Monday, January 17, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா முன்குறிப்பு இருக்கும்க.

                    மாட்டுப் பொங்கலும் செல்வாவும் 

    கடந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று செல்வா அவரது மாடுகளை குளிப்பாட்டி விடும்படி அவரது தந்தையாரால் பணிக்கப்பட்டார். செல்வாவும் சரி என்று மாடுகளைக் குளிப்பாட்டி விட்டு தந்தையிடம் அடுத்து என்ன செய்வது என்று கேட்டார்.

    அவற்றைக் கொண்டு சென்று தோட்டத்தில் கட்டிவிட்டு அவற்றின் கொம்புகளில் இந்த பெயிண்டினைப் பூசிவிடு என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட செல்வா மாடுகளை காட்டிற்கு ஓட்டிச்சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு மிகத் துள்ளலுடன் மகிழ்ச்சி பொங்க வந்தார். வீட்டிற்குள் நுழையும் முன்ன்பே அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே வந்தார்.

"ஏன்டா, இப்படி கத்துற ? "

" அன்னிக்கு எதிர்த்த வீட்டுக் காரங்க நம்ம மாட்டுக்கு வச்சிருந்த தீன எடுத்து அவுங்க மாட்டுக்குப் போட்டு நம்மல ஏமாத்தினாங்கல்ல , அதே மாதிரி இன்னிக்கு நான் அவுங்கள ஏமாத்திட்டேன் ? " என்றார் மகிழ்ச்சியாக.

செல்வாவின் அறிவு ஜீவித்தனத்தை உணர்ந்த அவரது தந்தை "என்ன பண்ணித் தொலைச்ச ? " என்றார் கோபமாக.

"நம்ம மாட்டுக்கு வச்சிருந்த பெயிண்ட் எடுத்து அவுங்க மாட்டுக்கு அடிச்சு விட்டுட்டேன் , இப்ப அவுங்க வச்சிருக்கிற பெயிண்ட் வேஸ்ட் ஆகிடும்ல , எப்படி ஐடியா ? அவுங்களுக்கு அப்படித்தான் வேணும்!" என்று மகிழ்ச்சிப் பூரிப்பில் இருந்தார்.

இதைக் கேட்ட அவரது தந்தை " நீ திருந்தவே மாட்டியா ? " என்றார் எரிச்சலுடன்.


                        FANCY நம்பரும் செல்வாவும்

    ஒரு முறை செல்வாவின் நண்பர் செல்வாவிடம் தனக்கு ஒரு சிம் கார்டு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். செல்வாவும் சரி நான் நம்பியூர் செல்லும் போது வாங்கி வருகிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் நம்பியூர் செல்கையில் செல்வா அந்த நண்பருக்கு அழைத்து தான் நம்பியூர் செல்ல இருப்பதாக கூறினார்.

   உடனே அவரது நண்பரும் சிம் வாங்குவதற்குத் தேவையான ஆவணங்களை  எடுத்துக்கொண்டு செல்வாவிடம் கொடுத்தார். மேலும் செல்வாவிடம் "நல்ல பேன்சி நம்பரா பார்த்து வாங்கிட்டு வா" என்று கூறினார். சரி என்று கூறிவிட்டு செல்வாவும் கிளம்பினார்.

   இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது நண்பர் " சிம் என்ன ஆச்சு ? " என்று ஆவலாக கேட்டார். அதற்கு செல்வா " நானும் நம்பியூர்ல இருக்குற எல்லா பேன்சிலயும் போய் கேட்டேன் , அவுங்க அவுங்களோட போன் நம்பர தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க! " என்றார் வெகுளியாக. இதைகேட்ட அவரது நண்பர் " உன்கிட்டப் போய் உதவி கேட்டேன் பாரு ? " என்று புலம்பியபடியே சென்றுவிட்டார்.

நீதி : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா நீதி இருக்கும்க.

பின்குறிப்பு : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா பின்குறிப்பு இருக்கும்க.

29 comments:

ஜீவன்பென்னி said...

பேன்சி நம்பர் எனக்கும் ஒன்னு வேணும் கிடைக்குமா....

செல்வா said...

நீங்க பேன்சி வச்சா கிடைக்கும் !!

Unknown said...

மாட்டுக்கொம்புக்கு பெயிண்ட் அடித்த
மாவீரன் செல்வா வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha kalakkal. 1st story is super. 90 marks out of 100

2nd is ok. 75 marks.

send 1st one to kumudham

சி.பி.செந்தில்குமார் said...

ur 2 diskies r super. ( dhaanikku theeni sariyaa pochu)

சி.பி.செந்தில்குமார் said...

eancy - pencil vaarththai jaalam ok

எஸ்.கே said...

செல்வா பதிவுன்னா கமெண்டு இருக்குங்க!

சௌந்தர் said...

கடந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று செல்வா அவரது மாடுகளை குளிப்பாட்டி விடும்படி அவரது தந்தையாரால் பணிக்கப்பட்டார்.///

ஒரு மாட்டு இன்னொரு மாட்டை குளிப்படுதா...என்ன அதிசயம்

Madhavan Srinivasagopalan said...

நம்பியூர நம்பினா அவ்ளோதான்..
எங்க ஊருல பேன்சி ஷாப்புலேயும் சிம் கார்ட் கெடைக்குது.. ஒண்ணு வாங்கினா இன்னேன்னு ஃப்ரீ..

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவின் நண்பர் செல்வாவிடம் தனக்கு ஒரு சிம் கார்டு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டார்///

இன்னுமா இந்த ஊரு உன்னை நம்புது.................அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

//மாட்டுக்கொம்புக்கு பெயிண்ட் அடித்த
மாவீரன் செல்வா வாழ்க///

நான் இப்போ மொக்கையனுக்கு பெயின்ட் அடிக்கலாம்னு இருக்கேன்....

தினேஷ்குமார் said...

செல்வா எப்புடி இப்படியெல்லாம் சிரிக்கவைக்கறீங்க நல்லாருக்கு மாட்டு கொம்பு பெயிண்டிங் வீரர் செல்வாவுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

Doubt: எதிர் வீட்டு மாட்டுக்கு பெயின்ட் அடிக்க வேற காரணம் இருக்கோ....

மாணவன் said...

நல்ல கதையா இருக்கே.......ஹிஹி’

செம்ம கலக்கல்...

தொடரட்டும் உங்கள் கதைகள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கடந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று செல்வா அவரது மாடுகளை குளிப்பாட்டி விடும்படி அவரது தந்தையாரால் பணிக்கப்பட்டார். /////

அருமை அருமை........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"நம்ம மாட்டுக்கு வச்சிருந்த பெயிண்ட் எடுத்து அவுங்க மாட்டுக்கு அடிச்சு விட்டுட்டேன் , இப்ப அவுங்க வச்சிருக்கிற பெயிண்ட் வேஸ்ட் ஆகிடும்ல , எப்படி ஐடியா ? //////

அவுங்க மாட்டுக்குன்னா....? பெயின்டு கொம்புலதானே அடிச்சு விட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நானும் நம்பியூர்ல இருக்குற எல்லா பேன்சிலயும் போய் கேட்டேன் , அவுங்க அவுங்களோட போன் நம்பர தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க/////

இன்னும் உனக்கு வெவரம் பத்தாது செல்வா, அவனுங் தரலென்னா என்ன, நைசா அவனுங்க போன தூக்கிட்டு வந்திருக்கலாம்ல, அப்பிடியே நம்பரும் வந்திருக்கும்?

ஆர்வா said...

//செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா நீதி இருக்கும்க//

அது என்ன நீதின்னு சொன்னா கொஞ்சம் தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்..

MANO நாஞ்சில் மனோ said...

//அவுங்க மாட்டுக்குன்னா....? பெயின்டு கொம்புலதானே அடிச்சு விட்டீங்க///

ஆஹா இவரு வேற ரூட்டுல கெளம்பிட்டாரே.....

அருண் பிரசாத் said...

செல்வா கதைகள்னா கண்டிப்பா கமெண்ட்டு இருக்கும்ங்க

அனு said...

//செல்வா கதைகள்னா கண்டிப்பா கமெண்ட்டு இருக்கும்ங்க//

ரிப்பீட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு மாட்டு இன்னொரு மாட்டை குளிப்படுதா...என்ன அதிசயம்

Chitra said...

:-)) super!

Unknown said...

:-)... :-(..

Riyas said...

நல்லாயிருக்கு செல்வா...

ம.தி.சுதா said...

செல்வா இம்ட்டு கோமாளியா ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

அன்புடன் நான் said...

உங்க பதிவ படிச்சத்துக்கு அப்புறம் தான் மனுசன் எப்படி தெளிவா இருக்கிறதுன்னு ஒரு தெளிவு வருதுங்க......

உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கல்.

Unknown said...

முதல் கதையில் பாராட்டு செல்வாவின் தந்தைக்கு தான். அவருக்கு ஆயுட்கால தண்டனை அல்லவா?

இரண்டாவது கதை சூப்பர்.
எந்த மீன் மார்க்கெட்ல கிடைக்கும் # ஜாமீன்.

Unknown said...

நீங்க ரேடியோ ஜாக்கி ஆகியாச்சா இல்லையா?