Monday, November 29, 2010

வெளியூர்க்குப் போறேன்.!

முன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக., கவிதை மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.! கவிதை வரலைனா திட்டாதீங்க.! ஏன்னா நான் மொக்கை எழுதினாலே மொக்கயாத்தான் வருது.!

தெளிவான சாலைகள் , தெளிவில்லாத எங்கள் உள்ளம்
கணவனும் மனைவியும் ஒன்றாகச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளூரில் ஆடு மேய்த்தாவது வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.!

எங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;
பால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது
வேண்ட நினைக்கையில் வெளிநாட்டில்.!

பால்குடம் எடுக்கும்போது பத்துப் பேர்மீது வரும் செல்லாத்தா
இங்க ஏனோ ஒருத்தர் மேல கூட வர்றதில்ல.!
புலிகளைக் காப்போம் திட்டத்தில் வாகனம் போய்விட்டதா .?

ஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,
இப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.!

வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.!

கோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது
கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,
அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!

படிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,
பணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.!
பணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.!

சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!
சித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.?

மாமா பையனுக்கு மொட்டை அடிக்க விடுமுறை  ,
அத்தை பொண்ணுக்கு காது குத்த விடுமுறை ,
எதிர்த்த வீட்டுக் கல்யாணத்துக்கு விடுமுறை ,
இப்படி எத்தனை விடுமுறைகள் எடுத்திருப்போம் ,
இங்கே எந்தக் காரணமும் எடுபடுவதில்லை.!

வருடத்திற்கு ஒரு முறை வரும் திருவிழாவிற்கு
உண்டியலில் சேர்த்து 200 ரூபாய் கொடுத்த போது இருந்த சந்தோசம்
வெளிநாட்டில் இருந்து 20,000 அனுப்பும் போது கிடைப்பதில்லை.!

உள்ளூரில் செருப்புத் தைப்பவனுக்கு எங்கள் கார் மீது பொறாமை ,
எங்களுக்கு அவன் மீது பொறாமை .! இரண்டுநாளில் கிளம்பவேண்டுமே.!
சொந்தங்களும் சொந்த மண்ணும் தரும் சந்தோசத்தை AC கார்களும்
Bank Balanceம் தருவதில்லை எங்களுக்கு .!

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!

தீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்
பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.!
பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!

வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்
மிசினுக்கும் ஏது வித்தியாசம்?


நீதி : எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க ., நல்ல கவிதை படிக்கணும்னு நினைச்சா
நம்ம கலாநேசன் , பாலாஜி சரவணா , தமிழ்க்காதலன் ஆகிய ப்ளாக்ல போய் படிச்சுகோங்க.! ஹி ஹி ஹி .!

பின்குறிப்பு : உன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .!

89 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

2 online

செல்வா said...

offline ..!!

அனு said...

was online. now offline!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையா எழுதியிருக்கே செல்வா... நீ சொன்னது அனைத்துமே உண்மை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோடிமயில்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!

//

இது தான் ரொம்ப கொடுமையான விஷயம்...

எனக்கு தெரிந்தவர் வட்டத்தில் அப்பாவை மாமா என்று அழைத்த கூத்தெல்லாம் நடந்திருக்கிறது...

செல்வா said...

//அருமையா எழுதியிருக்கே செல்வா... நீ சொன்னது அனைத்துமே உண்மை.. //

திட்டணும்னு தோணலையா ..?

செல்வா said...

// அனு said...
was online. now offline!!!//



நம்ம கவிதைய படிச்சிட்டு பயந்துட்டாங்க .!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!

//

இந்த நடிப்பு எங்களுக்கு பழகிப் போய் விட்டது...

NaSo said...

உண்மையைத்தானே சொல்லி இருக்கிறாய் செல்வா!! தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்!!

NaSo said...

//ஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,இப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.!//

கவித!! கவித!!!

செல்வா said...

//உண்மையைத்தானே சொல்லி இருக்கிறாய் செல்வா!! தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்!! /

உலகம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா ..?

KANA VARO said...

நல்ல கவிதை.

சௌந்தர் said...

கௌசல்யா, தேவா பதிவு எல்லாம் பார்த்தா உனக்கு கவிதைய தெரியலையா...!

NaSo said...

// ப.செல்வக்குமார் said...

//உண்மையைத்தானே சொல்லி இருக்கிறாய் செல்வா!! தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்!! /

உலகம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா ..?//

யாரு எப்படியோ போனா எனக்கென்ன? நான் தேர்தல்ல ஜெயிச்சு கோட்டைக்கு போயிட்டால் அதற்க்கப்புறம் ப்ளாக் பக்கமே வரமாட்டேன்!!

Kousalya Raj said...

//சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!
சித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.?//

நல்லா..... ரிதமிக்கா இருக்கு செல்வா....!

எல்லா வரிகளும் ரசித்து படித்தேன்...படித்து சிரித்தேன்....

Madhavan Srinivasagopalan said...

எலேய்... யாருடா அது.. நா கவிதா எழுதிவெச்ச
பேப்பர எடுத்துட்டு ஓடுறது..

Ramesh said...

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!


பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!


arumai...

எஸ்.கே said...

//எங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;
பால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது
வேண்ட நினைக்கையில் வெளிநாட்டில்.!
// இக்கவிதையில் சோகமும் உள்ளது!

எஸ்.கே said...

சூப்பர் கவிதைகள்!
கவிதைகள் அனைத்தும் அருமை!

dheva said...

இப்போ கொஞம் வெளிநாட்டு மோகம் நம்ம ஊர்ல குறைஞ்சு இருக்குப்பா...! இங்க வந்து இந்த ரோடுகளையும், சுத்தத்தையும், ஷாப்பிங்க் மால்ஸையும்....பாத்துப்புட்டு...

' காணாத கழுதை கஞ்சிய கண்டுச்சாம்...ஓயாமா ஓயாம ஊத்தி குடிச்சுச்சாம் ' அப்டின்னு சொல்ற மாதிரி ஒரே பீத்து பீத்திக்க வேண்டியது....

போங்கய்யா..போங்க...எங்க ஊரு எங்க ஊருதான்..எங்க வாழ்க்கை எங்க வாழ்க்கைதான்....எங்க மக்க எங்க மக்கதான்...!!!!!

எங்க ஊரு பொங்கல் பண்டிகை ஒண்ணு போதும்...எங்க பெருமை சொல்ல...!

எஸ்.கே said...

வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்
மிசினுக்கும் ஏது வித்தியாசம்?//
உண்மை செல்வா ஏனென்றால் சில மாதங்களுக்கு முன் வரை நானும் இதே நிலையில்தான் இருந்தேன்!

செல்வா said...

// எஸ்.கே said...
சூப்பர் கவிதைகள்!
கவிதைகள் அனைத்தும் அருமை!

/

இப்படி சொன்னீங்கனா நான் மறுபடியும் கவிதை எழுதுவேன் ..!!

எஸ்.கே said...

//இப்படி சொன்னீங்கனா நான் மறுபடியும் கவிதை எழுதுவேன் ..!!
//
நிச்சயம் அவ்வப்போது கவிதைகளும் எழுதுங்கள்! உங்களுக்குள் ஒரு சிறப்பான கவிஞன் ஒளிந்திருக்கிறார்!

செல்வா said...

//நிச்சயம் அவ்வப்போது கவிதைகளும் எழுதுங்கள்! உங்களுக்குள் ஒரு சிறப்பான கவிஞன் ஒளிந்திருக்கிறார்! //

ஹி ஹி ஹி ., நீங்க ரொம்ப நல்லவர் ..!!

வினோ said...

நீ சொல்லறது உண்மை தான் தம்பி....

செல்வா said...

// வினோ said...
நீ சொல்லறது உண்மை தான் தம்பி....

//

நன்றிங்க அண்ணா ,,!!

கருடன் said...

@கௌசல்யா

//நல்லா..... ரிதமிக்கா இருக்கு செல்வா....!

எல்லா வரிகளும் ரசித்து படித்தேன்...படித்து சிரித்தேன்....
//

இந்த வருடத்தின் சிறந்த டெம்ப்ளேட் கமெண்டாக இதை பரிந்துரை செய்கிறேன்... :))


தம்பி எவ்வளோ பீல் பண்ணி கவிதை எழுதி இருக்கு இப்படி பட்டுனு சிரிச்சேன் சொல்லிபுட்டிங்களே... ஒரு வேளை டிஸ்கி சொல்லி இருப்பாங்க போல... :))

Unknown said...

அனைத்தும் உண்மை.. அருமையாக எழுதியிருக்கீங்க..

செல்வா said...

//தம்பி எவ்வளோ பீல் பண்ணி கவிதை எழுதி இருக்கு இப்படி பட்டுனு சிரிச்சேன் சொல்லிபுட்டிங்களே... ஒரு வேளை டிஸ்கி சொல்லி இருப்பாங்க போல... :)) //

அவுங்க கோமாளி ப்ளாக் ல காமெடி மட்டும்தான் அண்ணா பார்ப்பாங்க ..,
நம்ம அக்கா தான விடுங்க .!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒருவேளை எல்லா பயலுகளும் தமிழ்மணம்ல பேர் வரலைன்னு மெண்டல் ஆயிட்டானுகளோ?

கருடன் said...

@ரமேஷ்

//ஒருவேளை எல்லா பயலுகளும் தமிழ்மணம்ல பேர் வரலைன்னு மெண்டல் ஆயிட்டானுகளோ?//

ஏன் ரமேசு.. உன் பேரு வராத அப்பொ நீ அப்படிதான் இருந்தியா??

செல்வா said...

//ஏன் ரமேசு.. உன் பேரு வராத அப்பொ நீ அப்படிதான் இருந்தியா??///

ஐ , ஜாலி சண்டை ஆரம்பிச்சிடுச்சு ..!!

Unknown said...

கவிதை வரிகள்
கடல்தாண்டியவர்களின்
வலிகள்..
அது நிஜங்கள்...
உனது
ப்ளாக்
வரிகளாக
வலிக்கிறது
சிலநேரம்...

Kousalya Raj said...

@Terror...

//தம்பி எவ்வளோ பீல் பண்ணி கவிதை எழுதி இருக்கு இப்படி பட்டுனு சிரிச்சேன் சொல்லிபுட்டிங்களே... ஒரு வேளை டிஸ்கி சொல்லி இருப்பாங்க போல...//

நான் பீல் பண்ணினதை தான் அப்படி சொன்னேன்....'இடுக்கண் வருங்கால் நகுக' :))

கோமாளி பிளாக் வந்துட்டு எப்படி சீரியஸா போக...?!

செல்வா said...

//நான் பீல் பண்ணினதை தான் அப்படி சொன்னேன்....'இடுக்கண் வருங்கால் நகுக' :))

கோமாளி பிளாக் வந்துட்டு எப்படி சீரியஸா போக...?! /

அடுத்த பதிவு பயங்கர மொக்கையா போடப்போறேன் ., அப்ப இரண்டுபேருமே அழுவீங்க ., இரண்டு பேரு மட்டும் இல்ல ,மொத்தப் பதிவுலகமே அழ போகுது .. ஹி ஹி ஹி ..

கருடன் said...

@கௌசல்யா

//நான் பீல் பண்ணினதை தான் அப்படி சொன்னேன்....'இடுக்கண் வருங்கால் நகுக' :))//

அப்படியா சொல்லி இருக்காரு கம்பர்!!! படிச்சவங்க இப்படி நாலு விஷயம் சொல்லிதாங்க. நான் கூட எங்களுக்கு இடுக்கன் வருங்கால் நீங்க நகுறிங்களோ நினைச்சேன். இப்படி எங்க கஷ்ட்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பீல் பண்ற உங்க உயர்ந்த மனச நினைத்து எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது.... அவ்வ்வ்வ்

Anonymous said...

//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!//

வலி மிகுந்த உணர்வுகள்.

அருண் பிரசாத் said...

செல்வா... எங்க இருந்து திடீருனு இந்த ஞானோதயம் வந்துச்சு.... செண்டிமெண்டை இப்படி புழியற....


உண்மையிலேயே நல்லா இருந்துச்சுப்பா.... ஃபீல் பண்ண வெச்சிட்ட

Anonymous said...

அப்படியே ஒன்ணுக்கு கீழே ஓண்ணா போட்ருந்தா கவிததான்..பாவம் பொழக்க தெரியாத புள்ள

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. கலக்கீட்ட போ...

Anonymous said...

பரவாயில்லை புதுசா யோசிக்கிற..

Anonymous said...

எல்லாமே சூப்பரா இருக்கு

செல்வா said...

//செல்வா... எங்க இருந்து திடீருனு இந்த ஞானோதயம் வந்துச்சு.... செண்டிமெண்டை இப்படி புழியற....///

ஹி ஹி ஹி ., வாங்கிட்டு வந்தேன் ..!!

செல்வா said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்படியே ஒன்ணுக்கு கீழே ஓண்ணா போட்ருந்தா கவிததான்..பாவம் பொழக்க தெரியாத புள்ள

/

இரண்டு மூணு போஸ்ட் போட்டிருக்கலாம்னு சொல்லுறீங்களா ..?

செல்வா said...

// பட்டாபட்டி.. said...
யோவ்.. கலக்கீட்ட போ...

//

ஹி ஹி ஹி ., நல்லா இருந்துச்சா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

////யோவ்.. கலக்கீட்ட போ... //
சீக்கிரம் கக்கா ........போயிட்டு வாங்க .............

இம்சைஅரசன் பாபு.. said...

//உண்மையிலேயே நல்லா இருந்துச்சுப்பா.... ஃபீல் பண்ண வெச்சிட்ட //

மக்கா அருண் ரொம்ப பீல் பண்ணி வலை சரத்துல எங்களை நாளைக்கு பீல் பண்ண வச்சுரதா........நான் உன்னை நம்பி ஒரு வரம் பதிவு எழுதமா இருக்கேன் ............

இம்சைஅரசன் பாபு.. said...

49

இம்சைஅரசன் பாபு.. said...

50

செல்வா said...

ஐ பாபு அண்ணன் வடை வாங்கிட்டார் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒருவேளை எல்லா பயலுகளும் தமிழ்மணம்ல பேர் வரலைன்னு மெண்டல் ஆயிட்டானுகளோ?//

எலேய் உன் கூட சேர்ந்த நான் தான் அப்படி .திரியுறேன் .................தம்பி எவ்வளவு நல்லா எழுதிருகான்........உனக்கு கவிதை எழுத தெரியலன்னு வய்த்து எரிச்சல் ............நீங்க எழுதுங்க தம்பி செல்வா .......

வைகை said...

கோடிமயில்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!//////

உண்மை செல்வா!! இங்குள்ள டாலருக்கு நான் கொடுக்கும் விலை என் மகளின் புன்னகை!!!

செல்வா said...

//உண்மை செல்வா!! இங்குள்ள டாலருக்கு நான் கொடுக்கும் விலை என் மகளின் புன்னகை!!! //

அப்படின்னா நான் கூட ஓரளவுக்கு கவிதை எழுதிருக்கேன்னு சொல்லுறீங்களா ..?

MANO நாஞ்சில் மனோ said...

//பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.!
பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!//

கண்கலங்க வச்சிட்டியே'ப்பா.....
ஸோ, கவிதை [நிஜம்] நல்லாயிருக்கு...

Praveenkumar said...
This comment has been removed by the author.
செல்வா said...

//கண்கலங்க வச்சிட்டியே'ப்பா.....
ஸோ, கவிதை [நிஜம்] நல்லாயிருக்கு... //

அழாதீங்க ., உங்களுக்காகா சீக்கிரமே ஒரு மொக்கைப் பதிவு போடுறேன் ..!

வைகை said...

//உண்மை செல்வா!! இங்குள்ள டாலருக்கு நான் கொடுக்கும் விலை என் மகளின் புன்னகை!!! //

அப்படின்னா நான் கூட ஓரளவுக்கு கவிதை எழுதிருக்கேன்னு சொல்லுறீங்களா ..?///////

கண்டிப்பாக!!! புரியாமல் எழுதினால் மட்டும் கவிதை இல்லை! இதுபோல உணர்வுகளை உண்மையாக சொன்னால்கூட கவிதைதான்!!!

பனித்துளி சங்கர் said...

///////வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்
மிசினுக்கும் ஏது வித்தியாசம்?//////

நண்பரே என்னைப் பொறுத்தவரையில் பிறரின் உணர்வுகளை அனைவருக்கும் வெளிப்படுத்தும் எந்த ஒரு பதிவும்
ஒரு சிறந்தக் கவிதையே . அருமையானப் பதிவு பகிர்வுக்கு நன்றி

செல்வா said...

//கண்டிப்பாக!!! புரியாமல் எழுதினால் மட்டும் கவிதை இல்லை! இதுபோல உணர்வுகளை உண்மையாக சொன்னால்கூட கவிதைதான்!!! ///

நன்றிங்க .,

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் இது புதிய முயற்சி,கட்டுரை வடிவில் கவிதை நயம்,வைரமுத்துவின் தண்ணீர் தேசம் மாதிரி,சூப்பர் முயற்சி ,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

மொக்கை உங்களுக்கு நல்லா வருவது போல் கவிதையும் பிரமாதமா வருதே...

அன்பரசன் said...

//முன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக.//

நன்றி

அன்பரசன் said...

//வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.!//

கண்டிப்பா

அன்பரசன் said...

//படிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,
பணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.!
பணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.!//

:)

அன்பரசன் said...

இன்னும் ஹைலைட் பண்ணனும்னா மொத்தத்தையும் பண்ணனும்.
கவிதை அற்புதம் செல்வா.
இந்த மாதிரி அடிக்கடி எழுதுங்க.

Arun Prasath said...

பங்காளி கலக்கிட.....லேட்டா வந்துட்டேன் போல.....

karthikkumar said...

நானும் லேட்டாதான் வந்திருக்கேன் பங்கு. ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

//கோடிமயில்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது
கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,
அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!//
//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!
//

எல் கே said...

யதார்த்தம்

சிவராம்குமார் said...

கவிதைன்னு சொல்ல மாட்டேன்! ஆனா அருமையான நினைவுகளைக் கிளறி விடும் வார்த்தைகள்!

ஹரிஸ் Harish said...

கவித கவித..ஹி..ஹி..
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல..

ஹரிஸ் Harish said...

உன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .!//

மனசுல நிறைய வச்சிருக்கேன்..ஒரு நாள் மொத்தமா..........

ஹரிஸ் Harish said...

நல்லா தான் இருக்கு மாப்பு..

Anonymous said...

செல்வா ரொம்ப அருமையா எழுதி இருக்க!
வெளிநாட்டில் வேலைசெய்யும் நண்பர்களின் எண்ணங்கள்..

Unknown said...

//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!//

உண்மை தான் செல்வா.
கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நல்ல கதை
sorry
நல்ல கவிதை . . ..
அன்புடன்,
ராக்ஸ் .. .

செல்வா நான் புது பதிவு போட்டுட்டேன் சீக்கிரம் வா வடை இருக்கு . ..
http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html

ராஜி said...

அருமையான கவிதை
"மயில்கலளுக்கப்பால்" மயில் என்றால் பறவை, மைல் என்றால் தூரம் . மைல்களுக்கப்பால் என்றுதான் இருக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்க.

செல்வா said...

//ராஜி said...
அருமையான கவிதை
"மயில்கலளுக்கப்பால்" மயில் என்றால் பறவை, மைல் என்றால் தூரம் . மைல்களுக்கப்பால் என்றுதான் இருக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்க.
/

நன்றிங்க ., கண்டிப்பா தவறுகளை சுட்டிக்காட்டனும் ..!!

Riyas said...

சூப்பர் செல்வா எல்லா வரிகளுமே உண்மை..

//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று//

உண்மை.. உண்மை

தினேஷ்குமார் said...

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!

//

இந்த நடிப்பு எங்களுக்கு பழகிப் போய் விட்டது...

நல்லா சொல்லியிருக்கே செல்வா .....................
ஊருக்கு போயிட்டுவாங்க நம்ம மண்ணை கேட்டேன்னு சொல்லுங்க மறக்காம............
என்ன செய்யறது செல்வா குவாட்டர் அடிச்சுதான் மனச தேத்த வேண்டியதா இருக்கு செல்வா .............

தினேஷ்குமார் said...

கவிதையான தொலைதூர காவியம் செல்வா இது வாழ்த்துக்கள்

Anonymous said...

//ராஜி said...
அருமையான கவிதை
"மயில்கலளுக்கப்பால்" மயில் என்றால் பறவை, மைல் என்றால் தூரம் . மைல்களுக்கப்பால் என்றுதான் இருக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்க.
/

நன்றிங்க ., கண்டிப்பா தவறுகளை சுட்டிக்காட்டனும் ..!!
////////////////////////////

thanks and thiruthhtikkondatharku nanri

பெசொவி said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்க, இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் எழுத்து, வாழ்த்துகள்!

தமிழ்க்காதலன் said...

கருத்துரையை தாமதமாக சொன்னாலும்... கதையை முன்பே படித்துவிட்டேன். செல்வாவிடமிருந்து அற்புதமான எழுத்து. நல்ல வலி சொல்லும் பாங்கு அழகு. வேதனையை கவிதையாக்கி இருக்கிறார். அருமையான முயற்சி. பாராட்டுக்கள்.

தீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்
பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.!
பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!

சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!
சித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.?

வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.!

கோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது
கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,
அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!

இந்த இடங்களில் கண்களில் குளம் கட்டுகிறது.

தம்பி... உங்கள் அன்புக்கு மிக்க நன்றி...

vinu said...

சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!


:(

Anonymous said...

என்ன அருமையான மொக்கை ,,,,, கலக்கிறிங்க GM (Gentel man )...........

Mathi said...

ellame unmai than..very nice..

arasan said...

நல்லா இருக்குங்க..
வலிகளும், வேதனைகளும் நிறைந்திருக்கு..
வாழ்த்துக்கள்..

nila said...

யாரும் தெரியாத, மொழி புரியாத ஊர்ல வாழ்றது கொஞ்சம் கொடுமை தாங்க... இங்க இருக்குற இந்தியர்களை எல்லாம் சொந்தக்காரங்களா
நினச்சு வாழ வேண்டிதான் இருக்கு... உங்க கவிதை அப்படியே வெளிநாட்ல வாழற நம்ம ஊர் மக்களை பிரதிபலிக்குது.. கவிதை நல்லா இருக்குங்க