Tuesday, August 9, 2011

3

முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). முதல்ல நான் RJ ஆகனும்.
ஆ). இரண்டாவதும் நான் RJ ஆகனும்
இ). மூனாவதும் நான் RJ ஆகனும்.

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). சண்டை போடுறது.
ஆ). கேக்காமயே அறிவுரை சொல்லுறது.
இ). எங்கிட்ட கேக்காமலே தேர்தல் வைக்கிறது.

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு :(
ஆ). அடுத்து இதுக்கு இன்னொரு பாயிண்ட் எழுதனும்னு பயமா இருக்கு.
இ). முதல்ல நான் எதுக்கு பயந்தேனோ அந்த பயத்துல இது மறந்துபோச்சு.

4.புரியாத 3 விசயங்கள் :

அ). ஒரு தடவ நான் பள்ளிகூடம் போயிட்டிருக்கும்போது 
ஆ). பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?
இ). முதல்ல நான் என்ன சொல்லவந்தேன்னு புரில.

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ). நான் இப்ப ஆபீசுல இருக்கேனா, இது ஆபீஸ் மேசைதானே, அதனால இது என்னோடது ஆகாதுல.அதனால எங்க வீட்டுல இருக்கிற மேசை மேல என்ன இருக்குனு தெரியல.
ஆ). இதுக்கும் பதில் சொல்லனுமா?
இ). வேண்டாம்னா விடுங்க.

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). கவுண்டமனி, வடிவேலு நகைச்சுவைகள்.
ஆ). கும்மி மக்களின் பின்னூட்டங்கள்.
இ).  ரமேஷ் அண்ணன் பதிவு எழுதாம இருக்கிறது. 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறேங்க.
ஆ). அடுத்த வருசம் பிறந்தநாள் வரதுக்காக இப்ப இருந்தே தினமும் ஒவ்வொரு நாளா காலண்டர்ல தேதி கிழிக்கிறேன்.
இ). கோமாளினு ஒரு ப்ளாக் இருக்குனு சொன்னதால அத தேடிட்டு இருக்கேன்.

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). எப்படியாவது ஒரு சிறந்த முழு நீள நகைச்சுவைப் புதினம் எழுதிடனும்.
ஆ).செல்வா கதைகளை முல்லா கதைகள் அளவுக்கு பிரபலப்படுத்தனும்.
இ). எப்பவுமே சந்தோசமா இருக்க கத்துக்கனும்.

9.உங்களால் செய்து முடிக்கக் கூடிய 3 விசயங்கள் :

அ). 8(அ)
ஆ). மொக்கை போடுவது.
இ). செல்வா கதை எழுதுவது.


10.கற்றுக்கொள்ள விரும்பும் 3 விசயங்கள் :

அ). எப்பவும் மொக்கை போட்டு சிரிக்க வைக்கனும்.
ஆ). தமிழ் இலக்கியம்.
இ). இன்னும் கொஞ்சம் தூயதமிழில் எழுத.

11.பிடித்த 3 விசயங்கள் :

அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.

12.கேட்க விரும்பாத மூன்று விசயங்கள் : 

அ). இந்தமாதிரி நிறைய கேள்விகள் குடுத்து யாரோ உன்ன தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க அப்படின்னு.
ஆ). நம்பிக்கைத் துரோகம்.
இ). கார்த்தி இந்த தொடர் பதிவு எழுதிட்டான்னு.

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). அன்பே அன்பே கொல்லாதே ( ஜீன்ஸ்)
ஆ). யாரோ என் நெஞ்சைக் கீறியது ( குட்டி)
இ). சிறகுகள் வந்தது ( சர்வம்)

14.பிடித்த 3 படங்கள் :

அ). அன்பே சிவம்.
ஆ). பசங்க.
இ). இங்கிலீசு படம் எதாச்சும் சொல்லனும்களா ? ( அட இதுக்கு ஒன்னு வெட்டியாப்போச்சே )

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). பூமி.
ஆ). சூரியன்
இ). நான்.

16.இதை எழுத அழைக்கப்போகும் 3 நபர்கள் :

அ). அதான் அன்னிக்கு ஒருநாள் செத்துப்போச்சுல அந்த எறும்பு. ( பாவம் இதையாச்சும் செய்யலாம்னுதான். )
ஆ). நேத்திக்கு எனக்கு 50 பைசா கொடுக்காத கண்டக்டர்.
இ). உங்க சொந்தக்காரங்க யாராச்சும் இருந்தா சொல்லி எழுத சொல்லுறீங்களா?

பின்குறிப்பு : உங்களுக்கு ஒன்னு தெரியுமா நான் முதல்ல பின்குறிப்புதான் எழுதினேன். அப்புறம்தான் முன்குறிப்பெல்லாம் எழுதினேன். ஆனா நீங்க முதல்ல இருந்து படிச்சிட்டு வந்து நான் முதல்ல எழுதினத கடைசியா படிக்கிறீங்க :)


78 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அ). முதல்ல நான் RJ ஆகனும்.
ஆ). இரண்டாவதும் நான் RJ ஆகனும்
இ). மூனாவதும் நான் RJ ஆகனும்.//

மூணு சேனல்ல ஒரே நேரத்தில வேலை செய்ய முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ் அண்ணன் பதிவு எழுதாம இருக்கிறது. //

சரி இனிமே எங்க அண்ணன் கிட்ட பதிவை எழுத சொல்றேன்

கோமாளி செல்வா said...

//மூணு சேனல்ல ஒரே நேரத்தில வேலை செய்ய முடியுமா?//

ஓ , எனக்கு ஓகேனா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.//

என் பதிலை திருடிய செல்வா ஒழிக

கோமாளி செல்வா said...

//என் பதிலை திருடிய செல்வா ஒழிக/

இது உங்க பதிலா.. ஐயோ :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏண்டா எல்லாத்தையும் ரெண்டுவாட்டி சொல்ற!!!

கோமாளி செல்வா said...

/// சரி இனிமே எங்க அண்ணன் கிட்ட பதிவை எழுத சொல்றேன்///

நான் சொன்னது உங்கள, அதுவும் நீங்க எழுதாம இருக்கிறது சந்தோசம்னு சொன்னேன்.. ஹி ஹி

வெறும்பய said...

எழுதிட்டியா..

வாழ்த்துக்கள்..

வெறும்பய said...

முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!//

நன்றி நன்றி .. நானும் பயந்திட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////1.விரும்பும் 3 விசயங்கள் :

அ). முதல்ல நான் RJ ஆகனும்.
ஆ). இரண்டாவதும் நான் RJ ஆகனும்
இ). மூனாவதும் நான் RJ ஆகனும்.//////

அப்போ நாலாவது யாரு?

கோமாளி செல்வா said...

//நன்றி நன்றி .. நானும் பயந்திட்டேன்//

பயமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////3.பயப்படும் 3 விசயங்கள் :
அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு //////

அது ஏன் உன்ன மிரட்டுது, அதை என்ன பண்ணுனே?

கோமாளி செல்வா said...

//அப்போ நாலாவது யாரு?
//

அது வந்து வந்து உங்களுக்குத் தெரியாது அவுங்கள..

வெறும்பய said...

அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு//

ஒன்னைஎல்லாம் தண்ணியா ஒரு ரூம்ல பூட்டி வச்சு "வீரா சாமி " படத்த போட்டு விடனுமிடா..

எஸ்.கே said...

நல்லதொரு பதிவு! சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////3.பயப்படும் 3 விசயங்கள் :
அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு //////

அது ஏன் உன்ன மிரட்டுது, அதை என்ன பண்ணுனே?//

அதுக்கு வச்ச எறும்பு பவுடர செல்வா எடுத்து மூஞ்சில பூசிக்கிட்டான். அதான்

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////3.பயப்படும் 3 விசயங்கள் :
அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு //////

அது ஏன் உன்ன மிரட்டுது, அதை என்ன பண்ணுனே?///கதறக் கதற ..

விரட்டி விரட்டி ..

..

..
..

.
.
.
.
.
.
.
.

.
.
.
.

மிதிச்சு கொன்னிருக்கான் அந்த படுபாவி..

கோமாளி செல்வா said...

//அது ஏன் உன்ன மிரட்டுது, அதை என்ன பண்ணுனே?///

அது தூங்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிய கல்லத்தூக்கி தலை மேல போட்டுடுட்டேன்...

கோமாளி செல்வா said...

//அதுக்கு வச்ச எறும்பு பவுடர செல்வா எடுத்து மூஞ்சில பூசிக்கிட்டான். அதான்//

ROFL :))

கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
நல்லதொரு பதிவு! சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்!
//

என்னா நக்கலு ?

எஸ்.கே said...

எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு :(//

சம்பவம் உங்க வீட்டுக்கு பக்கத்தில நடந்திருக்கு. அதை நீங்க பார்த்திருக்கீங்க அப்ப நீங்க ஒரு ஐவிட்னஸ்!

கோமாளி செல்வா said...

//ஒன்னைஎல்லாம் தண்ணியா ஒரு ரூம்ல பூட்டி வச்சு "வீரா சாமி " படத்த போட்டு விடனுமிடா..//

ஏன்னா அப்படி ? இதுல ஏதும் தப்பா ?

கோமாளி செல்வா said...

//சம்பவம் உங்க வீட்டுக்கு பக்கத்தில நடந்திருக்கு. அதை நீங்க பார்த்திருக்கீங்க அப்ப நீங்க ஒரு ஐவிட்னஸ்!//

இல்ல நான் பாக்கல, பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்..

Mohamed Faaique said...

///என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!///

ஆனா... நாம மன்னிக்க முடியாது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆ). பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?/////

பாபு அண்ணன் எழுதுறத பத்தி பாபுகிட்டதான் கேட்கனும்...

கோமாளி செல்வா said...

// Mohamed Faaique said...
///என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!///

ஆனா... நாம மன்னிக்க முடியாது....//

ஏன் உங்க நிம்மதியக் கெடுத்திட்டாரோ ?

கோமாளி செல்வா said...

//பாபு அண்ணன் எழுதுறத பத்தி பாபுகிட்டதான் கேட்கனும்...//

வரட்டும் வரட்டும்.. கேட்டிறலாம்..

எஸ்.கே said...

//
இல்ல நான் பாக்கல, பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்..//

எனக்கு தெரிஞ்சு கிமு 192லதான் இப்படி நடந்திருக்கு. what a co-incident!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இ). ரமேஷ் அண்ணன் பதிவு எழுதாம இருக்கிறது. /////

ரமேஷுக்கு அண்ணனும் இருக்காரா? சொல்லவே இல்ல? இவன் எழுதி சாவடிக்கிறது பத்தாதா... அவரும் வேற எழுதனுமா?

கோமாளி செல்வா said...

//எனக்கு தெரிஞ்சு கிமு 192லதான் இப்படி நடந்திருக்கு. what a co-incident!
//

மத்தது உங்களுக்குத்தெரியாம நடந்திருக்குமோ ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அ). எப்படியாவது ஒரு சிறந்த முழு நீள நகைச்சுவைப் புதி எழுதிடனும்///////

புதி?

கோமாளி செல்வா said...

//எனக்கு தெரிஞ்சு கிமு 192லதான் இப்படி நடந்திருக்கு. what a co-incident!
//

மத்தது உங்களுக்குத்தெரியாம நடந்திருக்குமோ ?

எஸ்.கே said...

இந்த பாடலை செல்வாவிற்கு டெடிகேட் செய்கிறேன்.

சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !

உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமே !

ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !

நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இ). எப்பவுமே சந்தோசமா இருக்க கத்துக்கனும்./////

அத எங்க சொல்லி கொடுக்குறாங்க?

இம்சைஅரசன் பாபு.. said...

//பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?//

அடிங்கொய்யால ..நன்னாரி ..அயோக்கிய பயலே ..என்ன கேவல படுத்தாம விட மாட்டங்க போல இருக்கே ..(எப்பாட எழுத்து பிழை இல்லாம எழுதிட்டேன் )

ஜீ... said...

//அடுத்த வருசம் பிறந்தநாள் வரதுக்காக இப்ப இருந்தே தினமும் ஒவ்வொரு நாளா காலண்டர்ல தேதி கிழிக்கிறேன்//
ஒரு நாளைக்கு ரெண்டு மூணுன்னு கிழிச்சா செக்கிரம் வந்துடுமில்ல!

இம்சைஅரசன் பாபு.. said...

//அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.//

நல்ல வேளை மூணு தடவையோட நிப்பாட்டிட்டான் ..ரமேஷ் ஆறு வேளை சாப்பாட்டுகாரன்

Madhavan Srinivasagopalan said...

//அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.//

என் பதிலை திருடிய செல்வா ஒழிக //

சரி.. சரி.. விடு. விடு..
சோறையா திருடினான் . பதில்தான.. போனா போகட்டும்..

Mohamed Faaique said...

////முதல்ல நான் என்ன சொல்லவந்தேன்னு புரில.///

நமக்கு கடைசி வரைக்கும் புரியலயே!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இம்சைஅரசன் பாபு.. said...
//பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?//

அடிங்கொய்யால ..நன்னாரி ..அயோக்கிய பயலே ..என்ன கேவல படுத்தாம விட மாட்டங்க போல இருக்கே ..(எப்பாட எழுத்து பிழை இல்லாம எழுதிட்டேன் )
/////////

பாபு டென்சனாகாதீங்க, அவன் உங்க அண்ணன் எழுதுறத பத்தித்தான் கேட்டிருக்கான், போய் செக் பண்ணி சொல்லுங்க..

ஜீ... said...

//முதல்ல நான் RJ ஆகனும்//
வாழ்த்துக்கள் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////10.கற்றுக்கொள்ள விரும்பும் 3 விசயங்கள் :

ஆ). தமிழ் இலக்கியம்.////////

இது நரிக்கு மட்டும் தெரிஞ்சது.... நீ அவ்வளவுதான்.......

கோமாளி செல்வா said...

// ஜீ... said...
//அடுத்த வருசம் பிறந்தநாள் வரதுக்காக இப்ப இருந்தே தினமும் ஒவ்வொரு நாளா காலண்டர்ல தேதி கிழிக்கிறேன்//
ஒரு நாளைக்கு ரெண்டு மூணுன்னு கிழிச்சா செக்கிரம் வந்துடுமில்ல!//

அதுக்கு ரண்டு நாள் காத்திருக்கனும்ல ?

கோமாளி செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////அ). எப்படியாவது ஒரு சிறந்த முழு நீள நகைச்சுவைப் புதி எழுதிடனும்///////

புதி?
//

அது புதினம்னு சொல்ல வந்து பாதிலயே விட்டுட்டென்..

கோமாளி செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இ). எப்பவுமே சந்தோசமா இருக்க கத்துக்கனும்./////

அத எங்க சொல்லி கொடுக்குறாங்க?//

சொன்னா எனக்கு எவ்ளோ கொடுப்பீங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////11.பிடித்த 3 விசயங்கள் :
அ). காலை உணவுஆ).மதிய உணவு.இ). இரவு உணவு.////////

அப்போ தண்ணி குடிக்க மாட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இ). இங்கிலீசு படம் எதாச்சும் சொல்லனும்களா ? ( அட இதுக்கு ஒன்னு வெட்டியாப்போச்சே )/////

ஏதாவது முழுநீலப்படமா?

கோமாளி செல்வா said...

//பாபு டென்சனாகாதீங்க, அவன் உங்க அண்ணன் எழுதுறத பத்தித்தான் கேட்டிருக்கான், போய் செக் பண்ணி சொல்லுங்க..//

ஆமா , நான் சொன்னது உங்க அண்ணன தான்.. அதனால ஒன்னும் பிரச்சினை இல்ல..

கோமாளி செல்வா said...

//உணவு.////////

அப்போ தண்ணி குடிக்க மாட்டியா?//

குடிப்பேன். ஆனா இடைலதான்.. சப்பாட்டு நேரத்துல குடிக்க மாட்டேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆ). நேத்திக்கு எனக்கு 50 பைசா கொடுக்காத கண்டக்டர்//////

உன்கிட்ட அவரு சிறுசேமிப்பு அக்கவுண்ட் வெச்சிருக்காரா?

பலே பிரபு said...

இதுக்கு மேல யாரும் மூணு மூணா பதிவு எழுதவே மாட்டாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பலே பிரபு said...
இதுக்கு மேல யாரும் மூணு மூணா பதிவு எழுதவே மாட்டாங்க//////

ஆமா அதுக்கு கீழதான் எதுவும் எழுத முடியும், கமெண்ட்ஸ்ல.....!

koodal bala said...

யாருக்காவது தமிழ் மணத்துல இணைக்கனும்ண்ணி தோணிச்சா ?சரி கண்டிநியூ பண்ணுங்க ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//உணவு.////////

அப்போ தண்ணி குடிக்க மாட்டியா?//

குடிப்பேன். ஆனா இடைலதான்.. சப்பாட்டு நேரத்துல குடிக்க மாட்டேன்..
///////

இடுப்புல தண்ணி குடிக்கமுடியுமா? எல்லாரும் வாய்லதானே குடிப்பாங்க?

கோமாளி செல்வா said...

// koodal bala said...
யாருக்காவது தமிழ் மணத்துல இணைக்கனும்ண்ணி தோணிச்சா ?சரி கண்டிநியூ பண்ணுங்க .......//

அப்ப்டியே இனைச்சிருங்க..

கோமாளி செல்வா said...

//இடுப்புல தண்ணி குடிக்கமுடியுமா? எல்லாரும் வாய்லதானே குடிப்பாங்க?
//

அது ஒரு லேட்டஸ்ட் டெக்னாலஜி.. அதோட பேரு கூட வெய்ஸ்ட்வாட்டர்குடிக்காலஜி..

koodal bala said...

@ கோமாளி செல்வா \\\அப்ப்டியே இனைச்சிருங்க.. \\\ இணைச்சாச்சி .....இணைச்சாச்சி.......அப்பம் ஓட்டு....போட்டாச்சி .போட்டாச்சி ....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நானும் வந்துட்டேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்கள் பாணியில்....

பதில்கள் சூப்பர்...

ரைட்டு...

கோமாளி செல்வா said...

// koodal bala said...
@ கோமாளி செல்வா \\\அப்ப்டியே இனைச்சிருங்க.. \\\ இணைச்சாச்சி .....இணைச்சாச்சி.......அப்பம் ஓட்டு....போட்டாச்சி .போட்டாச்சி ....
//

மிக்க மகிழ்ச்சிகள்ங்க மற்றும் நன்றிகள். :)

கோமாளி செல்வா said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
நானும் வந்துட்டேன்..//

வாங்க வாங்க :)

கோமாளி செல்வா said...

// # கவிதை வீதி # சௌந்தர் said...
உங்கள் பாணியில்....

பதில்கள் சூப்பர்...

ரைட்டு...
//

ஓ, நன்றினா :)

NAAI-NAKKS said...

கோமாளி செல்வா--பேசி இந்த உலகம் கேக்கணும்--????

ஒரே நேரத்தில் மாஸ் தற்கொலை???

NAAI-NAKKS said...

அ). எப்பவும் மொக்கை போட்டு சிரிக்க வைக்கனும்.---/////

அது என்ன சிரிக்க???

NAAI-NAKKS said...

ஆ). தமிழ் இலக்கியம்./////

எப்பா இப்ப நீ எழுதிகிட்டு இருக்கிறதே
தமிழ் இலக்கியம்--தானப்பா...
யாரும் உன்கிட்ட சொல்லலையா???

கோமாளி செல்வா said...

//எப்பா இப்ப நீ எழுதிகிட்டு இருக்கிறதே
தமிழ் இலக்கியம்--தானப்பா...
யாரும் உன்கிட்ட சொல்லலையா???//

அப்படினா இதுவே இலக்கியம்தானுங்களா ?

வைகை said...

செல்வா.. இப்பதான் ஆன்லைன் வரேன்.. சூப்பர்.. நான் எழுதும்போது இதெல்லாம் எனக்கு தோணவே இல்லை :))

karthikkumar said...

ROFL machi.. romba naal kalichu komaali blog-la good post..:))

karthikkumar said...

இ). கார்த்தி இந்த தொடர் பதிவு எழுதிட்டான்னு.//
ஏண்டா ஏன்.. அவ்ளோ ஆசையா நான் எழுதனும்னு?.. :))

மாணவன் said...

நல்லதொரு பதிவு! சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்! :)

கலாநேசன் said...

. விரைவில் RJ ஆக வாழ்த்துக்கள்

கலாநேசன் said...

73

Chitra said...

good humor. :-))))

NAAI-NAKKS said...

கோமாளி செல்வா said...
//எப்பா இப்ப நீ எழுதிகிட்டு இருக்கிறதே
தமிழ் இலக்கியம்--தானப்பா...
யாரும் உன்கிட்ட சொல்லலையா???//

அப்படினா இதுவே இலக்கியம்தானுங்களா ?////////

ஆமா...ஆமா....


டாய்...டாய்... யாருடா இங்க சிரிச்சது ??

கார்திக்விநோத் said...

விரைவில் RJ ஆக வாழ்த்துக்கள்

கார்திக்விநோத் said...

எல்லாமே 2.. 2.. சாரி 3...3... தெரியுதுப்பா............

ஜில்தண்ணி said...

டேய் நீ இன்னும் திருந்தலயா :), இந்த பதிவ நான் தொடர்ந்திட்டேன் :)