Monday, February 21, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : முன்குறிப்பு வெள்ளைக் கலர்ல இருக்கு பாருங்க! 

                         செல்வாவும் தேங்காயின் வாழ்நாளும் 

ஒரு முறை செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருன்தனர்.

அப்பொழுது ஒரு தென்னை மரம் பாளை(பூ) விட்டிருந்தது. இதைப் பார்த்த அவரது சகோதரர் இது காயா மாறி பறிக்கிற அளவு வரதுக்கு  இன்னும் ஒரு வருசம் ஆகும் என்றார்.

இதைகேட்ட செல்வா அவ்ளோ நாள் எல்லாம் ஆகாது , ஒரு ஆறு மாசத்துல முத்திடும் என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி அந்தக் குலையை அடையாளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை ஒரு வருடம் கண்காணிக்க வேண்டும் என்றும் , தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஒப்பந்தம் செய்து அடுத்த நாள் அவரது சகோதரர் வந்து பார்த்துச்  சென்றுவிட்டார். அடுத்த நாள் செல்வாவின் முறை. அதற்கு அடுத்த நாள் சென்ற அவரது சகோதரர் அந்தக் குலை காணாமல் போனதால் சற்றே அதிர்ச்சியுற்றார்.

செல்வாவிடம் விசாரித்த போது தினமும் தோட்டம் சென்று வருவது சிரமமாக உள்ளது , அதனால் அந்தக் குலையை வெட்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும் இனிமேல் தோட்டம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதைக்கேட்ட அவரது சகோதரர் " லூசா நீ ? இனிமேல் அது எப்படி வளரும் ?" என்றார் கோபமாக.

" தேங்காய் கூடத்தான் நாம வீட்டுல வச்சிருக்கோம் , அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் கொண்டுபோய் மண்ணுல போட்டாலும் வருதில்ல , அதுமாதிரி வளராதா ? " என்றார் அப்பாவியாக.                       செல்வாவும் கைத்தொழிலும் 

செல்வா தனது படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடலாம் என்று முயற்சித்துக்  கொண்டிருந்தார். 

ஒரு நாள் அவரது மாமா செல்வாவின் வீட்டிற்கு வந்தார். செல்வாவிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றார். அதற்கு செல்வா வேலை தேடிக்கொண்டிருப்பத்தாகக் கூறினார். இதைக்கேட்ட அவரது மாமா வேலை கிடைக்கும் வரையில் கையில் இருப்பதைக் கொண்டு சுயதொழில் ஒன்று செய்  என்று அறிவுரை கூறிச்சென்றார்.  

சிறிது நாட்களுக்குப் பிறகு செல்வா அவரது மாமாவைச் சந்திக்கச் சென்றார். மாமாவிடம் தான் புதிதாக தொழில் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு அவர் வாழ்த்தி முதலில் துவங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் இருவரும் செல்வா தொழில் துவங்கியுள்ளதாகக் கூறிய கடைக்குச் சென்றனர். அங்கே முன்னால் ஒரு பெரிய போர்டில் " உங்கள் பல் சிறந்த முறையில் சுத்தம் செய்து தரப்படும் , சொத்தைப் பல்லா , இல்லை பீடிக்கறை உள்ள பல்லா? கவலை வேண்டாம். எங்களிடம் கழட்டிக் கொடுங்கள். விரைவில் சுத்தம் செய்து தருகிறோம்! என்ற அறிவிப்பு இருந்தது.

இதைப் பார்த்த அவரது மாமா சற்றே வித்தியாசமாக " இது என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை " என்றார் .

" மாமா நீங்கதானே அன்னிக்கு கைல இருக்குறத வச்சு ஒரு தொழில் தொடங்கு அப்படின்னு சொன்னீங்க ,அதான் இந்த மாதிரி தொழில் தொங்கினேன் " என்றார் .

இதைக்கேட்ட அவரது மாமா " நான் சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?! " என்றார்.

" நீங்க அன்னிக்கு சொல்லும்போது நான் பல்லு விளக்கிட்டு இருந்தேன் , அப்போ என் கைல TOOTHBRUSH இருந்துச்சு , நீங்க கைல இருக்குறத வச்சு தொழில் தொடங்க சொன்னீங்க. அப்படின்னா அத வச்சு இந்தத் தொழில்தானே பண்ண முடியும் , அதனால உங்க பல்ல கழட்டிக்குடுங்க , முதல் போனி உங்ககைல இல்ல இல்ல உங்க வாய்ல இருந்துதான்!! "

" கைல இருக்குறத வச்சு பண்ணு அப்படின்னா ? ( எதையோ சொல்ல வந்தவர் ) வேண்டாம் சாமி , நான் ஒண்ணும் சொல்லல , ஆள விடு " என்று புலம்பியவாறே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு பெரும் குழப்பம் , அவர் சொன்னதைத் தானே செய்தோம் ஏன் திட்டுகிறார் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். பாவம் அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.

நீதி : நீதி வெள்ளைக் கலர்ல இருக்கு பாருங்க 

பின்குறிப்பு : என்னடா நாம வெட்டியா கிரிக்கெட் மட்டுமே பார்த்துட்டு இருக்கோமே , இதனால உருப்படியா ஒன்னும் இல்லையே அப்படின்னு பீல் பண்ணாதீங்க ,  உலகக்கோப்பை சவால் பரிசுப்போட்டி எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் ல நடக்குது .நீங்களும் கலந்துட்டு பரிசினை வெல்லுங்கள்.

49 comments:

மாணவன் said...

vadai....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் தேங்கா எவ்வளவு நாள்லதான் வந்துச்சு?

எஸ்.கே said...

பல்லை கழட்டிருவேங்கிறது இதுதானோ?

கவிதை காதலன் said...

ஆனாலும் தென்னை மர மேட்டர் கொஞ்சம் ஓவர். செல்வாவைத்தவிர வேற யாராலும் இந்த மாதிரி யோசிக்க முடியாதுங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கைத்தொழில், இப்போ என் கைல வெரலுதான் இருக்கு அத வெச்சி என்ன பண்றது? அப்புறம் சின்னக் கரடி வேற வம்புக்கு வருமே?

வேடந்தாங்கல் - கருன் said...

Nice.,

மாணவன் said...

//அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.//


முற்றிலும் உண்மையான கருத்து :))

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல கைத்தொழில், இப்போ என் கைல வெரலுதான் இருக்கு அத வெச்சி என்ன பண்றது? அப்புறம் சின்னக் கரடி வேற வம்புக்கு வருமே?//

உமக்கு ரொம்பவும் குசும்புதான்...ஹிஹி

வேடந்தாங்கல் - கருன் said...

may i coming .,

See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

Madhavan Srinivasagopalan said...

நாட்டுல எத்தனையோ ஆளுங்களுக்கு மனசில அழுக்கு இருக்கு..
அதையும் சுத்தம் செய்ய ஆளு இருந்தா நாடு வெளங்கிடுமே ..
யோசிங்கப்பு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pallu set use panra pannikitta irunthi thozhil aarammi

Thanigai said...

selva namma eppo radio jockey agurathu,,,

try panratha konjam theeviira paduthunga...

santhosamaana seithiya ethir pathu irukennnnn

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// உலகக்கோப்பை சவால் பரிசுப்போட்டி எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் ல நடக்குது .நீங்களும் கலந்துட்டு பரிசினை வெல்லுங்கள்./////

யோவ், நானும்தான் போட்டில கலந்துக்கறேன், உங்க தலைவர்கிட்ட சொல்லி எப்பவும் போல அந்த பரிசு மொத்தமும் நமக்கே வர்ர மாதிரி பண்ணிடு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கைத்தொழில் கைகொடுக்க வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தேங்கா மூலமா பல பேர் பிரபலம் ஆகி இருக்காங்க...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உலகக்கோப்பை சவால் பரிசுப்போட்டி எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் ல நடக்குது .நீங்களும் கலந்துட்டு பரிசினை வெல்லுங்கள்.//
பரிசு என்ன கிரிக்கெட் பந்தா

சி.பி.செந்தில்குமார் said...

செல்வா.. கை குடுங்க.. முதல் கதை கலக்கல் காமெடி.. நாளை எனது அறிமுகப்படலத்துக்கு இதை எடுத்துக்கறேன்.. செம செம

சி.பி.செந்தில்குமார் said...

>>>
செல்வா தனது படிப்பினை முடித்துவிட்டு

சும்மா பொய் சொல்லக்கூடாது.. இன்னும் 4 அரியர் இருக்கில்ல?

சி.பி.செந்தில்குமார் said...

>>>பின்குறிப்பு : என்னடா நாம வெட்டியா கிரிக்கெட் மட்டுமே பார்த்துட்டு இருக்கோமே , இதனால உருப்படியா ஒன்னும் இல்லையே அப்படின்னு பீல் பண்ணாதீங்க , உலகக்கோப்பை சவால் பரிசுப்போட்டி எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் ல நடக்குது .நீங்களும் கலந்துட்டு பரிசினை வெல்லுங்கள்.

சுத்தம்

சி.பி.செந்தில்குமார் said...

2- வது கதையை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி இருக்கலாம்

சங்கவி said...

நல்ல கைத்தொழில்...

siva said...

காண வில்லை
செல்வா
பின்குறிப்பு :மொக்கை அரசர் என்ற பட்டம் உண்டு.
அவப்போது நல்ல பல தகவல் தந்து அசத்துவார்

siva said...

but this story very beautiful.

nice narrating..anna..

வைகை said...

மூளைய கலட்டி வீட்டுல வச்சாலும் வளருமா செல்வா?

வைகை said...

25

siva said...

selva namma eppo radio jockey agurathu,,,

try panratha konjam theeviira paduthunga...

santhosamaana seithiya ethir pathu irukennnnn//
PLEASE wait anna..

very soon SELVA R.J

Siva assistant R.J.

siva said...

27

வைகை said...

வர வர திங்கள் கிழமை வந்தாலே பயமா இருக்கு..

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
2- வது கதையை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி இருக்கலாம்//


இந்த வயசுல கதைய டெவலப் பண்றதா? நல்ல கதையா இருக்கே?

siva said...

வர வர திங்கள் கிழமை வந்தாலே பயமா இருக்கு.//

no no scare anna..

பாரத்... பாரதி... said...

செல்வா மாதிரி....

//அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.//

பாரத்... பாரதி... said...

இரண்டு கதைகளும் ஜூப்பரோ ஜூப்பர்..

middleclassmadhavi said...

:))

MANO நாஞ்சில் மனோ said...

//இதைக்கேட்ட அவரது சகோதரர் " லூசா நீ ? இனிமேல் அது எப்படி வளரும் ?" என்றார் கோபமாக//

சரியாதானே சொல்றார் ஹா ஹா ஹா ஹா ஹா...

வெங்கட் said...

செல்வா போன்ற ஒரு அறிவாளியை
பெற்றதற்கு இந்திய நாடே பெருமை படுகிறது..

:)

MANO நாஞ்சில் மனோ said...

//தேங்காய் கூடத்தான் நாம வீட்டுல வச்சிருக்கோம் , அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் கொண்டுபோய் மண்ணுல போட்டாலும் வருதில்ல , அதுமாதிரி வளராதா ? " என்றார் அப்பாவியாக.//


என்னாது அப்பாவியா ஆத்தீ....

MANO நாஞ்சில் மனோ said...

//எஸ்.கே said...
பல்லை கழட்டிருவேங்கிறது இதுதானோ?//


மொக்கையன் பல்லைத்தான் கழட்டனும்....

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல கைத்தொழில், இப்போ என் கைல வெரலுதான் இருக்கு அத வெச்சி என்ன பண்றது? அப்புறம் சின்னக் கரடி வேற வம்புக்கு வருமே?//


விரலை வைத்து மொக்கையன் கண்ணை குத்தலாம் பாஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

//.பி.செந்தில்குமார் said...
2- வது கதையை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி இருக்கலாம்//


ஆமா அவன் ஏற்க்கனெவே கொலை வெறியோட மொக்கை போட்டுருக்கான் இவுரு வேற வந்து சொரியுரதை பாரு...பிச்சிபுடுவேன் பிச்சி...

நாகராஜசோழன் MA said...

செல்வா உங்க அண்ணனை நான் பார்க்கணுமே?

அனு said...

ஒரு மாமா பொண்ணு மிஸ் ஆகிடுச்சுன்னு சொல்லுங்க.. :)

Chitra said...

பாவம் அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.


..... Try ...try... until you succeed.... ha,ha,ha,ha,ha...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

There is a interview for RJ in AIR FM RAINBOW , tomorrow @ Chennai AIR (Opposite to LIGHT HOUSE - MARINA BEACH).

IF you are a graduate and with in the age 25,try to attend, if possible.

Just an information.

All the best.

TERROR-PANDIYAN(VAS) said...

@தேசாந்திரி-பழமை விரும்பி

Great Boss!! I appreciate your willingness to help others. Great character.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ தேசாந்திரி-பழமை விரும்பி said...///

நன்றி சார். (செல்வா இன்று ஆன்லைனில் வரமுடியாத சூழலில் உள்ளார், அதனால் இத்தகவலை அவருக்கு உடனே தெரிவிக்க ஏற்பாடு செய்கிறோம்)

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@ TERROR-PANDIYAN(VAS) & பன்னிக்குட்டி ராம்சாமி
நன்றிங்க...
நானும் உங்கள மாதிரி 'யூத்'துதான்....
சார்,Boss லாம் தேவையில்லை.
செல்வாவோட மொபைல் நம்பர் எனக்கு தெரியாது.அதான்.

@பன்னிக்குட்டி ராம்சாமி
//இத்தகவலை அவருக்கு உடனே தெரிவிக்க ஏற்பாடு செய்கிறோம்//
நண்பேன்டா !
;)

கோமாளி செல்வா said...

@தேசாந்திரி-பழமை விரும்பி

ரொம்ப நன்றிங்க. என்னை நியாபகம் வைத்து தகவல் சொன்னதுக்கு.
நேற்று நீங்க சொன்னதும் நண்பர்கள் எனக்கு சொன்னாங்க. சில காரணங்களால்
என்னால அந்த இன்டர்வியூவுக்குப் போக முடியல. இருந்தாலும் இதே மாதிரி வேற ஏதும் உங்களுக்கு தெரிந்தாலும் எனக்குத் தெரியப்படுத்துங்க!! மறுபடியும் நன்றி ,,,

ம.தி.சுதா said...

செல்வா உங்க அறிவக்கு நீங்க இஞ்ச இருக்க வேண்டிய ஆளில்லைங்கோ.... ஒரு தேங்காயை வச்சே வடையை சமாளிச்சிட்டிங்களே...

சித்தாரா மகேஷ். said...

நகைச்சுவையில பின்னுறிங்களே..

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்