Friday, June 25, 2010

பொறியல்

(முன்குறிப்பு : பெரிய பதிவர்கள் அவியல் , குவியல் அப்படின்னு எழுதறாங்க .. நான் இன்னும் காம்ப்ளான் குடிசிட்டிருக்கரதால பொறியல்னு )

*.ன்னிக்கு காலைல ஒருத்தர் ,
"எனக்கு என்னமோ தோஷம் இருக்குதாமா, அந்த தோஷம் இருக்கறவங்களுக்கு தோஷ நிவர்த்தி செய்யும் வரைக்கும் கல்யாணம் ஆகாதாமா.. இவங்க போய் பாக்குற பொண்ணுகளுக்கு உடனே கல்யாணம் ஆகிடுமாமா , ஆனா இவங்களுக்கு ஆகாது , அப்படின்னு ஜோஷியகாரர் சொல்றார் அந்த தோசத்த கழிக்கலாம்னு இருக்கேன் " அப்படின்னார்.

அதுக்கு நான் ," அண்ணா இது நல்லா தோஷமா இருக்கு , ஊர்ல இருக்குற கல்யாணம் ஆகாத பொண்ணுகளோட லிஸ்ட் எடுங்க .. அவுங்க வீட்டுக்கு போய் உங்க தோஷத்தப் பத்தி சொல்லி நான் உங்க பொண்ண பார்க்க வரேங்க , என்னோட தோஷத்தின் படி கண்டிப்பா உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடும் .. அப்படி கல்யாணம் ஆகிடுட்சுனா எனக்கு 5000 கமிசன் குடுத்திடுங்க அப்படின்னு ஒரு தொழில் ஆரம்பிச்சிட வேண்டியதுதானே .! பொது சேவை செஞ்ச மாதிரியும் ஆச்சுல , இத வச்சு நீங்க பெரிய
பணக்காரர் ஆகிடலாம்ணா.. தோஷத்த சந்தோஷமா பாருங்க ...!!" அப்படின்னு சொன்னேன் ..

*.நேத்திக்கு வீட்டுக்கு போயிட்டிருக்கும் போது ஒருத்தர் இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டிருந்தார்....
"நீங்க செஞ்ச இந்த உதவிய நான் ஏழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேங்க..!"
எனக்கு என்னமோ அவரு ஏமாத்திருவாருன்னு தோணுது.. ஏன்னா இந்த ஜென்மத்துல மறக்க மாட்டாரு சரி.. அடுத்த ஜென்மத்துல நினைச்சிருக்கரக்கு எதாவது மிசின் இருக்க என்ன ...?


*.த்தமில்லாம பட்டாசு வெடிக்கணுமா...?
பட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது..!


*.ன்னிக்கு ஒரு நாள் T .V ல "அபிராமி " நாடகம் பார்த்துட்டிருந்தேன். அதுல கௌதமி சொன்னாங்க " இந்த போலி மருந்து விவகாரத்துல சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்."
அதுக்கு எங்க அம்மா சொன்னாங்க "உன் புருஷன் தான் முக்கியமான ஆளு .."
ஆனா இது கௌதமிக்கு கேக்கவே இல்ல.அவுங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா...?


*.ரண்டு வருசத்துக்கு முன்னாடி சிக்கன் குனியா பரவிக்கிட்டிருந்த போது ஹாஸ்பிட்டல்ல கேட்ட ஒரு குரல் ..
"எலக்சன் முடியற வரைக்கும் கம்முனு இருந்தாங்க , இப்ப கண்டுபிடிச்சு விட்டுட்டாங்க (சிக்கன் குனியாவ கண்டுபிச்சது கவர்மெண்டாம்ல..! இதெல்லாமா கண்டு பிடிக்கிறாங்க )

*.ச்சே.. இந்த கொசுவர்த்தி சுருள் சரியாவே வேலை செய்ய மாட்டேங்குது  .. அப்படின்னு நீங்க நெனச்சா அது சாதாரண வாழ்க்க..
இதே அந்த கொசுவ விருந்துக்கு கூப்பிட்டு அதோட கண்கள ஒரு கருப்பு துணியால கட்டிட்டா கொசுவால நீங்க எங்க இருக்கீங்கன்னு பார்த்து கடிக்க முடியாது..
இது மென்டாஸ் வாழ்க்க ..!

(உண்மையாவே இத படிச்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு சிரிப்பு வரலைன தயவு செய்து தானவே வாய தொறந்து ஹா.. ஹா .. ஹா . அப்படின்னு சிரிச்சுக்குங்க.. ப்ளீஸ் )

Thursday, June 24, 2010

எருமையும் மாடும்

(அப்படியே எதையாவது கிளப்பி விடலாம்னு ...)

மாடு : ஏய் ! எரும இங்க மேயாத , அது என்னோட இடம் . நான் தான் மேய்வேன்..!

எருமை : எதுக்கு , ஓனர் என்னையும் இங்கதான் மேய சொன்னார்.. உன்னோட இடம்னு பட்டா  போட்டு வச்சிருக்கியா ..?

மாடு : ஏய் , ஒழுக்கமா அந்த பக்கம் போய்டு , இல்லனா நடக்கறதே வேற ..


எருமை : ஏய் , நான் ஏன் இங்க மேயக்  கூடாது ., ஓனர் நம்ம ரெண்டு பேரும் மேயறதுக்கு தானே இங்க கட்டிருக்கார்..!


மாடு : நீ ஏன் இங்க மேய கூடாதுனா, நீ கருப்பு நான் வெள்ளை.. நீ கீழ் ஜாதி , நான் மேல் ஜாதி ..


எருமை : நீ மேல் ஜாதியா..? எப்டி..?


மாடு : என்னோட பால எடுத்து தான் சாமி சிலைக்கு ஊத்துவாங்க .. அப்ப நான் மேல் ஜாதி தானே ..


எருமை : நானும் நீயும் ஒரே புல்லைத்தான் மேயுறோம்.. அப்புறம் எப்பிடி உன்னோட பால் மட்டும் புனிதம் ஆகும் ..?


மாடு : அதுதான் உயர்ந்த ஜாதிங்கறது   ..!


எருமை : உயர்ந்த ஜாதியும் இல்ல , மயிரும் இல்ல .. என்னோட பால்ல வெண்ணை அதிகம் , அத கொண்டு போய் சாமி சிலை மேல ஊத்தினா கழுவறது சிரமம் .. அதனால கழுவறதுக்கு மொட பட்டுட்டு உன்னோட பால்தான் நல்லதுன்னு ஒரு பிட்ட போட்டு விட்டுட்டாங்க .. இது தெரியாம நீயெல்லாம் பேசுற ..!

மாடு : அதவிட நீ எமனோட வாகனம் .. நான் புனிதமானவன் ..

எருமை : எமன் இன்னுமா வாகனத்த மாத்திக்கல..? அது சரி அப்படியே நான் எமனோட வாகனம்னே வச்சிக்கிட்டாலும் என் மேல ஏறி அவர் எத்தன பெற கொல்ல முடியும் .. என்னை சோம்பேறி அப்படின்னு வேற சொல்லுறீங்க.. அன்னிக்கு கூட மங்களூர்ல விமானம் விபத்தாச்சே, அப்ப எருமை மேல ஏறியா எமன் போனார்.. அப்படி போனா விமானத்த எப்பிடி கீழ தள்ள முடியும்.. எனக்கு தான் பறக்க தெரியாதே..! யாரவது எருமை எமனோட வாகனம்னு சொல்லி பாருங்க ..!

மாடு : என்ன சொன்னாலும் நீ எமனோட வாகனம் தான் ..

எருமை : என்னைவிட உன்னாலதான் அதிகமா சாகுறாங்க ஜல்லிக்கட்டு அப்படிங்கற பேருல.. அப்படினா நீ எமனோட டைரக்ட் ஏஜென்ட்டா...?

மாடு : என்னோட யூரின (கோமயம் ) எடுத்து நல்லது அப்படின்னு  வீட்டுக்குள்ள தெளிச்சுக்குறாங்க ... இதுக்கு என்ன சொல்லப்போறே...?

எருமை : உனக்கும் அவுங்களுக்கும் அறிவே கிடையாது .. இதுல நான் என்னத்த சொல்லுறது .. நான் போய் மேயுறேன்.. அப்புறம் என்னோட கன்னுக்குட்டிதான் பால் பத்தாம கத்தும் .. உன்ன மாதிரி முட்டளோட பேசி என்னோட நேரத்த வீணக்க விரும்பல ... என்னமோ பண்ணி தொலை ..!!

(பின்குறிப்பு : என்னோட வேலை முடிஞ்சதுங்க.. எதாவது தப்பா பேசிருந்தா அது என்னோட தப்பில்லைங்க.. அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...!!)

Tuesday, June 22, 2010

கருப்பா பயங்கரமா இருப்பதற்கும் , பயங்கர கருப்பா இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகள்

(முன்குறிப்பு : இந்த ரெண்டு வகைல நான் இரண்டாவது வகையை சார்ந்தவன்)


கருப்பா பயங்கரமா இருப்பவர்கள்  :
1.கொஞ்சம் கருப்பாக இருப்பர்.
2.இவர்களது முகம் , கை , கால் போன்ற உறுப்புகளை எளிதாக காண முடியும்.
3.இவர்களை அமாவாசை இருளிலும் காணலாம்.
4.இவர்கள் எப்போதும் கோபமாக(பயங்கரமாக) இருப்பர் .
5.இவர்களை கண்டால் நமக்கு பயம் ஏற்படலாம்.
6.இவர்களை வைத்து பேய் கதைகளை விளக்கலாம்.

பயங்கர கருப்பா இருப்பவர்கள் :
1.கோவில் சிலை போன்று கருப்பாக இருப்பர்.
2.இவர்கள் அட்டகருப்பாக இருப்பதால் இவர்களது கை , கால் , முகம் போன்றவற்றை காண்பது சற்று சிரமம்.
3.இவர்கள் சாதாரண மர நிழலில் நின்றால் கூட காண்பது அரிது.
4.இவர்கள் சாதுவாக இருப்பர் .
5.இவர்கள் சாதுவாக இருப்பதால் இவர்களை கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை.
6.இவர்களை வைத்து கருமாரியம்மன் கதைகளை விளக்கலாம்.

(இந்த பதிவ எப்படியாவது பாப்புலர் ஆக்கிடுங்க ., ஏன்னா நிறைய பேர் இந்த ரெண்டுமே ஒண்ணு அப்படின்னு நினைசுக்கறாங்க.. இவ்ளோ வித்யாசம் இருக்கு பாருங்க.. நம்மளுக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு சொல்லலாம்ல.. உங்களுக்கு ஏதாவது வேற வித்யாசம் தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரியப்படுத்துங்க..)

Saturday, June 19, 2010

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் (பகுதி 2 )

(நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் )


த.நாட்டாமை : தென்றா பசுபதி , இன்னிக்கு ஒரு பஞ்சாயத்தும் இல்லையா ..?

பசுபதி : ஐயா , ஒரு பஞ்சாயத்து இருந்ததுங்க , அத அந்த நாட்டாமை தீர்த்து வச்சிட்டாருங்க..!

த.நாட்டாமை : தென்றா சொல்ற.. அவன் தீர்ப்பெல்லாம் செல்லாது... நம்பட தீர்ப்பு தான் செல்லும்.

நா.நாட்டாமை : அதெப்பிடிடா, நான் தான்டா சீனியர் , நம்பட தீர்ப்பு தாட செல்லும்.!

பசுபதி : (என் காதருகே மெல்லமாக , என்னமோ உலக அளவுல இவனுக தீர்ப்பு சொல்லுற மாதிரி பேசிக்கிராணுக . செல்வா எப்படா என்னய இந்த லூசு பசங்க கிட்ட இருந்து காப்பாத்தப் போறே..?  )

Me : சார் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க , உங்களை நாட்டாமை ஆக்கிடுறேன்..!

(இப்ப ஒரு SMS வருது ..டிங் டிங் )

த.நாட்டாமை : தென்றா பசுபதி சத்தம் ..?

பசுபதி : ஐயா , எவனோ உங்களை கிண்டல் பண்ணி  SMS அனுப்பிருக்கானுங்க..!

நா.நாட்டாமை : தெவண்டா அவன் , படிடா என்ன அனுப்பிருக்கான்னு பார்க்கலாம்..

பசுபதி : SMS படிக்கிறார் , அடைப்புக்குள்ள இருக்குற SMS தாங்க நாட்டாமைக்கு வந்திருக்கு..
( நாட்டாமை : ஹலோ , யார் பேசுறதுங்க ..?
IVR : நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..
நாட்டாமை : அம்மிணி , நம்ம பசுபதிக்கு தான் போட்டேன் ,அவன் கிட்ட போன குடு ..
IVR : நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..
நாட்டாமை : அவள கள்ளிப்பால ஊத்தி கொல்லுங்கடா ..  )

நா.நாட்டாமை : டேய் , தென்றா நீ இப்படி பண்ணிப்போட்ட..?

பசுபதி : (ஓ , பரவால்லையே இந்தாளுக்காவது , அது பொண்ணு இல்ல , கம்ப்யூட்டர் னு தெரிஞ்சிருக்கும் போல )

த.நாட்டாமை : ஏன்டா ..?

நா.நாட்டாமை : அந்த குரல் நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரியே தெரிஞ்சுது ,அவள போய் கொல்ல சொல்லிட்டியேடா..?

பசுபதி : (அதானே , இவனுக்கெங்க அது கம்ப்யூட்டர் னு தெரியப்போகுது )

Me : நாட்டாமை சார் , அது கம்ப்யூட்டர்ங்க..

நா.நாட்டாமை : நீ எவன்டா , அவள கம்ப்யூட்டர் னு சொல்லறதுக்கு ...

த.நாட்டாமை : அவன புடிச்சு கட்டுங்கடா..

Me : ( ஐயோ காப்பாத்துங்க , என்ன பிடிக்க வராங்க , இப்போதைக்கு தப்பிச்சுக்கறேங்க திரும்ப அடுத்த பகுதில நாட்டாமைய சந்திப்போம் )  

Friday, June 18, 2010

டிப்ஸ்

சும்மா டிப்ஸ் தரலாம்னு ..

*.கரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வராம இருக்க :
 கரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வரும்போது "குய்"னு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடி ஒழிஞ்சிக்குங்க. அது பயந்து ஓடிடும் ..!

*.பேலன்சே இல்லாம பேச :
நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்குறீங்களோ அவுங்க வீட்டுக்கு போய்டுங்க . இப்ப அவுங்க கூட எவ்ளோ நேரம் பேசினாலும் உங்க பேலன்சே குறையாது..!

*.கொசுவை சூதானமாக கொல்லுதல் :
தினமும் ஒரு கப் விஷம் சாப்பிடுங்க . உங்களை கடிக்கிற கொசு என்ன பாம்பு கூட செத்திடும்.

*.2 வீலர் லைசென்ஸ் வச்சு 4 வீலர் ட்டணுமா :
ஒரு கார் எடுத்துட்டு அதோட பின்னாடி வீல கழட்டிடுங்க . அதுக்கு பதிலா மாட்டு வண்டியோட 2 சக்கரத்த மாட்டிருங்க. இப்ப நீங்க 2 வீலர் லைசென்ச வச்சு 4 வீலர் ஓட்டலாம்  .  ஏன்னா மாட்டு வண்டி ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லைல..!

*.எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் வராம தடுத்தல் :
ஒரு ஏறும்ப கொலை செஞ்சு அந்த எறும்போட உடம்ப ஒரு கயித்துல கட்டி சர்க்கார டப்பாவுக்கு மேல தொங்க விட்டுருங்க. அதோட கால்ல " சர்க்கார டப்பாவுக்குள்ள வந்தா இப்படிதான் ஆகும்னு " ஒரு அட்டைல எழுதி தொங்க விட்டுருங்க. அத பாக்குற மற்ற எறும்புகள் பயந்திடும்..!

*. கலப்படப் பாலில் உள்ள தண்ணீரையும் பாலையும் தனியாக பிரித்தல் :
 கலப்பட பால்ல இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தி அந்த கலவைய மாதத்துக்கு வச்சிடுங்க . மாடு அதைய குடிச்சிட்டு சுத்தமான பால மட்டும் கொடுக்கும் ..!

*.கனவினை பதிவு செய்தல் :
உங்க பெட் ரூமுக்கு ஒரு வீடியோகிராபர கூட்டிட்டு போங்க. அப்புறம் நீங்க தூங்கிடுங்க. கனவு வந்தா உடனே எழுந்தரிச்சு ஸ்டார்ட் கேமரா அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்து தூங்கிடுங்க. உங்க கனவ அவர் பதிவு செஞ்சிடுவார்.!

*.புகை வராமல் சிகரட் குடித்தல் :
ஒரு பாகெட் சிகரட் வாங்கிக்கிங்க. அதைய அப்படியே ஒரு மிக்சில போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஜூஸ் மாதிரி பண்ணிடுங்க. இப்ப அதைய எடுத்து அப்படியே குடிசின்கன்னா புகை வராது ..!

(எனக்கு எதாவது டிப்ஸ் கொடுக்கணும்னு நினைச்சா பின்னூட்டத்துல கொடுங்க ..!)

Thursday, June 17, 2010

இந்தப் பழம் புளிக்கும்.!

மாலை 5 மணி ஆகியிருந்தது. ரவியும் ராஜாவும் கல்லூரியிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

"மச்சி , நீ பிரியாவ லவ் பண்ணறேன்ன, சொல்லிட்டியா" என்றான் ராஜா.

"இல்லடா, சரியான சந்தர்ப்பமே கிடைக்க மாட்டேங்குது.."

"டேய் , டேய் அங்க பார்ட , அவ தனியா வந்துட்டிருக்கா , இப்போ போய் சொல்டா.."

"ஆமாண்டா , இதுதான் சரியான சந்தர்ப்பம், இப்பவே சொல்றேன்.."


பிரியா கல்லூரியிலிருந்து தனியாக வந்துகொண்டிருந்தாள். ரவியும் அவள் பக்கமாக சென்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான்.

"பிரியா , இன்னிக்கு லீவா .?"

"எதுக்கு (லூசு மாதிடி கேக்குறான். காலேஜ் முடிஞ்சு இப்பதான் வெளியே வரோம்)..?"

"ஓ. சாரி., நான் வேற என்னமோ கேக்கலாம்னு வந்தேன்., மாத்தி கேட்டுட்டேன்.(ரவியின் கை கால்கள் உதறல் எடுத்தன )

"என்ன கேக்கலாம்னு வந்தீங்க "

ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"சும்மா அடி ஸ்கேல் , அழி ரப்பர் இருக்குமான்னு கேக்க வந்தேன் ."

பிரியா மேலும் கீழும் பார்த்தாள். ரவிக்கு மேலும் பயம் அதிகரித்தது.

"இந்தாங்க, நாளைக்கு கொடுங்க " என்று எடுத்துக்கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல்   சென்றுவிட்டாள்.


தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராஜா சொல்லிவிட்டான் போலும் என்று நினைத்த படி இவன் வருவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்ன மச்சி , சொல்லிட்டியா..?, கை காலெல்லாம் நடுங்குது , மிரட்டினாளா..?"

"மிரட்டிருந்தாலும் பரவால்லடா , எனக்கு அவ முகத்த பார்த்தாவே பயமா இருக்கு."

"அப்புறம் அவ்ளோ நேரம் என்னடா பேசுனீங்க, அவ என்னமோ உன்கிட்ட கொடுத்தமாதிரி இருந்தது..?"

"எனக்கு என்ன பேசுறதுனே தெரியல., அதான் அடி ஸ்கேல் , அழி ரப்பர் கேக்கவந்தேன் அப்படின்னு சமாளிச்சுட்டேன் ."

"த்து.. நீயெல்லாம் ..??"

"நான் என்னடா பண்ணுறது , அவள எப்படி இம்ப்ரெஸ் பண்ணுறதுனே தெரியலை .,"

"சரி நான் ஒண்ணு சொல்லறேன் , அவளுக்கு கவிதைனா ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன். பேசாம நாளைக்கு இந்த ஸ்கேல் குடுக்கும்போது அப்படியே ஒரு பேப்பர் ஒரு கவிதை எழுதி அந்த ஸ்கேல் ஓட சுத்தி கொடுத்திடு. அவ அந்த கவிதைய படிசுப்பார்த்து அவளுக்கு பிடிச்சிருந்தா ஒரு வேலை உன்னை பத்தி நல்ல எண்ணம் வர வாய்ப்பிருக்கு."

"தேங்க்ஸ் டா. ட்ரை பண்ணுறேன் "


 அன்று இரவு முழுவதும் ரவி தூங்கவே இல்லை . கண்முழித்து கவிதை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான். என்னதான் முயற்சித்தாலும் கவிதை வருவதாக தெரியவில்லை .இறுதியாக ஒரு வாரப்பத்திரிக்கையில் ஒரு கவிதை ஒன்று அவனை கவர்ந்தது. சரி இந்த கவிதைய ஆட்டயப் போட்டுட்டு போய் நம்ம கவிதைன்னு சொல்லிடலாம் என்று நினைத்து அதனை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதினான். அந்த காகிதத்தை ப்ரியாவின் ஸ்கேல் மீது சுற்றி எடுத்துக்கொண்டான். அவன் மனதுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு. சந்தோசமும் பயமும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.
இந்த கவிதை நம்ம கவிதை இல்லன்னு கண்டுபிடிச்சிடுவாளோ..? என்று ஒரு புறமும் அவ எங்க இந்த கவிதைய படிச்சிருக்க போறா.. படிச்சிருக்க மாட்டா என்று மற்றொரு புறமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

பிரியா வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லை . இதுதான் சரியான சமயம் என்று ரவி ப்ரியாவை நோக்கி நடந்தான்.

"என்னங்க , ஸ்கேல்க்கு கவர் போட்டிருக்கீங்க."

"ஓ. சாரி பிரியா, ஒரு கவிதை எழுதினேன் , மறந்தாப்பல அப்படியே மடிச்சு
கொடுத்திட்டேன்" என்று பிடுங்குவது போல பிடுங்கிக்கொண்டான்.

"நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா .. குடுங்க படிச்சிட்டு தரேன்"

"வேண்டாம் ப்ரியா., இது நல்ல இருக்காது பஸ்ல வரும்போது கிறுக்கியது.!"

"பரவால்ல குடுங்க." என்றாள்.

ராஜாவும் இதை எதிர்பார்த்துதானே வந்தான். அதனால் " சரி படிச்சுப் பார்."
அதனை படித்து கொண்டிருந்த ப்ரியாவின் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது.
முக மாற்றத்தை கண்ட ராஜாவை மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது. இது வரைக்கும் நல்லாத்தானே போச்சு என்ற வடிவேலு வசனம் நியாபகத்திற்கு வந்தது .

"இது நீங்க எழுதினதா." என்றாள் கோபமாக.

"(உண்மை தெரிஞ்சு போச்சா).. ஆ, ஆ , ஆமாம் ப்ரியா நானேதான் எழுதினேன். அதான் சொன்னேன்ல நல்லா இருக்காதுன்னு." சமாளித்தான்.

"இது நான் எழுதின கவிதை , போனவாரம் வார மலர்ல வந்திருந்தது. எதுக்கு போய் சொன்னீங்க."

"அது வந்து சாரி ப்ரியா , சும்மா தான் ..??.." இழுத்தான்..

"என்ன லவ் பண்ணுறீங்களா ..?"

"(ஆஹா . அவளே கேட்டுட்டா இனிமேல் தலையே போனாலும் பரவால்ல.). ஆமாம் ப்ரியா . நான் உன்ன மொதல்ல பார்த்தப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆனா
உன்ன பார்க்கும் போதெல்லாம் பயமா இருந்ததால என்னால சொல்ல முடியல"

"அப்படின்னா ஒரு 2 கேள்வி இருக்கு அதுக்கு சரியா பதில் சொல்லிட்டிங்கன்னா நான் லவ் பண்ணுரதப் பத்தி யோசிக்கலாம்."

"(விட்ட இண்டர்வியூவ் வச்சிடுவா போலிருக்கு) சரி ப்ரியா, கேள் .! "

"இப்ப திடீர்னு எனக்கு காய்ச்சல் வந்திடுது . நீங்க என்ன பண்ணுவீங்க ..?"

"(அப்பிடியே டச் பண்ணற மாதிரி பதில் சொல்லணும் என்ன சொல்லலாம் ..? ) நானும் வெங்காயத்த எடுத்து என்னோட அக்குள்ல வச்சு எனக்கும் காய்ச்சல் வார மாதிரி செஞ்சிப்பேன்."

"ஓ , அப்படின்னா எனக்கு கால் ஒடஞ்சு போச்சுன்னா நீங்களும் கால ஓடசுக்குவீங்க அப்படித்தானே.?"

"(ஆள போட்டு தள்ளிடுவா போலேயே) உனக்கு அப்படியெல்லாம் ஆகாது ப்ரியா." வழிந்தான்.

"கேள்விக்கு பதில் , கால ஓடசுக்குவீங்களா மாட்டிங்களா ..?"

"(ஐயோ இவளே ஓடச்சுடுவா போலிருக்கு ) கண்டிப்பா ஒடச்சுக்குவேன்..!"

"அப்ப என்ன யாரு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவாங்க..? அறிவே கிடையாதா..?"

"இல்ல அதுவந்து .. வந்து .."

"சரி அடுத்த கேள்வி கேக்குறேன் .. நான் நடந்து போயிட்டிருக்கேன் , அப்ப அந்த வழில
ஒரு முள் கிடக்குது , நான் அத பாக்காம நடந்து போறேன் , நீங்க என்ன பண்ணுவீங்க ..?"

"(இந்த தடவ அறிவுப்பூர்வமா பதில் சொல்லணும்). நீ நடந்து போறது எனக்கு தெரியாதுல"

"என்ன கிண்டலா , நாம ரண்டு பேரும் தான் போயிட்டிருக்கோம்."

"அப்படினா நீ கால் வைக்கும் போது என்னோட கைய்ய அந்த முள் மேல வச்சு உன்ன காப்பாத்திடுவேன்.(இந்தத் தடவ மாட்டுவா)"

"ஏன் எனக்கு அறிவில்லையா , ஏழு கழுத வயசாச்சுல எனக்கு பாத்து போக தெரியாதா ..? நீங்க எத்தன நாள் என்கூட வருவீங்க .?"

"இப்பிடி கேட்டா நான் எப்டி பதில் சொல்ல முடியும் ..?"

"பதில் சொல்ல முடியாதுல அப்ப மறந்துடுங்க. அதவிட நீங்க இன்னும் பாரதி ராஜா காலத்துலேயே இருக்காதீங்க , சசிகுமார் காலத்துக்கு வாங்க " என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் .


அவள் செல்வதற்கும் ரவி வருவதற்கும் சரியாக இருந்தது .

"மச்சி பிரியா கிட்ட என்னமோ பேசிட்டிருந்த சொல்லிட்டியா..? என்ன சொன்னா..?"
ராஜா நடந்தவற்றை விளக்கினான்.இவர்கள் பேசிகொண்டிருந்த போது சேகர் வந்து சேர்ந்தான்.

"யாரு அந்த B .Com செகண்ட் இயர் ப்ரியாவா...? என்றான் சேகர்
"ஆமாண்டா ."

"2 கேள்வி கேட்டிருப்பாளே,..?"

"ஆமா உனக்கு எப்பிடி தெரியும் ...?"

"அதான் நான் உனக்கு முன்னாடியே ஏமாந்துட்டேன்ல .."

"ஆமா நீ அந்த ரண்டு கேள்விக்கு என்ன பதில் சொன்ன...?

"முதல் கேள்விக்கு என்ன பதில் சொன்னேன்னு நியாபகம் இல்ல , ஆனா ரெண்டாவது கேள்விக்கு " முள்ள பார்த்தாலும் சொல்ல மாட்டேன் , ஏன்னா நான் எல்லா நேரத்திலும் உன்கூட வர முடியாதுல , உன் பாதைய நீதான் பார்த்து போகணும்." அப்படின்னு சொன்னேன் மாப்ள .."

" இததானே அவளும் எதிர்பார்க்கிறா , சூப்பர் னு சொன்னாளா ..?"

"க்கும்.. மண்ணாங்கட்டி, அவ என்ன சொன்ன தெரியுமா ..? " அப்படின்னா எதிர்ல கார் வந்தா கூட கண்டுக்க மாட்டிங்க , போனா போகட்டும்னு விட்டுருவீங்க .. அப்புறம் நீங்க என்கூட வந்து என்ன பயன். போங்க நீங்க இன்னும் வளரணும்." அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டா.."

"டேய் , என்னடா லூசா இருப்பா போல.. என்கிட்டே அப்படி சொன்னா, உன்கிட்ட இப்டி சொல்லிருக்கா.."

"சரி விடு மச்சி , இந்த பழம் புளிக்கும்னு விட்டறலாம்.." என்று பேசியவாறே மூவரும் வகுப்பறைக்குள் சென்று கொண்டிருந்தனர்.

Tuesday, June 15, 2010

பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

(இந்தப் பதிவில் இருக்கும் அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கோமாளிக்கு இல்லை.யாரும் தவறாக நினைக்க வேண்டாம் )


*."நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி :
அப்படினா யாரவது ஒரு தடவ சொன்ன மாதிரி வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..??

*.ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் :
ஏன் அதுக்கு அப்புறம் காது செவுடு ஆய்டுமா ...??

*.என் வழி தனி வழி :
ஒன் வே ரோடு மாதிரியா ...??

*.தொட மாட்டேன் ; தொட்ட விட மாட்டேன் ;
அதான் மொதல்லையே தொட மாட்டேன் சொல்லிடிங்கள்ள, அப்புறம் எதுக்கு தொட்ட விட மாட்டேன்னு சொல்லறீங்க..?

*.மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :
அப்படின்னா மன்னிப்பு அப்படின்னு இங்கிலீஷ்ல சொன்ன உங்களுக்கு பிடிக்குமா ..??

*.நீங்க நல்லவரா கெட்டவரா..?
பஞ்ச் டயலாக்னா நீங்க தான் பதில் சொல்லணும்; எங்க கிட்ட கேக்க கூடாது;

*.வரும் ஆனா வராது ;
இதெல்லாம் பஞ்ச் டயலாக்னு யார் சொன்னது ..?

*.ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;
சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..?

*.கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;
ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..??

*.நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;
உங்களை யார் இப்ப வரச்சொன்னாங்க ..

*.சும்மா அதிருதுள்ள;
மொபைல் வைபரேட் அலெர்ட் வச்ச அதிராம மயிரா பண்ணும் .!

(உங்களுக்கு பிடித்த பஞ்ச் களையும் பின்னூட்டத்தில் பஞ்சராக்குங்கள்..!!)

Monday, June 14, 2010

Twitter Updates உங்கள் மொபைலில் இலவசமாக :

இந்த செய்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாத ஒருவர் இதனை வாசித்தால் பயனுள்ளதாக இருக்கலாம் என்கிற வகையில் இந்தப்பதிவினை எழுதுகிறேன். ஏனெனில் அனைவரும் அனைத்து நேரங்களிலும் Online ல் இருக்க முடியாதல்லவா.. அந்த சமயங்களில் தங்களின் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்கள் அல்லது பிரபலமானவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிய இந்தப் பதிவு உதவலாம் என்ற நம்பிக்கையில் ..

*.முதலில் உங்கள் Twitter ல் Settings போய்க்கோங்க..

*.Settings ல Mobile போய்க்கோங்க..

*.அங்க உங்க மொபைல் நம்பர் கேக்கும்.

*.உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு அங்க இருக்குற கமெண்ட்ஸ் follow பண்ணி Twitter Updates உங்க மொபைல் activate பண்ணிக்குங்க..

*.அப்புறம் நீங்க யாரையெல்லாம் Follow பண்ணுறீங்களோ அல்லது யாரோட Updates மட்டும் உங்க மொபைல் இக்கு வந்தா போதும்னு நினைக்கிறீங்களோ அவுங்க மேல உங்க cursor வச்சு ஒரு Click பண்ணுங்க. இப்ப அவுங்க போட்டோ இல்லனா twitter Logo தெரியும். அங்க கீழ பார்த்திங்கன்னா பச்சை கலர்ல ஒரு டிக் அடிச்சு Following அப்படின்னு இருக்கும். அதுக்கு பக்கத்துல ஒரு Round போட்டு அதுக்குள்ளே மொபைல் மாதிரி போட்டிருப்பாங்க.. அத கிளிக் பன்னுநிங்கன்ன Updates are sent by sms to your mobile phone அப்படின்னு வரும்.இப்பலேர்ந்து நீங்க கிளிக் பண்ணுன நபர் எப்ப tweet பண்ணினாலும் உங்க மொபைல்க்கு 53000 அப்படிங்கிற நம்பர்ல இருந்து வந்திடும். இந்த மாதிரி நீங்க எதனை பேரோட tweet களையும் Activate பண்ணிக்கலாம். இது முற்றிலும் இலவசம்..!!

*.அவ்வளவு தாங்க. இனிமேல் உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்களின் Tweetகள் உங்கள் மொபைல்லையே தெரிஞ்சிக்கலாம்.

(பின்குறிப்பு : இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்து நான் உங்க நேரத்த வீணடிச்சிருந்தா மன்னிச்சிருங்க. பிடிச்சிருந்தா பின்னூட்டத்துல தெரியப்படுத்துங்க).

Saturday, June 12, 2010

நாட்டாமையும் 'தமிழ்ப்படம்' நாட்டாமையும்:-) (பகுதி 1)

('நாட்டாமை' பட நாட்டாமை மற்றும் 'தமிழ்ப்படம்' பட நாட்டாமை ஆகியோருக்கு இடையில் நடந்த விவாதங்களை இங்கே காணலாம்.)

'தமிழ்ப்படம்' நாட்டாமை : "..அதனால அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நியாயம் நியாயம்தாண்டா..இவங்க செஞ்ச தப்புக்கு இவங்களை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுபோடுங்கடா. இதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு. பசுபதி அடிச்சோட்றா "

பசுபதி : ஐயா , நீங்க இன்னும் வண்டில ஏறவே இல்லீங்க.!(இவன் அந்த படத்துலையே     லூசு ஆயிட்டான், இவனெல்லாம் எதுக்குப்பா பஞ்சாயத்துக்கு கூப்பிடறீங்க !.)

'நாட்டாமை' பட நாட்டாமை : நிறுத்துடா , தென்றா  சண்முகம் இப்படி தீர்ப்பு சொல்லற.?? கள்ளிபால ஊத்திக்கொல்ற அளவுக்கு அப்படி என்னடா தப்பு பண்ணுனாங்க..?

பசுபதி : ஐயா ஊருக்குள்ள பொய் சொல்லிட்டு திரியுறாங்க .. அதான் அவரு அப்படி தீர்ப்பு  சொல்லிட்டாருங்க.

நா.நாட்டாமை : அப்படி என்னடா பொய் சொல்லிட்டாங்க ..?


பசுபதி : ஐயா இந்த ஆளோட பையன் வெளிநாட்டுல இருக்கானுங்க. அவுங்க அப்பா கிட்ட கேட்டா அவன் "பாரின்" ல இருக்கான் அப்படிங்கிறார், அவுங்க அம்மாவை கேட்டா அவன் "UK" ல  இருக்கான்  அப்படிங்கிறாங்க , அவன் தம்பிய கேட்டா "லண்டன் " ல இருக்கார் அப்படிங்கிறான். அது எப்படின்கையா ஒரே ஆள் 3 எடத்துல இருக்க முடியும்..?
இதான்கையா பஞ்சாயத்து.!

நா.நாட்டாமை : தெதுக்குடா அப்படி பொய் சொன்ன..? தென்றா சம்முவம்  இதுக்கு போய் கள்ளிப்பால வச்சு கொல்லச் சொல்லறதெல்லாம் நாயமான தீர்ப்பு கெடையாது..

த.நாட்டாமை : அத நீ சொல்லாத , இது நல்ல தீர்ப்பா கெட்ட தீர்ப்பானு  வேணா உனக்கு தெரியாம இருக்கலாம் .. ஆனா இங்க நான் தாண்டா நாட்டாமை. நான் சொல்லறதுதான் தீர்ப்பு .

நா.நாட்டாமை : தென்றா சும்முகம் ,அப்பன் பேச்சவே கேக்க மாட்டன்கிற ..(:

பசுபதி : ஐயா இது நாம சண்முகம் ஐயா இல்லீங்க, வேற யாரோ மாதிரி தெரியுதுங்க..

நா.நாட்டாமை : தென்றா சொல்லற .? நீ நாட்டாம படம் பார்த்தியா இல்லியா , அதுல ஆனந்தராஜ் என்னை சுட்டதும் நம்பட பையன் சம்முகதுக்குதான நாட்டாமை பதவி வரும். தென்றா லூசாட்டமா பேசற..

பசுபதி : அது அப்படி தானுங்க ஐயா , ஆனா நல்ல பாருங்க இது நம்ம சம்முகம் ஐயா இல்லீங்க.

நா.நாட்டாமை : தென்றா கண்ணு இவன் சொல்றது நெசமா..? நீ சம்முகம் இல்லையா..?

த.நாட்டாமை : நீதிடா, நேரமடா, நியாம்டா..

நா.நாட்டாமை : அதைய அப்புறம் பார்த்துக்கலாம் கண்ணு , நீ சம்முகம் இல்லையா..?

த.நாட்டாமை : உன்னைய ஊற விட்டு தள்ளி வக்கிறண்டா.. பசுபதி அடிச்சோட்ரா..!!

நா.நாட்டாமை : தென்றா பசுபதி , இவன் நம்ம சம்முகம் மாதிரி தெரியிலையே.. நம்ம சம்முகம் எங்கடா..

பசுபதி : ஐயா அது வந்துங்க , வந்து ..

நா.நாட்டாமை : என்னடா ஆச்சு , சொல்றா ..?

பசுபதி : ஐயா நான் நாட்டாமை படம் முழுசா பாக்கலைங்க. அதான் எனக்கு தெரிலைங்க.


நா.நாட்டாமை : நீ யார்டா, நம்பட பையன் சம்முகம் எங்கடா ..?

த.நாட்டாமை : அதென்னடா, நீயும் உம்பட பையனும் மட்டும் தான் நாட்டாமைய இருக்கணும்னு யார்டா எழுதி வச்சது.? அதான் 1000 கோடி செலவு பண்ணி நான் நாட்டமையா ஆயிட்டேன்.

பசுபதி : (அட பாவி , என்ன புழுகு புழுகுறான் )

நா.நாட்டாமை : செல்லாது செல்லாது , Court ல கேஸ் போடுவேன்.


த.நாட்டாமை : டேய் , டேய் அப்படி ஏதும் செஞ்சிடாதடா.. உன்பைய்யன் Hero .எப்படியும் பொழச்சுக்குவான். என்ன கொஞ்சம் நினைசுப்பார்டா. எத்தன படத்துல வில்லன இருந்து உம்பய்யன் கிட்ட அடி வாங்கிருப்பேன். என்னால முடியலடா ..

me : சார் , சார் ப்ளீஸ் சொந்த விசயங்கள பேசவேண்டாம் ..

நா.நாட்டாமை : யார்ரா நீ ..?

me : நாட்டாமை , நான் செல்வக்குமார் , இந்த Blog ஓட ரைட்டர்.

த.நாட்டாமை : ரைட்டரா இருந்தாலும் , டைரக்டரா இருந்தாலும் நியாயம் நியாயந்தாண்டா ..

Me :இப்போதைக்கு இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிக்கிறேன் .. ஆனா தொடரும் .. 

Thursday, June 10, 2010

கொலை செய்தால் ஒரு ரூபாய் அபராதம் அல்லது 40 நிமிடம் சிறை :

வழக்கம் போல ஜூன் 8 அன்று காலையில் ரேடியோ மிர்ச்சி ல " Hello கோயம்புத்தூர் with பாலாஜி"  கேட்டுட்டிருந்தேன் . அன்னிக்கு அவர் எடுத்திக்கிட்ட தலைப்பு மற்றும் அவரோட ஆவேசம் என்ன ரொம்பவே பாதிச்சது. அவர் "போபால் விசவாயு " பற்றின தகவல்களைத்தான் பேசினார் . நாம 7 அல்லது 8 ஆம் வகுப்பில் வரலாற்றுப்பாடத்தில்  படித்த ஒரு விசயத்துல இவ்ளோ இருக்கா அப்படின்னு அதுக்கு அப்புறம் தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த நிகழ்வு நான்  பிறப்பதற்கு  முன்னால்  நடந்த ஒரு கொடூரம். அத பத்தி நான் கேட்ட விசயங்கள் , நாழிதள்களில் மற்றும் இணையத்தளத்தில் நான் சேகரித்த விசயங்கள் தான் இந்த பதிவிற்கு காரணம்.!

போபால் மத்திய பிரதேசத்தின் தலைநகர் . அங்கு "UNION CARBIDE CORPORATION (UCC)" என்ற அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளை "UNION CARBIDE INDIA LTD(UCIL) பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து வந்தது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 -3 ஆம் தேதி நள்ளிரவு அந்த தொழிற்சாலையிலிருந்து " Methyl IsoCyanate (MIC)"  என்ற  நச்சு வாயு வெளியேறியது . இந்த வாயுவை சுவாசித்த சுமார் 25,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 80,000  அதிகமானோர் பார்வை இழப்பு , உடல் உறுப்புகள் செயலிழப்பு என்று கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.அவர்களின் துயரங்கள் இன்றளவும் குறைந்தபாடில்லை.. அங்கு பிறக்கும் குழந்தைகள் பார்வை இல்லாமலோ , கை கால்கள் இல்லாமலோ , உடல் ஊனத்துடனோ பிறக்கின்றன.

இத்தனை கொடுமைகளுக்கு காரணமான அந்த தொழிற்சாலையின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 7, 2010 அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது .இந்த தீர்ப்பு மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைவர் " Warren Anderson " என்ற அமெரிக்கர் தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மீதமுள்ள 8 அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை நடை பெற்று அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ரூபாய் 25,000 செலுத்தி ஜாமீனில் வெளிவரலாம் என வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்த துளிகள் :

* .1984,December 3 : விசவாயு வெளியேறி 20,000 பேர் உயிரிழப்பு .80,000 பேர் கண்கள் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு.

*.1984,December 4 : UNION CARBIDE நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் தலைவர் " Warren Anderson " கைது செய்யப்பட்டு மத்தியப்பிரதேச போலீசாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

*.1984,December 6 : வழக்கு CBI க்கு மாற்றப்பட்டது.

*.1985 : அமெரிக்க நீதி மன்றத்தில் அப்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் 3.3 பில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கேட்டு இந்தியா வழக்கு தொடர்ந்தது.

*.1989 : நீதிமன்றத்திற்கு வெளியே மத்திய அரசுக்கும் UNION CARBIDE நிறுவனத்திற்கும் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து UNION CARBIDE நிறுவனம் 470 மில்லியன் டாலரை நஷ்ட ஈடாக வழங்கியது . அப்போதைய மதிப்பு 715 கோடி ரூபாய்.

*.1992 : UNION CARBIDE நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் " Warren Anderson " தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

*.2004 : UNION CARBIDE நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் மீதி தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

*.2010 ,ஜூன் 7 : குற்றம் சாட்டப்பட்ட 8 அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

*.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 62,000 ரூபாயும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.


எவ்வளவு பெரிய கொடுமை :

அந்த ஆலையில் நடந்த இந்த மாபெரும் கொடூரம் ஒரே நாளில் நடைபெறவில்லை என்றே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

*.பாதுகாப்பு சாதனங்கள் பணத்தை மிச்சப்படுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

*.சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாததால் அந்த ஆலை 1980 ஆம் ஆண்டு துவக்கத்தில் நிறுத்தப்பட்டது.

*.அநேக பாதுகாப்பு கருவிகள் சரியாக  பராமரிக்கப்படாததால் செயலிழந்துள்ளன.

*.ஆபத்தான வேதிப்பொருட்களை முறையான Tank களில் தேக்கிவைக்கவில்லை.

*.1981 ஆம் ஆண்டு தொழிலாளி ஒருவர் ஆலையின் உள்ளே நச்சு புகை தாக்கி இறந்துள்ளார் .

*.1982 ஆம் ஆடு அநேக தொழிலாளிகள் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

 *.UNION CARBIDE நிறுவனம் 1979 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த கொடூர சம்பவம் பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இந்த துயர சம்பவத்திற்க்கான தீர்ப்பு மிக மிக தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் இந்திய சட்டம் என்ன செய்துள்ளது என்பது குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்..

(நன்றி Radio Mirchi பாலாஜி அண்ணா , தினகரன் மற்றும் Wikipedia)

Saturday, June 5, 2010

பெட்டிக்கடை எங்கே ..??

ஞாயிறு. காலை மணி 10. குமாரின் Cell Phone Mani Calling .. என்றது.!
"சொல்றா மாப்ள .!"
"மச்சி இன்னிக்கு எங்க வீட்டுக்கு வரன்னு சொன்னல.? "
"ம்ம்ம். சரி எப்டி வரதுன்னு சொல்லு .."

"5 நம்பர் Bus ஏறிக்க., ஊத்துப்பாளையம் Ticket வாங்கிக்க., Bus Stop ல இறங்கினதும்  எனக்கு Call பண்ணு . நான் வந்து Pick Up பண்ணிக்கிறேன் ."
"சரி மாப்ள ".

"மாப்ள நான் உங்க ஊர் Bus Stop ல நிக்கிறேண்டா.!"
"சரி மச்சி , அங்கயே நில்லு ,10 நிமிசத்துல வந்திடறேன் ."
"சரி வா , மாப்ள ."

பத்து நிமிஷம் ஆகும்கிறான், எங்கயாவது பெட்டிக்கடை இருக்குதான்னு பார்த்தா ஒரு தம் போட்டிறலாம். அங்க ஒருத்தர் வர்றார் , அவரு கிட்ட கேட்டுப்பார்க்கலாம்.

(வருகிறவர் பெயர் முத்து., சரியான மொக்கை பேர்வழி , இதுவரைக்கும் யாருக்கும் ஒழுங்கான தகவல் தந்ததே கிடையாது ).

"அண்ணே இங்க பக்கத்துல பெட்டிக்கடை எங்கயாவது இருக்குமா ..?"
"(இன்னிக்கு இவன் மாட்டினான் ). இங்க எங்கிங்க அந்த மாதிரி கடையெல்லாம் இருக்கு ,
அப்படியே வச்சாலும் யாரு பெட்டி வாங்கப்போறாங்க, எல்லாம் மஞ்சப்பையிலையே கொண்டுபோய்டுவாங்க."
"நான் அந்தப்பெட்டிக்கடைய கேக்களைங்க, இந்த தீப்பெட்டி ,பீ ..(முடிப்பதற்குள்)"
"ஓ, நீங்க தீப்பெட்டி தயாரிக்கிற கடைய கேக்குறீங்களா , அதெல்லாம் சிவகாசி ல தான தயாரிப்பாங்க..??"
"இல்லிங்க , நான் Cigarette ..(மீண்டும் முடிப்பதற்குள் ..)
"இந்தப் பொட்டியவா கேட்டிங்க.."(கீழே கிடந்த ஒரு காலி Cigarette பெட்டியை எடுத்துக் காட்டுகிறார்)"
"ஆமாங்க , இந்தப் பெட்டி தான் .. இந்த பெட்டிய எங்க வாங்கலாம்..?"
"இந்தப்பெட்டிய எதுக்கு வாங்குறிங்க , அதான் நான் வச்சிருக்கேனே.!"
"இல்லீங்க இதே மாதிரி பெட்டிய எந்த கடைல வாங்கலாம்னு கேட்டேன்.(சாகடிக்கிறானே!)".
"அத இந்தப்பெட்டிய கீழே போட்டவங்ககிட்ட தானே கேக்கணும் .!"
"சரிங்க , நான் கேட்டுக்கிறேன் ,(ஆள விட்டா போதும் , சரியான லூச இருப்பன் போல )
"அப்ப நான் கிளம்பட்டும்களா..(என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பி விட்டார் )"..

தப்பிச்சேன்டா சாமி என்று தனக்குள் கூறிக்கொண்டு நின்றிருந்த குமாரின் கண்களில்

தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அங்க ஒருத்தர் வர்றார் , அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்.( அவர் பெயர் அன்வர் , அனைவருக்கும் அறிவுரை சொல்பவர் . ஊருக்குள் Advise அன்வர் என்று அழைப்பர் )
இவரு கிட்ட கேக்கலாமா ..? யோசித்தான் குமார் . பார்க்க பெரியமனுசனாட்டம் இருக்கிறார் . கண்டிப்பா சொல்லிடுவார்.
"ஐயா ,இங்க பக்கத்துல பொட்டிக்கடை ஏதாவது இருக்குதுங்களா ..?
"பொட்டிக்கடையா எதுக்கு ..?
"ஒரு Cigarette வாங்கலாம்னு கேட்டேனுங்க ..!
"உனக்கு என்ன வயசாச்சு தம்பி ..?
"22 ங்க..
"பாத்தா படிச்சா பையனாட்டம் தெரியுற , Cigarette பிடிக்கறது தப்புன்னு தெரியாத..? Cigarette பிடிக்கறதனால புற்றுநோய் வரும்னு படிசிருக்கில., உலகத்திலேயே அதிக மரணத்த உண்டாக்குற காரணிகள்ள  புகையிலை 2 வது இடத்துல இருக்கு . உன்ன மாதிரி பசங்க இருந்த எப்படிப்பா இந்தியா 2020 ல வல்லரசாகும் .? அப்படி அந்த கருமத்தில என்னதான் இருக்கு ..?.. etc .. (etc = உங்களுக்கு ஏதேனும் இதுபோன்ற அனுபவம் இருந்தா நினைவுபடுதிக்குங்க .!) சிறிது நேர அறிவுரைக்குப் பின்பு அவர் சென்றுவிட்டார் .
"குமார் எதுவும் பேசாமல் நின்றிருந்தான் , (மனதுக்குள் இவன்கிட்ட ஏன்டா கேட்ட ..??
எல்லோருமே இப்படியா , இல்ல எனக்கு மட்டும் இப்படி நடக்குதா..??)

அங்க ஒருத்தன் வர்றான் . அவன்கிட்ட கேட்டுப்பார்ப்போம் , அவன் என்ன சொல்லப்போரானோ..?? 
.(வருகிறவர் பெயர் பழனி , கணக்கில் புலி).

"அண்ணே இங்க எதாவது பெட்டிக்கடை இருக்குதுங்களா.?
"என்ன வாங்கப்போரிங்க.?
"சும்மா ஒரு Cigarette வாங்கலாம்னு .,
"ஒரு Cigarette என்ன விலைங்க ..?
"3.50 .
"ஒரு நாளைக்கு எத்தனை Cigarette குடிப்பிங்க ..?
"4,கடை எங்கினு சொன்னிங்கன்னா ..?
" அட இருங்க , அப்ப இரு நாளைக்கு 4 Cigarette னா மொத்தம் 14 ரூபாய் ஆகுது,
உங்களை மாதிரி 50 பேர் வந்தாங்கன்னா 700 ரூபாய் கிடைக்கும் . இதுல ஒரு 200 ரூபாய் லாபம் கிடைக்காதா ..?
"கிடைக்கும்க, எனக்கு பெட்டிக்கடை எங்கினு சொல்லுறிங்களா ..?
"அட நாளைக்கே நான் ஒரு பெட்டிக்கடை வைக்கிறேன் தம்பி , அப்ப வந்து வாங்கிக்கிங்க .(என்று சொல்லிவிட்டு காற்றில் கணக்கு போட்டுக்கொண்டே சென்று விட்டார் ).
எல்லா பயலுகளும் சரியான  லூசுகளா இருக்கும் போல , ஒரு பொட்டிக்கடைக்கு வழி சொல்ல மாட்டேங்கிறாங்க .!(நொந்துவிட்டான் குமார்).

இனிமே எவன்கிட்டயும் வழி கேக்கப்போவதில்லை என்று நின்றுகொண்டிருந்த குமார் கட்டதுரையின் கண்களில் விழுந்துவிட்டான் . (கட்டதுரை இவர் பேருக்கேற்ற தோற்றம் கொண்டவர் , மேலும் தங்கள் ஊர் எல்லையில் புதிதாக யாரைக்கண்டாலும் அவர்களைப்பற்றிய ஜாதகம் வரை விசாரித்து விடுவார். இதனால் அவரை அனைவரும் ஊர்க்காவலர் என்றே அழைப்பர்).

"ஆரு தம்பி , புதுசாத் தெரியுது ..?
"நான் குமாருங்க , பொட்டிக்கடயப் பார்க்க, இல்ல Friend அ பர்க்கவந்தனுங்க .
"எந்த ஊரு தம்பி ..?
"பொட்டியூருங், இல்ல நம்பியூருங்.!
"College போய் பொட்டி தட்டறனுங், இல்லீங்  படிக்கறனுங்.!
"இங்க ஆரூட்டுக்கு வந்த ..?
"இங்க பொட்டிக்கடை வெச்சிருக்கிராருங்கள்ள , இல்ல மணின்னு ஒரு பையன் , அவுங்கப்பா கூட பொட்டி விக்கறாருன்கள்ள., ஐயோ  இல்ல Rice Mill வச்சிருக்காருங்க ..
(ஏன் எனக்கு பொட்டி பொட்டி னு வாய்ல வருது , Control Control இனிமேல் தமிழ்நாட்டுல இல்ல உலகத்துல எந்தப் பொட்டிக்கடைக்கும் போறதில்லை ).
"அப்பிடியா .. அப்புறம்  ..?
அவர் அடுத்த கேள்விக்குப் போவதற்குள் மணி வந்து சேர்ந்தான். மணியைப் பார்த்த அந்த முதியவர் .,
"என்ன பேராண்டி இன்னிக்கு லீவா ..? என்றார் .
"ஆமா தாத்தா." இந்தப் பையன் என்னோட Friend , வீட்டுக்குக் கூட்டிட்டுப்போலாம்னு வந்தேன் . சரி போறோம் தாத்தா. விடை பெற்றனர் மணியும் குமாரும் .

போகும் வழியில் மணி கேட்டான் " என்ன மச்சி ஒரு மாதிரி இருக்க ..?
"இல்லையே , நல்லா தான் இருக்கேன் ,
"எங்க நல்லா இருக்க , சரி அந்தப்பக்கமா ஒரு பொட்டிக்கடை இருக்கு போய் ஒரு தம் அடிச்சுட்டுப் போலாமா ..?
"வேண்டாம் மாப்ள , நான் தம் அடிக்கிறதில்லை , அத விட எனக்கு பொட்டிக்கடைனாலே அலறுது ..! வீட்டுக்கே போலாம் ..!!!

(பின்குறிப்பு : இப்படியும் சிகரெட்டை நிறுத்தலாம் )