Friday, August 6, 2010

மொக்கை பதிவர் பேட்டி

கடந்த ஜூலை 29 அன்று நமது ஜில்தண்ணியில் மொக்கை பதிவர் மான் ஆடு நடைபெற்றது.
அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இதோ உங்களுக்காக :
கேள்வி : மொக்கைப்பதிவர் மாநாடு சிறந்தமுறையில் நடந்ததா ..?
பதில் : நன்றாகவே நடந்தது. இவ்வாறு ஏதேனும் சந்தேகங்கள் எழும்பக்கூடும் என்ற காரணத்திற்காக நாங்கள் மாநாட்டின் தலைப்பையே மான் - ஆடு என்று வைத்தோம். ஏனெனில் மானும் ஆடும் நிச்சயம் நடக்கும் அல்லவா.?

கேள்வி : மூன்று நாள் நடக்கவிருந்த மாநாடு ஒரே நாளில் முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே ..?
பதில் : நிதிப்பற்றாக்குறை காரணமாக முடித்துக்கொள்ளப்பட்டது.அமெரிக்க அதிபர் நமது மொக்கை வளர்ப்பு சங்கத்திற்காக வழங்கிய நிதியினைப் பெற்று வருவதற்காக நமது TERROR-PANDIYAN(VAS) அவர்கள் சென்றுள்ளார்கள். அவர் வந்தவுடன் மாநாடு மீண்டும் நடைபெறும்.ஆதலால் பொதுமக்கள் வருத்தப்பட வேண்டாம்.

கேள்வி : மொக்கையை வளர்க்க வேண்டியதன் அவசியமென்ன ..?
பதில் : மொக்கை என்பது சாதாரண வாரத்தை மட்டும் அல்ல. அது நமது வாழ்வோடு இணைந்த ஒன்று.ஆதலால் அதனை பேணி பாதுகாத்தல் நமது தலையாய கடமையாகும்.

கேள்வி : மொக்கையை வளர்க்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ..?
பதில் : மொக்கையை வளர்ப்பதற்காக மாநாட்டில் 5 பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பெற்றன. அவை :
1.CCMT - Certificate course in Mokkai Technician.
2.DMT - Diploma in Mokkai Technology.
3.B.Sc - Mokkai Science.
4.B.Tech - Mokkai Technology.
5.Ph.D -  Mokkai.

கேள்வி : இந்த பாடத்திட்டங்களில் சேர்வதற்குத் தகுதிகள் என்னென்ன ..?
பதில் : இதில் சேர விரும்பும் பதிவர் அவரது பதிவுகளில் பாதியளவாவது மொக்கைப் பதிவுகள் இட்டிருக்க வேண்டியது கட்டாயம். இந்த தகுதிகள் இல்லையெனில் அவர்களது வலைப்பூக்கள் தீவிரமாக அலசப்பட்டு அவரது மொக்கை போடும் திறமையை ஆராய்ந்து சேர்த்துக்கொள்ளப்படுவர்.

கேள்வி : பதிவர் அல்லாதோர் இந்த படிப்புகளில் இணைய என்ன செய்திட வேண்டும் ..?
பதில் : அவர்களுக்கு நமது மொக்கை வளர்ப்பு சங்கத்தின் சார்பில் நாடுதழுவிய நுழைவுத்தேர்வு நடைபெறும்.அதில் கலந்து கொண்டு வெற்றிபெறுவோர் இப்பாடத்திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம்.

கேள்வி : இந்த படிப்புகளுக்காங்க கட்டணங்கள் எவ்வாறு இருக்கும் ..?
பதில் : நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அனைத்தும் இலவசம். Management Seat மூலம் வருவோர் கட்டணமாக 1000 மொக்கைகள் இட வேண்டும்.

கேள்வி :  மொக்கை பெயர்க்காரணம் குறித்து எழுதிய பதிவு அழிக்கப்பட்டுவிட்டதே..?
பதில் : அது எதிர்பாராத விதமாக நடைபெற்று விட்டது. மொக்கையின் பெயர்க்காரணம் குறித்து அறிந்திட விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

கேள்வி : மொக்கையின் பயன்கள் குறித்து ஓரிரு வார்த்தைகள் ...?
பதில் : மொக்கை நமது இலக்கியத்தில் இணைக்கப்பட வேண்டிய ஒன்று. மொக்கையின் பயன்கள் எண்ணிலடங்காதது. உங்களுக்கு பிடிக்காதவர் யாரேனும் வந்தால் அவர்களிடம் நீங்கள் சிறிது நேரம் மொக்கயிட்டாலே போதுமானது. அவர் தலைதெறிக்க ஓடிவிடுவார். மொக்கையின் பயன்களைப்பற்றி கூற வேண்டுமானால் தனி பதிவு தான் போட வேண்டும். இத்துடன் நமது பேட்டியை முடித்துக்கொண்டோம்.

எச்சரிக்கை : அடுத்து இரண்டு தொடர் பதிவுகள் பதிவிடப்படும். மன்னாதி மன்னன் மற்றும் பதிவுலகில் நான்.

அதிபுத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு : கொஞ்ச நாள் முன்னாடி என்னோட நண்பர் ஒருத்தர் " வர்ற திங்கள் கிழமை  நீ இருக்குற இடத்துக்கு பூரான் வரும் " அப்படின்னு சொன்னார். இத கேட்ட உடனே நான் இங்கிலாந்து போயிட்டேன். ஏன்னு தெரியுமா ..?
ஏன்னா இங்கிலாந்துல திங்கள் கிழமை வராதுல்ல. Monday தான வரும்..!?!

17 comments:

பனித்துளி சங்கர் said...

//////மொக்கை என்பது சாதாரண வாரத்தை மட்டும் அல்ல. அது நமது வாழ்வோடு இணைந்த ஒன்று.ஆதலால் அதனை பேணி பாதுகாத்தல் நமது தலையாய கடமையாகும்.//////

இதன் தலைவர் நீங்கள்தானோ !? இவளவு நாலா எனக்கு இது தெரியாம போச்சே !
தலைவரே பேணுவது சரி அது என்ன பாதுகாத்தல் யாரும் கடத்திடுவாங்களா என்ன !?

அருண் பிரசாத் said...

ஓவர் மொக்கை ஒடம்புக்கு ஆகாது தம்பி

Jey said...

கொஞ்ச நாள் முன்னாடி என்னோட நண்பர் ஒருத்தர் " வர்ற திங்கள் கிழமை நீ இருக்குற இடத்துக்கு பூரான் வரும் " அப்படின்னு சொன்னார். இத கேட்ட உடனே நான் இங்கிலாந்து போயிட்டேன். ஏன்னு தெரியுமா ..?
ஏன்னா இங்கிலாந்துல திங்கள் கிழமை வராதுல்ல. Monday தான வரும்..!?!////


ஸ்ஸ்ஸ்ப்பா முடியலை.....

கருடன் said...

//நமது TERROR-PANDIYAN(VAS) அவர்கள் சென்றுள்ளார்கள்//

பணம் கிடைத்து விட்டது... $.1000000000000000 மாமா கடை அக்கௌண்ட்ல டெபொசிட் செய்து இருக்கிறேன்... விபரங்கள் ஜில்லு அல்லது சௌந்தர் அவர்களை கேக்கவும்...

சௌந்தர் said...

ஏன்னா இங்கிலாந்துல திங்கள் கிழமை வராதுல்ல. Monday தான வரும்.//

என்றாவது ஓரு நாள் இந்தியா வரவே அப்போ திங்கள் வரும்....பூரான்....வரும்

விஜய் said...

தம்பி நிஜமா சொல்றேன், நீ மொக்கைல பெரிய ஆளா வருவப்ப ....உன் பதிவு படிக்றப்ப தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கான்னு புரியுதுப்பா. நல்லா யோசிக்கிறீங்க வாழ்த்துக்கள் ..

Unknown said...

அலோ... அலோ.. ஒன்னும் கேக்கல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வர வர கண்ணே தெரியல... யாராவது இருக்கீங்களா...

Katz said...

//பதில் : அது எதிர்பாராத விதமாக நடைபெற்று விட்டது. மொக்கையின் பெயர்க்காரணம் குறித்து அறிந்திட விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.//

கையில சொடுக்கி பாத்தேன். நல்லா சவுண்ட் வந்துச்சு

ஜில்தண்ணி said...

ஓய் அன்னக்கி என்ன பேட்டி எடுத்த போது ஏதோ நோட்டுல எதோ கிறுக்குனியே இதானா,சரியான ஆளுயா நீ :)

மாமா கடை அக்கவுண்டுல போட்டுட்டேன் என்கிறார் டெர்ரர் ஆனால் மாமா கிட்ட போயி கேட்டா ஏற்கனவே வரவேண்டிய 33.50 பேலன்சே வரல,இது எங்க வருதுங்கிறார்,என்ன ஆச்சு டெர்ரர் ???

ஜீவன்பென்னி said...

மொக்கையப்போட்டு இந்தப்பாடு படுத்துறீங்களே பாவம் அத விட்டுடுங்க............. புண்ணியமாப்போகும்.

Unknown said...

மொக்கை
மொக்கை
மொக்கை
மொக்கை
மொக்கை

ஒரே வார்த்தை தான் வேற வேற மாதிரி படிச்சுக்கோங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பணம் கிடைத்து விட்டது... $.1000000000000000 மாமா கடை அக்கௌண்ட்ல டெபொசிட் செய்து இருக்கிறேன்... விபரங்கள் ஜில்லு அல்லது சௌந்தர் அவர்களை கேக்கவும்... //

தம்பி டேரரை நம்பி அனுப்பினியா. அந்த ஆளு ஏதாச்சும் கமிஷன் அடிச்சிருக்குமே!!

அ.சந்தர் சிங். said...

thaanga mudiyalada sami.,

aandava ennai intha mokkaiyidam irunthu

kaappaatruvaayaga.

மங்குனி அமைச்சர் said...

பதில் : நிதிப்பற்றாக்குறை காரணமாக முடித்துக்கொள்ளப்பட்டது.///

என்னப்பா இன்னும் என் சேர் (கட்டிங் ) வரல , அதுக்குள்ளே நிதி பற்றாக்குறையா ? இங்கு ஏதோ ஊழல் நடந்துள்ளது

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// தம்பி டேரரை நம்பி அனுப்பினியா.
அந்த ஆளு ஏதாச்சும் கமிஷன் அடிச்சிருக்குமே!! //

யாரை போய் சந்தேகப்படறீங்க..?
இது அடுக்குமா..??!!

நயா பைசா குறையாம.,
பணமெல்லாம் கரெக்டா வந்தது..

என்ன VAS அக்கவுண்ட்ல
அதை டெபாசிட் பண்ணிட்டோம்..
ஹி., ஹி., ஹி..!!

Riyas said...

SOOOOPER..

//பதில் : மொக்கை என்பது சாதாரண வாரத்தை மட்டும் அல்ல. அது நமது வாழ்வோடு இணைந்த ஒன்று.ஆதலால் அதனை பேணி பாதுகாத்தல் நமது தலையாய கடமையாகும்// Yaah.. it's true