Monday, February 7, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : பூமி சூரியனை சுற்றி வருது அப்படின்னு சொன்னா கலீலியோவ கல்லால அடிச்சுக் கொன்றது அன்றைய உலகம்.பின்னர்தான் உண்மையை உணர்ந்து கொண்டது.

                                        அருண் + அருண் + செல்வா

  சென்ற சனிக்கிழமை தினத்தன்று மொரீசியசில் இருந்து இந்தியா வந்திருக்கும் செல்வாவின் நண்பர் அருண் அவர்ளை சந்திக்கலாம் என்று சுற்றுலா விரும்பி அருண் , கார்த்திக்குமார் மற்றும் செல்வா ஆகியோர் முடிவு செய்தனர். சில பல காரணங்களால் கார்த்திக் வர இயலாமல் போனது. சரி என்று அருண் மற்றும் சுற்றுலா விரும்பி அருண் ஆகியோர் செல்வாவை கோவை வருமாறு அழைத்தனர்.

  செல்வாவும் காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் செல்வா கோவை சென்ற நேரம் 11.௦30. பின்னர் அவர்களிடையே நடந்து உரையாடல்கள்.

அருண் ( சீனியர் ) : ஏன் டா இவ்ளோ நேரம் ? 

செல்வா : தலை சீவ மறந்திட்டேன் , அதான் பாதிவரைக்கும் வந்திட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் தலை சீவிட்டு வந்தேன்.

அருண் (ஜூனியர் ): உனக்கென்ன பொண்ணா பாக்குறோம் , இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. என்று கூறிவிட்டு மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குள் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.அப்பொழுது அருண் ( சீனியர் ) அவர்கள் "வரும்போது ஏன் கால நொடிச்சு நொடிச்சு நடந்து வந்த "? 

செல்வா : காலுல முள் ஏறிடுச்சு, அதான் அண்ணா! "

அருண் : இதுதான் உங்களோட கேட்ட பழக்கம் , இதுவே ஒரு வெள்ளைகாரனுக்கு முள் ஏறினா காலுல முள்ள எத்திக்கிட்டேன் அப்படின்னு சொல்லுவான் , ஆனா நம்ம ஆளுக மட்டும் முள்வந்து இவுங்க மேல ஏறிடுச்சு அப்படின்னு சொல்லுவாங்க.

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?

அருண் (ஜூனியர் ): நீ இப்பத்தான் இப்படியா ? இல்ல எப்பவுமே இப்படியா ? .. என்று கூறிவிட்டு மூவரும் சாப்பிட அஞ்சப்பர் உணவகம் செல்லலாம் என்று முடிவு செய்து அருண் ( ஜூனியர் ) அவர்களது வண்டியில் முதலில் செல்வாவை அழைத்துக்கொண்டு அஞ்சப்பர் உணவகம் இருந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு," இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் , அங்க இரு , நான் போய் அண்ணன கூட்டிட்டு வந்திடறேன் " என்றவாறு கிளம்பினார். சிறிது நேரம் கழித்து வந்த இருவரும் செல்வாவை அஞ்சப்பர் உணவகத்தில் இல்லாததைக் கண்டு அவருக்கு அழைத்தனர். 

அருண் : செல்வா , எங்க இருக்க ? 

செல்வா : அங்கேதான் இருக்கேன் .

அருண் : அதான் எங்க ?

செல்வா : நீங்க இறக்கிவிட்ட இடத்துல .

அருண் : அங்க ஏன் நிக்குற , நான்தான் அஞ்சப்பருக்கு வர சொன்னேன்ல ..

செல்வா : நீங்கதானே , அஞ்சப்பர் வரும்னு சொன்னீங்க , அதான் நாம ஏன் வீணா நடக்கனும்னு இங்கே நின்னுட்டேன் , அஞ்சப்பர இன்னும் காணோம் ?!!!

அருண் : ஐயா சாமி , அப்படி சொன்னது தப்புத்தான் , அப்படியே நேரா வா .. ( இவனெல்லாம் வச்சிட்டு எப்படித்தான் )

பின்னர் மூவரும் அஞ்சப்பர் உணவகத்தில் உணவு வகைகளை ஆர்டர் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது செல்வாவிடம் என்ன வேண்டும் என்று கேட்ட உணவாக ஊழியர் செல்வா சொன்ன பதிலைக்கேட்டு சற்றே அதிர்ச்சியுற்றார். செல்வா தனக்கு நேராக இருந்த மீன்தொட்டியில் வளர்க்கப்பட்ட மீன் ஒன்றை வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அதிர்சிக்குக் காரணம்.

அருண் : மானத்த வாங்காத , அது அழகுக்காக வளர்க்குறது..

செல்வா : சரி வேற எதாச்சும் கொடுங்க .. அதே தொட்டியில் இருந்த வேறு கலர் மீனைக் காட்டினார்.

அருண் : ஐயோ , அந்த தொட்டில இருக்குறது எல்லாமே அழகுக்காக வளர்க்குரதுதான்.

செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ? 

அருண் : இனிமேல் எதாச்சும் பேசினா கண்டிப்பா நான் இப்படியே கிளம்பிப் போய்டுவேன்.. உன்னப் பார்ப்பேன் அப்படின் நினைச்சிருந்தா கண்டிப்பா நான் மொரீசியசுலையே இருந்திருப்பேன். உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?

செல்வாவிற்கு புகழ் அதிகமாக பிடிக்காது என்பதால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

நீதி : முன்குறிப்புக்கும் செல்வா கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பின்குறிப்பு : வார வாரம் இரண்டு கதை எழுதுவேன் , ஆனா நேரப் பற்றாக்குறை காரணாமாக ஒரே கதை மட்டுமே இந்தவாரம். அதுவும் இல்லாம இதுல இருக்குற எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

43 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

வட வங்கிட்டயே வடயா?

Madhavan Srinivasagopalan said...

வனா டையன்னா

சி.பி.செந்தில்குமார் said...

>>>>அருண் : இதுதான் உங்களோட கேட்ட பழக்கம் , இதுவே ஒரு வெள்ளைகாரனுக்கு முள் ஏறினா காலுல முள்ள எத்திக்கிட்டேன் அப்படின்னு சொல்லுவான் , ஆனா நம்ம ஆளுக மட்டும் முள்வந்து இவுங்க மேல ஏறிடுச்சு அப்படின்னு சொல்லுவாங்க.

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?


அட ப்பாருங்க கெ பாக்யரஜ் சுந்தரகாண்டம் படத்துல உங்க டயலாக்கை சுட்டு டயலக் வெச்சிருக்காரு

சி.பி.செந்தில்குமார் said...

பதிவர் சந்திப்புக்கு அழைக்காமல் முறைமாமன் கார்த்தி, அருண் என தொடர்ந்து எதேச்சயாக சந்தித்து வரும் செல்வாவுக்கு எனது கடும் கண்டனம். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

?>>>>செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா

ஹ ஹ ஹா செம

எஸ்.கே said...

கடவுள்: அடிக்கடி நீதி சொல்றீயே? மனுநீதிச் சோழன்னு நினைப்போ?

செல்வா: மனுநீதிச் சோழனா, யாரு அவரு? மனு எழுதி தரவறா?

எஸ்.கே said...

அழகுக்கு அழகு சேர்க்க வந்து படியுங்கள் செல்வா கதைகள்!

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோ போடாத பதிவர் சந்திப்பும்,கிளாமர் இல்லாத நயனின் சிரிப்பும்.....

Madhavan Srinivasagopalan said...

///இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் //

நோட் தட் பாயிட் மை லார்ட்..
"செல்வா போனாதான் அஞ்சப்பர் வரும்"...
செல்வா ஓரடி எடுத்து வெச்சா.. அஞ்சப்பரு ரெண்டடி எடுத்து வெச்சி செல்வாவ நோக்கி வருவாரு..
இதை தப்பா புரிஞ்சிகிட்டு அங்குனையே நின்ன, செல்வா குற்றவாளிதான் எனத் தீர்பளித்து.. நீதி தேவதையின் புகழை நிலை நிறுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

எஸ்.கே said...

//Madhavan Srinivasagopalan said...

///இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் //

நோட் தட் பாயிட் மை லார்ட்..
"செல்வா போனாதான் அஞ்சப்பர் வரும்"...
செல்வா ஓரடி எடுத்து வெச்சா.. அஞ்சப்பரு ரெண்டடி எடுத்து வெச்சி செல்வாவ நோக்கி வருவாரு..
இதை தப்பா புரிஞ்சிகிட்டு அங்குனையே நின்ன, செல்வா குற்றவாளிதான் எனத் தீர்பளித்து.. நீதி தேவதையின் புகழை நிலை நிறுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..//

சட்டை மேதை மாதவன் வாழ்க!

சரவணன் said...

//முன்குறிப்பு : பூமி சூரியனை சுற்றி வருது அப்படின்னு சொன்னா கலீலியோவ கல்லால அடிச்சுக் கொன்றது அன்றைய உலகம்.பின்னர்தான் உண்மையை உணர்ந்து கொண்டது.//
அய்யயோ அப்டி சொன்னது கலீலியோவா? நா இவ்ளோ நாள் கண்ணதாசன்-னுல நெனச்சிட்டு இருந்தேன்....!

//உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?//
Y blood! same Blood...............:p

Madhavan Srinivasagopalan said...

எஸ்.கே said...

//Madhavan Srinivasagopalan said...
சட்டை மேதை மாதவன் வாழ்க! //

சட்டை --- I am famous Tailor !!

karthikkumar said...

மச்சி சூப்பர்.. பாவம் சீனியர் அருண். உன்னோட மொக்க தாங்காம என்ன பாடுபட்டாரோ?? ...............:)

ரஹீம் கஸாலி said...

அஞ்சப்பர் வருதோ இல்லையோ...அப்படியே கொஞ்ச நேரம் நின்னா.....கால்வலி வந்துடும்.... கூடவே பசியும்....

தமிழ்மணி said...

செல்வா.....

கலகுரிங்க "மொக்க" செல்வானு உங்களுக்கு பட்டம் குடுக்கலமுனு இருக்கிறேன் (இதுக்கு முன்ன யாரும் கொடுக்கலைன)... கோபில எங்க தலைவா உங்க வீடு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி நான் டெரர் ப்ளாக் குக்கே போறேன்

வெறும்பய said...

உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?

MANO நாஞ்சில் மனோ said...

இருலே படிச்சுட்டு வந்து வச்சிக்கிறேன் கொடையை.....

MANO நாஞ்சில் மனோ said...

//அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ?//


ங்கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said...

//முத வெட்டு//

ரத்தம் வந்துச்சா வரலியா.....?

Arun Prasath said...

இனி செல்வாவ பாக்க வரதுனா, பஞ்சு எடுத்துட்டு வரவும்... அவன் பேசும் போது ஜஸ்ட் மண்டைய ஆட்டுங்க போதும்

MANO நாஞ்சில் மனோ said...

//பதிவர் சந்திப்புக்கு அழைக்காமல் முறைமாமன் கார்த்தி, அருண் என தொடர்ந்து எதேச்சயாக சந்தித்து வரும் செல்வாவுக்கு எனது கடும் கண்டனம். ஹி ஹி//

மொக்கையன் என்னையும் கூப்பிடலை....கடும் கண்டனம்...

MANO நாஞ்சில் மனோ said...

//கடவுள்: அடிக்கடி நீதி சொல்றீயே? மனுநீதிச் சோழன்னு நினைப்போ?

செல்வா: மனுநீதிச் சோழனா, யாரு அவரு? மனு எழுதி தரவறா?//

அதானே....
இவன்கிட்டே வாயை கொடுத்துட்டு எவன் தப்ப முடியும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது இது கதையா...? அப்போ உண்மையா நடந்த சம்பவம் இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ?/////

அப்போ அந்த ஓட்டல் மொதலாளி ஒரு பிகரா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
பதிவர் சந்திப்புக்கு அழைக்காமல் முறைமாமன் கார்த்தி, அருண் என தொடர்ந்து எதேச்சயாக சந்தித்து வரும் செல்வாவுக்கு எனது கடும் கண்டனம். ஹி ஹி/////

சிபி அந்த நேரம் பார்த்து நீங்க படம் அதுவும் பிட்டுப் படம் பாத்துக்கிட்டு இருந்தீங்களாம், சரி எதுக்கு பொழப்ப கெடுக்கனும்னுதான் கூப்பிடலையாம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Arun Prasath said...
இனி செல்வாவ பாக்க வரதுனா, பஞ்சு எடுத்துட்டு வரவும்... அவன் பேசும் போது ஜஸ்ட் மண்டைய ஆட்டுங்க போதும்//////

அதுக்கு பதிலா, பைக்கு தொடைக்க துணி வெச்சிருப்பிங்களே, அத வாயில திணிச்சுடுங்க.... போதும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முன்குறிப்பு : பூமி சூரியனை சுற்றி வருது அப்படின்னு சொன்னா /////

என்னது பூமியே சூரியனை சுற்றுதா... அப்போ தலைவரு ஐநா சபை லீடராகுறதுக்கு சான்ஸ் இருக்கு...?

மங்குனி அமைச்சர் said...

செல்வா : தலை சீவ மறந்திட்டேன் , அதான் பாதிவரைக்கும் வந்திட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் தலை சீவிட்டு வந்தேன்./////

யாரோட தலைய ??? அடப்பாவி அப்ப நீ கொலைகாரனா ???

மங்குனி அமைச்சர் said...

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?/////

ஹி,ஹி,ஹி............... இது மேட்டரு .....

மங்குனி அமைச்சர் said...

ஆனா நேரப் பற்றாக்குறை காரணாமாக ஒரே கதை மட்டுமே இந்தவாரம்.///

அப்படின்னா ஒரு மணி நேரத்துக்கு எக்ஸ்ட்ராவா ஒரு 30 நிமிஷம் சேத்துக்க வேண்டியது தான

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
வைகை said...

வார வாரம் இரண்டு கதை எழுதுவேன் , ஆனா நேரப் பற்றாக்குறை காரணாமாக ஒரே கதை மட்டுமே இந்தவாரம்.///

யப்பா ராசா....ஒண்ணையே தாங்க முடியல....இது வேற ரெண்டா?

வைகை said...

மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குள் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.அப்பொழுது அருண் ( சீனியர் ) ////

ஏன் அருண் டூட்டி பிரீல எதுவும் வாங்கலையா?

அரசன் said...

அசத்தலுங்க நண்பரே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்து நிறைய கதை சொல்லு

மாணவன் said...

அழகுக்கு அழகு சேர்க்க வந்து படியுங்கள் செல்வா கதைகள்!

ஒரு வெளம்பரம்....:))

Chitra said...

செல்வாவிற்கு புகழ் அதிகமாக பிடிக்காது என்பதால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.


...உங்கள் தன்னடக்கத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

வெளங்காதவன் said...

இதெல்லாம் ஒரு பொழப்பா?

siva said...

அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ///mmm
:)))

Anonymous said...

என்ன நடக்குது இங்க????

மழலைப் பேச்சு said...

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.