Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, February 18, 2011

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?


அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை 
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம் 
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி 
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய 
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட 
WORDSWORTH யும் SHAKESPHERE யும் 
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும் 
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று  
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம் 
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES " 
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம் 
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை 
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி 
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம் 
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? 

பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!




Friday, January 7, 2011

எப்பொழுது வரும்.?

இரண்டுநாட்களில் சொல்வதாகச் சொன்னார்கள்
இருபதுவருடம் காதலித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு
முடிவிற்கு காத்திருப்பதை விட நூறு மடங்கு படபடப்பாக உணர்கிறேன்!என்னை அழைப்பார்களா மாட்டார்களா.?

தொலை. பேசியை தொல்லையாக உணர்ந்து தூரத்தில்
வைத்திருந்தது ஒரு காலம் ,நேற்று முதல் எனது தொடுதல் இல்லாமல்
தொலைபேசி இருக்கவில்லை!
கோழிமுட்டையாக இருந்திருந்தால் இந்நேரம் குஞ்சு பொறித்திருக்கும்!

காதலிக்காக காத்திருக்கும்போது நிமிடமுள் மணி முள்ளாக
நகர்வதாக சொல்கிறான் நண்பன்! என் விசயத்தில்
ஒவ்வொரு நொடியும் வருடமாக நகர்கிறது!
அவன் விசயத்தில் காதலி நிச்சயம் வருவாள்
ஆனால் என் விசயத்தில் என்னை அழைப்பார்களோ , மாட்டார்களோ?

தினமும் எனது தொலைபேசியின் தவறிய அழைப்புகளில்
மிக நெருக்கமானவர் அழைத்திருந்தாலும் திருப்பி கூப்பிடுவதில்லை!
ஆனால் இன்று யாரோ ஒரு தெரியாத எண்ணில் இருந்து தவறிப்போன
எண்ணிற்கு கூட அழைத்துப் பேசி WRONG NUMBER என்ற போது கொஞ்சம் வலித்தது!

கடவுளிடம் நேர்ந்து கொள்வதை எப்பொழுதுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை,
ஆனால் நேற்று நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் பூக்குழி இறங்குவதாக வேண்டிக்கொண்டேன்!பசியால் மட்டுமே பத்தும் பறப்பது இல்லை,நாம் மிகவும் நேசிக்கும் ஒன்று கிடைக்கவேண்டும் என்றாலும் பதினாறும் பறக்கிறது!

சிலசமயங்களில் எனது தொலைபேசி ஒலித்தாலும் வேறு யாரோ
எனது RING TONE வைத்துள்ளார்கள் என்று சாவகாசமாக இருப்பேன்!
ஆனால் நேற்று முதல் எனது அருகில் இருப்பவரின் தொலைபேசி ஒலித்தாலும் ஒரு விதப் பதற்றத்துடன் எனது தொலைபேசியைப் பார்க்கிறேன்!அவர்கள்தான் அழைக்கிறார்களோ என்று?

விரைவில் அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அலுவலகத்திலும்
போனும் கையுமாக இருக்கிறேன்! ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!

உனக்குக் கிடைக்கும் , நீ நிச்சயம் ஜெயிப்பாய் , உனக்கு அந்தத் தகுதிகள் இருக்கிறது என்று நண்பர்கள் கூறும்போது சந்தோசமாக உணர்கிறேன்! இருந்தும் முடிவு என்ன ஆச்சு என்று கேட்கும்போது இன்னும் இரண்டுநாட்கள் என்று பதில் கூறும்போது ஒரு வித ஏக்கத்தை உணர்கிறேன்! இன்னமும் எனது பதற்றம் நின்றபாடில்லை, அழைப்பு வரும்வரை நிற்கப்போவதும் இல்லை!

Wednesday, December 22, 2010

என்னத்த சொல்லுறது.?

முன்குறிப்பு : எல்லோரும் கவிதை எழுதுறாங்க , சரி நாமளும் முயற்சி பண்ணி பாக்கலாம்னு வந்தேன்.! இத படிச்சு உங்க உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.!

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..

ஒவ்வொருமுறை விக்கல் வரும்போதும் உன் நியாபகம் .
நீதான் நினைக்கிறாய் என்கிறது மனது.!
அறிவியல் வளர்ந்தென்ன பயன்..?
யார் எங்கிருந்து நினைக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாமல்.!

"அவ கூப்பிடறா மச்சி " என்றவாறே செல்போனை எடுத்துக்கொண்டு
தனியாகப் போகும் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமைப்படுகிறேன் அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!

ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.! இருந்தாலாவது பயமில்லாமல் காதலித்திருப்பேன்.

இப்பொழுதெல்லாம் பூரியை விட பூரிக்கட்டை
சண்டைகளே என்னை அதிகம் கவர்கின்றது.!
எப்பொழுது நீ என் மீது வீசப்போகிறாய்.?

தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
என்ற வைரமுத்துவின் வரிகளில்தான் எத்தனை உண்மை.?!

என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?

அழகான பெண்களைக் கடக்கையில் மட்டும்
அது நீதானா என சத்தமிடும் மனது
நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!
 
இரண்டு முழ கூந்தல் வைத்திருப்பாயோ இல்லை
பாப் கட்டிங் செய்திருப்பாயோ தெரியவில்லை ,
எப்படி இருந்தாலும் என் தேவதை நீ தான்.!

உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்வேனா ,
இல்லை கல்யாணம் செய்து காதலிப்பேனா தெரியவில்லை.!
நீ சைவமோ அசைவமோ தெரியவில்லை.!
சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை.!
இருந்தாலும் உன்னைக் காணாமலே நித்தமும் ஒரு கற்பனையில்
காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .!

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : நீயெல்லாம் கவிதை எழுதலைன்னு யார் அழுதா.?

நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் ..!

பின்குறிப்பு : நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?

Monday, November 29, 2010

வெளியூர்க்குப் போறேன்.!

முன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக., கவிதை மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.! கவிதை வரலைனா திட்டாதீங்க.! ஏன்னா நான் மொக்கை எழுதினாலே மொக்கயாத்தான் வருது.!

தெளிவான சாலைகள் , தெளிவில்லாத எங்கள் உள்ளம்
கணவனும் மனைவியும் ஒன்றாகச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளூரில் ஆடு மேய்த்தாவது வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.!

எங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;
பால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது
வேண்ட நினைக்கையில் வெளிநாட்டில்.!

பால்குடம் எடுக்கும்போது பத்துப் பேர்மீது வரும் செல்லாத்தா
இங்க ஏனோ ஒருத்தர் மேல கூட வர்றதில்ல.!
புலிகளைக் காப்போம் திட்டத்தில் வாகனம் போய்விட்டதா .?

ஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,
இப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.!

வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.!

கோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது
கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,
அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!

படிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,
பணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.!
பணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.!

சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!
சித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.?

மாமா பையனுக்கு மொட்டை அடிக்க விடுமுறை  ,
அத்தை பொண்ணுக்கு காது குத்த விடுமுறை ,
எதிர்த்த வீட்டுக் கல்யாணத்துக்கு விடுமுறை ,
இப்படி எத்தனை விடுமுறைகள் எடுத்திருப்போம் ,
இங்கே எந்தக் காரணமும் எடுபடுவதில்லை.!

வருடத்திற்கு ஒரு முறை வரும் திருவிழாவிற்கு
உண்டியலில் சேர்த்து 200 ரூபாய் கொடுத்த போது இருந்த சந்தோசம்
வெளிநாட்டில் இருந்து 20,000 அனுப்பும் போது கிடைப்பதில்லை.!

உள்ளூரில் செருப்புத் தைப்பவனுக்கு எங்கள் கார் மீது பொறாமை ,
எங்களுக்கு அவன் மீது பொறாமை .! இரண்டுநாளில் கிளம்பவேண்டுமே.!
சொந்தங்களும் சொந்த மண்ணும் தரும் சந்தோசத்தை AC கார்களும்
Bank Balanceம் தருவதில்லை எங்களுக்கு .!

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!

தீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்
பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.!
பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!

வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்
மிசினுக்கும் ஏது வித்தியாசம்?


நீதி : எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க ., நல்ல கவிதை படிக்கணும்னு நினைச்சா
நம்ம கலாநேசன் , பாலாஜி சரவணா , தமிழ்க்காதலன் ஆகிய ப்ளாக்ல போய் படிச்சுகோங்க.! ஹி ஹி ஹி .!

பின்குறிப்பு : உன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .!

Wednesday, September 29, 2010

ரேடியோ ஜாக்கி

பூமியெங்கும் ஆக்சிஜென் இருந்த போதிலும்
மீனுக்கான ஆக்சிஜன் தண்ணீருக்குள்ளேயே இருக்கிறது..
அதைப் போலவே எனது வாழ்க்கையும்
ரேடியோ ஜாக்கி என்ற தண்ணீருக்காக ஏங்கிக்கிடக்கிறேன்.!

தெருவோர கோவில்கள் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்
எனது வேண்டுகோளை வைக்கத் தவறுவதில்லை
சில சமயங்களில் பொட்டு வைக்கப்பட்ட மைல் கல்களையும் வேண்டுகிறேன்.!
கடவுள் இல்லையென்று சொல்லாதீர்.!
என்னைத் தேர்வு செய்பவர் நிச்சயம் எனக்கு தெய்வம் தான்.!

2012 இல் உலகம் அழிந்துவிடுமாம் அதற்குள் என்னவளுடன்
சேர்ந்துவிடவேண்டும் என்றான் நண்பன்...
நான் சொன்னேன் அதற்குள் ஒரு நிகழ்ச்சியாவது தொகுத்து விட வேண்டுமென.!

என் அலுவலகத்தில் உள்ள ROUTER அடிக்கடி
Destination Host Unreachable என்கிறது.!
நீங்களாவது சொல்லுங்கள் நானும் ஒரு HOST தான் என்று .!

நீ என்னவாக நினைத்து துடிக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் என்கிறது கீதை.!
எப்பொழுது என்று சொல்லியிருந்தால் நிம்மதியாகவாவது இருப்பேன்.!

நான் ரேடியோ ஜாக்கி ஆகிவிட்டேன்
என்றொரு பதிவு போட ஆசைதான்
அந்த ஆசை நிறைவேறும் நாள் எப்பொழுது ..?

கண்களை மூடிக் கொண்டால் இரவு பகல் தெரிவதில்லை
கண்களை மூடியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
என் கண்கள் திறக்கப்படும் காலத்திற்காய் காத்திருக்கிறேன்.!

புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் செல்வார்களாமே..?
எனது சொர்க்கம் ரேடியோவில் இருக்கிறது
 நான் ரேடியோ ஜாக்கி ஆவதற்கு என்ன புண்ணியம் செய்வது..?

கம்பியில் பாய்ச்சப் பட்ட மின்சாரமாய் எனது உணர்வுகள்
ரேடியோ ஜாக்கி ஆவது எனது கனவு அல்ல
அதுவே என் வாழ்கையின் ஆதாரம்..!

Saturday, July 31, 2010

ஒரு கவிதையும் நாலு மொக்கையும்

                
                                      ஒரு கவிதை 
அப்பா குடிக்கிறார் ...
மகனின் சந்தோசம் - காலி பாட்டில்களுக்கு ஐஸ் ..!
தாயின் கண்ணீர் - மகனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லையே ..!!

                                 நாலு மொக்கை 

1 . இந்த உலகத்தில் என்னைத்தவிர அனைவரும் அறிவாளிகள் ..
 உன் தங்கையைப் பார்த்த பின்பும் உன்னை காதலிக்கிறேன் ..!!

2 . உன்குரலும் குயில் போன்றது என்று தான் நினைத்திருந்தேன் 
அன்றொரு நாள் நீ பாடுகையில் கழுதை வரும் வரை ..!!

3.இந்த பூமிக்கு மழை வேண்டும்போதெல்லாம் என் காதலனை சந்திக்கிறேன்.
அவன் விட்ட ஜொள்ளில் 9 கிரகங்களும் நனைந்து போயின..!

4 . இங்கே இன்னொரு மொக்கை போடப்போவது இல்லை ..

மிரட்டல் 1 : எனது அடுத்த சிறுகதை விரைவில் ...

மிரட்டல் 2 : ஜில்தண்ணியில் நடை பெற்ற மொக்கை பெயர்க்காரணம் பற்றிய முடிவுகள் திங்கள் அன்று இங்கே பதிவிடப்படும் ..!!!

பயனுள்ள குறிப்பு : காலைல எழுந்து brush பண்ணாமலே உங்க பல் சுத்தமாக இருக்கனுமா ...?
காலைல எழுந்ததும் உங்க பல் மேல லேசா தண்ணி தெளிச்சு விளக்குமார எடுத்து ஒரு கூட்டு கூட்டி விட்டுருங்க ..!!

Wednesday, July 14, 2010

கவிதையும் கழிதையும்

                                            
                                                       கவிதை 
எங்கிருந்து வந்தாயடி நீ ..
அன்றொரு நாள் அழகிய நந்தவனத்தில் நுழைந்து
அன்றலர்ந்த மலர்களைத் தழுவி வரும் பூந்தென்றல் காற்றாய்
என் மனதை பறித்துச் சென்றாய்..! மனமெங்கும் பூவாசம்..!

நீயும் நானும் சேர வேண்டி
இந்து , கிறித்தவ இசுலாமிய கடவுளர்கள் போதவில்லயடி எனக்கு
ஒவ்வொரு முறை நான் கடவுளை வேண்டும்போதெல்லாம்
அவரும் உன்மேல் காதல் கொண்டு எனக்கு போட்டியாய் வருகிறார் ..
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் காதல் வயப்படாத ஒரு கடவுளை..!

நீதான் இந்திரன் சபையில் இருக்கும் மேனகையோ
இல்லை ஆதாம் காலத்து ஏவாளோ..?
குழம்பித்தான் போகிறேனடி நானும்..
என்னை குழப்பிய உன்னிடம் நான் எப்போதடி என் காதலை சொல்வது..
பௌர்ணமி நிலவை போன்ற உன் ஒளியில் மயங்கி விடுகிறேன்..!

சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் போராட்டம் செய்கின்றன..
வார்த்தைகளும் உன்னை காதலிக்கிறதோ...

                                                        கழிதை 
எங்கிருந்து வந்தாயடி நீ ..?
அன்றொரு நாள் நான் நிம்மதியாய் டீ கடையில் நின்றுகொண்டிருந்த போது
கூவம் ஆற்றில் குளித்து வந்தது போல் என் மனதை நாரடித்தாய்..!

உன்னை மீண்டும் நான் பார்க்க கூடாதென வேண்டி

இந்து , கிறித்தவ இசுலாமிய கடவுளர்கள் போதவில்லயடி எனக்கு
அவர்களுக்கு என்ன பயமோ உன்னை என் தலையில் காட்ட பார்க்கிறார்கள் ..
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றும் ஒரு கடவுளை.. அந்த தேடல் முடிவதற்குள் என்னை நீ முடித்து விடுவாய் போலும் ..

நீ எமனின் வாகனமோ ..
இல்லை அந்த கால ராட்சசிகளின் தலைவியோ ..
நடுங்கித்தான் போகிறேனடி நானும் ..
உன் முகமென்னும் பேயுருவத்தில் பயந்து மயங்கிவிட்டேனடி..!

சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் போராட்டம் செய்கின்றன..
அவைகளும் உன்னை பார்த்து பயந்து விடுகின்றன ..

மொக்கை 1 : பாம்புக்கு காது இருக்குதான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கணுமா..?
ஒரு பாம்ப பிடிச்சுக்குங்க , அப்புறம் உங்களோட முகத்துகிட்ட கொண்டுவந்து " எனக்கு ஒரு முத்தம் கொடு " அப்படின்னு சொல்லுங்க .. அதுக்கு காது இருந்த முத்தம் கொடுக்கும் .. அப்ப கண்டுபிடிச்சிடலாம் ..!!

மொக்கை 2 : இந்த மசுர கட்டி மலைய இழுப்போம் , வந்தா மலை போனா மயிர் அப்படிங்கறாங்களே அப்படி போனா அந்த மயிர் எங்க போகும் ...?

மொக்கை 3 : நமது இந்த முதல் கவிதை இந்த ஆண்டிற்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நமது கழிதை இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான  நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.