Wednesday, January 19, 2011

செல்லத்திற்கு ஒரு கடிதம்

 முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி நம்ம இந்திரா அக்கா இந்தப் பதிவுல ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அவர்களின் அழைப்பிற்கு இணங்க இந்த காதல் கடிதம் அப்படிங்கிற தொடர் பதிவிற்கான பதிவு இது.

செல்லத்திற்கு  அன்புள்ள ABCD,
    எனக்கு இத எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்குற விசயம்தான். நான் இத நேர்லயே சொல்லனும்னு ஆசைதான். ஆனா நேர்ல பார்க்கும் போது உன்ன இம்ப்ரஸ் பண்ணுறேன் பேர்வழி அப்படின்னு கண்டத ஒளறி வழியுரதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது. அதுலயும் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவதான் பார்க்கிறோம். சத்தியமா இரண்டு மாசத்துக்கு அப்புறம் உன்னப் பார்க்கப் போறோம்னு ஒரு வாரக்கணக்கா உன்னையே நினைச்சிட்டு இருப்பேன், அப்புறம் உன்ன பார்க்கும் போது ஒரு பத்து நிமிஷம் படபடப்புலையே போய்டுது.

   அதிலும் அதிக நேரம் உங்கூடப் பேசிட்டு இருந்தா எங்க வழியுறது மாதிரி ஆகிடுமோன்னு ஒரு பக்கம் எச்சரிக்கை மணி ஒலிக்குது. அப்புறம் எப்படி நேர்ல சொல்லுறது. இப்பக்கூட இத எழுதி உன்கிட்ட கொடுக்கிறேனா இல்ல தைரியம் இல்லாம கிழிச்சுப் போட்டுடப்போறேனா அப்படின்னு தெரியல. அப்படி தைரியம் வந்து உங்கிட்ட கொடுத்திட்டேன்னா வடிவேலு கணக்கா நானும் ரவுடிதான்.

     இப்ப கூட ஆரம்பிச்சு என்னென்னமோ சொல்லுறேன் , ஆனா மேட்டர் எண்ணனு  சொல்லல. ஒரே வரில சொல்லுறதுனா உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சந்திக்கிற மனிதர்கள் நிறைய இடங்களில் நிறைய பேர நமக்குப் பிடிக்கும். அது வேற விசயம். ஆனா நான் உன்கிட்ட சொல்லுற பிடிச்சிருக்கு அப்படிங்கிற வார்த்தையோட அர்த்தம் வேற.

    என்னமோ தெரியல உன்னப் பார்க்கும்போது வர்ற உணர்வு வேற பொண்ணுகளைப் பார்க்கும் போது வர்றதில்லை. அப்படி உங்கிட்ட என்ன பிடிச்சிருக்குன்னு தெரியல. மத்த பொண்ணுகள மாதிரிதான் நீயும் இருக்க. ஆனா உன்னப் பார்க்கும் போது , உன்னப்பத்தி நினைக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு இனம்புரியாத உணர்வு வருது. அது சந்தோசமா , இல்ல ஏக்கமா இல்ல வேற எதாவதா அப்படின்னு தெரியல. அப்பவெல்லாம் வைரமுத்துவோட " வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவமும் உருளுதடி " அப்படிங்கிற வரிகள்தான் நியாபகம் வருது.

    பஸ்ல போகும்போது சில பொண்ணுக காதுல EAR PHONE மாட்டிக்கிட்டு குசுகுசுனு பேசுறதப் பார்த்தா ஒருவேளை நீயும் நாளைக்கு என்கூட இப்படித்தான் பேசுவியோ அப்படின்னு உன் நியாபகம்தான் வருது. நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறேன்.

   எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் சாதரணமா பேசுற நான் உன்கிட்ட மட்டும் என்னமோ கடன் வாங்கிப் பேசுறது மாதிரி பேசுறேன். ஏன்னா அதிகமா பேசினா எங்க லூசு அப்படின்னு நினைச்சிடுவியோ அப்படிங்கிற ஒரு பயம்தான். அத விட உன்னப் பார்க்க வரதுக்கு முன்னாடி நிறைய ஒத்திகை பார்த்துட்டு வருவேன் , ஆனா உன்னப் பார்த்ததுமே எல்லாமே மறந்து போகும். இது வரைக்கும் ஒரு தடவ கூட உன்ன இம்ப்ரெஸ் பண்ணலாம் அப்படின்னு நான் பார்த்த ஒத்திகை எல்லாமே வீண்தான்.

    நானும் எங்க வீட்டுல எதாச்சும் பேசிட்டிருக்கும் போது அடிக்கடி எல்லோரையும் கிண்டல் பண்ணி பேசிட்டிருப்பேன். அப்பவெல்லாம் எங்க அம்மா வர்ற மகராசியும் இப்படியே வந்திட்டா போதும் அப்படின்னு சொல்லுவாங்க , நான் மனசுக்குள்ள நினைச்சுக்குவேன் அவளும் ( நீ ) அப்படித்தான் நிறைய பேசுவா அப்படின்னு. இன்னும் என்ன என்னமோ உன்னப் பத்தி சொல்லனும்னு தோணுது , ஆனா உனக்கு இதெல்லாம் பிடிக்குமோ பிடிக்காதோன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஒன்னே ஒண்ணு சொல்லுறேன் , நான் உன்ன அவ்ளோ நேசிக்கிறேன்.

    அதே மாதிரி இப்போதைக்கு நான் ஒரு சின்ன கம்பனிலதான் வேலை பார்க்கிறேன். ஆனா சீக்கிரமே பெரிய ஆளா வருவேன். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் இருக்கு. இத ஏன் சொல்லுறேன்னா கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீ என்னப் பத்தி உங்க வீட்டுல சொல்லும்போது ஒரு பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு உயர்ந்திடுவேன். 

    நான் இப்படி சொல்லுறதால நீ என்னைய உனக்குப் பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்ல வேண்டாம். உனக்கு என்னைப் பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிடு , நல்ல நன்பர்களாவே இருப்போம். எனக்கு சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன். உண்மைலேயே உனக்கு என் மேல காதல் இல்லைன்னு சொன்னா கொஞ்சம் பீல் பண்ணுவேன் ஆனா சீக்கிரமே அதிலிருந்து மீண்டு வந்திருவேன். இத ஏன் சொல்லுறேன்ன எங்கிட்ட இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ணிருக்கு. அப்போ எனக்கு அப்படி ஒரு பீலிங் இல்ல , அதனால நண்பர்களா இருப்போமே அப்படின்னு கேட்டுகிட்டேன். இப்பத் தான் எனக்குப் புரியுது, நான் அப்படி சொன்னபோது அந்தப் பொண்ணு எவ்ளோ பீல் பண்ணிருக்கும்னு. உன்ன செல்லமா கூப்பிடனும் , உன்கூடவே இருக்கணும்னு ஆசைதான் , ஆனா முடிவுகள் எல்லாமே உன்னோட கைலதான். 
                                                                           என்றும் நட்புடன் 
                                                                                        XYZ.

--------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர் பதிவுக்கான விசயங்கள் அந்த கோட்டுக்கு மேலேயே முடிஞ்சு போச்சு. இப்போ காதல் பத்தி என்னோட அபிப்பிராயம் அதாவது தற்காலிகக் காதல் பற்றி என்னோட கருத்து அல்லது பயம் பத்தி சொல்லியே ஆகணும். இப்பவெல்லாம் காதல் அப்படின்னு சொல்ல கேட்டாலே பயமா இருக்கு ., துஷ்டரைக் கண்டால் தூர விலகு அப்படிங்கிற மாதிரி தோணுது. உண்மைதாங்க இப்ப அதிகமா நடந்துட்டு இருக்குற விசயங்கள பார்க்கும் போது காதல் அப்படின்னா ஒரு மாயத் தோற்றம் ஏற்ப்பட்டிருக்கு அப்படிங்கிறது ரொம்ப தெளிவா தெரியுது.

    எங்க ஊருக்குப் பக்கத்து ஊருல ஒரு பொண்ணு +1 படிச்சிட்டு இருந்துச்சு. அந்தப் பொண்ணு அதே பள்ளிக்கூடத்துல படிக்கிற இன்னொரு பையன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுவும் ஓடிப்போய். இதப் பத்தி நான் ஏன் சொல்லுறேன் அப்படின்னா இவுங்களோட எதிர்காலம் பத்தி நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு. நினைச்சுப் பாருங்களேன் , ஒரு பதினாறு பதினேழு வயசு இருக்குற பசங்க எப்படி ஒரு குடும்பத்த கொண்டுபோகப்போறாங்க? இப்படி நிறைய காதலர்கள் இருக்காங்க. இந்த வயசுல வர்ற ஈர்ப்ப காதல் அப்படிங்கிற பேர்ல இவுங்க வாழ்க்கையவே தொலைச்சிக்கிறாங்க.. 

    இந்த காதலால தான் ஏழைகள் அப்படின்னு ஒரு வர்க்கம் மேலும் உருவாகிடுமோ அப்படின்னு நினைக்கத் தோணுது. அப்படின்னா எல்லா காதலர்களுமே உருப்படாதவங்க அப்படின்னு சொல்ல வரல , மொதல்ல எதிர்காலம் பற்றி ஒரு ஸ்டாண்ட் பண்ணிட்டு காதல் பண்ணுங்க. அது எப்படி அப்படியெல்லாம் காதல் வருமா ? அது வருபோதுதான் வரும் , நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் வராது அப்படின்னு சொல்லுவீங்க.

    பொதுவாவே காதல் அப்படிங்கிற விசயம் பெரும்பாலும் அழக பார்த்து வரதுதானே. ஏன் சொல்லுறேன்னா இது வரைக்கும் யாருக்காச்சும் தெருவுல குப்பை பொறுக்குற பொண்ணப் பார்த்து லவ் வந்திருக்கா? மொத்ததுல காதலிக்க நினைக்குறவங்க உங்க வாழ்க்கைல ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் உங்க காதலும் இனிக்கும்கறது என்னோட கருத்து. மறுபடியும் வைரமுத்துவோட வரிகள்தான் " காதல் ஒன்னியும் கடவுள் இல்லையாட , அந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா!! "

ஒரு அறிவிப்பு : சொல்லப்போனா இன்னிக்கு இந்த மேட்டர சொல்லனும்னுதான் இந்தப் பதிவே. அதாங்க நம்ம கலைஞ்சர் அடச்சே கலைஞர் டிவி ல தினமும் இரவு 10௦ மணிக்கு " வெற்றிச் சரித்திரம் " அப்படின்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. அத எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா பாருங்க. அதாவது உலகப் போர்கள் பற்றியும் அந்த காலத்துல எடுக்கப்பட்ட வீடியோக்களும் போடுறாங்க. கண்டிப்பா இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்னு நினைக்கிறேன். இத எதுக்காக சொல்லுறேன்னா மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அத எழுத முடியல , அதனாலதான் அவுங்களுக்குப் பயன்படுமே அப்படின்னு இந்த நிகழ்ச்சி பத்தி சொல்லிருக்கேன். ஹி ஹி 

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : வந்தியா செல்வா கதைகள் எழுதி நாலு பேர குழப்புனியானு இல்லாம உனக்கு எதுக்கு சமுதாய அக்கறை எல்லாம் ?

பின்குறிப்பு : இதுல காதல் பத்தி சொன்னது எல்லாமே என்னோட கருத்துக்கள் தாங்க. அது தவறா கூட இருக்கலாம்.
    

113 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே...

எஸ்.கே said...

காதல் காதல் காதல்...
காதல் போயின்
சாதல்(பாட்டில்) சாதல்(பாட்டில்) சாதல்(பாட்டில்)....

செல்வா said...

மனோ அண்ணனுக்கே வடை !

எஸ்.கே said...

அதென்ன ABCD, XYZ? ஸ்கூல்ல முழு ஆண்டு தேர்வுல லெட்டர் எழுதும்போது பேர் எழுதக் கூடாது, xxxxxx,yyyyy போடனும்னு சொல்வாங்களே! அந்த ஞாபகமா?

செல்வா said...

@ எஸ்.கே :
ஹி ஹி , எனக்கு பிரச்சினை இல்லை

செல்வா said...

//அதென்ன ABCD, XYZ? ஸ்கூல்ல முழு ஆண்டு தேர்வுல லெட்டர் எழுதும்போது பேர் எழுதக் கூடாது, xxxxxx,yyyyy போடனும்னு சொல்வாங்களே! அந்த ஞாபகமா?//

அதே தான் , எதையும் சூதானமா பண்ணனும் !

எஸ்.கே said...

லெட்டரை பத்தி அப்புற பேசலாம். இப்ப கோட்டுக்கு கீழே உள்ளவை!

தங்களின் சமுதாய அக்கறை சிறப்பானது. பள்ளி வாழ்வில் காதல் என்றால் எதிர்காலம் குறித்து கவலைப்படுவது நியாயமாதே!

எஸ்.கே said...

//இந்த காதலால தான் ஏழைகள் அப்படின்னு ஒரு வர்க்கம் மேலும் உருவாகிடுமோ அப்படின்னு நினைக்கத் தோணுது. அப்படின்னா எல்லா காதலர்களுமே உருப்படாதவங்க அப்படின்னு சொல்ல வரல , மொதல்ல எதிர்காலம் பற்றி ஒரு ஸ்டாண்ட் பண்ணிட்டு காதல் பண்ணுங்க. அது எப்படி அப்படியெல்லாம் காதல் வருமா ? அது வருபோதுதான் வரும் , நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் வராது அப்படின்னு சொல்லுவீங்க.//

NICE ONE. ஆனால் நிறைய காதலர்கள் இதை ஒத்துக்க மாட்டாங்க!

செல்வா said...

//தங்களின் சமுதாய அக்கறை சிறப்பானது. பள்ளி வாழ்வில் காதல் என்றால் எதிர்காலம் குறித்து கவலைப்படுவது நியாயமாதே! ///

எனக்கு மொக்கைதான் பிடிக்கும் .. சமுதாய அக்கறை அதிகமா பட்டா கண்ணு பட்டுரும் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பின்குறிப்பு : இதுல காதல் பத்தி சொன்னது எல்லாமே என்னோட கருத்துக்கள் தாங்க. அது தவறா கூட இருக்கலாம்.
///
ஸ்கூல் பசங்க லவ் பண்ணறது தாங்க முடியலை. எங்க ஆபீஸ் back side ஒரு ஸ்கூல் இருக்கு. மூணு மணிக்கு ஸ்கூல் விட்டதும் எங்க ஆபீஸ் இருக்குற தெருவுல நின்னுகிட்டு அதுக கொஞ்சுறத பார்த்தா மூஞ்சிலையே மிதிக்கனும்னு தோணுது..

எஸ்.கே said...

அதென்ன பதிவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அறிவிப்பு! இருந்தாலும் அது ரொம்ப நல்லாவே இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

--------------------------------------------------------------------------------------------------------------------------///

கோடுன்னா நீளமாத்தான இருக்கும். ஏன் ஒவ்வொரு கோட்டுக்கும் நடுவுல ஓட்டை இருக்கு? எஸ்.கே என்னான்னு கேளுங்க.

எஸ்.கே said...

//எனக்கு மொக்கைதான் பிடிக்கும் .. சமுதாய அக்கறை அதிகமா பட்டா கண்ணு பட்டுரும் ..//

அப்படியில்லை செல்வா எல்லா நல்ல மனுசனுக்குள்ளேயும் சமுதாய அக்கறை இருக்கும். பெரும்பாலான சமயங்களில் அதை காமிக்க முடியறதில்ல. எப்பவாவது காமிப்போமே!

சக்தி கல்வி மையம் said...

கடிதம் நல்லா இருக்கு..
கலைஞர் டிவி-யில் இதுபோன்ற நல்ல நிகழ்ச்சி பார்க்க வழிசெய்ததற்கு நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

அதென்ன ABCD, XYZ? ஸ்கூல்ல முழு ஆண்டு தேர்வுல லெட்டர் எழுதும்போது பேர் எழுதக் கூடாது, xxxxxx,yyyyy போடனும்னு சொல்வாங்களே! அந்த ஞாபகமா?//

அதான அப்ப செல்வாவும் ஸ்கூல் படிக்கும்போதே லவ்விருக்கான். அதான் அருமையாக எழுத முடிந்தது.

எஸ்.கே said...

//ஸ்கூல் பசங்க லவ் பண்ணறது தாங்க முடியலை. எங்க ஆபீஸ் back side ஒரு ஸ்கூல் இருக்கு. மூணு மணிக்கு ஸ்கூல் விட்டதும் எங்க ஆபீஸ் இருக்குற தெருவுல நின்னுகிட்டு அதுக கொஞ்சுறத பார்த்தா மூஞ்சிலையே மிதிக்கனும்னு தோணுது..//

ஆமாங்க. என் வீட்டுக்கு பக்கம் ரெண்டு பசங்க ஃபீலிங்னு சுத்தரானுங்க. கொய்யால காண்டா இருக்கு! ஒன்னும் பண்ண முடியலை!

செல்வா said...

//ஸ்கூல் பசங்க லவ் பண்ணறது தாங்க முடியலை. எங்க ஆபீஸ் back side ஒரு ஸ்கூல் இருக்கு. மூணு மணிக்கு ஸ்கூல் விட்டதும் எங்க ஆபீஸ் இருக்குற தெருவுல நின்னுகிட்டு அதுக கொஞ்சுறத பார்த்தா மூஞ்சிலையே மிதிக்கனும்னு தோணுது..
///

அப்படி கீது அடிச்சு போடாதீங்க ?

எஸ்.கே said...

//-------------------------------------------------------------------------------------------------------------------------///

கோடுன்னா நீளமாத்தான இருக்கும். ஏன் ஒவ்வொரு கோட்டுக்கும் நடுவுல ஓட்டை இருக்கு? எஸ்.கே என்னான்னு கேளுங்க.//

காதல் பல ஓட்டைகள் நிறைந்ததுன்னு குறிப்பால் உணர்த்துறார் செல்வா!

எஸ்.கே said...

இப்ப லெட்டர பார்ப்போம்!

//ஆனா நேர்ல பார்க்கும் போது உன்ன இம்ப்ரஸ் பண்ணுறேன் பேர்வழி அப்படின்னு கண்டத ஒளறி வழியுரதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது.//

லெட்டர்லயும் அதத்தானே செய்வாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//-------------------------------------------------------------------------------------------------------------------------///

கோடுன்னா நீளமாத்தான இருக்கும். ஏன் ஒவ்வொரு கோட்டுக்கும் நடுவுல ஓட்டை இருக்கு? எஸ்.கே என்னான்னு கேளுங்க.//

காதல் பல ஓட்டைகள் நிறைந்ததுன்னு குறிப்பால் உணர்த்துறார் செல்வா!//

உங்க விளக்கமாறு சீ விளக்க உரை அருமை

எஸ்.கே said...

//அப்புறம் உன்ன பார்க்கும் போது ஒரு பத்து நிமிஷம் படபடப்புலையே போய்டுது//

பிளட் பிரஷர்!!!

எஸ்.கே said...

//அதிலும் அதிக நேரம் உங்கூடப் பேசிட்டு இருந்தா எங்க வழியுறது மாதிரி ஆகிடுமோன்னு ஒரு பக்கம் எச்சரிக்கை மணி ஒலிக்குது. //

டிங் டாங் டாங் டிங் டாங்
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது!
ஒன்றும் அசையாமல் நின்று போனது!

எஸ்.கே said...

//இப்பக்கூட இத எழுதி உன்கிட்ட கொடுக்கிறேனா இல்ல தைரியம் இல்லாம கிழிச்சுப் போட்டுடப்போறேனா அப்படின்னு தெரியல.//

அப்ப அடுத்த போஸ்ட்:
கொடுக்க மறந்த காதல் கடிதங்கள்!

செல்வா said...

//காதல் பல ஓட்டைகள் நிறைந்ததுன்னு குறிப்பால் உணர்த்துறார் செல்வா!
//

உண்மையில் நீங்க ஒரு அறிஞர் !

எஸ்.கே said...

//ஆனா நான் உன்கிட்ட சொல்லுற பிடிச்சிருக்கு அப்படிங்கிற வார்த்தையோட அர்த்தம் வேற.
//

அதாவது மசால்வடையை பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கும் குலாப்ஜாமூனை புடிச்சிருக்குன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்!

எஸ்.கே said...

//என்னமோ தெரியல உன்னப் பார்க்கும்போது வர்ற உணர்வு வேற பொண்ணுகளைப் பார்க்கும் போது வர்றதில்லை. //

சோ நிறைய பொண்ணுங்களை சைட் அடிக்கிறீங்க! அதை போய் இப்படி உளறிட்டீங்களே!

செல்வா said...

//உங்க விளக்கமாறு சீ விளக்க உரை அருமை///

இதுக்குப் பேருதான் விளக்கு மாறா ?

எஸ்.கே said...

//வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவமும் உருளுதடி//

நாக்குப் பூச்சியா இருக்குமோ?

செல்வா said...

//சோ நிறைய பொண்ணுங்களை சைட் அடிக்கிறீங்க! அதை போய் இப்படி உளறிட்டீங்களே!
/

ஹி ஹி ஹி ., எல்லாம் ஒரு தைரியம்தான் !!

செல்வா said...

//நாக்குப் பூச்சியா இருக்குமோ? //

வைர முத்துதான் இதுக்கு பதில் சொல்லணும்

எஸ்.கே said...

// பஸ்ல போகும்போது சில பொண்ணுக காதுல EAR PHONE மாட்டிக்கிட்டு குசுகுசுனு பேசுறதப் பார்த்தா ஒருவேளை நீயும் நாளைக்கு என்கூட இப்படித்தான் பேசுவியோ அப்படின்னு உன் நியாபகம்தான் வருது.//

அப்ப இப்ப யார்கூட பேசிகிட்டு இருப்பாங்க!

எஸ்.கே said...

//நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறேன்.//

பக்தா உன் தவத்தை மெறிச்சி உனக்கு வாரம் கொடுத்தோம்!

செல்வா said...

//அப்ப இப்ப யார்கூட பேசிகிட்டு இருப்பாங்க!//

யார் கூட பேசுறாங்களோ , அவுங்க கூடத்தான் !!

எஸ்.கே said...

எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் சாதரணமா பேசுற நான் உன்கிட்ட மட்டும் என்னமோ கடன் வாங்கிப் பேசுறது மாதிரி பேசுறேன். ///

பேசுறதே கடனா? பின்னால கடன் கேட்டா என்ன நினைக்க போறாங்களோ!


//ஏன்னா அதிகமா பேசினா எங்க லூசு அப்படின்னு நினைச்சிடுவியோ அப்படிங்கிற ஒரு பயம்தான்.//

கம்மியா பேசுனா அப்படி நினைக்க மாட்டாங்களா? (எதுக்கும் ஒரு மொக்கையை சொல்லி பரிசோதிக்கவும்)

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த காதலால தான் ஏழைகள் அப்படின்னு ஒரு வர்க்கம் மேலும் உருவாகிடுமோ அப்படின்னு நினைக்கத் தோணுது///

இது யோசிக்க வேண்டிய வரிகள்....
[எப்பிடி மக்கா உனக்கு இப்பிடி எல்லாம் தோணுது]

MANO நாஞ்சில் மனோ said...

//காதல் காதல் காதல்...
காதல் போயின்
சாதல்(பாட்டில்) சாதல்(பாட்டில்) சாதல்(பாட்டில்)....//

அது என்ன பாட்டில்னு பேரை சொல்லுமய்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

//அதே தான் , எதையும் சூதானமா பண்ணனும் !///

ஆமாமா மொத்தமா அடி வாங்கனும்ல அதான்....

செல்வா said...

//இது யோசிக்க வேண்டிய வரிகள்....
[எப்பிடி மக்கா உனக்கு இப்பிடி எல்லாம் தோணுது]//

ஹி ஹி , மனோ அண்ணா அது எல்லாம் பார்த்து மொக்க போடா மாட்டேன்னு நினைச்சிடாதீங்க , உங்க சங்கத்த ஓட ஓட விரட்டுவேன் !!

MANO நாஞ்சில் மனோ said...

//NICE ONE. ஆனால் நிறைய காதலர்கள் இதை ஒத்துக்க மாட்டாங்க!//

எலேய் நானும் காதல் பண்ணினவந்தான்....

MANO நாஞ்சில் மனோ said...

//ஸ்கூல் பசங்க லவ் பண்ணறது தாங்க முடியலை. எங்க ஆபீஸ் back side ஒரு ஸ்கூல் இருக்கு. மூணு மணிக்கு ஸ்கூல் விட்டதும் எங்க ஆபீஸ் இருக்குற தெருவுல நின்னுகிட்டு அதுக கொஞ்சுறத பார்த்தா மூஞ்சிலையே மிதிக்கனும்னு தோணுது..///

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பொறாமையா பாரு.....

எஸ்.கே said...

//MANO நாஞ்சில் மனோ said...

//NICE ONE. ஆனால் நிறைய காதலர்கள் இதை ஒத்துக்க மாட்டாங்க!//

எலேய் நானும் காதல் பண்ணினவந்தான்....//

அப்ப நீங்க ஒத்துக்கிறீங்களா?

எஸ்.கே said...

//அதே மாதிரி இப்போதைக்கு நான் ஒரு சின்ன கம்பனிலதான் வேலை பார்க்கிறேன். ஆனா சீக்கிரமே பெரிய ஆள வருவேன். அந்த நம்பிக்கையும் அதற்க்கான முயற்சியும் இருக்கு.//

இதைச் சொல்லனும். அப்பத்தான் பையனை நம்பி போனா காப்பாத்துவான்னு ஒரு நம்பிக்கை வரும்!

MANO நாஞ்சில் மனோ said...

//கோடுன்னா நீளமாத்தான இருக்கும். ஏன் ஒவ்வொரு கோட்டுக்கும் நடுவுல ஓட்டை இருக்கு? எஸ்.கே என்னான்னு கேளுங்க.///

அவன் கூகுள் செய்த சதின்னு சொல்லுவான் பாருங்க...

vinu said...

மச்சி போலீசு தீர்ப்பு எங்கேப்பா பாதிலே வுட்டுட்டு போய்டீங்க

செல்வா said...

////அதே மாதிரி இப்போதைக்கு நான் ஒரு சின்ன கம்பனிலதான் வேலை பார்க்கிறேன். ஆனா சீக்கிரமே பெரிய ஆள வருவேன். அந்த நம்பிக்கையும் அதற்க்கான முயற்சியும் இருக்கு.//

இதைச் சொல்லனும். அப்பத்தான் பையனை நம்பி போனா காப்பாத்துவான்னு ஒரு நம்பிக்கை வரும்!

///

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு ,, நான் மாத்துறேன் .

செல்வா said...

// vinu said...
மச்சி போலீசு தீர்ப்பு எங்கேப்பா பாதிலே வுட்டுட்டு போய்டீங்க///



போலீசு பயந்து போய்ட்டார் ..

MANO நாஞ்சில் மனோ said...

//கடிதம் நல்லா இருக்கு..
கலைஞர் டிவி-யில் இதுபோன்ற நல்ல நிகழ்ச்சி பார்க்க வழிசெய்ததற்கு நன்றி..///

பெண் சிங்கம், இளைஞன்'னையும் பார்க்க நேரிடும் ஜாக்கிரதை,
சேதாரம் ஆனால் மொக்கையன் பொறுப்பல்ல..........

செல்வா said...

//பெண் சிங்கம், இளைஞன்'னையும் பார்க்க நேரிடும் ஜாக்கிரதை,
சேதாரம் ஆனால் மொக்கையன் பொறுப்பல்ல.....//

எனக்கா அக்கரைப் படும் மனோ அண்ணன் வாழ்க .. இதுக்காகவெல்லாம் மொக்கை போடுறத நிறுத்த மாட்டேன் .. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//அதாவது மசால்வடையை பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கும் குலாப்ஜாமூனை புடிச்சிருக்குன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்!///

இப்போ போயி ஏன் வடைய நியாபக படுத்துறீங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//பக்தா உன் தவத்தை மெறிச்சி உனக்கு வாரம் கொடுத்தோம்//

உதை கொடுத்தோம்னு சொல்லுங்க....

செல்வா said...

மனோ அண்ணன் மறுபடியும் ஒரு வடை வென்றார் !!

Unknown said...

சாதனை சரித்திரம் நிகழ்ச்சி பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி...
காதல் பற்றி உங்கள் சொந்த கருத்துக்கள், இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தவை. நீங்கள் தொடர்பதிவுக்கு அழைத்த சம காலக்கல்வி தொடரை நல்லாவே எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறோம்.

MANO நாஞ்சில் மனோ said...

//ஹி ஹி , மனோ அண்ணா அது எல்லாம் பார்த்து மொக்க போடா மாட்டேன்னு நினைச்சிடாதீங்க , உங்க சங்கத்த ஓட ஓட விரட்டுவேன் !!//

உன்னை தூக்கி போட்டு மிதிக்க மகளிர் அணி தயார் நிலையில் இருக்காங்க வாடி.......

செல்வா said...

//தொடர்பதிவுக்கு அழைத்த சம காலக்கல்வி தொடரை நல்லாவே எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறோம்.
//

உண்மைதாங்க ,ரொம்ப நல்லா எழுதிட்டு இருக்கீங்க .. ரொம்ப சந்தோசமா இருக்கு ..

Unknown said...

//மொத்ததுல காதலிக்க நினைக்குறவங்க உங்க வாழ்க்கைல ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க.//
//" காதல் ஒன்னியும் கடவுள் இல்லையாட , அந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா!!//

MANO நாஞ்சில் மனோ said...

//அப்ப நீங்க ஒத்துக்கிறீங்களா?//

பிளான் பண்ணி பண்ணனும்....
[ஓடுலே மனோ]

Unknown said...

//தங்களின் சமுதாய அக்கறை சிறப்பானது. பள்ளி வாழ்வில் காதல் என்றால் எதிர்காலம் குறித்து கவலைப்படுவது நியாயமாதே!//

Unknown said...

வாரத்திற்கு ஒரு நாளாவது சமூகம் பற்றிய பதிவை எழுதலாமே..

அமுதா கிருஷ்ணா said...

தி.நகர் பஸ்ஸ்டாண்டில் மதியம் 3லிருந்து 4 மணிக்கு ஸ்கூல் பசங்க லவ் செய்வதை பார்ப்பது தான் பஸ்ஸில் காத்து இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு.

செல்வா said...

//வாரத்திற்கு ஒரு நாளாவது சமூகம் பற்றிய பதிவை எழுதலாமே.. //

எழுதலாம்க , ஆனா எல்லோரும் அழுதா என்ன பண்ணுறது ? ஹி ஹி
பாவம் .. செல்வா கதைகள் படிச்சே பலபேர் பல விதமா பயந்து போய் இருக்காங்க .. எங்க மறுபடியும் திங்கள் கிழமை வந்திடுமோ அப்படின்னு ..

மாணவன் said...

61 ஆவது கடிதம்

செல்வா said...

// அமுதா கிருஷ்ணா said...
தி.நகர் பஸ்ஸ்டாண்டில் மதியம் 3லிருந்து 4 மணிக்கு ஸ்கூல் பசங்க லவ் செய்வதை பார்ப்பது தான் பஸ்ஸில் காத்து //



அட பாவமே , இதுல என்ன கொடுமை அப்படின்னு சொன்னா காதலுக்கு வயசு வித்தியாசம் எல்லாம் கிடையாது , அது எந்த வயசுல வேணாலும் வரும் அப்படின்னு சொல்லுவாங்க .. எனக்கு அது பத்தி பிரச்சினை இல்லை .. காதல் அப்படின்னு வெளில சொல்லப்படுற அதாவது ஒரு ஹார்மோன் மாற்றத்த நம்ம ஆளுக அப்படி இப்படி சொல்லி அந்த இரண்டும் கெட்டான் வயசுல இருக்குற சிலரோட வாழ்க்கை பாதிக்கப் படுத்தே அப்படிங்கிறதுதான் என்னோட வருத்தம் ..

செல்வா said...

மாணவர் சார் மாணவர் சார் .. கடிதம் நீங்களும் எழுதுறீங்களா ?
நான் வேணா உள்ள உங்க பேர போட்டு தொடர் பதிவுக்கு அழைக்கவா ?

மாணவன் said...

//கோமாளி செல்வா said...
மாணவர் சார் மாணவர் சார் .. கடிதம் நீங்களும் எழுதுறீங்களா ?
நான் வேணா உள்ள உங்க பேர போட்டு தொடர் பதிவுக்கு அழைக்கவா ?//

அய்யயோ இது என்ன கொடுமை..’

ஆத்தாடி நான் இங்கே வரவே இல்லை...எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.........

Anonymous said...

தொடர்பதிவு கூப்டாலும் கூப்டேன். அவங்கவங்க ஆளுக்கு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஸ்கூல் பசங்க காதல் பண்ற கருமாந்திரம்லாம் சினிமாவப் பாத்துதான்..... துள்ளூவதோ இளமை படத்துக்கு அப்புறம் அதே மாதிரி நிறைய படங்கள் வருது, சென்சார் போர்டு மொதல்ல இந்த அண்டர் ஏஜ் லவ்வு, சாங்கு எல்லாத்தையும் தடை பண்ணனும். ஏன் வெயில் படத்துல கூட சின்ன வ்யசுல ஒரு ஈர்ப்பு இருக்கறதா காட்டி இருப்பாங்க, இதுவும் சரியல்ல! அந்த வயசு, சினிமாவுக்கும் யதார்த்ததுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத வயசு (ஏன் பெரிய எருமைகளே அப்பிடித்தான் திரியுதுங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்திரா said...
தொடர்பதிவு கூப்டாலும் கூப்டேன். அவங்கவங்க ஆளுக்கு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டீங்க./////

வெயிட் வெயிட் இன்னும் நம்ம பங்கு பாக்கி இருக்குங்கோ..... !

Anonymous said...

//ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ணிருக்கு. அப்போ எனக்கு அப்படி ஒரு பீலிங் இல்ல , அதனால நண்பர்களா இருப்போமே அப்படின்னு கேட்டுகிட்டேன். இப்பத் தான் எனக்குப் புரியுது, நான் அப்படி சொன்னபோது அந்தப் பொண்ணு எவ்ளோ பீல் பண்ணிருக்கும்னு. //


ரொம்ப பீல் பண்றீங்களே.. அப்டினா இந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சுனா மறுபடியும் அந்தப் பொண்ண லவ் பண்ணப் போற ஐடியா இருக்கா???
இது நல்லா இருக்கே..

செல்வா said...

//
அந்த வயசு, சினிமாவுக்கும் யதார்த்ததுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத வயசு (ஏன் பெரிய எருமைகளே அப்பிடித்தான் திரியுதுங்க)
//

அதெல்லாம் விடுங்க , கோட்டுக்கு மேல இருக்குற மேட்டர் பத்தி சொல்லுங்க .. நான் எவ்ளோ பீல் பண்ணி எழுதிருக்கேன் .. அட சென் ..இதுக்குத்தான் சமுதாய அக்கறையே நான் படுறதில்லை .. ஹி hi

செல்வா said...

//

ரொம்ப பீல் பண்றீங்களே.. அப்டினா இந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சுனா மறுபடியும் அந்தப் பொண்ண லவ் பண்ணப் போற ஐடியா இருக்கா???
இது நல்லா இருக்கே..

//

ஐயோ இது கற்பனைங்க !!

ஜீவன்பென்னி said...

தம்பி காதல் ரசம் சொட்டுதுப்பா....!!!!?????? நல்லாத்தான் இருக்கு பட் இன்னும் எதிர்பார்க்குறேன். நெசமா ஒரு காதல பண்ணிட்டு எழுது எப்புடி இருக்குன்னு பாப்போம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறேன்.//

பக்தா உன் தவத்தை மெறிச்சி உனக்கு வாரம் கொடுத்தோம்!//

எத்தனை வாரம் கொடுத்தீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

// vinu said...
மச்சி போலீசு தீர்ப்பு எங்கேப்பா பாதிலே வுட்டுட்டு போய்டீங்க///



போலீசு பயந்து போய்ட்டார் ..//
பயம் இல்லை துஷ்டனை கண்டால் தூர விளக்குன்னு எங்க ஆயா சொல்லிருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

74

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// என்றும் நட்புடன் XYZ.////

எல்லாத்தையும் ஒழுங்கா எழுதிட்டு கடைசில் ஏன் இந்த வெளையாட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தம்பி காதல் கடிதம் இயல்பா இல்ல, மொதல்ல ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து ஸ்டார்ட் பண்ணு........ அப்புறம் தன்னால ஓடுவரும்.........!

அருண் பிரசாத் said...

தம்பி வேற நல்ல ப்ளாக் இருந்தா போய் படிங்க தம்பி . இதெல்லாம் ஒரு ப்ளாக்னு படிச்சிக்கிட்டு.!

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி .க .......க ....க ........போ ......நல்லா தான் காதல் பத்தி சொல்லி இருக்கா தம்பி ........

logu.. said...

Adengappa...

தினேஷ்குமார் said...

கிரேட் செல்வா காதலை பற்றி நல்லாவே சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

உங்க படைப்பு அசத்துது அதவசே எஸ் கே ஒரு கதை எழுதிட்டார் போங்க

Gunasekaran said...

// பொதுவாவே காதல் அப்படிங்கிற விசயம் பெரும்பாலும் அழக பார்த்து வரதுதானே//
மிகக் சரியான கருத்து..


//கலைஞர் டிவி ல தினமும் இரவு 10௦ மணிக்கு " சாதனை சரித்திரம் " அப்படின்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. அத எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா பாருங்க. அதாவது உலகப் போர்கள் பற்றியும் அந்த காலத்துல எடுக்கப்பட்ட வீடியோக்களும் போடுறாங்க//

இந்த நிகழ்ச்சிய நானும் பாத்தேன். ஒரு தொடர்ச்சியே இல்ல. Networks ல 'lost in hyperspace' னு சொல்லுவாங்க.(When reading a hypertext, following links just as they seem interesting may soon lead to the reader's perception to be somewhat "lost") . ஜெயா டிவி ல வர காலச் சுவடு அளவுக்கு narration சரியா இல்ல. போகப் போக பாப்போம், how it proceeds னு..

தினேஷ்குமார் said...

கோமாளி செல்வா said...
//ஸ்கூல் பசங்க லவ் பண்ணறது தாங்க முடியலை. எங்க ஆபீஸ் back side ஒரு ஸ்கூல் இருக்கு. மூணு மணிக்கு ஸ்கூல் விட்டதும் எங்க ஆபீஸ் இருக்குற தெருவுல நின்னுகிட்டு அதுக கொஞ்சுறத பார்த்தா மூஞ்சிலையே மிதிக்கனும்னு தோணுது..
///

அப்படி கீது அடிச்சு போடாதீங்க ?

செல்வா நான் அடிச்சே இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி இவ்ளோ பெரிய எஸ்ஸே எழுது உன் அப்சட் குடுத்தா அத படிச்சு முடிக்கிறதுக்குள்ள அது ஔவையார மாறிடுமே ????

மங்குனி அமைச்சர் said...

கண்ணா ஏதாவது பேச்சு போட்டில கலந்துக்கிட்டியா ???? இப்படி போலந்து கட்ற,.................. இதுக்குதான் சின்ன புள்ளைகள லவ் லெட்டர் எல்லாம் எழுத கூப்பிடக்கூடாதுங்கிறது

Anonymous said...

Very nice!

Chitra said...

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : வந்தியா செல்வா கதைகள் எழுதி நாலு பேர குழப்புனியானு இல்லாம உனக்கு எதுக்கு சமுதாய அக்கறை எல்லாம் ?

பின்குறிப்பு : இதுல காதல் பத்தி சொன்னது எல்லாமே என்னோட கருத்துக்கள் தாங்க. அது தவறா கூட இருக்கலாம்.


....... நேர்மையா இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா உண்மையை சொல்வது? அவ்வ்வ்.....

சௌந்தர் said...

மச்சி நீ காதல் கடிதம் எழுதினா கூட மொக்கையா தான் எழுதுவே போல உன் மொக்கையை ரசிக்கும் பெண்ணுக்கு இந்த லெட்டர் கொடு

Unknown said...

ஸ்கூல் பிள்ளைங்க காதல் பண்றது எல்லாம் சினிமா பார்த்து வர்ற இம்ப்ரசனாலதான்..

செல்வா.. உங்க காதல் கடிதத்தை விட அதைப் பற்றிய உங்க கருத்து நல்லாயிருக்கு..

:-)

Unknown said...

பஸ்ல போகும்போது சில பொண்ணுக காதுல EAR PHONE மாட்டிக்கிட்டு குசுகுசுனு பேசுறதப் பார்த்தா ஒருவேளை நீயும் நாளைக்கு என்கூட இப்படித்தான் பேசுவியோ அப்படின்னு உன் நியாபகம்தான் வருது. நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறே////

ada ada..enna oru feelings of prayers.

Unknown said...

நோ நோ பீலிங்க்ஸ்
ஒரே காதல் ஊரில் இல்லைப்பா ....

கடிதம் நல்ல இருக்கு
கூடிய விரைவில்
டும் டும் நடக்கட்டும்
வாழ்த்துக்கள் அண்ணா...

நிசமா ரொம்ப பீலிங்க்ஸ் கொட்டி இருக்கீங்க கூடவே உங்கள் மொக்கையும்..

Unknown said...

93..

Unknown said...

94..

Unknown said...

95...

ஸ்கூல் பசங்க லவ் பண்ணறது தாங்க முடியலை. எங்க ஆபீஸ் back side ஒரு ஸ்கூல் இருக்கு. மூணு மணிக்கு ஸ்கூல் விட்டதும் எங்க ஆபீஸ் இருக்குற தெருவுல நின்னுகிட்டு அதுக கொஞ்சுறத பார்த்தா மூஞ்சிலையே மிதிக்கனும்னு தோணுது..//

hahaha poramai ungalukku...

Unknown said...

96..

Unknown said...

இப்பவெல்லாம் காதல் அப்படின்னு சொல்ல கேட்டாலே பயமா இருக்கு ., துஷ்டரைக் கண்டால் தூர விலகு அப்படிங்கிற மாதிரி தோணுது///

kalvitil porikka pada veendiya vaarthigal..

Unknown said...

98..

Unknown said...

99..//தங்களின் சமுதாய அக்கறை சிறப்பானது. பள்ளி வாழ்வில் காதல் என்றால் எதிர்காலம் குறித்து கவலைப்படுவது நியாயமாதே!
//

repeatu..

Unknown said...

100

அப்பாட ஒரு நூறு கமெண்ட் போட்டாச்சு
வாழ்த்துக்கள் செல்வா அண்ணே.

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னால இது இம்புட்டு பெரிய பதிவு... கண்டிப்பா படிக்கனுமால...

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னால இது இப்படி சமூக அக்கறையோட எழுதியிருக்க... நானும் எழுதனுமே...

வெங்கட் said...

அம்மா.................டி..!!
எம்ம்மாம் பெரிய பதிவு..

காதல் பத்தின நல்ல சமூக சிந்தனை..

ஆனா எவ்ளோ தான் நல்லது
சொன்னாலும் அந்த வயசுல இருக்குற
பசங்க / பொண்ணுகளுக்கு புரியாது..

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. செல்வா கலக்கீட்டீங்க.. சத்தியமா இப்படி ஒரு மேட்டரை நான் எதிர்பார்க்கல.. ( இந்த இடத்துல மேட்டர்னா சாதா மேட்டர்)

சி.பி.செந்தில்குமார் said...

யோசிக்க ஒரு மணி நேரம் டைப் பண்ண 2 மணி நேரம் ஆகி இருக்குமே...

Unknown said...

ட்விட்டரிலும் கலக்குறீங்க..

ஜில்தண்ணி said...

சூப்பர் மாப்ள :)

என்னுமோ காதல் பத்திலாம் சொல்ற :) ம்ம்ம் நடத்து நடத்து

Sathish said...

நான் ரொம்ப லேட்டு போல... யாருப்பா அது செல்லம்...

Sathish said...
This comment has been removed by the author.
Sathish said...

110

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

சக்தி கல்வி மையம் said...

இதையும் கொஞ்சம் பாருங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

http://sakthistudycentre.blogspot.com/2011/01/2.html

டைம்இருக்கா?

Prabu Krishna said...

பின் குறிப்பு நிஜமான உண்மை. இன்று காதல் பெரும்பாலும் காமத்துக்கு மட்டுமே முக்கியத்துவும் தருகிறது.