Monday, November 29, 2010

வெளியூர்க்குப் போறேன்.!

முன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக., கவிதை மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.! கவிதை வரலைனா திட்டாதீங்க.! ஏன்னா நான் மொக்கை எழுதினாலே மொக்கயாத்தான் வருது.!

தெளிவான சாலைகள் , தெளிவில்லாத எங்கள் உள்ளம்
கணவனும் மனைவியும் ஒன்றாகச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளூரில் ஆடு மேய்த்தாவது வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.!

எங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;
பால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது
வேண்ட நினைக்கையில் வெளிநாட்டில்.!

பால்குடம் எடுக்கும்போது பத்துப் பேர்மீது வரும் செல்லாத்தா
இங்க ஏனோ ஒருத்தர் மேல கூட வர்றதில்ல.!
புலிகளைக் காப்போம் திட்டத்தில் வாகனம் போய்விட்டதா .?

ஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,
இப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.!

வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.!

கோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது
கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,
அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!

படிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,
பணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.!
பணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.!

சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!
சித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.?

மாமா பையனுக்கு மொட்டை அடிக்க விடுமுறை  ,
அத்தை பொண்ணுக்கு காது குத்த விடுமுறை ,
எதிர்த்த வீட்டுக் கல்யாணத்துக்கு விடுமுறை ,
இப்படி எத்தனை விடுமுறைகள் எடுத்திருப்போம் ,
இங்கே எந்தக் காரணமும் எடுபடுவதில்லை.!

வருடத்திற்கு ஒரு முறை வரும் திருவிழாவிற்கு
உண்டியலில் சேர்த்து 200 ரூபாய் கொடுத்த போது இருந்த சந்தோசம்
வெளிநாட்டில் இருந்து 20,000 அனுப்பும் போது கிடைப்பதில்லை.!

உள்ளூரில் செருப்புத் தைப்பவனுக்கு எங்கள் கார் மீது பொறாமை ,
எங்களுக்கு அவன் மீது பொறாமை .! இரண்டுநாளில் கிளம்பவேண்டுமே.!
சொந்தங்களும் சொந்த மண்ணும் தரும் சந்தோசத்தை AC கார்களும்
Bank Balanceம் தருவதில்லை எங்களுக்கு .!

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!

தீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்
பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.!
பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!

வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்
மிசினுக்கும் ஏது வித்தியாசம்?


நீதி : எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க ., நல்ல கவிதை படிக்கணும்னு நினைச்சா
நம்ம கலாநேசன் , பாலாஜி சரவணா , தமிழ்க்காதலன் ஆகிய ப்ளாக்ல போய் படிச்சுகோங்க.! ஹி ஹி ஹி .!

பின்குறிப்பு : உன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .!

Saturday, November 27, 2010

Happeeeeeeeeeeeeeeee..!!!!!!

முன்குறிப்பு : எனக்கு இத எப்படி ஆரம்பிக்குறது அப்படின்னு தெரியல , அவ்வளவு சந்தோசமா இருக்கேன். அப்படி என்ன சந்தோசம் அப்படின்னு கேக்குறீங்களா.? அதுக்கு என்னோட கூகுள் SMS CHANNEL பத்தி தெரிஞ்சிக்கணும்., சொல்லுறேன் இருங்க.!

Google Sms Channels : 
Google Sms Channels கூகுள் இந்தியா லேப்ஸ் ன்   ஒரு பிரிவு. இது ஒரு இலவச சேவை. நீங்க கூட ஒரு sms channel தொடங்கி sms அனுப்பலாம். ஆனா நீங்க அதுல யாரெல்லாம் இணைஞ்சிருக்காங்க அப்படின்னு பார்க்க முடியாது. சரி அத விடுங்க நம்ம விசயத்துக்கு வருவோம்.! நான் எப்படி ஒரு சேனல் தொடங்குனேன் அதுல அப்படி என்ன சந்தோசமான விஷயம் நேத்திக்கு நடந்துச்சு அப்படின்னு பார்க்கலாம்.! ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல ரிலையன்ஸ் வீட்டு போன் வாங்கினோம். அதுல அப்ப free  sms இருந்துச்சு. ஆனா அதுல 80 கேரக்டர் மட்டும்தான் எழுதமுடியும். இருந்தாலும் கூட நான் என்னோட நண்பர்கள் 5 பேருக்கு அவுங்களோட மொபைலுக்கு அதிலிருந்து தினமும் dictionary பார்த்து ஒரு வார்த்தையோட மீனிங் அனுப்பிட்டிருந்தேன். அது ஒரு ஆறு மாசம் அனுப்பினேன். அப்புறமா நான் மொபைல் Nokia 1200 வாங்கினேன். அதுல 160 character எழுதலாம். அதோட Distribution List இருக்கும். சரி இத வச்சு எதாவது நல்ல விஷயம் பண்ணலாம் அப்படின்னு என் நண்பர்கள்கிட்ட நான் தினமும் எல்லோருக்கும் sms அனுப்பப்போறேன். அதனால உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி அவுங்கள என் மொபைலுக்கு ஒரு sms அனுப்பி Register பண்ணிக்க சொல்லுங்க அப்படின்னு சொன்னேன்.!

TBTS :
என் நண்பர்கள் கிட்ட சொல்லிட்டு அதுக்கு ஒரு பேரு இருந்ததானே நல்லா இருக்கும் அப்படின்னு நான் என்னோட சேவைக்கு (ஹி ஹி ஹி ) தமிழ் பாரதி தகவல் சுரங்கம் (TBTS)  அப்படின்னு பேரு வச்சேன். அப்புறம் என்னோட நண்பர்கள் வேற வேற கல்லூரில படிச்சாங்க . அவுங்க மூலமா எனக்கு நிறைய நண்பர்களோட எண்கள் கிடைச்சுது. அப்புறம் அவுங்களுக்கு sms அனுப்ப ஆரம்பிச்சேன். ஆனா கொஞ்ச நாள்லயே என்னோட List Space முடிஞ்சு போச்சு . அப்புறம் வேற வழிகள தேட ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல தான் எனக்கு கூகுள் sms channels பத்தி தெரிய வந்துச்சு.!

QUIZFROMTBTS :
     Google sms channels ல என்னோட சேனல் பேரு quizfromtbts. இதுல இப்போ வரைக்கும் 4300 பயனாளிகள் இந்தியா முழுவதும் இருக்காங்க. அது எப்படி வெறும் நாலு பேருக்கு sms அனுப்பி நாலாயிரம் பேர் வந்தாங்க அப்படின்னு நீங்க கேக்கலாம். முதல்ல என்னோட நண்பர்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன். அப்புறம் மொபைல்ல ஆரம்பிச்ச TBTS ல இருந்தவங்கள இதுக்கு வாங்க அப்படின்னு சொல்லி இதுல வந்தாங்க. அப்புறம் ஒரே சிந்தனயுடயவங்க அப்படிங்கிற மாதிரி எனக்கு இந்த சேனல் மூலமா கோயம்புத்தூர்ல பாலகிருஷ்ணன் அப்படிங்கிற நண்பர் கிடைச்சார். அவருக்கு என்னோட பிளான் பிடிச்சிருந்ததால அவுங்க கல்லூரில இருந்து நிறைய பேர என்னோட சேனல்ல சேர வச்சார். அப்படியே 300 , 400 , 500 அப்படின்னு போச்சு. கூகுள் sms channels ல editors pick அப்படின்னு ஒண்ணு இருக்கு . அதுல நல்ல சேனல்ஸ் தேர்ந்தெடுத்து அவுங்களோட முன்னாடி பக்கத்துல வைப்பாங்க. அப்படி என்னோட சேனல் கூட ஒருதடவ தேர்ந்தெடுக்கப்பட்டதால நிறைய பேர் என்னோட Subscriber ஆனாங்க.!இப்போ வரைக்கும் 4300 பேர் ( ஐ ஜாலி ) எங்களோட  சேனல்ல இருக்காங்க.!சரி இது எல்லாம் சரி, இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.? சொல்லுறேன்.!

இதுல என்ன சந்தோசம் :
என்னோட சேனல்ல நான் போது அறிவு சம்பந்தமான விசயங்கள மட்டுமே அனுப்பிட்டிருந்தேன். நிறைய பிரிவுகளில் அனுப்புவேன் . கூடவே Employment News கூட அனுப்புவேன். இப்படி அனுப்பிட்டிருக்கும்போது நேத்து பாலா கூப்பிட்டார். அவரும் நானும் அடிக்கடி பேசுவோம். அவர் நிறைய விசயங்கள் சொல்லுவர். அதே மாதிரி நேத்து எங்கிட்ட ஒருத்தருக்கு B+ ரத்தம் இன்னிக்கு 6 மணிக்கு முன்னாடி தேவைப்படுது , அத நம்ம சேனல்ல போஸ்ட் பண்ணி விட்டா யாரவது உதவுவாங்க அப்படின்னு சொன்னார். நானும் கண்டிப்பா போஸ்ட் பண்ணுறேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு sms போஸ்ட் பண்ணினேன். அடுத்த ஒரு மணிநேரம் கழிச்சு மறுபடியும் பாலா போன் பண்ணினார். நம்ம sms பார்த்துட்டு ஒருத்தர் ரத்தம் தர்றேன் அப்படின்னு சொல்லிருக்கார், அப்படின்னார் .. என்னால நம்பவே முடியல. எனக்கு பயங்கர சந்தோசம் ஆகிடுச்சு. இதென்ன பெரிய விஷயம் அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்தப் பதிவே அந்த ரத்தம் கொடுக்க வந்த நண்பருக்காகத்தான்.

                  அவர் Hindustan காலேஜ் ல MCA படிக்கிறார். அவரோட பேர் மணிகண்டன். நான் உங்க சார்பாவும் என் சார்பாவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்காகத்தான் இந்தப் பதிவே.! இது எங்களோட முதல் வெற்றி அப்படின்னு சொல்லலாம். ஏன்னா எனக்கு ரத்தம் கொடுத்தவரையும் தெரியாது , வாங்கிக்கிட்டவங்களையும் தெரியாது.! ஆனா இனிமேல் பழக்கம் ஆகிடுவோம். இத படிச்சதுமே நான் பண்ணினது சப்ப மேட்டர் இதுக்கு எதுக்கு இவ்ளோ அலப்பற அப்படின்னு நீங்க நினைக்கலாம் .இருந்தாலும் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின sms சேனல் மூலமா நேரடியா ஒருத்தர் பயனடைந்திருக்காங்க அப்படின்னு நினைக்கும்போது பயங்கர சந்தோசமா இருக்கு. பால கிருஷ்ணன் அண்ணனுக்கும் இதுல பங்கு இருக்கு. மணிகண்டன் அவர்களுக்கு  மறுபடியும் எங்களோட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.! அதே மாதிரி போஸ்ட் போட்டதும் வேற மாநிலங்களில் இருந்து கூட சில அழைப்புகள் வந்துச்சு அப்படின்னு பாலா சொன்னார். இந்த அளவுக்கு எங்கள் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு தலைவணங்குகிறோம்.!

நான் இதுக்காக ஒரு ரண்டுவருஷம் முன்னாடி எழுதின ஒரு ப்ளாக் : http://www.ourtbts.blogspot.com

என்னோட sms  சேனலின் இணைப்பு இங்கே : http://labs.google.co.in/smschannels/subscribe/quizfromtbts

நீதி : கோமாளி ப்ளாக்ல வந்து முதல் உருப்படியான பதிவு அப்படின்னு நினைக்கிறேன். ஆனா இனி மொக்கைகள் தான்.!

பின்குறிப்பு : sms channel பற்றி நிறைய சொல்லனும்னு நினைச்சேன்., ஆனா அதுல இருக்குற லிங்க் போய் படிச்சு தெரிஞ்சிகோங்க. அதே மாதிரி எதுக்கு இங்கிலீஸ் தலைப்பு அப்படின்னு நீங்க கேக்கலாம்., அந்த சேனல்ல இங்கிலீஸ்ல தான் sms அனுப்புறேன்.!  (ஹி ஹி ஹி) இந்தப் பதிவு திரு.மணிகண்டன் அவர்களுக்கு சமர்ப்பணம்.!  

Monday, November 22, 2010

இதுவரை வாங்கிய வடைகள்

முன்குறிப்பு : நான் வாங்கிய வடைகள் பலவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். மேலும் இந்த வடை வாங்கும் போராட்டத்தில் எத்தனை சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்ச்சிப் பதிவு.! 15 .11 .2010 முதல் வாங்கிய வடைகள் மட்டுமே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

*.முதல் வடை : 15.10.2010 அன்று 2.30 மணியளவில் வெறும்பய ப்ளாக்கில் இந்தப் பட்டியலுக்கான முதல் வடை பெறப்பட்டது.! அதே தினத்தில் அதே பதிவில் karthikkumar உடன் கடுமையான சண்டை போட்டு 100 வது கமெண்ட் போட்டதால் எனக்கு மற்றும் ஒரு வடை பரிசளிக்கப்பட்டது. ஆனால் 98 என்ற என்னை காணவில்லை என மேல்முறையீடு செய்து karthikumar அவர்களுக்கு வடை மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் கணக்கு எனது பெயரில் எழுதப்பட்டதால் இனி மூன்றாவது வடை பெற்றதைப் பார்ப்போம்.!

*.மூன்றாவது வடை சிரிப்புப்போலீசின் இந்தப் பதிவில் பெறப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்க்கு இந்தப் பின்னூட்டம் ஆதாரம் //பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… அது சரி, எப்பவும் வட வாங்கற கோமாளி என்னப்பா ஆனாரு?/// ஆனால் அந்தப் பதிவில் ஊசிப்போன வடைகள் தருவதாக நமது ரகசிய வடை திருடும் காக்கைகள் கூறியதால் நாம் அந்தப் பதிவில் வடை வாங்கும் எண்ணம் கைவிடப்பட்டது. சரி மூன்றாவது வடை பெற்ற கதையைக் காண்போம். 16.11.2010 அன்று சிரிப்புப் போலீசின் இந்தப் பதிவில் 96 கம்மேன்ட்டுகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாலும் முதல் வடை வாங்கிய நமது சங்கத்தின் TERROR அவர்கள் வடை மிகவும் சுவையுடன் இருப்பதாகக் கூறியதை அடுத்து நானும் 96 இல் இருந்த எண்ணிக்கையை மிகவும் சிரமப்பட்டு 100 வரை போட்டு வடை பெற்றுக்கொண்டேன்.! அவர்கள் தெரிவித்தது போன்றே அந்த வடை மிகவும் சுவையுடன் இருந்தது கூடுதல் செய்தி.!


*.நான்காவது வடையானது 18.11.2010 அன்று ஜீவன்பென்னி அவர்களது ப்ளோகில் இந்தப் பதிவில் கிடைத்தது. இந்த வடை பெற்றது மிகவும் சுவாரஸ்யமான தகவலாகும். ஏனெனில் நான் அலுவலகம் வந்து Google Reader இல் பார்க்கும்போது இவரது பதிவு இருந்தது. ஆதலால் இந்தப் பதிவில் வடை கிடைக்காது என்று நினைத்துகொண்டு பிறகு படிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு நமது தேவா அவர்கள் இந்தப் பதிவின் இணைப்பினை மின்னரட்டையில் கொடுத்தார். நானும் சரி படிக்கிறேன் என்று அங்கு சென்று பார்த்தால் வடை யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆதாலால் நான் மிகவும் மகிழ்வுடன் அந்த வடயைப்பெற்றுக்கொண்டேன்.!

*.ஐந்தாவது வடை மீண்டும் சிரிப்புபோலீஸ் அவர்களது வலைப்பூவில் பெறப்பட்டது.அவரது இந்தப் பதிவு 48 பின்னூட்டங்கள் பெற்றிருந்தது . நான் வழக்கம் போல மிகவும் சிரமப்பட்டு 49    மற்றும் 50 ஆகிய எங்களை பின்னூட்டமாக இட்டு வடையைத் தட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

*.ஆறாவது வடை 19.11.2010 அன்று மறுபடியும் சிரிப்பு போலீஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. அவரது இந்தப் பதிவில் முதல் பின்னூட்டம் போட்டதற்காக பெற்றுக்கொண்டேன். மேலும் அதே பதிவில் மொக்கராசா அவர்கள் எனக்காக 50 பின்னூட்டம் போடும் போது எனக்கு வடையை விட்டுக்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவரே வடையை எடுத்துச் சென்றது பெருத்த ஏமாற்றம் அளித்தது. சரி ஏழாவது வடையப் பற்றிப் பார்ப்போம்.!

*.ஏழாவது வடையும் 19.11.2010 அன்று நமது பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் அவர்களது வலைப்பூவில் 100 வது பின்னூட்டம் இட்டதற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த வடையைப் பெற்றது மிகவும் சுவாரஸ்யமான விசயமாகும். அவர் பதிவினைப் பார்க்கும் போது முதல் பின்னூட்டம் போட்டு வடையினைத் தட்டிப்பறிக்கலாம் என்று ஓடினேன். ஆயினும் எஸ்.கே அவர்கள் வடையைப் பெற்றுக்கொண்டதாக முறையான அறிவிப்பு வந்தது. அதனால் எனக்கு கொஞ்சம் ஆணிகள் வந்துவிட்ட படியால் சில ஆணிகளைப் பிடுங்கிவிட்டு 50 வது பின்னூட்டம் இட்டு வடை பெறலாம் என்று சிறிது நேரத்திற்குப் பிறகு சென்று பார்த்தேன். ஆனால் அங்கே 82 பின்னூட்டங்கள் வந்திருந்தது. ஒரு 6 அல்லது 7 நண்பர்கள் வடயைக்கைப்பற்ற போராடிக்கொண்டிருந்தது கண்கூடாகத் தெரிந்தது. இதனால் நானு சென்று பின்னூட்டம் இட்டால் அவர்கள் விளித்துக்கொள்ளக்கூடும் என்று 98 பின்னூட்டங்கள் வருவரை F5 என்ற பட்டனை மட்டும் அழுத்திக்கொன்டிருந்தேன்.பின்னர் 100 வது பின்னூட்டத்தை இட்டு வடயைக்கைப்பற்றியது என்னை அளவில்லா மகிழ்ச்சியில்  தள்ளியது .!

*.எட்டாவது வடை நமது சிவா அண்ணனது ப்ளாக்கில் 20.11.2010 அன்று இந்தப் பதிவுல பெறப்பட்டது. இதுல ஒரு விசேசம் என்ன அப்படின்னு பார்த்தா அவரே முதல் கமெண்ட் போட்டு டெஸ்ட் பண்ணிட்டிருந்தார். அப்புறம் போய் நம்ம வடை வாங்கும் கொள்கைகள் குறித்து அவருக்கு விளக்கி அவருடைய பின்னூட்டம் செல்லாது அப்படின்னு சொல்லி என்னோட பின்னூட்டத்துக்கு வடை பெற்றுக்கொண்டேன்.

*.ஒன்பதாவது வடை நம்ம terror அண்ணனோட இந்தப் பதிவுல நம்ம பாபு அண்ணன் வடை வாங்கிட்டார். இருந்தாலும் தேவா அண்ணன் வந்து செல்வா சின்னப் பானா இருக்கான் அவனுக்கு கொடுத்துடு அப்படின்னா பாபு அண்ணன் கிட்ட சொன்னதும் அவரும் மனமுவந்து கொடுத்தார்.

*.பத்தாவது வடை இன்று நமது சுற்றுலாவிரும்பியில் கிடைக்கப்பெற்றது.! மேலும் நமது பன்னிக்குட்டிராமசாமி அண்ணனது ப்ளாக்இல் இன்று இன்னொரு வடை பெற்றுக்கொண்டது மகிழ்வளிக்கிறது.

வடைக்கு என்னுடன் போட்டி போடுபவர்கள் : எனக்கு சரி சமமாக வடைக்குப் போட்டியிடுபவர் நமது சிரிப்புப்போலீஸ் ஆவார். சில சமயம் எஸ்.கே , ஹரீஸ் , Arunprasad , மாதவன் அண்ணன் ,அருண் அண்ணன் போன்றோர் பெற்றுவிடுவது என்னை கொஞ்சம் முகம் வாடச்செயகிறது. இருந்த போதிலும் எனது வடைக்கான தேடல் தொடரும்.

வடை கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றியவர் : நமது அருண் அண்ணன் அவர்கள் இந்தப் பதிவில் பதிவிடுவதற்கு முன்னரே என்னிடம் தனிப்பட்ட முறையில் உனக்கு வடை தருகிறேன் என்று வாக்கு அளித்திருந்தார். ஆனால் நான் அலுவலகம் வரும் முன்னரே அவர் பதிவிட்டு எனக்கு கொடுக்க வேண்டிய வடையை வேறொருவருக்கு கொடுத்ததற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வடை வாங்குதலின் லட்சியம் : இத்தனை இடங்களில் வடை வாங்கிய போதும் தேவா அண்ணனின் ப்ளாக்கிலும் , எங்கள் தலைவர் கோகுலத்தில் சூரியனிலும் வடை வாங்குவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்.!

நீதி : இதெல்லாம் எங்க பாஸ் உருப்படப்போகுது..? போய் ஆணி  இருந்தாப்  பாருங்க .!

பின்குறிப்பு :  இந்தப் பதிவில் 50 வடைகள் பெற்றதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இருந்தபோதிலும் பதிவுலகின் நன்மை கருதி இத்துடன் இந்தப் பதிவினை முடித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.!

Friday, November 19, 2010

இன்றைய செய்திகள்

தினத்தந்தி , தினமலர் போன்ற இதழ்களில் தெரிந்துகொள்ளவும்.! நன்றி.!

Thursday, November 18, 2010

TOP TEN ரஜினி படங்கள் ஒரு கமல் ரசிகனின் பார்வையில்.!

 முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அளித்த தேவா அண்ணன் அவர்களுக்கு முதல்ல நன்றி தெரிவித்துகொள்கிறேன்.! அப்புறம் இந்தப் பதிவோட தலைப்புப் பத்தி மட்டும் இல்ல , பொதுவாவே எங்க போனாலும் கமல் ரசிகர் கமல் ரசிகர் அப்படின்னு சொல்லுறேனே , அதனால எல்லா கமல் படமும் பார்ப்பேன் அதுவும் முதல்நாள் முதல் ஷோ ல பார்ப்பேன் அப்படின்னு யாரும் நினைக்க வேண்டாம். நான் பார்த்த கமல் படங்கள் ஒரு 20 கூட இருக்காது.

              ரஜினி படங்களும் அவ்வளவே. அதே மாதிரி நான் தியேட்டர்ல பார்த்த கமல் படங்கள் இரண்டே இரண்டுதான். தசாவதாரம் & உன்னைப்போல் ஒருவன். அதே மாதிரி ரஜினி படம் ஒண்ணுதான் எந்திரன் மட்டும்தான் தியேட்டர்ல பார்த்தேன். அப்புறம் எதுக்கு கமல் ரசிகர் கமல் ரசிகர்னு சொல்லிட்டு திரியுற அப்படின்னு யாரும் கேக்கவேண்டாம். எனக்கு கமல் பிடிக்கும்., அவ்ளோதான் . அதுக்காக மற்ற நடிகர்களா பிடிக்காதா அப்படின்னு சொல்லமுடியாது. சொல்லப்போனா எனக்கு சின்னவயசுல கமல் டிவில கமல் படம் போட்டாலே ஓடிப்போயடுவேன். எனக்கு முதல் முதலா ரொம்ப பிடிச்ச கமல் படம் அப்படின்னு பார்த்தா " அன்பே சிவம் " . அந்தப் படத்துல வர்ற வரிக்கு வரி காமெடி எனக்கு ரொம்ப பிடிச்சு போய் கமலோட மற்ற காமெடிப் படங்கள் எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

              அதனால எனக்கு கமல் பிடிக்கும்.ஆனா நான் அதிக முறை பார்த்த படம் அப்படின்னு பார்த்தா அது சந்தோஷ் சுப்பிரமணியம் தான். இந்தப் படத்த சுமார் 20 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இன்னமும் மாதம் ஒரு முறையாவது இந்தப்படத்தைப் பார்ப்பேன். எனக்கு கமல் படம் அப்படின்னு கிடையாது , எந்தப்படதுல காமெடி அதிகமா இருக்குதோ அந்தப் படத்தைதான் பார்ப்பேன். நான் படம் பார்ப்பதே காமெடிக்காக மட்டுமே. அதனாலதான் எனக்கு பாக்யராஜ் ரொம்ப பிடிக்கும். கமல் படங்கள விட பாக்யராஜ் படங்கள்தான் அதிகமா பார்த்திருக்கேன். அவரோட வேட்டிய மடிச்சுக்கட்டு , இது நம்ம ஆளு , சுந்தர காண்டம் இந்த மாதிரியான படங்கள் வாய்ப்பே இல்ல , சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் ..அதே மாதிரி எனக்குப் பிடிச்ச ரஜினி படங்கள் என்ன என்ன அப்படிங்கறதயும் பார்க்கலாம் வாங்க.!

10.நினைத்தாலே இனிக்கும் :
இந்தப் படத்துல ரஜினி நிறைய காமெடி பண்ணிருப்பார். அதிலும் கர்சிப் திருடுறது இந்த மாதிரி காமெடிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

9.ராஜாதி ராஜா : 
இந்தப் படத்துல ரஜினி இரட்டை வேடத்துல நடிசிருப்பாருனு நினைக்கிறேன் . ஒருத்தர் பயந்துக்குவார் .,இன்னொருத்தர் தைரியசாலியா இருப்பார் . எனக்கு பயந்த ரஜினியைத்தான் பிடிக்கும் .. ஏன்னா அவருதான் ரொம்ப காமெடி பண்ணுவார்.

8.சிவாஜி :
இந்தப் படத்துல வர்ற காமெடிகள் பிடிக்கும். அதிலும் பழகலாம் வாங்க அப்படின்னு பண்ணுற காமெடிகள் செமையா இருக்கும் .!

7.பில்லா :
இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் அந்த நல்ல ரஜினி பில்லாவா மாறும்போது செம காமெடியா இருக்கும்.!

6.தில்லு முள்ளு :
இந்தப் படத்துல கொஞ்சம் நான் பார்த்திருக்கேன் . அதுவும் செம காமெடியா இருந்துச்சு . எப்பவோ ஒரு பாட்டு பார்த்தா நியாபகம். அதோட ஒருத்தரே இரண்டு பேரா மீசை இருக்கறவர் பேர் சந்திரன்னு நினைக்கிறேன் .. அப்புறம் மீசை இல்லாத மாதிரி நடிப்பார். எனக்கு மறந்திருச்சு .ஆனா படம் செம காமெடியா இருக்கும்.

5.வீரா :
இந்தப் படத்துலயும் ஒருத்தரே இரண்டு பேரு மாதிரி நடிப்பார். அதுல கொஞ்சம் காமெடியா இருக்கும்.

4.அருணாசலம் :
இந்தப் படத்துல முப்பது நாளுல முப்பது லட்சம் செலவலிக்கனும்னு சொல்லி ஒரு போட்டி வரும் .அப்போ வில்லன்கள் இவரு எது பண்ணினாலும் பணம் வர்ற மாதிரி பண்ணுறது செம காமெடியா இருக்கும்.

3 .முத்து :
இந்தப் படத்துலயும் காமெடி எனக்குப் பிடிக்கும். ஆனா இந்தப் படத்துல கொஞ்சம் மறந்து போச்சு. ஆனா நல்லா இருக்கும்.

2.பாட்ஷா :
இந்தப் படத்துல உண்மைலேயே ஸ்டைல் நல்லா இருக்கும் . அதோட பஞ்ச வசனங்களும் அருமையா இருக்கும்.! இந்தப் படமும் நான் சில தடவை பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா படம்.

1.படையப்பா : 
இந்தப்படம் நான் ஒரு 5 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இன்னும் எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம். எனக்கு இந்தப் படம்தான் எப்பவும் முதல். இதுல காமெடியும் இருக்கும் , ஸ்டைல் இருக்கும் , இசையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும்.

இந்த வரிசைல எதவாது தப்பு இருந்தா மன்னிச்சிருங்க. எனக்கு எப்பவுமே சண்டைப் படமோ , இல்ல அழுமூஞ்சிப் படமோ பிடிக்கவே பிடிக்காது. எனக்குப் பிடிச்சது காமெடிப் படங்கள் மட்டும்தான். அதே மாதிரி இப்ப டிவி ல அடிக்கடி ஹாலிவுட் படங்கள் போடுறாங்க. அப்படிப் போட்டதுல The Terminal அப்படின்னு ஒரு படம் . எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி Born To be  wild அப்படின்னு ஒரு படம் அதுவும் பிடிக்கும். பொதுவா நான் கமல் ரசிகரா இருந்தாலும் கமெடிப்படங்களின் தீவிர ரசிகர்.! அதனால்தான் எனக்கு சிவா படங்கள் பிடிக்கும். அதனால இப்போதைக்கு என்னோட Favourite இயக்குனர் பசங்க பட பண்டிராஜ் தான்.!    

Thursday, November 11, 2010

கின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு எழுதிட்டேன் பெரிய பதிவு எழுதிட்டேன் அப்படின்னே சொல்லுறது.?! நான் பெரிய பதிவு மட்டும் எழுதறதில்லை , தலைப்பு கூட பெருசாதான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனா தலைப்புலேயே பதிவு எழுதுவேன்.இவ்ளோ பெரிய தலைப்பு இதுவரைக்கும் யாரும் எழுதிருக்க மாட்டங்க அப்படின்னு நினைக்கிறேன்.அதனால இந்தப் பதிவு கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்போறேன். யாராவது அது எப்படி கின்னஸ் சாதனைக்கு அனுப்பறதுன்னு சொல்லமுடியுமா..?

முன்குறிப்பு : அடுத்து வருவது பதிவு ;

பதிவு : தலைப்பில் உள்ளது ;

நீதி : இப்ப சந்தோசமா..?

பின்குறிப்பு : பதிவு முடிஞ்சது , வீட்டுக்குப் போலாம்.!

Tuesday, November 9, 2010

காதலிக்க தாடி வளர்.!

முன்குறிப்பு : வழக்கம் போலவே சிறுகதை எழுத ஆரம்பிச்சு , பெருங்கதைல போய் முடிஞ்சிருச்சு , அதனால பாவம் நீங்க .!!

வானத்தில் சில மேகக்கூட்டங்கள் மாலை 4 மணிக்கே சூரியனைச் சூழ்ந்துகொண்டு  இருளினை அழைத்துக்கொண்டிருந்தன. செல்வாவும் ரமேசும் ஏதோ விவாதித்த படியே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

" மச்சி நான் கேட்டதுல என்ன தப்பு .? ஏன் அவன் முறைச்சு முறைச்சுப் பார்த்தான்.? " என்றான் செல்வா.

" ஏன்டா உனக்கு எப்படி பேசனும்னே தெரியாதா , நீ எதுக்கு சந்தோசம் அப்படின்னு அவன்கிட்ட சொன்ன..? " என்றான் ரமேஷ் சற்றே கோபத்துடன்.

"அதிகமா பழக்கம் இல்லாதவங்க எதவாது சொன்ன சந்தோசம் அப்படின்னு சொல்லுனு எங்க அப்பா சொன்னார்., அதான் சொன்னேன். இதிலென்ன தப்பு இருக்கு..? அதுக்கு எதுக்கு முறைச்சான்.?" என்றான் செல்வா.

" கிழிச்ச , அதுக்காக உடம்புக்கு சரியில்லை அப்படின்னு சொல்லுரவன்கிட்ட சந்தோசம்னு சொன்னா கொஞ்சுவானா..? " என்றான் ரமேஷ்.

" சரி விடு மச்சி இனிமேல் மாத்திக்கலாம்., உடம்பு சரியில்லன்னு யாரவது சொன்னா என்ன கேக்கணும்..? "

" யாராவது உடம்பு சரியில்லைன்னு சொன்னா " இப்ப பரவால்லையா..?" அப்படின்னு கேக்கணும்., இது கூடவா தெரியாது .? " என்று தலையில் அடித்துக்கொண்டான் ரமேஷ்.

" அப்போ மண்டைய போட்டுட்டாங்க அப்படின்னு சொன்னா என்ன கேக்கணும் மச்சி.? " என்றான் செல்வா.

ரமேஷ் ஒருமுறை முறைத்துவிட்டு " சாரிங்க " அப்படின்னு சொல்லு போதும் என்று சொன்னவன் ஒரு பேக்கரியில் வண்டியை நிறுத்தினான்.

" இரண்டு டீ போடுங்க , ஒண்ணு ஆத்தாம " என்று ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரமேசின் நண்பன் பிரவீன் எதேச்சையாக அங்கு வந்தான். செல்வாவிற்கு அதிகப்பழக்கம் இல்லையானாலும் கொஞ்சம் பழக்கமிருந்தது. சிறிதுநேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். செல்வா பிரவீன் வீட்டிலுள்லோரின் நலத்தினை விசாரித்துக் கொண்டிருந்தான்." பாட்டி நல்லா இருக்காங்களா..? " என்றான் செல்வா பிரவீனிடம்.

பிரவீன் சற்று வாட்டத்துடன் " அவுங்க இறந்த்துட்டாங்க , உடம்பு சரியில்லாம இருந்தாங்க.? " என்றான்.

இதைக்கேட்ட செல்வா " ஓ , சாரி , இப்ப பரவால்லையா..? " என்றான்.

பிரவீன் ரமேசை முறைத்தவாரே " சரி பார்க்கலாம் " என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். அவன் அகன்றதும் ரமேஷ் செல்வாவை எரித்துவிடுவது போன்று பார்த்தான்.

" ஏன்டா உனக்கு எந்த நேரத்துல எப்படிப் பேசுறதுனே தெரியாதா.? ஏன்டா என்னோட உயிரை வாங்குற..? " என்று கத்தினான் ரமேஷ்.

" ஏன் மச்சி , நான் சரியாத்தானே சொன்னேன்.? " என்று குழம்பியவாறே கேட்டான் செல்வா.

" கோவத்தக் கிளப்பாத , அவனே அவுங்க பாட்டி செத்திட்டாங்க அப்படின்னு சொல்லுறான் , அப்புறம் எதுக்கு இப்ப பரவால்லையா அப்படின்னு கேட்ட..? "

" நீதானே மச்சி சொன்ன , உடம்பு சரியில்லன்னு யாராவது சொன்னா " பரவால்லையா " அப்படின்னு கேக்கணும் , இறந்துட்டாங்க அப்படின்னு சொன்னா " சாரி " சொல்லனும்னு. அதான் அவன் பட்டி இருந்துட்டாங்க அப்படின்னு முதல்ல சொன்னான் , அதுக்கு சாரி சொன்னேன் . அப்புறம் உடம்புசரியில்லாம இருந்தாங்க அப்படின்னு சொன்னான் அதனால " பரவால்லையா " அப்படின்னு கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு ..? "

" சத்தியமா உன்னயெல்லாம் திருத்தவே முடியாதுடா , எனக்கு இதவிட பெரிய சந்தேகம் என்ன அப்படின்னா உன்னையும் ஒருத்தி காதலிக்கிறா அப்படின்னு சொல்லுறியே அதான். நீயே ஒரு அரை லூசு , உன்ன லவ் பண்ணுரவ முக்கா லூசாத்தான் இருப்பா..? எப்படியோ போய்த் தொலைங்க..! " என்றவாறே பைக்கை ஸ்டார்ட் செய்தான் ரமேஷ்.

******************************************************************************************

இரண்டுநாள் கழிந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மணி 8 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்தரிக்காமல் படுத்திருந்த ரமேஷை அவனது மொபைல் selva calling என்று  எழுப்பியது.

" சொல்டா.."

" மச்சி , அவ ஏமாத்திட்டாடா..! " என்று தழுதழுத்தான் செல்வா.

" டேய் , என்ன சொல்லுற..? என்னால நம்பவே முடியல..?! " என்றான் விறுவிறுப்பானான் ரமேஷ்.

" ஆமாண்டா , எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல , செத்துப்போலாம் போல இருக்கு..?! " என்று அழுதே விட்டான்.

" டேய் டேய் , என்ன இது லூசாட்டமா பேசுற , இரு 10 நிமிசத்துல வரேன்.! " என்று கட் செய்துவிட்டு வேகவேகமாக செல்வாவின் வீட்டிருக்கு விரைந்தான் ரமேஷ்.

செல்வாவின் வீட்டை அடைந்ததும் செல்வா அழுதுகொண்டிருந்தது தெரிந்தது. ரமேஷ் சிறிது நேரம் செல்வாவிற்கு ஆறுதல் கூறிப்பார்த்தான். ஆனாலும் செல்வா அழுகையை விடுவதாகத் தெரியவில்லை.

" சரி , கிளம்புடா , ஒரு பக்கம் போலாம்..! " என்று செல்வாவை வலுக்கட்டாயமாக TASMAC என்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றான் ரமேஷ்.

" இங்கயா ..?!" என்றான் செல்வா சற்றே தயக்கத்துடன்.

" ஆமாண்டா , ஒரு ரண்டு ரவுண்டு விட்டா எல்லாத்தையும் மறந்திடுவ..! " என்று பேசிக்கொண்டு உள்ளே செல்ல முற்படுகையில் சண்முகம் அங்கே வந்து சேர்ந்தான்(ள் ).

( சண்முகம் ஒரு திருநங்கை. இருந்தாலும் பெற்றோரின் ஆதரவு இருப்பதால் அவளுக்கு தனியாக செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ரமேஷ் , செல்வா , சண்முகம் மூவரும் ஒரே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தனர். வெளியிலும் பள்ளியும் ஏற்பட்ட அவமானங்களால் எட்டாம் வகுப்பிலேயே படிப்பினை நிறுத்திவிட்டான் சண்முகம். பின்னர் சண்முகம் தனது பெயரை சண்முகி என்று மாற்றிக்கொண்டான். செல்வா , ரமேஷ் இருவரும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதால் மூவரும் நல்ல நண்பர்களாக விளங்கினர்.!)

" இங்க என்னடா பண்ணுறீங்க.?" என்று கேட்டவாறே இவர்களை நெருங்கினாள் சண்முகி.

" இல்ல , சும்மா .! " என்று சாமாளிக்கப்பார்த்தான் ரமேஷ்.

" டாஸ்மாக்ல சும்மா என்ன வேலை ..? ஒழுங்கா சொல்லிடுங்க..! " என்று அதட்டலாகக் கேட்டாள் சண்முகி.

" இவனோட லவ்வர் , இவன லவ் பண்ணலைன்னு சொல்லிட்டா அதான் ஒரு ரவுண்டு அடிச்சா சரியாய்டும் அப்படின்னு கூட்டிட்டு வந்தேன்..!" என்றான் ரமேஷ்.

" தண்ணி அடிச்சா , சரியாயிடுமா..? "  என்றாள் சண்முகி.

" என்னோட பீலிங் உனக்குத் தெரியாது..! " என்று சற்றே கோபமாக கூறினான் செல்வா.

" ஆமா , எல்லோரும் அப்படித்தானே நினைக்கிறீங்க , நீங்களாவது பரவா இல்ல. இன்னும் சிலர் இருக்காங்க , எங்கள அவன் , அவள் அப்படின்னு கூட கூப்பிடறதில்லை அது அப்படின்னு சொல்லுறாங்க. அப்பவெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா.? இதெல்லாம் தாண்டி வாழவேண்டியிருக்கு..! சரி அத விடு.! உன்னோட கதைய சொல்லு." என்று முடித்தாள் சண்முகி.

" எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு குடிவந்தது. நல்லாத்தான் பழகுச்சு. என்னைய எங்க பார்த்தாலும் சிரிக்கும் ., எங்க தெருவிலேயே என்கூடத்தான் நல்லாப் பேசுவா.., எல்லோருமே அவ என்னைய லவ் பண்ணுறா அப்படின்னு சொன்னாங்க. எனக்கும் தெரியும் அவ என்ன லவ் பண்ணுறா அப்படின்னு. அதனால ரொம்ப சந்தோசமா இருந்தேன். சரி நான் லவ் பண்ணுறத எப்படியாவது அவ கிட்ட சொல்லணும் அப்படின்னு இன்னிக்கு காலைல போய் அவகிட்ட சொன்னேன் . அதுக்கு அவ " நான் உங்களை அப்படி நினைக்கவே இல்ல , நல்ல நண்பனாகத்தான் நினைச்சேன்.." அப்படின்னு சொல்லிட்டா. எனக்கு அப்படியே செத்துப்போகணும் போல இருந்துச்சு தெரியுமா..?! " என்று அழுது புலம்பினான் செல்வா.

" விடு மச்சி , இந்தப் பொண்ணுகளே இப்படித்தான் ,  ஏமாத்துறதுல அவுங்கள மிஞ்ச முடியாது..!" என்று ஆறுதல் கூறினான் ரமேஷ்.

" சொல்லுவீங்கடா , யாரோ சொன்னாங்க அப்படின்னு பொண்ணுக பின்னாடி சுத்த வேண்டியது , அப்புறம் காதலிக்கலை ஏமாத்திட்டா அப்படின்னு பொண்ணுக எல்லோருமே ஏமாத்துறாங்க அப்படின்னு திரியவேண்டியது. இதிலையும் உன்ன மாதிரி சில தறுதலைகள் சேர்ந்துட்டு சோகத்தைப் போக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு தண்ணி அடிக்க வேண்டியது அப்புறம் இருக்குற காசு எல்லாத்துக்கும் தண்ணியப் போட்டுட்டு சேவிங் பண்ண காசு இல்லாம தாடி வச்சிட்டு கேட்டா காதல் தோல்வி அதான் தாடி வச்சிட்டேன் அப்படின்னு சொல்ல வேண்டியது. மொதல்ல உங்களை மாதிரி ஆளுகள ??..! " என்று பிரிந்து தள்ளினால் சண்முகி.

" நிறுத்து , நாங்களாவது காதல் தோல்விக்கு இத்தன பண்ணுறோம் , எதாவது ஒரு பொண்ணாவது தண்ணி போட்டுட்டு அவுங்களோட வாழ்க்கைய காதலுக்காக தியாகம் பண்ணிருக்காங்களா..? என்றான் செல்வா.

" உன் மனசாட்சியத் தொட்டு யோசிச்சுப்பாரு ஒரு பொண்ணு தண்ணி அடிச்சிட்டு ரோடுல போனா விட்டுருவீங்களா..? அவள பேசிப் பேசியே கொன்னுட மாட்டீங்க., இல்ல கல்யாணம் ஆகாம வீட்டுல இருந்தான் விட்டுருவீங்களா..? அவளுக்கு என்னமோ பிரச்சினை அது இதுன்னு எத்தனையோ பட்டம்கட்டி அவள மட்டும் இல்ல அவ குடும்பத்தையே மானத்த வாங்குவீங்களே..! அப்புறம் பொண்ணுக்கு தாஜ்மகால் கட்டினாங்க ஏதாவது ஒரு பொண்ணாவது ஆணுக்காக ஏதாவது செஞ்சால அப்படின்னு சொல்லவேண்டியது.. நான் தெரியாமத்தான் கேக்குறேன் தாஜ்மகால் கட்டின காலத்துல இருந்து இதுவரைக்கும் பொருளாதார அடிப்படையில பொண்ணுங்க சுதந்திரமா இருக்காங்களா.? கல்யாணத்துக்கு முன்னாடி அப்பாவையும் , கல்யாணத்துக்கு அப்புறமா புருசனையும் , அப்புறம் மகனையோ மகளையோ சார்ந்து இருக்குற மாதிரியான சமூக அமைப்புல அவுங்களால என்ன செஞ்சிட முடியும்..? பண்ணுறதெல்லாம் நீங்க , பழி  மட்டும் அவுங்க மேலயா..? நல்லா இருக்குடா உங்க நியாயம்..! உங்களுக்கு காதல் தோல்வி அப்படின்னா தண்ணி அடிக்க வேண்டியது , தாடி வளர்க்க வேண்டியதுனு சுத்துரீங்க , ஆனா அவுங்களால அதைய அப்படியெல்லாம் காட்டிக்க முடியாம மனசுக்குள்ளயே அழுத்தி வச்சுட்டு , குடும்ப சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்ணி போனா என்னைய ஏமாத்திட்டு போறா , பொண்ணுங்களே இப்படித்தான் அப்படின்னு சொல்லுறது.! உங்களுக்கு காதல் தோல்வில எத்தனை வலி இருக்கோ அதே அளவு வலி பொண்ணுகளுக்கும் இருக்கு அப்படிங்கிறத தெரிஞ்சிக்கோங்க.! " என்று முடித்தாள் சண்முகி.

" ஓ ,சாரி , தெரியாம பண்ணிட்டேன்.! இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்..! " என்று மன்னிப்புக் கேட்டான் செல்வா.

" ஆமா மச்சி , நானும் கொஞ்சம் உன்ன உசுப்பி விட்டுட்டேன் , தண்ணி அடிச்ச சோகம் போய்டும் அப்படின்னு சொன்னது என்னோட தப்புத்தான்..! என்னையும் மன்னிச்சிரு.." என்றான் ரமேஷ்.

" சரி விடுங்க , அப்புறம் அந்தப் பொண்ணு கடைசில நண்பன்னு நினைச்சு பழகினேன்னு தானே சொல்லுச்சு ., அதனால ஒண்ணும் பயப்படாத எத்தனையோ நண்பர்கள் காதலர்களா மாறிருக்காங்க..! அதனால சந்தோசமா போ..! சரி எனக்கு நேரம் ஆச்சு , நான் கிளம்புறேன் " என்று கூறிவிட்டு சென்றாள் சண்முகி.

செல்வாவும் , ரமேஷும் சந்தோசமாக பைக்கினை ஸ்டார்ட் செய்தனர். போகும் வழியில் செல்வா ரமேசிடம் " மச்சி , ஒரு சந்தேகம் ..? "

" சொல்லு .., "

" தண்ணி அடிக்கிறது அப்படின்னு சொன்னீல , அத எப்படி அடிக்கிறது..? அடிச்சா அதுக்கு வலிக்காதா..? "

" வீட்டுக்குப் போக வரைக்கும் ஒழுங்கு மரியாதையா வாய வச்சிட்டு வந்திடு.!! " என்று சிரிததவாறே சொன்னான் ரமேஷ்.!

நீதி : லட்சம் தடவ காதல்ல தோற்றாலும் பொண்ணுகளுக்கு தாடி வளராது. அதனால தாடி வளர்த்துட்டேன் எனக்குத்தான் சோகம் , பொண்ணுக தாடி வளர்க்கரதில்லை அதனால அவுங்களுக்கு சோகம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு திறியாதீங்க..!

நீதி 2 : ஒழுங்கு மரியாதையா மொக்கையே போட்டிருக்கலாமோ ..?!
ஒரு அறிமுகம் : நான் இந்தக் கதைல திருநங்கைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு நினைச்சேன் , ஆனா கதையின் நீளம் அதிகமா போய்டும் அப்படிங்கிறதால சொல்லமுடியல. ஆனா அதுக்காக சில பதிவுகளப் படிச்சேன். அந்த சமயத்துல தான் நம்ம லக்கிலுக் அண்ணன் புதிய தலைமுறைல ஒரு திருநங்கயோட வலைப்பக்கத்த பத்தி சொல்லிருந்தார்.அங்க நானும் சில பதிவுகள் படிச்சேன் .. உண்மைலேயே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உங்களுக்கு நேரம் இருந்தா நீங்களும் படிச்சு பாருங்க.! அந்த வலைப்பக்கம் இதோ http://livingsmile.blogspot.com ..

பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் செல்வா கோமாளியயோ, ரமேஷ் ரொம்ப நல்லவனையோ அல்லது பிரியமுடன் ரமேசையோ குறிப்பிடுவன அல்ல.!!

Tuesday, November 2, 2010

சருகு.! (தேவா ஸ்டைல்)

முன்குறிப்பு : நம்ம தேவா அண்ணன் ஸ்டைல்ல ஒரு பதிவு எழுதலாம் அப்படின்னு ஒரு சின்ன முயற்சி. அதனால தயவுசெஞ்சு இந்தப் பதிவுல யாரும் சிரிக்காதீங்க.! நான் காமெடி பண்ணலாம்னு முடிவு பண்ணினா சிரிப்பு வரமாட்டேங்குது. சரி ஒரு பதிவுல தத்துவம் சொல்லிப்பார்க்கலாம்னு வந்தேன்.!

சூரியன் தனது ஒளிக்கற்றைகளை செந்நிறமாக்கிக் கொண்டிருந்தது மாலைநேரம் வந்துவிட்டது எனக் கட்டியம் கூறிற்று. நான் எதுவும் தோன்றாதவனாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த சருகினைக் கவனித்துக்கொண்டிருந்தேன். சருகின் நுனியில் இருந்த சிறிய கரப்பான் பூச்சியொன்று மேலே செல்லப் போராடிக்கொண்டிருந்தது. இருந்தாலும் காற்றின் வேகத்தில் சருகின் ஆட்டத்தில் மேலே செல்வதும் கீழே வருவதுமாக இருந்தது. அதனில் இருந்த உயிர்ப்பயம் என்னை ஈர்த்ததால் நான் அதனை மரத்தில் ஏற்றிவிட்டேன்.! இந்தக்கணத்தில் என்னுள் ஒரு மாற்றம்.!

      இப்பொழுது நான் அந்த்தப் பூச்சியைக் காப்பற்றியதம் மூலம் நான் சிறந்தவனா.? இல்லை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நான் கெட்டவனா .? காப்பாற்றியதால் சிறந்தவன் என்றால் இப்பொழுது நான் காப்பாற்றியதன் மூலம் அது பூமியில் நிலைத்திருக்குமா.? அவ்வாறு நிலைத்திருந்தால் மட்டுமே நான் காப்பாற்றியது உண்மையாகும். ஆனால் அது இன்றோ நாளையோ இறந்து விடும் என்றால் நான் காப்பாற்றியது பொய்யா.?

    நாம் சந்திக்கும் மனிதரிடத்து நமது பெருமைகளையும் சாதனைகளையும் பேசுகிறோமே , நமது பெருமைகள் நிலையானதா.? ஒரு பிச்சைக்காரருக்கும் செல்வந்தருக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. பிச்சைக்காரறது உருவத்தாலும் அவரது தொழிலாலும் அவமானப்படுத்தப்படுகிறார். எனினும் இங்கே அவமானப்படுத்தப்படுவது அவரது உருவமே.! அதே போல செல்வந்தரும் பாராட்டப்படுகிறார். இங்கே பாராட்டப்படுவது அவரது உருவமே ( உடலே ).! ஆக இரண்டுமே பயனற்றதே. ஒருவருடைய பாராட்டைப் பெறுவதோ திட்டுக்களைப் பெறுவதோ அனைத்தும் உடல்சார்ந்ததாகவே உள்ளது.!
 
   இரண்டுமே பயனற்றது எனில் பயனுள்ளது எது என்ற கேள்வி எழலாம்.! சொல்லப்போனால் இங்கே பயனுள்ளது என்று எதுவுமே இல்லை. ஒருவனை நீங்கள் விபத்தில் இருந்து காப்பாற்றி விட்டு நான் உன்னைக்காப்பற்றி விட்டேன் என்று சொல்வதும் பொய்யானதே , எவ்வாறெனில் அவனை நீங்கள் இறப்பிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றியுள்ளீர்களே ஒழிய நிரந்தரமாக காப்பாற்றவில்லை.! நிச்சயம் ஒரு நாள் அவன் இறந்து விடுவான்.அப்பொழுது நான் உன்னை இறப்பிலிருந்து உன்னைக்காப்பாற்றிவிட்டேன் என்ற உங்கள் கூற்று பொய்யாய்ப்போகும்.! இன்பமோ , துன்பமோ , வலியோ வேதனையோ அது அழிந்துவிடும் இந்த உடலினை மையப்படுத்தியே இருக்கிறது. எனில் இந்த உடல்தான் நானா..? இங்கே கிடைக்கும் உறவுகளோ நட்புகளோ அனைத்தும் அதனின் நினைவுகளும் இந்த உடலுடனே முடிந்து விடுகிறது.! உடலினைத்தாண்டி வருவது எதுவும் உண்டா..?

  இங்கே கடவுள் பற்றி இரு கூற்றுகள் உண்டு. சிலர் கடவுள் என்ற ஒன்று உண்டு என்றும் சிலர் இல்லையென்றும் கூறுகின்றனர். கடவுள் உண்டென்போரின் கருத்துப்படி கடவுளே உலகைப் படைத்தவர் என்றும் நமக்கு துன்பங்கள் வரும்போது அவர் நம்மை காப்பவர் என்றும் நம்புகின்றனர். எனில் கடவுள் ஏன் துன்பமில்லா உலகைப்படைக்கவில்லை.? துன்பங்களைப் படைத்தது அது தீர அவரை வணங்க வேண்டும் என்பது அவரது எண்ணமா ..? என்றால் நாம் அவரது அடிமைகளா..? இது கடவுளை நம்பாதவர்களின் கேளிவிகள்.!

    கடவுள் என்பவர் யாருடைய துன்பத்திற்கோ , இன்பத்திற்கோ காரணமாக அமைவதில்லை. மேலே சொன்னது போல இது ஒரு நிலையில்லாத உலகம். எனில் இங்கே நமது வாழ்க்கையும் நிலையில்லை. இப்படி நிலையில்லாத ஒரு வாழ்க்கைக்கு கடவுள் ஏன் உதவ வேண்டும்.? இங்கே நீங்கள் காண்பதும் , சொந்தம் கொண்டாடுவதும் உங்களின் உடல் உள்ளவரை மட்டும் தானே.! இங்கே நீங்கள் அறிவாளியாகவோ முட்டாளாகவோ இருப்பதும் இந்த உடல் உள்ளவரைதான். ஆக நீங்கள் நான் பெரிய அறிவாளி என்று ஆணவம் கொள்வதும் நான் பெரிய செல்வந்தர் என்று செருக்கு கொள்வதும் நிலைக்கப் போவதில்லை.!

    பொய்யான இந்த வாழ்க்கைக்கு கடவுள் உதவுவார் என்று நினைப்பதும் உதவவில்லை என்றால் கடவுளே இல்லை என்று நினைப்பதும் அவரவர் விருப்பமே.நாத்திக வாதிகளின் கூற்றுப்படி கடவுள் உலகைப் படைத்திருந்தால் படைக்கும் போதே அனைவருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் படைத்திருக்கலாமே , ஏன் இவ்வளவு கொடுமைகளைப் படைத்திருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. சொல்லப்போனால் கடவுள் தான் உலகைப்படைத்தவர் என்ற கூற்றிலேயே அதற்க்கான விளக்கமும் இருக்கிறது. உயிர்களெல்லாம் சமம் என்று கொள்வோமேயானால் இங்கே மனித உயிரும் எறும்பின் உயிரும் சமமே. எனில் எறும்பின் மீது காட்டப்படும் கருணைதானே மனிதன்மீதும் காட்டப்படும்.!

   இன்பமோ துன்பமோ ,வாழ்வோ சாவோ , மகிழ்ச்சியோ வேதனையோ அது அடுத்தவரையோ கடவுளையோ சார்ந்தது அல்ல. நம்மை மட்டுமே சார்ந்ததாக உள்ளது. உங்களுக்கு எத்தனை பெரிய துன்பங்கள் வந்தபோதும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள்  " இது நிலையானது அல்ல " . யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அது அழிந்துவிடும் உடலையே குறிக்கிறது. உங்களை அல்ல. இந்தக்கட்டுரையின் முடிவில் ஒரு கேள்வியுடன் முடித்துக்கொள்கிறேன்..! உடல் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார்..?


சிறு உதவி : திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த லிங்க் இருந்தால் குடுங்க. அடுத்த கதைக்கு தேவைப்படுது.!

நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!!

என்புத்தி எனக்கு கூறிய அறிவுரை : ( சத்தியமா எனக்கு புத்தி இருக்குதுங்க , போன வாரம் தான் தீபாவளி தள்ளுபடில வாங்கினேன் ., 2 கிலோ, 200 ரூபாய் சொன்னாங்க நான் 50 ரூபாய் தள்ளுபடி பண்ணி 250 க்கு வாங்கினேன் )  உனக்கெல்லாம் எதுக்கு இந்த ஆராய்ச்சி.? உன் லெவலுக்கு கொசுவுக்கு கொம்பு இருக்குதா , எலிக்கு ஏன் வால் இருக்குது அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே..!
  
பின்குறிப்பு : இந்த சில விசயங்கள் எழுதரக்கே எனக்கு ஒரு வாரம் ஆச்சு. ஆனா தேவா அண்ணன் எப்படித்தான் இவ்ளோ எழுதராரோ..? சத்தியமா தேவா அண்ணா நீங்க GREAT தான்.!