Tuesday, October 19, 2010

கி.பி.2060-௦௦ல் உலகம்

முன்குறிப்பு : 2060 ல உலகம் எப்படி இருக்கும் அப்படின்னு என்னோட கற்பனைங்க.! இது என்னோட கற்பனை மட்டும் இல்லை ., விருப்பமும் கூட.!

*.சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறத்தலாக இருக்கும் கண்ணாடிப்பைகளுக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு மக்காத இந்தக் கண்ணாடிப்பைகள் ( POLY PACKS ) அறவே ஒழிக்கப்பட்டன.!

*.இரண்டாம் வகுப்புப் பாடத்தில் பிச்சைக்காரர்கள் அப்படின்னு ஒரு பாடம் வச்சு அதுல " பிச்சைக்காரர்கள் அப்படின்னு சிலர் இருந்தாங்க." என்று படத்தைக் காட்டி வரலாற்றுப்பாடம் நடத்திட்டு இருக்காங்க.!

*.அரசியல் என்பது ஒரு தொழிலாக இல்லாமல் சேவையாக செய்யப்பட்டது. மக்களின் அடிப்படித் தேவைகள் அனைத்தும் நிறைவேறியிருந்ததால் சேவை என்பது கூட தேவை இல்லாமல் போனது. ஆதலால் நாடுகளுக்கான பிரதமர்களும் , முதலமைச்சர்களும் வேலைவாய்ப்பு அலுவகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.!

*.மக்களின் நாகரீகப் பழக்கங்களால் சாலைகளில் எச்சில் துப்புவது , சிறுநீர் கழிப்பது போன்ற தவறுகள் அறவே இல்லாமல் சாலைகள் அழகாகவும் , சுத்தமானதாகவும் காட்சி அளிக்கிறது.!

*.சுத்தமான சூழல் , மக்களின் தூய்மையான பழக்க வழக்கங்களால் நோய்களே இல்லாத சமுதாயம் உருவானது. இதனால் காலப்போக்கில் மருத்துவமனைகளும் , மருந்துக்கடைகளும் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.


*.மதுவினால் ஏற்படும் தீங்கினை மக்கள் புரிந்து கொண்டதால் நாடெங்கிலும் இருந்த மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன.!


*.புகையிலை , பீடி , சிகரெட் போன்ற போதைப்பொருட்களை  மக்கள் முழுவதுமாக கைவிட்டிருந்தனர்.!


*.உலகத்தீவிரவாத இயக்கங்கள் அமைதி வழிக்குத் திரும்பியதால் பாகிஸ்தான் , பாலஸ்தீனம் , ஈரான் , ஈராக் போன்ற நாடுகளில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.!


*.தீவிரவாத அச்சுறத்தல்கள் இல்லாததால் உலகநாடுகளில் ராணுவம் மற்றும் காவல்துறைகளுக்கு செலவிடும் பெரும்பாலான தொகை நாட்டின் கட்டுமானப் பணிகளுக்கு செலவிடப்பட்டதால் சாலை வசதிகளும் இதர அத்தியாவசிய தேவைகளும் எளிதாக நிறைவேற்றப்பட்டன.!


*.சுவர்களில் சுவரொட்டிகள் என்பது எங்கேயும் கிடையாது. மேலும் இங்கே நோட்டீஸ் ஒட்டாதீர் , மீறினால் தண்டிக்கப்படுவீர் என்கின்ற வாசங்களும் எந்த சுவற்றிலும் எழுதப்படவில்லை.!

*.இலங்கையில் பேரமைதி நிலவி வருகிறது. தமிழன் ,சிங்களவன் என்கின்ற மொழிப்பிரசினைகள் அறவே நீங்க அனைவரும் மனித குலத்தவர் என்கின்ற ஒற்றுமை வளர்ந்ததால் அனைவரும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.!

*.பெரும்பாலும் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக அதிக தீங்கு விளைவிக்காத எதிர்ப்புப் பொருட்களை பயன்படுத்துவதால் புதிய புதிய நோய்கள் எதுவும் பரவுவதில்லை.!

*.மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது , தொலைபேசியில் பேசியபடியே ஓட்டுவது மற்றும் கவனக்குறைவுடன் வாகனகளை இயக்குவது  போன்ற தவறுகளை விடுத்து மக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிப்பதால் சாலை விபத்துகள் பெரும்பாலும் குறைந்து விட்டன.!

*.உலக நாடுகளில் இருந்த அனைத்து அணு ஆயுதங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதால் உலக அமைதி நிலைநிறுத்தப்பட்டது.!


*.ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் விவசாயத்திற்கு பெரும் ஊறு விளைவித்த வெட்டுக்கிளிகள் முழுவது அழிக்கப்பட்டு , மழை அதிகம் பெய்ததால் விவசாயம் செழித்து பசி , பட்டினி என்கிற வார்த்தைகளே இல்லாமல் மகிச்சியாக இருக்கின்றனர்.!


*." அவன் கூப்ட்டாலும் இலவசம்தான்., ஆனா கூட மிஸ்டு விடுறான்.! " என்ற படியே போய்க்கொண்டிருதார் ஒரு இளைஞர்.!


*.வட கொரியா , தென் கொரியா எல்லைப்பிரச்சினைகள் தீர்ந்து இரு நாடுகளும் நட்பு நாடுகளாகின.!


*.இந்திய நதிகள் இணைக்கப்பட்டதால் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்ட கிராமங்கள் பயனடைந்தன. மேலும் அக்கிராமங்களில் விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது.!


*.உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வல்லரசாக மற்றம் கண்டிருந்தன.! 


*.தொலைக்காட்சிகள் முழுநேர பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்ற நிலை மாறி சில நல்ல நிகழ்சிகளும் வழங்கப்பட்டன. திரைப்படங்களில் வெட்டுவதும் குத்துவதும் அறவே இல்லாமல் நகைச்சுவைத் திரைப்படங்களும் குழந்தைகளுக்கான திரைப்படங்களும் பெருமளவில் தயாரிக்கபடுகின்றன.!


*.இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்ததும் வேலை தேடிச் செல்லாமல் விவசாயம் செய்வது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.!


*."நல்லபடியா போய் சேர்ந்துட்டியா.? " என்று ஒரு தாய் செவ்வாய்க்கு வேலைக்குச் சென்ற தனது மகனிடம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.!


*.உலக அளவில் புகழ்பெற்ற பிரபல ரேடியோ ஜாக்கி செல்வா தனது கோமாளி ப்ளாக்கிற்காக மொக்கையும் நானும் என்ற பதிவினை எழுதிவிட்டு உறங்கச்சென்றவர் படுக்கையிலேயே உயிரிழந்தார். இருந்த போதிலும் " உயிர் மீட்பு " என்கிற தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்தவுடன் " இயற்கைக்கு எதிராக எதுவும் செய்திடவேண்டாம்.! " என்று கேட்டுக்கொண்டதால் அந்த தொழில்நுட்பம் திரும்பப்பெறப்பட்டு உயிரிழந்தார். அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.!




இப்படி ஒரு சின்ன கற்பனை பண்ணி பாருங்களேன் . கற்பனைதான் காசா பணமா பண்ணி பாருங்க : 
பாலிதீன் குப்பைகள் இல்லாத , சுவர்களில் ஒட்டப்பட்டு பாதி கிழிந்த நிலையில் இருக்கும் சுவரொட்டிகள் இல்லாத , தெருவோரங்களில் சிறுநீர் , எச்சில் துப்பாத தூய்மையான ஒரு நகர்த்த கற்பனை பண்ணி பாருங்க. அதுல நீங்க காலைல எந்திரிச்சு பேப்பர் படிக்கும் போது ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு , நைஜீரியாவில் பசிக்கொடுமையால் 8 பேர் உயிரிழப்பு , இந்தியா எல்லை ஓரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் இது மாதிரியான செய்திகள் இல்லாம பேப்பர் படிக்கிறீங்க. அப்புறம் வேலைக்கு கிளம்புறீங்க. உங்க பக்கத்துல இந்தியப் பிரதமர் அதே பஸ்சுல வர்றார்.அவர பார்த்து கூட நீங்க எதுவுமே சொல்லல. அப்ப உங்க மனசுல ஒரு பழைய காட்சி வருது., அது என்னன்னா லோக்கல் MLA ஒருத்தர் ஒரு கார்ல போறாரு , அவருக்கு முன்னாடி 10 காரு , பின்னாடி 10 காரு." இந்த காட்சிக்கும் இப்ப நீங்க பாக்குறதுக்கும் இருக்குற வித்தியாசத்த நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறீங்க.! நீங்க போற வழில இருக்குற TASMAC கடைகள் மூடப்பட்டு இருக்கு., கடைகளில் சிகரட் மற்றும் இதர புகயிலைப்பொருட்கள் வாங்குவதற்கு ஆள் இல்லாம தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. டிராபிக் சிக்னல்ல போலீசோ இல்ல இதர ஆட்களோ இல்லாம இருந்தாலும் எல்லோரும் அமைதியா சிக்னல் பார்த்து வண்டி ஓட்டுறாங்க. அப்படியே வேலைக்குப் போறீங்க. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது அப்படியே கோவில்பக்கம் போறீங்க , அங்க பிச்சைக்காரகள் இல்ல. நிம்மதியா சாமி கும்பிட்டுட்டு வரீங்க. வீட்டுக்கு வந்து டிவி போட்டதும் தொடர்கள் எதுவும் இல்லாம சில நல்ல நிகழ்சிகள் பாக்குறீங்க.. நிம்மதியா படுத்து தூங்குறீங்க.! எப்படி இருக்கு ..? சூப்பரா இருக்குள்ள ..?!

நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!௦


பின்குறிப்பு : இந்த மாற்றங்கள் எல்லாம் 2040 லயே வரணும்னு எழுதினேன். ஆனா கடைசி பத்தி எழுதிட்டு பார்த்தேன் 2040 ல எனக்கு 53 வயசு தான் ஆகிருந்தது. அதனால ஒரு 73 வரைக்குமாவது இருக்கணும்னு 2060 அப்படின்னு எழுத வேண்டியதா போச்சுங்க.! ஹி ஹி ஹி..



48 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//லகத்தீவிரவாத இயக்கங்கள் அமைதி வழிக்குத் திரும்பியதால் பாகிஸ்தான் , பாலஸ்தீனம் , ஈரான் , ஈராக் போன்ற நாடுகளில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.!//

அப்ப விஜயகாந்த், அர்ஜுனுக்கு யாரு வேலை கொடுப்பா?

Unknown said...

meeeeeeeeee the first..

raja kalakita po...

apdul kalam chonatha nerai vethitenga..

ethuku na tamila coments pottey aganum..

my happy greetings to u..

hats up
and
salute....

Unknown said...

கற்பனைகள் ரொம்ப நல்லாயிருக்கு செல்வா.. என்ன இவ்வளவு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க இப்பொல்லாம்..

Unknown said...

நீங்க சொன்ன மாற்றங்க எல்லாம் பூமியிலதான!!

Unknown said...

///*." அவன் கூப்ட்டாலும் இலவசம்தான்., ஆனா கூட மிஸ்டு விடுறான்.! " என்ற படியே போய்க்கொண்டிருதார் ஒரு இளைஞர்.!///

இது கலக்கல்..

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கற்பனை ஆனா நடக்குமா...

செல்வா said...

//அப்ப விஜயகாந்த், அர்ஜுனுக்கு யாரு வேலை கொடுப்பா?//

மேல மேல படிங்க ., போலீசுக்கு கூட வேலை கிடையாது ..? ஹி ஹி ஹி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!௦

//
mm

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அதனால ஒரு 73 வரைக்குமாவது இருக்கணும்னு 2060 அப்படின்னு எழுத வேண்டியதா போச்சுங்க.! ஹி ஹி ஹி..

/

ayyo

செல்வா said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அதனால ஒரு 73 வரைக்குமாவது இருக்கணும்னு 2060 அப்படின்னு எழுத வேண்டியதா போச்சுங்க.! ஹி ஹி ஹி..

/

ayyo///

இது கூட உங்களுக்குப் பொறுக்கலையா ..?

மதன் said...

சூப்பர் செல்வா அருமையான கற்பனை, அப்படியே தமிழ் டிவிகள்ல ‘திரைக்கு வந்து சில நாட்களே ஆன சூப்பர் ஹிட் திரைப்படம் உங்கள் போங்கு டிவியில்’னு எந்த போண்டா வாயானும் கி.பி 2060வது சொல்லலனு சொல்லி இருந்தியினா இன்னும் சந்தோச பட்டிருப்பேன்....

நிச்சயம் நடக்கும் நம்பிக்கையோடு இருப்போம்....

இம்சைஅரசன் பாபு.. said...

கற்பனை நல்ல இருக்கு செல்வா ........இது எல்லாம் நடக்கும் என்கிற ......சரி காசா பணமா நானும் கொஞ்சம் கனவு காண்கிறேன் ..............

Ramesh said...

அருமையான கற்பனை செல்வா...

சுவரொட்டிகளே இல்லைன்னா... ஈரோடு வாழ் இளைஞர்கள்லாம் கொஞ்சம் காஞ்சி போயிடுவீங்களே... உங்க ஊர்ல திரைப்பட சுவரொட்டிகள்லாம்..எந்த ரேஞ்சுல இருக்குன்னு சொல்லனுமா என்ன..

செல்வா said...

//உங்க ஊர்ல திரைப்பட சுவரொட்டிகள்லாம்..எந்த ரேஞ்சுல இருக்குன்னு சொல்லனுமா என்ன.. //

ஐயோ ., அந்தக் கொடுமைக்காகத்தான் வருங்காலமாவது நல்லா இருக்கட்டும்னு இப்படி ஒரு கற்பனைங்க..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//மதுவினால் ஏற்படும் தீங்கினை மக்கள் புரிந்து கொண்டதால் நாடெங்கிலும் இருந்த மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன.!

*.புகையிலை , பீடி , சிகரெட் போன்ற போதைப்பொருட்களை மக்கள் முழுவதுமாக கைவிட்டிருந்தனர்//

இந்த ரெண்டும் தான் கஷ்டமாக இருக்கிறது நம்ம நரி ,terror ,ரமேஷ் எல்லோரும் வருத்த படுறாங்க .........

அன்பரசன் said...

//நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.//

i like this

சௌந்தர் said...

அப்போது கோமாளி என்ன ஆனார் சொல்லவே இல்லையே

சௌந்தர் said...

12 பேர் உயிரிழப்பு , நைஜீரியாவில் பசிக்கொடுமையால் 8 பேர் உயிரிழப்பு , இந்தியா எல்லை ஓரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் இது மாதிரியான செய்திகள் இல்லாம பேப்பர் படிக்கிறீங்க./////

அப்பறம் எதுக்கு பேப்பர் படிக்கணும்

சௌந்தர் said...

*/`~"':>!@#$%^&*()_+_)(*(&^%%$%^%$%$^%$&****^$#^&*(&%%&^&&^$&*((*&^%$&(()(*$&*(&*

2060 இப்படி ஒரு மொழி புதுசா இருக்கும் அதில் தான் comment போடுவார்கள்

செல்வா said...

//
*/`~"':>!@#$%^&*()_+_)(*(&^%%$%^%$%$^%$&****^$#^&*(&%%&^&&^$&*((*&^%$&(()(*$&*(&*

2060 இப்படி ஒரு மொழி புதுசா இருக்கும் அதில் தான் comment போடுவார்கள் //

அட அட .., என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு ..!!

Unknown said...

antha time tamila entha oru bloggersum erukkamatangala?

dheva said...

நடக்குதோ நடக்கலியோ செகண்ட்ரிப்பா...


கடைசி பின்குறிப்புல சொல்லியிருக்கியே.. 76 வயசு வரைக்கும் நீ இருக்கனும்னு.....அங்க தான் ஸ்பெசல் பஞ்ச்....!

ஆமா அப்புறமா காலையில நீயா எழுந்திட்டியா, இல்ல அம்மா எழுப்பி விட்டாங்களா....இல்லா அலாறமா....????(Such a lengthy dreamல அதான் கேட்டேன்....ஹா..ஹா..ஹா..)

அருண் பிரசாத் said...

செல்வா மொக்கை உலக அளவில் தடை செய்யப்பட்டதுன்னு ஒரு வரி சேர்த்து இருக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

யாரு பெத்த புள்ளையோ , பாவம் மூளை கலந்கிபோயி கிடக்குது , யாராவது கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்கப்பா

செல்வா said...

///செல்வா மொக்கை உலக அளவில் தடை செய்யப்பட்டதுன்னு ஒரு வரி சேர்த்து இருக்கலாம் //

இந்த மாதிரி எதாச்சும் சொல்லுவீங்க அப்படின்னுதான் கடைசில மொக்கையும் நானும் அப்படின்னு பதிவு எழுதுறேன்னு சொன்னேன் .

கருடன் said...

hyyo hyyo
unkalaala mudiyaathathaa enna
ethavathu podunka na
no problem

எஸ்.கே said...

செம அருமை! இது மாதிரி நடந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்! பார்ப்போம்! காலம் மாறும்!

Praveenkumar said...

கற்பனையா இருந்தாலும் ஒருசிலவற்றை தவிர அனைத்தும் சாத்தியமே..!! ஆனால் 2060 என்பது நிச்சயம் நடக்காது. கணினியின் தொழில்நுட்ப தாக்கத்தை விட்டுடீங்களே..!! பேருந்தில் 100க்கு 90 பேர் லேப்டாப்பும் கையுமாகத்தான் இருந்தார்கள். அதிலேயே பேசினார்கள். இ-டிக்கட் மூலமும் பேருந்தில் உள்ள ஏ.டி.எம் மூலமும் மக்கள் டிக்கட் எடுத்து பயணம் செய்தனர். நடமாடும் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பில் முன்னாள் மொக்கை பிலாக்கர் செல்வா நேயர்களிடம் தனது பதிவுகளின் மொக்கை அனுபவங்களை அவர்கள் காதில் ரத்தம் வருமளவுக்கு புதிய புதிய மொக்கை கருத்துகளை சொல்லி மாபெரும் மொக்கை போட்டு கொண்டிருந்தார். நேயர்கள் பயந்து ஓடினாலும் இமெயில் சாட் மூலம் இவரே வலிய அழைத்து கடி ஜோக் சொல்ல.. அனைவரும் துண்டை காணோம் செல்லை காணோம் லேப்டாப் காணோம் என அலறியடித்து ஓடினர்.
எப்படியிருக்கு பாருங்க..!! இவைகள் நடக்குமா என பொறுத்தியிருந்து பார்ப்போம்...??!!! இவைகள் எமது கற்பனை செல்வாவை கலாய்க்க அல்ல..!! என்னுடைய ஆசையும் அவர் டி.வி ரேடியோ தொகுப்பாளர் ஆகனும் என்பதே..! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் செல்வா..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/

இம்சைஅரசன் பாபு.. said...

//மதுவினால் ஏற்படும் தீங்கினை மக்கள் புரிந்து கொண்டதால் நாடெங்கிலும் இருந்த மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன.!

*.புகையிலை , பீடி , சிகரெட் போன்ற போதைப்பொருட்களை மக்கள் முழுவதுமாக கைவிட்டிருந்தனர்//

இந்த ரெண்டும் தான் கஷ்டமாக இருக்கிறது நம்ம நரி ,terror ,ரமேஷ் எல்லோரும் வருத்த படுறாங்க .........//

எலேய் அடுத்த இலைக்கு பாயாசமா?

ஜில்தண்ணி said...

எலே 2020-ல் உலகம் அழிகிற மாதிரி முந்தா நேத்திக்கு மொத நாள் காலையில கனவு வந்துச்சி :)

Chitra said...

நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!

...Good message.. :-)

Kousalya Raj said...

நிறைய சிரிக்கவும், சிந்திக்கவும் வச்ச பதிவு செல்வா....!! கடைசில மெசேஜ் சூப்பர்.

Anonymous said...

நீங்க எழுதின பதிவு ஓபனாக மாட்டேங்குது. கமெண்ட் ஏரியாதான் தெரியுது.

ஆண்-பெண் உறவைப்பற்றி நீங்க என்ன எழுதினீர்கள் என்று தெரியவில்லை.

2060களுக்கப்பால், இருபாலர் உறவில் பெரிய மாற்றங்கள் பெருகும்.

பெண்கள் தன்னிச்சையாக வாழ்வார்கள். குழந்தைகளைபெற்றாலும். ஒருவன் ஒருத்தியென்பது மறைந்து விடும். விவாகரத்து என்பது சாதாரணமாகி விடும்.

இதனால், சமூகத்தில் பெரும்மாற்றங்கள் உருவாகும். பெண்கள் மீது வன்முறைகள் பெருகும்.

Anonymous said...

தமிழ்கலாச்சாரம் என்பது காலவாதியாகி விடும். தமிழகத்தில் பிற கலாச்சார மக்கள் பெருகி, இன்று காணும் கலாச்சாரம் பிறகலப்போடு மாறிவிடும். தமிழ் நிற்காது பேச்சில். அது மிகவும் உருமாறிவிடும்.

பிறமானில மக்களோடு இரத்தகலப்பினால், தமிழரின் முக அமைப்பில் மாற்றம் வரும். ஆனால் இது நடக்க ப்ல நூற்றாண்டுகள் ஆகும்.

எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ், தமிழர் என்பது மாறிவிடும்.

Madhavan Srinivasagopalan said...

//நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!//

Great sentence with Great words.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பல்லாம் மூணாவது ரவுண்ட தாண்டுனாலே இப்பிடி ஆயிடுது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அப்போ பிட்டு படம் வருமா, வராதா? எவ்வளவு முக்கியமான மேட்டரு, கண்டுக்காம விட்டுபுட்டீங்க?

வினோ said...

நல்ல சிந்தனைகள் செல்வா....

Anonymous said...

ம்.. கனவு மெய்ப்படட்டும் தம்பி :)

thiyaa said...

கனவுகள் அருமை

R.Santhosh said...

இவ்ளோ நடக்குறது பெரிய விஷயம் இல்ல தம்பி... நீ அப்போ உயிரோட இருக்க மாட்டல்ல... அதுதான் அப்போதைய நல்ல விஷயம். உன்னோட தினம் ஒரு மொக்கைல இருந்து மக்கள் தப்பிச்சு இருப்பாங்க..... முக்கியமா.. மனிதன் எப்புடி வாழக்கூடாதுன்னு
உன்னை உதாரணமா காட்டிதான்... பாடம்லாம் எடுப்பாங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

கற்பனையாக இருந்தாலும் . நடந்தால் நன்றாக இருக்கும்.. அனால் ...

Riyas said...

WOW... SUPERB.. POST SELVA.. அருமையான கற்பனை..

//*." அவன் கூப்ட்டாலும் இலவசம்தான்., ஆனா கூட மிஸ்டு விடுறான்.! " என்ற படியே போய்க்கொண்டிருதார் ஒரு இளைஞர்//

அது யாருப்பா.. உங்க பேரனா ஹா ஹா

நடந்தால் யாவும் நலமே

தமிழ் செல்வன் இரா said...

// * நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!௦ *//

நல்லதே நடக்கும்.!

ஜீவன்பென்னி said...

நல்லாருக்குப்பா.........அதீதமான கற்பனை தான். ஆனா நடந்தா நல்லாயிருக்கும்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இந்த மாற்றங்கள் எல்லாம் 2040 லயே வரணும்னு எழுதினேன். ஆனா கடைசி பத்தி எழுதிட்டு பார்த்தேன் 2040 ல எனக்கு 53 வயசு தான் ஆகிருந்தது. அதனால ஒரு 73 வரைக்குமாவது இருக்கணும்னு 2060 அப்படின்னு எழுத வேண்டியதா போச்சுங்க.! ஹி ஹி ஹி///

ஹா ஹா ஹா.. இது செம... சூப்பர்

எனக்கு மயக்கமே வந்திருச்சு இத படிச்சு... இப்படியெல்லாம் நடந்தால் சொர்க்கபுரி தாங்க.. :-)))

Speed Master said...

நல்லாயிருக்கு

உலக அளவில் புகழ்பெற்ற பிரபல ரேடியோ ஜாக்கி செல்வா தனது கோமாளி ப்ளாக்கிற்காக மொக்கையும் நானும் என்ற பதிவினை எழுதிவிட்டு உறங்கச்சென்றவர் படுக்கையிலேயே உயிரிழந்தார். இருந்த போதிலும் " உயிர் மீட்பு " என்கிற தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்தவுடன் " இயற்கைக்கு எதிராக எதுவும் செய்திடவேண்டாம்.! " என்று கேட்டுக்கொண்டதால் அந்த தொழில்நுட்பம் திரும்பப்பெறப்பட்டு உயிரிழந்தார். அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.!