Wednesday, December 22, 2010

என்னத்த சொல்லுறது.?

முன்குறிப்பு : எல்லோரும் கவிதை எழுதுறாங்க , சரி நாமளும் முயற்சி பண்ணி பாக்கலாம்னு வந்தேன்.! இத படிச்சு உங்க உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.!

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..

ஒவ்வொருமுறை விக்கல் வரும்போதும் உன் நியாபகம் .
நீதான் நினைக்கிறாய் என்கிறது மனது.!
அறிவியல் வளர்ந்தென்ன பயன்..?
யார் எங்கிருந்து நினைக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாமல்.!

"அவ கூப்பிடறா மச்சி " என்றவாறே செல்போனை எடுத்துக்கொண்டு
தனியாகப் போகும் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமைப்படுகிறேன் அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!

ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.! இருந்தாலாவது பயமில்லாமல் காதலித்திருப்பேன்.

இப்பொழுதெல்லாம் பூரியை விட பூரிக்கட்டை
சண்டைகளே என்னை அதிகம் கவர்கின்றது.!
எப்பொழுது நீ என் மீது வீசப்போகிறாய்.?

தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
என்ற வைரமுத்துவின் வரிகளில்தான் எத்தனை உண்மை.?!

என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?

அழகான பெண்களைக் கடக்கையில் மட்டும்
அது நீதானா என சத்தமிடும் மனது
நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!
 
இரண்டு முழ கூந்தல் வைத்திருப்பாயோ இல்லை
பாப் கட்டிங் செய்திருப்பாயோ தெரியவில்லை ,
எப்படி இருந்தாலும் என் தேவதை நீ தான்.!

உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்வேனா ,
இல்லை கல்யாணம் செய்து காதலிப்பேனா தெரியவில்லை.!
நீ சைவமோ அசைவமோ தெரியவில்லை.!
சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை.!
இருந்தாலும் உன்னைக் காணாமலே நித்தமும் ஒரு கற்பனையில்
காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .!

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : நீயெல்லாம் கவிதை எழுதலைன்னு யார் அழுதா.?

நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் ..!

பின்குறிப்பு : நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?

125 comments:

Balaji saravana said...

vadai :)

Mohamed Faaique said...

வடையோட எதாவது ப்ரீ'யா கிடைக்காதா?

சௌந்தர் said...

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..///

ங்கொய்யாலே நீயும் தேட ஆரம்பிச்சிட்டியா ச்சே இந்த தேடல்னு மதிப்பே கெட்டு போச்சு அவன் அவன் தேடல் பதிவு எழுதுறன்

ம.தி.சுதா said...

ஃஃஃஃநான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!ஃஃஃஃ

முயற்சிக்கிறேன் என்று முழுதாய் கவர்ந்திட்டிங்களே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

logu.. said...

vadai poceyyy..

எஸ்.கே said...

உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்வேனா ,
இல்லை கல்யாணம் செய்து காதலிப்பேனா தெரியவில்லை.!
நீ சைவமோ அசைவமோ தெரியவில்லை.!
சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை//

இத்தனையும் தெரியவில்லை அப்புறம் எப்படி அந்த பொண்ணுக்கு புடிக்கும்?

Balaji saravana said...

//இனியும் தேடத் திராணி இல்லை //
இனி தேடவா? இல்ல ஓடவா? ;)

சௌந்தர் said...

இப்பொழுதெல்லாம் பூரியை விட பூரிக்கட்டை
சண்டைகளே என்னை அதிகம் கவர்கின்றது.!
எப்பொழுது நீ என் மீது வீசப்போகிறாய்.?///

அருண் பிரசாத் கிட்ட கேளு எப்படி அடி விழும்

இம்சைஅரசன் பாபு.. said...

//எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..//
ஏன் இவ்வளவு கஷ்ட பாடுற ......ரெண்டு தெரு தள்ளி பொய் பாரு பண்ணி மேய்ச்சு கிட்டு இருக்க ......

சௌந்தர் said...

என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?///

sms வந்த கவிதை எல்லாம் எடுத்து நீ எழுதினது சொல்றியா

கோமாளி செல்வா said...

//
Balaji saravana said...
vadai :)/ஹி ஹி ஹி .. உங்களுக்கு வடை கிடைச்சிருச்சு ..!

logu.. said...

poorikattaiyellam saripattu varathu...

En sontha selavula ammikallu vangitharen..

dheva said...

//நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் ..!//

ஹி ஹி ஹி...பதிவுலகம் உண்மைய பேச ஆரம்பிச்சிருச்சு......!

கோமாளி செல்வா said...

//sms வந்த கவிதை எல்லாம் எடுத்து நீ எழுதினது சொல்றியா
//

ராஸ்கல் பிச்சு புடுவேன் பிச்சு ..

Balaji saravana said...

//என்னைப்போல ஏழு மணிவரை //
கவிதைனா பொய் சொல்றது தான் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ;)

Mohamed Faaique said...

ஆஹா!!! இந்த பீலிங் நமக்கு மட்டும்தான் இருக்கு'ன்டு நெனச்சிட்டு இருந்தேனே! ஒரு கூட்டமே இருக்கா..

கோமாளி செல்வா said...

//ஹி ஹி ஹி...பதிவுலகம் உண்மைய பேச ஆரம்பிச்சிருச்சு......!//

எனக்கு உண்மை ரொம்ப பிடிக்கும் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//நீயெல்லாம் கவிதை எழுதலைன்னு யார் அழுதா.?//
இருடா தம்பி நாளைக்கு அந்த ஏரியா கிராஸ் பண்ணா வேண்டியது வந்து தூக்கி போட்டு மிதிக்கிறேன்

அருண் பிரசாத் said...

ங்கொய்யால இன்னும் நீ பொன்னையே பாக்கலையா?

கோமாளி செல்வா said...

// Balaji saravana said...
//என்னைப்போல ஏழு மணிவரை //
கவிதைனா பொய் சொல்றது தான் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ;)//அப்படின்னா ஒரு எட்டு மணி அப்படின்னு வச்சிக்கலாம அண்ணா ..?!

பிரியமுடன் ரமேஷ் said...

//நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..? //

மொக்கை போடறதை நிறுத்திட்டு கவிதை எழுதுங்க.. நல்லாவே இருக்கு..

எஸ்.கே said...

கவிதையே
கவிதை
பேசுகிறதே!

(ஆமா அந்த பொண்ணு பேர் கவிதாவா?)

கோமாளி செல்வா said...

//முயற்சிக்கிறேன் என்று முழுதாய் கவர்ந்திட்டிங்களே...//

அட பாவமே ..!! இது நல்லா இருக்குதுன்னு சொல்லுரீன்லா ..?

வைகை said...

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..///


கொஞ்சம் வெய்ட் பண்ணு வடை வாங்கிட்டு வந்து தேடறேன்!!

எஸ்.கே said...

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை//

சீர்திருத்த பள்ளியில தேடலையா?

siva said...

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..---chatla thedi pathiyapa?

கோமாளி செல்வா said...

/ அருண் பிரசாத் said...
ங்கொய்யால இன்னும் நீ பொன்னையே பாக்கலையா?

/

ஹி ஹி ஹி .. நம்ம அளவுக்கு அழகா இன்னும் ஒரு பொன்னும் கிடைக்கல அண்ணா . ஹி ஹி ஹி

வைகை said...

சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை//////


அதெல்லாம் சரிதான்! ஆனா சிரிச்சதுக்கு அப்பறம் ஒனக்கு குழி நிச்சயம்!

கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
கவிதையே
கவிதை
பேசுகிறதே!

(ஆமா அந்த பொண்ணு பேர் கவிதாவா?)

//

ஹி ஹி ஹி ..இன்னும் யாருனே தெரியல .? அதுக்குள்ள எப்படி பேரு தெரியும் ..?

siva said...

சார் உங்க காதல் ரொம்ப ஆழமானது
என்னே வரிகள் ...

வைகை said...

Mohamed Faaique said...
வடையோட எதாவது ப்ரீ'யா கிடைக்காதா?////////ஓட்ட ப்ரீயா கெடெக்கும்!

கோமாளி செல்வா said...

//சீர்திருத்த பள்ளியில தேடலையா?//

அட பாவமே ..?!

கோமாளி செல்வா said...

// siva said...
சார் உங்க காதல் ரொம்ப ஆழமானது
என்னே வரிகள் .//நக்கல் ..?

siva said...

ஆஹா!!! இந்த பீலிங் நமக்கு மட்டும்தான் இருக்கு'ன்டு நெனச்சிட்டு இருந்தேனே! ஒரு கூட்டமே இருக்கா..
///
இருக்கோம் பாஸ் ...

சங்கவி said...

எப்படி இப்படி எல்லாம்...

Arun Prasath said...

தேடு தேடு... கண்டிப்பா கெடைப்பா

siva said...

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.---------///

எனகென ஏற்கனவே பிறந்தவள் எவ்ளோன்னு பாட்டு படித்து கொண்டு இருங்க...விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்...நண்பா

Arun Prasath said...

தேட நான் வேணா ஹெல்ப் பண்ணவா?

வினோ said...

எனக்கு பிடித்த வரிகள் -

/ என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை /

:)

Madhavan Srinivasagopalan said...

உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்வேனா ,
//இல்லை கல்யாணம் செய்து காதலிப்பேனா தெரியவில்லை.!
நீ சைவமோ அசைவமோ தெரியவில்லை.!
சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை.!
#
இருந்தாலும் உன்னைக் காணாமலே நித்தமும் ஒரு கற்பனையில்
காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .! //

Insert the following lines in place of #
ஒன்னைப் பார்த்து நா மொக்கை புடுவேனே.. இல்லை
என்னைப் பார்த்து நீ மொக்குவாயோ தெரியாது !

தமிழ்க் காதலன். said...

தம்பி செல்வாவுக்கு, சும்மா சொல்லக் கூடாது. உனக்கு எழுத நல்லாத்தான் வருது. ஆனா ஏன் இப்படி மொக்கை போட்டு உன்னை மொக்கையாக்கிகிறன்னுதான் தெரியல. நல்ல கற்பனை. நகைச்சுவை இருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுது. தமிழ் உன்னை மாற்றும்.
இன்னும் எஸ்.கே கூட பேசிட்டுதான் இருக்கியா....? இரண்டு பேரும்... நல்ல கூட்டணிதான் போங்க. மொக்க போடறதுல.

கோமாளி செல்வா said...

//Insert the following lines in place of #
ஒன்னைப் பார்த்து நா மொக்கை புடுவேனே.. இல்லை
என்னைப் பார்த்து நீ மொக்குவாயோ தெரியாது !

//

ஹி ஹி ஹி .. இது நல்லா இருக்கு ..!!

கோமாளி செல்வா said...

//இன்னும் எஸ்.கே கூட பேசிட்டுதான் இருக்கியா....? இரண்டு பேரும்... நல்ல கூட்டணிதான் போங்க. மொக்க போடறதுல.//

மொக்கை எங்கள் குல தெய்வம் அண்ணா .. ஹி ஹி ஹி

நாகராஜசோழன் MA said...

செல்வா கதை சூப்பர்..

சௌந்தர் said...

அருமை

நாகராஜசோழன் MA said...

என்னத்தை சொல்ல? எல்லாம் கலி காலம்..

(கமெண்ட்டை மாத்திப் போடுவோர் சங்கம்)

கோமாளி செல்வா said...

// நாகராஜசோழன் MA said...
என்னத்தை சொல்ல? எல்லாம் கலி காலம்..

(கமெண்ட்டை மாத்திப் போடுவோர் சங்கம்)

/

ஹி ஹி ஹி ..

MANO நாஞ்சில் மனோ said...

"அவ கூப்பிடறா மச்சி " என்றவாறே செல்போனை எடுத்துக்கொண்டு
தனியாகப் போகும் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமைப்படுகிறேன் அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!///


ஏலே நீ என்ன மன்மத குஞ்சு'ன்னு நினச்சிட்டு இருக்கியா என்ன...:]

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு உண்மை ரொம்ப பிடிக்கும் ..!!
////

இது பச்சை பொய்...

கோமாளி செல்வா said...

///

ஏலே நீ என்ன மன்மத குஞ்சு'ன்னு நினச்சிட்டு இருக்கியா என்ன...:]

///

ஹி ஹி ஹி .. ஒரு மொக்க போட விடமாட்டீங்களா ..?

கோமாளி செல்வா said...

//எனக்கு உண்மை ரொம்ப பிடிக்கும் ..!!
////

இது பச்சை பொய்...

/

பச்ச கலர்ல இருக்குமா ..?

MANO நாஞ்சில் மனோ said...

//இருடா தம்பி நாளைக்கு அந்த ஏரியா கிராஸ் பண்ணா வேண்டியது வந்து தூக்கி போட்டு மிதிக்கிறேன்///

அண்ணா என்னையும் கூட கூட்டிட்டு போங்க எனக்கும் அவனை மிதிக்கணும் போல இருக்கு'ணா

கோமாளி செல்வா said...

//அண்ணா என்னையும் கூட கூட்டிட்டு போங்க எனக்கும் அவனை மிதிக்கணும் போல இருக்கு'ணா
//

ஹி ஹி ஹி .. எத்தனை நல்லவர்கள் இருக்காங்க ..?

MANO நாஞ்சில் மனோ said...

//ங்கொய்யால இன்னும் நீ பொன்னையே பாக்கலையா?///இவன் பாத்தா [[மூஞ்சிய பாத்து]] பொண்ணு மயங்கி விழுந்துருமே....

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கை போடறதை நிறுத்திட்டு கவிதை எழுதுங்க.. நல்லாவே இருக்கு..///


இந்த இளவத்தான் நான் அப்போதே சொல்லிட்டு இருக்கேன்.....
ஆனா அவன் ஒரு சங்கத்தையே ரத்தத்தோட அலைய விட்டுட்டு இருக்கான்...

சி.பி.செந்தில்குமார் said...

the rhyme is super,but u wrongly added comedy in it

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஒவ்வொருமுறை விக்கல் வரும்போதும் உன் நியாபகம் .


gnaapakam not niyaapakam

MANO நாஞ்சில் மனோ said...

கவிதையே
கவிதை
பேசுகிறதே!////


எஸ் கே என்னய்யா மப்பு இன்னும் இறங்கலையாக்கும்...:]

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.!


ilakkaNappizai

en vayadhai oththa pennaae illai or pen vaarisaee illai

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதை எல்லாம் நல்ல இருக்கு

dineshkumar said...

இப்பொழுதெல்லாம் பூரியை விட பூரிக்கட்டை
சண்டைகளே என்னை அதிகம் கவர்கின்றது.!
எப்பொழுது நீ என் மீது வீசப்போகிறாய்.?

செல்வா கலக்கிட்டீங்க நல்லாருக்கு இன்னும் முயற்சி வேண்டும் மேலும் நல்ல பதிவுகளை கொடுக்க என் வாழ்த்துக்கள்
எங்கிருக்காய் என்னவளே ? நாங்களும் தேடிகிட்டு தான் இருக்கோம் என்ன பண்றது எல்லாம் அவன் செயல்

MANO நாஞ்சில் மனோ said...

//ஹி ஹி ஹி .. நம்ம அளவுக்கு அழகா இன்னும் ஒரு பொன்னும் கிடைக்கல அண்ணா . ஹி ஹி ஹி///


காவ்யா மாதவன், சோனியா அகர்வால்'லாம் சும்மாதான் இருக்காங்களாம் டிரை பண்ணு....

சி.பி.செந்தில்குமார் said...

>>>
என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?

ezuvaayoo enpadhee sari

சி.பி.செந்தில்குமார் said...

>>>
அழகான பெண்களைக் கடக்கையில் மட்டும்
அது நீதானா என சத்தமிடும் மனது
நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!


good lines

MANO நாஞ்சில் மனோ said...

அதெல்லாம் சரிதான்! ஆனா சிரிச்சதுக்கு அப்பறம் ஒனக்கு குழி நிச்சயம்!///


ஹா ஹா ஹா இது சூப்பர் கமெண்டு ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

சார் உங்க காதல் ரொம்ப ஆழமானது
என்னே வரிகள் ...////அடடடா நெஞ்சை நக்குராங்களே...................:]

MANO நாஞ்சில் மனோ said...

தேட நான் வேணா ஹெல்ப் பண்ணவா?///வீடு கட்டி அடியும் கெடைக்கும் பரவாயில்லையா....

கோமாளி செல்வா said...

@ செந்தில் அண்ணா

ஐயோ இதுல இத்தனை பிழை இருக்கா ..?

கோமாளி செல்வா said...

///வீடு கட்டி அடியும் கெடைக்கும் பரவாயில்லையா.... ///

ஹி ஹி ஹி ... உங்களுக்கு வேணுமா அண்ணா ..?

MANO நாஞ்சில் மனோ said...

என்னத்தை சொல்ல? எல்லாம் கலி காலம்..

(கமெண்ட்டை மாத்திப் போடுவோர் சங்கம்)///


இந்த அரசியல் வியாதி பயலுவளை நம்பவே கூடாதுப்பா.....

சி.பி.செந்தில்குமார் said...

>>>
நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் .

good one

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை எல்லாம் நல்ல இருக்கு//

அந்நியன் கெட்டப்புல வராம இருந்தா சரி....

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ... உங்களுக்கு வேணுமா அண்ணா ..?///


நீ யாருன்னே எனக்கு தெரியாதே ஆமா நீ யாரு...

Mathi said...

nice try !!

இந்திரா said...

யாருப்பா அந்த முகம் தெரியாத தேவதை???
சீக்கிரம் வந்து செல்வாவை சந்தியுங்கள்..

(அப்ப தான் இப்டி கவிதைங்குற பேர்ல எங்கள கொலை பண்ண மாட்டார்)

karthikkumar said...

"என்னத்த சொல்லுறது.?

karthikkumar said...

:)) nalla irukku machi

ஐயையோ நான் தமிழன் said...

பேரில கோமாளிய வச்சுக்கிட்டு உள்ள ஒரு கவிஞனை ஒளிச்சு வச்சு நாட்டுக்கு இவ்வ்ளவு நாளா துரோகம் பண்ணிட்டீங்களேண்ணா.............................................
நான் புதுசு

goma said...

கவிதை எழுத வராதுன்னு சொல்லிட்டு அழகா அடுக்கிட்டீங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் ..!/////

ப்ளாக்கு படிக்கறது எலவசமா இருக்கற வரைக்கும் இப்பிடித்தான் எதையாவது படிச்சி உடம்பக் கெடுத்துக்க வேண்டியிருக்கும், சரி கடைக்கு ரொம்பக் களைச்சுப் போயி வந்திருக்கேன், ஒரு டீ சொல்லு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
................................///

என்ன சித்தப்பு, இன்னிக்கு வீட்ல சமையல்லாம் சீக்கிரம் முடிஞ்ச்சுடுச்சு போல, அதுக்குல்ல வந்து போட்டுத் தாக்கியிருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அழகான பெண்களைக் கடக்கையில் மட்டும்
அது நீதானா என சத்தமிடும் மனது////

அட்டுபிகர்கள் கடக்கையில் அதில் நீ இருந்துவிடக் கூடாது என்று பம்முகிறது.....!

இப்பிடி பினிஷ் பண்ணனும் தெரியுதா?

இம்சைஅரசன் பாபு.. said...

////அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த பெண் குழந்தைகளே இல்லை.//

டாய் தம்பி ஏன்னா அசிங்கம்மா பேசுறா ???/......பிச்சு போடுவேன்

அரசன் said...

நண்பரே .. அழகாத்தான் இருக்குங்க வரிகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இருந்தாலும் உன்னைக் காணாமலே நித்தமும் ஒரு கற்பனையில்
காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .!/////

ங்கொய்யா நேர்ல போயி பாரு அப்பூறம் கவிதை வராது, கக்கூசுக்குத்தான் வரும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!////

ரயிவே டேசன் வெளிய தேடுனியா.. ஒரு 10-15 பிச்சக்காரிங்க இருக்காளுங்க, எதுக்கும் அங்க ஒருதடவ போயி தேடிப்பாரு....!

கோமாளி செல்வா said...

//அட்டுபிகர்கள் கடக்கையில் அதில் நீ இருந்துவிடக் கூடாது என்று பம்முகிறது.....!///

இது நல்லா இருக்கே.. ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said...

//ரயிவே டேசன் வெளிய தேடுனியா.. ஒரு 10-15 பிச்சக்காரிங்க இருக்காளுங்க, எதுக்கும் அங்க ஒருதடவ போயி தேடிப்பாரு....//

அட ச்சே .. என்னோட பீலிங்கவே யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே ..? ஹி ஹி ஹி

பதிவுலகில் பாபு said...

mmm.. சூப்பர் செல்வா... அருமையாக எழுதியிருக்கீங்க.. ஒரே ஏக்கமாக இருக்கே.. கலக்குங்க..

jaisankar jaganathan said...

//நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?/

படுவா பிச்சுபுடுவேன் பிச்சு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : நீயெல்லாம் கவிதை எழுதலைன்னு யார் அழுதா.?//

ராஸ்கல் யார சொல்ர நீ?? பெரியவங்களை அப்படி எல்லாம் சொல்ல கூடது... நீ திட்டினது தேவாவதான? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.! இருந்தாலாவது பயமில்லாமல் காதலித்திருப்பேன்.//

ஸேம் பிளட்... :(

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

நீ எழுதி இருக்க கவிதை சூப்பர்டா!!! ஹா..ஹா..

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//பின்குறிப்பு : நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?//

இன்னும் ஒரு பிளாக் ஆரம்பிச்சி எழுது... :)

(ஒளிஞ்சி கிடக்கர டாக்ஸ் எல்லாம் வெளிய வாங்கடா.. வடை திருடி பசங்களா..)

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?//

நைஸ்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

ஆகா... அற்புதமான படைப்பு.. நீங்கள் 3வது வரியில் நால்வது சொல்லி இருக்கும் கருத்து என் நெஞ்சை கவர்ந்தது... :)

TERROR-PANDIYAN(VAS) said...

வாழ்த்துகள்!!

TERROR-PANDIYAN(VAS) said...

தொடருங்கள்...!

TERROR-PANDIYAN(VAS) said...

நன்றி!

HVL said...

//
அவ கூப்பிடறா மச்சி " என்றவாறே செல்போனை எடுத்துக்கொண்டு
தனியாகப் போகும் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமைப்படுகிறேன் அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!
//
அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!

//
என்ன தான் சொல்ல வரீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pentastic

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

excellent

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

wov

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

marvelous

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அறிவியல் வளர்ந்தென்ன பயன்..?
யார் எங்கிருந்து நினைக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாமல்.!//

நல்லா நாக்கப்பிடிங்கிக்கிறமாதிரி அறிவியலைக் கேட்டீங்க :))

கல்பனா said...

//இனியும் தேடத் திராணி இல்லை //
இனி தேடவா? இல்ல ஓடவா? ;)//

ஓட ஓட தான் ..
ஆனா செல்வா கலக்குற போ

அன்பரசன் said...

//எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..//

வீதியில ஏன்யா தேடுற??
வீட்டுல போயி பார்த்துட்டு வா...

அன்பரசன் said...

//ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.! இருந்தாலாவது பயமில்லாமல் காதலித்திருப்பேன்.//

Same feeling...

அன்பரசன் said...

//பின்குறிப்பு : நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?//

ம்.. ஜமாய்ங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்

ஹ ஹ ஹா

Jokes Apart

ரசனையா எழுதியிருக்கீங்க செல்வா பெண் வாசமே அறியாதவனுக்கு இந்த கவிதை மிகப்பிடிக்கும்

(உங்களுக்கு பிடிச்சதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டா உங்களுக்கு கேர்ள் ஃப்ரண்டு சீக்கிரம் கிடைக்கணும்ன்னு சாபம் குடுத்துடுவேன் )

siva said...

marvelous....

wow really

வெறும்பய said...

வர வர இவனுங்க போக்கே சரியில்ல.. எலேய் செல்வா கவிதை நல்லாதம்ல இருக்கு..

மாணவன் said...

//எஸ்.கே said...
கவிதையே
கவிதை
பேசுகிறதே!

(ஆமா அந்த பொண்ணு பேர் கவிதாவா?)//

சார் கவிதா என் க்ளாஸ்மெட்டு...

மாணவன் said...

கவிதை நலாருக்குண்ணே

தொடருங்கள்.........

மங்குனி அமைச்சர் said...

வாழ்க்கையோ போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
.............
...........
எல்லாம் பிரம்ம .....

அப்பவே சொன்னானே இன்சுரன்ஸ் பண்ணிட்டு வாங்கன்னு .....நான்தான் யோசிக்காம அவசரப்பட்டுட்டேன்

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. கவிதையா.!!!..
ரைட்டு...

இந்திரா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

aaha ithu veraya :)

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

ஜீவன்பென்னி said...

ஐயோ பாவம் உன் மாமக்களுக்கு பொண்ணுங்க இல்லையா??????????

சிவகுமாரன் said...

கோமாளின்னு பேரு வச்சுக்கிட்டீங்க. அப்புறம் என்ன . எப்படி வேணா கவிதை எழுதலாம். கவிதை நல்லாத்தான் இருக்கு.

Prasanthvel said...

விக்கல் வரும்போது என்ன Ip address-a கொண்டுவரும், வீட்டு address-a கண்டுபிடிக்க. அப்படி இருந்தா ஒருபயலும் விக்கல் வந்தா தண்ணி குடிக்கமட்டானுங்க, தெருதெருவா தான் அலைவனுங்க. மத்தபடி கவிதை சூப்பர்ர்ர்ர்.. என்ன மக்களே !(?)

yeskha said...

ஒரு
ஸ்வீட் ஸ்டாலே....
ஓண்ணு கீழ ஒண்ணு
அதான சார் கவித
ஓ...
போட்டுக்க போட்டுக்க போட்டுக்க.
ஒரு
ஸ்வீட் ஸ்டாலே....
பணியாரம்.......
சாப்பிடுகிறதே...........
அடடே........
ஆச்சரியக்குறி.................
அடேடேடே...
பின்றான்ப்பா பின்றான்ப்பா
இவன நோட் பண்ணுப்பங்கப்பா நோட் பண்ணுப்பங்கப்பா