Wednesday, May 26, 2010

சிரிப்பிற்கும்(JOKE) மொக்கைக்குமான வேறுபாடுகள் :

சிரிப்பு (JOKE) :
1.இது பெரும்பாலும் சிரிப்பினை உண்டாக்குகிறது 
2.சிறந்த அறிஞர்களால் உருவாக்கப்படுகிறது .
3.மக்களால் இது பெரிதும் விரும்பப்படுகிறது.
4.இதனை உருவாக்க அறிவு தேவைப்படுகிறது.
5..இதனை ஆங்கிலத்தில் JOKE என்று அழைப்பர்.
6.மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது.
7.இதனை உருவாக்குபவர்களை மக்கள் போற்றுகின்றனர்.


மொக்கை :
1.இது பெருபாலும் எரிச்சல் அல்லது அழுகையை உண்டாக்குகிறது .
2.என்னைப் போன்றவர்களால் உருவாக்கப்படுகிறது (எ.கா : மொக்கை )
3.மக்கள் மீது சில விசக்கிருமிகளால் திணிக்கப்படுகிறது (நான் இல்லைங்க )..
4.இதனை உருவாக்க பெரும்பாலும் அறிவு தேவைப்படுவதில்லை (அதனாலதான் நான் ரொம்ப மொக்க போடுறேனோ.!)
5.இதனை ஆங்கிலத்திலும் MOKKAI என்றே அழைக்கின்றனர். 
6.மக்களின் காதுகளில் ரத்தம் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்படுகிறது. 
7.இதனை உருவாக்குபவர்களைக் கண்டால் மக்கள்  அஞ்சி ஓடுகின்றனர் .

Friday, May 21, 2010

ஒரு சின்ன சந்தேகம் .?!?

நான் இன்னிக்கு காலைல Radio Mirchi கேட்டுட்டிருந்தேன் . அதுல ஒரு விளம்பரம் போட்டாங்க.
அது என்னன்னா ,

"ஒரு ஊர்ல Gold Loan அப்படின்னு ஒரு ராஜகுமாரன் இருந்தானாம். அவன் ஒரு நாள் குதிர மேல ஏறி வேட்டைக்குப் போனானாம். அப்போ Personal Loan அப்படிங்கிற ராஜகுமாரியப் பார்த்தானாம்.
பார்த்த உடனே காதல் வந்துடுச்சு. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துச்சாம். அதுக்கு அவங்க Smart Plus Gold Loan அப்படின்னு பேர் வச்சாங்களாம்".
          இதுல எனக்கு என்ன சந்தேகம்னா "அந்தக்குழந்தை ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா..??

உங்களுக்கு பதில் தெரிஞ்சா தயவு செய்து எனக்கு சொல்லுங்க..

Thursday, May 20, 2010

இவங்களை என்ன செய்யலாம்..?

கொஞ்சநாள் முன்னாடி எனக்கு ஒரு நண்பர் கிட்ட இருந்து ஒரு sms வந்துச்சுங்க .
அதுல ஒரு Mobile நம்பர் போட்டு அந்த எண்ணுக்கு உரியவர் பேர் ****** (பேர் வேண்டாமே )
அவர்  ஒரு விபத்துல அவரோட கண்கள் இரண்டையும்  இழந்துவிட்டார் அப்படினும் நீங்க இந்த sms ச உங்கள் நண்பர்களுக்கு Forward பண்ணினா அவருக்கு Forward ஆகுற ஒவ்வொரு sms இக்கும் 10 பைசா அவருக்கு கிடைக்கும்னும் போட்டிருந்துச்சு ..

ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்லாததால அதுல இருந்த நம்பர்க்கு call பண்ணி விசாரிச்சப்ப அந்த sms ல வந்த அத்தனையும் பொய்னு தெரிஞ்சது .. ஆன அவரோட பேர் சரியாதான் வந்திருந்தது . அவரே என்கிட்டே சொன்னாரு " யாருன்னு தெரியலிங்க , என்னோட நம்பர வச்சு இப்படி அனுப்பிட்டிருக்கன் , எனக்கு ரொம்ப சங்கட்டமா  இருக்குங்க" அப்படின்னார்.

அதனால நான் என்ன சொல்லுறேன்னா தயவு செஞ்சு இப்படி வர்ற குறுந்தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கூறிக்கொள்கிறேன் ..

Wednesday, May 19, 2010

குறுந்தகவல் சிரிப்புகள் :


*.ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்.,
நீங்கள் அவர்களை பூவை கொண்டு எறியுங்கள்.!
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் .,
பூ தொட்டியைக் கொண்டு எறியுங்கள் , சாவட்டும் .!

*.அப்பா : அம்மா அடிச்சதுக்கு ஏன்டா அழுற ..?
மகன் : சும்மா இருங்கப்பா ..! உங்கள மாதிரி எல்லாம்என்னால அடி தாங்க முடியாது...!!

*.ஒரு குளத்தில் 22 எறும்புகள் குளித்துக் கொண்டிருக்கு ...
அப்போ ஒரு யானை வந்து குளத்தில் ட்ய்வ் அடிக்குது ...
அந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 21 எறும்புகள்
கரைல போய் விழுந்திருச்சு .. ஒரு எறும்பு மட்டும் யானைதலைல போய்
விழ்ந்திருக்கு ... அத பார்த்த கரைல இருந்த ஒரு எறும்புசொல்லிச்சாம்..
"கொய்யால அவன அப்படியே தண்ணிக்குள்ள அமுக்குடாமாப்ள ..."

*.மகன் : "அப்பா ஓவரா என்னை பக்கத்து வீட்டு பொண்ணோட கம்பர் பண்ணி பேசிக்கிட்டே இருப்பியே ... இப்ப பார்த்தியா அது 470, நான் 480 மார்க்! "
அப்பா : அட நாயே .. அவ 10TH , நீ +2..

*.அப்பா : "அப்பா சொல்றத கேக்கணும் .. இல்லனா உருப்படமுடியாது ...!"
மகன் : "அதுக்கு இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ...தாத்தா சொல்லும் போதே கேட்டிருக்கணும் ...!"
அப்பா : .....?

*.முடி வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
ஆனா அறிவு வளர்ந்தா வெட்ட முடியுமா ...?

கவலை படாதிங்க உங்க நல்ல மனசுக்கு அப்படி எல்லாம்ஆகாது ...!

*.ஒரு மனிதர் ரயில் இல் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி இறங்கி
ஏறிக்கிட்டே இருந்தாரம் ...
அத பார்த்த ஒருத்தர் "ஏன் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி ஏறுரீங்கஅப்படின்னு கேட்டராம் .
அதுக்கு அந்த மனிதர் சொன்னாரம் " டாக்டர் நீண்ட தூரபயணம் போகதிங்கனு சொல்லிருக்கார் . அதான் ஒவ்வொருஸ்டேஷன் ஆக இறங்கி ஏறுறன்".

*.காற்றில் அவள் துப்பட்டா என்மீது விழுந்தது... எனக்குபயங்கர சந்தோசம்..
பைக் துடைக்க துணி கிடைத்தது என்று ..!

*.எப்பவெல்லாம் உங்களுக்கு படிக்கனும்னு தோணுதோஅப்ப ..
ஒரு அமைதியான அறைய தேர்ந்தெடுங்க.. கொஞ்சம்ஆசுவாசப்படுத்திக்குங்க ..
ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக்குங்க ... அப்புறம்கன்னத்துல போட்டுக்குங்க .. " ராஸ்கல் இது என்ன புதுபழக்கம் ( படிக்கறது )..!"

*.உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது ..!
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் ..!
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால ..!
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க ..!
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க ..!
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் ..!

*.சத்தம் இல்லாமல் உன் இருப்பிடம் தேடி குட் நைட்சொல்ல வந்த என் எஸ்.எம்.எஸ் இனை சத்தம் போட்டுகாட்டிக் கொடுத்தது உன்னோட
ஓட்ட மொபைல் ...!

*.உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ...ஆனால் நமக்காக உயிரையும் கொடுப்பவர்களை நேசிக்கஏன் யோசிக்கிறோம் ..!? அதனால நேசிங்க ...
கோழி , ஆடு ,மீன் ...

*.அப்பா : என்னடா பேப்பர்  ரிசல்ட் வந்திருக்கு ..உன்னோட நம்பர் வரல ...?
மகன் : நமக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காதுப்பா...!

*.உங்கள தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும் .. ஆனா செய்தி முக்கியமானது .. உண்மையா சொன்னா நாங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம் .. அதுல ஜோக்கேர் கார்டு காணாம போய்டுச்சு .. அதனால உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பேன் ப்ளீஸ் ....

*.டாக்டர் : மாடில இருந்து எப்பிடி விழுந்திங்க ...?
நோயாளி : ஐயோ அம்மா னு கத்திகிட்டே விழுந்தேன்டாக்டர் ..!

*.உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!

*.இந்த உலகத்தில சில விசங்களை யாராலும் மாற்ற முடியாது ..
காளிபிலோவேற தலை ல வைக்க முடியாது ..
கோல்ட் பில்டேற அடகு வைக்க முடியாது ..
கோல மாவுல தோசை சுட முடியாது ..
இந்த மாதிரி வெட்டி எஸ்.எம்.எஸ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது ...

*.எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ..
எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் ..
எங்கே வலி இருக்கிறதோ அங்கே ..
"IODEX" தடவுங்க ..வலி போய்டும் ..!

*.முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு..
அதுல ஆமை 80% , முயல் 81% மதிப்பெண் வாங்கிச்சு ..
இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன் இக்கு போனது ..
அங்க வந்து கட் ஆப் மார்க் 85%. ஆமை அட்மிசன் ஆகிடுச்சு.. எப்படி ..?
உங்களுக்கு நியாபகம் இருக்கா..? நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே .. அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...?
ஸ்போர்ட்ஸ் கோட்டா ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ...*."கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா ...?
 incoming free.. outgiong kaasu.. அதனாலதான் ..

*.பெண் 1  : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
  பெண் 2  : உளுந்து போடுறாங்களா ...??
  பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..


பின்குறிப்பு : இவையெல்லாம் எனது தொலைபேசியில் வந்த குறுந்தகவல் நகைச்சுவைகள். எனது கற்பனை அல்ல.

Saturday, May 15, 2010

Balance இல்லாம பேசணுமா :

நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்கிறீங்களோ , அவுங்களோட வீட்டுக்குப் போய்டுங்க ..
இப்ப நீங்க அவுங்க கூட எவ்வளவு நேரம் பேசினாலும் உங்க மொபைல் Balance குறையவே குறையாது..!!

Monday, May 3, 2010

Tips for NAAI vaalai nimirthuthal :


1.ஒரு  நாய  பிடிச்சுக்குங்க  .. அப்புறம்  அதோட  வால  cut பண்ணிட்டு  , மரத்துல  ஒரு வால் செய்யுங்க ..அந்த வால  எடுத்து நாயோட ஒடம்புல  ஒட்டிருங்க .. இப்ப  பாருங்க அந்த  நாய்  has an நிமிர்ந்த வால்..
2 .ஒரு iron box எடுத்துக்குங்க .. அப்புறம் அந்த நாயோட வால் மேல தண்ணி தெளிங்க. அப்புறம் நாய் வால நல்லா iron பண்ணுங்க ... oh .. what a நிமிர்ந்த நாய் வால் ..!!
3 .நிமிர்ந்த நாய் வால் பத்தின விழிப்புணர்ச்சிய நாய்களுக்குள்ள எற்படுத்தரதுக்காக நீங்க உங்க காச செலவு பண்ணி " உலக கோப்பை நிமிர்ந்த நாய் வால் போட்டி " நடத்துங்க ..
(எவ்வளவோ பண்ணுறிங்க..!! இத பண்ண மாட்டிங்களா .??!)

Tips to control mokka messages (especially sms) :


1. உங்க மொபைல் numbera யாருக்கும் கொடுக்காதீங்க  ..!
2 .உங்க மொபைல எப்பவும் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருங்க ..!
3 .இன்னமும் மொக்க sms வந்துச்சுன்னா உங்க மொபைல கீழ வச்சு ஒரு பெரிய கல்ல எடுத்து அது மேல போட்டிருங்க ...!! சத்தியமா உங்களுக்கு sms வராது..
(சும்மா முயற்சி பண்ணி பாருங்களேன் )