Wednesday, August 25, 2010

கல்யாணம் பண்ணிக்கலாமா ..??

காலை மணி 6 ஆகியிருந்தது. டிங் டிங் என்ற கடிகாரத்தை தலையில் தட்டியவாறே எதிரேயிருந்த நாட்காட்டியில் தேதியைப் பார்த்தான் ஜெயந்த். தேதி ஜூலை 17 என்றது. 2 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் ஜாதியைக் காரணம் காட்டி மைதிலியின் காதலை உதர வேண்டியிருந்தது. 4 வருடக் காதல். தனது தந்தையின் தீராத ஜாதி வெறியினால் தகர்க்கப்பட்டது. திருமணம் என்பது ஒரு முறை , அதனை ஊர் அறிய செய்திட வேண்டும் என்று நினைப்பவன். இதனால் மைதிலியைக் கூட்டிக்கொண்டு ஓடி விடு என்று நண்பர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை ஏற்க மனம் ஒப்பவில்லை. மைதிலியும் ப்ராக்டிகலான பெண் என்பதால் காதலர்கள் இருவரும் நண்பர்களாகப் பிரிந்தனர். அடுத்த மாதமே மைதிலிக்கு வேறொரு இடத்தில் திருமணமும் முடிந்தது. அதன் பிறகு ஜெயந்தின் பெற்றோர் இவனைத்  திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்தனர். இன்று வரை அவனது பதில் கொஞ்ச நாள் போகட்டும் என்பதாகவே இருக்கிறது.பூமிக்கு வந்த பனித்துளி நான் , சூரியனே என்னைக் குடித்து விடு ;யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் , பனித்துளியே என்னை அணைத்து விடு ; என்ற வைரமுத்துவின் வைர வரிகளை காற்றில் பரப்பியவாறே selva calling என்ற அவனது தொலைபேசியைக் கையில் எடுத்தவாறே நிகழ்காலத்திற்கு வந்தான். 
  
"சொல்லுடா , இந்த நேரத்துல ..?"


"என்னோட வண்டி பஞ்சர் ஆகிடுச்சு , உன்கூடத்தான் வரணும்.." என்றான் செல்வா.ஜெயந்தும் செல்வாவும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர்.


"சரி வா , வெயிட் பண்ணுறேன்.." என்றவாறே தொலைபேசியை வைத்து விட்டு படுக்கையிலிருந்து வெளியே வந்தான்.


செல்வாவும் சரியான நேரத்திற்கு வந்துவிடவே இருவரும் ஒரே வண்டியில் அலுவலகம் கிளம்பினர்.போகும் வழியில்,


"மச்சி , எனக்கு ஒரு சந்தேகம்" என்றான் செல்வா.


"சொல்லு .."


"அங்க ஒருத்தன் uninor இனி என் நம்பர் அப்டின்கிறானே அவன் நம்பர் என்னவாத்தான் இருந்தா நமக்கு என்ன " என்றான் வழியில் வைத்திருந்த விளம்பர பலகையைப் பார்த்துவிட்டு.


"அது விளம்பரம். நீ சொன்னீனா உன் நம்பர் அப்படின்னு வரும் "


" அவன் நம்பர் எப்படி என் நம்பர்னு வரும் ..? " 


"சொல்லிப்பாரு. வரும் "


"uninor இனி அவன் நம்பர் ." என்று சொல்லிவிட்டு "என் நம்பர்னு வரல " என்றான்.


"உன் நம்பர்னு சொல்லு. வரும்" 


"சரி uninor இனி உன் நம்பர்." இப்ப உன் நம்பர்னு வருது , என் நம்பர்னு வரலையே ..?!? "


"இனிமே ஒரு வார்த்த பேசினே என் உயிர் போனாலும் பரவால்லைன்னு ஏதாவது பஸ்ல  மோதிடுவேன். ஆபீஸ் வர வரைக்கும் வாய திறந்திடாத." என்றான் ஜெயந்த்.


"அட ச்சே. உனக்கு பதில் தெரியலைன்னு சொல்லுடா."


"இந்த மாதிரி மொக்கைக்கெல்லாம் பதில் தெரியனும்னு அவசியம் கிடையாது" என்று பேசியபடியே அலுவலகம் வந்து சேர்ந்தனர் இருவரும்.


11 மணியளவில் அவர்களின் மேலாளர் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
"இவங்க பேரு ரம்யா. நம்ம  திவாகருக்குப் பதிலா இனிமே இவுங்கதான். எல்லோரும் அறிமுகம் ஆகிக்கங்க." என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டார். 


அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே செல்வா ஜெயந்த்திடம் " செம பிகர் மச்சி., என்ன பொட்டு வச்சிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் " என்றான்.


"உன் வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா ..? என்று அதட்டினான்.


பின்னர் அனைவரும் அறிமுகம் ஆனவுடன் அவரவர் வேலைகளைக் கவனிக்கத்தொடங்கினர்.அப்படியே அந்த வாரம் நகர்ந்திருந்தது.சனிக்கிழமை மாலை 5 மணி ஆகியிருந்தது.


செல்வா ஜெயந்திடம் " டேய் நாளைக்கு நான் ரம்யாவைப் பார்த்தே ஆகணும் ." என்றான்.


"அவள எதுக்குப் பாக்குற , அதுவுமில்லாம நாளைக்கு லீவாச்சே ..?"


" அவ மேல ஒரு ஒரு , நான் அவள லவ் பண்ணுறேன்னு நினைக்கிறேன் .!"


"நாசமாப்போச்சு .. அவ வந்து இப்பத்தான் 5 நாள் ஆகுது. அதுக்குள்ள லவ்வா ..? " என்றான் ஜெயந்த்.


"லவ் வரதுக்கு ஒரு செகண்ட் போதும் மச்சி , சரி அவள எப்படி பாக்குறது ஒரு ஐடியா குடு ."


"எனக்கு இதுதான் வேலையா ..? "


"சும்மா சொல்லுடா , ஓவர் பில்ட் அப் பண்ணாத ..? "


"சரி அவகிட்ட மொபைல் நம்பர் வாங்கிக்க , போன் பண்ணி வெளிய வரச்சொல்லிப் பார்த்துக்க." 


" ஏன் நான் நல்லா இருக்கறது உனக்குப் புடிக்கலையா ..?  அவ நம்ம கூட இன்னும் நல்லா கூட பழகல. அதுக்குள்ள போன் பண்ணி வெளிய கூப்பிட்டா வருவாளா ..? "


"அவ்ளோதான் எனக்குத் தெரியும் , வேற ஐடியாவெல்லாம் எனக்குத் தெரியாது " என்று சொல்லிவிட்டு இருக்கைக்குச் சென்றுவிட்டான் ஜெயந்த். 


சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு செல்வா ஜெயந்த் இருக்கைக்கு ஓடி வந்தான். " மச்சி ஒரு ஐடியா உன் ஹெல்ப் வேணும் .."


"சொல்லித்தொலை .." என்றான் ஜெயந்த்.


" நாளைக்கு அவ வீட்டுக்குப் போய் மீட் பண்ணலாம் , ஓகே வா ..? "


" போய் மீட் பண்ணு , அடி வாங்கு இதுக்கு என்னோட ஹெல்ப் எதுக்கு .. ஓ அடி பலமா விழுந்திட்டா ஆம்புலன்ச கூட்டிட்டு வரணுமா ..? "


"இல்ல மச்சி நீயும் வா.. "


"நான் எதுக்கு , சரி அப்படியே வந்தாலும் எதுக்கு வந்தீங்கன்னு கேட்டா என்ன சொல்லுறது ..? "


"இந்தப் பக்கம் வந்தோம் அப்படியே வீட்டுக்கு வந்தோம்னு சொல்லி சமாளிச்சுக்கலாம் டா , ப்ளீஸ் வாடா ..? "


" சரி சரி வந்து தொலைக்கிறேன் ,வீடு எங்க இருக்கு ..? "


"அத இனிமேதான் கண்டுபிடிக்கணும்.! "


" இனிமேதானா எப்படி ..? "


"நம்ம மேனேஜர் ரூம்ல " STAFF'S RECORD " அப்படின்னு ஒரு பைல் இருக்குல்ல., அதுல இருக்கும் . " என்றான் செல்வா.


" ஆனா அத பார்க்கரக்குத்தான் பெர்மிசன் கிடையாதே..? "


" இப்ப மேனேஜர் ரூம்ல இல்ல ., நான் போய் அந்த பைல பாக்குறேன் , நீ இந்த கதவோரமா  நின்னு யாராவது வராங்களா அப்படின்னு எனக்கு சிக்னல் கொடு." என்று கூறிவிட்டு மேனேஜர் அறைக்குள் சென்றான் செல்வா.


ஞாயிறு காலை 11 ஆகியிருந்தது. ஜெயந்த்தும் செல்வாவும் நேற்று Staff's Record இல் பார்த்த அந்த முகவரிக்குச் சென்றுவிட்டனர்.

" மச்சி , இந்த வீடுதான் ." என்று கூறிக்கொண்டே காலிங் பெல்லை அழுத்தினான் செல்வா.


வீட்டிற்குள்ளிருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கதவைத் திறந்து யார் என்பது போலப் பார்த்தார்.அதனைப் புரிந்து கொண்ட செல்வா ,


" நாங்க A & B கம்பெனில இருந்து வரோம் ., இது ர .... " என்று முடிப்பதற்குள் அந்த பெண் 


"ஓ , வாங்க வாங்க ., " என்று அழைத்து சோபாவில் உட்காருமாறு கூறினார்.


இவர் ரம்யாவின் தாயார் என்று நினைத்துக் கொண்டனர் இருவரும். " அவுங்க இல்லீங்களா .,"  என்றான் செல்வா.


"அவுங்க கடைக்குப் போனாங்க , இப்ப வந்திடுவாங்க . பேசிட்டு இருங்க , இப்ப வந்திடறேன் " என்று கூறிவிட்டு கிச்சனுக்குள் சென்றார் அந்த பெண்.


" என்ன மச்சி ,பெத்த பொண்ணவே இவ்ளோ மரியாதையா கூப்பிடறாங்க .." என்றான் ஜெயந்த்.


" அதான் மச்சி , எனக்கும் புரியல ." என்றான் செல்வா.


" மச்சி அங்க பாரு , அந்த போட்டோல இருக்கிற பசங்கள நாம எங்கயோ பார்திருக்கோம்ல. " என்றான் ஜெயந்த்.


" ஆமா மச்சி , எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு , சரி விடு , ரம்யா வந்தா கேக்கலாம்." என்று பேசிக்கொண்டிருந்தவர்ளை " இப்பத்தான் வந்தீங்களா " என்ற ராமையாவின் குரல் திரும்பிப்பார்க்க வைத்தது.


 இருவருக்கும் குழப்பம் , " இவரு எங்க இங்க வந்தாரு " என்று நினைத்துக்கொண்டனர். ராமையாவும் இவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறார். 


"இவ்ளோ நாளாச்சா , எங்க வீட்டுக்கு வரதுக்கு " என்று ராமய்யா கேட்டதும் இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது. என்ன இது ராமைய்யா வீடா என்று என்று ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். இப்பொழுதுதான் செல்வாவிற்கு ஒன்று புரிந்தது. தான் RAMAYA என்பதை RAMYA என்று தவறாக எடுத்துக்கொண்டதை உணர்ந்தான். பின்னர் இருவரும் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு கிளம்பினர். வெளியே வந்ததும்,


" ஏன்டா , உனக்கு ரம்யாவிற்கும் ராமய்யாவிற்கும்  வித்தியாசம் தெரியாதா ..? " என்று எரிச்சலாக கேட்டான் ஜெயந்த்.


"இல்ல மச்சி , நான் பார்த்திட்டிருக்கும் போது வெளிய யாரோ வர்ற மாதிரி இருந்துச்சு ., அதான் பயத்துல RAM அப்படிங்கிறத படிச்சதும் இதுதான் RAMYA அட்ரஸ் அப்படின்னு நினைச்சு எடுத்திட்டேன்.? ஹி ஹி "  அசடு வழிந்தான் செல்வா.


"உன்னோட வாழ்க்கைல இதுவரைக்கும் ஒரு உருப்படியான காரியமாவது செஞ்சிருக்கியா நீ ..? " என்று கோபமாகக் கத்திகொண்டிருந்த ஜெயந்த்தின் மொபைல் ஒலித்தது. யோகேஷ் அழைப்பிலிருந்தான்.. 


" சொல்டா ...? " 


" இன்னிக்கு மத்தியானம் அபிராமி தியேட்டருக்கு வந்திடு. வரும்போது செல்வாவையும் கூப்பிட்டு வந்திடு , மூணு டிக்கெட் வாங்கிட்டேன். " என்றான் யோகேஷ். யோகேஷ் ,செல்வா , ஜெயந்த் மூவரும் பள்ளிப்படிப்பிலிருந்து கல்லூரி முடியும் வரை ஒன்ன்றாகப் படித்தவர்கள். பின்னர் யோகேஷ் தனியாக தொழில் செய்து வருகிறான்.


"சரி வந்திடறேன் , அதவிட இந்த மொக்கை இன்னிக்கு ஒண்ணு பண்ணுச்சு பாரு அத கேட்டீனா அழுதுடுவ." என்று பேசிக்கொண்டிருந்த ஜெயந்தின் மொபைலை பிடுங்கிய செல்வா 


" ஓகே மச்சி , வந்திடறோம் .." என்று கூறி கட் செய்தான்.


" டேய் என்னமோ ஒரு சின்ன தப்புப் பண்ணிட்டேன் , அதுக்குப் போய் தண்டோரா போட்டு  சொல்லிடுவ போல .. அதும் அவன் கிட்ட சொல்லிட்டா அவன் ஊரு முழுக்கப் பரப்பிடுவான். ஏற்கெனவே நம்மல ஊருக்குள்ள கேனப்பயன்னு நினைச்சிட்டிருக்காங்க" என்றான்.


" பண்ணுறதெல்லாம் கோமாளித்தனம் அப்புறம் கொஞ்சுவாங்களா ..? " என்றான் ஜெயந்த்.
மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. மூவரும் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது செல்வா " டேய் அந்த கடைசி சீட்ல பாரு , ஒரு ஜோடி " என்றான்.


அதைப்பார்த்த யோகேஷ் " அண்ணன் தங்கச்சி மாதிரி தெரியுது .." 


" இல்ல மச்சி லவ்வர்ஸ் தான் " என்றான் செல்வா.


"எப்டி சொல்ற ..? " என்றான் ஜெயந்த்.


" அந்தப் பையன் எங்க ஊரு தான் , +1 படிக்கிறான் . போன வாரம் கூட என்கிட்டே பேசிட்டிருக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் அப்படின்னான் , ஆனா இவ்ளோ ஸ்பீடா இருப்பான்னு நினைக்கலை. "


" நீ என்ன சொன்ன ..? "


" நான் என்னத்த சொல்லுறது , வாழ்த்துக்கள் தம்பி உன் காதல் சீக்கிரமே வெற்றியடையட்டும் .!" அப்படின்னேன்.


" ஏன் அப்படி சொன்ன ..? " இது யோகேஷ்.


" என்ன மச்சி இப்டி கேக்குற , காதல் புனிதமானது , ஜாதி , மதம் பாக்காதது அப்படிங்கிற விஷயம் எனக்குத்தெரியாதா ..? அதனால சரி நல்ல விஷயம் தானே அப்படின்னு அப்படி சொன்னேன் . " என்றான் செல்வா.


" காதல் ஜாதி மதம் பார்க்காது சரி , ஆனா இந்த வயசுல வர்ற ஈர்ப்ப உன்ன மாதிரி ஆளுங்க உசுப்பி விடுறதால ஏழை ஜாதி அப்படின்னு ஒண்ணு உருவாகிட்டிருக்கு தெரியுமா ..? " 


" அதெப்படி சொல்ற மச்சி ..? "


" ஆமா உங்களை மாதிரி ஆளுக காதலும் கடவுளும் ஒண்ணு , அப்படி இப்படின்னு சொல்ல வேண்டியது . அப்புறம் அந்த பசங்களும் இரண்டுங்கெட்டான் வயசுல இருக்கறதால எது சரி , எது தப்புனே தெரியறதில்ல. எங்க ஊர்ல ஒரு பையன் அப்படித்தான் +1 படிச்சிட்டிருந்தான். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுப் பார்த்தா ஒரு பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் அப்படிங்கிறாங்க. இப்ப யோசிச்சுப்பார் . அந்தப்பயனோட வாழ்க்கை என்னாகும்னு , படிப்பும் போச்சு . கொஞ்ச நாள் அத இத பண்ணி அப்படியே காலத்த ஓட்ட வேண்டியது. ஆனா எத்தன நாளுக்குத்தான் அப்படி வாழ முடியும். ஒரு சிலர் நல்லா இருக்காங்க. ஆனா ஒரு சிலர் அவுங்க வாழ்க்கையே கேள்விக்குறியாயிடுது. இங்க இருக்குற ஒரு சில ஏழைகளின் கதை இப்படித்தான் இருக்குது. அதனால தயவுசெய்து ஏழை ஜாதிய உருவாக்காதீங்க.! " என்று முடித்தான் யோகேஷ்.


" அதுக்காக யாரையுமே லவ் பண்ண வேண்டாம்கிறயா ..? "


" நான் அப்படி சொல்லல , லவ் பண்ணுங்க வாழ்கைய தொலைச்சுக்காதீங்க. அதே மாதிரி இந்த மாதிரி சின்னப் பசங்களப் பார்த்தா அவுங்களுக்குப் புரிய வையுங்க. அவுங்கள உசுப்பி விடாதீங்க அப்படின்னு தான் சொல்றேன். அதுக்காக அந்த வயசுல லவ் வரக்கூடாது அப்படின்னு சொல்லல. அந்த வயசுல கண்டிப்பா ஒரு ஈர்ப்பு வரணும். வந்தாதான் நீங்க சரியா இருக்கீங்கன்னு அர்த்தம். அந்த ஈர்ப்பப் பத்தி அவுங்களுக்குப் புரிய வையுங்க. அதத்தான் நான் சொல்லுறேன்.! " 


" ஹே சூப்பர் சூப்பர்.. கை தட்டு கை தட்டு .! " என்றான் செல்வா.


" ஒழுக்கமா படத்தப் பாருங்கடா.. " என்றான் ஜெயந்த்.
படம் முடிந்து மூவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜெயந்த் ,
" டேய் அங்க பாருங்கடா , நம்ம ரம்யா ஒரு பையனோட வந்துட்டிருக்காங்க..! " என்றான்.


" அட பாவி , எவன் அவன் ..? எனக்கு முன்னாடி முந்திக்கிட்டானா..? " என்றான் செல்வா.


"கொய்யால , அது சின்னப் பையன் , 4 வயசு இருக்கும்.. " இது யோகேஷ்.


" அட ஆமா , சரி வா போய் பேசுவோம் ." என்று சொல்லிவிட்டு ரம்யாவை நோக்கி நகர்ந்தனர் மூவரும்.


இவர்களைப் பார்த்த ரம்யாவும் " கிளம்பியாச்சா ..? " என்றாள்.


" ம் .படம் நல்லா இருந்துச்சா..? " என்றான் செல்வா.


" பட்டைய கிளப்பிட்டாங்க.." 


" அட புதுசா ஒரு பையன் , இது யாருங்க ..? "


" என்னோட பையன் தான்.. " என்றாள் ரம்யா..


செல்வாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னடா சொல்லுறா இவ ,கழுத்துல தாலிய காணோம் பையன்கிறா.. ஒரு வேளை அக்கா , தங்கச்சி பையனா இருப்பானோ ..? என்று நினைத்துக்கொண்டான்.


" இவுங்க அப்பா என்ன பண்ணுறார்,"  என்று கேட்டான் செல்வா.


" அவரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டார்.. " என்றாள் ரம்யா.


மூவருக்கும் அதிர்ச்சி." ஓ , சாரி சிஸ்டர் ..தெரியாம கேட்டுட்டேன் " என்றான் செல்வா.பின்னர் நால்வரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றனர்.


போகும் வழியில் ஜெயந்த் கேட்டான் , " என்ன மச்சி ., உன் பிகருக்கு கல்யாணம் ஆகிடுட்சுங்கிறா.. ? " 


" டேய் தப்பா பேசாதடா , அவ எனக்குத் தங்கச்சி மாதிரி .. " என்றான் செல்வா.


" அட பாவி அதுக்குள்ள கட்சி மாறிட்டியே , உன்ன மாதிரிதான் நிறைய பேர் அவுங்களைப் பத்தி தெரியாமலே லவ் பண்ண வேண்டியது , அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சா விவாகரத்துப் பண்ண வேண்டியது.. சரி எப்படியோ போங்க . எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகிடும்னு நினைக்கிறேன்..! " என்றான் ஜெயந்த்.


" சந்தோசம் மச்சி , நீ எங்க மைதிலிய நெனைச்சுட்டே இருந்திடுவியோனு பயந்தோம் .. சரி யாரு அந்தப் பொண்ணு .. ? " 


" ரம்யா தான் ..?!? " 


" டேய் என்ன சொல்லுற , அப்ப அவளுக்கு வாழ்க்க குடுக்கப் போறியா ..? " என்றா செல்வா.


" ஏன்டா நீ இன்னும் வளரவே இல்லையா ..? " என்றான் ஜெயந்த்.


" ஏன்டா அப்படி கேக்குற .. ? "


" இல்ல அவளுக்கு வாழ்க்கை கொடுக்கரக்கு நான் என்ன கடவுளா ...? " 


" இல்ல மச்சி , ஒரு விதவைனு தெரிஞ்சும் எப்படி ..? அதான் அப்படி கேட்டேன்.. " 


" அப்படிப் பாத்தா நிறைய ஆம்பளைங்க அவுங்க மனைவி இறந்ததுக்கு அப்புறம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அவுங்க எல்லோரும் அந்த ஆளுக்கு வாழ்கை கொடுறாங்க அப்படின்னு சொல்லுரதில்லையே.. உங்களுக்கு ஒரு நியாயம் அவுங்களுக்கு ஒரு நியாயமா ..? " என்றான் ஜெயந்த்.


" சரி விடு மச்சி வீடு வந்திடுச்சு , நாங்க கிளம்புறோம் " என்று விடை பெற்றனர் செல்வாவும் , யோகேசும்.


வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் தனக்கு கல்யாணம் செய்ய சம்மதம் என்றும் ரம்யாவைப் பற்றியும் கூறினான் ஜெயந்த். இதைக் கேட்டதும் ஜெயந்தின் அப்பா ,


" நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும் .." என்று தனது முழு சம்மதத்தையும் தெரிவித்தார். அவரது சம்மதத்தில் ஜாதி வெறி அழிந்திருந்தது அகிம்சையாக..!

பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெயந்த் வெறும்பயலையோ , யோகேஷ் ஜில்தண்ணியையோ, செல்வா கோமாளியையோ குறிப்பிடுவன அல்ல. மேலும் இந்த கதையில் காதலைப் பற்றி குறிப்பிட்டிருப்பது அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே .. அது தவறாகவும் இருக்கலாம். தவறாக இருப்பின் சுட்டிக்காட்டவும்..!  69 comments:

வெறும்பய said...

படிச்சிட்டு வரேன்...

சௌந்தர் said...

@@@@வெறும் பையன் முதலில் படிக்க வேண்டும் அப்பறம் கமெண்ட் போடனும்

வெறும்பய said...

யோகேஷ் தனியாக தொழில் செய்து வருகிறான்.

//

மச்சி என்ன தொழிலு.. சொல்லவே இல்லையே... நம்மளையும் சேத்துக்கப்பா..

வெறும்பய said...

@@@@வெறும் பையன் முதலில் படிக்க வேண்டும் அப்பறம் கமெண்ட் போடனும்

//

படிச்சிட்டே இருக்கேன்... இப்ப வந்திருவேன்..

வெறும்பய said...

ஏற்கெனவே நம்மல ஊருக்குள்ள கேனப்பயன்னு நினைச்சிட்டிருக்காங்க" என்றான்.

//

செல்வா இது உண்மை தானே...

அருண் பிரசாத் said...

நல்ல கதை.

(அப்புறம் கும்மறேன்)

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்தக் கதையை கொஞ்சம் பட்டி பாத்தா ஒரு சிறந்த கதையாக மாறும் .. அடுத்த முறை எழுதும்போது கவனமாக எழுதுங்கள் ..

வெறும்பய said...

எல்லாம் பண்ணிட்டு கடைசியில நான் இல்லன்னு வேற சொல்லணுமாடா பாவி..

சௌந்தர் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி ஈஸிய ஒரு கதையில் சொல்லிவிட்டாய் செல்வா நீ தொடர்ந்து இது போல கலக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

अरुण सोंनाधू..

சௌந்தர் said...

செல்வா ஜெயந்திடம் " டேய் நாளைக்கு நான் ரம்யாவைப் பார்த்தே ஆகணும் ." என்றான்./////


இப்படி ஜெயந்த் தான் சொல்வான் மச்சி நாளைக்கு அந்த பொண்ணை பார்க்கணும்..

சௌந்தர் said...

ஹலோ terror தமிழ் எழுதினாவே புரியாது இதுல ஹிந்தி வேறயா

சௌந்தர் said...

ரம்யாவுக்கு வாழ்கை கொடுக்கும் ஜெயந்த் வாழ்க.. வாழ்க....

harini said...

//இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெயந்த் வெறும்பயலையோ , யோகேஷ் ஜில்தண்ணியையோ,
செல்வா கோமாளியையோ குறிப்பிடுவன அல்ல.//
எல்லோரும் நம்பிட்டோம்

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
இந்தக் கதையை கொஞ்சம் பட்டி பாத்தா ஒரு சிறந்த கதையாக மாறும் .. அடுத்த முறை எழுதும்போது கவனமாக எழுதுங்கள்////

செந்தில் அண்ணே நீங்க தான் கொஞ்சம் பட்டி பார்த்து தருவது எங்க ஆளே வருவது இல்லை பேசுறதும் இல்லை இப்போ போன் எடுக்குறது இல்லை

harini said...

@terror
மக்கா எதுக்கு இந்த வம்பு

வெறும்பய said...

சௌந்தர் said...

இப்படி ஜெயந்த் தான் சொல்வான் மச்சி நாளைக்கு அந்த பொண்ணை பார்க்கணும்..

//

நண்பா .. நிஜமாவே கதையில வர மாதிரி நான் ரொம்ப நல்லவன்.. நம்புங்கப்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெயந்த் வெறும்பயலையோ , யோகேஷ் ஜில்தண்ணியையோ, செல்வா கோமாளியையோ குறிப்பிடுவன அல்ல.//

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கு. எப்படி இப்படி? உனக்கு ஏற்கனவே இவ்ளோ அறிவா இல்லை திடீர்ன்னு இந்த அறிவு வந்ததா?

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

अरुण सोंनाधू..

//

ஆஹா .. ஆஹா.. கவிதை சூப்பர் ..

நீ கலக்கு ராசா கலக்கு...

harini said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
சிரிப்புபோலிஸ் அடிச்சதிலிருந்து மூளை கலங்கிவிட்டது

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கு. எப்படி இப்படி? உனக்கு ஏற்கனவே இவ்ளோ அறிவா இல்லை திடீர்ன்னு இந்த அறிவு வந்ததா?

//

அண்ணே செல்வா பிறக்கும் போதே மூணு கிலோ மூளையோட தான் பிறந்தானாம்..

என்னது நானு யாரா? said...

செல்வா! காமெடி, மெசேஜ் கலந்து ஒரு கதை. Good. ரொம்ப நல்லா எழுதி இருக்கேப்பா! காமெடிகளை ரசிச்சி சிரிச்சேன். அதுவும் ரம்யா - ராமைய்யா சீன் அருமை! வாழ்த்துக்கள்!!!

அப்புறம் என்ன! நம்ப பக்கம் வரவேயில்ல! புதுசா பதிவுகள் எழுதியிருக்கேன். படிச்சி பாருப்பா!

வினோ said...

கதை அருமை செல்வா.. அந்த யோகேஷ் பையன் படிக்கற மாதிரி இல்ல தெரியுது.. அதுக்குள்ள வேலையா? ஆனா ஜெயந்த்க்கு பெரிய மனசு போ..

Balaji saravana said...

நல்ல கருத்துக்கள்!
ஆரம்பத்துல காமெடிய இருக்கும்னு நெனச்சேன், கடைசில அறிவுரைல முடிச்சிட்ட நண்பா! :)

சௌந்தர் said...

ரெண்டு நாள் தான் என்னிடம் போன் பேசினான் அதுக்கே இவ்வளவு அறிவு...தொடர்ந்து இது போல கதைகள் வரும்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாமா கலக்கிட்ட மாமா :)

ப.செல்வக்குமார் said...

ஐயோ .. இங்க என்ன நடக்குது .. சரி சரி ..
இருங்க .. கொஞ்சம் ஆணி இருக்கு .. வந்திடறேன் ..

சௌந்தர் said...

@@@வெறும்பையன் நண்பா .. நிஜமாவே கதையில வர மாதிரி நான் ரொம்ப நல்லவன்.. நம்புங்கப்பா////

நண்பா நீ நல்லவன் தான் ஆதான் நானும் சொல்றேன் நீ நல்லவன் .

வினோ said...

ஜெயந்த் நல்லவருன்னு தெரியும் (அப்படி தானே ஜெயந்த்? எழுதின பின் டவுட் வந்திருச்சு).. ஆனா இவ்வளவு நல்லவருன்னு தெரியாம போச்சு.. அதுக்கு ஒரு தியாகி வேற ( வேறு யாரு செல்வா தான்)

சௌந்தர் said...

ஏய் ஜில்லு படம் எப்படி இருக்கு

சௌந்தர் said...

எனக்கு இந்த கிளைமேக்ஸ் புடிக்க வில்லை மச்சி நீயே அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்

சௌந்தர் said...

அருண் பிரசாத் பதிவை படிக்காம கமெண்ட் போடுறார் என்னனு கேளுங்கப்பா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஃபினிஷிங்க் செம செம :)

காதல பத்தி என்னமா விளக்கியிருக்கு,சூப்பர் மச்சி

வெங்கட் said...

கதை கொஞ்சம் பெரிசா இருக்கேன்னு
படிக்கறதுக்கு முன்னாடி யோசனை
பண்ணினேன்..

But.., படிக்க படிக்க
விறுவிறுப்பா இருந்தது..

அந்த Uninor எனக்கு ரொம்ப
பிடிச்சி இருந்தது..

ஒரு எழுத்தாளர் உருவாகிறார்..
வாழ்த்துக்கள்..!!

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஃபினிஷிங்க் செம செம :)

காதல பத்தி என்னமா விளக்கியிருக்கு,சூப்பர் மச்சி

//

அடப்பாவி .. அடப்பாவி .. அடப்பாவி .. அடப்பாவி ..

எஸ்.கே said...

கதை மிக மிக நன்றாக உள்ளது! எளிய நடையில் பெரிய விஷயம்!

வெறும்பய said...

சௌந்தர் said...

எனக்கு இந்த கிளைமேக்ஸ் புடிக்க வில்லை மச்சி நீயே அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்

//

கரெக்ட் நண்பா... பாத்தியா எப்படி நழுவிட்டான்...

எஸ்.கே said...

எல்லாம் சரி அந்த பொண்ணு ஒத்துகிச்சா!

வெறும்பய said...

ஒரு தியாகி வேற ( வேறு யாரு செல்வா தான்)

//

நைசா எஸ் ஆகிறான்.. தியாகியலாம் கிடையாது

சௌந்தர் said...

ஜெயந்த ஜாலியா இருப்பது புடிக்க வில்லையா செல்வா கல்யாணம் செய்து வைத்துமாட்டி விட பார்க்கிறான் செல்வா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஏய் ஜில்லு படம் எப்படி இருக்கு //

இன்னா படம் ?

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

சௌந்தர் said...
@@@ஜில்தண்ணி இந்த கதையில் ஒரு படம் வருதே அது நண்பா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அந்த படமா செம செம :)

LK said...

arumai

சௌந்தர் said...

@@@LK என்ன அருமை பதிவை படித்து இருந்தா உண்மை தெரியும் எப்படி இவர் அருமை சொல்றார் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு எழுதி இருக்கான் செல்வா ஒரே வார்த்தையில் அருமை என்றால் என்ன அர்த்தம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெயந்த் வெறும்பயலையோ , யோகேஷ் ஜில்தண்ணியையோ, செல்வா கோமாளியையோ குறிப்பிடுவன அல்ல//

அப்படியே ரம்யா என்று யாரைக் குறிப்பிட வில்லைன்னு எழுதியிருந்தா முழுசா நம்பி இருப்பேன்.

திருஞானசம்பத்.மா. said...

செல்வா, கொஞ்சம் நீநீநீளளம்..
அதுதான் விறுவிறுப்ப குறச்சுடுச்சு..

Mohamed Faaique said...

நம்ம மொக்கை திலகத்துக்கு இப்படியெல்லாம் எழுத வருமாஅ?
நல்லா இருக்கு நன்பா...

ஜீவன்பென்னி said...

செல்வா சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது மொக்கையா இருக்குமோன்னுதான் படிக்க ஆரம்பிச்சேன். இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தா நச்சுன்னு இருந்திருக்கும்.

ஜில்லுதான தோழிவேண்டும்னு கேட்டது அவருக்கிட்டயே கொடுத்திருக்கலாமே அவங்கள....

பிரவின்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு செல்வா.
நேரம் எடுத்து மேற்கோள்குறிகள் உட்பட மெனகெட்டு எழுதியிருக்கீ்ங்க..!! நண்பர்கள் சொன்னதைப்போல் கதையை சுருக்கியிருந்தால் இன்னும் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
வாழ்த்துகள்..!
இன்னும் நிறைய பதிவுகள் படைத்திட....

TERROR-PANDIYAN(VAS) said...

செல்வா கிளைமாக்ஸ்ல உன் கேடிதனத்த காட்டிடா பாத்தியா... அடுத்தவன பாலி கொடுக்கா அவ்வளோ ஆன்ந்தம்... கதை சூப்பர்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Soundar
//செந்தில் அண்ணே நீங்க தான் கொஞ்சம் பட்டி பார்த்து தருவது எங்க ஆளே வருவது இல்லை பேசுறதும் இல்லை இப்போ போன் எடுக்குறது இல்லை//

பப்ளிக்ல நீயே உன்ன அசிங்க படுத்தலாமா? நீ அவ்வளோ தொல்லை பண்ணி இருக்க.. போன்பண்ணி மொக்கா போட்டா....

Chitra said...

நீஈஈஈஈஈண்ட பதிவு....அவ்வ்வ்வவ்.....

dheva said...

முதலிலேயே...வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன் தம்பி....1

1) சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த உன் பாதையில் சிந்திப்பு விதையையும் பரப்பி இருப்பது...வரவேற்கதக்க மாற்றம்.

2) ரம்யா...ராமையா சீனில் வாய் விட்டு நான் சிரித்தது போன்று நிறைய பேர் சிரித்திருப்பார்கள் இது செல்வாவின் வெற்றி.

3) காதல் சாதியால் அழிக்கப்படுகிறது, ஆராயமல் காதல் கொள்ளும் செல்வ விதவை என்றவுடன் பின் வாங்குவது, ஒரு தொலைந்த காதலை மீண்டும் ஜெயந்த் தொடங்குவது என்று.....ஒரே கதையில் எத்தனி விசயங்கள்....

சிந்தனைகளின் சீற்றம் இளவயதில் கைகூடி வருவது ஒரு ஆசிர்வாதம்....மிக நெகிழ்ச்சியாக உன் வளர்ச்சியைப் பார்க்கிறேன் தம்பி....உனக்கு அற்புதமான எதிர்காலமிருக்கிறது.....வாசிப்பவனை இழுத்து பிடித்து உட்கார வைத்திருக்கிறது .....உனது உத்திகள்....


இந்த பதிவு என் தம்பி செல்வாவிற்கு ஒரு பிரேக்.......அடிச்சி தூள் கிளப்பு தம்பி..!

Riyas said...

செல்வா.. கலக்கல் கதை நல்லாயிருக்கு..

Jey said...

கதை நல்லாருக்கு.

உங்க எல்லாருக்கும்...(ஜில்லு,கோமாளி,வெரிம்பய...எட்சட்ரா..) சீக்கிரமே கல்யாணம் ஆக பிராப்திரஸ்து....

cs said...

''''''''''''''இந்தக் கதையை கொஞ்சம் பட்டி பாத்தா ஒரு சிறந்த கதையாக மாறும் .. அடுத்த முறை எழுதும்போது கவனமாக எழுதுங்கள் .''''

unmaiyileye arumai.ungalukku nalla future irukku.

ரெட்டைச்சுழி said...

எலேய் கோமாளி நாசமத்து போனவனே...
நலாத்தாம்லே எழுதி இருக்கே..., இன்னும் ஃபிகர் ஏதும் தேரலியா?????

Kousalya said...

விதவை மறுமணத்தை வலியுறுத்தி, அழகாய் மூன்று இளைஞர்களை வைத்து பின்னப்பட்ட கதை மிக நன்று.

இன்றைய இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பது உண்மைதான்.

செல்வாவிற்கு என் வாழ்த்துகளும் நன்றியும்....

:))

S.M.Raj said...

//இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெயந்த் வெறும்பயலையோ , யோகேஷ் ஜில்தண்ணியையோ,
செல்வா கோமாளியையோ குறிப்பிடுவன அல்ல.//
எல்லோரும் நம்பிட்டோம்

செல்வா.. கலக்கல் கதை நல்லாயிருக்கு..

அன்பரசன் said...

ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க பாஸ்..
படிச்சிட்டு வர்றேன்

பிரியமுடன் ரமேஷ் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..சுவாரஸ்யமா எழுதவருது உங்களுக்கு...நீளத்தை கொஞ்சம் குறைச்சீங்கன்னா..இன்னும் அலுப்பில்லாம படிக்க முடியும்.....வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

இருப்பா ஒரு வாரம் லீவு போட்டு வர்றேன்

இராகவன் நைஜிரியா said...

ய்ப்பே.... அண்ணன் உ.த. வுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரோ...

அப்பாலிக்கா மெதுவா படிச்சுட்டு பின்னூட்டம் போடறேன்...

இப்போதைக்கு ஓட்டு மட்டும்தான்..

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு செல்வா

எல்லோரும் சொன்னதுபோல் கொஞ்சம் நீளம்

பரிசல்காரன் said...

:) Good!

விஜய் said...

தம்பி, ஒரே பதிவுல கடி, கருத்து , காதல், தியாகம், விழிப்புனர்வு அப்டின்னு அழகா கோர்த்து அசத்திட்ட தம்பி, பெருமையா இருக்கு, நிஜமா கொஞ்சம் வருத்தமா இருக்கு அழகான பதிவ கொஞ்சம், சாரி ரொம்ப நாள் கழிச்சு பின்னோட்டம் போடுறோமே அப்டின்னு ...கொஞ்சம் ஆணி அதிகம் தம்பி, அதான் படிக்க முடியாம போய்டுச்சு ...
நிறையா எழுத்து இருக்க, அழகா சலிப்பு தட்டாம எல்லாத்தையும் கலந்து சொல்லி அசத்திட்ட தம்பி..கைகொடு...ம்ம்...
வாழ்த்துக்கள் ..

siva said...

நல்ல கதை.
..kadisiya neenga cholla varathu enna?

athavathu..?moral of the story..