//பின்குறிப்பு : காமெடி பண்ணனுனு ஆரம்பிச்சு மொக்கைல வந்து முடிஞ்சிடுச்சு ..!!//
நீ எது ஆரம்பிச்சாலும் அது மொக்கல தானே முடியும்...
தம்பி சூப்பரப்பு...............
பாஸ் பெணத்த வச்சு ஆராய்ச்சிபண்ணரீங்க, அப்படின்னா நீங்க டாக்குடரு ரசிகர்தான?
இன்னும் எத்தனை பாகம் இருக்குனு சொல்லிடுங்கப்பா...
நீங்க ரொம்ப comedy-a எழுதறீங்க. படிகர்துக்கு நல்லா இருக்கு .
நீங்க http://zeole.com/chennai க்கு வந்து ஒரு முறை எழுதணும் ...
zeole.com என்னோட ஒரு முயற்சி தான் ... அதுல ஒவ்வொரு country/city ஆக தனித்தனியாக arrange செய்து இருக்கோம்.
zeole.com/chennai ல , ஒரு 100 readers வருவாங்க . உங்க எழுத்து பல வாசகர்கள் பார்க்க வைப்பு உள்ளது.
//அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)
நீதி : பாவம் நீங்க ..!//
ரைட்டு :))
சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)///
நல்லவேளை இப்போதே சொன்னனே அடுத்த பதிவுக்கு வந்ததா தானே
விறு விருப்பாக உள்ளது
அய்யா சாமி ஆள விடு.நான் புள்ள குட்டிக்காரன்.
--
முதல் பகுதி படிச்சு சிரிச்சிருக்கேன் இரண்டாம் பகுதியும் ரொம்ப நல்லாருக்கு
காமெடி,உடனுக்குடன் மாறும் டயலாக் செம சூப்பர்
பு : அது எவன்டா உம்பட பையன் பசுபதி ..?//
ஹஹா கலக்கல்
//காமெடி,உடனுக்குடன் மாறும் டயலாக் செம சூப்பர் //
வாங்க , வாங்க ..!!
சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)//
ஆ..நல்லாத்தானே போய்கிட்டிருக்கு
//சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)
நீதி : பாவம் நீங்க ..!//
யாரு பாவம் ராசா? தேவா வா? இல்லை நாங்களா?
செல்வா நாட்டாமை படம் எடுத்த இடம் நம்ம ஊருக்கு பக்கத்துலதான் இருக்கு. ஒரு டைம் போய் பார்த்துட்டு வந்துட்டு அடுத்த பார்ட் எழுதவும்.
ஹா ஹா ஹா.. :-))) எல்லாம் நல்லாத்தேன் இருக்கு..
இப்புடி நைட் வேளைல....பதிவு படிக்க வந்தா...
இப்படியா... "தோன்றா.... தோன்றா...ன்னு பயம் காட்றது..!!"
கலக்கல் நண்பா ...
காமடி இதுக்கு நாங்க சிரிக்கணும்
- ஆனாலும் நல்லா தான் இருக்குது
:))))
Super! அடுத்த பதிவுக்கு waiting
ஏன் கண்ணு... அடுத்த பதிவு தேவா ஸ்டைலுன்னு சொல்லிபோட்ட...
கண்ணுல தண்ணி வந்துடுச்சு கண்ணு.....
அடமேல போட்றுக்குற சோக்கு படிச்சு கண்ணு...!
ஹா ஹா ஹா.. :-))
யோவ் பதிவு போட்டா சொல்றதில்லையா? என் நெம்பர் 98427134412 மெசேஜ் பண்ணவும் இனி
சாரி 9842713441
செம காமெடி,இனி நீர் மொக்க ராசா என அன்போடு அழைக்கப்படுவீர்
மறுபடியும் இப்பதான் வோட்டு போட்டேன்..அன்னிக்கு தொழில் நுட்ப கோளாறு..பார்ட் 4 எதிர்பார்க்கிறேன்
Post a Comment