Saturday, August 14, 2010

பதிவுலகில் கோமாளி.!

 பெரிய வெங்காயத்த சின்ன சின்ன துண்டுகளா வெட்டினா கூட அத சின்ன வெங்காயம்னு யாரும் சொல்ல மாட்டாங்க..! (அட ச்சே .. தத்துவம் கூட மொக்கயாத்தான் வருது.. ) சரி விடுங்க .. நாம நேரா கேள்விக்குப் போய்டலாம். அதுக்கு முன்னாடி நம்ம சௌந்தர் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். மன்னிச்சிருங்க சௌந்தர். ஏன்னா போன பதிவுல என்னால மொக்க போட முடியல.. அதனால அதுல போட வேண்டிய மொக்கையையும் இதுல போட்டுடுவேனோ அப்படின்னு நினைக்கிறேன்.. முதல்ல ஒரு தத்துவம் சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுவும் அப்படி ஆகிடுச்சு..!!

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?
நீங்க எந்த பேர கேக்குறீங்க..? செல்வக்குமாரா., இல்ல கோமாளியா..? சரி எத கேட்டா என்ன ..? இரண்டுமே என் பேரு தான்..!

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?
என் உண்மையான பெயர் கோமாளி.! ஆனா ஏதாவது புனை பெயர் வச்சு எழுதலாம்னுதான் ப.செல்வக்குமார் அப்படின்னு வச்சுக்கிட்டேன். ஐயோ தப்பா சொல்லிட்டேன்.!?! மாத்தி படிங்க..!

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ..?
நான் ஒரு முறை சென்னை சென்றிருந்த போது கமல் சார் என்னைப் பார்த்துட்டார்.
அவரு நான் எங்க சினிமா உலகத்துக்கு வந்திடுவேனோ , அப்படி வந்திட்டா அவங்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைகாதுல்ல. அதனால அவர் என்னைப்பார்த்து " செல்வா நீ பதிவுலகத்துக்குப் போய்டு " அப்படின்னு சொன்னார். நானும் அப்ப இருந்து எல்லா விண்வெளி ஆராய்ச்சிப் புத்தகத்தையும் படிச்சேன். ஏன்னா பதிவுலகம்கறது பூமி மாதிரி இன்னொன்னு இருக்கும் அப்படின்னு நினைச்சேன். தேடினேன் தேடினேன் தமிழ்நாட்ட விட்டு கர்நாடகா வரைக்கும் தேடினேன். அப்ப பெங்களூர்ல இருந்த எங்க சம்பத் அண்ணன் தான் தம்பி பதிவுலகம்கறது வேற ஒண்ணு இல்லைப்பா .. அது இங்கதான் இருக்கு . அப்படின்னு சொல்லி ப்ளாக் பத்தி சொன்னதால இந்த கோமாளி உங்க முன்னாடி.! இல்லனா நீங்க தப்பிச்சிருப்பீங்க.. நான் இன்னும் தேடிகிட்டிருப்பேன்.

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?
இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சு அத பிரபலப் படுத்தி அதுல இருந்து இதைய பிரபலப்படுத்தலாம்னு நினைச்சேன். ஆனா அதைய எப்படி பிரபலப்படுதறது..? அத பிரபலப்படுத்த இன்னொரு ப்ளாக்.. இப்படியே என்னோட ப்ளாக்களின் எண்ணிக்கை 10000000000000 (இது எத்தனை ..?!?) ஆகிடுச்சு.சொன்னா நம்ப மாட்டீங்க. நான் கி.பி 1800 லையே ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்புறமா நான் 1987 ல பிறந்தேனா..? (ஒண்ணும் புரியலைல ) அப்புறமா பாக்குறேன் அத்தன ப்ளாக் ஆரம்பிச்சாலும் இன்னும் ஒரு போஸ்ட் கூட போடல. அப்பத்தான் கண்டுபிடிச்சேன். போஸ்ட் போடாம பிரபலம் ஆக முடியாதுன்னு. நாங்களும் யோசிப்போம்ல. அப்புறம் பிரபலம் ஆகுற ஐடியாவ விட்டுட்டேன். அப்புறம் நம்ம தேவா அண்ணன் வந்ததுக்கு அப்புறம் அவரோட சாட் status ல போட்டார், வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினார். KRP செந்தில் அண்ணாவும் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினார். அப்புறம் தமிழ்மணம் , தமிளிஷ் ல இணைச்சேன். இதபத்தி எனக்கு சொன்னது எங்க பக்க வீட்டு அண்ணா செந்தில்நாதன். அப்புறம் அப்படியே ....??!!!??

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
சொந்த விசயங்களை இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை . ஏன்னா நாம கற்பனை பண்ணி எழுதறதே இவ்ளோ மொக்கையா இருக்கு . அப்புறம் சொந்த விசயம்னா எப்டி இருக்கும். சரி சரி இப்டி கேட்டதுக்காகவே என்னோட சொந்த விசயங்கள இனிமேல் பகிர்ந்துக்கறேன் . (உங்க தலையெழுத்து ..??!!??)

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 நான் பொழுது போக்கிற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன். என்ன அப்படி எழுதினதுல உங்களோட நட்பு கிடைச்சது. இதவிட என்ன ஒரு மனுஷனுக்கு என்ன வேணும் ..?

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
ஒண்ணுக்கே முடியல ...? ஹலோ முடியலைன்னு சொன்னது எனக்கு நேரமில்லை அப்படின்னு அர்த்தம் கிடையாது .. ஒரு ப்ளாக் எழுதரதுனாலையே இந்த வெப் சர்வர்லாம்
சூடாகி இன்டர்நெட் ஜாம் ஆகிடுது. அத பார்த்த ஒரு குழந்த அந்த ஜாம எடுத்து சாபிட்டுடுது. அதனால இனிமேல் இந்த மாதிரி நடக்கக் கூடாது அப்படிங்கிற நல்லா எண்ணத்துல நான் ஒரு ப்ளாக்கே  போதும் அப்படின்னு நிறுத்திட்டேன் .
அப்புறம் எனக்கு quizfromtbts அப்படின்னு கூகுள் sms சேனல் ஒண்ணு இருக்கு.அதுல இந்தியா முழுக்க 4400 பயனாளிகள் இருக்காங்க.அதுல நான் Punchlins of companies , Abbreviations , Puzzles ,Employment news ..Etc  பத்தி sms அனுப்பிட்டிருக்கேன். ஆனா அது இந்தியாவுல மட்டும் தான் வேலை செய்யும். அதுல நீங்க இணையனும்னு நினைச்சா இங்க கிளிக் பண்ணுங்க .அதுக்காக ஒரு ப்ளாக் இருக்கு. அதோட லிங்க் இங்க . அது சும்மா ஒரு அறிமுகத்துக்காக.

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?
உங்க பதிவுகள படிக்கும் போது நம்மளுக்கு ஏன் இப்படியெல்லாம் கவுட்டி கவுட்டியா எழுத வரமாட்டேங்குது அப்படின்னு பொறாமையா இருக்கும்க.! ஆனா விதிவசத்தால என்னோட பதிவுகள நானே படிக்கிற துன்பம் நேர்ந்தால் கோபம் வரும்க. அன்னிக்கு ஒரு நாள் இப்படித்தான் எனக்கு பயங்கர பீலிங். என்னடா இப்டி மொக்கையா எழுதறயே ..? நல்லாவே எழுத மாட்டியா அப்படின்னு . அப்ப திடீர்னு என்னோட மனசாட்சி ஒண்ணு சொல்லுச்சு பாருங்க . " அடேய் .. நீ இப்படி மொக்கையா எழுதரதுனாலதான் அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படிங்கறது தெரியுது .. நீயும் நல்ல பதிவு எழுதினா அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படின்னு மத்தவங்களுக்குத் தெரியாமலே போடிடுமே . நீ அவுங்க பதிவு நல்ல பதிவா வரணும் அப்படிங்கறதுக்காக மொக்கையா எழுதற .அதனால நீ ஒரு தியாகி " அப்படின்னு சொல்லுச்சு .. ! அதிலிருந்து எனக்கு செம சந்தோசம் ..!

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?
விவேக் அப்படிங்கிற என்னோட நண்பர் முதல் கமெண்ட் போட்டார்.! அவர் ப்ளாக் எழுதறது கிடையாது ..!

10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?
பதிவுலகத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் .!! மின் அரட்டையில் இருக்காங்க.! நான் நினைச்ச மாதிரியே பதிவுலகம் இன்னொரு உலகம் தான் ..!!
கடைசியா உங்களுக்காக ஒரு மொக்கை 
இங்கிலீஷ்ல மொத்தம் எத்தன எழுதுன்னு தெரியுமா ..?
மொத்தம் அப்படிங்கிறது தமிழ் வார்த்தை . அது இங்கிலீஷ் கிடையாது.

அடுத்து இதை தொடர நான் அழைப்பது
1 .) திருஞானசம்பத் அண்ணா.
2 .) கலாநேசன் அவர்கள்.
3 .) எங்கள் சங்க செயலர் TERROR-PANDIAN(VAS).
4 .) விஜய் அண்ணா

42 comments:

அகல்விளக்கு said...

:)

நீங்க கலக்குங்க நண்பா....

S.M.Raj said...

// ப்ளாக்களின் எண்ணிக்கை 10000000000000 (இது எத்தனை ..?!?) //

// என்னோட சொந்த விசயங்கள இனிமேல் பகிர்ந்துக்கறேன் . (உங்க தலையெழுத்து ..??!!??) //

அவ்வ்வ்வவ்வ்வ் ............

அ.சந்தர் சிங். said...

'''நான் பொழுது போக்கிற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்'''
super appu.
enakku appadiye pullarikkuthu.

Jey said...

எல்லா பதிலிலும்... குசும்பு....:)

Praveenkumar said...

தங்களைப்பற்றியும், வலைப்பக்கங்கள் குறித்தும் கூடுதல் தகவல்கள் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி..! நீண்ட இடைவெளிக்குப்பிறகு புதிய பதிவு போட்டுள்ளேன். அவசியம் வாங்க.. கனிமொழியும், கணினிமொழியும் - ஓர் ஒப்பீடு. http://dpraveen03.blogspot.com/2010/08/blog-post.html

Unknown said...

//நான் பொழுது போக்கிற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன். //

நல்லாத்தான் எழுதறீங்க அப்பு ....

சௌந்தர் said...

தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்.///

நல்ல லட்சியம் நம்ம இருக்கும் போது என்ன கவலை கண்டிப்பா இந்த லட்ச்சியம் நிறைவேறும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன். //


லட்சியத்தை எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள்...

செல்வா said...

@ அகல்விளக்கு
நன்றி நண்பா ..

@ S.M.Raj
பயப்பாடாதீங்க ..! வந்ததற்கு நன்றி ..!

@ CS
விடுங்க விடுங்க ..!! இதெல்லாம் சப்ப மேட்டர் ..

@ Jey
ஐயோ .. நான் பதில் சொன்னாவே அப்படித்தான் ஆகிடுதுங்க ..!

@ பிரவீன்குமார்
இதோ வரேன் ..

@ கே.ஆர்.பி.செந்தில்
உண்மையாவே நல்லத்தான் எழுதறேனா ..? நன்றி அண்ணா ..!!

@ சௌந்தர்
கண்டிப்பா தலைவரே .. நம்ம கட்சில அதுக்குத்தானே மொக்கை வளர்ப்பு சங்கம்னு ஒண்ணு அமைச்சு கொடுத்திருக்கீங்க ..!!

Mohamed Faaique said...

http://faaique.blogspot.com/ நம்ம ஏரியாவுக்கும் கொஞ்சம் வங்க . புண்ணியமா இருக்கும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. Excelent wonderful mokkai

Unknown said...

தம்பி, இந்த பதிவை எழுதியதன் மூலம் மொக்கைப் பதிவர்களில் முக்கியப் புள்ளியாகிவிட்டாய். வாழ்த்துக்கள்

dheva said...

பதிவுல கோமாளிக்கு வாழ்த்துக்கள்....

வெறும் மொக்கையை மட்டும் போட்டுக்கொண்டிருக்காமல் சிரிப்போடு சேர்ந்து மனிதர்களை சிந்திக்கவும் நீ ஏந்தியிருக்கும் கேடயமும்....அதற்கான அரிதாரமும் அருமை தம்பி..


வாழ்த்துக்கள்...தம்பி...! வயிறு குலுங்க சிரித்து விட்டு சிந்திக்கவும் செய்கிறோம்!

என்னது நானு யாரா? said...

பங்காளி! உங்க பதிவு சூப்பரூ! அதுவும் தமிழ் இலக்கியத்தில ஒரு பிரிவா மொக்கை இருக்குன்னு நீங்க சொல்லி தான் தெரியுது. Schoolல்ல நான் படிக்கும்போது இத பத்தி யாரும் சொல்லி தர்ல பங்காளி. என்னை மிஸ் நல்லா ஏமாத்திடாங்கன்னு நினைகிறேன். எதோ உங்க புண்ணியத்தால தெரிஞ்சதே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

அருண் பிரசாத் said...

எலேய்... எல்லாம் ஓகெ, நடுவுல ஏதோ கூகுள் SMS அப்ப்டினு பீட்டர் விட்டயே அது என்ன?

விஜய் said...

தம்பி உன்னை பத்தி சொல்றதுல கூட உன் லட்சிய மொக்கைய அழகா தொகுத்து இருக்க

..வாழ்த்துக்கள் தம்பி...எப்படிப்பா இப்படி எல்லாம், நிஜமா நீ முயற்சிசெய்யுற வழி வேணா வேறாக இருக்கலாம், அனால் முயற்சி அழகா பண்ற, அதனால கண்டிப்பா நீ நினைச்சத அடைவ என நம்பிக்கை இருக்குப்பா ..

வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி said...

மாப்பு நம்ம டெர்ரர் இந்த தொடர எங்க எழுதுவார்,இந்த பின்னூட்டத்திலேயே அந்த பதிவு வெளிருமா ???

////அடேய் .. நீ இப்படி மொக்கையா எழுதரதுனாலதான் அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படிங்கறது தெரியுது .. நீயும் நல்ல பதிவு எழுதினா அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படின்னு மத்தவங்களுக்குத் தெரியாமலே போடிடுமே ////

எலே நூறு சதவீதம் நெசம் தான் லே :)

அப்பரம் என்னுமோ கூகுள் சானல்லாம் ஆரம்பிச்சிட்டதா சொல்லிருக்க அது சன் டீவிக்கு போட்டியா வந்துருமோ :)

நடத்துளே நடத்து

Jeyamaran said...

போதும் எனக்கு அழுகை வருது


*/என் உண்மையான பெயர் கோமாளி.! ஆனா ஏதாவது புனை பெயர் வச்சு எழுதலாம்னுதான் ப.செல்வக்குமார் அப்படின்னு வச்சுக்கிட்டேன். ஐயோ தப்பா சொல்லிட்டேன்/*

அப்பறம் இதுதான் உண்மை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா சுவாரசியமா எழுதறீங்க.

a said...

//
பெரிய வெங்காயத்த சின்ன சின்ன துண்டுகளா வெட்டினா கூட அத சின்ன வெங்காயம்னு யாரும் சொல்ல மாட்டாங்க
//
ஆரம்பமே அசத்தல் (மொக்கை) தத்துவம்...

எல் கே said...

//இங்கிலீஷ்ல மொத்தம் எத்தன எழுதுன்னு தெரியுமா ..?
மொத்தம் அப்படிங்கிறது தமிழ் வார்த்தை . அது இங்கிலீஷ் கிடையாது.
//

avvv

வெங்கட் said...

மன்னிசிக்கோப்பா...
நானும் நேத்து இருந்து
2 -3 தடவை கமெண்ட் போட
கம்பியூட்டரை On செஞ்சப்பவும்.,
கரெக்டா கரெண்ட் போயிடுச்சு..

இந்த ஆற்காட்டார்க்கு
யார் மேல கோவம்..??

உங்க மேலயா..?
என் மேலயா..?

பதிவு சூப்பர்..!!

CS. Mohan Kumar said...

Nice. Interesting.

ஜெட்லி... said...

உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்...

Riyas said...

கொஞ்சம் லேட்டாயிட்டு செல்வா

அட அட அட என்ன குசும்பு என்ன பதில் சூப்பர்
//இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன்//

இப்பிடி பிரிவருக்கா சொல்லவேயில்ல..

பெசொவி said...

நல்ல மொக்கையான விஷயங்களை சீரியஸ் பதிவில் தந்திருக்கிறீர்கள்..........................................சாரி, மாத்தி சொல்லிட்டேன், நீங்க சரியாபடிச்சுக்கோங்க.

கருடன் said...

@ஜில்
//மாப்பு நம்ம டெர்ரர் இந்த தொடர எங்க எழுதுவார்,இந்த பின்னூட்டத்திலேயே அந்த பதிவு வெளிருமா ???//

ஜில்லுலுலு... நம்ப வீட்டுகு வாடி செல்லம்... வீட்டுகு வழி

Unknown said...

நம்ப வீட்டுகு வாடி செல்லம்--varamaten..vantha neenga adipeenga...

Unknown said...

பதிவு--மொக்கை
சாரி, மாத்தி சொல்லிட்டேன்
சூப்பர்..!!

Unknown said...

தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்'''---naasama pooga....:))))

செல்வா said...

@ Mohamed Faaique இதோ வந்திட்டேன் ..!!
@ ரமேஷ்
ரொம்ப நன்றி அண்ணா ..!!
@ கலாநேசன்
அட இதுக்குத்தானே இதனை கஷ்டப்பட்டேன் ..!!
@ தேவா
நன்றி அண்ணா ..!!
@ என்னது நானு யாரா .?
கண்டிப்பா உங்களை ஏமாத்திட்டாங்க ..
@ முத்துலட்சுமி
வருகைக்கு நன்றி ..
@ அருண் பிரசாத்
அடிக்கடி அப்படித்தான் ..!!
@ வஇசி
அட பாவமே .. உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா ..
@ ஜில்தண்ணி
மாப்பி அவருக்கு ப்ளாக் இருக்கு ..!
@ ஜெயமாரன்
அப்படியா ..?
@ ஜ்யோவ்ராம் சுந்தர்
வருகைக்கு நன்றி நண்பரே ..
@ வழிப்போக்கன் - யோகேஷ்
ரொம்ப நன்றிங்க .. இந்த தத்துவத்த நீங்களாவது கண்டுக்கிடீன்களே ..
@ LK
ஆமா ..
@ வெங்கட்
விடுங்க அண்ணா.. ஆற்காட்டார் என்னமோ செய்யட்டும்..
@ மோகன் குமார்
வாங்க ..
@ ஜெட்லி...
எல்லோரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல .
@ ரியாஸ்
அந்த பிரிவு உங்களுக்குத் தெரியாதா ..?
@ பெ.சொ.வி
சரி சரி நான் சரியா படிச்சிட்டேன் .!!
@ TERROR-PANDIYAN(VAS)
வர சொல்லிட்டேன் ..
@ சிவா
அட சும்மா பயப்படாம போங்க .. TERROR நம்ம ஆளுதான் ..

மங்குனி அமைச்சர் said...

komaali, nallaa irukku , valakkam pola kalaachchu irukka

வால்பையன் said...

// தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்'''//


என்னையும் சேர்த்துகோங்க அப்பு!

Chitra said...

// தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்//


...... வாழ்க உமது சேவை! கலக்குங்க!

Unknown said...

etho vanthuviten......என்னையும் சேர்த்துகோங்க அப்பு!


ellati attahtai kalaichupuduven.........

ஜீவன்பென்னி said...

//நான் பொழுது போக்கிற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்.// தொடரட்டும் உன் மொக்கை. நல்லா இருக்கு.

இம்சைஅரசன் பாபு.. said...

/தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன்//
பெஸ்ட் ஆப லக்

சாமக்கோடங்கி said...

அடங்கப்ப்பா... இது உலக மகா மொக்கடா சாமி....

வினோ said...

nalla irukku Selva.....

'பரிவை' சே.குமார் said...

அன்பின் நண்பரே...
வலைச்சரத்தில் இன்று நான் பகிர்ந்துள்ள சிறுகதை சிற்பிகள் என்ற இடுகையில் உங்களது கதை குறித்துப் பகிர்ந்துள்ளேன்.
வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_19.html

நன்றி.

நட்புடன் சே.குமார்
http://vayalaan.blogspot.com

மதன் said...

வந்துட்டேன், எனக்கு ஒரு சந்தேகம், பிளேட்னா என்னா மொக்கைனா என்ன? ஏன்னா இரண்டு வார்த்தைளும் எதிர்பதம், ஆனா ஒரே அர்த்தத்த குறிக்குது....