Saturday, December 31, 2011

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி - 5)

முன்குறிப்பு : சில நாட்களுக்கு முன்னாடி , இல்ல சில மாதங்களுக்கு முன்னாடி நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும்னு சில பதிவுகள் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இது. 

பசுபதி வேகவேகமாக நாட்டாமை பட நாட்டாமையின் வீட்டற்குள் நுழைகிறார். கூடவே மற்றொருவரை இழுத்துக்கொண்டு வருகிறார். அவர் வேறு யாருமல்ல நான் தான்!

நா.நாட்டாமை : ”தென்றா பசுபதி? தெதுக்கு இப்படி ஓடியாற?தெவன்டா இவன்? “

பசுபதி : ”ஐயா, தீர்ப்புச் சொல்லுறதுக்கு நீங்க இருக்குறபோது வேற யாரவோ தீர்ப்புச் சொல்ல கூப்பிட்டிருக்காங்க!”

நா. நாட்டாமை : ”ஆர்றா அது? (செல்வாவைப் பார்த்து ) தேன்டா நீ ஏதாச்சும் பிரச்சனை பண்ணிப்போட்டியா ?“

பசுபதி : ஐயா, இவன் பிரச்சினை பண்ணலீங்க, இவுங்க ( டெரர் கும்மி ) ஒரு போட்டி நடத்துறாங்க. அதுக்கு உங்கள நடுவரா கூப்பிடாம வேற யாரவோ கூப்பிட்டிருக்காங்க ? “

நா. நாட்டாமை : “ தென்றா பேசற நீயி ? அண்ணனா இருந்தாலும், தம்பியா இருந்தாலும் தீர்ப்பு நான் தாண்டா சொல்லுவேன்”

பசுபதி : ஐயா, எனக்கென்னமோ இவுங்க அவர ( தமிழ்ப்படம் நாட்டாமைய) தீர்ப்புச் சொல்ல கூப்பிட்டிருப்பாங்களோன்னு தோணுது.

நா. நாட்டாமை : “ பசுபதி, வண்டியக் கட்றா அவனூட்டுக்கு, தீர்ப்பு நான்தான் சொல்லுவேன்”

(பசுபதியும், நா.நாட்டாமையும் வண்டியில் ஏறிக்கொள்ள செல்வாவை குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டிக்குள் எறிகிறார்கள் )

வண்டியில் ஏறியதும் நா. நாட்டாமை : “பசுபதி!  அடிச்சோட்றா ”

பசுபதி : ஐயா, அடிச்சோட்றதுக்கு இது மாட்டுவண்டி இல்லீங்! காருங்க“

தமிழ்ப்படம் நாட்டாமையின் வீட்டை மூவரும் அடைகிறார்கள். வண்டியிலிருந்து ஒரே தம்மாக தமிழ்ப்படம் நாட்டாமையின் வீட்டிற்குள் குதிக்கிறார் நா. நாட்டாமை. உள்ளே தமிழ்ப்படம் நாட்டாமை இரண்டு எறும்புகளை ஒரு டேபிளின் மீது வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த தனது அடியாளிடம் “ இந்த எறும்ப பத்து வருசம் ஊரவிட்டுத் தள்ளி வெக்கறன்டா! ஆரும் இதுக்கூட தண்ணி பொழங்கக்கூடாது“ என்று தீர்ப்பினைச் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த சொம்பினை எடுத்துக் கொண்டு ”அடுத்து எங்கடா பிரச்சினை ?” என்று கேட்கிறார். அப்பொழுது

நா. நாட்டாமை : ” தேன்றா ? என்ன தகிரியம் இருந்தா என்னைய கேக்காம நீ மட்டும் தீர்ப்புச் சொல்லுவ ? அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நான்தான்டா தீர்ப்புச் சொல்லுவேன்!“

த. நாட்டாமை :” நீதிடா, நேர்மடா, நியாயம்டா”

செல்வா : மனதிற்குள் (என்ன எழவுடா ? )

நா. நாட்டாமை : ”நிறுத்துடா! (செல்வாவைப் பார்த்து ) தென்றா தம்பி, இவனவிட நானும் நல்லா தீர்ப்புச் சொல்லுவேன். என்னைய சேர்த்துக்களைனா நானே என்னைய ஊரவிட்டுத் தள்ளிவச்சுக்குவேன்.”

பசுபதி : ”ஐயா, இப்படி ஒவ்வொரு ஊரிலையும் போயி உங்கள நீங்களே தள்ளிவச்சு தள்ளிவச்சு கர்நாடகா பார்டருக்கு வந்துட்டோம். இனியும் தள்ளிவச்சா கர்நாடகாதான் போகனும். அங்க ஒருத்தருக்கும் தமிழ் தெரியாது. எதுக்கும் பார்த்துச் செய்யுங்க! “

த. நாட்டாமை : (செல்வாவைப் பார்த்து ) ”நீ ஆர்றா ? இங்கெதுக்கு நிக்கற ? இவன கள்ளிபால ஊத்திக் கொல்லுங்கடா!“

நா. நாட்டாமை : (த. நாட்டாமையைப் பார்த்து ) ”தென்றா பேசற, இவன உனக்கு முன்ன பின்ன தெரியாதா ? “

த. நாட்டாமை : “ நானெதுக்குடா இவனப் பத்தித் தெரிஞ்சிக்கணும் ? தேன்டா பிராது எதாச்சும் வச்சிருக்கிறியா ? நாந்தான் தீர்ப்புச் சொல்லுவேன்! “

செல்வா : “ உங்களுக்கு என்னதான்யா வேணும் ? “

பசுபதி : ”நீங்க நடத்தப்போற போட்டியில எங்க நாட்டாமைதான் தீர்ப்புச் சொல்லுவாரு! “

செல்வா : ஐயா, நாங்க ஏற்கெனவே நல்லா படிச்ச, திறமையான நடுவர்களை தேர்ந்தெடுத்துட்டோம். நீங்க யாரும் தீர்ப்புச் சொல்ல வேண்டாம். என்னை விட்டுறுங்க.

நா. நாட்டாமை : ” டேய், டேய்! என்னையும் சேர்த்திக்கோங்கடா. இவன (த. நாட்டாமை) வேணா ஊர உட்டு தள்ளி வச்சிடலாம்”

த. நாட்டாமை : இவன ( நா. நாட்டாமை ) கள்ளிப்பால ஊத்திக் கொல்லுங்கடா, அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் தீர்ப்பு நாந்தான்டா சொல்லுவேன்! “

செல்வா : ”ஆள விடுங்கடா! “ என்று சொன்னவாரு தெரித்து ஓடுகிறார்.

பின்குறிப்பு : டெரர்கும்மி விருதுகள்- 2011 பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். தெரியாதவங்க டெரர்கும்மி விருதுகள் - 10,000 / - பரிசு அப்படிங்கிற இந்தப் பதிவைப் படிச்சுப் பாருங்க. உங்களின் பதிவுகளையும் இணையுங்கள். உங்கள் பதிவுகளை இணைக்க இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள். பங்குபெறப்போகும் அனைவருக்கும் டெரர்கும்மியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!




15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

த. நாட்டாமை : (செல்வாவைப் பார்த்து ) ”நீ ஆர்றா ? இங்கெதுக்கு நிக்கற ? இவன கள்ளிபால ஊத்திக் கொல்லுங்கடா!“//

அய் இது நல்ல ஐடியாவா இருக்கே, எடுறா பசுபதி அந்த கள்ளிப்பால் சொம்பை....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நான்தான்டா தீர்ப்புச் சொல்லுவேன்!“//

ஹா ஹா ஹா ஹா யப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் விழுந்து [[கீழே இல்ல]] விழுந்து சிரிச்சிருக்கேன்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பங்குபெறப்போகும் அனைவருக்கும் டெரர்கும்மியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!//

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

செல்வா said...

@ மனோ :

நன்றிணா :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீதிடா... நேர்மைடா... நாயம்டா...... தென்றா பசுபதி..... அந்த அம்மிணி ஆரு....?

செல்வா said...

அம்மினி எங்க இருக்கு ?

நாய் நக்ஸ் said...

Neenga vena antha
nattamai-i
judge-aa
kuupidungalen.....

Nalla theerppu kidaikkum....

வெங்கட் said...

// பசுபதி : ஐயா, அடிச்சோட்றதுக்கு இது மாட்டுவண்டி இல்லீங்! காருங்க“ //


அப்ப மிதிச்சி ஓட்றா... :)

rajamelaiyur said...

நாட்டாம ... நடக்கட்டும் நடக்கட்டும்

Mohamed Faaique said...

நாட்டாமைய பத்தி எழுதியாச்சு.. டவுன் ஆமைய பத்தியும் எழுதுவீங்களா????

வைகை said...

நாட்டாமை.. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன் காத கொண்டாங்க... ( க்கும்.. இது காதா இல்லை கால்வாயாடா?) நம்ம பன்னிகுட்டி ராமசாமி... அந்த அம்மணிய.... அந்த அம்மணிய.... :-))

அன்புடன் நான் said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ராஜி said...

த. நாட்டாமை : (செல்வாவைப் பார்த்து ) ”நீ ஆர்றா ? இங்கெதுக்கு நிக்கற ? இவன கள்ளிபால ஊத்திக் கொல்லுங்கடா!“/
>>>
அப்பாடா இனி மொக்கையிலிருந்து தப்பிச்சுக்கலாம்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

////// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீதிடா... நேர்மைடா... நாயம்டா...... தென்றா பசுபதி..... அந்த அம்மிணி ஆரு....? ///////

அண்ணே விலாசம் ,விலாசம் !!