Wednesday, September 29, 2010

ரேடியோ ஜாக்கி

பூமியெங்கும் ஆக்சிஜென் இருந்த போதிலும்
மீனுக்கான ஆக்சிஜன் தண்ணீருக்குள்ளேயே இருக்கிறது..
அதைப் போலவே எனது வாழ்க்கையும்
ரேடியோ ஜாக்கி என்ற தண்ணீருக்காக ஏங்கிக்கிடக்கிறேன்.!

தெருவோர கோவில்கள் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்
எனது வேண்டுகோளை வைக்கத் தவறுவதில்லை
சில சமயங்களில் பொட்டு வைக்கப்பட்ட மைல் கல்களையும் வேண்டுகிறேன்.!
கடவுள் இல்லையென்று சொல்லாதீர்.!
என்னைத் தேர்வு செய்பவர் நிச்சயம் எனக்கு தெய்வம் தான்.!

2012 இல் உலகம் அழிந்துவிடுமாம் அதற்குள் என்னவளுடன்
சேர்ந்துவிடவேண்டும் என்றான் நண்பன்...
நான் சொன்னேன் அதற்குள் ஒரு நிகழ்ச்சியாவது தொகுத்து விட வேண்டுமென.!

என் அலுவலகத்தில் உள்ள ROUTER அடிக்கடி
Destination Host Unreachable என்கிறது.!
நீங்களாவது சொல்லுங்கள் நானும் ஒரு HOST தான் என்று .!

நீ என்னவாக நினைத்து துடிக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் என்கிறது கீதை.!
எப்பொழுது என்று சொல்லியிருந்தால் நிம்மதியாகவாவது இருப்பேன்.!

நான் ரேடியோ ஜாக்கி ஆகிவிட்டேன்
என்றொரு பதிவு போட ஆசைதான்
அந்த ஆசை நிறைவேறும் நாள் எப்பொழுது ..?

கண்களை மூடிக் கொண்டால் இரவு பகல் தெரிவதில்லை
கண்களை மூடியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
என் கண்கள் திறக்கப்படும் காலத்திற்காய் காத்திருக்கிறேன்.!

புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் செல்வார்களாமே..?
எனது சொர்க்கம் ரேடியோவில் இருக்கிறது
 நான் ரேடியோ ஜாக்கி ஆவதற்கு என்ன புண்ணியம் செய்வது..?

கம்பியில் பாய்ச்சப் பட்ட மின்சாரமாய் எனது உணர்வுகள்
ரேடியோ ஜாக்கி ஆவது எனது கனவு அல்ல
அதுவே என் வாழ்கையின் ஆதாரம்..!

40 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

vadai ennakku

பிரவின்குமார் said...

வாழ்த்துகள் நண்பா விரைவில் தங்களது குறிக்கோள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஜீவன்பென்னி said...

தம்பி இலக்கு தெரிஞ்சவன் எப்படியும் ஜெய்ச்சுடுவான். நீ நிச்சயமா ஜெயிச்சிடுவ.

அருண் பிரசாத் said...

இந்த வேட்கை இருந்துட்டே இருக்கட்டும் செல்வா கண்டிப்பா ஒரு நாள் நீ RJ தான்.

நான் கேட்கற பாட்டை போடுவியா?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதை நெத்தியடி போங்க . இப்படியும் கவிதை எழுதலாம் என்று ஒரு புது முகவரி அமைத்து கொடுத்து இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி நண்பரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

imsaikku oosi pona vadai

சௌந்தர் said...

நீ நிச்சயம் ரேடியோ ஜாக்கி ஆகிவிட்டேன் என்று சொல்வாய் உன் குரலும் நன்றாக தான் இருக்கிறது

என்னது நானு யாரா? said...

தம்பி செல்வா! முயற்சி என்கின்ற லென்ஸ், கனவு என்கின்ற காகிதத்தினை சூரிய ஒளியினை இழுத்து காகிதத்தை பற்ற வைக்கிறது

கனவையும் கைவிடாதே! முயற்சியையும் கைவிடாதே. முயன்றுக் கொண்டே இரு! தனியாக இருந்து ரேடியோ ஜாக்கி எந்த விதமாக பேசுகிறார் என்று பாவனை செய்துப் பேசிப் பழகு! அதற்கான தகவல்களை சேகரி! முயற்சி, முயற்சி, அது ஒன்றே திருவினை யாக்கும்

Balaji saravana said...

கண்டிப்பா நீ விரைவில் RJ ஆகிடுவ செல்வா!
உனக்கான பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்

R.Santhosh said...

நமக்கு ஆசை வருவதற்கு காரணம்...
நாம் அதற்கு தகுதியானவன் என்று நியமிக்கப்பட்டதால்தான்...
அதனால் எதுக்கும் கவலை படாம காத்திரு தப்பே இல்ல....
ஆனா விழித்திரு அதுதான் முக்கியமான பாய்ண்டு...

கே.ஆர்.பி.செந்தில் said...

சீக்கிரமே RJ ஆக பிரப்திஸ்து..

புதிய மனிதா said...

all d best..

எஸ்.கே said...

நண்பா கூடிய விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும். (இந்த வருடத்திற்குள் என என் மனம் சொல்கிறது). அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

TERROR-PANDIYAN(VAS) said...

செல்வா கலக்கிட்டடா!!!! சூப்பர்!!!

இவ்ளோ விசயத்தை வச்சிகிட்டு நீ எதுக்கு ஓண்ணும் தெரியாதவன் மாதிரி இருக்கணும்...ஆக்சுவலி யார் யாரோ ஏதேதோ எழுதும் போது நீ என் இப்படி எழுத கூடாது? நு கேள்வி வருதுடா....

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

உனக்குள்ள இப்படி ஒரு கவிஞனா?? அருமையா எழுதி இருக்க செல்வா. நீ கவிதை எழுதி இருக்கேன் சொன்னதும் எப்பவும் போல எதாவது மொக்க போட்டு இருப்ப நினைத்தேன். வாழ்த்துகள். உன் லட்சியம் நிறைவேர வாழ்த்துகள்!!

@ஆல் ரேடியோ ஓனர்

சீக்கிரம் தம்பிக்கு வேலை கொடுத்து உங்க ரேடியோ பாப்புலர் பண்ணிக்கோங்க. இல்லை என்னை வேலைக்கு எடுங்க. சண்டையா சமாதானமா? முடிவு உங்க கையில்....

(சரி நம்மளும் இப்படி எல்லாம் கேவலமா எழுதுவோம் காட்டியாச்சி. இனி மறுபடி மொக்கை ஆரம்பிக்கலாம்..வா)

அன்பரசன் said...

நண்பா..
கண்டிப்பா நிறைவேறும்.
வாழ்த்துக்கள்.

Phantom Mohan said...

நீ என்னவாக நினைத்து துடிக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் என்கிறது கீதை.!
எப்பொழுது என்று சொல்லியிருந்தால் நிம்மதியாகவாவது இருப்பேன்.!
////////////////////////////

வெறித்தனமான வார்த்தை!!! சூப்பரோ சூப்பர்.


@ஆல் ரேடியோ ஓனர்

சீக்கிரம் தம்பிக்கு வேலை கொடுத்து உங்க ரேடியோ பாப்புலர் பண்ணிக்கோங்க. இல்லை என்னை வேலைக்கு எடுங்க. சண்டையா சமாதானமா? முடிவு உங்க கையில்....
///////////////////////

டெர்ரர் என் resume சேர்த்து அனுப்பு, செல்வாவுக்கு MD போஸ்ட்டே குடுப்பாங்க.

வினோ said...

நம்ம தம்பி RJ ஆக என் வாழ்த்துக்கள்....

siva said...

சாரி கொஞ்சம் லேட்...

அண்ணே நீங்க எப்போவே ரேடியோ ஜாக்கி ஆகிடீங்க..
யாரப்பா அங்க ரேடியோ முதலாளி..செல்வா ஓகே ஆய்ட்டு
உங்க வேலை நியமனம் ஆர்டர் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது ...

வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம்!!!!

பதிவு உலகில் உன்ன போல நல்லவர்களால்தான்
இன்னமும் வெயில் அடித்து கொண்டு இருக்கிறது...

Ananthi said...

//புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் செல்வார்களாமே..?
எனது சொர்க்கம் ரேடியோவில் இருக்கிறது
நான் ரேடியோ ஜாக்கி ஆவதற்கு என்ன புண்ணியம் செய்வது..?////

செல்வா.. நீங்க இவ்ளோ தீவிர ஆசையுடன் இருப்பதால்..
கண்டிப்பாய் வெற்றி அடைவீங்க..
வாழ்த்துக்கள்.. :-)))

இம்சைஅரசன் பாபு.. said...

தம்பி செல்வா உனக்குள் இப்படி ஒரு கவிங்கனா ?ரொம்ப சந்தோசம் உன் ஆசை நிச்சயம் நிறைவேறும் கவலை படாதே தம்பி .....
ஆண்டவன் லேட் ஆக கொடுத்தாலும் லேட்டஸ்ட் ஆக தான் கொடுப்பான் .உன் உழைப்பு உனக்கு வெற்றியை தரும் தம்பி ..........................

சிவராம்குமார் said...

உங்களது லட்சியம் சீகிரமே நிறைவேற வாழ்த்துக்கள்!

பிரியமுடன் ரமேஷ் said...

உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்...உங்கள் குரலுக்கு இப்பவே ரசிகர்களா நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்..சீக்கிரம் வாங்க..

மாணவன் said...

"முடியாது என முடங்கி விடாதே
முடியும் என முனைந்து நில்” என்பதற்கேற்ப தொடர்ந்து முயற்சி செய் நண்பா....

”பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளன்”தான் நண்பா... நிச்சயம் உனது இலக்கை விரைவில் அடைந்தே தீருவாய்...
அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன்
மாணவன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all the best. terror sonna maathiri theeyaa irukanumle

Riyas said...

நண்பா உன் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்...

வெறும்பய said...

அட அட என்னமா இலுதியிருக்கான் பையன்.... தம்பி நீ கலக்குப்பா.... சீக்கிரமே RJ ஆக வாழ்த்துக்கள்..

டுபாக்கூர்கந்தசாமி said...

//2012 இல் உலகம் அழிந்துவிடுமாம் அதற்குள் என்னவளுடன்
சேர்ந்துவிடவேண்டும் என்றான் நண்பன்...
நான் சொன்னேன் அதற்குள் ஒரு நிகழ்ச்சியாவது தொகுத்து விட வேண்டுமென.!//

அதற்குள் நான் ஒரு கல்யாணமாவது செய்து கொள்ள வேண்டும்.....

கவித சூப்பர், நம்பகையோடு இரு நிச்சயம் நீ தொகுப்பாளர் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.....வாழ்த்துகள்

dheva said...

ஓராயிரம் வாழ்த்துக்களோடு நின்று விட மாட்டேன் தம்பி...எனது பிரார்த்தனைகள் நிச்சயமாய் இருக்கும். நீ அது சம்பந்தப் பட்ட முயற்சிகளை தொடருந்து கொண்டே இரு....எங்கே போய்விடும் வாழ்க்கை...

உன் காலடியில் வந்து விழும் தம்பி.... சர்வ நிச்சயமாய்...!

பதிவுலகில் பாபு said...

நீங்க சீக்கிரம் உங்கள் இலட்சியத்தை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

சங்கவி said...

வாழ்த்துக்கள்..

மங்குனி அமைசர் said...

வாழ்த்துக்கள் செல்வக்குமார்

Guna Always with you said...

enna mapla kongu natula iruntha inpadi than kadikaratha ... un latchiyam niraivera en valthukkal

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அதைப் போலவே எனது வாழ்க்கையும்
ரேடியோ ஜாக்கி என்ற தண்ணீருக்காக ஏங்கிக்கிடக்கிறேன்.!//
விரைவில் உங்கள் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாட்டை அடிக்கடி கேளுங்க..

உமாபதி said...

They can Because
They THINK
They can

எஸ்.முத்துவேல் said...

முயற்சி முயற்சி விடாமுயற்சி...

உங்கள் லட்சியம் நிறைவேறும்.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\\\”பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளன்”தான் நண்பா... நிச்சயம் உனது இலக்கை விரைவில் அடைந்தே தீருவாய்...
அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன்
மாணவன்//
வழிமொழிகிறேன்..
வாழ்த்துக்கள் .. செல்வகுமார்

MeetFriends said...

Valthukkal mappla

ஹரிஸ் said...

மொக்கை மன்னனுக்குள் இப்படி ஒரு கவிஞனா??
//கடவுள் இல்லையென்று சொல்லாதீர்.!
என்னைத் தேர்வு செய்பவர் நிச்சயம் எனக்கு தெய்வம் தான்.!//

வியந்தேன்,ரசித்தேன்..இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்..