Thursday, September 9, 2010

கோமாளியும் மாஸ்ஹீரோவும்

அதிமுக்கிய முன்குறிப்பு : இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்களையோ அல்லது இறந்தவர்களையோ குறிப்பிடவில்லை.


நான் நேத்திக்கு ஒரு மாஸ்ஹீரோவை சந்திச்சு கதை சொல்லலாம்னு அவரோட வீட்டுக்குப்போனேன். அங்கு நடந்த உரையாடல்கள் உங்களுக்காக..
நான் அவரோட வீட்டுக்குப் போயிட்டேன். அங்க வாட்ச்மேன் இருந்தார். நான் அவருக்கிட்ட 


"சார் இது பிரபல சூப்பர் ஹீரோ *** வீடுதானுங்களே..? "  என்றேன்.


" ஆமா அதுக்கென்ன..? நீங்க யாரப் பார்க்கணும்..? "


"சார் நான் கதை சொல்லுறதுக்காக வந்திருக்கேன் , அவரு கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன்." 


அவரு என்ன ஒரு மாதிரியா பார்த்துட்டு " ரீமேக் படம்களா.?" அப்படின்னார்.


" இல்லைங்க .. ஏன் .? "


" இல்ல . சார் ரீமேக் படம்னா சீக்கிரமா முடிவு பண்ணிடுவார். அதான் . சரி போங்க " என்று வழிவிட்டார்.


உள்ள அவரோட P .A இருந்தார். அவருகிட்ட விசயத்த சொன்னேன். அதுக்க கேட்ட அவரு 
" இன்னும் மூணு வருசத்துக்கு சார் பிஸி ., நீங்க போயிட்டு அப்புறமா வாங்க.! " அப்படின்னார்.


"சார் சார் ., என்னோட கதை மட்டும் கேட்டீங்கன்னா இந்தப் படத்தைதான் முதல்ல பண்ணனும் அப்படின்னு சொல்லுவீங்க." அப்படின்னேன்.


" இல்லீங்க., நீங்க கிளம்புங்க " அப்படின்னு அவர் சொல்லிட்டிருக்கும் போதே அந்த மாஸ் ஹீரோ (?!?) வந்தார். என்ன மேட்டர்னு கேட்டுட்டு சரி கதைய சொல்லுங்க அப்படின்னு சொன்னார்.


எனக்கு பயங்கர சந்தோசம்.. கதைய சொல்ல ஆரம்பிச்சேன். " சார் , இது ஒரு திரில்லர் , ஏக்சன் , காமெடி, லவ் சப்ஜெக்ட்.! "


" நாளும் கலந்த கலவையா.? சரி  சொல்லுங்க.!"


"இந்தப்படத்துல நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க அப்படின்னே பாதி வரைக்கும் சொல்லுறதில்லை.! "


" ஓ , சஸ்பென்சா.? ஓகே மேல சொல்லுங்க."


"நீங்க ஒரு நாள் பஸ்ல போயிட்டிருக்கீங்க. அந்த பஸ்ல தான் ஹீரோயினும் வராங்க. அவுங்க லேடீஸ் சீட்ல உட்கார்ந்திருக்காங்க.அவுங்களப்பாத்த உடனே உங்களுக்கு லவ் வந்திடுச்சு. அப்பவே அந்த ஸ்பாட்லையே கிஸ் அடிக்கிறீங்க. அந்த இடத்துல ஒரு சாங்.நீங்க கிஸ் பண்ணிட்டிருக்கறதையே லாங் சாட்ல , ஜூம்சாட்ல அப்படி இப்படின்னு ரவுண்டு ட்ராலி போட்டு காட்டுறோம். அந்த சாங்ல டான்ஸ் மூவ்மென்டே கிடையாது. அதையே நாங்க புதுசா பண்ணிருக்கோம் அப்படின்னு பேட்டி கொடுக்கலாம். "


" உண்மைலையே நல்லா இருக்குப்பா, சரி ஏக்சன்னா வில்லன் வரணுமே..? "


" இதோ வில்லன இப்படி இன்ட்ரொடுயூஸ் பண்ணுறோம் சார்., அடுத்த நாள் அதே பஸ். வில்லன் ஜென்ஸ் சீட்டுல உட்கார்ந்திருக்கார். ஹீரோயின் போய் அவரு பக்கத்துல உட்காருறாங்க.அப்ப ஒரு டர்னிங்ல வில்லன் அவுங்க மேல லேசா முட்டிடறாரு. அப்ப ஹீரோயின் உங்க பேர சொல்லு கத்துறாங்க. அடுத்த செகண்ட் வில்லன் ஜன்னல பிச்சுட்டு போய் கீழ விழுறாரு. அவரு விழுந்த உடனே அவரோட கண்ணுக்குள்ள உங்கள காட்டுறோம். ""அது சரி , நான் கிஸ் பண்ணினப்ப கத்தாத பொண்ணு எப்படி அவர் எதேச்சைய முட்டினதுக்கே கத்துது..? "" சார் , ஹீரோ எது பண்ணினாலும் அது காதல் , வில்லன் என்ன பண்ணினாலும் எதுவுமே பண்ணாட்டியும் அவர அடிக்கணும் அதுதானே சார் ஏக்சன் ஸ்கிரிப்ட்.!"


" அதுவும் சரிதான் , சரி மேல சொல்லுங்க.." 


" ஆனா கீழ விழுந்த வில்லன் அவரோட ஆளுகள கூப்பிட்டு உங்களை அடிக்க சொல்லுறாரு. அப்ப அந்த இடத்துல ஒரு குச்சி நட்டு வச்சு அதைய நீங்க அடிக்கிறீங்க. அந்த அதிர்வுள அமெரிக்காவுல இருக்குற வில்லனோட அண்ணன் மாடில இருந்து கீழ விழுந்திடராரு. அப்ப " நான் அடிச்சா தாங்க மாட்ட " பாட்ட ரீமிக்ஸ் பண்ணி தூக்குறோம். "


" செம கதையா இருக்குபா , மேல சொல்லு.."


" வில்லனோட அண்ணன் இந்தியா வர்றார். வந்தவுடனே ஒரு கோவிலுக்குப் போறார். சாமி கும்பிட்டுட்டு வெளியே வருபோது ஒரு பிச்சைக்காரன் காசு கேக்குறான். அவனுக்கு வில்லன் ஒரு ரூபாய் மட்டும் போட்டு அவன கேவலபடுத்துறார் . இந்த அநியாயத்தக் கேட்டவுடனே நீங்க அப்படியே பொங்கி எந்திருக்குரீங்க. " ஏன்டா , பிச்சைக்காரன்னா உனக்கு கேவலமா தெரியுதா ..? " அப்படின்னு அவருதான் வில்லனோட அண்ணன் அப்படின்னு தெரியாம அவரு மேல கைய வச்சுடரீங்க .! " அப்ப அவரு கேக்குறாரு " இதெல்லாம் கேக்குரக்கு நீ ஏன்ன கலக்கடராடா ..? " உடனே கலக்கடரா இருந்தாதான் இதெல்லாம் கேக்க முடியுமா அப்படின்னு யோசிச்சிட்டு கலக்கடராக முடிவெடுக்குறீங்க. உங்களுக்குப்பிடிச்ச கலக்டர் படிச்ச ஸ்கூல்ள  போய்   L.K.G சேருறீங்க . அங்கதான் ஹீரோயினும் L.K.G படிக்கிறாங்க. அங்க வச்சு ஒரு லவ் சாங். "


" எல்லாம் சரிதான்யா , ஆனா நான் L.K .G படிக்கிறமாதிரி சீன் வச்சா நம்புவாங்களா ..? "


" என்ன சார் , விஜய் மட்டும் வேட்டைக்காரன் படத்துல அவருக்கு பிடிச்ச போலீஸ் படிச்ச காலேஜ் அப்படின்னு போய் படிக்கிறார். நீங்க படிச்ச நம்ப மாட்டாங்களா..? " 


" அதுசரி , பஞ்ச் டயலாக் இன்னும் வரலையே ..? "


" சார் , உங்க படத்துல பஞ்ச் இல்லாமையா ..? ஒரு சீன்ல நீங்க வில்லன அடிச்சு போட்டுட்டு அவரோட கார திருடிட்டு போறீங்க. நீங்க எதுக்கு திருடரீங்க அப்படின்னு கடைசியா சொல்லுறோம். இந்த தில்லாலங்கடி , ஜென்டில்மன் மாதிரி. கார் திருடும்போது உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது . அப்ப வில்லனோட கார் டிரைவரப்பார்த்து " எடுக்குரியா கார , நடந்து போகட்டுமா ..? " அப்படின்னு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அப்ப DTS சவுண்ட் எபக்ட் போட்டு பிச்சு எடுக்கிறோம்." 


" இந்த பஞ்ச் நல்லாத்தான் இருக்கு , ஆனா இத விட ஏதாவது நல்லதா சொல்லுங்களேன்..? "


" சார் இப்படி வசுசுக்கலாமா ..? கார எடுக்குறியா , போகட்டுமா நடந்து " ..


" இது கலக்கலா இருக்குப்பா . கண்டிப்பா இத 10 வருசத்துக்கு சொல்லிட்டு இருப்பாங்க.. செம ஸ்பீடா இருக்கு , சொல்லுங்க..? "


" சார் அடுத்த சீன் காமெடி பண்ணுறோம் , கொஞ்சம் டபுள் மீனிங்கா , இந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்துல வருமே அதுமாதிரி.. "


" குழந்தைகளுக்கு புரியல , குடும்பத்தோட பாக்க முடியல அப்படிம்பாங்களே .? "


" சார் , சந்தரமுகி படத்துல ரஜினி சாரும் , வடிவேலுவோட பொண்டாட்டியும் ஒரு போர்வைக்குள்ள வச்சு ஒரு காமெடி பண்ணுவாங்களே , அதவிட டபுள் மீனிங் எதுவுமே இல்ல சார். அதையவே நம்ம ஆளுக காமெடி அப்படின்னு சொல்லி ரசிக்கல . அந்த மாதிரி தான் சார். "
அடுத்து ஹீரோயினோட அப்பாவுக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுது , அதனால நீங்க இரண்டு பேரும் செத்துடறீங்க. அதனால நீங்க திருப்பாச்சி படத்துல வர்ற மாதிரி மாறு வேசத்துல ஊர்ல இருக்குற ரவுடிகள கொன்னுடறீங்க.! "


"செம திரில்லிங்யா , கேக்கும்போதே பட்டைய கிளப்புது மேல சொல்லு .."


" அடுத்து கிளைமாக்ஸ் சார் . உங்களை வில்லனோட ஆளுக துரத்துறாங்க , அப்ப பயங்கர வெய்யில் , ஆனா மழை பெய்யுது. அந்த நேரத்துல நீங்களும் ஹீரோயினும் போன படத்துல மீட் பண்ணுன இடம் வந்திடுது , அதைய போட்டு காட்டுறோம். இந்த வில்லு படத்துல காட்டுவாங்களே அது மாதிரி. அப்ப உங்களுக்கு ஹீரோயின் நினைப்பு வந்திடுது. அந்த நேரத்துல வில்லனோட ஆளுக உங்களை சுத்தி வலைச்சுடறாங்க. அப்ப ஒரு கத்தி உங்க நேத்திக்கு நேரா வருது அந்த இடத்துல ஒரு குத்துப் பாட்டு வைக்கிறோம். அந்த பாட்டுல டான்ஸ்ல செம மூவ்மென்ட் வெக்கிறோம். ஜிம்னாஸ்டிக் பண்ணுறோம் . அந்த பாட்டுல உங்களுக்கு வெறும் கோமணம் தான் காஸ்டியூம்." 


" யோவ் என்னையா சொல்லுற ..? " 


" ஆமா சார் .இந்த சிலம்பாட்டம் படத்துல வர்ற Where is The Party பாட்டு மாதிரி வைக்கிறோம். அதுல சிம்பு அவரோட லுங்கிய தூக்கி தூக்கி ஆடுவாருல அதுமாதிரி. அதே மாதிரி இந்த சுறா படத்துல விஜய் தமன்னவோட பேண்ட்ட தூக்கி தூக்கி போடுவாருல்ல , அந்த மாதிரி மூவ்மென்ட் வச்சு தாக்குறோம்.! " 


" அது செம மூவ்மென்ட்யா , கலக்கலா இருக்கும் ." 


" அந்த பாட்டு முடிஞ்சவுடனே உங்களை சுத்தி நின்னுட்டிருந்தவங்கள ஓங்கி அடிக்கிறீங்க. அடிச்ச அடில அங்க இருந்தவங்கள்ள ஒருத்தன் செவ்வாய்லயும் , ஒருத்தன் புதன்லையும் போய் விழுறாங்க.அப்புறமா வில்லன வெட்டிடறீங்க. அப்படியே ரத்தமும் சதையுமா காட்டுறோம். அந்த இடத்துல ஒருத்தன் வந்து உங்களைப் பார்த்து " யாரு நீ ..? " அப்படின்னு கேக்குறான். அவனைப்பார்த்து நீங்க " தமிழ்நாட்டுல என்னைப்பார்த்து இப்படி கேட்ட முதல் ஆளு நீதான்" அப்படின்னு சொல்லி அவன கொன்னுடறீங்க. அப்படியே படத்த முடிக்கிறோம்.! "


இத கேட்ட உடனே அவரு " செம கதைய்யா. கண்டிப்பா 200 டேஸ் ஓடும் . மணி அந்த மத்த 3 படத்துக்கான சூடிங்கயும் தள்ளிப்போடு, முதல்ல இதுதான். இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டுக்குத் தான் நான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.! சரி நீங்க போய் ஸ்டோரி டிஸ்கசனுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க.! " அப்படின்னார்.


"என்னால நம்பவே முடியல , எனக்கே என்னோட கதை புரியலை ,அவருக்கு புரிஞ்சது அப்படிங்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா.? அப்படின்னா வில்லன கொன்னு , பிகர் உசார் பண்ணறதுதான் படமா.? இதுல டவுசர தூக்கி காட்டுற மாதிரி ஜிம்னாஸ்டிக் பண்ணுனா டான்ஸ் . என்ன கொடுமைங்க இது..?!? சரி உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க. ஏன்னா இதே மாதிரி கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... வரப்போகுது. அதுக்கு உதவியா இருக்கும்.


அதிமுக்கியப் பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.! 


57 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padichitten.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

aanaa pidikkalai. chee padikkalai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அதிமுக்கியப் பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.! //

ஆமா சத்தியமா இது விஜய் மாதிரி இல்லை.

வினோ said...

நல்லா இருக்கு செல்வா...
ஆமா இந்த கதை அந்த ******* ஹீரோவுக்கு தானே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"என்னால நம்பவே முடியல , எனக்கே என்னோட கதை புரியலை ,அவருக்கு புரிஞ்சது அப்படிங்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா.? அப்படின்னா வில்லன கொன்னு , பிகர் உசார் பண்ணறதுதான் படமா.? இதுல டவுசர தூக்கி காட்டுற மாதிரி ஜிம்னாஸ்டிக் பண்ணுனா டான்ஸ் . என்ன கொடுமைங்க இது..?!? சரி உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க. ஏன்னா இதே மாதிரி கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... வரப்போகுது. அதுக்கு உதவியா இருக்கும்.

//

எனக்கு சிரிப்பு வரலை. போதும் நாம இதோட நிறுத்திக்குவோம்...

ப.செல்வக்குமார் said...

ஐயோ இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்து ஹீரோயினோட அப்பாவுக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுது , அதனால நீங்க இரண்டு பேரும் செத்துடறீங்க. அதனால நீங்க திருப்பாச்சி படத்துல வர்ற மாதிரி மாறு வேசத்துல ஊர்ல இருக்குற ரவுடிகள கொன்னுடறீங்க.! "///

செத்தப் பிறகு எப்படிய்யா கொல்லுவாரு. ஒரு வேலை ஆவியா வருவாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்து ஹீரோயினோட அப்பாவுக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுது , அதனால நீங்க இரண்டு பேரும் செத்துடறீங்க. அதனால நீங்க திருப்பாச்சி படத்துல வர்ற மாதிரி மாறு வேசத்துல ஊர்ல இருக்குற ரவுடிகள கொன்னுடறீங்க.! "///

பேய் படமா. அய்யோ பயமா இருக்கு....

ப.செல்வக்குமார் said...

/// செத்தப் பிறகு எப்படிய்யா கொல்லுவாரு. ஒரு வேலை ஆவியா வருவாரா? ///
அங்கதான் நிக்குறாரு எங்க மாஸ் ஹீரோ ..

சௌந்தர் said...

இவ்வளவு நேரம் சிரிச்சி சிரிச்சி தாங்க முடியலை இந்த கதையை நிச்சயம் ஒரு ஹீரோ நடிப்பார்

இம்சைஅரசன் பாபு.. said...

கடைசி வரைக்கும் producer யாருன்னு சொல்லவே இல்லையே
படத்துல ஒரு பிச்சை காரன் கதாபத்திரம் வருது பாருங்க அதுல நீங்க நடிக்கலாம்

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
கடைசி வரைக்கும் producer யாருன்னு சொல்லவே இல்லையே
படத்துல ஒரு பிச்சை காரன் கதாபத்திரம் வருது பாருங்க அதுல நீங்க நடிக்கலாம்////

@@@இம்சைஅரசன் பாபு. நீங்க தான் producer

இம்சைஅரசன் பாபு.. said...

//இவ்வளவு நேரம் சிரிச்சி சிரிச்சி தாங்க முடியலை இந்த கதையை நிச்சயம் ஒரு ஹீரோ நடிப்பார்//


சௌந்தர் இது எல்லாம் ஓவரா இல்லை நீங்க சிரிசீங்கலக்கும்ம்.............பெட் எல்லாம் நனைஞ்சி இருந்தது அதுக்கு பேரு அழுகை

dheva said...

கலெக்டர் வேலைக்கு படிக்கிறது...... நச்...

தம்பி..ரொம்ப டென்சன் லைஃப் இங்க..உன் பதிவு படிச்சு மனம்விட்டுசிரிச்சுகிட்டு இருக்கேன்....

"பதிவுலக விகடகவி..." என்றபட்டத்தையும் கொடுக்கிறேன்.

பதிவுலக விகடகவி....

(அட பாவி தம்பிகளா...வாழ்க....வாழ்கன்னு கத்தமாட்டீங்களா!!!!)

சௌந்தர் said...

யார் வாழ்க கத்தணும்

dheva said...

கோமாளி வாழட்டுமேப்பா....!

ப.செல்வக்குமார் said...

நன்றி தேவா அண்ணா .. எனக்கு பட்டம் கொடுத்ததுக்கு ..!!!

வெறும்பய said...

வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..
வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..
வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..
வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..
வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..
வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..
வாழ்க .. வாழ்க.. கோமாளி வாழ்க..

சத்தியமா இது மனசார வாழ்த்துறது தான்...

ப.செல்வக்குமார் said...

///சத்தியமா இது மனசார வாழ்த்துறது தான்... ///
நன்றி நன்றி நன்றி ..!!
என்னால நம்பவே முடியல ..!!

Shameer said...

SUPER......... NALLA COMEDY PA OFFICELA

" ஆனா கீழ விழுந்த வில்லன் அவரோட ஆளுகள கூப்பிட்டு உங்களை அடிக்க சொல்லுறாரு. அப்ப அந்த இடத்துல ஒரு குச்சி நட்டு வச்சு அதைய நீங்க அடிக்கிறீங்க. அந்த அதிர்வுள அமெரிக்காவுல இருக்குற வில்லனோட அண்ணன் மாடில இருந்து கீழ விழுந்திடராரு. அப்ப " நான் அடிச்சா தாங்க மாட்ட " பாட்ட ரீமிக்ஸ் பண்ணி தூக்குறோம். "

INTHA VARIYA PADICHUTTU SIRIPPA ADAKKA ROMBA NERAM AACHUPPA. THANKS THANKS THANKS. MANASA KONJA NERAM LESAAKUNATHUKKU.

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவுலக விகடகவி.... வாழ்க

பதிவுலக விகடகவி.... வாழ்க

பதிவுலக விகடகவி.... வாழ்க

மங்குனி அமைசர் said...

உஸ.... எவ்ளோ பெரிய பதிவு ???? இரு படிச்சிட்டு வர்றேன்

அருண் பிரசாத் said...

//கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... வரப்போகுது.//

அய்யோ... கொலை செய்ய வரார் கொலை செய்ய வரார், காப்பத்துங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//அய்யோ... கொலை செய்ய வரார் கொலை செய்ய
வரார், காப்பத்துங்க//

எங்க போய் காப்பத்துறது பதிவுலகத்துல இத அனுபவிச்சே தேரனும் நம்ம கோமாளி வாழ்க

மங்குனி அமைசர் said...

என்ன டைரக்டர் நீ ??? ஹீரோ இதுல ஏழைகளுக்காக பாடுபடவே இல்லை , ஹீரோவுக்கு தங்கச்சி இல்லை , ஒரே சான்குல ஹீரோ பணக்காரனாகுற சீன இல்லை , அம்மா செண்டிமெண்ட் இல்லை , ஹீரோவுக்கு அல்லக்கை பிரண்டு இல்லை , அரசியல் வாதிகளுக்கு எதிரா ஒரு டையலாக் இல்லை ,

கோமாளி இன்னும் உன்கிட்ட நான் அதிகமா எதிர்பாக்குறேன் , இம் .......... ஸ்டார் மூசுக்

ப.செல்வக்குமார் said...

//எங்க போய் காப்பத்துறது பதிவுலகத்துல இத அனுபவிச்சே தேரனும் நம்ம கோமாளி வாழ்க ///
உங்க வாழ்த்துக்கு நன்றி ..!! ஹி ஹி ..

ப.செல்வக்குமார் said...

@ மங்குனி :
அட ஆமா .. நான் மறந்தே போயிட்டேன் .. ஆனா அவ்ளோ போட்டா ரொம்ப பெரிசா போய்டுமே !!

இம்சைஅரசன் பாபு.. said...

@மங்குனி அமைசர்

உசுபேத்தி விட்டாச்சா இன்னும் எஹனை பதிவுகளோ ..................
மங்குனி கொஞ்சம் வாயை வைசிகிட்டு சும்மா இருப்ப

மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

@மங்குனி அமைசர்

உசுபேத்தி விட்டாச்சா இன்னும் எஹனை பதிவுகளோ ..................
மங்குனி கொஞ்சம் வாயை வைசிகிட்டு சும்மா இருப்ப ////


இப்படித்தான் மெது மெதுவா மஞ்ச தண்ணி ஊத்தி , மாலைபோட்டு , குங்குமம் வச்சு அப்புறம் நச்சுன் ஒரே போடு , அதுக்கப்புறம் தொந்தரவே இருக்காதுல்ல , அதுக்குத்தான்

Chitra said...

" சார் , ஹீரோ எது பண்ணினாலும் அது காதல் , வில்லன் என்ன பண்ணினாலும் எதுவுமே பண்ணாட்டியும் அவர அடிக்கணும் அதுதானே சார் ஏக்சன் ஸ்கிரிப்ட்.!"

.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம! தொடர்ந்து போட்டு தள்ளுங்க!

வெங்கட் said...

" மாஸ் ஹீரோ" - நாகர்ஜுனா..
ஆமா அவரு மேல உங்களுக்கென்ன
இவ்ளோ காண்டு..?!!

என்னது நானு யாரா? said...

செல்வா! நீ எல்லோரையும் சிரிக்க வைக்கிற. அதே போல நையாண்டி மூலமா உண்மைகளை சொல்லுற. நம்ப சினிமாவை பத்தி அருமையா பின்னி எடுத்திட்ட! ரொம்ப ரசிச்சேன் போ!

"பதிவுலக விகடகவி..." என்றபட்டத்தையும் கொடுக்கிறேன். தேவா சொல்லிடாரு! நானும் அதை வழிமொழியறேன்.

பல இடங்கள்ல உன்னுடைய நகைசுவை அருமை! நீ ஜெயிப்பே! வாழ்க்கையில ஒரு நல்ல நிலைக்கு வருவே!

என்னது நானு யாரா? said...

அந்த தமிழ்மணம் ஓட்டு பட்டையை கீழே கொண்டு வந்து வைப்பா! இப்போ என்னால ஓட்டு போட முடியல.

கீழே கொண்டுவந்து வைச்சாத்தான், அது சரியா வேலை செய்யும். என்னுடைய வலைபக்கத்திலும் ஓட்டு போட முடியாம இருந்தது. இப்போ சரியாச்சி.

நீயும் மத்த ஓட்டு பட்டிகள் கிட்ட அந்த தமிழ்மணம் ஓட்டு பட்டையை கொண்டுவந்து வெச்சிடு.

சீக்கிரம் சரி செய்திடு செல்வா!

எஸ்.கே said...

ரொம்ப நல்லா இருக்கு!
//கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... //
இதையும் போடுங்க படிப்போம். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!

velji said...

humorous!the reality is the same!

cs said...

கோமாளியும் கொலை காரனும்---அப்படிங்கற பேர்ல

நானே ஒரு பதிவு எழுத வேண்டியது இருக்கும்.

ஜாஆஆஆக்க்ரதை.

--

டுபாக்கூர்கந்தசாமி said...

//" சார் , சந்தரமுகி படத்துல ரஜினி சாரும் , வடிவேலுவோட பொண்டாட்டியும் ஒரு போர்வைக்குள்ள வச்சு ஒரு காமெடி பண்ணுவாங்களே , அதவிட டபுள் மீனிங் எதுவுமே இல்ல சார். அதையவே நம்ம ஆளுக காமெடி அப்படின்னு சொல்லி ரசிக்கல . அந்த மாதிரி தான் சார். "//

நியாயமான வாதம் மக்கள சினிமா எந்த அளவு போய் சேரும்னு தெரிஞ்சும் இப்படி எல்லாம் பொறுப்பில்லாம் எடுக்குறாங்க....விடாத எல்லாத்தையும் போட்டு தாக்கு.

அப்பன் தயாரிப்பாளாராவும், இயக்குனராவும், இல்ல நடிகராவும் இருந்தா போதும் உடனே புள்ள ஹீரோ தான் இப்ப இருக்க முக்கால்வாசி முண்ணனி நடிகர்கள் இப்படி தான் வந்துருக்காங்க...சரி எழவு நடிகர் ஆய்டானுங்க கொஞ்சம் மனசாட்சியோட நடிங்கடானா அதுவும் பண்ணாம கண்ட சேட்டை உதாரணம் திரு.சொம்பு ச்ச கம்பு ச்ச வம்பு ச்ச அவன் பேரே வர மாட்டங்கது ஆங் அதான் சிம்பு..

அரசியல்வாதிய எதிர்பாக்குறேன்...

வாழ்த்துகள்.

arul Sudarsanam said...

பதிவுலக விகடகவி வாழ்க!! பதிவுலக விகடகவி வாழ்க!! பதிவுலக விகடகவி வாழ்க!! பதிவுலக விகடகவி வாழ்க!!

அன்பரசன் said...

//அதிமுக்கியப் பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.! //

ஆஹா இது நல்லா இருக்கே தப்பிக்க

Murali.R said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

Jeyamaran said...

*/ எடுக்குரியா கார , நடந்து போகட்டுமா ..? " அப்படின்னு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அப்ப DTS சவுண்ட் எபக்ட் போட்டு பிச்சு எடுக்கிறோம்." /*

பஞ்ச் நல்லா இருக்கு செல்வா..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
This comment has been removed by the author.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ரைட்டு!

siva said...

இதுவரை கேள்விப்படாத கதைங்க ..!! நல்லா இருக்கு ...

ADA Naasama pora koomali..ethu ellam unnakey overa theriala..

"avaruthan kolrarna neeuma"

unaku kudutha patthiruku kadum kandangalai theirivitu kolkiren..

siva said...

பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!!

ப.செல்வக்குமார் said...

//பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! பதிவுலக விகடகவி venkat annan வாழ்க!! ///

ஹி ஹி ஹி .. அவரு சூரியனுங்க ..!!

siva said...

"சார் இது பிரபல சூப்பர் ஹீரோ *** வீடுதானுங்களே..? " என்றேன்"

ethu ellam konjam overa theriala..ennoda doubt enna endrall..neenga kadhai ready panathu evarugathan..avar vetukey vanthu ..ethu avar veedanu keeta mahaney..kaila sikknia avalothan choliputen..

siva said...

APOVEY CHONNEN,enta PERARASU KITTA ELLAM ASSITANTA SERATHANU CHONA KEKANUM...

Eppo paaru..oru half peraasvoda tambi POLA neeum aita..

ennamo po nalla eru raasa.

siva said...

49

siva said...

50

ராஜன் said...

நடத்துங்க! அடிக்கடி வர்றேன்! சைடுல ஃபாலோயரா சேந்தாச்சு!

சிவராம்குமார் said...

நக்கலும் நையாண்டியும் போட்டு தாக்குறீங்க!

Ananthi said...

ஹா ஹா ஹா... உண்மையிலே சூப்பர்...
சிரிச்சு முடியல இன்னும்.. செமையா எழுதி இருக்கீங்க..
அதெப்படிங்க இப்படி கேப் விடாம அடிக்கிறீங்க..
ரொம்ப நல்லா இருக்கு.. ரசித்து படித்து சிரித்தேன்...

Kousalya said...

ரொம்ப சரியான நகைசுவை கலாட்டாவா இருக்கே செல்வா...வாழ்த்துக்கள்

:))

LK said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கிறேன் . பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/09/blog-post_19.html

பிரியமுடன் பிரபு said...

பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.//

சீ சீ நிங்க ரசினி , விசையை தான் சொன்னிகனு நான் சொல்ல மாட்டேன்

பிரியமுடன் பிரபு said...

அப்ப ஹீரோயின் உங்க பேர சொல்லு கத்துறாங்க. அடுத்த செகண்ட் வில்லன் ஜன்னல பிச்சுட்டு போய் கீழ விழுறாரு. அவரு விழுந்த உடனே அவரோட கண்ணுக்குள்ள உங்கள காட்டுறோம்
///

வலை உலகின் பேரரசு அய்யா நீ