Wednesday, May 26, 2010

சிரிப்பிற்கும்(JOKE) மொக்கைக்குமான வேறுபாடுகள் :

சிரிப்பு (JOKE) :
1.இது பெரும்பாலும் சிரிப்பினை உண்டாக்குகிறது 
2.சிறந்த அறிஞர்களால் உருவாக்கப்படுகிறது .
3.மக்களால் இது பெரிதும் விரும்பப்படுகிறது.
4.இதனை உருவாக்க அறிவு தேவைப்படுகிறது.
5..இதனை ஆங்கிலத்தில் JOKE என்று அழைப்பர்.
6.மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது.
7.இதனை உருவாக்குபவர்களை மக்கள் போற்றுகின்றனர்.


மொக்கை :
1.இது பெருபாலும் எரிச்சல் அல்லது அழுகையை உண்டாக்குகிறது .
2.என்னைப் போன்றவர்களால் உருவாக்கப்படுகிறது (எ.கா : மொக்கை )
3.மக்கள் மீது சில விசக்கிருமிகளால் திணிக்கப்படுகிறது (நான் இல்லைங்க )..
4.இதனை உருவாக்க பெரும்பாலும் அறிவு தேவைப்படுவதில்லை (அதனாலதான் நான் ரொம்ப மொக்க போடுறேனோ.!)
5.இதனை ஆங்கிலத்திலும் MOKKAI என்றே அழைக்கின்றனர். 
6.மக்களின் காதுகளில் ரத்தம் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது. 
7.இதனை உருவாக்குபவர்களைக் கண்டால் மக்கள்  அஞ்சி ஓடுகின்றனர் .

8 comments:

Unknown said...

இது மொக்கையா.. இல்ல வேற எதாவதா..??

mega said...

உக்காந்து யோசிபின்களோ?

21a1cpn said...

என்ன கொடுமை சார்...

பரிசல்காரன் said...

என்ன பிரச்சினைன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம் பாஸ். அதுக்காக இப்படியா?

(கமெண்ட்டில் word verificationஐ நீக்கவும். ப்ளீஸ்.)

இம்சைஅரசன் பாபு.. said...

தம்பி டேய் என்னாச்சு உனக்கு ..................அழுதுருவேன் நான் ஆமா ............

எஸ்.கே said...

மொக்கை பற்றிய தங்கள் விளக்கங்களில் சிறிது குறை உள்ளது!


1.இது பெருபாலும் எரிச்சல் அல்லது அழுகையை உண்டாக்குகிறது (ஆமாம் ஆனால் செல்லமாக).
2.என்னைப் போன்றவர்களால் உருவாக்கப்படுகிறது (எ.கா : மொக்கை )-இது ஓகே
3.மக்கள் மீது சில விசக்கிருமிகளால் திணிக்கப்படுகிறது (நான் இல்லைங்க )..அப்படியில்லை சில சமயம் தானகவும் பரவும்
4.இதனை உருவாக்க பெரும்பாலும் அறிவு தேவைப்படுவதில்லை (அதனாலதான் நான் ரொம்ப மொக்க போடுறேனோ.!)-இதை வன்மையாக கண்டிக்கிறேன் மொக்கை என்பது எளிதல்ல ஒரு விஷயத்தை சாதாரணமாக யோசிப்பது எளிது, ஆனால் அதை சிறப்பாக யோசிப்பது எவ்வளவு கடினமோ அதைப்போல் மொக்கையாக யோசிப்பதும் கடினமாகும்.
5.இதனை ஆங்கிலத்திலும் MOKKAI என்றே அழைக்கின்றனர்.-சரி
6.மக்களின் காதுகளில் ரத்தம் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது.-அது சில சமயம் தேனாகவும் இருக்கலாம்.
7.இதனை உருவாக்குபவர்களைக் கண்டால் மக்கள் அஞ்சி ஓடுகின்றனர்.
-இது கிட்டதட்ட காதலனிடமிருந்து ஓடும் காதலி போன்றது. ஒரு வித பொய் பயம் !

செல்வா said...

@ எஸ்.கே
உங்கள் அன்புக்கு நான் என்ன தவம் செய்தேனோ ..?

Ramesh said...

சரியாத்தான் வேறுபடுத்தியிருக்கீங்க.. எங்க காதுல வர்ற ரத்தத்தை வெச்சி நீங்க என்ன பண்ணுவீங்க...