Monday, January 31, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : சென்ற பதிவின் முன்குறிப்பையே  இந்தப் பதிவின் முன்குறிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

                                செல்போன் டவரும் செல்வாவும் 

  கடந்த வருடம் செல்வாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அப்பொழுது சிறிது நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் வெளியில் கிளம்பலாம் என்று கிளம்பியபொழுது அவரது உறவினர் " இங்க இந்த போன் டவரே கிடைக்கல , வெளிய கொண்டுபோய் கிடைக்குதான்னு பாரு "என்றார்.

  வெளியில் சென்ற செல்வா நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவரது வீட்டில் இருந்து அவரை அழைத்தனர். அப்பொழுது செல்வா " ஒரு சைடு இருக்குற போல்ட் எல்லாம் கழட்டிட்டேன் , இன்னும் இரண்டு சைடு தான் , சீக்கிரமா வந்திடுவேன் " என்றார். 
   
 இதைக்கேட்ட அவரது தந்தை " என்ன சொல்லுற ஒண்ணும் புரியலையே ? "

மாமா மொபைலுக்கு டவர் கிடைக்குதான்னு பார்க்கச் சொன்னார் , நானும் எல்லா கடைலயும் கேட்டேன் , எங்கயும் கிடைக்காதுன்னு சொன்னாங்க ,  அதான் இங்க ( எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி  ) ஒரு டவர் இருந்துச்சு , அத கழட்டிட்டு வந்திடலாம்னு தான் கழட்டிட்டு இருக்கேன் , ஆனா இது கொஞ்சம் வெய்ட்டா  இருக்கும் போல " என்று முடித்தார். 

இதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் " தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு " என்றார் கோபமாக.


                              கார்த்திக் , அருண் மற்றும் செல்வா 

   சென்ற ஞாயிறு அன்று செல்வா அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருணை சந்திக்கலாம் என்று திருப்பூர் சென்றார். மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.

   அருகில் இருந்த கார்த்திக் இப்பவே மணி 11 ஆச்சு , இப்ப போனா நாளைக்கு ஷோக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றார். அப்பொழுது நடந்து சுவாரஸ்யமான உரையாடல்கள்.  

அருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.

செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?

கார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.

அருண் : அடேய் , நான் சொன்னா ப்ளாக் கருப்பு இல்ல,"யாருக்கும் தெரியாம வாங்கறது!" 

செல்வா : யாருக்கும் தெரியதுனா , நமக்கு மட்டும் எப்படித் தெரியும் ? 

அருண் : படம் பார்க்கப் போற விசயத்த இத்தோட நிறுத்திக்குவோம் , இனிமேல் அதப் பத்தி பேசவேண்டாம் , என்னால முடியாது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விரைந்தனர். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த ஒரு படத்தினைப் பார்த்த அருண் " அது பிக்காசோ படம் " என்றார்.

செல்வா : அது என்ன பழம் ? 

அருண் : பிக்காசோ பழம் இல்லை , அவர் ஒரு டிராயர்!

செல்வா : எங்க தாத்தா போட்டிருக்காரே , அதுவா ? 

அருண் : இனிமே ஒரு வார்த்தை பேசினா கூட நான் அப்படியே எந்திரிச்சு ஓடிருவேன். கார்த்தியை நோக்கியவாறு இவனெல்லாம் எதுக்கு கூப்பிட்ட ? உசுர வாங்குறான்!!

அதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!

பின்குறிப்பு : போன பதிவுல இருக்குற பின்குறிப்புதான் இதுக்கும். 

64 comments:

வைகை said...

கொஞ்சம் சிரமம்தான்!

வைகை said...

அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.////

அப்ப கூட்டமா தற்கொலைக்கு முயற்சிபண்ணியிருக்கிங்க?!

வைகை said...

யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?////////


இதுக்கு அந்த படமே தேவலை!

செல்வா said...

//அப்ப கூட்டமா தற்கொலைக்கு முயற்சிபண்ணியிருக்கிங்க?! //

ஐயோ இல்ல , அவர் அப்படித்தான் சொன்னார் ..

செல்வா said...

//இதுக்கு அந்த படமே தேவலை!//

ரமேஷ் அண்ணன் ப்ளாக் அவ்ளோ கொடுமையா ?

வைகை said...

கார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.///

ஓஒ....கார்த்திக் இவ்வளவு புத்திசாலியா?!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் " தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு " என்றார் கோபமாக.//

இது உண்மைக்கதைதானே! சூப்பருங்க!! என்ன ஒரு வில்லத்தனம்?

வைகை said...

மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே/////

இது உண்மையா?!! மூஞ்சிகள பாத்தா அப்பிடி தெரியலையே?!

Saravanan Trichy said...

உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்! கவலை வேண்டாம். :P

செல்வா said...

//இது உண்மையா?!! மூஞ்சிகள பாத்தா அப்பிடி தெரியலையே?! /

வேற எப்படித் தெரியுதுங்க அண்ணா ?

செல்வா said...

//இது உண்மைக்கதைதானே! சூப்பருங்க!! என்ன ஒரு வில்லத்தனம்?
//

ஹி ஹி ஹி , கற்பனைங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இத படிக்கிறதுக்கு நான் பேசாம வெறும்பய ப்ளாக் படிச்சிருக்கலாம். அவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரவணன் said...

உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்! கவலை வேண்டாம். :P///

கண்ணதாசனே சொல்லிட்டாரா. அப்போ உண்மையாத்தான் இருக்கும்

செல்வா said...

//உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்! கவலை வேண்டாம். :P //

நான் நம்பர் ஒண்ணா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்! கவலை வேண்டாம். :P //

நான் நம்பர் ஒண்ணா ?//


ஆமா நீதான் நம்பர் ஒன் டுபாக்கூரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?////////


இதுக்கு அந்த படமே தேவலை!//

ஏன் இந்த கொலைவெறி?

சக்தி கல்வி மையம் said...

அருமையான கற்பனை.. அதை எழுத்தில் கொண்டு வந்தது அதை விட அருமை..

அருண் பிரசாத் said...

ரொம்பவே முத்திடுச்சு......

வரேன் வந்து வைத்தியம் பண்ணுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனிமே இந்த திங்கள்கிழமைக்கு வேற பேரு வெக்கலாம்னு இருக்கேன், நெப்டியூன் கிழமை, புளூட்டோகிழமை... ரெண்டுல ஏதாவது ஒண்ணு செலக்ட் பண்ணிக்குங்க! அப்புறம் செல்வா திங்கள் கிழமை வரும் வரும்னு எதிர்பார்த்து ஏமாந்திடுவான்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
ரொம்பவே முத்திடுச்சு......

வரேன் வந்து வைத்தியம் பண்ணுறேன்/////

அப்போ போகும் போதே அந்த லேகியத்த தயார் பண்ணி எடுத்துட்டு போயிரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?/////

அட மொக்கைலேயும் ஒரு விஷயம் கரெக்டா சொல்லி இருக்கியே? இந்த மாதிரி கேவலமான விஷயம்லாம் அந்த ப்ளாக்குலதன் இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர்.//////

என்ன சைட் டிஸ்சு?

செல்வா said...

//அட மொக்கைலேயும் ஒரு விஷயம் கரெக்டா சொல்லி இருக்கியே? இந்த மாதிரி கேவலமான விஷயம்லாம் அந்த ப்ளாக்குலதன் இருக்கும்!
//

அவர் ப்ளாக்கின் மகிமை அறிந்தவர் நீங்கதான் .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பின்குறிப்பு : போன பதிவுல இருக்குற பின்குறிப்புதான் இதுக்கும். /////

ஓஹோ பின்குறிப்புன்னா இதுதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

Arun Prasath said...

nalla vaela... ena manatha vaangaama irunthiyae..

karthikkumar said...

Arun Prasath said...
nalla vaela... ena manatha vaangaama irunthiyae..////

ஆமா மானத்த தவிர மத்த எல்லாத்தையும் வாங்கிட்டான்.. ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதுக்கு நான் என்னோட பதிவையே படிச்சிருவேன்..

எஸ்.கே said...

செல்வாவைப் போன்ற அறிவாளிகள் இவ்வுகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

செல்வாவைப் போன்ற அறிவாளிகள் இவ்வுகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்!

//

ஆமா ஆமா .. நாமக்கு அறிமுகமானது தண்டனை

எஸ்.கே said...

பிளாக்ல டிக்கெட் எடுக்க முடிவு பண்ணீங்க சரி, A பிளாக்கா, B பிளாக்கா எந்த அபார்ட்மெண்ட்?

சி.பி.செந்தில்குமார் said...

போன பதிவில் நான் போட்ட கமெண்ட்டையே இஅதற்கும் போட்டுக்கொள்ளவும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

போன பதிவில் போட்ட ஓட்டையே.... ஓ சாரி அது முடியாது...

எஸ்.கே said...

போன பதிவின் கமெண்டையே போடுகிறேன்!

அறிவாளிகள் பிறப்பதில்லை ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்!

ரொம்ப சீப்பான ஜெராக்ஸ் சார் வந்து வாங்கிங்க்க!

மாணவன் said...

//செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!//

ரொம்ப ச்சிரமம்........

மாணவன் said...

நவீன உலகின் அறிவாளியின் தந்தையே... தத்துவஞானி சாக்ரடீசின் பேரனே.... நீர் வாழிய பல்லாண்டு... :-))

THOPPITHOPPI said...

//நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!
//

:)

MANO நாஞ்சில் மனோ said...

டாய் அருவாளை எடுலேய் மொத்தமா இன்னைக்கு மொக்கையனை காலி பண்ணிற வேண்டியதுதான் எட்றா வண்டிய.....

MANO நாஞ்சில் மனோ said...

//இதுக்கு அந்த படமே தேவலை!//

அட அப்பிடியா சொல்லவே இல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

//அப்ப கூட்டமா தற்கொலைக்கு முயற்சிபண்ணியிருக்கிங்க?!//

நம்மளையும் சேர்த்துல்லாய்யா கொல்லுராணுவ....
சனி போனா தனியா போவாதோ....

MANO நாஞ்சில் மனோ said...

//இது உண்மைக்கதைதானே! சூப்பருங்க!! என்ன ஒரு வில்லத்தனம்//

ராஜபக்ஷே முன்னாடி கொண்டு போயி நிறுத்திர வேண்டியதுதான் பாஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

//உலகம் உருண்டைனு சொன்ன கண்ணதாசனையே கட்டையால் அடித்த உலகமிது...நீங்க வாங்குன திட்டுகள் எல்லாம் படி கட்டுகளாக மாறும்! கவலை வேண்டாம். :P//

இவனுங்க போனது சைட் அடிக்க பாஸ்...
உலகம் தெரியாத சின்னபுள்ளையா இருக்கீங்களே....

MANO நாஞ்சில் மனோ said...

//இனிமே இந்த திங்கள்கிழமைக்கு வேற பேரு வெக்கலாம்னு இருக்கேன், நெப்டியூன் கிழமை, புளூட்டோகிழமை... ரெண்டுல ஏதாவது ஒண்ணு செலக்ட் பண்ணிக்குங்க! அப்புறம் செல்வா திங்கள் கிழமை வரும் வரும்னு எதிர்பார்த்து ஏமாந்திடுவான்ல?//

மொக்கை கிழைமைன்னு வச்சிருவோம் பன்னிகுட்டி...

MANO நாஞ்சில் மனோ said...

//ரொம்பவே முத்திடுச்சு......

வரேன் வந்து வைத்தியம் பண்ணுறேன்//

கேரளா கோடாங்கிய கூட்டிட்டு வாங்கய்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

//இதுக்கு நான் என்னோட பதிவையே படிச்சிருவேன்..//

அப்போ நாங்கதான் பலி ஆடா அவ்வவ்வ்வ்வ்......

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவைப் போன்ற அறிவாளிகள் இவ்வுகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்!//


நீங்க சாபம் போடுறது புரியுது.....

MANO நாஞ்சில் மனோ said...

//போன பதிவில் நான் போட்ட கமெண்ட்டையே இஅதற்கும் போட்டுக்கொள்ளவும். ஹி ஹி///

ஓகே ஜெராக்ஸ் பண்ணி வச்சுக்குறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//கொஞ்சம் சிரமம்தான்//

எதுக்கு வடை துன்னுறதுக்கா பாஸ்.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஓஒ....கார்த்திக் இவ்வளவு புத்திசாலியா?!!//

என்னை கொல்லுறாங்களே....

MANO நாஞ்சில் மனோ said...

நான் ஐம்பதாவது....

இம்சைஅரசன் பாபு.. said...

எலேய் அருண் உயிரோட ஊர் போய் சேர்ந்தான என்ன .......?

MANO நாஞ்சில் மனோ said...

//எலேய் அருண் உயிரோட ஊர் போய் சேர்ந்தான என்ன .......?//

மொக்கையனை பாத்ததுல இருந்து அருண் ஒரு "மாதிரி"யே வானத்தை வெறிச்சு பாத்துட்டு இருக்கானாம்....பாவம்....

Chitra said...

அதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!


......ரொம்ப ரொம்ப ரொம்ப சிரமம்........!! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Philosophy Prabhakaran said...

//
அருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.

செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ? //

செம நக்கல்...

சௌந்தர் said...

மச்சி டவர் எடுத்துட்டு வரலையா எனக்கும் டவர் வேண்டும் எடுத்துட்டு வா என்ன

Anonymous said...

//செல்வா போன்ற அறிவாளிகளை //

ஹலோ.. இங்க டவர் எடுக்கல.. சரியாவே காதுல விழுகல..

Unknown said...

ஊருக்குள்ள இந்த முன்குறிப்பு, பின் குறிப்பு தொல்ல தாங்க முடியலப்பா..

Anonymous said...

செல்வா கதைகளுக்கு காப்பி ரைட் வாங்கிடுப்பா செம கலக்கலா இருக்கு

Anonymous said...

செல்ஃபோன் டவர் சூப்பர்

Anonymous said...

60

Anonymous said...

61

Anonymous said...

காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்//
வயசு பசங்களுக்கு அதுக்குள்ள என்ன விரக்தி

Unknown said...

முதல் கதை நல்லாயிருக்கு, இரண்டாவது கடிகள் நிறைந்த மொக்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!//

ஹா..ஹா..ஹா சூப்பர்டா... டவர் பத்தி எழுதி இருக்கது மொக்கை தான். ஆனா நீ , அருண் , கார்த்தி டைலாக் சூப்பர்... :)