Saturday, June 12, 2010

நாட்டாமையும் 'தமிழ்ப்படம்' நாட்டாமையும்:-) (பகுதி 1)

('நாட்டாமை' பட நாட்டாமை மற்றும் 'தமிழ்ப்படம்' பட நாட்டாமை ஆகியோருக்கு இடையில் நடந்த விவாதங்களை இங்கே காணலாம்.)

'தமிழ்ப்படம்' நாட்டாமை : "..அதனால அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நியாயம் நியாயம்தாண்டா..இவங்க செஞ்ச தப்புக்கு இவங்களை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுபோடுங்கடா. இதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு. பசுபதி அடிச்சோட்றா "

பசுபதி : ஐயா , நீங்க இன்னும் வண்டில ஏறவே இல்லீங்க.!(இவன் அந்த படத்துலையே     லூசு ஆயிட்டான், இவனெல்லாம் எதுக்குப்பா பஞ்சாயத்துக்கு கூப்பிடறீங்க !.)

'நாட்டாமை' பட நாட்டாமை : நிறுத்துடா , தென்றா  சண்முகம் இப்படி தீர்ப்பு சொல்லற.?? கள்ளிபால ஊத்திக்கொல்ற அளவுக்கு அப்படி என்னடா தப்பு பண்ணுனாங்க..?

பசுபதி : ஐயா ஊருக்குள்ள பொய் சொல்லிட்டு திரியுறாங்க .. அதான் அவரு அப்படி தீர்ப்பு  சொல்லிட்டாருங்க.

நா.நாட்டாமை : அப்படி என்னடா பொய் சொல்லிட்டாங்க ..?


பசுபதி : ஐயா இந்த ஆளோட பையன் வெளிநாட்டுல இருக்கானுங்க. அவுங்க அப்பா கிட்ட கேட்டா அவன் "பாரின்" ல இருக்கான் அப்படிங்கிறார், அவுங்க அம்மாவை கேட்டா அவன் "UK" ல  இருக்கான்  அப்படிங்கிறாங்க , அவன் தம்பிய கேட்டா "லண்டன் " ல இருக்கார் அப்படிங்கிறான். அது எப்படின்கையா ஒரே ஆள் 3 எடத்துல இருக்க முடியும்..?
இதான்கையா பஞ்சாயத்து.!

நா.நாட்டாமை : தெதுக்குடா அப்படி பொய் சொன்ன..? தென்றா சம்முவம்  இதுக்கு போய் கள்ளிப்பால வச்சு கொல்லச் சொல்லறதெல்லாம் நாயமான தீர்ப்பு கெடையாது..

த.நாட்டாமை : அத நீ சொல்லாத , இது நல்ல தீர்ப்பா கெட்ட தீர்ப்பானு  வேணா உனக்கு தெரியாம இருக்கலாம் .. ஆனா இங்க நான் தாண்டா நாட்டாமை. நான் சொல்லறதுதான் தீர்ப்பு .

நா.நாட்டாமை : தென்றா சும்முகம் ,அப்பன் பேச்சவே கேக்க மாட்டன்கிற ..(:

பசுபதி : ஐயா இது நாம சண்முகம் ஐயா இல்லீங்க, வேற யாரோ மாதிரி தெரியுதுங்க..

நா.நாட்டாமை : தென்றா சொல்லற .? நீ நாட்டாம படம் பார்த்தியா இல்லியா , அதுல ஆனந்தராஜ் என்னை சுட்டதும் நம்பட பையன் சம்முகதுக்குதான நாட்டாமை பதவி வரும். தென்றா லூசாட்டமா பேசற..

பசுபதி : அது அப்படி தானுங்க ஐயா , ஆனா நல்ல பாருங்க இது நம்ம சம்முகம் ஐயா இல்லீங்க.

நா.நாட்டாமை : தென்றா கண்ணு இவன் சொல்றது நெசமா..? நீ சம்முகம் இல்லையா..?

த.நாட்டாமை : நீதிடா, நேரமடா, நியாம்டா..

நா.நாட்டாமை : அதைய அப்புறம் பார்த்துக்கலாம் கண்ணு , நீ சம்முகம் இல்லையா..?

த.நாட்டாமை : உன்னைய ஊற விட்டு தள்ளி வக்கிறண்டா.. பசுபதி அடிச்சோட்ரா..!!

நா.நாட்டாமை : தென்றா பசுபதி , இவன் நம்ம சம்முகம் மாதிரி தெரியிலையே.. நம்ம சம்முகம் எங்கடா..

பசுபதி : ஐயா அது வந்துங்க , வந்து ..

நா.நாட்டாமை : என்னடா ஆச்சு , சொல்றா ..?

பசுபதி : ஐயா நான் நாட்டாமை படம் முழுசா பாக்கலைங்க. அதான் எனக்கு தெரிலைங்க.


நா.நாட்டாமை : நீ யார்டா, நம்பட பையன் சம்முகம் எங்கடா ..?

த.நாட்டாமை : அதென்னடா, நீயும் உம்பட பையனும் மட்டும் தான் நாட்டாமைய இருக்கணும்னு யார்டா எழுதி வச்சது.? அதான் 1000 கோடி செலவு பண்ணி நான் நாட்டமையா ஆயிட்டேன்.

பசுபதி : (அட பாவி , என்ன புழுகு புழுகுறான் )

நா.நாட்டாமை : செல்லாது செல்லாது , Court ல கேஸ் போடுவேன்.


த.நாட்டாமை : டேய் , டேய் அப்படி ஏதும் செஞ்சிடாதடா.. உன்பைய்யன் Hero .எப்படியும் பொழச்சுக்குவான். என்ன கொஞ்சம் நினைசுப்பார்டா. எத்தன படத்துல வில்லன இருந்து உம்பய்யன் கிட்ட அடி வாங்கிருப்பேன். என்னால முடியலடா ..

me : சார் , சார் ப்ளீஸ் சொந்த விசயங்கள பேசவேண்டாம் ..

நா.நாட்டாமை : யார்ரா நீ ..?

me : நாட்டாமை , நான் செல்வக்குமார் , இந்த Blog ஓட ரைட்டர்.

த.நாட்டாமை : ரைட்டரா இருந்தாலும் , டைரக்டரா இருந்தாலும் நியாயம் நியாயந்தாண்டா ..

Me :இப்போதைக்கு இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிக்கிறேன் .. ஆனா தொடரும் .. 

15 comments:

LK said...

arumai bass

dheva said...

:-) kalakki irukkeenga... thambi!

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

கலாநேசன் said...

ayyo ayyo

வால்பையன் said...

அவ்ளோ தானா!?

இன்னும் எழுதுங்க!

soundar said...

அருமையா இருக்கு அடுத்த பதிவுக்கு வெயிட்...

Jeyamaran said...

நல்ல பதிவு வோட்டு போட்டுட்டேன்

சந்தோஷ் = Santhosh said...

சூப்பர் செல்வா..

பிரவின்குமார் said...

நாட்டாமை.. (ச்ச.. இதை படிச்சு அதே போல வருது..) செல்வா தம்பி.. பதிவு நல்லாயிருக்கு ஆனா ஒரே குழப்பமா இருக்கு..!! ஏன்னா நானும் பசுபதியும் படம் முழுசா பார்க்கல.. அடுத்த பதிவுல வெலங்கிடும்னு தோனுது.. தொடர்ந்து கலக்குங்க அப்பு..!!
ஆருரா அங்க தம்பிக்கு ஒரு எளநி வெட்டு..!!!

siva said...

okk..rightu..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பட்டைய கிளப்புங்க...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டேய் , டேய் அப்படி ஏதும் செஞ்சிடாதடா.. உன்பைய்யன் Hero .எப்படியும் பொழச்சுக்குவான். என்ன கொஞ்சம் நினைசுப்பார்டா.//
ஹஹாஹா

R.Santhosh said...

nice basu

அருண் பிரசாத் said...

எலேய்... செல்வா... செல்லாது செல்லாது பழைய பதிவை டெலிட் பண்ணி மறுபடி மீள் பதிவுனு பப்ளிஷ் பண்ணுப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா இப்பிடி சொல்லிபோட்ட நீய்யி.....! இனி நான் சொல்லமாட்டேன்டா திர்ப்பு....பசுபதி கட்றா வேட்டிய..ஈ..இது.. கட்றா வண்டிய...!