Thursday, November 18, 2010

TOP TEN ரஜினி படங்கள் ஒரு கமல் ரசிகனின் பார்வையில்.!

 முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அளித்த தேவா அண்ணன் அவர்களுக்கு முதல்ல நன்றி தெரிவித்துகொள்கிறேன்.! அப்புறம் இந்தப் பதிவோட தலைப்புப் பத்தி மட்டும் இல்ல , பொதுவாவே எங்க போனாலும் கமல் ரசிகர் கமல் ரசிகர் அப்படின்னு சொல்லுறேனே , அதனால எல்லா கமல் படமும் பார்ப்பேன் அதுவும் முதல்நாள் முதல் ஷோ ல பார்ப்பேன் அப்படின்னு யாரும் நினைக்க வேண்டாம். நான் பார்த்த கமல் படங்கள் ஒரு 20 கூட இருக்காது.

              ரஜினி படங்களும் அவ்வளவே. அதே மாதிரி நான் தியேட்டர்ல பார்த்த கமல் படங்கள் இரண்டே இரண்டுதான். தசாவதாரம் & உன்னைப்போல் ஒருவன். அதே மாதிரி ரஜினி படம் ஒண்ணுதான் எந்திரன் மட்டும்தான் தியேட்டர்ல பார்த்தேன். அப்புறம் எதுக்கு கமல் ரசிகர் கமல் ரசிகர்னு சொல்லிட்டு திரியுற அப்படின்னு யாரும் கேக்கவேண்டாம். எனக்கு கமல் பிடிக்கும்., அவ்ளோதான் . அதுக்காக மற்ற நடிகர்களா பிடிக்காதா அப்படின்னு சொல்லமுடியாது. சொல்லப்போனா எனக்கு சின்னவயசுல கமல் டிவில கமல் படம் போட்டாலே ஓடிப்போயடுவேன். எனக்கு முதல் முதலா ரொம்ப பிடிச்ச கமல் படம் அப்படின்னு பார்த்தா " அன்பே சிவம் " . அந்தப் படத்துல வர்ற வரிக்கு வரி காமெடி எனக்கு ரொம்ப பிடிச்சு போய் கமலோட மற்ற காமெடிப் படங்கள் எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

              அதனால எனக்கு கமல் பிடிக்கும்.ஆனா நான் அதிக முறை பார்த்த படம் அப்படின்னு பார்த்தா அது சந்தோஷ் சுப்பிரமணியம் தான். இந்தப் படத்த சுமார் 20 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இன்னமும் மாதம் ஒரு முறையாவது இந்தப்படத்தைப் பார்ப்பேன். எனக்கு கமல் படம் அப்படின்னு கிடையாது , எந்தப்படதுல காமெடி அதிகமா இருக்குதோ அந்தப் படத்தைதான் பார்ப்பேன். நான் படம் பார்ப்பதே காமெடிக்காக மட்டுமே. அதனாலதான் எனக்கு பாக்யராஜ் ரொம்ப பிடிக்கும். கமல் படங்கள விட பாக்யராஜ் படங்கள்தான் அதிகமா பார்த்திருக்கேன். அவரோட வேட்டிய மடிச்சுக்கட்டு , இது நம்ம ஆளு , சுந்தர காண்டம் இந்த மாதிரியான படங்கள் வாய்ப்பே இல்ல , சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் ..அதே மாதிரி எனக்குப் பிடிச்ச ரஜினி படங்கள் என்ன என்ன அப்படிங்கறதயும் பார்க்கலாம் வாங்க.!

10.நினைத்தாலே இனிக்கும் :
இந்தப் படத்துல ரஜினி நிறைய காமெடி பண்ணிருப்பார். அதிலும் கர்சிப் திருடுறது இந்த மாதிரி காமெடிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

9.ராஜாதி ராஜா : 
இந்தப் படத்துல ரஜினி இரட்டை வேடத்துல நடிசிருப்பாருனு நினைக்கிறேன் . ஒருத்தர் பயந்துக்குவார் .,இன்னொருத்தர் தைரியசாலியா இருப்பார் . எனக்கு பயந்த ரஜினியைத்தான் பிடிக்கும் .. ஏன்னா அவருதான் ரொம்ப காமெடி பண்ணுவார்.

8.சிவாஜி :
இந்தப் படத்துல வர்ற காமெடிகள் பிடிக்கும். அதிலும் பழகலாம் வாங்க அப்படின்னு பண்ணுற காமெடிகள் செமையா இருக்கும் .!

7.பில்லா :
இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் அந்த நல்ல ரஜினி பில்லாவா மாறும்போது செம காமெடியா இருக்கும்.!

6.தில்லு முள்ளு :
இந்தப் படத்துல கொஞ்சம் நான் பார்த்திருக்கேன் . அதுவும் செம காமெடியா இருந்துச்சு . எப்பவோ ஒரு பாட்டு பார்த்தா நியாபகம். அதோட ஒருத்தரே இரண்டு பேரா மீசை இருக்கறவர் பேர் சந்திரன்னு நினைக்கிறேன் .. அப்புறம் மீசை இல்லாத மாதிரி நடிப்பார். எனக்கு மறந்திருச்சு .ஆனா படம் செம காமெடியா இருக்கும்.

5.வீரா :
இந்தப் படத்துலயும் ஒருத்தரே இரண்டு பேரு மாதிரி நடிப்பார். அதுல கொஞ்சம் காமெடியா இருக்கும்.

4.அருணாசலம் :
இந்தப் படத்துல முப்பது நாளுல முப்பது லட்சம் செலவலிக்கனும்னு சொல்லி ஒரு போட்டி வரும் .அப்போ வில்லன்கள் இவரு எது பண்ணினாலும் பணம் வர்ற மாதிரி பண்ணுறது செம காமெடியா இருக்கும்.

3 .முத்து :
இந்தப் படத்துலயும் காமெடி எனக்குப் பிடிக்கும். ஆனா இந்தப் படத்துல கொஞ்சம் மறந்து போச்சு. ஆனா நல்லா இருக்கும்.

2.பாட்ஷா :
இந்தப் படத்துல உண்மைலேயே ஸ்டைல் நல்லா இருக்கும் . அதோட பஞ்ச வசனங்களும் அருமையா இருக்கும்.! இந்தப் படமும் நான் சில தடவை பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா படம்.

1.படையப்பா : 
இந்தப்படம் நான் ஒரு 5 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இன்னும் எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம். எனக்கு இந்தப் படம்தான் எப்பவும் முதல். இதுல காமெடியும் இருக்கும் , ஸ்டைல் இருக்கும் , இசையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும்.

இந்த வரிசைல எதவாது தப்பு இருந்தா மன்னிச்சிருங்க. எனக்கு எப்பவுமே சண்டைப் படமோ , இல்ல அழுமூஞ்சிப் படமோ பிடிக்கவே பிடிக்காது. எனக்குப் பிடிச்சது காமெடிப் படங்கள் மட்டும்தான். அதே மாதிரி இப்ப டிவி ல அடிக்கடி ஹாலிவுட் படங்கள் போடுறாங்க. அப்படிப் போட்டதுல The Terminal அப்படின்னு ஒரு படம் . எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி Born To be  wild அப்படின்னு ஒரு படம் அதுவும் பிடிக்கும். பொதுவா நான் கமல் ரசிகரா இருந்தாலும் கமெடிப்படங்களின் தீவிர ரசிகர்.! அதனால்தான் எனக்கு சிவா படங்கள் பிடிக்கும். அதனால இப்போதைக்கு என்னோட Favourite இயக்குனர் பசங்க பட பண்டிராஜ் தான்.!    

45 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படி வடையப்பா கிட்டயே வடைய ஆட்டைய போட்டேன் பாத்தீங்களா?

எஸ்.கே said...

உங்க தொகுப்பும் நல்லா இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார்டா இவன் ரஜினி படம் சொல்லுன்னு அஞ்சு மார்க் கேள்வி கேட்டா, இவன் அம்பது மார்க் கேள்விக்கு பதில் சொல்றான். ஸ்கூல் பசங்களுக்கெல்லாம் ப்ளாக் ஐடி கொடுக்காதீங்கன்னா கேக்குறாங்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனக்கு சிவா படங்கள் பிடிக்கும்.//

சிவாவும் ரஜினி நடிச்சதுதான்

செல்வா said...

//vadai //
எடுத்துக்கோங்க ..!!

செல்வா said...

//சிவாவும் ரஜினி நடிச்சதுதான்///

நான் சொன்னது மிர்ச்சி சிவா..!! ஹி ஹி ஹி ..

Arun Prasath said...

எனக்குப் பிடிச்சது காமெடிப் படங்கள் மட்டும்தான்.//

காமெடி திலகம் பா நீ....


http://sutrulavirumbi.blogspot.com/2010/11/10_17.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

தொகுப்பு நல்லா இருக்கு!

karthikkumar said...

எல்லோரும் படாத பத்தி எழுதினாங்க நீங்க காமெடியா. ஓகே ஓகே

karthikkumar said...

அப்புறம் சந்தோஷ் சுப்ரமணியம் எனக்கும் ரொம்ப புடிக்கும். அதுல சில ரொமான்ஸ் சீன்ஸ் நல்லா இருக்கும்

செல்வா said...

//// karthikkumar said...
அப்புறம் சந்தோஷ் சுப்ரமணியம் எனக்கும் ரொம்ப புடிக்கும். அதுல சில ரொமான்ஸ் சீன்ஸ் நல்லா இருக்கும்

///

ஆமாங்க ., அதோட போட்டோதானே நீங்க வச்சிருக்கீங்க ,,

Arun Prasath said...

/// karthikkumar said...
அப்புறம் சந்தோஷ் சுப்ரமணியம் எனக்கும் ரொம்ப புடிக்கும். அதுல சில ரொமான்ஸ் சீன்ஸ் நல்லா இருக்கும்

///

ஆமாங்க ., அதோட போட்டோதானே நீங்க வச்சிருக்கீங்க ,,//


உங்களுக்கு தொலை நோக்கு பார்வைங்க

karthikkumar said...

Arun Prasath said...
ஆமாங்க ., அதோட போட்டோதானே நீங்க வச்சிருக்கீங்க ,,//


உங்களுக்கு தொலை நோக்கு பார்வைங்க///

என்ன ஒரு கண்டுபிடிப்பு

Arun Prasath said...

//Arun Prasath said...
ஆமாங்க ., அதோட போட்டோதானே நீங்க வச்சிருக்கீங்க ,,//


உங்களுக்கு தொலை நோக்கு பார்வைங்க///

என்ன ஒரு கண்டுபிடிப்பு//

சூனா பானா யாரும் பாக்கல, கெளம்பு கெளம்பு, நீ வீரன் டா

karthikkumar said...

Arun Prasath said...

சூனா பானா யாரும் பாக்கல, கெளம்பு கெளம்பு, நீ வீரன் டா///

இதுக்கேவா பங்கு உங்களுக்கு இன்னும் பக்குவம் பத்தல..

(ஹலோ எனன் நேத்து வரனீங்க வரவே இல்ல )

Arun Prasath said...

//Arun Prasath said...

சூனா பானா யாரும் பாக்கல, கெளம்பு கெளம்பு, நீ வீரன் டா///

இதுக்கேவா பங்கு உங்களுக்கு இன்னும் பக்குவம் பத்தல..

(ஹலோ எனன் நேத்து வரனீங்க வரவே இல்ல )//


ஆமா ஆமா.....இன்னும் பயிற்சி வேணும்...

(நேத்து வீட்டுக்கு போய்டேன் தல, செம மழை இங்க)

செல்வா said...

//ஆமா ஆமா.....இன்னும் பயிற்சி வேணும்.../

அப்படிங்களா ..?

karthikkumar said...

Arun Prasath said...
//Arun Prasath said...


ஆமா ஆமா.....இன்னும் பயிற்சி வேணும்...

(நேத்து வீட்டுக்கு போய்டேன் தல, செம மழை இங்க///

செம மழையா பாருங்க எங்க வூர்ல அளவ மழை பேயுது. நான் நெனைக்கறேன். உங்க வூர்ல பாவம் பண்ணினவங்க நெறைய பேர் இருப்பாங்க போல

karthikkumar said...

எப்பவுமே பிஸியா இருக்குற செல்வன்னே ப்ளாக் இன்னைக்கு வெறிச்சோடி கெடக்கே எல்லா பயலுகளும் எங்கோ காணோம்

செல்வா said...

//எப்பவுமே பிஸியா இருக்குற செல்வன்னே ப்ளாக் இன்னைக்கு வெறிச்சோடி கெடக்கே எல்லா பயலுகளும் எங்கோ காணோம் //

அதான் பாருங்க ., யாரையும் காணோம் ..!!

NaSo said...

//முப்பது நாளுல முப்பது லட்சம் செலவலிக்கனும்னு//

அது முப்பது கோடி செல்வா!

NaSo said...

செல்வா, நான் சொன்னது போல நீ டாப் பத்து கமல் படம் பற்றி எழுதேன்??

செல்வா said...

//செல்வா, நான் சொன்னது போல நீ டாப் பத்து கமல் படம் பற்றி எழுதேன்?? //

நக்கலா ..? அதுவும் இப்படித்தான் அண்ணா வரும் ,, அதனால சந்தோஷ் சுப்பிரமணியம் பத்தி எழுத சொன்னா வேணா படம் புல்லா ஒரு வரி விடாம எழுதிடுவேன் ,,

ஹரிஸ் Harish said...

யார்டா இவன் ரஜினி படம் சொல்லுன்னு அஞ்சு மார்க் கேள்வி கேட்டா, இவன் அம்பது மார்க் கேள்விக்கு பதில் சொல்றான். ஸ்கூல் பசங்களுக்கெல்லாம் ப்ளாக் ஐடி கொடுக்காதீங்கன்னா கேக்குறாங்களா//

கரைக்டா சொன்ன மாமு..

ஹரிஸ் Harish said...

முன் குறிப்பே மூணு பேரா இருக்கு..

செல்வா said...

//முன் குறிப்பே மூணு பேரா இருக்கு.. //

பயன்த்துடீங்களா ..?

அருண் பிரசாத் said...

அப்போ நீ காமெடி பீசா...


தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி செல்வா

வினோ said...

நல்ல தொகுப்பு செல்வா.. சந்திரமுகி என்ன ஆச்சு ?

ஆர்வா said...

நீங்க சந்தோஷ் சுப்ரமணியம் அதிக தடவை பார்த்திருக்கீங்க.. ஆனா நான் அதிகதடவை பார்த்த படம் எது தெரியுமா?? இதுவரைக்கும் அந்த படத்தை 207 வாட்டி பார்த்திருக்கிறேன். தியேட்டர்ல மட்டும் 68 தடவை. அந்த படம்... அலைபாயுதே.........

Unknown said...

//செல்வா, நான் சொன்னது போல நீ டாப் பத்து கமல் படம் பற்றி எழுதேன்?? //

Unknown said...

//பொதுவா நான் கமல் ரசிகரா இருந்தாலும் கமெடிப்படங்களின் தீவிர ரசிகர்.!//

கமல் , கிரேஸி மோகன் கூட்டணி மட்டும் சும்மாவா?
அதை மிஞ்ச என்ன இருக்கு...

அன்பரசன் said...

இதுலகூட காமெடியா?
சூப்பர் செல்வா.

Praveenkumar said...

ஒளிவுமறைவற்ற வெளிப்படையான எழுத்துப்பகிர்வு சூப்பர் செல்வா. அசத்துங்க.

Madhavan Srinivasagopalan said...

//நான் படம் பார்ப்பதே காமெடிக்காக மட்டுமே.//

பிலாகுல எழுதுறதே 'மொக்கை' போடத்தானே ?

மாணவன் said...

அருமையாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்

நன்றி

Anonymous said...

நகைச்சுவையை பிரதானமாக வச்சு தொகுத்திருக்க..
நல்லா இருக்கு செல்வா

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல தொகுப்பு மக்கா .........நல்லாருக்கு ........

இம்சைஅரசன் பாபு.. said...

//தில்லு முள்ளு //

தம்பி அது தில்லு முள்ளு இல்ல தில்லு முல்லு.............

இம்சைஅரசன் பாபு.. said...

//அதிலும் பழகலாம் வாங்க அப்படின்னு பண்ணுற காமெடிகள் //

இப்ப பதிவர்களும் அதை தான் எழுதுறாங்க ........லிவிங் டுகதர் ......பிடிச்சிருந்த வச்சிகிலாம்......இல்லன விட்டுருலாம் ...........வாங்க பழகலாம் ........... இத தான் எழுதுறாங்க மக்கா

சௌந்தர் said...

இந்த வரிசைல எதவாது தப்பு இருந்தா மன்னிச்சிருங்க. எனக்கு எப்பவுமே சண்டைப் படமோ , இல்ல அழுமூஞ்சிப் படமோ பிடிக்கவே பிடிக்காது.////

அப்போ உனக்கு அன்பே சிவம் பிடிக்காது சொல்றியா....

Unknown said...

நல்லாயிருக்கு செல்வா.. உங்களோட தொகுப்பு..

என்னது நானு யாரா? said...

எனக்கும் நீங்க சொல்ற படங்கள் ரொம்ப பிடிச்ச படங்கள் தான் தம்பி செல்வா! கமல் படங்கள் குறிப்பா நகைசுவை படங்கள் செம தூள்.. அவ்வை சன்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் எல்லாமும் செம கலக்கலா இருக்கும். எத்தனை முறை வேண்டும்னாலும் பார்க்கலாம்..

ரொம்ப நல்லா இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட் கம்மிங்க் ,பதிவு சூப்பர்

Praveenkumar said...

தம்பி அடுத்த வடை எப்போ வரும்..!!???