Monday, January 10, 2011

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : திங்கள் கிழமை வந்தா செல்வா கதைகள் வந்தே தீரும் , அவன ( திங்கள் கிழமைய ) நிறுத்த சொல்லுங்க , நான் நிறுத்துறேன்!

                                       செல்போனும் செல்வாவும் 

    ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் விடுமுறை நாள் ஒன்றில் பூங்காவிற்கு சென்றிருந்தனர். சிறிது நேரம் சுற்றிப்பர்த்தவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

    அப்பொழுது நண்பரின் தொலைபேசி ஒலித்தது. இவர்களின் மற்றும் ஒரு நண்பர் அழைத்திருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர் " ஐயோ இவன் கூப்பிடுறானே , நாம் பார்க் வந்தோம்னு சொன்னா என்னைய ஏன் கூப்பிடலைன்னு கேப்பானே ? " என்றவாறு அழைப்பினை தவறவிட்டார். "ஆனா இப்ப போன எடுக்காட்டியும் ஏன்டா போன எடுக்கலைன்னு கேப்பான் ,என்ன பண்ணலாம்.? " என்று செல்வாவிடம் கேட்டார். 

   அதற்கு செல்வா " போன கொடு ஒரு ஐடியா இருக்கு! " என்று அவரது தொலைபேசியை வாங்கி , அதே நண்பருக்கு அழைத்தார். அந்த நண்பரிடம் " நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது , தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர் " ஹா ஹா , நல்லா ஏமாந்திட்டான்! " என்றார். இதைப் பார்த்த அவரது நண்பர் " நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார். 


                                         எண்ணெய் வாங்கச்சென்ற செல்வா 

    ஒரு முறை செல்வாவின் தாயார் அவரிடம் கேன் ஒன்றினைக்கொடுத்து அருகில் இருக்கும் மளிகைக்கடையில் கடலை எண்ணெய் வாங்கி வருமாறு அனுப்பினார்.செல்வாவும் கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்பொழு அவரது தாயார் "ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கிக்க , அப்புறம் அரை லிட்டர் தேன்  வாங்கிட்டு வந்திடு" என்றார்.

   கடைக்கு சென்ற செல்வா தான் கொண்டு வந்திருந்த கேனை கடைக்காரரிடம் கொடுத்து " ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கொடுங்க " என்றார். ஒரு லிட்டர் கடலை எண்ணெயை வாங்கியவர் அந்த கேனை வாங்கி அருகில் இருந்த சாக்கட்டியை எடுத்து எண்ணெய் இருந்த அளவிற்கு ஒரு கோடு போட்டார். பின்னர் கடைக்காரரிடம் அதே கேனைக்கொடுத்து " அரை லிட்டர் தேன் , கொடுங்க" என்றார்.

    இதைப் பார்த்த கடைக்காரர் இரண்டும் கலங்கிடும் என்றார். அதெல்லாம் கலங்காது , அதுக்குத்தான் கோடு போட்டிருக்கேன் , நீங்க குடுங்க " என்று அவரிடம் சண்டை போட்டு வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் கடையில் நடந்தவற்றை விளக்கினார். அதற்கு அவரது தாயார் " ஏன்டா , இப்படி பண்ற , ஒண்ணு கூட உருப்பிடியா பண்ண மாட்டியா ? " என்றார் கோபமாக. இதைக்கேட்ட செல்வா நான் கோடு போட்டுத்தானே வாங்கிட்டு வந்தேன் , அந்தக் கோட்டுக்கு மேல இருக்குறது தேன் , கீழ இருக்குறது கடலை எண்ணெய் " என்றார் அப்பாவியாக.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!

பின்குறிப்பு : இத படிச்சுட்டு சந்தோசத்துல வாரம் முழுக்க திங்கள் கிழமை வரணும்னு நீங்க வேண்டுறது தெரியது. ஆனா ஒரு வாரத்துல ஒரு தடவைக்கு மேல செல்வா கதைகள் போட்டா உலகம் தாங்காது. உலக நலன் கருதி வாரத்துல ஒரு தடவயோட இத நிறுத்திக்கிறேன்.

76 comments:

Arun Prasath said...

vadai

dheva said...

முன் குறிப்புல பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி

முதல் கதையில் பாஸ் பண்ணி..

இரண்டாவது கதையில் பாஸாக ஒரு மார்க்கு தேவைப்பட்டு

நீதியில மீண்டும் அட்டம்ட் எழுதி பஸ் பண்ணிட்ட தம்பி...!

செல்வா சார் ரொம்பத்தான் பண்றாரு...!

Madhavan Srinivasagopalan said...

கலங்கிடும் ?
கலந்திடும் ..!

எஸ்.கே said...

செல்வா கதைகள் படிப்பது விட்டமின் ஏ பி சி டி இஸட் சத்துக்களை அளிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுநலன் கருதி வெளியிடுவோர்: மொக்கை சங்கம், இந்திய கிளை.

MANO நாஞ்சில் மனோ said...

வடை வாங்குவதில் ஏதோ உள்குத்தும் சதியும் நடப்பதாக சுப்பிரமணியன்சாமி தகவல் அனுப்பிருக்கார்...
இரு படிச்சுட்டு வாரேன்...

மாணவன் said...

//நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை//

இதை வன்மையாக கன்டிக்கிறேன்

Arun Prasath said...

செல்வா கதைகள் உண்மையில் நடந்தவையா

MANO நாஞ்சில் மனோ said...

//இதைப் பார்த்தா அவரது நண்பர் " நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார்.///


நான் சொல்ல நினைத்ததை அவர் சொல்லிட்டார் போங்க...

MANO நாஞ்சில் மனோ said...

///அவரது தொலைபேசியை வாங்கி , அதே நண்பருக்கு அழைத்தார். அந்த நண்பரிடம் " நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது , தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர் " ஹா ஹா , நல்லா ஏமாந்திட்டான்! " என்றார்.///


நண்பேண்டா நீயி...

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா கதைகள் படிப்பது விட்டமின் ஏ பி சி டி இஸட் சத்துக்களை அளிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.//


அவனவன் தலை முடியை பிச்சிகிட்டு அலையுறது தெரியாத சுகாதார நிறுவனம் வாழ்க...

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான மொக்கை

MANO நாஞ்சில் மனோ said...

//இதை வன்மையாக கன்டிக்கிறேன்///

தம்பி போராட்டம் எல்லாம் பண்ணாதீங்க, ரொம்ப பொருள் சேதாரம் வந்துரும்..:]

எஸ்.கே said...

திங்கள்னா நிலா
நிலாவுக்கு இன்னொரு பேர் மதி
மதின்னா அறிவு
திங்களில் செல்வா கதை
அப்போ மொக்கைன்னா அறிவா????
செல்வா அறிவாளியா?

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா கதைகள் உண்மையில் நடந்தவையா//

அது அவன் மூஞ்சிய பாத்தா தெரியலையாக்கும்...

செல்வா said...

நானும் உள்ள வரலாம்கல ?

செல்வா said...

செல்வா கதைகள் முற்றிலும் கர்ப்பனயானவை என்பதே உண்மை !
நம்புங்க ப்ளீஸ் !

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா அறிவாளியா?//

இப்பமே ஆட்டோ அனுப்ப சொல்லி மதுரைக்கு போன் பண்ணிருவேன்..

Unknown said...

//திங்கள் கிழமை வந்த செல்வா கதைகள் வந்தே தீரும் ///

விதி வலியது....

MANO நாஞ்சில் மனோ said...

//நானும் உள்ள வரலாம்கல ?//

நாசமா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ said...

//நம்புங்க ப்ளீஸ் !//

நம்பிட்டோம்...

எஸ்.கே said...

//MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா அறிவாளியா?//

இப்பமே ஆட்டோ அனுப்ப சொல்லி மதுரைக்கு போன் பண்ணிருவேன்..//


ஆட்டோ பத்தாது. பெரிய டெம்போவா அனுப்புங்க. செல்வாவோட மொக்கைகளை ஏத்தி வரணும்ல!

MANO நாஞ்சில் மனோ said...

//விதி வலியது....///

வலி நம்முடையது...

Unknown said...

//உலக நலன் கருதி வாரத்துல ஒரு தடவயோட இத நிறுத்திக்கிறேன்//
சரக்கு தீர்ந்திருச்சா?

MANO நாஞ்சில் மனோ said...

//ஆட்டோ பத்தாது. பெரிய டெம்போவா அனுப்புங்க. செல்வாவோட மொக்கைகளை ஏத்தி வரணும்ல!///

அப்போ டெம்போ நிறைய சாக்கு பையும் அனுப்ப சொல்லிற வேண்டியதுதான்...

Unknown said...

இந்த வாரம் கொடுமை... ரொம்ப எதிர்பார்த்தோம்..

MANO நாஞ்சில் மனோ said...

//கலங்கிடும் ?
கலந்திடும் ..!///

மொக்கைய படிச்சிட்டு கமல் மாதிரி பொலம்புறாரு...

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த வாரம் கொடுமை... ரொம்ப எதிர்பார்த்தோம்..///

அடப்பாவி பிளேடு வெட்டு வாங்குறதுக்கே காத்து இருக்குற ஆளாவே நீரு...

Unknown said...

செல்வா கதைகள் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.# மக்கள் தொகையை குறைக்க அரசு அதிரடி.

சௌந்தர் said...

இது போல செல்வா பல இடங்களில் அடி வாங்கி இருக்கான் அந்த கதை கள் எல்லாம் திங்கள் தோறும வரும் என்று தெரிவித்து கொள்கிறேன்

Unknown said...

//அடப்பாவி பிளேடு வெட்டு வாங்குறதுக்கே காத்து இருக்குற ஆளாவே நீரு..//
செல்வா பிளேடா? வன்மையாக கண்டிக்கிறோம்..
செல்வா அதையும் தாண்டி புனிதமானவர்..

எஸ்.கே said...

ஒரு மனநல மருத்துவமனை.

3 பைத்தியங்கள். அவங்க குணமாயிட்டாங்களான்னு செக் பண்ண டாக்டர், தண்ணியில்லாத ஒரு நீச்சல் குளத்தில் அவங்க மூனு பேரை குதிக்க சொன்னார்.

முதல் பைத்தியம் குதிச்சிச்சு. கை உடைஞ்சிச்சு!

இரண்டாவது பையத்தியம் குதிச்சிச்சு. கால் உடைஞ்சிச்சு.

மூனாவது ஆள் குதிக்கலை.

உடனே டாக்டர் கேட்டார் “வெல்டன். நீங்க குணமாயிட்டீங்க. ஏன் குதிக்கலை?”

அது சொல்லுச்சு “சாரி எனக்கு நீச்சல் தெரியாது”

வைகை said...

பாரத்... பாரதி... said...
//அடப்பாவி பிளேடு வெட்டு வாங்குறதுக்கே காத்து இருக்குற ஆளாவே நீரு..//
செல்வா பிளேடா? வன்மையாக கண்டிக்கிறோம்..
செல்வா அதையும் தாண்டி புனிதமானவர்..//////

நூறு அடி தாண்டி இருக்குமா?

வைகை said...

சௌந்தர் said...
இது போல செல்வா பல இடங்களில் அடி வாங்கி இருக்கான் அந்த கதை கள் எல்லாம் திங்கள் தோறும வரும் என்று தெரிவித்து கொள்கிறேன்///////

எனக்கு இனிமேல் திங்கள் கிழமையே இல்லை...!

இம்சைஅரசன் பாபு.. said...

//செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!//

செல்வா நீ ஒரு %^&& *&$$ )##%%& &***$#@ **^#@%^^^^ (கெட்ட கெட்ட வார்த்தையா வாய்ல வருது .....)

இம்சைஅரசன் பாபு.. said...

//திங்கள்னா நிலா
நிலாவுக்கு இன்னொரு பேர் மதி
மதின்னா அறிவு
திங்களில் செல்வா கதை
அப்போ மொக்கைன்னா அறிவா????
செல்வா அறிவாளியா///

எல்லோரும் சேர்ந்து இப்படி உசுபேத்தி விடுங்க வெளங்கிரும் ......

இம்சைஅரசன் பாபு.. said...

நேத்து பார்த்திபன் வடிவேலு காமெடி ஏதாவது பார்த்து இப்படி மொக்கை போட்டு விட்டன செல்வா .......

karthikkumar said...

நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார். ///
அடிச்சிக்கிட்டு சாவுங்க எல்லோரும்.. இந்த மாதிரி யோசிக்க யாரால முடியும்?... it's a medical miracle....

Praveenkumar said...

//இதைப் பார்த்த அவரது நண்பர் " நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார்.//

ஏலே..மக்கா..!! நான் மட்டும் அங்கிருந்துயிருந்தேன்னா.. ஒன்ற தலையிலையே... அடிச்சு கொன்னு இருப்பேன்..!!! ஹி..ஹி..ஹி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளங்கிடுச்சு

Unknown said...

செல்வா கொலைகள்... me pavam

Unknown said...

yenna kudumba songa kanom (ம் ம் ம் விளங்கிடுச்சு)

Praveenkumar said...

//அப்பொழு அவரது தாயார் "ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கிக்க , அப்புறம் அரை லிட்டர் தேன் வாங்கிட்டு வந்திடு" என்றார்.//

ஏலே செல்வா நீயி எத்தனை லிட்டர் கேன்லே எடுத்துட்டு போனே..????
#டவுட்டு

Praveenkumar said...

//ஆனா ஒரு வாரத்துல ஒரு தடவைக்கு மேல செல்வா கதைகள் போட்டா உலகம் தாங்காது.//

கதைய எங்கலே போடபோற மக்கா..!! வாரத்துல 8 நாள் நீயி ஏதாவது கதைகளாகவே எழுதுலெ...!!??
ஹி..ஹி..ஹி..ஹி..

அருண் பிரசாத் said...

அய்யோ...இந்த கொலை கொள்ளுறானே....காப்பாத்தா யாருமே இல்லையா.........

TERROR-PANDIYAN(VAS) said...

நானும் வந்தேன், படிச்சேன்.. :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கவி அழகன் said...

நெஞ்சை தொட்ட கதை

Unknown said...

அட கொடுமையே.. தெரியா தனமா இந்த பிளாக் பக்கம் வந்துட்டேன் போலருக்கே..

இப்பவே கண்ண கட்டுதே..

அஞ்சா சிங்கம் said...

நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்போது வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார் ...

தயவு செய்து காத்திருந்து அவர் போன பின் தொடர்பு கொள்ளவும் ..............

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

///Blogger எஸ்.கே said...

திங்கள்னா நிலா
நிலாவுக்கு இன்னொரு பேர் மதி
மதின்னா அறிவு
திங்களில் செல்வா கதை
அப்போ மொக்கைன்னா அறிவா????
செல்வா அறிவாளியா?///


திங்கள்னா மாசம்,

அப்போ.......

ஜெயந்த் கிருஷ்ணா said...

திங்கள் கிழமைகள் வார நாட்களிடமிருந்து நீக்கப்படுகிறது...

சி.பி.செந்தில்குமார் said...

>>> முன்குறிப்பு : திங்கள் கிழமை வந்தா செல்வா கதைகள் வந்தே தீரும் , அவன ( திங்கள் கிழமைய ) நிறுத்த சொல்லுங்க , நான் நிறுத்துறேன்!

opening kalakkal

சி.பி.செந்தில்குமார் said...

>>>நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!

finishing touch.. sema

சி.பி.செந்தில்குமார் said...

the 1st one is super and the 2nd one is from the inspiration of r PARTHIPAN - VADIVEL COMEDI

சி.பி.செந்தில்குமார் said...

ANY WAY THIS STYLE IS NEW TO BLOG FIELD..

சி.பி.செந்தில்குமார் said...

U HAVE A GOOD FEATURE IN COMEDY LINE.. CONGRATS

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா தேனும் எண்ணையும் மிக்ஸ் ஆகாதே, அப்புறமுமா பிரச்சனை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!//////

இதுக்குத்தான் இதையெல்லாம் இப்பவே கல்வெட்டா வெட்டி வெச்சிடனும்கறது...........

cheena (சீனா) said...

ஏம்பா கோமாளி - சீக்கிரமா ஆர் ஜே யாப் போயேன்யா - திங்கட் கிழமைய காலண்டர்லே எடுத்துட வேண்டியது தான்

பனித்துளி சங்கர் said...

தக்காளி இனி இந்த திங்கள் கிழமையை கண்டு பிடிச்சவன் மாட்டினான் செத்தான் !

பனித்துளி சங்கர் said...

செல்வா முதல் செல்போன் கதை கலக்கல் ராஜா .

பனித்துளி சங்கர் said...

நீயிர் சனியன் கிழமையிலும் கதை இனி வரும் நாட்களில் எழுத வாழ்த்துக்கள் .

இன்னல அப்படி பார்க்குற புரியலையா !??? என்னபன்னுவது எழுதின எனக்கெப் புரியலையே அப்புறம் எப்படி உமக்கு !!!!!!!!!!!!!!!!

Chitra said...

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!

... no sad feelingsu!

NaSo said...

ம்..ம்.. வெளங்கிருச்சு...

NaSo said...

ம்..ம்.. வெளங்கிருச்சு...

NaSo said...

ம்..ம்.. வெளங்கிருச்சு...

அனு said...

கடைசி பாரால கடைசி லைன் தான் எனக்கு பிடிச்சிருக்கு...

Unknown said...

எப்படி திங்கள் கிழமையை நிறுத்தமுடியாதோ.. அப்படித்தான் செல்வா மொக்கைகளும்.. :-)

Unknown said...

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!////

இது அநீதி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி... யோவ்.. யாரு எழுதிக்கொடுத்தது?

இல்ல.. நல்லா இருக்கேனு கேட்டேன்..ஹி..ஹி

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி...!!

பாத்தீங்கல்ல.. பாத்தீங்கல்ல..
இனிமே யாராவது எங்ககிட்ட
வம்புக்கு வருவீங்க..??
வம்புக்கு வருவீங்க..??

R.Santhosh said...

நல்லா இருக்கு இப்பிடியே தொடருங்கள்
வாழ்த்துக்கள்
R.Santhosh

ம.தி.சுதா said...

செல்வா நீங்க கோமாளிஙே இல்ல ஒர கோமா ஆளுங்கொ... ஹ..ஹ..ஹ..
நல்லா ரசிக்க வக்கிறீங்க...

Mathi said...

nice story .. siripu vanthathu..antha crow super..paranthu paranthu vadai vanguthu..

ஆர்வா said...

அந்த கோட்டுக்குப்பேருதானே செல்வா "பிளிம்சால் கோடு" நான் டென்த்ல படிச்சிருக்கேன். உங்க அறிவு ஜீவித்தனத்தை இந்த உலகம் புரிஞ்சுக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும்..

Anonymous said...

பொங்கலோ...பொங்கல்!
பொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...