Saturday, November 27, 2010

Happeeeeeeeeeeeeeeee..!!!!!!

முன்குறிப்பு : எனக்கு இத எப்படி ஆரம்பிக்குறது அப்படின்னு தெரியல , அவ்வளவு சந்தோசமா இருக்கேன். அப்படி என்ன சந்தோசம் அப்படின்னு கேக்குறீங்களா.? அதுக்கு என்னோட கூகுள் SMS CHANNEL பத்தி தெரிஞ்சிக்கணும்., சொல்லுறேன் இருங்க.!

Google Sms Channels : 
Google Sms Channels கூகுள் இந்தியா லேப்ஸ் ன்   ஒரு பிரிவு. இது ஒரு இலவச சேவை. நீங்க கூட ஒரு sms channel தொடங்கி sms அனுப்பலாம். ஆனா நீங்க அதுல யாரெல்லாம் இணைஞ்சிருக்காங்க அப்படின்னு பார்க்க முடியாது. சரி அத விடுங்க நம்ம விசயத்துக்கு வருவோம்.! நான் எப்படி ஒரு சேனல் தொடங்குனேன் அதுல அப்படி என்ன சந்தோசமான விஷயம் நேத்திக்கு நடந்துச்சு அப்படின்னு பார்க்கலாம்.! ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல ரிலையன்ஸ் வீட்டு போன் வாங்கினோம். அதுல அப்ப free  sms இருந்துச்சு. ஆனா அதுல 80 கேரக்டர் மட்டும்தான் எழுதமுடியும். இருந்தாலும் கூட நான் என்னோட நண்பர்கள் 5 பேருக்கு அவுங்களோட மொபைலுக்கு அதிலிருந்து தினமும் dictionary பார்த்து ஒரு வார்த்தையோட மீனிங் அனுப்பிட்டிருந்தேன். அது ஒரு ஆறு மாசம் அனுப்பினேன். அப்புறமா நான் மொபைல் Nokia 1200 வாங்கினேன். அதுல 160 character எழுதலாம். அதோட Distribution List இருக்கும். சரி இத வச்சு எதாவது நல்ல விஷயம் பண்ணலாம் அப்படின்னு என் நண்பர்கள்கிட்ட நான் தினமும் எல்லோருக்கும் sms அனுப்பப்போறேன். அதனால உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி அவுங்கள என் மொபைலுக்கு ஒரு sms அனுப்பி Register பண்ணிக்க சொல்லுங்க அப்படின்னு சொன்னேன்.!

TBTS :
என் நண்பர்கள் கிட்ட சொல்லிட்டு அதுக்கு ஒரு பேரு இருந்ததானே நல்லா இருக்கும் அப்படின்னு நான் என்னோட சேவைக்கு (ஹி ஹி ஹி ) தமிழ் பாரதி தகவல் சுரங்கம் (TBTS)  அப்படின்னு பேரு வச்சேன். அப்புறம் என்னோட நண்பர்கள் வேற வேற கல்லூரில படிச்சாங்க . அவுங்க மூலமா எனக்கு நிறைய நண்பர்களோட எண்கள் கிடைச்சுது. அப்புறம் அவுங்களுக்கு sms அனுப்ப ஆரம்பிச்சேன். ஆனா கொஞ்ச நாள்லயே என்னோட List Space முடிஞ்சு போச்சு . அப்புறம் வேற வழிகள தேட ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல தான் எனக்கு கூகுள் sms channels பத்தி தெரிய வந்துச்சு.!

QUIZFROMTBTS :
     Google sms channels ல என்னோட சேனல் பேரு quizfromtbts. இதுல இப்போ வரைக்கும் 4300 பயனாளிகள் இந்தியா முழுவதும் இருக்காங்க. அது எப்படி வெறும் நாலு பேருக்கு sms அனுப்பி நாலாயிரம் பேர் வந்தாங்க அப்படின்னு நீங்க கேக்கலாம். முதல்ல என்னோட நண்பர்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன். அப்புறம் மொபைல்ல ஆரம்பிச்ச TBTS ல இருந்தவங்கள இதுக்கு வாங்க அப்படின்னு சொல்லி இதுல வந்தாங்க. அப்புறம் ஒரே சிந்தனயுடயவங்க அப்படிங்கிற மாதிரி எனக்கு இந்த சேனல் மூலமா கோயம்புத்தூர்ல பாலகிருஷ்ணன் அப்படிங்கிற நண்பர் கிடைச்சார். அவருக்கு என்னோட பிளான் பிடிச்சிருந்ததால அவுங்க கல்லூரில இருந்து நிறைய பேர என்னோட சேனல்ல சேர வச்சார். அப்படியே 300 , 400 , 500 அப்படின்னு போச்சு. கூகுள் sms channels ல editors pick அப்படின்னு ஒண்ணு இருக்கு . அதுல நல்ல சேனல்ஸ் தேர்ந்தெடுத்து அவுங்களோட முன்னாடி பக்கத்துல வைப்பாங்க. அப்படி என்னோட சேனல் கூட ஒருதடவ தேர்ந்தெடுக்கப்பட்டதால நிறைய பேர் என்னோட Subscriber ஆனாங்க.!இப்போ வரைக்கும் 4300 பேர் ( ஐ ஜாலி ) எங்களோட  சேனல்ல இருக்காங்க.!சரி இது எல்லாம் சரி, இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.? சொல்லுறேன்.!

இதுல என்ன சந்தோசம் :
என்னோட சேனல்ல நான் போது அறிவு சம்பந்தமான விசயங்கள மட்டுமே அனுப்பிட்டிருந்தேன். நிறைய பிரிவுகளில் அனுப்புவேன் . கூடவே Employment News கூட அனுப்புவேன். இப்படி அனுப்பிட்டிருக்கும்போது நேத்து பாலா கூப்பிட்டார். அவரும் நானும் அடிக்கடி பேசுவோம். அவர் நிறைய விசயங்கள் சொல்லுவர். அதே மாதிரி நேத்து எங்கிட்ட ஒருத்தருக்கு B+ ரத்தம் இன்னிக்கு 6 மணிக்கு முன்னாடி தேவைப்படுது , அத நம்ம சேனல்ல போஸ்ட் பண்ணி விட்டா யாரவது உதவுவாங்க அப்படின்னு சொன்னார். நானும் கண்டிப்பா போஸ்ட் பண்ணுறேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு sms போஸ்ட் பண்ணினேன். அடுத்த ஒரு மணிநேரம் கழிச்சு மறுபடியும் பாலா போன் பண்ணினார். நம்ம sms பார்த்துட்டு ஒருத்தர் ரத்தம் தர்றேன் அப்படின்னு சொல்லிருக்கார், அப்படின்னார் .. என்னால நம்பவே முடியல. எனக்கு பயங்கர சந்தோசம் ஆகிடுச்சு. இதென்ன பெரிய விஷயம் அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்தப் பதிவே அந்த ரத்தம் கொடுக்க வந்த நண்பருக்காகத்தான்.

                  அவர் Hindustan காலேஜ் ல MCA படிக்கிறார். அவரோட பேர் மணிகண்டன். நான் உங்க சார்பாவும் என் சார்பாவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்காகத்தான் இந்தப் பதிவே.! இது எங்களோட முதல் வெற்றி அப்படின்னு சொல்லலாம். ஏன்னா எனக்கு ரத்தம் கொடுத்தவரையும் தெரியாது , வாங்கிக்கிட்டவங்களையும் தெரியாது.! ஆனா இனிமேல் பழக்கம் ஆகிடுவோம். இத படிச்சதுமே நான் பண்ணினது சப்ப மேட்டர் இதுக்கு எதுக்கு இவ்ளோ அலப்பற அப்படின்னு நீங்க நினைக்கலாம் .இருந்தாலும் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின sms சேனல் மூலமா நேரடியா ஒருத்தர் பயனடைந்திருக்காங்க அப்படின்னு நினைக்கும்போது பயங்கர சந்தோசமா இருக்கு. பால கிருஷ்ணன் அண்ணனுக்கும் இதுல பங்கு இருக்கு. மணிகண்டன் அவர்களுக்கு  மறுபடியும் எங்களோட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.! அதே மாதிரி போஸ்ட் போட்டதும் வேற மாநிலங்களில் இருந்து கூட சில அழைப்புகள் வந்துச்சு அப்படின்னு பாலா சொன்னார். இந்த அளவுக்கு எங்கள் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு தலைவணங்குகிறோம்.!

நான் இதுக்காக ஒரு ரண்டுவருஷம் முன்னாடி எழுதின ஒரு ப்ளாக் : http://www.ourtbts.blogspot.com

என்னோட sms  சேனலின் இணைப்பு இங்கே : http://labs.google.co.in/smschannels/subscribe/quizfromtbts

நீதி : கோமாளி ப்ளாக்ல வந்து முதல் உருப்படியான பதிவு அப்படின்னு நினைக்கிறேன். ஆனா இனி மொக்கைகள் தான்.!

பின்குறிப்பு : sms channel பற்றி நிறைய சொல்லனும்னு நினைச்சேன்., ஆனா அதுல இருக்குற லிங்க் போய் படிச்சு தெரிஞ்சிகோங்க. அதே மாதிரி எதுக்கு இங்கிலீஸ் தலைப்பு அப்படின்னு நீங்க கேக்கலாம்., அந்த சேனல்ல இங்கிலீஸ்ல தான் sms அனுப்புறேன்.!  (ஹி ஹி ஹி) இந்தப் பதிவு திரு.மணிகண்டன் அவர்களுக்கு சமர்ப்பணம்.!  

82 comments:

எஸ்.கே said...

ரொம்ப நல்ல பதிவு!
மிகவும் பயனுள்ள விஷயம்!

எஸ்.கே said...

நேரடியா ஒருத்தர் பயனடைவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான்!

செல்வா said...

//ரொம்ப நல்ல பதிவு!
மிகவும் பயனுள்ள விஷயம்! //

ஹி ஹி ஹி ., நன்றிங்க ..!!

செல்வா said...

//நேரடியா ஒருத்தர் பயனடைவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான்!
/

என் மொக்கைல கூடத்தான் பயனடயுரீங்க ..!!

செல்வா said...

//
வெறும்பய said...
online//

offline..!!

எஸ்.கே said...

//என் மொக்கைல கூடத்தான் பயனடயுரீங்க //
அதானே நீங்க பல சேவை செய்யும் சமூக சேவகராகிடீங்க!

செல்வா said...

//அதானே நீங்க பல சேவை செய்யும் சமூக சேவகராகிடீங்க! //

ஹி ஹி ஹி ., அதிகமா புகழாதீங்க ..!!

dheva said...

நல்ல சுவாரஸ்யமா இருந்தது தம்பி.....எனக்கு புதிய தகவல்தான்..அதைத்தான் பாத்துகிட்டு இருக்கேன் இப்போ....!!!!!

//நீதி : கோமாளி ப்ளாக்ல வந்து முதல் உருப்படியான பதிவு அப்படின்னு நினைக்கிறேன். ஆனா இனி மொக்கைகள் தான்.!//

இது என்ன ட்ரெண்ட்...மொக்கை போடலேன்னா அவன் கேவலமன்னு நினைக்கிற மாதிரி...ஹா..ஹா..ஹா..

சிரிப்பா எழுதுறுவங்க எல்லாம் மொக்கைனு நினைச்சுகிட்டு இருக்கோம்... நத்திங்க் லைக் தட்

சீரியஸா தலைல இறக்குறாங்களே சில அனார்த்தங்கள் அதுதான் ரியல் மொக்கைகள்...

செல்வா said...

//நல்ல சுவாரஸ்யமா இருந்தது தம்பி.....எனக்கு புதிய தகவல்தான்..அதைத்தான் பாத்துகிட்டு இருக்கேன் இப்போ....!!!!!//

அது இந்தியாவுல மட்டும்தான் பயன்படும் அண்ணா ..!! ஹி ஹி ஹி ..

Unknown said...

great...

job..

vaalga valamudan...

இம்சைஅரசன் பாபு.. said...

உன்னோட சந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன் ......எவ்வளவு பெரிய விஷயம் செயதிருகீங்க ..........இன்னும் பல நல்ல விஷயங்கள் செய்ய அண்ணனோட வாழ்த்துக்கள் மக்கா ...........

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கையன் மொக்கை எழுதி என்னத்தை கிழிச்சான்னு இனி ஒருத்தனும் சொல்ல முடியாதுல்லா...
நல்ல முயற்ச்சி அண்ணனின் வாழ்த்துக்கள்...........

அன்பரசன் said...

உண்மையிலேயே இது ரொம்ப நல்ல விசயம் செல்வா

செல்வா said...

//.இன்னும் பல நல்ல விஷயங்கள் செய்ய அண்ணனோட வாழ்த்துக்கள் மக்கா ........... //

நன்றி அண்ணா ..!!

செல்வா said...

// siva said...
great...

job..

vaalga valamudan...///

நன்றி அண்ணா ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

மணிகண்டனை இனி எப்பாவது பார்த்தலோ பேசினாலோ என்னோட வாழ்த்துகளையும் நன்றியையும் கூறுங்கள் தம்பி ..........

செல்வா said...

//
உண்மையிலேயே இது ரொம்ப நல்ல விசயம் செல்வா //

நன்றி அன்பு ..!!

செல்வா said...

மொக்கையன் மொக்கை எழுதி என்னத்தை கிழிச்சான்னு இனி ஒருத்தனும் சொல்ல முடியாதுல்லா... நல்ல முயற்ச்சி அண்ணனின் வாழ்த்துக்கள்........... // ஹி ஹி ஹி ., நன்றி அண்ணா .,!! நாம வழக்கம் போல மொக்க போடலாம் .

செல்வா said...

//மணிகண்டனை இனி எப்பாவது பார்த்தலோ பேசினாலோ என்னோட வாழ்த்துகளையும் நன்றியையும் கூறுங்கள் தம்பி .......... //

கண்டிப்பா சொல்லுறேன் அண்ணா ..!

sathishsangkavi.blogspot.com said...

மிகவும் பயனுள்ள விஷயம்...

செல்வா said...

//மிகவும் பயனுள்ள விஷயம்... //
நன்றிங்க அண்ணா ..!!

சௌந்தர் said...

என்னோட சேனல்ல நான் போது அறிவு சம்பந்தமான விசயங்கள மட்டுமே அனுப்பிட்டிருந்தேன். நிறைய பிரிவுகளில் அனுப்புவேன் . கூடவே Employment News கூட அனுப்புவேன். இப்படி அனுப்பிட்டிருக்கும்போது நேத்து பாலா கூப்பிட்டார். அவரும் நானும் அடிக்கடி பேசுவோம். அவர் நிறைய விசயங்கள் சொல்லுவர். அதே மாதிரி நேத்து எங்கிட்ட ஒருத்தருக்கு B+ ரத்தம் இன்னிக்கு 6 மணிக்கு முன்னாடி தேவைப்படுது , அத நம்ம சேனல்ல போஸ்ட் பண்ணி விட்டா யாரவது உதவுவாங்க அப்படின்னு சொன்னார். //////

அடபாவி இந்த மாதிரி நல்ல விசயம் எல்லாம் எனக்கு sms வருவதே இல்லை தினம் ஒரு மொக்கை மட்டும் தான் வருது

என்னது நானு யாரா? said...

உண்மையிலேயே ரொம்ப நல்ல காரியம் செய்திருக்கே செல்வா!

நல்லது செய்யணும் என்கின்ற உன் மனசு உண்மையாளுமே தங்கம் தான் தம்பி! வாழ்த்துக்கள்!

நல்லது செய்றவங்க எண்ணிக்கை வளரணும்!
நம்ப வாழ்க்கையெல்லாம் செழிச்சு மிளிரணும்

சௌந்தர் said...

நான் இதுக்காக ஒரு ரண்டுவருஷம் முன்னாடி எழுதின ஒரு ப்ளாக் : http://www.ourtbts.blogspot.com////

அப்போ நீ பழைய பதிவரா....?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவுங்க மூலமா எனக்கு நிறைய நண்பர்களோட எண்கள் கிடைச்சுது. அப்புறம் அவுங்களுக்கு sms அனுப்ப ஆரம்பிச்சேன்.
//

அதுல பொம்பள புள்ளைக நம்பர் மட்டும் எனக்கு கொடுய்யா.. நான் SMS அனுப்பி பழகறேன்... ஹி..ஹி

சும்மா சொன்னேன்.. எல்லர் நம்படையும் கொடு.. நானே பிரிச்சுக்கிறேன்...
உஷ்.. அப்பாடா. வந்த வேளை முடிஞ்சது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடடடடடே... நன்றீனு எதுக்கு சொல்றீர். என கடமையைதானே செய்தேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

அதுல பொம்பள புள்ளைக நம்பர் மட்டும் எனக்கு கொடுய்யா.. நான் SMS அனுப்பி பழகறேன்... ஹி..ஹி

சும்மா சொன்னேன்.. எல்லர் நம்படையும் கொடு.. நானே பிரிச்சுக்கிறேன்//

அட பாவி பட்டா இந்த மாதிரி எனக்கு தோனலையே ............சரி chatmsg ல வ ரெண்டு பேரும் சேர்ந்து பிரிப்போம் .................

செல்வா said...

//அடபாவி இந்த மாதிரி நல்ல விசயம் எல்லாம் எனக்கு sms வருவதே இல்லை தினம் ஒரு மொக்கை மட்டும் தான் வருது //

ஹி ஹி ஹி ., !!

செல்வா said...

//அதுல பொம்பள புள்ளைக நம்பர் மட்டும் எனக்கு கொடுய்யா.. நான் SMS அனுப்பி பழகறேன்... ஹி..ஹி///

ஹி ஹி ஹி .. அதுல யாரோட நம்பரையும் பாக்க முடியாது அண்ணா ..!

செல்வா said...

//நல்லது செய்றவங்க எண்ணிக்கை வளரணும்!
நம்ப வாழ்க்கையெல்லாம் செழிச்சு மிளிரணும்

//

நன்றி அண்ணா .!!

வினோ said...

சூப்பர் தம்பி.. வாழ்த்துக்கள்....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

செல்வா ரியலி யு ஆர் கிரேட்

செல்வா said...

///செல்வா ரியலி யு ஆர் கிரேட் //

நன்றி அண்ணா ..!!

Praveenkumar said...

தம்பி என்னது இது..??
திடீர் இப்படி மாறிட்ட..??
"Happeeeeeeeeeeeeeeee..!!!!!!"
தலைப்பை பார்த்ததும் ஈ பத்தி ஏதாவது மொக்கை போட்டிருப்பேனு நெனைச்சேன்.. இப்படி கவுத்துட்டியே..!! தம்பி..!!

செல்வா said...

//தலைப்பை பார்த்ததும் ஈ பத்தி ஏதாவது மொக்கை போட்டிருப்பேனு நெனைச்சேன்.. இப்படி கவுத்துட்டியே..!! தம்பி..!! //

ஹி ஹி ஹி .. !!

செல்வா said...

// வினோ said...
சூப்பர் தம்பி.. வாழ்த்துக்கள்...//



நன்றிங்க அண்ணா ..!!

Praveenkumar said...

//நாஞ்சில் மனோ said...
மொக்கையன் மொக்கை எழுதி என்னத்தை கிழிச்சான்னு இனி ஒருத்தனும் சொல்ல முடியாதுல்லா...
நல்ல முயற்ச்சி அண்ணனின் வாழ்த்துக்கள்...........//

அண்ணாத்த எங்கெயோ தூக்கி விட்டுடீங்க.. மொக்கை செல்வாவை..

Praveenkumar said...

//நீதி : கோமாளி ப்ளாக்ல வந்து முதல் உருப்படியான பதிவு அப்படின்னு நினைக்கிறேன். ஆனா இனி மொக்கைகள் தான்.!//

நீதிய நீயே சொல்லிட்டா எப்படி அப்பு..! எங்களையும் கொஞ்சம் கருத்து சொல்ல விடமாட்டீரியயே.. தம்பி..! எது எப்படியொ..
இனி அவசர குறுஞ்செய்தி பீதிய (பேதிய இல்ல) கௌப்பற தகவல் உன்கிட்ட இருந்து இனி எதிர்பார்கிறேன். கலக்குங்க..!!!

Praveenkumar said...

ஏற்கனவே கலங்குங்கன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காககவ..
மனுசன் இதுவரை இந்த கலக்கு கலக்குறான்.. இனி என்ன ஆகுமோ தெரியல.. !!! ஹி..ஹி...ஹி.. வாழ்த்துகள் செல்வா..! தொடரட்டும் உன் மொக்கையுடன் சேவைகள்..!

Praveenkumar said...

அனைவருக்கும் ஒரு அறிவுப்பு..! தமிழ்மணததில் ஆங்கில தலைப்பிட்டும் பதிவு டாப்புல வந்திருக்கு இதுவரை 9 வாக்குகள். ஆச்சரியமாக இருக்கிறது.

செல்வா said...

//கலக்குறான்.. இனி என்ன ஆகுமோ தெரியல.. !!! ஹி..ஹி...ஹி.. வாழ்த்துகள் செல்வா..! தொடரட்டும் உன் மொக்கையுடன் சேவைகள்..!
//

மொக்கை என்பது எங்களது தெய்வம் ..!!

Praveenkumar said...

தமிழ்மணத்துல ஆங்கில தலைப்பு இருந்தால் வடிகட்டப்படுவதாக கேள்விப்பட்டேன். அதையும்மீறி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறான்..
நம்ப பாசக்கார பயபுள செல்வா..!

தம்பி இன்னிக்கு நீ தப்பிச்சுட்ட..!!???
ஹி..ஹி...!

செல்வா said...

//அதையும்மீறி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறான்..
நம்ப பாசக்கார பயபுள செல்வா..!//

இதுக்கு முன்னாடியே நான் கின்னஸ் வாங்கிட்டேன் அண்ணா ., ஹி ஹி ஹி ..!!

கருடன் said...

@செல்வா

இது எல்லாம் ஒரு மேட்டர் இதை எல்லாம் வந்து இங்க சொல்லிகிட்டு அப்படினு யாராவது சொன்னா என்கிட்ட சொல்லு.. அண்ணனுங்க கவனிச்சிகிறோம்... :))

வார்த்தை said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

செல்வா said...

/// இது எல்லாம் ஒரு மேட்டர் இதை எல்லாம் வந்து இங்க சொல்லிகிட்டு அப்படினு யாராவது சொன்னா என்கிட்ட சொல்லு.. அண்ணனுங்க கவனிச்சிகிறோம்... :)) ///

ஹி ஹி ஹி ., நன்றிங்க அண்ணா .!!

செல்வா said...

//வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். //

நன்றிங்க .!!

Unknown said...

மிகப் பயனுள்ள செயலுக்காய் பாராட்டுக்கள் செல்வா.

தொடருங்கள்....

Praveenkumar said...

/ப.செல்வக்குமார் said...

//அதையும்மீறி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறான்..
நம்ப பாசக்கார பயபுள செல்வா..!//

இதுக்கு முன்னாடியே நான் கின்னஸ் வாங்கிட்டேன் அண்ணா ., ஹி ஹி ஹி ..!!
//

அந்த பதிவ கின்னஸ்கு அனுப்பி வைச்சதே நான்தான் (தற்பெருமை).. ஹி..ஹி.. என்கிட்டயே சொல்லிகிட்டு போங்க. தம்பி... போய் அடுத்த கின்னஸ்பதிவ தயார் பண்ணுங்க.. கப்பிதனமா சொல்லிக்கிட்டு...!
ஹே... ஹே.. ஹெ..

Unknown said...

அட... இந்த நல்ல பதிவில் 50 எனக்கா... ஹாப்பி.....ஹாப்பி....ஹாப்பி.....ஹாப்பி

செல்வா said...

//மிகப் பயனுள்ள செயலுக்காய் பாராட்டுக்கள் செல்வா.//

நன்றிங்க அண்ணா ..!!

வெங்கட் said...

நல்ல முயற்சி..

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.!!

செல்வா said...

//அந்த பதிவ கின்னஸ்கு அனுப்பி வைச்சதே நான்தான் (தற்பெருமை).. ஹி..ஹி.. என்கிட்டயே சொல்லிகிட்டு போங்க. தம்பி... போய் அடுத்த கின்னஸ்பதிவ தயார் பண்ணுங்க.. கப்பிதனமா சொல்லிக்கிட்டு...!
ஹே... ஹே.. ஹெ..///

ஐம்பதாவது கமெண்ட் போட்டு வடை வான்கிவிடீர்கள் ..!!

செல்வா said...

//நல்ல முயற்சி..

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.!!
//

நன்றி அண்ணா .!

Praveenkumar said...

/// ப.செல்வக்குமார் said...
//அந்த பதிவ கின்னஸ்கு அனுப்பி வைச்சதே நான்தான் (தற்பெருமை).. ஹி..ஹி.. என்கிட்டயே சொல்லிகிட்டு போங்க. தம்பி... போய் அடுத்த கின்னஸ்பதிவ தயார் பண்ணுங்க.. கப்பிதனமா சொல்லிக்கிட்டு...!
ஹே... ஹே.. ஹெ..///

ஐம்பதாவது கமெண்ட் போட்டு வடை வான்கிவிடீர்கள் ..!! ///

ஹ..ஹா.. மகிழ்ச்சி..!
ஆனால் முதல் வடைபோச்சே..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

இது எல்லாம் ஒரு மேட்டர் இதை எல்லாம் வந்து இங்க சொல்லிகிட்டு

//

யோவ் terror இப்ப என்ன பண்ண போற,.

கருடன் said...

@வெறும்பய

//யோவ் terror இப்ப என்ன பண்ண போற,.//

அண்ணானுங்க பார்த்துபாங்க உன்னையும் சேர்த்துதாண்ட சொன்னேன் நொண்னை... இதை வந்து சொல்லாம நீ ப்ளாசால பிளிப்பைன்ஸ் பொண்ணுகிட்ட செருப்படி வாங்கினது, சைனீச் பொண்ணுகிட்ட போய் ஐ லவ் யு சொல்லி குப்புல அவ உன்னை கும்மினது இது எல்லாம சொல்ல சொல்ற?? ப்ளடி ராஸ்கல்... :))

மதுரைக்காரன் said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

செல்வா said...

//நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். //

நன்றிங்க ..!!

Madhavan Srinivasagopalan said...

Great Effort....!!
Very useful & greatly done.

Congrats.

ஜீவன்பென்னி said...

great............ vazthukkalpa.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் பதிவு எங்க?

செல்வா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எலேய் பதிவு எங்க?
//

ஹி ஹி ஹி ., காக்காய் தூக்கிட்டு போய்டுச்சு ..!!

செல்வா said...

// Madhavan Srinivasagopalan said...
Great Effort....!!
Very useful & greatly done.

Congrats.//



நன்றி அண்ணா ..!!

செல்வா said...

// ஜீவன்பென்னி said...
great............ vazthukkalpa.//

thanks na..!!

sakthi said...

அட இது புதிய தகவல் !!!!

சி.பி.செந்தில்குமார் said...

...>>எனக்கு இத எப்படி ஆரம்பிக்குறது அப்படின்னு தெரியல , >>

அப்போ ஆரம்பிக்காதீங்க..

கவி அழகன் said...

கலக்கலா இருக்குங்க!

ஹரிஸ் Harish said...

சூப்பர் பாஸ்..நல்ல விசயம்..தொடருங்கள்..

சாரி பார் த லேட்...

வைகை said...

பட்டாபட்டி.. said...
அவுங்க மூலமா எனக்கு நிறைய நண்பர்களோட எண்கள் கிடைச்சுது. அப்புறம் அவுங்களுக்கு sms அனுப்ப ஆரம்பிச்சேன்.
//

அதுல பொம்பள புள்ளைக நம்பர் மட்டும் எனக்கு கொடுய்யா.. நான் SMS அனுப்பி பழகறேன்... ஹி..ஹி

சும்மா சொன்னேன்.. எல்லர் நம்படையும் கொடு.. நானே பிரிச்சுக்கிறேன்...
உஷ்.. அப்பாடா. வந்த வேளை முடிஞ்ச///////

பாஸ் ஒரே ஊர்ல இருக்கோம், பிரிச்சுகிறேன்னு ஒருமைல சொல்றீங்க!!!! பிரிச்சுக்குவோம்ம்ம்ம்!!!! நான்னு சொன்னா ஒதடு ஒட்டாது!!! நாம்முனு சொன்னாதான் ஓட்டும்!!

a said...

நல்ல விசயம் செல்வா.............. பகிர்விற்க்கு நன்றி.........

ப்ரியமுடன் வசந்த் said...

பாராட்டுகள் செல்வா

இன்னும் நிறைய நல்லகாரியங்கள் இதன் மூலம் நடக்கட்டும் வாழ்த்துகள்

சாமக்கோடங்கி said...

எப்படியோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு..

வாழ்த்துக்கள்.. நானும் போய் அப்படி என்னதான்னு பாக்கறேன்...

Anonymous said...

கிரேட் செல்வா. எனது வாழ்த்துக்களும் :)

சி.பி.செந்தில்குமார் said...

padhivu suupparபதிவு சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

செம ஹிட் போல

Unknown said...

79

Unknown said...

80....mega hits.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாராட்டுகளும் வாழ்த்துகளும் செல்வக்குமார்.

MANO நாஞ்சில் மனோ said...

எல்லோரும் வாழ்த்துகிறார்கள் நானும் உன்னை வாழ்த்துகிறேன்...

ரஹீம் கஸ்ஸாலி said...

அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க.... ஒரு போட்டி வச்சுருக்கேன்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html