இரண்டுநாட்களில் சொல்வதாகச் சொன்னார்கள்
இருபதுவருடம் காதலித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு
முடிவிற்கு காத்திருப்பதை விட நூறு மடங்கு படபடப்பாக உணர்கிறேன்!என்னை அழைப்பார்களா மாட்டார்களா.?
தொலை. பேசியை தொல்லையாக உணர்ந்து தூரத்தில்
வைத்திருந்தது ஒரு காலம் ,நேற்று முதல் எனது தொடுதல் இல்லாமல்
தொலைபேசி இருக்கவில்லை!
கோழிமுட்டையாக இருந்திருந்தால் இந்நேரம் குஞ்சு பொறித்திருக்கும்!
காதலிக்காக காத்திருக்கும்போது நிமிடமுள் மணி முள்ளாக
நகர்வதாக சொல்கிறான் நண்பன்! என் விசயத்தில்
ஒவ்வொரு நொடியும் வருடமாக நகர்கிறது!
அவன் விசயத்தில் காதலி நிச்சயம் வருவாள்
ஆனால் என் விசயத்தில் என்னை அழைப்பார்களோ , மாட்டார்களோ?
தினமும் எனது தொலைபேசியின் தவறிய அழைப்புகளில்
மிக நெருக்கமானவர் அழைத்திருந்தாலும் திருப்பி கூப்பிடுவதில்லை!
ஆனால் இன்று யாரோ ஒரு தெரியாத எண்ணில் இருந்து தவறிப்போன
எண்ணிற்கு கூட அழைத்துப் பேசி WRONG NUMBER என்ற போது கொஞ்சம் வலித்தது!
கடவுளிடம் நேர்ந்து கொள்வதை எப்பொழுதுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை,
ஆனால் நேற்று நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் பூக்குழி இறங்குவதாக வேண்டிக்கொண்டேன்!பசியால் மட்டுமே பத்தும் பறப்பது இல்லை,நாம் மிகவும் நேசிக்கும் ஒன்று கிடைக்கவேண்டும் என்றாலும் பதினாறும் பறக்கிறது!
சிலசமயங்களில் எனது தொலைபேசி ஒலித்தாலும் வேறு யாரோ
எனது RING TONE வைத்துள்ளார்கள் என்று சாவகாசமாக இருப்பேன்!
ஆனால் நேற்று முதல் எனது அருகில் இருப்பவரின் தொலைபேசி ஒலித்தாலும் ஒரு விதப் பதற்றத்துடன் எனது தொலைபேசியைப் பார்க்கிறேன்!அவர்கள்தான் அழைக்கிறார்களோ என்று?
விரைவில் அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அலுவலகத்திலும்
போனும் கையுமாக இருக்கிறேன்! ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!
உனக்குக் கிடைக்கும் , நீ நிச்சயம் ஜெயிப்பாய் , உனக்கு அந்தத் தகுதிகள் இருக்கிறது என்று நண்பர்கள் கூறும்போது சந்தோசமாக உணர்கிறேன்! இருந்தும் முடிவு என்ன ஆச்சு என்று கேட்கும்போது இன்னும் இரண்டுநாட்கள் என்று பதில் கூறும்போது ஒரு வித ஏக்கத்தை உணர்கிறேன்! இன்னமும் எனது பதற்றம் நின்றபாடில்லை, அழைப்பு வரும்வரை நிற்கப்போவதும் இல்லை!
47 comments:
vadai
வாழ்த்துக்கள்! உங்கள் கனவுகள் நனவாக! :-)
கெடைக்கறது என்னைக்குமே கெடைக்காம இருக்காது செல்வா
ஏக்கங்கள் தீரும்!
மாற்றங்கள் தோன்றும்!
வாழ்வில் வசந்தம் வீசும்!
வரும்.. ஆனாலும்.. வரும்..
அடப்பாவி.. சூப்பரா எழுதுற... தவிப்புல..
ரேடியோ ஜாக்கி தான.. டிறேக்டா சொல்லவே இல்லை.. ஆனாலும் படிச்சா எனக்கு புரியுது.. கடைசில குறிப்பு வார்த்தைல மட்டும் சொல்லி இருக்க, அப்புறம்தான் பாத்தேன். ..
உங்களுடைய இலட்சியம் கண்டிப்பாக நிறைவேறும் செல்வா.. கவலைப்படாதீங்க...
விரைவில் அழைப்புவரும்!!! வாழ்த்துக்கள்!!
கண்டிப்பா கூப்பிடுவாங்க செல்வா....
உன்னை போலவே உன் ரிசல்ட்டுக்காக நான் பதட்டத்துடன் காத்து இருக்கிறேன் செல்வா
ஜோதிகா படம் சூப்பரா இருக்கு
ரேடியோ ஜாக்கி ஆகுறது லட்சியமா இல்ல கோமாளி ஆகுறது லட்சியமா எதுக்கு கோமாளி செல்வா?ஜாக்கி செல்வா ந்னு வெச்சுக்க
இரு படிச்சிட்டு வந்து வச்சிக்குறேன்..
தம்பி ஏக்கத்த எழுதி தாக்குற....... நமக்கு படபடப்பாகுதுப்பா........ நகத்த கடிக்க வச்சிடுவ போல.
வெற்றி நிச்சயம்,
வானம் உனக்கு வசப்ப்படும்லே மக்கா...
இதோ வசந்தம் உன் வாசல் படியில்...
கலங்காதே....
நாங்கல்லாம் இருக்கொம்டேய் உன் பக்கத்தில்...
//ரேடியோ ஜாக்கி ஆகுறது லட்சியமா இல்ல கோமாளி ஆகுறது லட்சியமா எதுக்கு கோமாளி செல்வா?ஜாக்கி செல்வா ந்னு வெச்சுக்க///
அதானே நாமளே மாத்திட்டா போச்சு எப்பூடி..
//கெடைக்கறது என்னைக்குமே கெடைக்காம இருக்காது செல்வா///
sariyaaga sonneer...
செல்வா உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன் கவிதை நடையில் சொல்லியது அருமை செல்வா வாழ்த்துக்கள்
கிடைக்கும் தம்பி ..ரேடியோ ஜாக்கியாக நீ ஆகுவாய் நான் போன் பண்ணி வாழ்த்து கூறுவேன் இது நடந்தே தீரும் ....
நம்ம ஆர்.கே.சதீஷ்குமார் அண்ணன் கிட்ட நியுமராலஜி பார்த்திட வேண்டியது தானே ஏன் பதட்டம்?
Be Positive Selva. உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ப்ரார்த்தனைகளுடன்.
என் அன்பு தம்பிக்கு, கலக்கமும் கவலையும் வேண்டாம்... வெற்றி உனதே. என் வாழ்த்துக்களும்... பிரார்த்தனைகளும் உனக்காக.... வெற்றி பெறுவாய்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும் செல்வா..... !
நானும் நம்புறேன் சீக்கிரம் உனக்கு அழைப்பு வரும்....
selva , u will get the call , dont worry.
yr post is intersting
விரைவில் அழைப்புவரும்!!! வாழ்த்துக்கள்!!
பதிவின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே பரிதவிப்பு, இதுக்காவது அந்த அழைப்பு வர வேண்டும்.. நாங்களும் காத்திருக்கிறோம்,
கிடைத்தால் ஜாக்கி செல்வா, இல்லையேல் ஜக்கி செல்வா தேவ் அப்படினு சத்குரு ஆயிடுங்க...
வாழ்த்துக்கள்
கனவுகள் நனவாக
உன்னை போலவே உன் ரிசல்ட்டுக்காக நான் பதட்டத்துடன் காத்து இருக்கிறேன்
விரைவில் அழைப்புவரும்!!! வாழ்த்துக்கள்!!
சீக்கிரம் கிடைக்கும் அதற்காக இப்பவே
வாழு..... வாழு..... வாழு..... வாழு.... வாழுன்னு..... வாழ்த்துறோம் ...................
"எப்பொழுது வரும்.?"//
எப்போது வேண்டுமானாலும் வரும்... ஆனா இவ்வளவு பதட்டம் வேண்டாம்....
போ போய் ரேடியோ ஸ்டேஷன் வாச படியில உக்காந்து பொலம்பு... வரும் இருடா... :))
உங்களுக்கு அந்த திறமை இருக்கு தம்பி .. கூடிய விரைவில் காற்றலைகளில் உங்கள் குரலைக்கேட்பேன்...
Best wishes!
விரைவில் எதிர்பாருங்கள்... நம்பிக்கைதான் வாழ்க்கை
Dear thambi,
ungal aasai niraiveerum.
do not worry .my prayers and best wishes to you.
மனசை போட்டு அலட்டிக்காதீங்க... நிச்சயமா உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்... வாழ்த்துக்கள்...
அன்பின் செல்வா - விரைவினில் அழைப்பு வரும் - இலட்சியம் நிறைவேறும் - கவலை வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எப்போது வரும்?
//
விரைவில வரும்.. கவலையை விடு..
நிச்சயம் வரும். வாழ்த்துக்கள் செல்வா...
விடு மச்சி சீக்கிரம் வரும்....
செல்வா சீக்கிரம் வரும். அப்படி வரலைன்னா நம்ம பட்டாபட்டி கிட்ட சொல்லி ஒரு புது ஸ்டேஷன் ஆரம்பிச்சிடலாம்.
தம்பி சீக்கிரம் அழைப்பு வரும்! நம்பு :)
“நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.”
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணே
செல்வா சீக்கிரம் வரும். அப்படி வரலைன்னா,மிர்ச்சிக்கு எதிடா புரச்சி பண்ணுவோம்....
Post a Comment