Tuesday, October 12, 2010

அப்பா.!

முன்குறிப்பு : காதல்ல மட்டும்தான் அன்பு பொங்கி வழியுமோ , மத்த உறவுகள்ள பாசம் வழியாதா..? இங்க ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான பாசத்தைப் பாருங்க. இதப் படிச்சு முடிச்சதும் உங்க அப்பாவையோ மகனையோ நினைச்சீங்கன்னா அதுவே போதுமானது.!
இது சிறுகதை கிடையாதுங்க ., அதனால சிறுகதைல இருக்கிற தொடக்கம் ,முடிவு இதெல்லாம் இருக்காது.!

ஐப்பசி மாதம் அடைமழை பெய்யும் என்பதை நிரூபித்துகொண்டிருந்தது வானம் . இந்த அடைமழையிலும் துரு துருவென அங்கும் இங்கும் ஓடி ஆடி தனது குறும்புத்தனத்தைக்  காட்டிக்கொண்டிருந்தான் எழில். இரண்டு வயது சிறுவன்.! அவனைத் துரத்திக்கொண்டு

" டேய் , மழைக்குள்ள போகாதடா.! " என்று கத்தியவாறு பின்தொடர்ந்து கொண்டிருந்தான் அவனது தந்தை ரகு. மழையில் நனையத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகனை அலேக்காக தூக்கி முகத்தோடு ஒட்டி முத்தமிட்டவாறே " மழைக்குள்ள போனீனா ஊமாண்டி வந்திடும் .! அப்புறம் இந்த கையப் பிடிச்சு கடிச்சு வச்சிடும் " என்று அவனது பிஞ்சுக் கைகளை லேசாக வாய்க்குள் வைத்து கடிப்பது போல விளயாட்டுக்காட்டிக்கொண்டே வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டான்.

" இத்தன குறும்பு பண்ணுறான் ., இவன எப்படித்தான் வளர்க்கப்போரோமோ..? இவன எங்க அப்பா என்னை வளர்த்த மாதிரி வளர்க்கணும்.! "

" எப்பபார்த்தாலும் எங்கப்பா வளர்த்த மாதிரி எங்கப்பா வளர்த்த மாதிரி அப்படின்னு சொல்லுறீங்களே , அப்படி எப்படித்தான் வளர்த்தாரு..? " என்றாள் ரகுவின் மனைவி சாபியா.

" அத சொன்னா சொல்லிட்டே போகலாம்., அவரு என்னை எவ்ளோ லவ் பண்ணினாரு தெரியுமா ..? "

" எல்லா அப்பாக்களும்தான் தன்னோட புள்ளைங்களா லவ் பண்ணுறாங்க ., இதுல என்ன புதுசு..? "

" அவரு அடிக்கடி எங்கிட்ட ஒண்ணு சொல்லுவாரு .. எனக்கு அப்ப இரண்டு வயசு இருக்குமாம் ., ஒரு நாள் தொட்டில்ல தூங்கிட்டு இருந்தேனாம்., அப்ப அவரு வந்து என்ன தூக்குரக்காக குனியும்போது அவரோட முகத்துல நான் ஒண்ணுக்கு அடிச்சு விட்டுட்டேனாம் .! இதைய அடிக்கடி சொல்லி சிரிப்பார். அது மட்டும் இல்ல , பொதுவா நான் கேக்குறத எல்லாம் வாங்கித்தர மாட்டார். ஏன்னா கேக்குறத எல்லாம் வாங்கித்தந்தா எனக்கு ஏமாற்றம் அப்படினா என்ன அப்படிங்கிறதே தெரியாம போய்டும் அப்படிங்கறதுக்காக தேவையானத மட்டுமே வாங்கித்தருவார் .அப்பவெல்லாம் அவரு மேல எனக்கு கோவம் வரும். ஆனா அவர வெறுக்க முடியாது . எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பாரு. கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாரு. என்னைய அதிகமா அடிச்சது கூட கிடையாது ,, ஆனா அதுக்காக நான் எது செஞ்சாலும் எடுத்து கொஞ்ச மாட்டார். சில சமயங்கள்ல அடிச்சிருக்கார். ஆனா அவரு எத்தன தடவ அடிச்சார் அப்படிங்கறத விரல்விட்டு  எண்ணிறலாம் .. ஒருதடவ நான் பக்கத்து வீட்டுல இருந்து ஒரு பந்த திருடிட்டு வந்துட்டேன் அப்ப அடிச்சார் ., அப்புறமா நான் பள்ளிகூடத்துல பக்கத்துல இருந்த ஒருத்தன அடிச்சிட்டேன் .. அப்ப ஒரு தடவ அடிச்சார் .. அதுவும் கைதான் வேகமா வரும் .. ஆனா வலிக்காது .. வலிக்காட்டியும் கூட நான் அழுவேன். அப்புறம் என்ன எடுத்து கொஞ்சுவாரு , கடைக்கு கூட்டிட்டு போய் நான் கேட்டது எல்லாம் வாங்கித்தருவார்.
அதுவும் நான் 5 வது முடிக்க வரைக்கும் தான் என்னைய அடிச்சிருப்பார்.
அதுக்கு அப்புறமெல்லாம் கையை கூட ஓங்க மாட்டார்.! "

" இது எல்லா அப்பாவும் பண்ணுறது தானே ..? "

" உண்மைதான் ., ஆனா இதுக்கு அப்புறம் எங்க அப்பா வித்தியாசமானவர்..! "

" அப்படி என்ன வித்தியாசம்...? "

" நிறைய இருக்கு . நான் 10 வது படிச்சிட்டிருக்கும்போது எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு லவ் லட்டர் எழுதிட்டு இருந்தேன்.அத எங்க அப்பா பார்த்துட்டார்.எனக்கு அவரப் பார்த்ததுமே ரொம்ப பயந்து போனேன் , கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. பயத்துல அழுகை வர ஆரம்பிச்சுடுச்சு. எனக்கு என்ன பேசுறதுனே தெரியாம என் தொண்டைல வார்த்தைகள் வந்து தேங்கி நின்னு அப் .. சா சா சாரி .. இனிமேல் ..,,,.. அவ்ளோ தான் அதுக்கு மேல என்னால பேச முடியல . தொண்டைல இருந்த அழுகை சத்தமாவே வந்துடுச்சு.. இப்ப மத்த அப்பாக்களா இருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைக்கிற.. ? "

" என்ன நடந்திருக்கும் , பெல்ட் கலட்டி செமையா வாங்கிருப்பீங்க..? "

" இங்கதான் எங்க அப்பா வித்யாசப்படுறார். நான் அழுதுட்டு பயந்து போய் நின்னுட்டிருந்தேன். என்னைய அப்படியே கட்டி பிடிச்சிட்டார் . எதுக்குடா சாரி , சொல்லுற..?  இந்த வயசுல லவ் வரும்டா , இதுக்கு போய் எதுக்கு அழுற ..? " அப்படின்னு என்னோட கண்ண துடைச்சு விட்டார். அப்புறம் கொஞ்ச நேரம் அதப் பத்தி பேசவே இல்ல.  வேற என்னமோ பேசி நக்கல் பண்ணிட்டு இருந்தார். நான் லவ் லட்டர் எழுதினது பத்தி பெரிசா எடுத்துக்கவே இல்ல. அதுக்கு அப்புறம் காதலுக்கும் , எதிர்பால் ஈர்ப்புக்கும் என்ன வித்தியாசம் அப்படின்னு சொல்லிகொடுத்தார். அப்புறம் எனக்கு அந்த பொண்ணு மேல இருந்த ஈர்ப்பு போய்டுச்சு. இந்த விசயத்துக்கு அப்புறம் நான் என்ன செஞ்சாலும் எங்க அப்பா கிட்ட கேட்டுத்தான் செய்வேன். என் ஸ்கூல்லயும் , காலேஜுலயும் எல்லாப்  பொண்ணுகளோடவும்  ரொம்ப ப்ரண்ட்லியா பழக ஆரம்பிச்சேன். எனக்கு இருக்குற இத்தன நண்பர்களுக்கு காரணமே எங்க அப்பாதான்.சத்தியமா அவர் மட்டும் என்னைய அந்த இடத்துல அடிசிருந்தார்னா என் வாழ்க்கை திசைமாறிப் போயிருக்கும்.

" ஜஸ்ட் மிஸ் , உங்க அப்பா மட்டும் அத படிக்காம இருந்திருந்தா நான் தப்பிச்சிருப்பேன்..!"

" என்ன கிண்டலா , ஆனா எங்க அப்பாவுக்கு உன்ன விட நக்கல் ஜாஸ்தி தெரியுமா.? அந்த லவ் லட்டர் எழுதினதுக்கு ஒரு வாரம் கழிச்சு எங்கிட்ட ஒண்ணு கேட்டா பாரு .. " ஏன்டா , உன் அழகில் மயங்கிப்போனேன் அப்படின்னு கவிதை மாதிரி எழுதிருந்தையே அந்த அளவுக்கு அது சூப்பர் பிகரா..? " . எனக்கு சிரிப்பு தாங்கல..

" உண்மைலேயே , மாமாவுக்கு நக்கல் ஜாஸ்திதான்."

" அது மட்டும் இல்ல , நான் முதல் நாள் காலேஜ் போகும் போது எங்க அம்மா எங்கிட்ட வந்து " டேய் படிச்சமா வந்தமா அப்படின்னு இருக்கணும் , எதாவது பொண்ண பாக்கறது இதெல்லாம் இருக்க கூடாது " அப்படின்னு சொன்னாங்க. அதுக்கு எங்க அப்பா " டேய் , அப்படியே பார்த்தாலும் நல்ல பொண்ணா பாருடா.." அப்படின்னார் . இத கேட்ட எங்க அம்மா " ஆமா , நல்லா சொல்லித்தரீங்க.." அப்படின்னு கோவமா சொன்னாங்க. அதுக்கு எங்க அப்பா " ஆமா , நீ சொன்னா அதைய அப்படியே பாலோ பண்ணிடுவானாக்கும்..? போடா போடா " அப்படின்னு சிரிசிட்டே போய்ட்டார் தெரியுமா.! அவர் என்னோட ஒவ்வொரு அசைவையும் ஆழமா தெரிஞ்சு வச்சிருக்கார்.

" என்னால நம்பவே முடியல .! "

 நான் வளர வளர அவர் என்னோட நெருங்கின நண்பர் மாதிரி ஆகிட்டார். நான் ஒரு தடவ எங்க பிரண்ட்ஸ் கூட நின்னு சிகரட் பிடிக்கரத பார்த்துட்டார். நான் வீட்டுக்கு வந்ததும் ஏதாவது கேப்பார்னு நினைச்சேன். ஆனா ஒண்ணுமே சொல்லல. அப்புறமா ஒரு வாரம் கழிச்சு என்ன தனியா கூப்பிட்டு " நான் சிகரட் குடிக்கறத நிறுத்திட்டேன் ., எனக்காக நீயும் நிறுத்திடுவியா .? " அப்படின்னார். எனக்கு என்ன பேசுறதுனே தெரியல. ஏன்னா எங்க அம்மா எத்தனையோ தடவ சொல்லி கேக்காதவர் நான் திருந்தனும் அப்படிங்கறதுக்காக ஒரே வாரத்துல சிகரட் குடிக்கறத நிறுத்தினார் தெரியுமா ..? அவர் என்ன பார்த்ததும் சொல்லிருக்கலாம். நானும் நிறுத்திருப்பேன். ஆனா அப்படி செய்யாம நான் நிறுத்திட்டேன் , நீயும் நிறுத்திடரியா ..? அப்படின்னு ஒரு வேண்டுகோள் மாதிரி கேட்டா எந்தப் பையன்தான் தப்பு பண்ணுவான். பையன் மேல அன்பு வைக்கிறதுங்கறது இதுதான். பையனுக்காக எதுவேணா செய்வேன் அப்படிங்கிற லவ் எத்தன அப்பாக்களுக்கு இருக்கு.? எங்க அப்பா அத விட மேல. அவரோட எண்ணங்களை என் மேல எப்பவுமே திணிக்க மாட்டார். நான் சின்ன வயசா இருக்கும் போது மட்டும் எது தப்பு எது சரி அப்படின்னு சொல்லிக்கொடுத்தார் .ஒரு 20 வயசுக்கு அப்புறமெல்லாம் " உனக்கு எது புடிக்குதோ அத செய் " அப்படிம்பார். ஏன்னு கேட்டா " சின்ன வயசுல இருந்து ஒரு குழந்தைய ஒரு 16 ,17 வயசு வரைக்கும் நல்லா வளர்த்திட்டா போதும். அதுக்கு அப்புறம் எந்தப் பிரச்சினையும் வராது .அதவிட எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவனோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கணும் , நான் அப்பாவா இருக்கறதால நான் சொல்லுறத மட்டுமே நீ கேக்கனும்னு அவசியம் கிடையாது " அப்படிம்பார். சத்தியமா அவரோட அளவுக்கு என்னால சிந்திக்கவே முடியாது. அவர் எனக்கு அப்பா மட்டும் கிடையாது .கடவுள் மாதிரி . என்னோட எல்லா உணர்வுகளுக்கும் மரியாதை கொடுப்பார். எனக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தார். அவர் மட்டும் இல்லைனா நான் இப்ப இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. இந்த மாதிரி ஒரு அப்பா கிடைச்சா பணம் எல்லாம் தேவையே இல்ல .கூட இருந்தாவே சந்தோசமா இருந்திடலாம்.

" சூப்பர் .."

என்னோட முகம் கொஞ்சம் வாட்டமா தெரிஞ்சாலும் கண்டுபிடிச்சிடுவார். அத விட நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லி நீ ஓகே சொன்னதுமே நான் முதல்ல எங்க அப்பா கிட்டதான் சொன்னேன் தெரியுமா ..? நாம ஒருத்தர லவ் பண்ணுறோம் அப்படின்னு நண்பர்கள் கிட்ட கூட சொல்லுறதுக்கு வெட்கப்படுவோம் . ஆனா எங்க அப்பா கிட்ட சொல்லுறதுக்கு நான் பயப்படவே இல்ல. உன்னப் பத்தி சொன்னதுமே " முஸ்லிம் பொண்ணா " அப்படின்னு கேப்பார்னு நினைச்சேன். ஆனா "  உன்ன கூட ஒருத்தி லவ் பன்னுறாளா , அவளுக்கு கண்ணு நல்லா தெரியுமான்னு கேட்டியா .? " அப்படின்னார். "நீங்க இன்னும் திருந்தவே இல்லையா..?" அப்படின்னு நான் கேட்டதுக்கு " சரி விடுடா , நான் வேணா இப்படி பேசுறேன் ., இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன் . இது ஓகே வா ..? " அப்படின்னு கேட்டார் ." அப்பா, நக்கல் பண்ணாதீங்க.. அந்தப் பொண்ணு ஒரு முஸ்லிம் பொண்ணுங்கறதால பிரச்சினை வரும் போல இருக்கு., என்ன பண்ணுறது ..? "
" பார்த்துக்கலாம் விடு .." அப்படின்னு சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வந்தார் . நல்லவேளை உங்க அப்பா எங்க அப்பாவோட நண்பரா இருந்ததால் தப்பிச்சோம்.! அவர் என்ன லவ் பண்ணுன அளவுக்கு இந்த உலகத்துல யாரும் யாரையும் லவ் பண்ணிருக்க முடியாது.!

" சத்தியமா எனக்கும் பொறாமையா இருக்கு..! "

" ஒரு தடவ நான் வேலைக்காக வெளியூர் போக வேண்டி இருந்தது . எங்க அம்மா வாசல்ல வந்து நின்னு அழுதுட்டே வழியனுப்பி வச்சாங்க. ஆனா எங்க அப்பா " எதுக்கு அழுகுற , அவன் என்ன போருக்கா போறான்..? போயிட்டு வாடா.." அப்படின்னு அனுப்பி வச்சார் .ஆனா நான் போனதுக்கு அப்புறம் இரண்டுநாள் சாப்பிட கூட முடியாம என்னோட நியாபகத்துலையே இருந்தாராம் . இங்க நிறைய அப்பாக்கள் இப்படித்தான் .. நாம அழுதா எங்க நம்ம பையன் மனசு கலஞ்சிடுமோ அப்படின்னு மனசுக்குள்ள அழுதுட்டு வெளிய சிரிச்சிப்பாங்க. அவுங்க பாகுரக்கு முரட்டுத்தனமா இருந்தாலும் உள்ள அவுங்க மனசு பஞ்சு மாதிரி. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நான் திரும்பி வரும்போது அவரோட கண்ணுல இருந்து மொழு மொழுன்னு தண்ணி கொட்டுச்சு தெரியுமா ..? அப்படியே என்ன வந்து கட்டிப் பிடிச்சிட்டார். இதுவும் கூட காதல் தான்.ஆண் பெண்ணுக்கு இடையிலான காதல்ல மட்டும் பாசம் பொங்குறது இல்லை ., இது மாதிரி குடும்ப உறவுகள்ள கூட பொங்கி வழியுது. நாம தான் அத கண்டுக்காம தொடச்சு எறிஞ்சிட்டு போயிடறோம்.!

" உண்மை தான்டா ., உனக்கு நம்ம பையன் மேல இருக்குற லவ் கூட அப்படித்தானடா..? நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நமக்கு பையன் பொறந்தா அவன அப்படி பார்த்துக்கணும் , பொண்ணு பொறந்தா இந்தப் பேரு வைக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பியே. காதல் கூட பார்த்து அழகா இருந்தாதான் வரும் . ஆனா இந்த பாசம்கறது பிறக்கரக்கு முன்னாடியே வந்திடும். நீ உன் பையன் மேல வச்சிருக்கற லவ் கூடத்தான் யாராலையும் வைக்க முடியாது. நாம லவ் பண்ணும் போது கூட இந்த அளவுக்கு உன்ன நான் பார்த்தது கிடையாது. எங்க போயிட்டு வந்தாலும் முதல்ல அவந்தான் தேடுற . சாப்பிடும்போதும் தூங்கும்போதும் மொத்தத்தில் உன்னோட நிழல் மாதிரி பைத்தியமா அலையுற. இத விட பாசத்துக்கு வேற எடுத்துக்காட்டு வேணுமா..? "

பின்குறிப்பு  : இந்த பதிவுல ரொம்ப கற்பனை அதிகமா இருக்கு , இப்படி எந்த அப்பாவும் இருக்க முடியாது அப்படின்னு நீங்க நினைச்சா முதல்ல சில காதல் கவிதைகள படிச்சிட்டு வாங்க . அவுங்க எழுதறது மட்டும் உண்மையா ..? " அன்பே நீ நிலவு போன்றவள் , உன் இதழ்கள் ரோஜா மொட்டு , நீ மணவறையில் நான்  நான் கல்லறையில் ( கவிதை என்ன கல்லறையில இருந்தா எழுதற )" அப்படின்னு அவுங்க மட்டும் எழுதலாம் . ங்கொய்யால... நாங்க எழுதக் கூடாதா..?

 நீதி : கோமாளிக்கு சென்டிமென்ட் எல்லாம் செட் ஆவாதுங்க.!

57 comments:

எஸ்.கே said...

அருமை செல்வா! கற்பனையா இருந்தாலும் கதை அமைத்த விதம் சூப்பர்! உங்களுக்குள் ஒரு சிறந்த எழுத்தாளர் இருக்கார்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

Second naanu...., ha ha ha

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// இந்த அடைமழையிலும் துரு துருவென அங்கும் இங்கும் ஓடி ஆடி தனது குறும்புத்தனத்தைக் காட்டிக்கொண்டிருந்தான் எழில்.////

யோவ் ரேடியோ ஜாக்கி ..,
சரியான குசும்புயா உன்னக்கு ஒரு பிரபல பதிவர் பேரை use பண்ணியிருக்கே ....,இரு இரு மொத்தமா படிச்சிட்டு வரேன் ...,

NaSo said...

கொஞ்சம் கற்பனை மிகையாக இருந்தாலும் நல்லா இருக்கு செல்வா.

NaSo said...

/// நீதி : கோமாளிக்கு சென்டிமென்ட் எல்லாம் செட் ஆவாதுங்க.! ///

யார் சொன்னது நீ நம்ம ஊரு கூத்து பார்த்தது இல்லையா? அதுல கோமாளி தான் சென்டிமென்ட் ஸீன் பண்ணுவார்.

செல்வா said...

//சரியான குசும்புயா உன்னக்கு ஒரு பிரபல பதிவர் பேரை use பண்ணியிருக்கே ....,இரு இரு மொத்தமா படிச்சிட்டு வரேன் ...,
//

கண்டுபிசிட்டீங்களா ..? யாரு கிட்டயும் சொல்லிராதீங்க .. !!

செல்வா said...

//யார் சொன்னது நீ நம்ம ஊரு கூத்து பார்த்தது இல்லையா? அதுல கோமாளி தான் சென்டிமென்ட் ஸீன் பண்ணுவார்.
//

அது வேற கோமாளிங்க , நான் வேற கோமாளிங்க ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் ,
நல்லா இருக்குது யா .., பத்திக்கு பத்தி கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தீனா படிக்க இன்னும் நல்லா இருக்கும் ...

செல்வா said...

////நல்லா இருக்குது யா .., பத்திக்கு பத்தி கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தீனா படிக்க இன்னும் நல்லா இருக்கும் ... ///

ஓஹோ , ஏதாவது குறை இருக்கனும்ல அண்ணா ., இல்லைனா கண்ணு பட்டுடும் .. அதான்.. ஹி ஹி ஹி ..

செல்வா said...

//அருமை செல்வா! கற்பனையா இருந்தாலும் கதை அமைத்த விதம் சூப்பர்! உங்களுக்குள் ஒரு சிறந்த எழுத்தாளர் இருக்கார்!
//

நன்றிங்க ..!! என்னால நம்பவே முடியல ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி நீ சிகரட் பிடிப்பியா. bad பாய்

செல்வா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடப்பாவி நீ சிகரட் பிடிப்பியா. bad பாய்//

ஹி ஹி ஹி ..!!

ஜில்தண்ணி said...

மாப்ள எங்கயோ போயிட்ட :)

ஒரு வேலை இது உன்னோட சொந்த கதையா இருக்குமோன்னு எனக்கு டவுட்டாருக்கு,ஏன்னா ஒன்னு ஒன்னும் நல்ல ஃபீலிங்க்ஸ்ல வந்தா மாதிரி இருக்கு

வருங்காலத்துல நீயும் இப்டிதான் இருப்பன்னு சொல்ற,ம்ம்ம்ம் நானும் முயற்சி பண்றேன் :)

இம்சைஅரசன் பாபு.. said...

//அடப்பாவி நீ சிகரட் பிடிப்பியா. bad பாய் //

சிகரட் பிடிச்ச bad boy ...........
அப்ப நீ குவாட்டர் அடிக்கிற ......நீ good boy யா

Unknown said...

செல்வா நல்லா எழுதி இருக்கீங்க.. அப்பாவை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது உண்மைதான் தம்பி ...

Unknown said...

செல்வா கதை சூப்பர்..

நீங்க சொல்றமாதிரி அப்பாக்கள் இருக்கறாங்க.. எனக்கு இதுல எதுவும் மிகையாவே தெரியல.. உங்களோட எண்ணங்களை ரொம்ப நல்லா வெளிப்படுத்தியிருக்கீங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

@செல்வா
வருங்காலத்துல நாம இப்படி தன இருக்கணும் மனசுல இருந்தத .எழுதிருக்ற இல்லையா தம்பி
நல்ல இருக்கு தம்பி

Unknown said...

ஒவ்வொரு வார்த்தைகளும் ரொம்ப ஃபீலிங்கோட எழுதியிருக்கீங்க.. கண்டிப்பா அதுல உண்மை இருக்கனும்.. வாழ்த்துக்கள்..

Unknown said...

///நான் 10 வது படிச்சிட்டிருக்கும்போது எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு லவ் லட்டர் எழுதிட்டு இருந்தேன்.///

ஓகே ஆயிடுச்சா..

செல்வா said...

//ஓகே ஆயிடுச்சா.. //

அட அட ., என்ன ஒரு நல்ல மனசு உங்களுக்கு ..?!

ஜீவன்பென்னி said...

இங்க கோமாளின்னு ஒரு மொக்கை பதிவர் இருந்தாரே அவர இன்னைக்கு காணோம் யாராச்சும் பார்த்தீங்கன்னா கண்டுபுடிச்சு கொடுங்க.

ஜீவன்பென்னி said...

தம்பி இதுல எதுவுமே மிகைப்படுத்தி இல்ல. என் அப்பாவே நிறைய இடத்துல கதையோட ஒத்துப்போறாங்க.

செல்வா said...

//இங்க கோமாளின்னு ஒரு மொக்கை பதிவர் இருந்தாரே அவர இன்னைக்கு காணோம் யாராச்சும் பார்த்தீங்கன்னா கண்டுபுடிச்சு கொடுங்க. //

எங்கயும் போகல ..!! விரைவில் வெளிப்படுவார் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//கோமாளிக்கு சென்டிமென்ட் எல்லாம் செட் ஆவாதுங்க//

இந்த லைன் மட்டும் பொய் .life ல எல்லோரும் செண்டிமெண்ட் க்கு அடிமை ஆனவங்க தான்.செண்டிமெண்ட் இல்லேன்னா நீங்க இந்த பதிவு எழுதி இருக்கவே முடியாது செல்வா .......

Ramesh said...

அருமையா எழுதியிருக்கீங்க..செல்வா..எப்படி இருப்பாங்கன்னே தெரியாத நம்ம பையனோ பொன்னோ அவங்க மேல வெக்கிற லவ்தான்...உயர்வானதா இருக்கும் இல்லியா..சூப்பர்..நிஜமாலுமெ..உங்ககிட்ட இருந்து இப்படீ ஒரு (சூப்பர்) பதிவ நான் எதிர்பாக்கலை...பொதுவா யாராவது ரொம்ப நல்லா எழுதி இருந்தா..உடனே அவங்க ஃபாலோயர் ஆயிடுவேன்..தொடர்ந்து படிப்பேன்..என்ன செய்றது..நான் ஏற்கனவே உங்க ஃபாலோயர் ஆயிட்டதால மறுபடியும் ஆகமுடியல..

அருண் பிரசாத் said...

அருமை செல்வா! நல்ல நடையோட போர் அடிக்காம கொண்டு போயிருக்கே. பழைய நினைவுகளை கிளறவெச்சுட்ட. நீ ஜெயிச்சிட்ட செல்வா!


(அப்புறம் அந்த வாரணம் ஆயிரம் அப்பா மாதிரி, காதலன் பட அப்பா மாதிரி - அப்பாக்கள் இருந்தா நல்லாத்தான் இருக்கும்)

சி.பி.செந்தில்குமார் said...

kadhai கதை நல்லாருக்கு,வாழ்த்துக்கள்.பெரிய பெரிய பேராவா போடாமல் பிரித்து பிரித்து போடவும்

ஈரோடு கதிர் said...

ஊமாண்டி... சிறுவயது வில்லன்

அந்த பின்குறிப்பு செம ஏத்து செல்வா

Anonymous said...

நான் வளர வளர அவர் என்னோட நெருங்கின நண்பர் மாதிரி ஆகிட்டார். நான் ஒரு தடவ எங்க பிரண்ட்ஸ் கூட நின்னு சிகரட் பிடிக்கரத பார்த்துட்டார். நான் வீட்டுக்கு வந்ததும் ஏதாவது கேப்பார்னு நினைச்சேன். ஆனா ஒண்ணுமே சொல்லல. அப்புறமா ஒரு வாரம் கழிச்சு என்ன தனியா கூப்பிட்டு " நான் சிகரட் குடிக்கறத நிறுத்திட்டேன் ., எனக்காக நீயும் நிறுத்திடுவியா .? " அப்படின்னார். //
செம டச்சிங்

Anonymous said...

அந்த லவ் லட்டர் எழுதினதுக்கு ஒரு வாரம் கழிச்சு எங்கிட்ட ஒண்ணு கேட்டா பாரு .. " ஏன்டா , உன் அழகில் மயங்கிப்போனேன் அப்படின்னு கவிதை மாதிரி எழுதிருந்தையே அந்த அளவுக்கு அது சூப்பர் பிகரா..//
செம நக்கல்...அந்த ஜீன் தானா இந்த நக்கல்?

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

Anonymous said...

அனுபவ பதிவுகள் தான் பிளாக்

Anonymous said...

அப்படின்னு அவுங்க மட்டும் எழுதலாம் . ங்கொய்யால... நாங்க எழுதக் கூடாதா..?//
அதானெ...நீ எழுது ராசா

Anonymous said...

இந்த பதிவுல ரொம்ப கற்பனை அதிகமா இருக்கு , இப்படி எந்த அப்பாவும் இருக்க முடியாது அப்படின்னு நீங்க நினைச்சா //நினைக்கவே இல்ல...

எல் கே said...

நீ எழுதியதுல இதுதான் பெஸ்ட்டுன்னு சொல்லுவேன் தம்பி

கவி அழகன் said...

உங்களுக்கு நல்ல அப்பா கிடைத்துள்ளார் வாழ்த்துக்கள்

Riyas said...

கதை நல்லாருக்கு செல்வா.. உங்களுக்குள் இப்படியொரு எழுத்தாளன் சபாஷ்

Chitra said...

எஸ்.கே said...

அருமை செல்வா! கற்பனையா இருந்தாலும் கதை அமைத்த விதம் சூப்பர்! உங்களுக்குள் ஒரு சிறந்த எழுத்தாளர் இருக்கார்!

...Repeattu!

வினோ said...

நேற்று சாட்ல சொன்னது தான் செல்வா... அது repeatuuuuu

Anonymous said...

செல்வா.. ரொம்ப அருமையா இருக்கு நண்பா!
// காதல் கூட பார்த்து அழகா இருந்தாதான் வரும் . ஆனா இந்த பாசம்கறது பிறக்கரக்கு முன்னாடியே வந்திடும்.//
செம.. எப்புடிப்பா இப்படி போற போக்குல உண்மைய சொல்லிட்டு போய்ட்ட.. :)

Unknown said...

am the late.....

sorry..nethey open panen annal..open agavey ellai..

chancey ellai bharthi..

oru algana tamil appa elakiyam pola erukku..

valthukkal anney

Unknown said...

எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு லவ் லட்டர் எழுதிட்டு.....
"so EPPO VARAIKKUM eluthikituthan erukkenga love letter????

nadathu raasa..nadathu..

sathishsangkavi.blogspot.com said...

சொல்லிய விதம் அருமை செல்வா....

மங்குனி அமைச்சர் said...

உஸ்.............. இரு டீ சாப்படு வந்துடுறேன்

சௌந்தர் said...

நீ ரொம்ப நல்ல பையன் அப்பாவை இப்படி புகழ்ந்து சொல்லி இருக்கே..இன்னும் அப்பா வை பற்றி இன்னும் நிறைய சொல் செல்வா

மங்குனி அமைச்சர் said...

பாவம் கோமாளிக்கு ஏதோ சித்தபிரம்மை புடிச்சிடுச்சு போல ...... (நல்லா இருக்கு கோமாளி )

karthikkumar said...

இந்த மாதிரி அப்பா வேணுமே செல்வா சார் கதை நல்லா இருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்க செல்வா... நிறைய எழுது இது போல..

தேவா said...

//அவுங்க மட்டும் எழுதலாம் . ங்கொய்யால... நாங்க எழுதக் கூடாதா..?//

என்ன பாஸ் சூப்பரா எழுதிட்டு கடைசில இப்படி ஒரு மொக்கைய போட்டுடீங்க....

Irul said...

best selva best

Irul said...

" ஏன்டா , உன் அழகில் மயங்கிப்போனேன் அப்படின்னு கவிதை மாதிரி எழுதிருந்தையே அந்த அளவுக்கு அது சூப்பர் பிகரா..? epdi supper

Praveenkumar said...

மிகவும் அருமையான கற்பனை. அனுபவம் வாய்ந்த எழுத்துநடை.. கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் விதமும் அருமை..! ஜோர் திரைப்படத்துல வர்ர அப்பா சத்யராஜி மாதிரி நக்கலான ஜாலியான அப்பா கதை சூப்பர். தொடர்ந்து கலக்குங்க செல்வா..!! ரேடியோ ஜாக்கிக்கான ஒளிவட்டம் நிறையவே தெரியுது. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

Unknown said...

நல்லாருக்கு செல்வா..



என்னமோ தெரியல தம்பி, வர வர உன் போக்கு செரியில்ல.. :-))

தினேஷ்குமார் said...

வணக்கம் நண்பரே
நல்ல பதிவு மனதில் பதிந்துவிட்டது
யாருங்க சொன்னா கற்பனைனு நிஜத்தில் நானும் கண்டுள்ளேன்
பாசத்தை
பறிக்கவும்
முடியாது
அளவிடவும்
கூடாது............

Kousalya Raj said...

அருமையான எழுத்து நடை செல்வா.....இந்த மாதிரி இன்னும் நிறைய எழுதலாம்....வாழ்த்துக்கள்.

விஷாலி said...

என்னுடைய சிறுகதையை படிததட்கு நன்றி மற்றும் என் தந்தையின் பிரதி சில இடங்களில்.
நன்றி மற்றும் உங்களை பார்த்து எழுத மேற்கோள் வைக்கிறேன்.

விஷாலி said...

முடிந்தால் வருவோர் வரவும் என்னுடைய கிறுக்கல்களை பொறுபோர் பார்க்க வேண்டியது
http://dandanakavijay.blogspot.com/