Monday, December 27, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்.! அட விடுங்க ,எத்தனையோ பார்த்துடீங்க இத பாக்க மாட்டீங்களா.?

                                       பதிவர் சந்திப்பில் செல்வா 

  நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வா மத்திய உணவு இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்றார். இவர் சைவம் என்பதால் சைவ உணவு வழங்கப்பட்ட பந்திக்கு சென்று அமர்து கொண்டார்.

  சிறிது நேரத்தில் பந்தி பரிமாறுபவர் கையில் உணவுடன் வந்தார். செல்வாவின் அருகில் வந்த அவர் " கையை எடுங்க " என்றார். 

அதற்கு செல்வா " கையை எடுத்தா சாப்பிட முடியாதுங்க " என்றார் அப்பாவியாக.

" இலைல இருந்து கையை எடுங்க , சாப்பாடு வைக்கணும்.! "

" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா.

" ஐயோ , சாப்பாடு போடுற இலை மேல கைய வச்சு மறைசிருக்கீங்களே , அத எடுங்க " என்றதும் அசடு வழிந்து கொண்டே கையை எடுத்தார்.! 

                                       கணிப்பொறி கற்றுக்கொண்ட செல்வா 

      ஒரு முறை செல்வாவின் வீட்டில் அவரது பெற்றோர் அவரை கணிப்பொறி கற்றுக்கொள் என்று கூறி அவரை ஒரு கணினி மையத்தில் சேர்த்தனர். அதற்கு முன்னர் அவருக்கு கணிப்பொறியில் சில விசயங்கள் தெரியும் என்று அங்கே பெருமையாக கூறிக்கொண்டார்.

  கணிப்பொறி கற்றுக்கொடுக்க வந்தவர் அவரிடம் சில விசயங்களை கூறிவிட்டு இத சேவ் பண்ணிடுங்க என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிதுநேரம் சமாளித்து விட்டு தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

  வீட்டில் சென்றதும் அவரது பெற்றோர் ஏன் நேரத்திலேயே வந்துட்ட என்று கேட்டனர். அதற்கு செல்வா அங்க என்னைய சேவ் பண்ண சொன்னாங்க , நான் ஷேவிங் ரேசர் எடுக்காம போயிட்டேன் , அதான் உடம்பு சரியில்லைன்னு வந்திட்டேன் என்றார் பெருமை பொங்க.!

நீதி : கதைகள் இரண்டும் மொக்கை , ஒன்று மொக்கை ஒன்று சிரிப்பு , இரண்டும் சிரிப்பு ( உங்கள் விருப்பத்தில் நீதி )

நன்றி : ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை சிறந்த முறையில் நடத்திய குழும உறுப்பினர்களுக்கு நன்றி .!


பின்குறிப்பு : நான் தான் சைடுல வடிவேலு படம் போட்டு ஒண்ணு சொல்லிருக்கேனே , அத படிக்காம இத படிச்சிட்டு அழுதா நான் என்னங்க பண்ண முடியும் .?

80 comments:

Arun Prasath said...

vadai

அன்பரசன் said...

Vadai

அன்பரசன் said...

//ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்.! அட விடுங்க ,எத்தனையோ பார்த்துடீங்க இத பாக்க மாட்டீங்களா.?//

அதுவும் சரிதான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நீ நடத்து ராசா.....!

எஸ்.கே said...

அன்பின் பதிவரே,

தங்கள் பதிவுகள் என்றென்றும் இனிமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருப்பதால் அவை மகிழ்வையும் இன்பத்தையும் களிப்புடன் அளிக்கின்றன.

நற்பெருமை! நல்வாழ்த்துக்கள்! நல் மகிழ்ச்சி! நல் அருமை! நல் தொடருங்கள்!

சௌந்தர் said...

முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்////

இதை படித்து கொண்டு இருந்த அருண்பிரசாத் மயங்கிவிழுந்தார்...

Arun Prasath said...

நீதி : நம்ம எல்லாரையும் சாவடிகாம விட மாட்டான்

வினோ said...

நீ இப்படியே கலக்கு.. முடியல :(

சௌந்தர் said...

நீதி: இன்னுமா நீங்க உயிர்வுடன் இருக்கீங்க...

வெறும்பய said...

நீ நடத்து ராசா.. உன் ப்ளாக் படிச்சு எத்தன உயிரு போனாலும் பரவாயில்ல...

siva said...

நீதி : நம்ம எல்லாரையும் சாவடிகாம விட மாட்டான்---

இதை நான் வழிமொழிகிறேன்
இதை நான் வழிமொழிகிறேன்
இதை நான் வழிமொழிகிறேன்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////பின்குறிப்பு : நான் தான் சைடுல வடிவேலு படம் போட்டு ஒண்ணு சொல்லிருக்கேனே , அத படிக்காம இத படிச்சிட்டு அழுதா நான் என்னங்க பண்ண முடியும் .?
///////


இப்ப இறுதில சொல்லி இருக்கியே இது சரியான ஒன்றுதான் .

உன்னை சொல்லிக் குத்தமில்லை ,என்னை சொல்லிக் குத்தமில்லை எல்லாம் கணினி செய்யும் குத்தமாடா .

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஏலே மக்கா ஒன்னு சொல்ல மறந்து போச்சு திங்கள் கிழமையில் இருந்து நீயிர் கதை எழுதப்போகிரீறு ஆனா ஒன்னு அந்த பாட்டி வடை சுட்டக் கதையை மட்டும் எழுதின மவனே செத்த !

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சுருக்கமா முடிச்சிட்டியே

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///நீதி : நம்ம எல்லாரையும் சாவடிகாம விட மாட்டான்---
////////

இதை நானும் வாந்தி எடுக்கிறேன் . அய்யோ நாக்கு ஸ்லிப் ஆகிடுச்சு . நானும் வழி மொழிகிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது நல்லாருக்கே

MANO நாஞ்சில் மனோ said...

//அங்க என்னைய சேவ் பண்ண சொன்னாங்க , நான் ஷேவிங் ரேசர் எடுக்காம போயிட்டேன் , அதான் உடம்பு சரியில்லைன்னு வந்திட்டேன் என்றார் பெருமை பொங்க.!//
உனக்குத்தான் மீசை தாடி ஒன்னுமே கிடையாதே.....
ஏதோ ஒன்னு ரெண்டு முடி இருந்துச்சின்னா கையால புடுங்க வேண்டியதுதானே....:]

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ரெண்டு பேர் வடை'ன்னு போட்டுருக்காங்க வடை ஒன்னா ரெண்டா # டவுட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

//நீ நடத்து ராசா.....!//

கொல்லு ராசா'தான் சரியா இருக்கும்...:]

MANO நாஞ்சில் மனோ said...

//நற்பெருமை! நல்வாழ்த்துக்கள்! நல் மகிழ்ச்சி! நல் அருமை! நல் தொடருங்கள்!///

இது பாராட்டே இல்லை சாபம்.....:]

MANO நாஞ்சில் மனோ said...

//இதை படித்து கொண்டு இருந்த அருண்பிரசாத் மயங்கிவிழுந்தார்...///

இதை படித்த ஜெய்லானி தற்கொலை பண்ணிக்க மலைக்கு போயிட்டார்....:]

MANO நாஞ்சில் மனோ said...

//நீதி : நம்ம எல்லாரையும் சாவடிகாம விட மாட்டான்///

விதி வலியது மக்கா......

கோமாளி செல்வா said...

ஐயோ மனோ அண்ணன் கொள்ளுறாரே

MANO நாஞ்சில் மனோ said...

//நீ இப்படியே கலக்கு.. முடியல :(///

அவன் என்ன காக்டெயில் விலாடிமிராடி சாராயமா பண்ணிட்டு இருக்கான் கலக்குறதுக்கு....:]

MANO நாஞ்சில் மனோ said...

//நீதி: இன்னுமா நீங்க உயிர்வுடன் இருக்கீங்க...//

இதை படிச்சிட்டு நீங்க உயிரோட இருக்கீங்களே அதான் பெரிய விஷயம்....:]

MANO நாஞ்சில் மனோ said...

//நீ நடத்து ராசா.. உன் ப்ளாக் படிச்சு எத்தன உயிரு போனாலும் பரவாயில்ல...///

எல்லா உயிரும் ஒரேயடியா போயிராம கொஞ்சம் கொஞ்சமா'ல்ல போட்டு தள்ளிட்டு இருக்கான்...

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னை சொல்லிக் குத்தமில்லை ,என்னை சொல்லிக் குத்தமில்லை எல்லாம் கணினி செய்யும் குத்தமாடா .///

டெரரா வந்து போட்டு தள்ளுங்கய்யா இவனை....

MANO நாஞ்சில் மனோ said...

//அந்த பாட்டி வடை சுட்டக் கதையை மட்டும் எழுதின மவனே செத்த !//

எலேய் மொக்கையா அந்நியனின் வார்னிங் ஜாக்கிரதை....

MANO நாஞ்சில் மனோ said...

//சுருக்கமா முடிச்சிட்டியே//

இதுக்கே தலை கிர்ர்ர் ஆகிடிச்சு இன்னுமா.....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
This comment has been removed by the author.
பிரியமுடன் ரமேஷ் said...

//" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா.//

நாசூக்கா அரசியல்லாம் கதைல இழுத்துவிட்டுட்டீங்களே..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
This comment has been removed by the author.
கோமாளி செல்வா said...

அன்னியன காணோம் ..?!
ஹா ஹா ஹா .. பயந்து போய்ட்டார் ..!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

........................................................................

MANO நாஞ்சில் மனோ said...

//ஐயோ மனோ அண்ணன் கொள்ளுறாரே///

நீ நிறுத்து அப்புறம் நான் நிறுத்துறேன்....

logu.. said...

chu...choooooo...

Etho karukura vaasam adikkuthu..

karthikkumar said...

ஐயோ , சாப்பாடு போடுற இலை மேல கைய வச்சு மறைசிருக்கீங்களே , அத எடுங்க " என்றதும் அசடு வலிந்து கொண்டே கையை எடுத்தார்.///
இந்த மொக்கைய படிக்கவே முடியல.. நல்ல வேல நான் ஈரோடு வரல வந்த அந்த கொடுமைய என் கண்ணால பாத்து தொலைச்சிருப்பேன்....

RDX அந்நியன் said...

........................???????????????????????????????????????????????????????????????????????????? அ ந் நி ய ன்

RDX அந்நியன் said...

அந்நியன் அவதரித்துவிட்டான் இனி மொக்கை போடும் செல்வாவின் கின்னியை எடுக்கப் போகிறான் .

கோமாளி செல்வா said...

// RDX அந்நியன் said...
அந்நியன் அவதரித்துவிட்டான் இனி மொக்கை போடும் செல்வாவின் கின்னியை எடுக்கப் போகிறான் .

///

ஹி ஹி ஹி .. போங்க சார் ..!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ....

பதிவுலகில் பாபு said...

உங்களுடைய முன்குறிப்பைப் பார்த்து மக்கள் எல்லாம் எப்படி அதிர்ச்சி அடையறாங்க பார்த்தீங்களா..

அதுதான் உங்க வெற்றி.. நீங்க நடத்துங்க.. :-)

மொக்கராசா said...

செல்வா கதைகள் இதை புத்தகமாக தொகுக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.இனி வரப்போகிற தலைமுறை படித்து அரிய வேண்டிய கால பெட்டகம்.சூரியனேக்கே டார்ச் அடிக்கும் நீதி கருத்துகள்.


பிளாக் தெய்வங்களா, இந்த மாதிரி எதாவது கமெண்ட் போட்டு 'great escape' ஆகிடுங்க!

அதல்லெம் மீறி படிச்சங்க மவனே நீ செத்த.உனக்கு கழுத்துக்கு பெரிய கத்தி confrim...!!

Balaji saravana said...

ஐயோ ராசா தாங்க முடியலைடா சாமி..
தப்புத்தான் தப்புத்தான், ஓட்டப் போட்டுட்டு அப்படியே ஓடிப் போயிருக்கனும் இப்படி வந்து மாட்டிக்கிட்டனே ;)

பிரவின்குமார் said...

ஹி...ஹி..ஹி..

பிரவின்குமார் said...

46

பிரவின்குமார் said...

47

பிரவின்குமார் said...

48

பிரவின்குமார் said...

49

பிரவின்குமார் said...

50 வடை எனக்கே.,!

பிரவின்குமார் said...

ஹெ..ஹே... போங்க தம்பி ..! நாங்களும் வடை எடுப்போம்ல..!!

ஜீவன்பென்னி said...

சூரியன்ல கைய வச்சாக்கூட தப்பிக்கலாம் இலைல கைய வச்ச கன்பார்ம் ஜெயில்தான்.

பிரவின்குமார் said...

//திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்.! அட விடுங்க,எத்தனையோ பார்த்துடீங்க இத பாக்க மாட்டீங்களா.?//

ஹெ..ஹே.. நல்லா கதையுங்க தம்பி..!! இதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம்..!! ஹி..ஹி.. (பதிவ படிச்சாதானே..!!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா, கதை எங்கேப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கணிப்பொறி கற்றுக்கொண்ட செல்வா////

எலிப்பொறில எலிய புடிக்கலாம், இந்தக் கணிப்பொறில எதப் புடிக்கலாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திங்க கிழமை திங்க கிழமை நான் லீவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திங்க கிழமை அப்டின்னா அன்னைக்கு நல்லா திங்கணுமா?

பிரவின்குமார் said...

//" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா. //

யாருப்பா அந்த சூரியன். ஹி..ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்ன திங்கள்கிழம திங்கள்கிழம? அமாவசைக்கு அமாவாசை எழுதுனா எபக்ட் இன்னும் நல்லா இருக்குமெ?

மாணவன் said...

நல்லாருக்குண்ணே

தொடர்ந்து கதையா போட்டு எங்கள கொல்லுங்க..........

ஹிஹிஹி

அருண் பிரசாத் said...

மொக்கை திலகமே.... நீ வாழ்க

அரசன் said...

தொடரட்டும் உங்கள் பயணம்

dineshkumar said...

செல்வா சாரி பார் தி லேட் நகைச்சுவையா நல்லா எழுதுறீங்க இன்னும் நல்லா கதையா கோர்த்து நகைச்சுவை கதைகள் எழுத ட்ரை பண்ணுங்களேன் நல்லாருக்கும்

ஈரோடு கதிர் said...

நேற்று சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி தம்பி!

sakthi said...

உங்க திறமை பற்றி அறியாது இருக்கிறோம் தொடருங்கள் ....
என்ன ஆனாலும் சரி ....

வைகை said...

ரெம்ப லேட்டா வந்துட்டனோ?!!

வைகை said...

முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்////

நல்ல வேளை எல்லா திங்களும் இங்க பவர் கட்!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கணிப்பொறி கற்றுக்கொண்ட செல்வா////

எலிப்பொறில எலிய புடிக்கலாம், இந்தக் கணிப்பொறில எதப் புடிக்கலாம்?/////////


எலிக்கு வச்ச வடைய புடிக்கலாம்!

நாகராஜசோழன் MA said...

செல்வா யாருக்காகவும் எதற்காகாவும் உன்னை நீ விட்டுக் கொடுக்காதே!! தொடர்ந்து இதே போல் எழுது!!!

நாகராஜசோழன் MA said...

//Blogger வைகை said...

முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்////

நல்ல வேளை எல்லா திங்களும் இங்க பவர் கட்!//

இங்கேயும் தான்...

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

im leave in monday to net ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

send it to dhinamalar varamalar, p box no 7225, chennai 60008

சி.பி.செந்தில்குமார் said...

sun - hand - leaf

even in mokkai u attacked dmk, admk congress . good

சி.பி.செந்தில்குமார் said...

75 vadai

..... said...

பாதிதான் படிக்க முடிச்சுச்சு... மீதியை சேவ் செய்துட்டு வந்துதான் படிக்கணும்...

கல்பனா said...

செல்வா அடங்கவே மாட்டிய சாமீ நீ
இங்கயும் நீதியா???
கொடும கொடும

r.v.saravanan said...

நகைச்சுவையா நல்லா எழுதுறீங்க
தொடரட்டும் உங்கள் பயணம்

பலே பாண்டியா said...

அந்த அவர்ர்ர்ரர்ர்ர்ரர் இவர்ர்ர்ரர்ர்ர்ரர் செல்வா யார்ங்க ??
அப்போ திங்க கிழமை இனிமே தமிழ்நாடு முழுவதும் இன்டர்நெட் இணைப்பு கிடையாது# முதலமைச்சர்

இந்திரா said...

வடிவேலு சொன்னதை முதல்லயே படிச்சிருந்தா இந்தப் பக்கம் வந்திருக்க மாட்டேன்..
அவ்வ்வ்வ்வ்