Friday, June 25, 2010

பொறியல்

(முன்குறிப்பு : பெரிய பதிவர்கள் அவியல் , குவியல் அப்படின்னு எழுதறாங்க .. நான் இன்னும் காம்ப்ளான் குடிசிட்டிருக்கரதால பொறியல்னு )

*.ன்னிக்கு காலைல ஒருத்தர் ,
"எனக்கு என்னமோ தோஷம் இருக்குதாமா, அந்த தோஷம் இருக்கறவங்களுக்கு தோஷ நிவர்த்தி செய்யும் வரைக்கும் கல்யாணம் ஆகாதாமா.. இவங்க போய் பாக்குற பொண்ணுகளுக்கு உடனே கல்யாணம் ஆகிடுமாமா , ஆனா இவங்களுக்கு ஆகாது , அப்படின்னு ஜோஷியகாரர் சொல்றார் அந்த தோசத்த கழிக்கலாம்னு இருக்கேன் " அப்படின்னார்.

அதுக்கு நான் ," அண்ணா இது நல்லா தோஷமா இருக்கு , ஊர்ல இருக்குற கல்யாணம் ஆகாத பொண்ணுகளோட லிஸ்ட் எடுங்க .. அவுங்க வீட்டுக்கு போய் உங்க தோஷத்தப் பத்தி சொல்லி நான் உங்க பொண்ண பார்க்க வரேங்க , என்னோட தோஷத்தின் படி கண்டிப்பா உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடும் .. அப்படி கல்யாணம் ஆகிடுட்சுனா எனக்கு 5000 கமிசன் குடுத்திடுங்க அப்படின்னு ஒரு தொழில் ஆரம்பிச்சிட வேண்டியதுதானே .! பொது சேவை செஞ்ச மாதிரியும் ஆச்சுல , இத வச்சு நீங்க பெரிய
பணக்காரர் ஆகிடலாம்ணா.. தோஷத்த சந்தோஷமா பாருங்க ...!!" அப்படின்னு சொன்னேன் ..

*.நேத்திக்கு வீட்டுக்கு போயிட்டிருக்கும் போது ஒருத்தர் இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டிருந்தார்....
"நீங்க செஞ்ச இந்த உதவிய நான் ஏழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேங்க..!"
எனக்கு என்னமோ அவரு ஏமாத்திருவாருன்னு தோணுது.. ஏன்னா இந்த ஜென்மத்துல மறக்க மாட்டாரு சரி.. அடுத்த ஜென்மத்துல நினைச்சிருக்கரக்கு எதாவது மிசின் இருக்க என்ன ...?


*.த்தமில்லாம பட்டாசு வெடிக்கணுமா...?
பட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது..!


*.ன்னிக்கு ஒரு நாள் T .V ல "அபிராமி " நாடகம் பார்த்துட்டிருந்தேன். அதுல கௌதமி சொன்னாங்க " இந்த போலி மருந்து விவகாரத்துல சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்."
அதுக்கு எங்க அம்மா சொன்னாங்க "உன் புருஷன் தான் முக்கியமான ஆளு .."
ஆனா இது கௌதமிக்கு கேக்கவே இல்ல.அவுங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா...?


*.ரண்டு வருசத்துக்கு முன்னாடி சிக்கன் குனியா பரவிக்கிட்டிருந்த போது ஹாஸ்பிட்டல்ல கேட்ட ஒரு குரல் ..
"எலக்சன் முடியற வரைக்கும் கம்முனு இருந்தாங்க , இப்ப கண்டுபிடிச்சு விட்டுட்டாங்க (சிக்கன் குனியாவ கண்டுபிச்சது கவர்மெண்டாம்ல..! இதெல்லாமா கண்டு பிடிக்கிறாங்க )

*.ச்சே.. இந்த கொசுவர்த்தி சுருள் சரியாவே வேலை செய்ய மாட்டேங்குது  .. அப்படின்னு நீங்க நெனச்சா அது சாதாரண வாழ்க்க..
இதே அந்த கொசுவ விருந்துக்கு கூப்பிட்டு அதோட கண்கள ஒரு கருப்பு துணியால கட்டிட்டா கொசுவால நீங்க எங்க இருக்கீங்கன்னு பார்த்து கடிக்க முடியாது..
இது மென்டாஸ் வாழ்க்க ..!

(உண்மையாவே இத படிச்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு சிரிப்பு வரலைன தயவு செய்து தானவே வாய தொறந்து ஹா.. ஹா .. ஹா . அப்படின்னு சிரிச்சுக்குங்க.. ப்ளீஸ் )

17 comments:

சௌந்தர் said...

சத்தமில்லாம பட்டாசு வெடிக்கணுமா...?
பட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது//

நீங்க செய்தது காட்டுங்க ஈரோடு குசும்பு இதுதானோ
ஹா ஹா ஹா சூப்பர் கலக்கல்

Jeyamaran said...

*/.சத்தமில்லாம பட்டாசு வெடிக்கணுமா...?
பட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது..!/**
Nice Comedy !!!!!!

LK said...

nicee

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//*.ச்சே.. இந்த கொசுவர்த்தி சுருள் சரியாவே வேலை செய்ய மாட்டேங்குது .. அப்படின்னு நீங்க நெனச்சா அது சாதாரண வாழ்க்க..
இதே அந்த கொசுவ விருந்துக்கு கூப்பிட்டு அதோட கண்கள ஒரு கருப்பு துணியால கட்டிட்டா கொசுவால நீங்க எங்க இருக்கீங்கன்னு பார்த்து கடிக்க முடியாது..
இது மென்டாஸ் வாழ்க்க ..!//

enga veettukku eppa virunthukku varra?

கவிதா said...

super

Chitra said...

இது ஒரு "mentos " பதிவு. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..

prakash said...

Idhu oru kevalamaana padhivu.... mokka commedy sorry mokka statements. neengellam idhula dhayavum senju eludhaathinga.

Jeyamaran said...

@ prakash
Pls don't put commends like is if u can't feel it pls let it..........

dheva said...

//prakash said...
Idhu oru kevalamaana padhivu.... mokka commedy sorry mokka statements. neengellam idhula dhayavum senju eludhaathinga//

என்ன இது விமர்சனமா....காழ்ப்புணர்ச்சியா இல்லை இல்லை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. தம்பி...செல்வகுமார் ஒரு அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்ட பதிவர். எவ்வளவு டென்சனாக இருந்தாலும்...தம்பியின் வலைப்பூவை திறந்து வைத்தால் வயிறு குலுங்க சிரிக்காமல் மூட முடியாது.


அழகாக அருமையாக தனக்கான ஒரு தனித்திறமையுடன் எழுதி வரும் மிக மிக இளம் வயது பதிவரை இப்படி விமர்சித்திருப்பது ஒரு ஆரோக்கியமான விசயமா என்று தெரியவில்லை.

உங்களுக்கு என்ன மாதிரி எழுத்து வேண்டுமோ அதைத் தேடி படியுங்கள் நண்பரே....! சைவ ஹோட்டலின் வந்து சிக்கன் 65 எதிர்ப்பார்ப்பது யார் தப்பு.....!

செல்வகுமார்...உடனடியாக கமெண்ட் போடுங்கள்.....மேலும் வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்!

dheva said...

Selva... Comment Moderation poduppa!

சௌந்தர் said...

அட இது யார் வலைபதிவு தேவா அண்ணன் இங்கு பதிவு போட்டு இருக்காரு

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பொது சேவை செஞ்ச மாதிரியும் ஆச்சுல , இத வச்சு நீங்க பெரிய
பணக்காரர் ஆகிடலாம்ணா.. தோஷத்த சந்தோஷமா பாருங்க ...!!" //

நான் வொர்க் பண்ற கம்பெனியில கூட எங்க பசங்க அப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியுராணுக.. அதாவது நான் பாக்கற பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுதாம்.. ஆனா கல்லா கட்டும் எண்ணம எல்லாம் இப்ப இல்லை.. இன்னும் நல்லா சிரிக்க வெய்யுங்க..

அப்புறம்.. மேலே இருக்கும் பிரகாஷ் யாருன்னு தெரியல..

நன்றி..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த mentel பதிவு சாரி mentos பதிவு அருமை

வால்பையன் said...

@ பிரகாஷ்!

யார் எழுதனும், என்ன எழுதனும்னு எதாவது லிஸ்ட் வச்சிருக்கிங்களா!? ஏன்னா நானும் ஒரு மொக்கை பதிவர் தான்!

Meerapriyan said...

thambi... unga mun kurippu nallaa irukku..hi...hi...-meerapriyan

கார்த்திக் said...

// ஹா.. ஹா .. ஹா . அப்படின்னு சிரிச்சுக்குங்க.. ப்ளீஸ் ) //

கண்ணுல தண்ணி தான் மாப்பி(நம்மூர் ஆச்சே) வருது :-((

விஜய் said...

//*.அன்னிக்கு ஒரு நாள் T .V ல "அபிராமி " நாடகம் பார்த்துட்டிருந்தேன். அதுல கௌதமி சொன்னாங்க " இந்த போலி மருந்து விவகாரத்துல சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்."
அதுக்கு எங்க அம்மா சொன்னாங்க "உன் புருஷன் தான் முக்கியமான ஆளு .."
ஆனா இது கௌதமிக்கு கேக்கவே இல்ல.அவுங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா...?

//
செம காமெடி செல்வா... இந்த மாதிரி நிறையா நடக்குது ...
ஹ ஹ எ ஹ ஆஹா ஹ ....