Thursday, March 17, 2011

மாஸ்ஹீரோவுடன் நேரடி உரையாடல்

முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி கோமாளி ஒரு மாஸ் ஹீரோவுக்கு கதை சொல்லப் போனது உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். தெரியாதவங்க இங்க போய்ப் படிச்சிட்டு வாங்க. அந்தக் கதைய படமா எடுத்து இப்ப தியேட்டர்ல ஓடிட்டு இருக்கு. அதப் பற்றின நேரடி ஒளிபரப்புத்தான் இப்ப நீங்க பாக்கபோறீங்க!

கோமாளி டிவி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நம்மளோட நிகழ்ச்சில இப்ப திரைக்கு வந்து ஓடிட்டு இருக்குற ----- படத்தோட ஹீரோ மாஸ்ஹீரோ தான் நம்ம கூட இருக்கார். இந்தப் படத்துல நடந்த சுவையான அனுபவங்கள் மற்றும் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் காத்திட்டு இருக்கார். முதல்ல ஒரு கேள்வி 

" சார் இவ்ளோ வித்தியாசமான கதைய நீங்க எப்படி நடிக்க ஒத்துக்கிட்டீங்க ? "

" எனக்கு அப்பவே தெரியும் , கதை சொல்லும்போதே இந்தக் கதை கண்டிப்பா பெரிய வெற்றி அடையும்னு தெரியும். அது மட்டும் இல்லாம எனக்கு அப்போ வேற வேலையும் இல்ல. ஒருத்தரும் எங்கிட்ட வந்து கதை சொல்லல. நானும் எவ்ளோ நாளைக்குத்தான் பிஸியா இருக்குறது மாதிரியே பில்ட் அப் பண்ணுறது ? அதான் ஒத்துக்கிட்டேன்.

" சார் ஒரு காலர் வெய்ட் பண்ணுறார் .. "

" ஹலோ , வணக்கம் இது கோமாளி டிவி. மாஸ்ஹீரோ இருக்கார் , அவர்கிட்ட பேசுங்க. "

" வணக்கம் சார் , நான் கோபில இருந்து பேசுறேன் , உங்களுக்காக ஒரு மணிநேரமா ட்ரை பண்றேன் ..உங்க படம் பார்த்தேன், சான்சே இல்ல சார் .. கொன்னுட்டீங்க ..! "

" நன்றிங்க , உங்களுக்குப் படத்துல எந்த சீன் ரொம்ப பிடிச்சது ? "

" எல்லா சீனுமே கலக்கல் சார் , அதிலும் அந்த விமானத்துல இருந்து கீழ குதிச்சு ஒரு சண்டை போடுவீங்கல்ல , அந்த சீன் கொன்னுட்டீங்க.. "

" அது இந்தப் படத்துல இல்லையே , அது வேற படம்னு நினைக்கிறேன் " 

" ஒ , சரி விடுங்க சார் , எப்படியோ உங்க படம்பார்த்து எனக்கு ஒரு தொல்லை கழிஞ்சது.. "

" என்ன சொல்லுறீங்க ? "

" அதான் சார் , உங்க படம் பார்க்க நானும் என் மனைவியும் போனோம் , கொஞ்ச நேரத்துலையே என் மனைவி செத்துட்டா சார் . அதான் சொன்னேன் , நீங்க எனக்கு தெய்வம் சார் !! "

" ஒ , அப்படிங்களா ? கேக்குறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு " 

" இணைப்பு கட் ஆகிருச்சு , சார் சொல்லுங்க .. இந்தப் படத்துல நடந்து சுவையான சம்பவம் எதாச்சும் ? "

" இந்தப் படத்துல அந்த மலைமேல நின்னு ஒரு பைட் சீன் பார்த்திருப்பீங்க , வில்லனோட ஆளுக என்னை ஒரு கல்லுமேல நிறுத்தி துப்பாகியால சுடுற சீன் எடுக்கும் போது கீழ இருந்து அப்படியே கம கம்னு வாசம் .. கீழ பார்த்தா சில பேர் கோழிய வறுத்து சாப்பிட்டிட்டு இருந்தாங்க. விடுவேனா நான் ? போய் அவுங்க கிட்ட கேட்டு வாங்கித் தின்னுட்டேன்ல . செம டேஸ்ட் . அதுதான் சுவையான சம்பவம்..!!

" மதுரைல இருந்து பேசுறேன். உங்க படம் வாய்ப்பே இல்ல தல , பிச்சு வீசிட்டீங்க. பாதிப்பேர் தியேட்டர்லையே செத்துட்டாங்க. அங்க ஒரு பேன் பாக்கியில்லை. உங்க FANS எல்லாம் அங்க இருக்குற FAN ல தொங்குறது கண்கொள்ளாக் காட்சி.!! இதோ நானும் போறேன் , எனக்கு தியேட்டர்ல எடம் பத்தல , அதான் எங்க வீட்டுல புளிய மரம் இருக்கு , இதோ இப்ப போய் தொங்குறேன் , இனிமேலும் எனக்கு உயிரோட இருக்கணும்னு விருப்பம் இல்ல , இன்னொரு விஷயம் இங்க பாதிபேர் செத்துட்டாங்க , படத்த தியேட்டர்ல இருந்து எடுக்கலாம்னு பார்த்தா தியேட்டர் ஓனர் ப்ரிவியூ காட்சிலேயே செத்திட்டதா கேள்விப்பட்டோம் , எப்படியோ படம் கொன்னுரிச்சு சார் ,டொக்!! " 

" ரொம்ப நன்றிங்க , உங்களை மாதிரி ரசிகர்களால தான் நான் இருக்கேன். குடும்பத்தோட தியேட்டர்ல போய் தொங்குங்க., வீட்டுல வேண்டாம்! "

" அந்த நேயர் இணைப்பைத் துண்டிச்சிட்டார் , சார் இந்தப் படத்துல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு எது ? " 

" அதாங்க , அந்த ஒரு ரீமிக்ஸ் பாட்டு ஒன்னு ரொம்ப குளிர் பிரதேசத்துல எடுத்திருப்போமே , ஆனா அங்க கூட ஹீரோயினுக்கு குட்டைப் பாவாடை தான். டான்ஸ் மூவ்மென்ட் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டோம்!! "

" நம்ம நிகழ்ச்சில அந்தப் பாட்ட இப்ப பாக்கலாம் , ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு "

                                 ------------------------------------------------------

" சார் , நீங்க சொல்லுங்க இந்தப் படம் இவ்ளோ பெரிய சக்சஸ் ஆகும்னு நினைச்சுப் பார்த்தீங்களா ? "

" கண்டிப்பா , எனக்குத் தெரியும் இது எப்படியும் சக்சஸ் ஆகும்னு , எப்படி சொல்லுறேன்னா வேற வழி இல்ல , சக்சஸ் ஆகாதுன்னு எப்படி சொல்லுறது ? எதோ ஒன்னு சொல்லித்தானே ஆகனும்! அதிலும் முதல்லையே இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுனா சொல்ல முடியும் ? "

" சார் சென்னைல இருந்து காலர் லைன்ல இருக்காங்க , அவுங்க கிட்ட பேசலாம் ., ஹலோ , மாஸ் ஹீரோ கிட்ட பேசுங்க " 

" சார் வணக்கம் நான் சென்னைல இருந்து பேசுறேன் , இங்க நிறைய பேர் போயிட்டு இருக்காங்க , நானும் போகப் போறேன் ! "

" நீங்க இன்னும் படம் பாக்கலையா ? " 

" இல்ல சார் , ட்ரைலர் பார்த்த பல பேர் கேரளாவுக்கு பஸ் ஏறிட்டாங்க , பஸ்ல போன சீக்கிரம் போய் சேர முடியாதுன்னுதான் நான் ஒரு இருபது பேர் ட்ரேவல்ஸ் புக் பண்ணிருக்கோம் , இப்ப வந்திரும் .. அதுக்குள்ள உங்ககிட்ட சொல்லிடலாம்னு தான் போன் பண்ணினேன் ! "

" இங்க டிக்கட் கிடைக்காம கேரளா போய் பாக்கப் போறீங்களா ? கண்டிப்பா இப்படித்தான் இருக்கணும் ? "

" நாங்க படம் பாக்க கேரளாவுக்குப் போகல , அடிமாடா போறோம் .. ஜஸ்ட் உங்க படத்தோட ட்ரைலர் பார்த்ததுமே இததான் தோனுச்சு , இனிமேலும் உயிரோட இருந்தா அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது , அவரும் உங்க படத்தப் பார்த்திட்டு எங்களுக்கு முன்னாடி கேரளாவுக்கு அடிமாடா போய்டுவார் , அதான் நாங்க முந்திக்கிறோம் , இதோ வண்டி வந்திடுச்சு .. போறேன் சார் " 

" ஜாலியா கொண்டாடுங்க ! "

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மனதுக்குள் ( யோவ் , அவன் சாகப் போறேன்னு சொல்லுறான் , ஜாலியா கொண்டாடச் சொல்லுற ? ). " சார் இப்ப ஒரு காலர் லைன்ல இருக்கார் , பேசுங்க " 

" வணக்கம் , நான் மாஸ் ஹீரோ பேசுறேன் , சொல்லுங்க படம் பார்த்திங்களா ? பிடிச்சிருந்ததா ? " 

" சார் நான் திருச்சில இருந்து பேசுறேன் , நீண்ட நாளா என் கணவர் எனக்கு டைவர்ஸ் தர மறுத்தார் , கோர்ட்ல கேஸ் போட்டும் சரியான கரணம் இல்லாம டைவர்ஸ் தர மறுத்துட்டாங்க , இப்ப உங்க படம் வந்ததும் எனக்கு டிவர்ஸ் கிடைச்சது , தேங்க்ஸ் சார் , உங்களை என்னால மறக்கவே முடியாது ? "

" ரொம்ப சந்தோசமா இருக்குமா , உங்களுக்கு டைவர்ஸ் கிடைச்சதுக்கும் என் படத்துக்கும் என்ன சம்பந்தம் ? " 

" சார் , உங்க படத்துக்கு என் கணவர் டிக்கெட் வாங்கிருக்கார் அப்படின்னு கோர்ட்ல சொன்னேன் , உடனே கொலை முயற்சின்னு சொல்லி டைவர்ஸ் கொடுத்திட்டாங்க , நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் , சரி சார் வச்சிடறேன் " 

" இவ்ளோ நேரமும் எங்களோட நேயர்கள் கேட்ட கேள்விக்கு அழகாவும் , போருமையவும் பதில் சொன்னீங்க , ரொம்ப நன்றி சார். இன்னொரு நிகழ்ச்சில உங்களை சந்திக்கனும்னு வேண்டிக்கிறேன் "

" நீங்க படம் பார்த்துட்டீங்களா ? " 

" இல்ல சார் , இந்தப் படத்தோட ட்ரைலர் மட்டும் பார்த்தேன் , நான் இப்பவே போய் அருகம்புல்லுல தூக்குப் போட்டு தொங்குறேன் " 

" அருமையான முடிவு , இந்தப் படம் இந்த அளவு பாதிக்கும்னு தெரியல , எல்லோரோட மனதுளையும் ஒரு தாக்கத்த ஏற்படுத்திருக்கு ,எல்லோரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க , DVD ல பாக்காதீங்க , ஏன் சொல்லுறேன்ன தியேட்டர் போய் பார்த்த உங்க ஒருத்தரோட உயிரோட போயிரும் , DVD ல வீட்டுல பார்த்த உங்க மொத்த குடும்பமும் போயிரும் , முடிவு உங்க கைல !"

இத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட உயிர்ச் சேதங்களுக்கு கோமாளி டிவி எந்த விதத்திலும் பொறுப்பேற்காது!

நீதி : இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே , கண்டிப்பா யாரோட மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இதுக்கு மேலயும் அந்த மாஸ் ஹீரோ யார்னு கேக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் , அந்த மாஸ் ஹீரோ நான்தான் .. ஹி ஹி ஹி  

பின்குறிப்பு : ஒரு இரண்டு மாதங்களுக்கு உங்களோட பதிவுகளுக்கு அதிகம் வர இயலாது என்பதைத் தெரிவித்துகொள்கிறேன். அப்புறம் செல்வா கதைகளுக்கென தனி வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். அதன் முகவரி : http://www.selvakathaikal.blogspot.com/

38 comments:

பாட்டு ரசிகன் said...

நான் தான் பஸ்ட்டா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் வந்துட்டேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவ்வளவு பெரியா கதையா..
போய்யா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////தம்பி வேற நல்ல ப்ளாக் இருந்தா போய் படிங்க தம்பி . இதெல்லாம் ஒரு ப்ளாக்னு படிச்சிக்கிட்டு.!/////

தெரியாம வந்துட்டேன் இதோ கிளம்பிட்டேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதியில் இன்னைக்கு ரஜினி நியூஸ் வந்து படிச்சிட்டு போ..

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா இங்கேயும் வடையை கவ்விட்டு போயிட்டீங்களா....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னாச்சு உனக்கு...?
திங்கள் கிழமை பதிவு போடுரதில்லையா...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னாச்சு உனக்கு...?
திங்கள் கிழமை பதிவு போடுரதில்லையா...

MANO நாஞ்சில் மனோ said...

இரு இரு படிச்சிட்டு வந்து உன் இடுப்புல மிதிக்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//அதான் சார் , உங்க படம் பார்க்க நானும் என் மனைவியும் போனோம் , கொஞ்ச நேரத்துலையே என் மனைவி செத்துட்டா சார் . அதான் சொன்னேன் , நீங்க எனக்கு தெய்வம் சார் !!//

அந்த பட தயாரிப்பாளன் உருப்படுவானா....

MANO நாஞ்சில் மனோ said...

//வாய்ப்பே இல்ல தல , பிச்சு வீசிட்டீங்க. பாதிப்பேர் தியேட்டர்லையே செத்துட்டாங்க. அங்க ஒரு பேன் பாக்கியில்லை. உங்க FANS எல்லாம் அங்க இருக்குற FAN ல தொங்குறது கண்கொள்ளாக் காட்சி.!! இதோ நானும் போறேன் , எனக்கு தியேட்டர்ல எடம் பத்தல , அதான் எங்க வீட்டுல புளிய மரம் இருக்கு , இதோ இப்ப போய் தொங்குறேன் ,//

ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹா ஹா ஹா கொய்யால செத்தான் போ.....

MANO நாஞ்சில் மனோ said...

//கண்டிப்பா , எனக்குத் தெரியும் இது எப்படியும் சக்சஸ் ஆகும்னு , எப்படி சொல்லுறேன்னா வேற வழி இல்ல , சக்சஸ் ஆகாதுன்னு எப்படி சொல்லுறது ? எதோ ஒன்னு சொல்லித்தானே ஆகனும்! அதிலும் முதல்லையே இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுனா சொல்ல முடியும் ?//

இது கமல் குழப்புன மாதிரியே இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//இல்ல சார் , இந்தப் படத்தோட ட்ரைலர் மட்டும் பார்த்தேன் , நான் இப்பவே போய் அருகம்புல்லுல தூக்குப் போட்டு தொங்குறேன் "//

அப்பாடா சனியன் ஒழிஞ்சிது இனி நிம்மதியா ரெண்டை விட்டுட்டு தூங்கலாம்....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு இரண்டு மாதங்களுக்கு உங்களோட பதிவுகளுக்கு அதிகம் வர இயலாது என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.//

ஆத்தீ இதை முன்னமே சொல்லி இருந்தா எத்தனையோ உயிர் சாகாம பிழைச்சிருக்குமே......

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் காமெடி செல்வா....

rajamelaiyur said...

ந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே , கண்டிப்பா யாரோட மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இதுக்கு மேலயும் அந்த மாஸ் ஹீரோ யார்னு கேக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் , அந்த மாஸ் ஹீரோ நான்தான் .. ஹி ஹி ஹி //////////

ஜோக் கா ?

Prabu Krishna said...

ஹீரோ வ தலனு சொல்லி இருக்கீங்களே அப்போ அவர் படம் தானா?

இந்த பதிவுக்கும் பத்து கமெண்ட் போட்ட நாஞ்சில் அண்ணன் ரொம்ப தைரியசாலிதான்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செம காமெடி செல்வா! கிட்டத்தட்ட இது மாதிரி ஒரு பதிவ நானும் ரெடி பண்ணி வச்சிருக்கேன் ! நாளைக்கு போடலாம் னு இருக்கேன்! காப்பி பண்ணிட்டேன் னு யாராவது சொல்லிடப் போறாங்களே! ஐயகோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த மாஸ் ஹீரோ யாருன்னு எனக்கு தெரியுமே......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது எந்தப் படம்னும் எனக்குத் தெரியும்............

எஸ்.கே said...

கொலைகாரப் பதிவு!

எஸ்.கே said...

அந்த ஹீரோ யாரு எனக்கு தெரியாது! ஆனா அந்த ஹீரோவோட விசிறி நான்!

எஸ்.கே said...

அடுத்த முறை கோமாளியை பேட்டி எடுக்க கோரிக்கை செய்கிறேன்!

கோமாளி vs செல்வா!

எஸ்.கே said...

அதென்ன மாஸ் ஹீரோ?
ஆங்கிலத்தில மாஸ்(mass) என்றால் நிறை. அப்ப அவர் அதிக நிறை/எடை உடையவரா?

எஸ்.கே said...

//அந்த மாஸ் ஹீரோ யார்னு கேக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் , அந்த மாஸ் ஹீரோ நான்தான் .. ஹி ஹி ஹி

//

இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்! நீங்கள் நடித்த படம் எத்தகைய அருமருந்தாக இருக்கும் என்று எனக்கு தெரியும்!

வைகை said...

மாஸ் ஹீரோன்னா முட்டை மாஸ் நல்லா போடுவாரா?

வைகை said...

அதான் சார் , உங்க படம் பார்க்க நானும் என் மனைவியும் போனோம் , கொஞ்ச நேரத்துலையே என் மனைவி செத்துட்டா சார் . அதான் சொன்னேன் , நீங்க எனக்கு தெய்வம் சார் //

அது எந்த படம்யா? ஹி ஹி

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த மாஸ் ஹீரோ யாருன்னு எனக்கு தெரியுமே......!//

அது அவருதானே?

Unknown said...

கொன்னுட்ட போ...

வெங்கட் said...

@ வைகை.,

// அது அவருதானே? //

ஆங்.. அவரே தான்..!!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த மாஸ் ஹீரோ யாருன்னு எனக்கு தெரியுமே......!///

சாம் ஆண்டர்சன்????...........:))

சௌந்தர் said...

கொலைகார ஹீரோ பட்டம் தரலாம்

சௌந்தர் said...

மச்சி அந்த ஹீரோவோட ரசிகர் எல்லாம் உன்னை கொல்ல போறாங்க .....இரு இரு நான் சொல்றேன்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த மாஸ் ஹீரோ யாருன்னு எனக்கு தெரியுமே......///

உங்களுக்கு தெரியாம இருக்குமா நீங்க தானே ரசிகர்மன்ற தலைவர்

Unknown said...

ம்ம்ம்.. யாரைப் பத்தி எழுதியிருக்கீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல..

Unknown said...

கொலைக்காரா உனக்கு நன்றி ஹிஹி!

ம.தி.சுதா said...

/////இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே , கண்டிப்பா யாரோட மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.////

அருமை செல்வா... புரியுது... தங்களது பதிவு பாணி தெரியாதவங்க தான் அப்படி நினைப்பாங்கள்...

Unknown said...

கொலைக்காரா???