Tuesday, November 2, 2010

சருகு.! (தேவா ஸ்டைல்)

முன்குறிப்பு : நம்ம தேவா அண்ணன் ஸ்டைல்ல ஒரு பதிவு எழுதலாம் அப்படின்னு ஒரு சின்ன முயற்சி. அதனால தயவுசெஞ்சு இந்தப் பதிவுல யாரும் சிரிக்காதீங்க.! நான் காமெடி பண்ணலாம்னு முடிவு பண்ணினா சிரிப்பு வரமாட்டேங்குது. சரி ஒரு பதிவுல தத்துவம் சொல்லிப்பார்க்கலாம்னு வந்தேன்.!

சூரியன் தனது ஒளிக்கற்றைகளை செந்நிறமாக்கிக் கொண்டிருந்தது மாலைநேரம் வந்துவிட்டது எனக் கட்டியம் கூறிற்று. நான் எதுவும் தோன்றாதவனாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த சருகினைக் கவனித்துக்கொண்டிருந்தேன். சருகின் நுனியில் இருந்த சிறிய கரப்பான் பூச்சியொன்று மேலே செல்லப் போராடிக்கொண்டிருந்தது. இருந்தாலும் காற்றின் வேகத்தில் சருகின் ஆட்டத்தில் மேலே செல்வதும் கீழே வருவதுமாக இருந்தது. அதனில் இருந்த உயிர்ப்பயம் என்னை ஈர்த்ததால் நான் அதனை மரத்தில் ஏற்றிவிட்டேன்.! இந்தக்கணத்தில் என்னுள் ஒரு மாற்றம்.!

      இப்பொழுது நான் அந்த்தப் பூச்சியைக் காப்பற்றியதம் மூலம் நான் சிறந்தவனா.? இல்லை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நான் கெட்டவனா .? காப்பாற்றியதால் சிறந்தவன் என்றால் இப்பொழுது நான் காப்பாற்றியதன் மூலம் அது பூமியில் நிலைத்திருக்குமா.? அவ்வாறு நிலைத்திருந்தால் மட்டுமே நான் காப்பாற்றியது உண்மையாகும். ஆனால் அது இன்றோ நாளையோ இறந்து விடும் என்றால் நான் காப்பாற்றியது பொய்யா.?

    நாம் சந்திக்கும் மனிதரிடத்து நமது பெருமைகளையும் சாதனைகளையும் பேசுகிறோமே , நமது பெருமைகள் நிலையானதா.? ஒரு பிச்சைக்காரருக்கும் செல்வந்தருக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. பிச்சைக்காரறது உருவத்தாலும் அவரது தொழிலாலும் அவமானப்படுத்தப்படுகிறார். எனினும் இங்கே அவமானப்படுத்தப்படுவது அவரது உருவமே.! அதே போல செல்வந்தரும் பாராட்டப்படுகிறார். இங்கே பாராட்டப்படுவது அவரது உருவமே ( உடலே ).! ஆக இரண்டுமே பயனற்றதே. ஒருவருடைய பாராட்டைப் பெறுவதோ திட்டுக்களைப் பெறுவதோ அனைத்தும் உடல்சார்ந்ததாகவே உள்ளது.!
 
   இரண்டுமே பயனற்றது எனில் பயனுள்ளது எது என்ற கேள்வி எழலாம்.! சொல்லப்போனால் இங்கே பயனுள்ளது என்று எதுவுமே இல்லை. ஒருவனை நீங்கள் விபத்தில் இருந்து காப்பாற்றி விட்டு நான் உன்னைக்காப்பற்றி விட்டேன் என்று சொல்வதும் பொய்யானதே , எவ்வாறெனில் அவனை நீங்கள் இறப்பிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றியுள்ளீர்களே ஒழிய நிரந்தரமாக காப்பாற்றவில்லை.! நிச்சயம் ஒரு நாள் அவன் இறந்து விடுவான்.அப்பொழுது நான் உன்னை இறப்பிலிருந்து உன்னைக்காப்பாற்றிவிட்டேன் என்ற உங்கள் கூற்று பொய்யாய்ப்போகும்.! இன்பமோ , துன்பமோ , வலியோ வேதனையோ அது அழிந்துவிடும் இந்த உடலினை மையப்படுத்தியே இருக்கிறது. எனில் இந்த உடல்தான் நானா..? இங்கே கிடைக்கும் உறவுகளோ நட்புகளோ அனைத்தும் அதனின் நினைவுகளும் இந்த உடலுடனே முடிந்து விடுகிறது.! உடலினைத்தாண்டி வருவது எதுவும் உண்டா..?

  இங்கே கடவுள் பற்றி இரு கூற்றுகள் உண்டு. சிலர் கடவுள் என்ற ஒன்று உண்டு என்றும் சிலர் இல்லையென்றும் கூறுகின்றனர். கடவுள் உண்டென்போரின் கருத்துப்படி கடவுளே உலகைப் படைத்தவர் என்றும் நமக்கு துன்பங்கள் வரும்போது அவர் நம்மை காப்பவர் என்றும் நம்புகின்றனர். எனில் கடவுள் ஏன் துன்பமில்லா உலகைப்படைக்கவில்லை.? துன்பங்களைப் படைத்தது அது தீர அவரை வணங்க வேண்டும் என்பது அவரது எண்ணமா ..? என்றால் நாம் அவரது அடிமைகளா..? இது கடவுளை நம்பாதவர்களின் கேளிவிகள்.!

    கடவுள் என்பவர் யாருடைய துன்பத்திற்கோ , இன்பத்திற்கோ காரணமாக அமைவதில்லை. மேலே சொன்னது போல இது ஒரு நிலையில்லாத உலகம். எனில் இங்கே நமது வாழ்க்கையும் நிலையில்லை. இப்படி நிலையில்லாத ஒரு வாழ்க்கைக்கு கடவுள் ஏன் உதவ வேண்டும்.? இங்கே நீங்கள் காண்பதும் , சொந்தம் கொண்டாடுவதும் உங்களின் உடல் உள்ளவரை மட்டும் தானே.! இங்கே நீங்கள் அறிவாளியாகவோ முட்டாளாகவோ இருப்பதும் இந்த உடல் உள்ளவரைதான். ஆக நீங்கள் நான் பெரிய அறிவாளி என்று ஆணவம் கொள்வதும் நான் பெரிய செல்வந்தர் என்று செருக்கு கொள்வதும் நிலைக்கப் போவதில்லை.!

    பொய்யான இந்த வாழ்க்கைக்கு கடவுள் உதவுவார் என்று நினைப்பதும் உதவவில்லை என்றால் கடவுளே இல்லை என்று நினைப்பதும் அவரவர் விருப்பமே.நாத்திக வாதிகளின் கூற்றுப்படி கடவுள் உலகைப் படைத்திருந்தால் படைக்கும் போதே அனைவருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் படைத்திருக்கலாமே , ஏன் இவ்வளவு கொடுமைகளைப் படைத்திருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. சொல்லப்போனால் கடவுள் தான் உலகைப்படைத்தவர் என்ற கூற்றிலேயே அதற்க்கான விளக்கமும் இருக்கிறது. உயிர்களெல்லாம் சமம் என்று கொள்வோமேயானால் இங்கே மனித உயிரும் எறும்பின் உயிரும் சமமே. எனில் எறும்பின் மீது காட்டப்படும் கருணைதானே மனிதன்மீதும் காட்டப்படும்.!

   இன்பமோ துன்பமோ ,வாழ்வோ சாவோ , மகிழ்ச்சியோ வேதனையோ அது அடுத்தவரையோ கடவுளையோ சார்ந்தது அல்ல. நம்மை மட்டுமே சார்ந்ததாக உள்ளது. உங்களுக்கு எத்தனை பெரிய துன்பங்கள் வந்தபோதும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள்  " இது நிலையானது அல்ல " . யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அது அழிந்துவிடும் உடலையே குறிக்கிறது. உங்களை அல்ல. இந்தக்கட்டுரையின் முடிவில் ஒரு கேள்வியுடன் முடித்துக்கொள்கிறேன்..! உடல் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார்..?


சிறு உதவி : திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த லிங்க் இருந்தால் குடுங்க. அடுத்த கதைக்கு தேவைப்படுது.!

நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!!

என்புத்தி எனக்கு கூறிய அறிவுரை : ( சத்தியமா எனக்கு புத்தி இருக்குதுங்க , போன வாரம் தான் தீபாவளி தள்ளுபடில வாங்கினேன் ., 2 கிலோ, 200 ரூபாய் சொன்னாங்க நான் 50 ரூபாய் தள்ளுபடி பண்ணி 250 க்கு வாங்கினேன் )  உனக்கெல்லாம் எதுக்கு இந்த ஆராய்ச்சி.? உன் லெவலுக்கு கொசுவுக்கு கொம்பு இருக்குதா , எலிக்கு ஏன் வால் இருக்குது அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே..!
  
பின்குறிப்பு : இந்த சில விசயங்கள் எழுதரக்கே எனக்கு ஒரு வாரம் ஆச்சு. ஆனா தேவா அண்ணன் எப்படித்தான் இவ்ளோ எழுதராரோ..? சத்தியமா தேவா அண்ணா நீங்க GREAT தான்.!

107 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the fist

dheva said...

என் தம்பி..............!!!!!!!!!!!!PROUD OF U THAMBI...!

அதிகமா ஒண்ணும் சொல்ல முடியல... எல்லோரும் உன்னை மொக்கை போடுறன்னு சொல்றாங்க..ஆன உனக்கு பின்னால இருக்குற பின்புலம் என்னனு எனக்கு எப்பவோ தெரியும்......

நீ இன்னும் என்ன என்னவோ பண்ண போற பாரு.....!

மறுபடியும்...........

என் தம்பி...!

dheva said...

கும்மியடிக்கிறேன் பேர்வழின்னு...செல்வாவ.. மட்டுப்படுத்தி பாத்துறாதீங்க.. தம்பீஸ்........ப்ளீஸ்!

என்ன பற்றி சொல்லியிருகான்னு இத சொல்லல.. .என் ஆழ்மன வெளிப்பாடு...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்படியே ஓடி போயிரு இந்தப்பக்கம் வந்துடாத. யார் பெத்த புள்ளையோ இதுக்குள்ளையும் ஒரு தேடல் இருந்திருக்கு பாரேன்..

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா!
என்னைத் தேடி எனக்குள்ளேயே ஒரு பயணம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

really superb selva. all the best

ப.செல்வக்குமார் said...

//அப்படியே ஓடி போயிரு இந்தப்பக்கம் வந்துடாத. யார் பெத்த புள்ளையோ இதுக்குள்ளையும் ஒரு தேடல் இருந்திருக்கு பாரேன்.. //

அடுத்த பதிவுல மொக்க போடுவேன் ..!! infact இனி எல்லாப் பதிவுலயும் மொக்கதான் போடுவேன் .. ( வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி படிங்க )

தேவா said...

உண்மையிலேயே நன்றாக இருக்கிறது கண்டினியு பண்ணுங்க செல்வா பாஸ்.

ப.செல்வக்குமார் said...

//எல்லோரும் உன்னை மொக்கை போடுறன்னு சொல்றாங்க..ஆன உனக்கு பின்னால இருக்குற பின்புலம் என்னனு எனக்கு எப்பவோ தெரியும்......//

நன்றி தேவா அண்ணா .!! ஆனா உங்க ஸ்டைல்ல எழுதறது சத்தியமா ரொம்ப ரொம்ப கஷ்டம் ..!!

ப.செல்வக்குமார் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
really superb selva. all the பெஸ்ட்//

ஐயோ , எல்லோருமா சேர்ந்து என்னைய மாத்திராதீங்க .
நான் அப்படியேதான் இருக்கேன் .. !!

எஸ்.கே said...

இதுபோலவும் அடிக்கடி எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//அதனில் இருந்த உயிர்ப்பயம்//

என்னாது உயிர் பயமா?? கரப்பான் பூச்சி மரம் இல்லை மாடில இருந்து விழுந்தாலும் சாகாது. வேணும்னா ஒரு கரப்பான்பூச்சியை தூக்கி போட்டு பாரு...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Excellent, no other words!

Keep it up, Selva!

ப.செல்வக்குமார் said...

//எஸ்.கே said...
இதுபோலவும் அடிக்கடி எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!//

என்ன நக்கலா ..? இதுக்கே முடியல ..

Balaji saravana said...

செல்வா, 100௦௦ பாலோயர் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
நல்ல கோர்வையா (போர்வையா இல்ல கோர்வையா.. ;) ) எழுதியிருக்க.. சூப்பர்.. :)

ப.செல்வக்குமார் said...

//என்னாது உயிர் பயமா?? கரப்பான் பூச்சி மரம் இல்லை மாடில இருந்து விழுந்தாலும் சாகாது. வேணும்னா ஒரு கரப்பான்பூச்சியை தூக்கி போட்டு பாரு...//

அது ஒரு ப்லொவ்ல வந்துடுச்சு , ஆனாலும் உங்களுக்கு ..?!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//நீங்கள் யார்..?//

ஆத்மா!! பரமாத்மாவின் ஒரு அங்கம்... :)

தேவா said...

ஏதோ கிலோ கணக்குல வாங்கினேன்னு சொன்னீங்களே எந்த கடை கொஞ்சம் அட்ரஸ் கிடைக்குமா?

ஜீவன்பென்னி said...

யாருப்பா அது எங்க அண்ணனுக்கு போட்டியா வாரது............ படவா பிச்சுபுடுவேன் பிச்சு.........

ப.செல்வக்குமார் said...

//ஏதோ கிலோ கணக்குல வாங்கினேன்னு சொன்னீங்களே எந்த கடை கொஞ்சம் அட்ரஸ் கிடைக்குமா? //

உங்களுக்கும் தேவைப்படுதுங்களா ..?

ப.செல்வக்குமார் said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Excellent, no other words!

Keep it up, Selva!//

நன்றி அண்ணா ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

பாரேன் மொக்க போடர பையனுக்கு எவ்வளோ அறிவு...

ப.செல்வக்குமார் said...

//பாரேன் மொக்க போடர பையனுக்கு எவ்வளோ அறிவு...//

அதான் இப்பத்தான் இரண்டு கிலோ வாங்கினேன் அப்படின்னு சொன்னேன்ல..!!

Kousalya said...

செல்வா ஏற்கனவே உங்க கதை ஒன்றை படித்து வியந்தேன்....! இப்ப தேவாவின் எழுத்து நடையில் இந்த பதிவு...! தெளிவான அதே நேரம் படிப்பவர்களை யோசிக்க வைக்கிறது உங்கள் எழுத்துக்கள்...

//யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அது அழிந்துவிடும் உடலையே குறிக்கிறது. உங்களை அல்ல. உடல் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார்..?//

ம்....தேடல் தொடருகிறது....!

நீங்க கேட்ட லிங்க் : http://ai.eecs.umich.edu/people/conway/TSsuccesses/Kalki/Kalki.html

பிரியமுடன் ரமேஷ் said...
This comment has been removed by the author.
பிரியமுடன் ரமேஷ் said...

செம... அசத்திட்டீங்க..

//கோமாளி போராளி ஆக முடியாது.!!

பயங்கரமா பின்றீங்களே... அந்த ரெண்டு புள்ளிய வெச்சிட்டீங்க போல..

தேவா said...

//உங்களுக்கும் தேவைப்படுதுங்களா ..? //

கண்டிப்பா வேணும்ங்ணா. நானும் என்னென்னெவோ யோசிச்சு பாக்கறேன் ஒண்ணுமே வரமாட்டிங்குது.

ப.செல்வக்குமார் said...

//கண்டிப்பா வேணும்ங்ணா. நானும் என்னென்னெவோ யோசிச்சு பாக்கறேன் ஒண்ணுமே வரமாட்டிங்குது. //

கண்டிப்பா நம்ம ஊர்லதான் கிடைக்குது.. கண்டிப்பா உங்களுக்கு வழி சொல்லுறேன் ..!!

ப.செல்வக்குமார் said...

//செல்வா ஏற்கனவே உங்க கதை ஒன்றை படித்து வியந்தேன்....! இப்ப தேவாவின் எழுத்து நடையில் இந்த பதிவு...! தெளிவான அதே நேரம் படிப்பவர்களை யோசிக்க வைக்கிறது உங்கள் எழுத்துக்கள்... //

நன்றிங்க அக்கா ..!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வித்தியாசமா இருக்குய்யா..கோபியில கஞ்சா சலுசா கிடைக்குதா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த லிங்க் இருந்தால் குடுங்க. அடுத்த கதைக்கு தேவைப்படுது//
செத்தாண்டா தமிழன்...திருநங்கைகள் பத்தி நானு எதுவும் சொல்லலைங்கோ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்பமோ துன்பமோ ,வாழ்வோ சாவோ , மகிழ்ச்சியோ வேதனையோ அது அடுத்தவரையோ கடவுளையோ சார்ந்தது அல்ல. நம்மை மட்டுமே சார்ந்ததாக உள்ளது. //
உன் வாழ்க்கை உன் கையில்?

ப.செல்வக்குமார் said...

//கோபியில கஞ்சா சலுசா கிடைக்குதா //

நல்ல பையன கெடுக்க பாக்குறீங்களே ..?!

அருண் பிரசாத் said...

செல்வா நல்லா எழுதி இருக்குற


ஆனாலும், அதுல மைல்டா தேவாவை நக்கல் அடிச்சி இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யார் பெத்த புள்ளையோ இதுக்குள்ளையும் ஒரு தேடல் இருந்திருக்கு பாரேன்//
இது இனிமே தேறாது....கட்டம் கட்டிருவாய்ங்க..எப்படியோ அடுத்த கட்டத்துக்கு போயிருச்சி..இனிமே பிரபல பதிவர் லிஸ்ட்ல வெச்சிருவாய்ங்க..

ப.செல்வக்குமார் said...

//ஆனாலும், அதுல மைல்டா தேவாவை நக்கல் அடிச்சி இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங் ///
எதிர்க்கட்சி அப்படிங்கிறத காட்டிட்டீங்களே ..? நக்கல் எல்லாம் அடிக்கலைங்க..!!
நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டு போய்டாதீங்க ..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆனாலும், அதுல மைல்டா தேவாவை நக்கல் அடிச்சி இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்//
அப்படி சொல்ல முடியாது...தழுவல்னும் சொல்ல முடியாது...ஃபார்முலா னு சொல்லலாம்

ப.செல்வக்குமார் said...

//எப்படியோ அடுத்த கட்டத்துக்கு போயிருச்சி..இனிமே பிரபல பதிவர் லிஸ்ட்ல வெச்சிருவாய்ங்க.. //

அப்படி சொல்லிடுவாங்க அப்படின்னுதான் நான் புத்தி வாங்கின கதைய சொன்னேன் .. அதைய படிச்சிட்டு கூடவா சொல்லுவாங்க ...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜீவன்பென்னி

//யாருப்பா அது எங்க அண்ணனுக்கு போட்டியா வாரது............ படவா பிச்சுபுடுவேன் பிச்சு......... //

ஆமாம். உங்க அண்ணன் தேடர லட்சனம் எனக்கு தான் தெரியும்... ஷார்ஜா - துபாய் கார் லிப்ட் வேணும் சொல்லி ஒரு மாசம் ஆச்சி... தோ!! இப்பொ கூப்பிடரன் மாப்ஸ் சொல்லிட்டு போன மனுசன்... இன்னும் தேடறாரு...:)))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த சில விசயங்கள் எழுதரக்கே எனக்கு ஒரு வாரம் ஆச்சு. ஆனா தேவா அண்ணன் எப்படித்தான் இவ்ளோ எழுதராரோ..//
அன்ணன் அதே வேலையா இருக்கணும்

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஆனாலும், அதுல மைல்டா தேவாவை நக்கல் அடிச்சி இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங் //

நம்ம கண்ணு அப்படி மச்சி!! நக்கல் அடிச்சே பழக்க பட்டுடோம்.. :)) பார்வை கோனத்தை மாற்றினால் காட்சியின் சத்தியம் புலப்படும்... இப்பொ நான் யாரை நக்கல் அடிச்சேன் சொல்லூ??

என்னது நானு யாரா? said...

சிந்தனைகள் நன்றாக இருக்கின்றன செல்வா! நான் உடலில்லை என்று மனிதன் எப்போது உணர்கின்றானோ அப்போதே அவனுக்கு மனநிம்மதிக் கிடைக்கும். தேவா ஸ்டைலில் நன்றாக எழுதப்பட்ட பதிவு. அருமை! அருமை! நன்றாக இருந்தது.

அவர் மாதிரி எழுதுவது கஷ்டம் என்று சொல்ற தம்பி. அவர் உணர்ந்ததை எழுதறாரு. நீயும் தியானம் வழியா ஆழ்மனசுக்குள்ளே போய் பாரு! உனக்குள்ளும் ஞான ஊற்று கிளம்பி வருவதைப் பார்க்கலாம். அறிவை செம்மையாக்கிக் கொள்வோம். வாழ்த்துக்கள்!!!

ப.செல்வக்குமார் said...

// பார்வை கோனத்தை மாற்றினால் காட்சியின் சத்தியம் புலப்படும்... இப்பொ நான் யாரை நக்கல் அடிச்சேன் சொல்லூ?? //

எனக்குத் தெரியும் ஆனா நான் சொல்ல மாட்டேன் .!!!

வெறும்பய said...

அருமையா எழுதியிருக்கே செல்வா... பாராட்டுக்கள்...

அடிக்கடி எழுது இது போல...

ப.செல்வக்குமார் said...

//அருமையா எழுதியிருக்கே செல்வா... பாராட்டுக்கள்...

அடிக்கடி எழுது இது போல...
//

ஏன் நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ..?

karthikkumar said...

நல்லா இருக்கு பங்காளி. ஆனா உங்க பழைய பதிவுகள படிச்சிட்டு இத படிச்சா ஒன்னும் தோனல. ஆனா நல்லா இருக்கு

ப.செல்வக்குமார் said...

//நல்லா இருக்கு பங்காளி. ஆனா உங்க பழைய பதிவுகள படிச்சிட்டு இத படிச்சா ஒன்னும் தோனல. ஆனா நல்லா இருக்கு ///

அப்படி ஏதும் தொனக்கூடது அப்படின்னுதான் இப்படிங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சற்று முன் கிடைத்த செய்தி. இந்த பதிவை தேவா அண்ணன் கால்ல விழுந்து எழுதி வாங்கிட்டு வந்தான் செல்வா(நாராயணா நாராயணா)

ப.செல்வக்குமார் said...

//
சற்று முன் கிடைத்த செய்தி. இந்த பதிவை தேவா அண்ணன் கால்ல விழுந்து எழுதி வாங்கிட்டு வந்தான் செல்வா(நாராயணா நாராயணா) //

கிடையவே கிடையாது .. ஏன்னா அவரு எழுதினா எவ்ளோ மொக்கையா எழுத முடியாது ..!!

ப.செல்வக்குமார் said...

//அவர் உணர்ந்ததை எழுதறாரு. நீயும் தியானம் வழியா ஆழ்மனசுக்குள்ளே போய் பாரு! உனக்குள்ளும் ஞான ஊற்று கிளம்பி வருவதைப் பார்க்கலாம். அறிவை செம்மையாக்கிக் கொள்வோம். வாழ்த்துக்கள்!!!//

நன்றி அண்ணா ., அவ்ளோ தூரம் போறதுக்கு எல்லாம் எனக்கு தெரியாது ... அதனால நான் மறுபடி மொக்கைக்கு திரும்புறேன் ..

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நல்ல இருக்கு இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை .............
மொக்கை போடு அப்ப அப்ப இப்படியும் ஒரு பதிவு போடு .அப்ப தான் நம்ம டெர்ரர் ,ரமேஷ் பன்னி எல்லோரும் திருந்துவாங்க .இதுல வேற ஒருத்தன் சிங்கபோரே போறானாம் .ஐயோ அங்க போயிட்டு வந்து நின்னது ,உட்கார்ந்தது ,குத்த வச்சது வரைக்கும் பதிவ போடுவான்.

Madhavan said...

//ஒருவனை நீங்கள் விபத்தில் இருந்து காப்பாற்றி விட்டு நான் உன்னைக்காப்பற்றி விட்டேன் என்று சொல்வதும் பொய்யானதே , எவ்வாறெனில் அவனை நீங்கள் இறப்பிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றியுள்ளீர்களே ஒழிய நிரந்தரமாக காப்பாற்றவில்லை.! நிச்சயம் ஒரு நாள் அவன் இறந்து விடுவான்.அப்பொழுது நான் உன்னை இறப்பிலிருந்து உன்னைக்காப்பாற்றிவிட்டேன் என்ற உங்கள் கூற்று பொய்யாய்ப்போகும்.! //

Good that you are not a Doctor.

மங்குனி அமைசர் said...

இங்கே கடவுள் பற்றி இரு கூற்றுகள் உண்டு. சிலர் கடவுள் என்ற ஒன்று உண்டு என்றும் சிலர் இல்லையென்றும் கூறுகின்றனர். கடவுள் உண்டென்போரின் கருத்துப்படி கடவுளே உலகைப் படைத்தவர் என்றும் நமக்கு துன்பங்கள் வரும்போது அவர் நம்மை காப்பவர் என்றும் நம்புகின்றனர். எனில் கடவுள் ஏன் துன்பமில்லா உலகைப்படைக்கவில்லை.? துன்பங்களைப் படைத்தது அது தீர அவரை வணங்க வேண்டும் என்பது அவரது எண்ணமா ..? என்றால் நாம் அவரது அடிமைகளா..? இது கடவுளை நம்பாதவர்களின் கேளிவிகள்.!///

good one komaali , .............. great

Arun Prasath said...

உண்மை சார், ஆனா அவன காப்பாற்றியதன் மூலம், அவன நம்பி, வாழ்வதற்கு தேவையான வசதிகள எதிர்பாத்திட்டு இருக்கற 1 இல்ல 2 இல்ல 100 பேர் ஓட வாழ்வாதாரத்த காப்பற்றி இருக்கோம் இல்லையா? அதுவும் தற்காலிகம் தான், ஆனாலும் அவன் சாகரகுள்ள அவன நம்பி இருகறவங்கள கரை சேத்திடலாம் இல்லீங்களா? அதனால அவன தற்கலிகமா காப்பாத்தறது கூட நல்லது தான?
ஏதோ எனக்கு தோன்றத சொன்னனேன் தல.

//நாத்திக வாதிகளின் கூற்றுப்படி கடவுள் உலகைப் படைத்திருந்தால் படைக்கும் போதே அனைவருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் படைத்திருக்கலாமே ///

இங்க ஆத்திகவாதி னு தான வரணும்?

நல்ல முயற்சி தல......

ப.செல்வக்குமார் said...

//அதனால அவன தற்கலிகமா காப்பாத்தறது கூட நல்லது தான?
ஏதோ எனக்கு தோன்றத சொன்னனேன் தல.///

நான் சொல்ல வந்தது அவர மட்டும் இல்லீங்க .. இங்க கரை ஏத்துறது அப்படிங்கிறதே போய் அப்படின்னு சொல்ல வந்தேங்க ..!!

Arun Prasath said...

ஒரு சின்ன டவுட்? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?

ப.செல்வக்குமார் said...

//ஒரு சின்ன டவுட்? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
//

நிறைய இருக்குங்க ..!!

Arun Prasath said...

அப்பா வேணாம் விடுங்க, வீணா கடசில இந்த விவாதம் கடவுள் இருக்காரா இல்லையாங்கற பழைய கேள்விக்கு மாறிடும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல....

ப.செல்வக்குமார் said...

///அப்பா வேணாம் விடுங்க, வீணா கடசில இந்த விவாதம் கடவுள் இருக்காரா இல்லையாங்கற பழைய கேள்விக்கு மாறிடும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.... ///

சரிங்க ., எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அப்படின்னு சொல்லுரவங்களையும் பிடிக்கும் ..!!

Arun Prasath said...

//சரிங்க ., எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அப்படின்னு சொல்லுரவங்களையும் பிடிக்கும் ..!!//

நன்றி( இதுல ஏதும் உல் குத்து இல்லையே )

ப.செல்வக்குமார் said...

//நன்றி( இதுல ஏதும் உல் குத்து இல்லையே ) //

கோமாளிப்பயளுக்கு அதெல்லாம் தெரியாதுங்க ..!!

Arun Prasath said...

அப்ப சரி.....மிக்க நன்றி

ப.செல்வக்குமார் said...

//அப்ப சரி.....மிக்க நன்றி //

அப்புறம் நான் ஒண்ணும் நல்ல பதிவர் இல்லீங்க , மொக்கைப் பதிவர் தான் .. போன பதிவுல கம்முனு வாய வச்சிருக்காம தேவா ஸ்டைல்ல எழுதறேன் பேர்வழி அப்படின்னு சொன்னதால உங்களுக்கு இந்த தண்டனை ..!! மத்தபடி ஒண்ணும் பயக்க வேண்டாம் . மொக்கைகள் தொடரும் ..!

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

கடவுள் இருக்கிறார?

இருக்கிறார்.

எங்கு இருக்கிறார்?

அவர் வீட்டுல இருக்கரு.

அவர் வீடு எங்க இருக்கு?

அவர் தங்கி இருக்க இடம் தான் அவர் வீடு.

அவர் எங்கு தங்கி இருக்கிறார்?

அவர் வீட்டுல.

அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

அவர் வேலையை.

அவர் வேலை என்ன?

அவர் செய்து கொண்டு இருப்பது.

(இப்பொ ஆரம்பத்துல இருந்து)

கடவுள் இருக்காரா?

இல்லை.

அட ஒரே வார்த்தைல முடிஞ்சி போச்சி... கடவுள் இருக்காரு சொன்னாலே தேடல் நிக்காது போல....:))

ப.செல்வக்குமார் said...

//அட ஒரே வார்த்தைல முடிஞ்சி போச்சி... கடவுள் இருக்காரு சொன்னாலே தேடல் நிக்காது போல....:)) //

எப்படி அண்ணா உங்களால மட்டும் இப்படியெல்லாம் ,,,? சரி எதுக்கும் தேவா அண்ணன் கூட சேராதீங்க .. நான் மொக்கைக்கே திரும்புகிறேன் ,,,

Arun Prasath said...

//மொக்கைகள் தொடரும் ..!//

நமக்கு அது ஒன்னு தான நல்லா வரும்


//கடவுள் இருக்காரா?

இல்லை.

அட ஒரே வார்த்தைல முடிஞ்சி போச்சி... கடவுள் இருக்காரு சொன்னாலே தேடல் நிக்காது போல....:)) //

எனக்கு இந்த அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு TERROR

சௌந்தர் said...

ஒரு கரப்பான் பூச்சி வந்து உன்னை எப்படி எல்லாம் மிரட்டி இருக்கு. உன்னை காப்பாற்றிய கரப்பான் பூச்சி வாழ்க..

சௌந்தர் said...

நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!!////

இந்த கதை எல்லாம் விடாதே இந்த பதிவு போராளியை விட சூப்பர்...

இம்சைஅரசன் பாபு.. said...

@டெர்ரர்
சாமி இன்னைக்கு நைட் வந்து உன் கண்ண குத்தும்

TERROR-PANDIYAN(VAS) said...

@Arun Prasath

//எனக்கு இந்த அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு TERROR//

ஆனா அருண் லைப்ல ஒரு தேடல் இல்லைன போர் அடிக்கும்... அதனால வாங்கலேன் போய் தேடலாம்... ஹா..ஹா..ஹா..

ப.செல்வக்குமார் said...

//ஆனா அருண் லைப்ல ஒரு தேடல் இல்லைன போர் அடிக்கும்... அதனால வாங்கலேன் போய் தேடலாம்... ஹா..ஹா..ஹா.. //

நீங்க எதவோ தேடுங்க ..
என்னோட அடுத்த முயற்சி எங்க தலைவர் வெங்கட் அண்ணன் ஸ்டைல் ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன் பாபு

//சாமி இன்னைக்கு நைட் வந்து உன் கண்ண குத்தும்//

வேணாம் மக்கா!! நான் நைட்டு படம் பாக்கனும். அதனால ஆபிஸ் டைம்ல வர சொல்லுங்க. அப்பொதான் நான் தூங்குவேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

// அட ஒரே வார்த்தைல முடிஞ்சி போச்சி... கடவுள் இருக்காரு சொன்னாலே தேடல் நிக்காது போல....://

தேடல் என்பது வாழ்கையில் முக்கியமா ஒன்று .....நீங்க என்ன தேடுறீங்க வாழ்கை வாழ்வதற்காக பொருள் தேடுறீங்க .......மொக்கை போடுவதற்காக நிறைய புக்ஸ் தேடி படிக்றீங்க .........நல்ல பதிவு படிக்கிறது ப்ளொக்ஸ் தேடுறீங்க ....துணி எடுக்க துணி கடைல போய் அவர் தர துணிய வா எடிகிறீங்க தேடி பார்த்து எடுப்பதில்ல ..........வாழ்கையில் தேடல் இல்லை என்றால்.......அதற்கு அப்புறம் வாழ வேண்டிய அவசியம் இல்லை ...... ....... இப்போ டெர்ரர் கூட கடல் கடந்து பொருள் தேடுறார் .........இப்ப சொல்லுங்க கடவுள் இருகிறார? இல்லையா ?

TERROR-PANDIYAN(VAS) said...

74

TERROR-PANDIYAN(VAS) said...

75

ப.செல்வக்குமார் said...

//இப்போ டெர்ரர் கூட கடல் கடந்து பொருள் தேடுறார் .........இப்ப சொல்லுங்க கடவுள் இருகிறார? இல்லையா ?//

நான் வீட்டுக்குப் போறேன் ..!!

மாணவன் said...

அருமை நண்பா,
செம கலக்கல்...
”நான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey )”

உங்கள் இலட்சியம் விரைவில் நிறைவேற
வாழ்த்துக்கள்
நன்றி
நட்புடன்
மாணவன்

சி.பி.செந்தில்குமார் said...

yoov யோவ் செல்வா என்னய்யா அவார்டா வாங்கி குவிச்சிருக்கே?ஏது இவ்வளவு?எப்படி கிடைச்சுது?

சி.பி.செந்தில்குமார் said...

சிறு உதவி : திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த லிங்க் இருந்தால் குடுங்க. அடுத்த கதைக்கு தேவைப்படுது.!அந்த லின்க் எல்லாம் ராம்சாமிக்கு தான் தெரியும்

சி.பி.செந்தில்குமார் said...

நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!!


கோமாளி போராளி

யோவ் கையை குடு இன்று முதல் நீர் கவிஞன் ஆனீர்

சி.பி.செந்தில்குமார் said...

சீரியஸ் ஆகக்கூடாது,சிரிப்புப்போலீசை பார்க்கனும்,அவர் மாதிரி தொடர்ந்து மொக்கையா போடுங்க

Chitra said...

நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!!


.......தத்துவம் # 12347

Riyas said...

நல்லாருக்கு செல்வா.. ஆனாலும் உங்க மொக்கைதான் என்னை ரொம்பவும் கவர்ந்தது..

மொக்கை விரும்பிகள் சங்கம்.

http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html

ஜெயந்தி said...

நல்ல முயற்சிப்பா. ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த மாதிரி எழுத்தை தொடருங்கள்.

யாதவன் said...

சபாஷ் ..சூப்பர் போஸ்ட்

அன்பரசன் said...

//சத்தியமா எனக்கு புத்தி இருக்குதுங்க//

Ha Ha..

அன்பரசன் said...

நல்ல முயற்சி.
நல்லாருக்கு செல்வா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே இது? சரி நானும் உங்க லைனுக்கே வர்ரேன். கடவுள் இருக்காரா.. இல்லியா..... ஹலோ..ஹலோ.. நில்லுங்க...இப்பிடி பதில் சொல்லாம போனா எப்படி?

இராமசாமி கண்ணண் said...

Good Writing. Keep it up.

Arun Prasath said...

என்னண்ணே இது? சரி நானும் உங்க லைனுக்கே வர்ரேன். கடவுள் இருக்காரா.. இல்லியா..... ஹலோ..ஹலோ.. நில்லுங்க...இப்பிடி பதில் சொல்லாம போனா எப்படி?//

நான் பதில் சொல்றேன் ராமசாமி அண்ணே! அப்படி ஒருத்தர் இல்லை.

//எனக்கு இந்த அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு TERROR//

//ஆனா அருண் லைப்ல ஒரு தேடல் இல்லைன போர் அடிக்கும்... அதனால வாங்கலேன் போய் தேடலாம்... ஹா..ஹா..ஹா.. //

அப்போ சரி, நான் கோயம்புத்தூர் பக்கம் தேடறேன்...

siva said...

no words to say..

really great...

keep it...

valga valamudan.

நாகராஜசோழன் MA said...

செல்வா முடியலே!

தனி காட்டு ராஜா said...

Really Fantastic :)

நாகராஜசோழன் MA said...

//இந்தக்கட்டுரையின் முடிவில் ஒரு கேள்வியுடன் முடித்துக்கொள்கிறேன்..! உடல் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார்..?//

எனக்கே தெரியலையேப்பா!!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே இது? சரி நானும் உங்க லைனுக்கே வர்ரேன். கடவுள் இருக்காரா.. இல்லியா..... ஹலோ..ஹலோ.. நில்லுங்க...இப்பிடி பதில் சொல்லாம போனா எப்படி?
//

செல்வா மாம்ஸ்க்கு பதில் சொல்லிடு!

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

சிறு உதவி : திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த லிங்க் இருந்தால் குடுங்க. அடுத்த கதைக்கு தேவைப்படுது.!அந்த லின்க் எல்லாம் ராம்சாமிக்கு தான் தெரியும்
//

மாம்ஸ் மானம் போகுது.

நாகராஜசோழன் MA said...

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.

தனி காட்டு ராஜா said...

//இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. //

நான் நிரந்தரம்..அழிவதில்லை...

சிஷ்யா .....உனக்கு திக்சை தந்ததை மறந்து விட்டாயா :)

நாகராஜா ....இப்படி எல்லோரும் மாதிரி ஒரே dialog சொன்னாய் என்றால் ...அரசியல் உலகில் ஆப்பு வைத்து விடுவார்கள் :)

எல்லோரும் சிக்கன் பிரியாணி கொடுத்தால் ...நீ "அல்வா பிரியாணி " கொடு ......... :-))

ப.செல்வக்குமார் said...

//தனி காட்டு ராஜா said...
Really Fantastic :)//

நன்றிங்க ..!!

ப.செல்வக்குமார் said...

//நாகராஜசோழன் MA said...
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.
///

அட அட ...!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருந்தது.. குமார்..

Thekkikattan|தெகா said...

இது போன்று சிந்திக்கிறது, எப்பொழுதும் ‘சுயத்தோட’ இருக்க வைக்கும் என்பது என்னவோ ரொம்ப உண்மை. விட்டுறாம இப்படியே இருங்க.

//உடல் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார்..?//

உடலே இல்லையென்றால், இந்தக் கேள்விக்கே பொருளில்லை. சிந்திக்கிறோம், எனவே இது போன்ற கேள்விலெல்லாம் கேக்கிறோம்.

அதுக்காக பசுமாட்டிற்கு இருக்கிற அடிப்படை குணாதிசியங்கள் எல்லாம் நமக்கில்லை (உண்ணுதல், உறங்குதால், குட்டி போடுதல்...) என்று பொருள் கொண்டு நாமும் அதுவும் ஒரு இனம் இல்லையென்று ஆகிவிடுமா. எல்லாம் பூமியில ’இரை’இருக்கிற வரைக்கும்தான் இந்தக் கேள்வியெல்லாம்... நண்பரே! :)

எம் அப்துல் காதர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!

அன்புடன் மலிக்கா said...

உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

Ananthi said...

ஆரம்பமே தூள்.... போங்க..

//நான் எதுவும் தோன்றாதவனாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த சருகினைக் கவனித்துக்கொண்டிருந்தேன்///

ஹ்ம்ம்...நிறைய நேரங்கள்ல நமக்கு அப்படி இருக்கப் பிடிக்கிறது..

அருமையான ஆரம்பம்....!! வாழ்த்துக்கள்.. செல்வா.. :-))

Ananthi said...

////இன்பமோ துன்பமோ ,வாழ்வோ சாவோ , மகிழ்ச்சியோ வேதனையோ அது அடுத்தவரையோ கடவுளையோ சார்ந்தது அல்ல. நம்மை மட்டுமே சார்ந்ததாக உள்ளது ///

ரொம்ப ரொம்ப சரியா சொன்னிங்க.. செல்வா.. :-))

//நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!! ///

போராளியின் படைப்புகள் ஒரு சிறப்பு என்றால்.. உங்கள் படைப்பும் அருமையான படைப்பு..!!

தொடர்ந்து கலக்குங்க..!!

பதிவுலகில் பாபு said...

கலக்கியிருக்கீங்க செல்வா.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..