இந்த தொடர் பதிவின் மூலம் தமிழ் மன்னர்கள் பற்றி என்னை எழுத அழைத்ததும் நான் தமிழ் மன்னர்கள் பற்றி எழுதலாம் என்று எண்ணி விக்கிபீடியாவில் தேட ஆரம்பித்தேன். பெரும்பாலான தமிழ் மன்னர்கள் பற்றிய செய்திகள் பதிவேற்றப்பெற்றிருந்தன. ஆதலின் வேறு ஏதேனும் புகழ் பெற்ற மன்னரைப்பற்றி எழுதலாம் என்று எண்ணி மேலும் தேடினேன். ரோமப்பேரரசு , பைசண்டைன் பேரரசு , அகஸ்டஸ் , ஜூலியஸ் சீசர் , ஜூலியோ - கிளேடியன் பரம்பரை என்று எனது தேடல் தொடர்ந்தது. இதில் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பற்றி தமிழில் இதுவரை யாரும் தொகுக்கவில்லை. ஆதலால் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பற்றி விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் இருந்தவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். எனது அலுவலக பணி காரணமாக என்னால் தொடர் பதிவிற்கு அழைத்தவுடனே பதிவேற்ற முடியவில்லை. மேலும் இந்த மன்னர்களைப் பற்றி தேடுவதில் எனது நேரம் செலவானது. இருப்பினும் அதிக மன்னர்களைப் பற்றித்தெரிந்து கொண்டேன். இந்தப்பதிவினைத் தொடங்கும்போது நீரோ மன்னனைப் பற்றி எழுதலாம் என்றே தொடர்ந்தேன். இந்தப் பதிவினைத் தொடர விரும்புவோர் நீரோ , காலிகுலா மன்னரைப் பற்றி எழுதலாம். அவரைப்பற்றிய குறிப்புகள் விக்கிப்பீடியாவில் அதிகம் இல்லை. இந்தப்பதிவில் ஏதேனும் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்.
ஜூலியோ - கிளேடியன் பரம்பரை ஓர் அறிமுகம்
ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பொதுவாக ரோமப்பேரரசின் முதல் ஐந்து மன்னர்களான அகஸ்டஸ் , டிபேரியஸ்,கலிகுலா, கிளாடியஸ் மற்றும் நீரோ ஆகியோரைக் குறிக்கிறது.இவர்கள் ரோமப்பேரரசின் தொடக்க காலம் முதல் கி.பி 68 வரை அந்தப் பரம்பரையின் கடைசி மன்னனான நீரோ தற்கொலை செய்து கொள்ளும் வரை ரோமப்பேரரசை ஆட்சி செய்தனர். ஜூலியஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியன ரோமன் குடும்பத்தை சார்ந்த பெயர்களாகும். சில பெயர்கள் தந்தையிடமிருந்து மரபுவழியாக வந்தவை.ஜூலியஸ் சீசர் அவரது சகோதரியின் பேரனான கேயஸ் அக்டேவியஸ் ஐ தத்தேடுத்துக்கொண்டார். அதன் பின்னர் கேயஸ் அக்டேவியஸ்ன் பெயர் கேயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் என்று மாறியது. இவரே ரோமப்பேரரசின் முதல் மன்னராவர். ரோமப்பேரரசை நிறுவியவரும் இவரே.
ஜூலியோ - கிளேடியன் பரம்பரையின் தோற்றமும் வீழ்ச்சியும்
அகஸ்டஸ் (27 BC–AD 14)
ஆண் வாரிசு இல்லாமையால் அகஸ்டஸ் அவரது தங்கையினை அவரது உறவினரான மார்க்ஸ் கிளாடியஸ் மார்சிலஸ் என்பவருக்கு மணமுடித்தார். ஆயினும் மார்சிலஸ் கி.மு 23 ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். பின்னர் தனது விதவைத் தங்கையினை தனது நண்பருக்கு மணமுடித்து வைக்கிறார். இந்தத் திருமணத்தின் மூலம் அவரது தங்கைக்கு மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்களை பெற்றெடுக்கிறாள்.அகஸ்டஸ் தனது தங்கையின் பிள்ளைகளான கேயஸ் சீசர் மற்றும் லூசியஸ் சீசர் ஆகியோரை தனது வாரிசாக தத்தெடுக்கிறார். மேலும் அகஸ்டஸ் தனது மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தைகளான ட்ருசாஸ் மற்றும் டிபேரியஸ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளித்தார். ட்ருசாஸ் கி.மு 9 இல் இறந்துவிடுகிறார். மேலும் கேயஸ் சீசர் மற்றும் லூசியஸ் சீசர் ஆகியோரும் சிறு வயதிலேயே இறந்துவிடவே டிபேரியஸ் அகஸ்டசின் அரசியல் வாரிசாகிறார்.
டிபேரியஸ் (கி.பி 14 - 37 )
கி.பி 14 ஆகஸ்ட் 19 இல் அகஸ்டஸ் இறந்ததும் அவரது உயிலில் இருந்தபடி டிபேரியஸ் ரோமப்பேரரசின் மன்னராகிறார். அவர் அகஸ்டசின் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்தும் அவரது தத்துப்பிள்ளையான ஜெர்மானிகசிர்க்கு சாதகமாகவும் செயல்பட்டார். டிபேரியாசின் வேண்டுகோளின் படி ஜெர்மாநிகாஸ் ஜெர்மநிகாவின் ஆளுநராக பொறுப்பேற்றார்.ஜெர்மாநிகாஸ் கி.பி 19 இல் உயிரிழக்கிறார். ஜெர்மாநிகாசின் உயிரிழப்பிற்குப்பின்னர் டிபேரியஸ் தனது மகனான ட்ருசாசினை ஜெர்மாநிகாவின் ஆளுநராக நியமித்தார். ரோமப்பேரரசின் இரண்டாவது மன்னரான டிபேரியஸ் கி.பி 37 ல் இறந்தார்.
கலிகுலா (கி.பி 37 - 41 )
டிபேரியாசின் மரணம் மற்றும் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களின் அழிவினால் அகஸ்டசின் திட்டங்கள் யாவும் அழிக்கப்பட்டு வந்தன. டிபேரியசின் மரணத்திருக்குப் பின்னர் அவரின் அரசியல் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் ஜெர்மாநிகாஸ் ஆவார். இவர் அவரது சிறுவயதுப் பெயரான கலிகுலா என்றே அழைக்கப்பட்டார். இவர் ரோமப்பேரரசின் மூன்றாவது மன்னராக கி.பி 37 முதல் 41 வரை இருந்தார்.ஜனவரி 24 , 41 இல் அவரது மெய்க்காப்பாளர் காசியஸ் கரியா என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
கிளடியாஸ் (கி.பி 41 - 54 )
கலிகுலாவின் இறப்பிற்குப் பின்னர் அவரது தந்தைவழி மாமாவான கிளாடியஸ் மன்னர் பொறுப்பேற்கும்படி மெயக்காப்பாளர்களால் தூண்டப்பெற்றார். அவருக்கு போதிய அரசில் விழிப்புணர்ச்சி இல்லை என்று மற்றவர்கள் ஏளனம் செய்தாலும் அவர் தனது திறமையை நிரூபித்தார். கி.பி 43 இல் பிரிட்டன் மீது படையெடுத்தார்.அவர் சட்டம் இயற்றுவதில் அதிக கவனம் செலுத்தினார். அவரது நிலையினைத் தக்கவைத்துக்கொள்ள மிகவும் தீவிரமாக செயல்பட்டார். ஆதாலால் அரசியல் தலைவர்களின் இறப்பு அதிகமாக நடைபெற்றது. மேலும் அவர் மனவாழ்கையிலும் வெற்றிபெறவில்லை. அவர் 4 முறை திருமணம் செய்து கொண்டார். அவர் நீரோவை தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்தார். 13 அக்டோபர் 50 இல் க்ளடியாஸ் மரணமடைந்தார்.
நீரோ (கி.பி 54 -68 )
நீரோ அவரது 17 ஆம் வயதிலேயே ரோமப்பேரரசின் மன்னராகப் பொறுப்பேற்றார் . நீரோவும் அகஸ்டசின் நேரடி பரபரையில் வந்தவராவார்.55 களில் நீரோ மிகசிரந்தமுரையில் நிரவாக்த்தை கவனித்துக்கொண்டார்.கி.பி 64 இல் ரோம் நகரம் எரிந்தது. ரோம் நகரில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுகட்ட சட்டமியற்றினார். அதன் படி அதிக வரி வசூல் செய்யப்பட்டது. 67 , 68 களில் கிளர்ச்சியாளர்கள் நீரோவின் அதிக வரி வசூலிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். 68 இல் நீரோ ஒரு தேசிய குற்றவாளி என்று சட்ட சபையால் அறிவிக்கபட்டார். நீரோ அவரது சட்ட ஆலோசகர் எபப்ரோடிடோஸ் என்பவரின் உதவியால் தற்கொலை செய்து கொண்டார். நீரோவின் இறப்புடன் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை முடிவுக்கு வந்தது.
தொடர்பதிவு
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் முயற்சியாக இந்த தொடர்பதிவு திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமிருப்போர் மன்னாதி மன்னன் என்ற தலைப்பில் தொடரலாம்.
1)வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்.
2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.
3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.
இதைத்தொடர நான் அழைப்பது
தேவா அண்ணா.
KRP செந்தில் அண்ணா.
பின்குறிப்பு : இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 5 மன்னர்களில் அகஸ்டஸ் மன்னருக்கு மட்டுமே தமிழில் அதிக தகவல்கள் இருக்கின்றன. மற்ற 4 மன்னர்களைப்பற்றி அதிக தகவல்கள் தமிழில் இன்னும் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.
23 comments:
1st
2nd
தம்பி தமிழ்ல எழுதிருக்கலாமே. எனக்கு ஒண்ணுமே புரியலை. ஹிஹி
ஆஹா இங்கே History Class
நடக்குதுபா...
உண்மைய சொன்னா..,
எனக்கு தமிழ் மன்னர்களை
பத்தியே ஒழுங்கா தெரியாது..
Good work!
அருமையான பதிவு செல்வா.. தெரியாத பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.. நன்றி
நல்ல பதிவுதான், வரலாறு நமக்கு கொஞ்சம் தகராறு.
நேற்றைய வரலாறு
இன்றைய தகராறு!
இன்றைய தகராறு
நாளைய வரலாறு!!
நம்ம தொடர் பதிவுல இது வித்யாசமான முயற்சி மாப்ள :)
///நேற்றைய வரலாறு
இன்றைய தகராறு!
இன்றைய தகராறு
நாளைய வரலாறு!! ///
நம்ம அருணையும் இந்த லிஸ்ட்ல சேத்துடு :)
அறிந்துகொள்வதுதான் எனது தொழில் , கடமை ,இந்த அனைத்திற்கும் தீனி போட்டது உங்களின் பதிவு நன்றி நண்பரே .
நல்ல பதிவு....
நீ எழுதி விட்டாய்... நான் இன்னும் தேடலில் தான் இருக்கிறேன்...
வித்யாசமான தொடர் பதிவு .. வாழ்த்துக்கள்
தம்பி எனக்கு இவ்வளவு விவரமா வரலாறு வராது... முயற்சி பண்றேன்....
அறிந்துகொள்வதுதான் எனது தொழில் , கடமை ,இந்த அனைத்திற்கும் தீனி போட்டது உங்களின் பதிவு நன்றி நண்பரே .
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
வரலாறு ரொம்ப முக்கியம்...வாழ்த்துக்கள் செல்வா... நீ எழுதி விட்டாய். நான் இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்...
thedunga thedunga.....
ammam vera blogs kulla vanthuvitena???
enga nakkal,nayandi matumthaney erukkum....
நல்ல முயற்சி , நிறைய படிப்ப போல இருக்கு , குட்
புதுமையான முயற்சியில் தொடர்பதிவு..! தாங்கள் அளித்த தகவல்களும் அருமை...! தொடர்ந்து அசத்துங்க.. செல்வா...!
"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"
இடுகைக்கு
//ப.செல்வக்குமார் said...
///படிப்பறிவற்ற சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சில அடிப்படை அறிவு கூட அதிகம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை இதுதான் உண்மை .///
என்னைப் பொறுத்தவரை படிப்பிற்கும் அறிவிருக்கு சம்பந்தம் இல்லை ..
/// பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது .//
பயனுள்ள தகவல் அண்ணா ..!!//
பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.
அருமை தம்பி, நிஜமாய் நல்ல வரலாற்றை தொகுத்து இருக்கிறாய், கண்டிப்பாய் நீ நிறையா மன்னர்களை பற்றி தெரிந்து கொண்டு இருப்பாய் என நினைக்கிறேன் இப்பொழுது, நிஜமாய் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று சுவடுகளை இங்கே அழகாய் அடுக்கி வைத்துள்ளாய், நல்ல தொகுப்பு..வாழ்த்துக்கள் தம்பி..
இந்த அவசியாமான பதிவால் உன் வலைத்தளம் அழகான பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது ...மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் தம்பி...
(இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்..)செல்வக்குமார் அவர்களே.. உமாசங்கர் பற்றிய பதிவுகள் அனைத்திலும் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.. நேரமின்மை காரணமாக என்று தெரிவித்து இருந்தீர்கள்.. அத்தனை பின்னூட்டங்களோடு சேர்த்து உங்கள் பதிவை இரண்டு மூன்று வரிகளில் எழுதி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது..
பல புதிய விஷயங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொண்டேன்.. நன்றி...
\\அருண் பிரசாத் said...
நல்ல பதிவுதான், வரலாறு நமக்கு கொஞ்சம் தகராறு.
நேற்றைய வரலாறு
இன்றைய தகராறு!
இன்றைய தகராறு
நாளைய வரலாறு!!//
வழிமொழிகிறேன் :)
பயனுள்ள தொடர்பதிவு ஆரம்பித்தவர் மற்றும் தொடர்பவர் எல்லாருக்கும் வாழ்த்து்கள்.
Post a Comment