Wednesday, September 29, 2010

ரேடியோ ஜாக்கி

பூமியெங்கும் ஆக்சிஜென் இருந்த போதிலும்
மீனுக்கான ஆக்சிஜன் தண்ணீருக்குள்ளேயே இருக்கிறது..
அதைப் போலவே எனது வாழ்க்கையும்
ரேடியோ ஜாக்கி என்ற தண்ணீருக்காக ஏங்கிக்கிடக்கிறேன்.!

தெருவோர கோவில்கள் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்
எனது வேண்டுகோளை வைக்கத் தவறுவதில்லை
சில சமயங்களில் பொட்டு வைக்கப்பட்ட மைல் கல்களையும் வேண்டுகிறேன்.!
கடவுள் இல்லையென்று சொல்லாதீர்.!
என்னைத் தேர்வு செய்பவர் நிச்சயம் எனக்கு தெய்வம் தான்.!

2012 இல் உலகம் அழிந்துவிடுமாம் அதற்குள் என்னவளுடன்
சேர்ந்துவிடவேண்டும் என்றான் நண்பன்...
நான் சொன்னேன் அதற்குள் ஒரு நிகழ்ச்சியாவது தொகுத்து விட வேண்டுமென.!

என் அலுவலகத்தில் உள்ள ROUTER அடிக்கடி
Destination Host Unreachable என்கிறது.!
நீங்களாவது சொல்லுங்கள் நானும் ஒரு HOST தான் என்று .!

நீ என்னவாக நினைத்து துடிக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் என்கிறது கீதை.!
எப்பொழுது என்று சொல்லியிருந்தால் நிம்மதியாகவாவது இருப்பேன்.!

நான் ரேடியோ ஜாக்கி ஆகிவிட்டேன்
என்றொரு பதிவு போட ஆசைதான்
அந்த ஆசை நிறைவேறும் நாள் எப்பொழுது ..?

கண்களை மூடிக் கொண்டால் இரவு பகல் தெரிவதில்லை
கண்களை மூடியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
என் கண்கள் திறக்கப்படும் காலத்திற்காய் காத்திருக்கிறேன்.!

புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் செல்வார்களாமே..?
எனது சொர்க்கம் ரேடியோவில் இருக்கிறது
 நான் ரேடியோ ஜாக்கி ஆவதற்கு என்ன புண்ணியம் செய்வது..?

கம்பியில் பாய்ச்சப் பட்ட மின்சாரமாய் எனது உணர்வுகள்
ரேடியோ ஜாக்கி ஆவது எனது கனவு அல்ல
அதுவே என் வாழ்கையின் ஆதாரம்..!

Thursday, September 23, 2010

மொக்கை டார்ச்சர் - மூஞ்சிப் புத்தக மொக்கைகள்

முன்குறிப்பு : நானும் தினம் தினம் ஒரு மொக்கைய என்னோட மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல போட்டு பாக்குறேன் , யாருமே சிக்க மாட்டீங்குரீங்க .. எதோ ஒருத்தர் இரண்டு பேரு மட்டும் வந்துட்டுப் போறாங்க.! (சிலசமயம் அழுதுட்டுப் போவாங்க )அதுக்காகவெல்லாம்  உங்களை நிம்மதியா விட முடியுமா ..? அதான் அங்கிருந்து உங்களுக்காக இங்கே சிலவற்றை பதிவிட்டு உங்கள் மனதினை கொள்ளையடிக்க (!!??!!) திட்டமிட்டுள்ளேன்.!! இதப் படிச்சு உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க , இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன்.!

1. ரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2. ரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா  கோதுமை மாவு  வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
3. றும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
4. கால்ல முள் குத்தாம  இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .! ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. டச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
6. ரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
9. றுபடியும் ஒரு உண்மை :
கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,
ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
11. றுபடியும் சந்தேகம் :
இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
12. டியோட வெட்டினா கூட மறுபடியும் மறுபடியும் தலையுறது எது ..?
'மயிறு ' இது கூட தெரியாதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
13. ரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..?
கரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
14. ஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம் .?
மஞ்சத்தண்ணி மஞ்சள் கலர்ல இருக்கும் , ஆனா பச்சத் தண்ணி பச்சை கலர்ல இருக்காது.!.?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15. ந்த உலகத்துல எல்லோருமே குள்ளமா இருந்தா என்ன ஆகும்.?
டிவி ல காம்ப்ளான் விளம்பரம் போட மாட்டாங்க.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
16. 160 எழுத்துல ( ஒரு sms ) பெரிய நல்ல விஷயம் சொல்ல முடியுமா.?
 'பெரிய நல்ல விஷயம்' அப்படின்னு சொல்லுறதுக்கு எதுக்கு 160 எழுத்து ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17. றுபடியும் ஒரு கேள்வி: 
நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழ விழுதுள்ள ,
அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
18. கொசுவுக்கு கொம்பு இருக்கா  .?
இருக்கு .கொசு அப்படின்னு எழுதும்போது ஒரு கொம்பு போட்டுத் தானே எழுதறீங்க ..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
19. ண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல அதனால போடுறதில்லை.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
20. டிகாரத்துல இருக்குற முள் எந்த திசைல சுத்துதுன்னு தெரியுமா ..?
ஏற்கெனவே சுத்திட்டிருந்த திசைல தான் சுத்துது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
21. பதிவுலக நலன் கருதி இத்தோடு முடிச்சிக்கிறேன். ஏன்னா நீங்க நல்லா இருக்கணும் அப்படின்னு நான் விரும்புறேன்.! அப்புறமா இத நான் இங்கே பதிவிட காரணம் நான் தினம் தினம் என்னோட மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல ஒரு மொக்கை போடுறேன் .. அதைய வந்து படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க. அதுக்கான இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். சரி அடுத்து இன்னொரு மொக்கையப் பாப்போம்.

நேத்திக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது என்னோட கனவுல நான் , இம்சை அரசன் பாபு , சௌந்தர்,பாலாஜி சரவணா , அன்பரசன் , எஸ்.கே  ஆறு பேரும் ஒரு காட்டுக்குள்ள போயிட்டு இருந்தோம் . அங்க பயங்கர இருட்டா இருந்ததால நான் எந்திரிச்சு லைட் போட்டுட்டு மறுபடியும் தூங்கப் போனேன். ஆனா இவுங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க அப்படின்னு தெரியலை. உங்களுக்குத் தெரியுமா ..?

மூஞ்சிப்புத்தாக முகவரி facebook.com/selvu.

பின்குறிப்பு : இன்னும் ஒரே ஒரு மொக்கை மட்டும் சொல்லிக்கிறேனே ப்ளீஸ்..!! அதுவும் ஒரு கேள்விதான் ...
இந்த டுயூப்லைட்ட டெஸ்ட் பண்ணி வாங்கலாம் , ரேடியோவ டெஸ்ட் பண்ணி வாங்கலாம் .. இடி தாங்கிய எப்படி டெஸ்ட் பண்ணி வாங்குறது.!?!

உண்மையான பின்குறிப்பு : இந்தப்பதிவ படிச்சிட்டு எனக்கு சிரிப்பே வரலை அப்படின்னு சொன்னா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுவேன். இப்படி சொல்லுவதற்கு காரணம் முன்குறிப்பின் கடைசி வரிகளைப் படிக்கவும்.!

பின்குறிப்பைத் தாண்டிய மொக்கை ஒன்று : 
இங்கிலீஷ்ல 'மொத்தம்' எத்தனை எழுத்து ..?
மொத்தம் அப்படிங்கிற வார்த்தை இங்கிலீஷ் கிடையாது , அது தமிழ்.!

இந்தப்பதிவின் நீதி : நானும் ஒரு மொக்கைப் பதிவரே ..!

நீதியைத்தாண்டிய பின்குறிப்பு : போதும் , இத்தோட முடிச்சிக்கிறேன். இப்படியே இப்ப முடிக்கிறேன் அப்ப முடிக்கிறேன் அப்படின்னு இழுக்கரக்கு இங்கே என்ன காமன்வெல்த் கேம்சா நடக்குது. அவுங்கதான் இப்ப கட்டி முடிசிட்டுவேன் அப்புறமா கட்டி முடிச்சிடுவேன் அப்படின்னு இழுப்பாங்க. அப்படியே இழுத்தாலும் கடைசில உடைஞ்சு போற மாதிரி கட்டுவாங்க. அதே மாதிரி நான் ஒண்ணும் இது மொக்கைப் பதிவர்கள் மட்டும் படிப்பதற்கே அப்படின்னு சொல்லல. அவுங்கதான் பாலம் கட்டும் போது இது அரசியல் தலைவர்களும் , விளையாட்டு வீரர்களும் நடப்பதற்கான பாலம் அப்படின்னு சொன்னாங்களாம் , இடிஞ்சதுக்கு அப்புறம் இது போது மக்கள் நடப்பதற்கான பாதை அப்படின்னு சொன்னாங்க. சரி விடுங்னா , கோமாளிக்கு எல்லாம் எதுக்கு அரசியல் ..??!!
அதனாலா நான் முடிச்சிக்கிறேன் ., நீங்க ஆரம்பியுங்க ..!!

Monday, September 20, 2010

அலைக்கற்றை ஊழல் ( SPECTRUM SCAM ) ஓர் அலசல்

 எங்க ஆபீசுல விஸ்வா , கோகுல் அப்படின்னு இரண்டு பேரு இருக்காங்க. நம்ம நண்பர்கள் தான். அவுங்க அடிக்கடி சொல்லுவாங்க " நீ அரசியல் பதிவு எதுவும் எழுத மாட்டியா..? எதுக்குத்தான் இந்த ப்ளாக் கண்டுபிடிச்சாங்களோ " அப்படின்னு.  அதனால அவுங்க சொன்னதுக்காக இந்த பதிவு. இந்த SPECTRUM SCAM அப்படின்னு இப்ப அடிக்கடி செய்தி நாம கேள்விப்பட்டிருக்கோம். அதைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க. முதல்ல அலைக்கற்றை (Spectrum) அப்படின்னா என்ன அப்படிங்கறதப் பற்றிப் பாப்போம்.

அலைக்கற்றை ( Spectrum ) :
மின்காந்த அலைகள் (Electro Magnetic Waves )அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்க. சொல்லப்போனா கண்ணுக்குத் தெரியாத அந்த அலைகளால தான் இன்றைக்கு உலகமே இயங்கிட்டிருக்கு. ஆமாங்க . மின்காந்த அலைகள Radio wave, Micro Wave, Infrared, light ,Ultraviolet, X-ray,Gamma rays. அப்படின்னு பிரிச்சிருக்காங்க . இதுல நம்ம எல்லோர்கிட்டயும் இருக்குற செல்போன் பயன்படுத்துற அலைகள் முதல்ல வர்ற ரேடியோ அலைகள் தான். செல்போன் மட்டும் இல்லாம விரைவிலேயே நான் வேலைக்குப் போகப்போற FM , அப்புறம் டிவி இந்த மாதிரியான சாதனகளுக்குத் தேவையான அலைகளும் இந்த ரேடியோ அலைகளே.! இந்த அலைக்களைப் பற்றி விரிவா தெரிஞ்சிக்க விருபுறவுங்க இங்க சொடுக்குங்க.

சரி இங்க ஊழல் நடந்தது அப்படின்னு சொல்லுறது எதுல அப்படின்னு பார்த்தா 2008 ல 2G ஏலம் விட்டுருக்காங்க. அதுலதான் நடந்தது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க . இன்னும் நிரூபிக்கப்படலை. உங்களுக்கு அந்த ஏலம் பற்றி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி தான் மூன்றாம் தலைமுறை அலைபேசிகளுக்கான  ஏலம் நடந்தது. அதில் மொத்த ஏலத்தொகை 67,718.95 கோடிகளாகும்.  இந்த மூன்றாம் தலை முறைக்கான ஏலம் இப்ப நடக்கும் அப்ப நடக்கும் இழுத்து அடிச்சுக்கிட்டே வந்தாங்க . அப்புறம் May 19,2010 அன்னிக்கு முடிஞ்சது. இதே மாதிரி முறையா செய்ய வேண்டிய ஏலத்த யாருக்குமே தெரியாம நடத்திட்டாங்க அப்படின்னு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா மேல குற்றம்சாட்டிருக்காங்க.!

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் :
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளுக்கான ஏலம் கடந்த 2008 ல நடந்தது . அதுல அவுங்க முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அப்படிங்கிற விதிமுறையப் பயன்படுத்தி உரிமம் வழங்கிட்டோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. அதும் இல்லாம 2001 ல என்ன விலைக்கு  விற்கப்பட்டதோ அதே விலைக்கு வித்திருக்காங்க . இதுதான் இவுங்க ஊழல் பண்ணிருக்காங்க அப்படிங்கிற சந்தேகத்த வலுப்படுத்துது. அதே மாதிரி அந்த அலைகற்றைகள அடிமாட்டு விலைக்கு வாங்கின நிறுவனங்கள் எவ்ளோ சம்பாரிதாங்க தெரியுமா ..? Swan Telecom & Unitech Wireless என்ற கம்பனி 13 வட்டங்களுக்கான லைசென்சே சுமார் 1537 கோடிகள் கொடுத்து வாங்கிருக்காங்க. கொஞ்ச நாளுக்குப் பிறகு இவுங்க இவுங்களோட பங்குகளில் கொஞ்சத்த  2 பில்லியன் டாலர்களுக்கு வித்திருக்காங்க. இது அவுங்க வாங்கினதோட ஒப்பிடும் போது 700 மடங்கு அதிகம் . இதே மாதிரி மத்த கம்பெனிகள் எவ்ளவுக்கு வித்தாங்க அப்படிங்கிறத இங்க மற்றும் இங்க சொடுக்கி தெரிஞ்சுகோங்க. ஏன்னா அதப் பத்தி எழுதினா பதிவு இன்னும் நீளமா போய்டும் ..

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை : 
முதலில் வருவோர்க்கு முன்னிரிமை அப்படிங்கிற நிபந்தனைகளுக்கும் TRAI அமைப்பிற்கும் சம்பந்தமே இல்ல . அதவிட ஒரு பொருள் 2001 வித்த விலைக்கேதான் 2008 லயும் விற்கும் அப்படிங்கிறது எந்த விதத்துல அப்படின்னு தெரியல ..? ஏன்னா 2001 ல இந்தியாவுல 4 மில்லியன் மொபைல் இணைப்புகள் மட்டுமே இருந்தது . ஆனா 2008 ல 300 மில்லியன் மொபைல் இணைப்புகள் இருந்திருக்கு. ஏற்கெனவே சொன்னது மாதிரி Swan Telecom நிறுவனம் 1537 கோடிகள் கொடுத்து லைசென்ஸ் வாங்கிருக்காங்க , ஆனா சில மாதங்களிலேயே 4500 கோடிகளுக்கு அவுங்களோட 45 சதவீத பங்குகள வித்திருக்காங்க. இத மேலும் விரிவா படிக்க இங்க கிளிக்குங்க. இந்த லிங்க் படிச்சாவே நிறைய உண்மைகள் உங்களுக்குத் தெரியவரும். ஆனா இதுல ஊழல் நடந்துதா இல்லையா அப்படின்னு இன்னும் விசாரிச்சுட்டு இருக்காங்க.?!?

பின்குறிப்பு : இந்தப் பதிவைப் படிச்சவுடன் நான் திருந்தி விட்டதாக யாரும் என்ன வேண்டாம். இதுவும் ஒரு மொக்கைப் பதிவே. என்னை யாரும் மொக்கைப் பதிவர் அல்ல என்று நினைத்து விட வேண்டாம். மேலும் இங்கே நான் அதிக லிங்க்கள் கொடுக்க காரணம் பதிவின் நீளம் கருதியே. மேலும் நீங்கள் என் வீட்டிற்கு ஆட்டோ அனுப்ப முடியாது. ஏனெனில் நான் இங்கே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளேன். காரணம் நான் இதழியல் படித்துள்ளேன்,. ஹி ஹி ஹி ..
       

Thursday, September 9, 2010

கோமாளியும் மாஸ்ஹீரோவும்

அதிமுக்கிய முன்குறிப்பு : இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்களையோ அல்லது இறந்தவர்களையோ குறிப்பிடவில்லை.


நான் நேத்திக்கு ஒரு மாஸ்ஹீரோவை சந்திச்சு கதை சொல்லலாம்னு அவரோட வீட்டுக்குப்போனேன். அங்கு நடந்த உரையாடல்கள் உங்களுக்காக..
நான் அவரோட வீட்டுக்குப் போயிட்டேன். அங்க வாட்ச்மேன் இருந்தார். நான் அவருக்கிட்ட 


"சார் இது பிரபல சூப்பர் ஹீரோ *** வீடுதானுங்களே..? "  என்றேன்.


" ஆமா அதுக்கென்ன..? நீங்க யாரப் பார்க்கணும்..? "


"சார் நான் கதை சொல்லுறதுக்காக வந்திருக்கேன் , அவரு கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன்." 


அவரு என்ன ஒரு மாதிரியா பார்த்துட்டு " ரீமேக் படம்களா.?" அப்படின்னார்.


" இல்லைங்க .. ஏன் .? "


" இல்ல . சார் ரீமேக் படம்னா சீக்கிரமா முடிவு பண்ணிடுவார். அதான் . சரி போங்க " என்று வழிவிட்டார்.


உள்ள அவரோட P .A இருந்தார். அவருகிட்ட விசயத்த சொன்னேன். அதுக்க கேட்ட அவரு 
" இன்னும் மூணு வருசத்துக்கு சார் பிஸி ., நீங்க போயிட்டு அப்புறமா வாங்க.! " அப்படின்னார்.


"சார் சார் ., என்னோட கதை மட்டும் கேட்டீங்கன்னா இந்தப் படத்தைதான் முதல்ல பண்ணனும் அப்படின்னு சொல்லுவீங்க." அப்படின்னேன்.


" இல்லீங்க., நீங்க கிளம்புங்க " அப்படின்னு அவர் சொல்லிட்டிருக்கும் போதே அந்த மாஸ் ஹீரோ (?!?) வந்தார். என்ன மேட்டர்னு கேட்டுட்டு சரி கதைய சொல்லுங்க அப்படின்னு சொன்னார்.


எனக்கு பயங்கர சந்தோசம்.. கதைய சொல்ல ஆரம்பிச்சேன். " சார் , இது ஒரு திரில்லர் , ஏக்சன் , காமெடி, லவ் சப்ஜெக்ட்.! "


" நாளும் கலந்த கலவையா.? சரி  சொல்லுங்க.!"


"இந்தப்படத்துல நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க அப்படின்னே பாதி வரைக்கும் சொல்லுறதில்லை.! "


" ஓ , சஸ்பென்சா.? ஓகே மேல சொல்லுங்க."


"நீங்க ஒரு நாள் பஸ்ல போயிட்டிருக்கீங்க. அந்த பஸ்ல தான் ஹீரோயினும் வராங்க. அவுங்க லேடீஸ் சீட்ல உட்கார்ந்திருக்காங்க.அவுங்களப்பாத்த உடனே உங்களுக்கு லவ் வந்திடுச்சு. அப்பவே அந்த ஸ்பாட்லையே கிஸ் அடிக்கிறீங்க. அந்த இடத்துல ஒரு சாங்.நீங்க கிஸ் பண்ணிட்டிருக்கறதையே லாங் சாட்ல , ஜூம்சாட்ல அப்படி இப்படின்னு ரவுண்டு ட்ராலி போட்டு காட்டுறோம். அந்த சாங்ல டான்ஸ் மூவ்மென்டே கிடையாது. அதையே நாங்க புதுசா பண்ணிருக்கோம் அப்படின்னு பேட்டி கொடுக்கலாம். "


" உண்மைலையே நல்லா இருக்குப்பா, சரி ஏக்சன்னா வில்லன் வரணுமே..? "


" இதோ வில்லன இப்படி இன்ட்ரொடுயூஸ் பண்ணுறோம் சார்., அடுத்த நாள் அதே பஸ். வில்லன் ஜென்ஸ் சீட்டுல உட்கார்ந்திருக்கார். ஹீரோயின் போய் அவரு பக்கத்துல உட்காருறாங்க.அப்ப ஒரு டர்னிங்ல வில்லன் அவுங்க மேல லேசா முட்டிடறாரு. அப்ப ஹீரோயின் உங்க பேர சொல்லு கத்துறாங்க. அடுத்த செகண்ட் வில்லன் ஜன்னல பிச்சுட்டு போய் கீழ விழுறாரு. அவரு விழுந்த உடனே அவரோட கண்ணுக்குள்ள உங்கள காட்டுறோம். ""அது சரி , நான் கிஸ் பண்ணினப்ப கத்தாத பொண்ணு எப்படி அவர் எதேச்சைய முட்டினதுக்கே கத்துது..? "" சார் , ஹீரோ எது பண்ணினாலும் அது காதல் , வில்லன் என்ன பண்ணினாலும் எதுவுமே பண்ணாட்டியும் அவர அடிக்கணும் அதுதானே சார் ஏக்சன் ஸ்கிரிப்ட்.!"


" அதுவும் சரிதான் , சரி மேல சொல்லுங்க.." 


" ஆனா கீழ விழுந்த வில்லன் அவரோட ஆளுகள கூப்பிட்டு உங்களை அடிக்க சொல்லுறாரு. அப்ப அந்த இடத்துல ஒரு குச்சி நட்டு வச்சு அதைய நீங்க அடிக்கிறீங்க. அந்த அதிர்வுள அமெரிக்காவுல இருக்குற வில்லனோட அண்ணன் மாடில இருந்து கீழ விழுந்திடராரு. அப்ப " நான் அடிச்சா தாங்க மாட்ட " பாட்ட ரீமிக்ஸ் பண்ணி தூக்குறோம். "


" செம கதையா இருக்குபா , மேல சொல்லு.."


" வில்லனோட அண்ணன் இந்தியா வர்றார். வந்தவுடனே ஒரு கோவிலுக்குப் போறார். சாமி கும்பிட்டுட்டு வெளியே வருபோது ஒரு பிச்சைக்காரன் காசு கேக்குறான். அவனுக்கு வில்லன் ஒரு ரூபாய் மட்டும் போட்டு அவன கேவலபடுத்துறார் . இந்த அநியாயத்தக் கேட்டவுடனே நீங்க அப்படியே பொங்கி எந்திருக்குரீங்க. " ஏன்டா , பிச்சைக்காரன்னா உனக்கு கேவலமா தெரியுதா ..? " அப்படின்னு அவருதான் வில்லனோட அண்ணன் அப்படின்னு தெரியாம அவரு மேல கைய வச்சுடரீங்க .! " அப்ப அவரு கேக்குறாரு " இதெல்லாம் கேக்குரக்கு நீ ஏன்ன கலக்கடராடா ..? " உடனே கலக்கடரா இருந்தாதான் இதெல்லாம் கேக்க முடியுமா அப்படின்னு யோசிச்சிட்டு கலக்கடராக முடிவெடுக்குறீங்க. உங்களுக்குப்பிடிச்ச கலக்டர் படிச்ச ஸ்கூல்ள  போய்   L.K.G சேருறீங்க . அங்கதான் ஹீரோயினும் L.K.G படிக்கிறாங்க. அங்க வச்சு ஒரு லவ் சாங். "


" எல்லாம் சரிதான்யா , ஆனா நான் L.K .G படிக்கிறமாதிரி சீன் வச்சா நம்புவாங்களா ..? "


" என்ன சார் , விஜய் மட்டும் வேட்டைக்காரன் படத்துல அவருக்கு பிடிச்ச போலீஸ் படிச்ச காலேஜ் அப்படின்னு போய் படிக்கிறார். நீங்க படிச்ச நம்ப மாட்டாங்களா..? " 


" அதுசரி , பஞ்ச் டயலாக் இன்னும் வரலையே ..? "


" சார் , உங்க படத்துல பஞ்ச் இல்லாமையா ..? ஒரு சீன்ல நீங்க வில்லன அடிச்சு போட்டுட்டு அவரோட கார திருடிட்டு போறீங்க. நீங்க எதுக்கு திருடரீங்க அப்படின்னு கடைசியா சொல்லுறோம். இந்த தில்லாலங்கடி , ஜென்டில்மன் மாதிரி. கார் திருடும்போது உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது . அப்ப வில்லனோட கார் டிரைவரப்பார்த்து " எடுக்குரியா கார , நடந்து போகட்டுமா ..? " அப்படின்னு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அப்ப DTS சவுண்ட் எபக்ட் போட்டு பிச்சு எடுக்கிறோம்." 


" இந்த பஞ்ச் நல்லாத்தான் இருக்கு , ஆனா இத விட ஏதாவது நல்லதா சொல்லுங்களேன்..? "


" சார் இப்படி வசுசுக்கலாமா ..? கார எடுக்குறியா , போகட்டுமா நடந்து " ..


" இது கலக்கலா இருக்குப்பா . கண்டிப்பா இத 10 வருசத்துக்கு சொல்லிட்டு இருப்பாங்க.. செம ஸ்பீடா இருக்கு , சொல்லுங்க..? "


" சார் அடுத்த சீன் காமெடி பண்ணுறோம் , கொஞ்சம் டபுள் மீனிங்கா , இந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்துல வருமே அதுமாதிரி.. "


" குழந்தைகளுக்கு புரியல , குடும்பத்தோட பாக்க முடியல அப்படிம்பாங்களே .? "


" சார் , சந்தரமுகி படத்துல ரஜினி சாரும் , வடிவேலுவோட பொண்டாட்டியும் ஒரு போர்வைக்குள்ள வச்சு ஒரு காமெடி பண்ணுவாங்களே , அதவிட டபுள் மீனிங் எதுவுமே இல்ல சார். அதையவே நம்ம ஆளுக காமெடி அப்படின்னு சொல்லி ரசிக்கல . அந்த மாதிரி தான் சார். "
அடுத்து ஹீரோயினோட அப்பாவுக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுது , அதனால நீங்க இரண்டு பேரும் செத்துடறீங்க. அதனால நீங்க திருப்பாச்சி படத்துல வர்ற மாதிரி மாறு வேசத்துல ஊர்ல இருக்குற ரவுடிகள கொன்னுடறீங்க.! "


"செம திரில்லிங்யா , கேக்கும்போதே பட்டைய கிளப்புது மேல சொல்லு .."


" அடுத்து கிளைமாக்ஸ் சார் . உங்களை வில்லனோட ஆளுக துரத்துறாங்க , அப்ப பயங்கர வெய்யில் , ஆனா மழை பெய்யுது. அந்த நேரத்துல நீங்களும் ஹீரோயினும் போன படத்துல மீட் பண்ணுன இடம் வந்திடுது , அதைய போட்டு காட்டுறோம். இந்த வில்லு படத்துல காட்டுவாங்களே அது மாதிரி. அப்ப உங்களுக்கு ஹீரோயின் நினைப்பு வந்திடுது. அந்த நேரத்துல வில்லனோட ஆளுக உங்களை சுத்தி வலைச்சுடறாங்க. அப்ப ஒரு கத்தி உங்க நேத்திக்கு நேரா வருது அந்த இடத்துல ஒரு குத்துப் பாட்டு வைக்கிறோம். அந்த பாட்டுல டான்ஸ்ல செம மூவ்மென்ட் வெக்கிறோம். ஜிம்னாஸ்டிக் பண்ணுறோம் . அந்த பாட்டுல உங்களுக்கு வெறும் கோமணம் தான் காஸ்டியூம்." 


" யோவ் என்னையா சொல்லுற ..? " 


" ஆமா சார் .இந்த சிலம்பாட்டம் படத்துல வர்ற Where is The Party பாட்டு மாதிரி வைக்கிறோம். அதுல சிம்பு அவரோட லுங்கிய தூக்கி தூக்கி ஆடுவாருல அதுமாதிரி. அதே மாதிரி இந்த சுறா படத்துல விஜய் தமன்னவோட பேண்ட்ட தூக்கி தூக்கி போடுவாருல்ல , அந்த மாதிரி மூவ்மென்ட் வச்சு தாக்குறோம்.! " 


" அது செம மூவ்மென்ட்யா , கலக்கலா இருக்கும் ." 


" அந்த பாட்டு முடிஞ்சவுடனே உங்களை சுத்தி நின்னுட்டிருந்தவங்கள ஓங்கி அடிக்கிறீங்க. அடிச்ச அடில அங்க இருந்தவங்கள்ள ஒருத்தன் செவ்வாய்லயும் , ஒருத்தன் புதன்லையும் போய் விழுறாங்க.அப்புறமா வில்லன வெட்டிடறீங்க. அப்படியே ரத்தமும் சதையுமா காட்டுறோம். அந்த இடத்துல ஒருத்தன் வந்து உங்களைப் பார்த்து " யாரு நீ ..? " அப்படின்னு கேக்குறான். அவனைப்பார்த்து நீங்க " தமிழ்நாட்டுல என்னைப்பார்த்து இப்படி கேட்ட முதல் ஆளு நீதான்" அப்படின்னு சொல்லி அவன கொன்னுடறீங்க. அப்படியே படத்த முடிக்கிறோம்.! "


இத கேட்ட உடனே அவரு " செம கதைய்யா. கண்டிப்பா 200 டேஸ் ஓடும் . மணி அந்த மத்த 3 படத்துக்கான சூடிங்கயும் தள்ளிப்போடு, முதல்ல இதுதான். இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டுக்குத் தான் நான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.! சரி நீங்க போய் ஸ்டோரி டிஸ்கசனுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க.! " அப்படின்னார்.


"என்னால நம்பவே முடியல , எனக்கே என்னோட கதை புரியலை ,அவருக்கு புரிஞ்சது அப்படிங்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா.? அப்படின்னா வில்லன கொன்னு , பிகர் உசார் பண்ணறதுதான் படமா.? இதுல டவுசர தூக்கி காட்டுற மாதிரி ஜிம்னாஸ்டிக் பண்ணுனா டான்ஸ் . என்ன கொடுமைங்க இது..?!? சரி உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க. ஏன்னா இதே மாதிரி கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... வரப்போகுது. அதுக்கு உதவியா இருக்கும்.


அதிமுக்கியப் பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.! 


Saturday, September 4, 2010

தமிழ்ப்பட வரலாறு

நீ இது வரைக்கும் ஒரு நல்ல பதிவாவது போட்டிருக்கியா ..? அப்படின்னு என்னோட மனசாட்சி என்னப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுடுட்சுங்க. அதுமட்டும் இல்லைங்க. நீ இப்படியே மொக்கப் பதிவு போட்டுட்டே இருந்தா உன்னைய கோமாளி அப்படின்னு சொல்லிடுவாங்க அப்படின்னும் சொல்லுச்சு. அதனால எப்படியாவது நல்ல பதிவு போட்டுடனும்னு நானும் பயங்கர முயற்சி பண்ணினேன். மொக்க பதிவுன்னா அதுக்கு முயற்சி தேவை இல்லை.! சரிங்க நல்ல பதிவு அப்படின்னு சொன்னது தமிழ் திரைப்பட வரலாற்ற உங்களுக்காக தொகுத்திருக்கேன் .. நல்ல பதிவா அப்படின்னு நீங்கதான் முடிவு பண்ணனும் ..

இந்தியாவில் திரைப்படம் :
தாமஸ் ஆல்வா எடிசன் " கினிடோஸ்கோப்" என்ற கருவியைக்கண்டுபிடித்ததின் மூலம் இன்று நாம் பார்க்கும் திரைப்படத்திருக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் பார்க்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த " லூமியர் சகோதரர்கள்" என்போர் 1895 இல் அறிமுகப்படுத்தினர். அவர்கள் எடுத்த ஒரு நிமிட திரைப்படங்களை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் திரையிட்டனர்.

*.இந்தியாவிற்கு வந்த முதல் திரைப்படம் ' இயேசுவின் வாழ்க்கையாகும் '. அது 1896 இல் பம்பாயில் திரையிடப்பட்டது.

*.இந்தியாவின் முதல் திரையரங்கான என்பில்ச்டன் கல்கத்தாவில் மதன் என்பவரால் 1907 இல் கட்டப்பட்டது.

*.இந்தியாவின் முதல் முழு நீளப்படம் ' ராஜா ஹரிச்சந்திரா ' . நீளம் 3700 அடி.

*.இந்தியாவில் தயாரான முதல் பேசும் படம் ' ஆலம் ஆரா '. 1931 மார்ச் 14 இல் திரையிடப்பட்டது.

*.தென்னிந்தியாவின் முதல் படம் ' கீசக வதம் ' 1916 இல் தயாரிக்கப்பட்டது .

*.தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ் ' .31.10.1931 இல் திரையிடப்பட்டது.

*.முதல் பேசும் படத்தை இயக்கியவர் 'H.M.ரெட்டி. T.P.ராஜலட்சுமி கதாநாயகி. இவர் 'மிஸ் கமலா ' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

*.1955 இல் வெளிவந்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' தமிழின் முதல் வண்ணப்படம்.

*.1948 இல் S.S.வாசன் 'சந்திரலேகா' என்ற படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகமெங்கும் திரையிட்டார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட படம்  இதுவே.

*.1954 இல் ' அந்த நாள் ' பாடல்களே இல்லாத முதல் தமிழ்படம்.

*.தமிழ் திரைப்பட வரலாற்றில் மூன்று ஆண்டுகள் ஓடிய திரைப்படம் ஹரிதாஸ்.

*.தமிழ்நாட்டின் முதல் 70 MM திரையரங்கமான ஆனந்த் சென்னையில் G.உமாபதி என்பவரால் கட்டப்பட்டது.

*.முதல் சினிமாஸ்கோப் படம்  ' ராஜா ராஜா சோழன்' .

*.1943 இல் அரிச்சந்திரா என்ற படத்தை A.V.M.செட்டியார் டப்பிங் செய்து தமிழின் முதல் டப்பிங் படத்திற்கு வழிவகுத்தார்.

இது கோமாளி ப்ளாக் தாங்க. நம்ப மாட்டீங்களா ..? சும்மா இப்படி சொன்னா எப்படி ..? சரி உங்களுக்காக ஒரு மொக்கை :
நேத்தைக்கு நான் ஒரு நாடகம் பார்த்துட்டு இருந்தேன் . அதுல ஒரு காதலனும் காதலியும் ஒரு சாப்பாட்டுக்கடைல சந்திசுப்பாங்க. அதுல அந்த பைய்யன் கிட்ட காசு இல்ல . அதனால அவ காதலிகிட்ட எனக்கு செம பசியா இருக்கு .. நீ என்ன ஆர்டர் பண்ணினாலும் தின்னுடுவேன் அப்படின்பான். அப்புறமா ரண்டுபேரும் சாப்பிட்டுடிருப்பாங்க. அப்ப இரண்டு பேருக்கும் சண்டை வந்திடும் . அந்த பொண்ணு அவ பாட்டுக்கு எந்திரிச்சுப் போய்டுவா ..? அடுத்த சீன்ல அந்தப் பையன் அந்தப் பொண்ணு கிட்ட சமாதானம் பண்ணிட்டிருப்பான். நமக்கு அது முக்கியமில்ல . அந்த சாப்பாட்டுகடைல இருந்து அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க ..? இதுதாங்க எனக்கு சந்தேகம் ..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்..