Showing posts with label எருமையும் மாடும். Show all posts
Showing posts with label எருமையும் மாடும். Show all posts

Thursday, June 24, 2010

எருமையும் மாடும்

(அப்படியே எதையாவது கிளப்பி விடலாம்னு ...)

மாடு : ஏய் ! எரும இங்க மேயாத , அது என்னோட இடம் . நான் தான் மேய்வேன்..!

எருமை : எதுக்கு , ஓனர் என்னையும் இங்கதான் மேய சொன்னார்.. உன்னோட இடம்னு பட்டா  போட்டு வச்சிருக்கியா ..?

மாடு : ஏய் , ஒழுக்கமா அந்த பக்கம் போய்டு , இல்லனா நடக்கறதே வேற ..


எருமை : ஏய் , நான் ஏன் இங்க மேயக்  கூடாது ., ஓனர் நம்ம ரெண்டு பேரும் மேயறதுக்கு தானே இங்க கட்டிருக்கார்..!


மாடு : நீ ஏன் இங்க மேய கூடாதுனா, நீ கருப்பு நான் வெள்ளை.. நீ கீழ் ஜாதி , நான் மேல் ஜாதி ..


எருமை : நீ மேல் ஜாதியா..? எப்டி..?


மாடு : என்னோட பால எடுத்து தான் சாமி சிலைக்கு ஊத்துவாங்க .. அப்ப நான் மேல் ஜாதி தானே ..


எருமை : நானும் நீயும் ஒரே புல்லைத்தான் மேயுறோம்.. அப்புறம் எப்பிடி உன்னோட பால் மட்டும் புனிதம் ஆகும் ..?


மாடு : அதுதான் உயர்ந்த ஜாதிங்கறது   ..!


எருமை : உயர்ந்த ஜாதியும் இல்ல , மயிரும் இல்ல .. என்னோட பால்ல வெண்ணை அதிகம் , அத கொண்டு போய் சாமி சிலை மேல ஊத்தினா கழுவறது சிரமம் .. அதனால கழுவறதுக்கு மொட பட்டுட்டு உன்னோட பால்தான் நல்லதுன்னு ஒரு பிட்ட போட்டு விட்டுட்டாங்க .. இது தெரியாம நீயெல்லாம் பேசுற ..!

மாடு : அதவிட நீ எமனோட வாகனம் .. நான் புனிதமானவன் ..

எருமை : எமன் இன்னுமா வாகனத்த மாத்திக்கல..? அது சரி அப்படியே நான் எமனோட வாகனம்னே வச்சிக்கிட்டாலும் என் மேல ஏறி அவர் எத்தன பெற கொல்ல முடியும் .. என்னை சோம்பேறி அப்படின்னு வேற சொல்லுறீங்க.. அன்னிக்கு கூட மங்களூர்ல விமானம் விபத்தாச்சே, அப்ப எருமை மேல ஏறியா எமன் போனார்.. அப்படி போனா விமானத்த எப்பிடி கீழ தள்ள முடியும்.. எனக்கு தான் பறக்க தெரியாதே..! யாரவது எருமை எமனோட வாகனம்னு சொல்லி பாருங்க ..!

மாடு : என்ன சொன்னாலும் நீ எமனோட வாகனம் தான் ..

எருமை : என்னைவிட உன்னாலதான் அதிகமா சாகுறாங்க ஜல்லிக்கட்டு அப்படிங்கற பேருல.. அப்படினா நீ எமனோட டைரக்ட் ஏஜென்ட்டா...?

மாடு : என்னோட யூரின (கோமயம் ) எடுத்து நல்லது அப்படின்னு  வீட்டுக்குள்ள தெளிச்சுக்குறாங்க ... இதுக்கு என்ன சொல்லப்போறே...?

எருமை : உனக்கும் அவுங்களுக்கும் அறிவே கிடையாது .. இதுல நான் என்னத்த சொல்லுறது .. நான் போய் மேயுறேன்.. அப்புறம் என்னோட கன்னுக்குட்டிதான் பால் பத்தாம கத்தும் .. உன்ன மாதிரி முட்டளோட பேசி என்னோட நேரத்த வீணக்க விரும்பல ... என்னமோ பண்ணி தொலை ..!!

(பின்குறிப்பு : என்னோட வேலை முடிஞ்சதுங்க.. எதாவது தப்பா பேசிருந்தா அது என்னோட தப்பில்லைங்க.. அந்த அஞ்சு அறிவு உள்ள எருமையோட தப்புங்க.. நான் அதுங்க பேசுனத எழுதிருக்கேன் அவ்ளோதான் ...!!)