Thursday, October 21, 2010

பானைய வச்சு சம்பாரிக்கணுமா.?

முன்குறிப்பு : மொக்கை எங்கள் தெய்வம்.!

இதுல என்னங்க தப்பு இருக்கு:
ஒரு வாரம் முன்னாடி எங்க பக்கத்து வீட்டுக்காரர் எங்கிட்ட சொன்னார் . " என்னோட பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது., அது என்ன ஆச்சுனு தெரியல..? நான் செக் பண்ணினதுல எல்லாமே சரியாத்தான் இருக்கு ., எனக்கு பெட்ரோல்ல தான் சந்தேகமா இருக்கு. அதனால அதுல இருந்த பெட்ரோல தனியா இந்த பாட்டில்ல எடுத்துட்டு வந்திருக்கேன் ., உன்னோட பைக் ல ஊத்தி டெஸ்ட் பண்ணி பார்க்கணும் " அப்படின்னார்.
சரி அதனால என்ன ஆகிடப்போகுது அப்படின்னு நினைச்சிட்டு " சரி குடுங்க., டெஸ்ட் பண்ணலாம்னு " வாங்கி என்னோட வண்டில ஊத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.. ஸ்டார்ட் ஆகிடுச்சு. அத பார்த்த அவருக்கு சந்தோசம். " எதுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்திடு.! " அப்படின்னார். சரி கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணலாம் அப்படின்னு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தேன். நல்லாத்தான் போச்சு.. ஆனா இதுக்கு அப்புறம் இருக்குற பெட்ரோல்ல பிரபலம் இருந்தா என்ன பண்ணுறது..? சரி எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிடலாம் அப்படின்னு அந்த 2 லிட்டர் பெட்ரோல் தீர வரைக்கும் ஒரு 3 மணிநேரம் டெஸ்ட் பண்ணினேன்.அப்புறம் வீட்டுக்கு வந்ததும் பெட்ரோல்ல பிரச்சினை இல்லைங்க.. நான் புல்லா டெஸ்ட் பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னேன்.அத சொனதுமே அவருக்கு செம கோவம் வந்துடுச்சுங்க. இருந்ததே 2 லிட்டர் தான். அத்தனையும் முடிச்சிட்டியே.? அப்படின்னு கண்டபடி திட்டினார். நீங்களே சொல்லுங்க நான் என்ன தப்பு செஞ்சுட்டேன் அப்படின்னு இவ்ளோ கோவப்படுராறு..? நல்லதுக்கே காலம் இல்லைங்க..!!

பானைய வச்சு சம்பாரிக்க :
*.ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல  "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

எங்கள் சங்கத்திற்கான(VAS) கவிதை ஒன்று :
வானத்து சூரியனுக்கும் உண்டு ஓய்வு 
எங்கள் வலையுலக சூரியனுக்கு இல்லை ஓய்வு ;
சூரியக் கதிர்வீச்சில் பனித்துளிகள் மறைந்துவிடும் 
எங்கள் சூரியக்கதிரில் பணிச்சுமைகள் குறுகிவிடும் ;
சூரியனால் ஒளிர்கிறது நிலவு 
எங்கள் சூரியனால் மிளிர்கிறது ப்ளாகர்;
சூரியன் தெரிவது 12 மணி நேரம் 
எங்கள் சூரியன் தெரிவது 24*7.!
(போல்ஸ்கார் & அருண் அண்ணா இதுக்கு என்ன சொல்லப் போறீங்க..?) 

மொக்கயரசன் வரலாற்றிலிருந்து மொக்கை பற்றிய சில வரிகள் :
மொக்கை இது மூன்றெழுத்து மந்திரம். ஒரு சொல் வாக்கியம். ஒற்றைச்சொல் கவிதை.மொக்கையே எங்களின் வாழ்க்கை. மொக்கயில்லையேல் உலகம் இல்லை. எங்கள் கனவுகளில் மொக்கை ., நினைவுகளில் மொக்கை , வார்த்தையில் மொக்கை.. மொத்தத்தில் நானே மொக்கை ., மொக்கையே நான் .! எங்களை வாழ வைப்பது மொக்கை ., நாங்கள் வாழ்வதும் மொக்கைக்காகவே.! ஆதலின் மானுடரே மொக்கையைப் படிப்பீர். மொக்கையாய் வாழ்வீர்.!!

தீபாவளி வருது. அதுக்காக என்னோட பழைய மொக்கை ஒண்ணு :
சத்தம் இல்லாம பட்டாசு வெடிக்கணுமா..?
பட்டாசு வெடிக்கும்போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க.! சத்தம் வராது.!

ஒரு சின்ன சந்தேகம் :
மாம்பழத்துக்குள்ள மாங்கொட்டை இருக்கு;
பேரிச்சம் பழத்துக்குள்ள பேரிச்சன்கொட்டை இருக்கு ;
அப்படின்னா வாழைப்பழத்துக்குள்ள வாழைக்கொட்டை ஏன் இல்லை..?


ஒரு சின்ன கண்டுபிடிப்பு : 
காதல் எதுல ஆரம்பிச்சு எதுல முடியுதுன்னு தெரியுமா ..?
"கா"வுல ஆரம்பிச்சு "ல்"ல முடியுது.!


நீதி :இந்தப் பதிவப் படிச்சு உங்க நேரத்த வீணாக்குனதுக்கு நன்றி.!


பின்குறிப்பு : என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும் .!!


58 comments:

சௌந்தர் said...

இதுல என்னங்க தப்பு இருக்கு:////

இவன் எவ்வளவு நல்லது பண்ணி இருக்கான் இவனை திட்டி இருக்கார்

பிரியமுடன் ரமேஷ் said...

இந்த செல்வா எப்ப ஆன்லைன் வந்தாலும் ஆன்லைன்லயே இருக்காரே..பிழைப்புக்கு என்னதான் பன்னுவாருன்னு யோசிச்சிருக்கேன்... ஒரு பானையும் அதுல பாதி பச்சைத் தண்ணியும் வெச்சி நீங்க சம்பாதிக்கறது சூப்பர்...

ப.செல்வக்குமார் said...

//இந்த செல்வா எப்ப ஆன்லைன் வந்தாலும் ஆன்லைன்லயே இருக்காரே.//

நான் ஏன் ஆன்லைன்ல வந்தா ஆன்லைன்ல இருக்கேன்னு தெரியுமா..?
ஆப்லைன் போயிட்டா ஆன்லைன்ல இருக்க முடியாதுள்ள..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எங்கள் சங்கத்திற்கான(VAS) கவிதை ஒன்று :
வானத்து சூரியனுக்கும் உண்டு ஓய்வு
எங்கள் வலையுலக சூரியனுக்கு இல்லை ஓய்வு ;
சூரியக் கதிர்வீச்சில் பனித்துளிகள் மறைந்துவிடும்
எங்கள் சூரியக்கதிரில் பணிச்சுமைகள் குறுகிவிடும் ;
சூரியனால் ஒளிர்கிறது நிலவு
எங்கள் சூரியனால் மிளிர்கிறது ப்ளாகர்;
சூரியன் தெரிவது 12 மணி நேரம்
எங்கள் சூரியன் தெரிவது 24*7.!
(போல்ஸ்கார் & அருண் அண்ணா இதுக்கு என்ன சொல்லப் போறீங்க..?) //

அதான் மொக்கை எங்கள் தெய்வம்.! அப்டின்னு முன் குறிப்பு போட்டுட்டியே. அப்புறம் எங்களுக்கு தெரியாதா இது மொக்கைன்னு.

எஸ்.கே said...

பல அரிய பெரிய மொக்கைகளை உண்டாக்கும் செல்வாவிற்கு மொக்கை விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VAS ல உள்ள கருப்பு ஆடு நீதான்னு யாருக்கும் தெரியாதுல்ல

ப.செல்வக்குமார் said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
VAS ல உள்ள கருப்பு ஆடு நீதான்னு யாருக்கும் தெரியாதுல்ல//

இது மட்டும் எங்க தலைவருக்கு தெரிஞ்சதுனா உங்களை என்ன பண்ணுவாருன்னு எனக்கே தெரியாது.. நான் VAS ன் உண்மைத்தொண்டன்..!!!

ப.செல்வக்குமார் said...

//மொக்கை விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது!//

நன்றிங்க ..!! நானும் விஞ்ஞானி ஆகிட்டேன் ..!!

கே.ஆர்.பி.செந்தில் said...

//நீதி :இந்தப் பதிவப் படிச்சு உங்க நேரத்த வீணாக்குனதுக்கு நன்றி.!//

மொக்கை ராசா .. கொன்னு.. கொன்னு விளையாடுறீங்களா ...

siva said...

மொக்கை விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது//

இதை வன்மையாக கண்டிக்கிறேன் ..

இந்த பதிவை கண்டித்து வெளிநடப்பு செய்கின்றேன்

இம்சைஅரசன் பாபு.. said...

ஹா ...........ஹ ..டேய் தம்பி சூப்பர்டா ,,,,,பதிவுன்ன இப்படி தான் தம்பி இருக்கணும் .

siva said...

அப்படின்னா வாழைப்பழத்துக்குள்ள வாழைக்கொட்டை ஏன் இல்லை..?---eruku kanna

chinnatha erukkum..karuppu colrla athan...

நாகராஜசோழன் MA said...

//ஒரு சின்ன கண்டுபிடிப்பு :
காதல் எதுல ஆரம்பிச்சு எதுல முடியுதுன்னு தெரியுமா ..?
"கா"வுல ஆரம்பிச்சு "ல்"ல முடியுது.!//


"கா"ல ஆரம்பிச்சு "ல்"ல முடியறது கால். காதல் இல்ல.

வெங்கட் said...

// வானத்து சூரியனுக்கும் உண்டு ஓய்வு
எங்கள் வலையுலக சூரியனுக்கு இல்லை ஓய்வு ;
சூரியக் கதிர்வீச்சில் பனித்துளிகள் மறைந்துவிடும்
எங்கள் சூரியக்கதிரில் பணிச்சுமைகள் குறுகிவிடும் ;
சூரியனால் ஒளிர்கிறது நிலவு
எங்கள் சூரியனால் மிளிர்கிறது ப்ளாகர்;
சூரியன் தெரிவது 12 மணி நேரம்
எங்கள் சூரியன் தெரிவது 24*7.! //

ஆஹா அற்புதம்..
இதை படிச்சிட்டு சில பேர்க்கு
Stomach Burning ஆகும்னு நினைக்கிறேன்..

ஹா., ஹா., ஹா..!!

ப.செல்வக்குமார் said...

//ஆஹா அற்புதம்..
இதை படிச்சிட்டு சில பேர்க்கு
Stomach Burning ஆகும்னு நினைக்கிறேன்..//

வாங்க தல .. VKS காரங்களதானே சொல்லுறீங்க ..

Balaji saravana said...

செல்வா = மொக்க! :)

//குறை குடம் கூத்தாடும்ல //
செம..
ரூம் போட்டு யோசிப்பியா தம்பி? :)

வெறும்பய said...

தம்பி செல்வா .. யாருக்கெல்லாமோ விழா எடுக்கிறாங்க. உனக்கொரு விழா யாரும் எடுக்க மாட்டேங்குறாங்களே..

வினோ said...

செல்வா கலக்கல்...

அருண் பிரசாத் said...

எது இது சின்ன பதிவா?

சின்ன பதிவுனா உங்க தலைவர் பிளாக் பாருங்க... அங்க கமெண்ட் மட்டும்தான் பெருசா இருக்கும்....

VAS கவிதை - போலிஸ் பதிலே ரிப்பீட்டு

பதிவுலகில் பாபு said...

ஓசி பெட்ரோல்ல மூன்று மணிநேரம் சுத்தியிருக்கீங்க.. வெரிகுட்..

பதிவுலகில் பாபு said...

ஒரு பானையை வைச்சி எப்படியெல்லாம் பிசினஸ் பண்ணியிருக்கீங்க செல்வா.. இன்னொரு வெரிகுட்.. :-))))

ப.செல்வக்குமார் said...

//
பதிவுலகில் பாபு said...
ஒரு பானையை வைச்சி எப்படியெல்லாம் பிசினஸ் பண்ணியிருக்கீங்க செல்வா.. இன்னொரு வெரிகுட்.. :-))))
//

உங்களுக்குத் தெரியுதுங்க ..ஆனா சிலர் என்னைய கோமாளி அப்படின்னு சொல்லுறாங்க ..!

அன்பரசன் said...

//அப்படின்னா வாழைப்பழத்துக்குள்ள வாழைக்கொட்டை ஏன் இல்லை..?//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

அன்பரசன் said...

//முன்குறிப்பு : மொக்கை எங்கள் தெய்வம்.!
பின்குறிப்பு : என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும் .!!//

:)

மங்குனி அமைசர் said...

வந்ததும் பெட்ரோல்ல பிரச்சினை இல்லைங்க.. நான் புல்லா டெஸ்ட் பண்ணிட்டேன்////

ஆமாப்பா இந்த உலகத்துல ஒரு பயலுக்கும் அறிவே இல்லை , அன்னைக்கு நான் அப்படித்தான் தீப்பெட்டி வாங்கி எல்லா குச்சியும் எரியுதான்னு டெஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு கொண்டு போனேன் ...................என்னா அடி? சே,

மங்குனி அமைசர் said...

ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ..///

பைத்தியகாரன்யா நீ ? அது ஆடி ஆடி என்னைக்கு சம்பாரிக்க ? என் பஸ்டாண்டுல வச்ச நேரா மார்வாடி கடைக்கு போகவேண்டியது தானே

Chitra said...

நீதி :இந்தப் பதிவப் படிச்சு உங்க நேரத்த வீணாக்குனதுக்கு நன்றி.!


..........இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் எங்களுக்கு! ha,ha,ha,ha...

மங்குனி அமைசர் said...

எங்கள் சூரியன் தெரிவது 24*7.!///

வாழ்த்துக்கள் வெங்கட்

மங்குனி அமைசர் said...

அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க.! சத்தம் வராது.!///

அதுகிட்ட நாம என் போயி கெஞ்சனும் , பேசாம பின்னாடி ஒரு சைலன்சர் வச்சுட்டா ???

அனு said...

//எங்கள் சங்கத்திற்கான(VAS) கவிதை ஒன்று//

நான் அருணோட 'சூரியனின் வலை வாசல்'க்காக கவிதை எழுதி கொடுத்தா,அதை சுட்டு இங்க போட்டுட்டு அருண் கிட்டயே கமெண்ட் கேக்குறீங்களா??

//என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும் //
இது தான் உங்க சின்ன-வா??

பிரவின்குமார் said...

செல்வா கலக்குற அப்பு..!! எப்படியெல்லாம் யோசிக்கறாங்ப்பான்னு தோனுது.,!!! பதிவு எழுதி மொக்கை போடுவது ஒரு பக்கம்னா ஒவ்வொரு பதிவிலும் நம்ம மங்குனி அமைச்சரின் எடக்கு மடக்கான சிந்தனையும் நக்கலும் நையாண்டியும்..... ஸ்..ஸ்பா... முடியல எப்படி சமாளிக்கறது.. இங்க பாரு
//மங்குனி அமைசர் said...

ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ..///

பைத்தியகாரன்யா நீ ? அது ஆடி ஆடி என்னைக்கு சம்பாரிக்க ? என் பஸ்டாண்டுல வச்ச நேரா மார்வாடி கடைக்கு போகவேண்டியது தானே//

படித்தது்ம் குபுக்னு சிரிப்பு வந்தது. எப்படியெல்லாம் நம்ம ஊரு டெவலப் ஆகுது பாருங்கப்பா..!!

Riyas said...

//அப்படின்னா வாழைப்பழத்துக்குள்ள வாழைக்கொட்டை ஏன் இல்லை..?//

யாருசொன்னா இல்லன்னு நல்லாதேடிப்பாருங்க இருக்கும்..
//நீதி :இந்தப் பதிவப் படிச்சு உங்க நேரத்த வீணாக்குனதுக்கு நன்றி//

யாருசொன்னா உங்க இதெல்லாம் படிப்பாங்கனனு நாங்க படிக்கல்லியே படிக்கல்லியே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜோக்கெல்லாம் சூப்பரா இருக்கப்பூ..குறிப்பா பட்டாசு ஜோக்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மொக்கை சங்க தலைவர் போலிசு..செயலாளர் செல்வா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதைவிட பெரிய மொக்கை எல்லாம் ஜீரணம் பண்ணிட்டோம் தைரியமா அடுத்த மொக்கையை எதிர்பார்க்கிறொம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பானைக்குள்ள எதுக்குய்யா தண்ணி ஊத்த சொன்ன?

ப.செல்வக்குமார் said...

//இதைவிட பெரிய மொக்கை எல்லாம் ஜீரணம் பண்ணிட்டோம் தைரியமா அடுத்த மொக்கையை எதிர்பார்க்கிறொம் /

உங்க தைரியத்த நான் பாரட்டுறேங்க .!!

ப.செல்வக்குமார் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பானைக்குள்ள எதுக்குய்யா தண்ணி ஊத்த சொன்ன?
//

குறைகுடம் தானே கூத்தாடும் .. அதனால .!!

Saran said...

//
ப.செல்வக்குமார் said...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பானைக்குள்ள எதுக்குய்யா தண்ணி ஊத்த சொன்ன?
//

குறைகுடம் தானே கூத்தாடும் .. அதனால

//


ஐய்யய்யோ என்னா அறிவு என்னா அறிவு, கூமாளி (அப்படிதான் படிக்க முடியுது).

karthikkumar said...

தம்பி செல்வா .. யாருக்கெல்லாமோ விழா எடுக்கிறாங்க. உனக்கொரு விழா யாரும் எடுக்க மாட்டேங்குறாங்களே.///விழாவுக்கு நான் வேணும்னா ஏற்பாடு பண்ணட்டுமா செல்வா சார்?

dheva said...

தம்பி.........

செம தம்பி

வாழைப்பழ பஞ்ச்.........வயிறு வலிக்குது....!

பெட்ரோல் தீத்ததுக்கு உன்னை கட்டி வைக்காம விட்டாரே...ஹா ஹா ஹா..!

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னோட பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது., அது என்ன ஆச்சுனு தெரியல..? //

அதான் ஸ்டார்ட் ஆகல தெரிஞ்சி போச்சே.. அப்புறம் என்ன என்ன ஆச்சி தெரியல சொல்றிங்க?

//நான் செக் பண்ணினதுல எல்லாமே சரியாத்தான் இருக்கு ., //

எதுக்கும் Cash பண்ணி பாருங்களேன்...

//எனக்கு பெட்ரோல்ல தான் சந்தேகமா இருக்கு. //

சரி போலீஸ்ல பிடிச்சி கொடுங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

// " குறை குடம் கூத்தாடும்ல "..//

இதுக்கு பதில் நீ எங்க எல்லாறுக்கும் ஒரு குடம் விஷம் வாங்கி கொடுத்து இருக்கலாம்....

ப.செல்வக்குமார் said...

//இதுக்கு பதில் நீ எங்க எல்லாறுக்கும் ஒரு குடம் விஷம் வாங்கி கொடுத்து இருக்கலாம்....
//

ஹி ஹி ஹி .. அப்புறம் என்னோட பதிவுகள சாரி மொக்கைகள யார் படிக்கிறது ..?

ராஜ நடராஜன் said...

//நான் புல்லா டெஸ்ட் பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னேன்.அத சொனதுமே அவருக்கு செம கோவம் வந்துடுச்சுங்க. இருந்ததே 2 லிட்டர் தான். அத்தனையும் முடிச்சிட்டியே.? அப்படின்னு கண்டபடி திட்டினார். நீங்களே சொல்லுங்க நான் என்ன தப்பு செஞ்சுட்டேன் அப்படின்னு இவ்ளோ கோவப்படுராறு..? நல்லதுக்கே காலம் இல்லைங்க..!!//

செம!சிரிப்புன்னா இப்படி இயல்பா என் பல்லைக் காட்ட வைக்கனும்:)

ராஜ நடராஜன் said...

//*.ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல //

யப்பே!இது ஈரோட்டு வெடியா:)

ப.செல்வக்குமார் said...

//ராஜ நடராஜன் said...
/யப்பே!இது ஈரோட்டு வெடியா:) //

வாங்க வாங்க ..!! இல்ல எங்க வேணா வைக்கலாம் ..!! ஹி ஹி ஹி .

பாரத்... பாரதி... said...

//என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும்//

சின்ன பதிவும் அதிர வைக்குது..

இந்த பதிவின் தலைப்பு அருமை..
அது சரி, பானையை வச்சு சம்பாரிச்ச காசு எங்க வச்சிருக்கீங்க..

அப்புறம் விஞ்ஞானி விருது வாங்குனதுக்கு
டிரிட் இல்லையா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும் /////

இந்த டீல் நல்லா இருக்கு.. :)

philosophy prabhakaran said...

முன்குறிப்பில் மொக்கை என்று போட்டுவிட்டதால் படிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டேன்... கடந்த பதிவு (2060) சிறப்பாக இருந்தது... இன்று தான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் வருகை தருகிறேன்... இனி பின்தொடர்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பானைய வெச்சே பெரிய ஆளாயிட்டீங்களே பேஷ் பேஷ்...! அப்போ இந்த கான்ட்ராக்டருங்க, கல்வித்தந்தைகள், அரசாங்க ஆப்பீசருங்கள்லாம் ராப்பகலா ஒழைச்சி சம்பாரிச்சி எப்பிடி உங்கள மாதிரி பணக்காரனாகப் போறாங்களோ பாவம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாத்தையும் விட பானை படம் ஒண்ணு போட்டு இருக்கீங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க!

ப.செல்வக்குமார் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாத்தையும் விட பானை படம் ஒண்ணு போட்டு இருக்கீங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க!
//

நான் எங்க தாங்க நிக்குறேன் ..!!

சி.பி.செந்தில்குமார் said...

எங்கள் ஓட்டு பானைக்கே

சி.பி.செந்தில்குமார் said...

இடுகை போட்டதும் லேபிளில் நகைச்சுவை,மொக்கை,காமெடி என போடவும்,அப்பதான் தமிழ் மண முகப்பில் கீழே தனியான தலைப்புகளில் நிக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

மொக்க 3 எழுத்து,செல்வா 3 எழுத்து,போலீஸ் 3 எழுத்து,மாமூல் 3 எழுத்து

ப.செல்வக்குமார் said...

///மொக்க 3 எழுத்து,செல்வா 3 எழுத்து,போலீஸ் 3 எழுத்து,மாமூல் 3 எழுத்து //

எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியுது ..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மங்குனி அமைசர் said...
ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ..///

பைத்தியகாரன்யா நீ ? அது ஆடி ஆடி என்னைக்கு சம்பாரிக்க ? என் பஸ்டாண்டுல வச்ச நேரா மார்வாடி கடைக்கு போகவேண்டியது தானே//

இது சூப்பர்!