Wednesday, May 25, 2011

ஒன் லைன் திரு!

முன்குறிப்பு : இந்தப் பதிவு நான் ரேடியோ ஜாக்கி ஆகணும்ற ஆசைய , கனவ எனக்குள்ள விதைச்ச மா.கா.பா ஆனந்த் ( சென்னை ரேடியோ மிர்ச்சி RJ ) அண்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!

 இப்போதைக்கு நம்மல்ல எத்தன பேர் ரேடியோ கேக்குறோம் ? இணையம் , I-PAD , மெமரி கார்ட் அப்படி இப்படின்னு நிறைய சாதனங்கள் நம்மளோட இசை, பாடல் கேக்குற ஆர்வத்த ரேடியோ , டிவி பக்கம் போக விடாம இழுத்து வச்சிருக்குன்னு சொல்லலாம்! ஆனா கூட இப்பவும் FM கேக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க! நானும் கூட அந்த லிஸ்ட்ல வருவேன் :-)

 ஆனந்த் அண்ணனோட  முதல் வானொலி நிகழ்ச்சி பத்தி சொல்லியே ஆகணும். எனக்குத் தெரிஞ்ச அளவுல ஆனந்த் அண்ணாவோட முதல் நிகழ்ச்சி எதுன்னு சரியா தெரியல. ஆனா நான் கேட்ட அவரோட முதல் நிகழ்ச்சி கோவை சூரியன் FM ல இரவு 9 லிருந்து 10 மணி வரைக்கும் ஒலிபரப்பாயிட்டு இருந்த  " ஹலோ சூரியன் FM " தான். ஆனா அப்போ அந்த நிகழ்ச்சிய கலக்கலா பண்ணிட்டு இருந்தவர் குமார்தான்.

 வழக்கம்போல குமார்தான் வருவார்னு எதிர்பார்த்தா அன்னிக்கு ஆனந்த் அண்ணன் வந்தார். உண்மைலேயே அவருக்கு முதல் நிகழ்ச்சில சரியாப் பேச வரல. யோசிச்சு யோசிச்சு கேப் விட்டு கேப் விட்டுத்தான் பேசினார். குமார் வராம அவர் ஏன் இந்த ப்ரோக்ராம் பண்ண வந்தார்னு கொஞ்சம் கோபமாத்தான் இருந்துச்சு!

  அடுத்த நாளும் ஆனந்த் அண்ணாவேதான் வந்தார். அப்பாவும் கொஞ்சம் சுமாராதான் பேசினார். அப்போ ஒரு நேயர் கால் பண்ணி பேசிட்டிருக்கும்போது " உங்க குரலும் , குமார் குரலும் ஒரே மாதிரி இருக்கே ! " அப்படின்னு கேட்டார். அதுக்கு ஆனந்த் அண்ணா " அது வந்து நாங்க ரண்டுபேரும் ஒரே கடைல டீ குடிக்கிறோம் " அப்படின்னு சொன்னார். எனக்கு ஆனந்த் அண்ணனைப் பிடிக்க அதுதான் முதல் காரணம்.

  அப்புறம் அவர் BLADE NO .1 நிகழ்ச்சிக்கு வந்தார். நான் எதிர்பார்த்த மாதிரியே ரொம்ப அருமையா அந்த நிகழ்ச்சியைக் கொண்டுபோனார். யாரவது ஜோக் சொல்லி முடிச்சதும் " அப்படியா " அப்படின்னு குரலை கொஞ்சம் ஒரு மாதிரி இழுத்து சொல்லுறது ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம் அதவிட ரொம்ப முக்கியமா படத்துல வர்ற காமெடி கிளிப்ல இருந்து கட் பண்ணி ஜோக் சொல்லி முடிச்சதும் அத பிளே பண்ணுவார். உண்மைலேயே அதுக்கு அப்புறம் நான் அவரோட தீவிர ரசிகர் ஆகிட்டேன்னு சொல்லலாம். அவர் அந்த மாதிரி ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிச்சபோது நானும் பள்ளிக்கூட விடுமுறைல இருந்தேன். தினமும் அவரோட BLADE NO .1 கேட்டிருவேன். ஆனந்த் அண்ணா வராத அன்னிக்கு எனக்கு FM கேக்கவே பிடிக்காது!

 BLADE NO .1 முடிஞ்ச பிறகு 12 மணிக்கு " ஊர் சுத்தலாம் வாங்க " நிகழ்ச்சிக்கு வருவார். ஒரு சமயம் எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கெட்டிச்செவியூருக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு எங்க ஊருல கரண்ட் ஆப் ஆகிருந்தது. 12 .30 க்குத்தான் கரண்ட் வந்துச்சு. அப்போதான் அவர் அங்க ஊர் சுத்தலாம் வாங்க நிகழ்ச்சிக்காக வந்திருக்கார் அப்படின்னு தெரிஞ்சது. உடனே அவசர அவசரமா குளிச்சிட்டு ( அப்ப எங்க வீட்டுல சைக்கிள்தான் இருந்துச்சு ) சைக்கிள எடுத்துட்டு 8 கி.மீ தூரத்துல இருந்த செவியூருக்குப் போனேன். ஆனா அதுக்குள்ளே நிகழ்ச்சி முடிச்சிட்டு கிளம்பிப்போய்ட்டாங்க :-(

 தினமும் அவர் வர்ற நிகழ்சிகள கண்டிப்பா கேட்டிருவேன். எந்த நிகழ்ச்சி பண்ணினாலும் அதுல காமெடி இருக்கும். கோவை சூரியன் FM ல சின்னத் தம்பி ,பெரிய தம்பினு ஒரு நிகழ்ச்சி வரும். அதுல அந்த நிகழ்ச்சி வழக்கமா பண்ணுறவங்க வரலைனா ஆனந்த் அண்ணன் செங்கல்பட்டு சென்னி அப்படிங்கிற பேர்ல வருவார். அதுவும் ரொம்ப அருமையா இருக்கும். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் என்னை அவரோட தீவிர ரசிகரா மாத்திருச்சு! நான் அவருக்கு தனியா ஒரு கடிதம் எழுதி சூரியன் FM க்கு அனுப்பிருந்தேன். ஆனா அது அவருக்குக் கிடைக்கலைன்னு பின்னாடி தெரிஞ்சிக்கிட்டேன்.

 கோவை சூரியன் FM ல அவர் கடைசியா பண்ணின நிகழ்ச்சி உங்களுக்காகனு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் அவர் கோவை சூரியன் FM ல வரல. ஏன் , என்னாச்சு அப்படின்னு எந்தத் தகவலும் இல்ல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சொல்லப்போனா நான் அதுக்கு அப்புறம் FM கேக்கிறதையே விட்டுட்டேன்!

 ஒரு ரண்டு வருசத்துக்கு அப்புறம் ஒருநாள் நான் ரேடியோல சும்மா வேற வேற STATIONS க்கு மாத்தி மாத்திக் கேட்டுட்டு இருந்தபோதுதான் எனக்கு RADIO MIRCHI கிடைச்சது. உண்மைலேயே கோயம்புத்தூர்ல ரேடியோ மிர்ச்சி வந்தது எனக்கு அப்போதான் தெரியும். அதுல எந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டுட்டிருந்தேன். பாட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் ப்ரோக்ராம் பத்தின PROMO போடுவாங்க. அப்ப கேட்ட PROMO என்னை அப்படியே இன்ப அதிர்ச்சில தள்ளிடுச்சுனுதான் சொல்லணும். 2 வருசமா நான் தேடிட்டு இருந்த ஆனந்த் அண்ணாவோட குரல்தான் அது. ( 2 வருசமா நான் எப்படி தேடினேன்னா எங்க ஊர்ல இருந்து சென்னைல படிச்சிட்டு இருந்த என்னோட நண்பர்கள் கிட்ட கேப்பேன். ஒரு வேலை ஆனந்த் அண்ணன் சென்னைக்கு போயிருப்பாரோனு தெரிஞ்சிக்க. ஆனா அவுங்களுக்கு FM கேக்குற பழக்கமே இல்ல )

 அப்புறம் தொடர்ச்சியா ரேடியோ மிர்ச்சி கேட்க ஆரம்பிச்சு அதுல அவர் ஃப்ரீயா விடு நிகழ்ச்சி பண்ணிட்டிருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா என்னால அதிகமா கேட்க முடியல. காரணம் என்னோட ஆபீஸ் டைமிங் அப்படி. ஆனாலும் வண்டில வரும்போதும், வீட்டுக்கு வந்ததும்னு எப்படியாவது கொஞ்சமாச்சும் அவரோட நிகழ்ச்சி ketru வேன்.அவரோட நகைச்சுவையான பேச்சுக்கு உதாரணம் வேணும்னா, ஒரு தடவ கரண்ட் கம்பிய திருடப்போனவர் கரண்ட் தாக்கி இறந்தார் அப்படிங்கிற செய்தியைச் சொல்லிட்டு " இதுக்குத்தான் திருடப் போகும்போது டெஸ்டர் , கட்டர் எல்லாம் கரக்டா எடுத்துட்டுப் போகணும்கிறது! " அப்படின்னு கமென்ட் அடிச்சது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவரோட நிகழ்ச்சிகளைக் கேக்க முடியலையேனு வருத்தப்பட்டுட்டு இருந்தபோது அவர் மறுபடியும் கோவை ரேடியோ மிர்ச்சில இருந்து காணாம போய்ட்டார். ஆனா இந்த தடவ அவர் சென்னை ரேடியோ மிர்ச்சிக்கு போயிருக்கார்னு பேஸ்புக் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்!

 மறுபடியும் அதே வேதனை. என்னடா மறுபடியும் அவரோட நிகழ்சிகள மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் அவரோட குரல எதாச்சும் நிகழ்ச்சியோட ப்ரோமோல அடிக்கடி கேக்கும்போது கொஞ்சம் சந்தோசமா இருக்கும். அப்புறம் தான் என்ன ரொம்ப ரொம்ப சந்தோசமாக்க வந்திச்சு ஒன் லைன் திரு. ஆமாங்க முழுக்க முழுக்க ஆனந்த் அண்ணனோட குரல்ல, அதே நக்கலான , நகைச்சுவையான அவரோட கற்பனைல இப்ப அடிக்கடி ரேடியோ மிர்ச்சில ஒன் லைன் திரு வந்திட்டு இருக்கு. உண்மைலேயே அவர் இங்க இல்லையே அப்படிங்கிற குறைய இந்த ஒரு நிமிச ப்ரோமோ தீர்த்துருது! கண்டிப்பா ஒன் லைன் திரு கேட்டா நீங்களும் அவரோட ரசிகரா மாறிடுவீங்க! இப்ப கூட நீங்க ரேடியோ மிர்ச்சி வெப்சைட்ல ஒன் லைன் திரு கேக்க முடியும் :-)

 இந்தப் பதிவ அவரோட பிறந்தநாளான MAY 20 ல பதிவிடணும்னு நினைச்சேன். ஆனா என்னோட வேலை காரணமாக முடியாமல் போய்விட்டது:-(

 என்னோட ஆசையெல்லாம் நானும் சீக்கிரமா RJ ஆகி ஒரு நிகழ்ச்சியாவது ஆனந்த் அண்ணன் கூட சேர்ந்து பண்ணனும் அப்படிங்கிறதுதான்! எப்போ நிறைவேறும் ? :-)

24 comments:

Unknown said...

முதல் அலைவரிசை?

Unknown said...

indli?

Unknown said...

இப்போ ஒக்கே பாஸ்!

Prabu Krishna said...

அப்போ அவர்தான் உங்க Role Model னு சொல்லுங்க. வாழ்த்துகள் அண்ணா.

MANO நாஞ்சில் மனோ said...

செல்வாவின் ரோல் மாடல் அண்ணன் ஆனந்த் வாழ்க....

MANO நாஞ்சில் மனோ said...

ஒரே கடையில டீ குடிச்சா ஒரே குரல் வருமா??? அப்போ கொஞ்சம் சூதனமாதான் இருக்கணும்..!!!

MANO நாஞ்சில் மனோ said...

// அது வந்து நாங்க ரண்டுபேரும் ஒரே கடைல டீ குடிக்கிறோம் //

டாஸ்மாக்ல சரக்கடிச்சா...???

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி அவுட்டே...

Madhavan Srinivasagopalan said...

ஒரு சமயம் எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கெட்டிச்செவியூருக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு எங்க ஊருல கரண்ட் ஆப் ஆகிருந்தது. 12 .30 க்குத்தான் கரண்ட் வந்துச்சு. அப்போதான் அவர் //அங்க ஊர் சுத்தலாம் வாங்க நிகழ்ச்சிக்காக வந்திருக்கார் அப்படின்னு தெரிஞ்சது. உடனே அவசர அவசரமா குளிச்சிட்டு ( அப்ப எங்க வீட்டுல சைக்கிள்தான் இருந்துச்சு ) சைக்கிள எடுத்துட்டு 8 கி.மீ தூரத்துல இருந்த செவியூருக்குப் போனேன். ஆனா அதுக்குள்ளே நிகழ்ச்சி முடிச்சிட்டு கிளம்பிப்போய்ட்டாங்க :-( //

ஆடு குளிக்குதா?
மாடு குளிக்குதா?
கொக்கு குளிக்குதா?
மக்கு, உனக்கென்னாத்துக்கு அந்த வீண் வேலை ?
மிஸ் பண்ணிட்டியே !
:-(

Madhavan Srinivasagopalan said...

// என்னோட ஆசையெல்லாம் நானும் சீக்கிரமா RJ ஆகி ஒரு நிகழ்ச்சியாவது ஆனந்த் அண்ணன் கூட சேர்ந்து பண்ணனும் அப்படிங்கிறதுதான்! எப்போ நிறைவேறும் ? :-)//

இந்த ஆசை, சீக்கிரம் நிறைவேற ஆசிகள்..

Unknown said...

me the 11th

Unknown said...

பங்காளி நமக்கு ஒரு சைட் இருக்கு பாட்டு வரியெல்லாம் போட்டு பட்டைய கிளப்ப்புரமுல்ல ஓட்ட போடுங்க வாங்க http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_25.html

Unknown said...

உலக புகழ் ரேடியோ ஜாக்கி அண்ணன் கோமாளி செல்வா வாழ்க

அண்ணே அந்த துணை ரேடியோ ஜாக்கி வேலை நமக்குத்தான் எப்போவே சொல்லிட்டேன்
இருந்தாலும் மின்ட்ல வச்சுகோங்க...

Unknown said...

14...

Unknown said...

15...

Unknown said...

வாழ்த்துகள்!

Ram said...

கவலை படாதீங்க மாப்பு.. கண்டிப்பா ஆனந்தோட பக்காவா பல ப்ரோக்ராம் பண்ணுவீங்க.. அது எல்லாத்தையும் நாங்க கண்டிப்பா கேப்போம்..

Santhosh.S said...

கீழ இருக்கறது RJ ஆனந்த் அண்ணாவோட ரேடியோ மிர்ச்சி வெப்சைட் ல இருந்து எடுத்த profile லிங்க். நீங்க contact பண்ண easy யா இருக்கும்
http://www.radiomirchi.com/delhi/rj/anant/1163

Chitra said...

என்னோட ஆசையெல்லாம் நானும் சீக்கிரமா RJ ஆகி ஒரு நிகழ்ச்சியாவது ஆனந்த் அண்ணன் கூட சேர்ந்து பண்ணனும் அப்படிங்கிறதுதான்! எப்போ நிறைவேறும் ? :-)


..... Best wishes for your dreams to come true! :-)

middleclassmadhavi said...

உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்!

பிரதீபா said...

அய்யோ, செல்வா.. நானும் FM கேக்க ஆரம்பிச்சதே அந்த மென்மையான குரலுக்காகத் தான். பால்கனில இருக்கற கம்பியில வொயர் எடுத்து ஆண்டேனால கட்டி சிக்னல் எடுத்து கேப்பேன் :) எங்க அண்ணா ஒருத்தங்களுக்கு ஆனந்த் குரல் மாதிரியே இருக்கும், நான் அவர் கிட்ட அடிக்கடி பேசுவேன், குறிப்பா போன்ல.
இப்ப எனக்கு மறுபடி ஞாபகப்படுத்தீட்டீங்க. காலேஜ் ஹாஸ்டல்ல நான் எப்பவுமே fm கேப்பேன். சென்னைல இருந்தப்போ அவ்வளவா கேட்டதில்லை, ஆனா இங்க நிறைய கேக்கிறேன். என்ன பாட்டு அடுத்தது வரும்னு தெரியாம கேட்டுகிட்டே போறது ஒரு சுகம். ஆனா நிறைய விளம்பரங்கள் இப்போதிய எரிச்சல்.

பாத்தீங்களா, முக்கியமா உங்கள வாழ்த்த மறந்துட்டேனே.. கண்டிப்பா உங்க ஆசை நிறைவேறும் :)

அந்த "ஒன் லைன் திரு!" மிர்ச்சி சைட் ல எங்கே தான் இருக்கு? லிங்க் தந்தீங்கன்னா புண்ணியமா போகும். கடிதம் கண்டவுடன் பதில் போடவும் :)

பிரதீபா said...

கண்டுபுடிச்சுட்டேன்.......... கேட்டுட்டேன்...................
ஜாலி .............................

ஹையாஆ.....................
நினைவூட்டியமைக்கு நன்றியோ நன்றி செல்வா !!

The Kid said...

Your blog could reach thousands of Chennai readers. How?

A one time submission of your blog url at zeole.com/chennai is all you need to do. Whenever you write in your blog, visitors to zeole.com/chennai will come to your blog to read.

Interested?

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!