Saturday, September 4, 2010

தமிழ்ப்பட வரலாறு

நீ இது வரைக்கும் ஒரு நல்ல பதிவாவது போட்டிருக்கியா ..? அப்படின்னு என்னோட மனசாட்சி என்னப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுடுட்சுங்க. அதுமட்டும் இல்லைங்க. நீ இப்படியே மொக்கப் பதிவு போட்டுட்டே இருந்தா உன்னைய கோமாளி அப்படின்னு சொல்லிடுவாங்க அப்படின்னும் சொல்லுச்சு. அதனால எப்படியாவது நல்ல பதிவு போட்டுடனும்னு நானும் பயங்கர முயற்சி பண்ணினேன். மொக்க பதிவுன்னா அதுக்கு முயற்சி தேவை இல்லை.! சரிங்க நல்ல பதிவு அப்படின்னு சொன்னது தமிழ் திரைப்பட வரலாற்ற உங்களுக்காக தொகுத்திருக்கேன் .. நல்ல பதிவா அப்படின்னு நீங்கதான் முடிவு பண்ணனும் ..

இந்தியாவில் திரைப்படம் :
தாமஸ் ஆல்வா எடிசன் " கினிடோஸ்கோப்" என்ற கருவியைக்கண்டுபிடித்ததின் மூலம் இன்று நாம் பார்க்கும் திரைப்படத்திருக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் பார்க்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த " லூமியர் சகோதரர்கள்" என்போர் 1895 இல் அறிமுகப்படுத்தினர். அவர்கள் எடுத்த ஒரு நிமிட திரைப்படங்களை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் திரையிட்டனர்.

*.இந்தியாவிற்கு வந்த முதல் திரைப்படம் ' இயேசுவின் வாழ்க்கையாகும் '. அது 1896 இல் பம்பாயில் திரையிடப்பட்டது.

*.இந்தியாவின் முதல் திரையரங்கான என்பில்ச்டன் கல்கத்தாவில் மதன் என்பவரால் 1907 இல் கட்டப்பட்டது.

*.இந்தியாவின் முதல் முழு நீளப்படம் ' ராஜா ஹரிச்சந்திரா ' . நீளம் 3700 அடி.

*.இந்தியாவில் தயாரான முதல் பேசும் படம் ' ஆலம் ஆரா '. 1931 மார்ச் 14 இல் திரையிடப்பட்டது.

*.தென்னிந்தியாவின் முதல் படம் ' கீசக வதம் ' 1916 இல் தயாரிக்கப்பட்டது .

*.தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ் ' .31.10.1931 இல் திரையிடப்பட்டது.

*.முதல் பேசும் படத்தை இயக்கியவர் 'H.M.ரெட்டி. T.P.ராஜலட்சுமி கதாநாயகி. இவர் 'மிஸ் கமலா ' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

*.1955 இல் வெளிவந்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' தமிழின் முதல் வண்ணப்படம்.

*.1948 இல் S.S.வாசன் 'சந்திரலேகா' என்ற படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகமெங்கும் திரையிட்டார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட படம்  இதுவே.

*.1954 இல் ' அந்த நாள் ' பாடல்களே இல்லாத முதல் தமிழ்படம்.

*.தமிழ் திரைப்பட வரலாற்றில் மூன்று ஆண்டுகள் ஓடிய திரைப்படம் ஹரிதாஸ்.

*.தமிழ்நாட்டின் முதல் 70 MM திரையரங்கமான ஆனந்த் சென்னையில் G.உமாபதி என்பவரால் கட்டப்பட்டது.

*.முதல் சினிமாஸ்கோப் படம்  ' ராஜா ராஜா சோழன்' .

*.1943 இல் அரிச்சந்திரா என்ற படத்தை A.V.M.செட்டியார் டப்பிங் செய்து தமிழின் முதல் டப்பிங் படத்திற்கு வழிவகுத்தார்.

இது கோமாளி ப்ளாக் தாங்க. நம்ப மாட்டீங்களா ..? சும்மா இப்படி சொன்னா எப்படி ..? சரி உங்களுக்காக ஒரு மொக்கை :
நேத்தைக்கு நான் ஒரு நாடகம் பார்த்துட்டு இருந்தேன் . அதுல ஒரு காதலனும் காதலியும் ஒரு சாப்பாட்டுக்கடைல சந்திசுப்பாங்க. அதுல அந்த பைய்யன் கிட்ட காசு இல்ல . அதனால அவ காதலிகிட்ட எனக்கு செம பசியா இருக்கு .. நீ என்ன ஆர்டர் பண்ணினாலும் தின்னுடுவேன் அப்படின்பான். அப்புறமா ரண்டுபேரும் சாப்பிட்டுடிருப்பாங்க. அப்ப இரண்டு பேருக்கும் சண்டை வந்திடும் . அந்த பொண்ணு அவ பாட்டுக்கு எந்திரிச்சுப் போய்டுவா ..? அடுத்த சீன்ல அந்தப் பையன் அந்தப் பொண்ணு கிட்ட சமாதானம் பண்ணிட்டிருப்பான். நமக்கு அது முக்கியமில்ல . அந்த சாப்பாட்டுகடைல இருந்து அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க ..? இதுதாங்க எனக்கு சந்தேகம் ..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்..

26 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

உருப்படியா ஒரு பதிவுன்னு நினைக்கிறேன்... படிச்சிட்டு வரேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாம் நல்ல தகவலா எழுதிகிட்டு கடைசியில இது மொக்க போடுற கோமாளி ஏரியா தான்னு நிரூபிச்சிட்ட...

கருடன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பப்ப்ப்பா சரி ரைட்டு....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

First Color Film Made in India
First Color Film Made in India was Kisan Kanya in the year 1937, although the trend of colour films began very late. The film was produced by Imperial Film Co and was directed by Moti B. Gidwani. The music of the film was composed by Ram Gopal Pandey. The film had 10 songs, which were released by Gramophone Records. The storyline of the film featured an exploitative landlord and a good peasant Ramu who is accused of murdering the landlord. The film was colored using the Cinecolour process imported by Imperial Film Co. Kisan Kanya had a run time of 137 minutes and its main starcast included Padmadevi, Jillo, Ghulam Mohammed, Nissar, Syed Ahmed, and Gani.

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லாம் போச்சு ஒரே பதிவுலே உங்க பேர கெடுத்துடீங்க

விஜய் said...

ஹ ஹ ஹ தம்பி இப்ப ஈல்லாம் கருத்தோட காமெடி பண்ண ஆரம்பிச்சுட்ட போல இருக்கு, அருமையான ஐடியா...கலக்கு... உன்னைய இப்படி எல்லாம் யாரும் தம்பி யோசிக்க சொல்றா?..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அந்த பொண்ணு அவ பாட்டுக்கு எந்திரிச்சுப் போய்டுவா ..? அடுத்த சீன்ல அந்தப் பையன் அந்தப் பொண்ணு கிட்ட சமாதானம் பண்ணிட்டிருப்பான். நமக்கு அது முக்கியமில்ல . அந்த சாப்பாட்டுகடைல இருந்து அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க ..? இதுதாங்க எனக்கு சந்தேகம் ..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்..////

கோமாளியா இருக்கும்னு மன்னிச்சு விட்டிருப்பாங்க..

வெங்கட் said...

// அந்த சாப்பாட்டுகடைல இருந்து
அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க ..?
இதுதாங்க எனக்கு சந்தேகம் ..!
உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்.. //

டைரக்டர்..?
புரோடியூசர்..?
ஒரு வேளை பைனாஸ்சியரா இருக்குமோ..?!!

வினோ said...

தம்பி, நல்லவன்னு நினைச்சேனே? கடைசில போட்டு உடைச்சுட்டியே...

சௌந்தர் said...

A.V.M.செட்டியார் இவர் தானே சினிமாவை கண்டு பிடித்தார்

இதுதாங்க எனக்கு சந்தேகம் ..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்////

தொடரும்..........

Chitra said...

:-))

Jey said...

செல்வா, தகவல்களின் தொகுப்பு அருமை..

அன்பரசன் said...

//நீ இது வரைக்கும் ஒரு நல்ல பதிவாவது போட்டிருக்கியா ..?//

ஏன் இதுக்கென்ன? நல்ல பதிவு தானே
நல்லா இருக்கு செல்வா..

என்னது நானு யாரா? said...

செல்வா! உன் டச் எங்கேப்பா? கருத்து சொல்ற கந்தசாமிங்க நிறைய பேரு இருக்கிறாங்க நாட்டில. ஆனால் கோமாளி உன்னை விட்டா யாருப்பா இருக்கா?

இப்படி உன் ட்ரெண்டை திடீர்னு மாத்தினா நாட்டில இருக்கிற அப்பாவி ஜனங்க கதியை கொஞ்சமாவது நினைச்சி பாத்தியா?

நான் நினைக்கிறேன் உனக்கு யாரோ சூனியம் வெச்சிட்டாங்கன்னு. பின்னே விவேக், வடிவேலு ரேஞ்சுக்கு வளரவேண்டியவனை இப்படி ட்ராக் மாத்தி விட்டுட்டாங்களே!

dheva said...

தம்பி....விவரங்கள் அருமை....யார் சொன்னது நீ மொக்கைனு.... இப்போ நீ மொக்கையிலும் கருத்து சொல்லும் கந்தசாமி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Kumaresan Rajendran said...

போங்க தம்பி,
சும்மா காமெடி பன்னாம,

Unknown said...

மொக்கை பதிவர்கள் சார்பில் இதை கடுமையாக கண்டிக்கிறேன்.

Riyas said...

அட இதுவும் நல்லாயருக்கே..

ஜில்தண்ணி said...

என்னது "தமிழ் படமா" மீ த எஸ்கேப் :)

ஜில்தண்ணி said...

ஓ இது அது இல்லயா அப்ப சரி :)

அந்த முதல் தமிழ் படத்துல யாரு கதாநாயகன் தியாகராஜ பாகவதரா ???

ஜில்தண்ணி said...

/// அந்த சாப்பாட்டுகடைல இருந்து அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க ..? இதுதாங்க எனக்கு சந்தேகம் ..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்.. ////

மாவாட்டுன சீன கட் பண்ணிட்டாங்க மச்சி :)

( நம்மள பத்தின உண்மை தெரிஞ்சிட கூடாதுல்ல அதான் :) )

sakthi said...

நல்ல பகிர்வு

ஜீவன்பென்னி said...

அதானே அந்தப்பையனுக்கு யாரு காசு கொடுத்தா???/

Ramesh said...

ஏன் என்னாச்சு...நல்லாத்தான போயிட்டு இருந்தது..திடீர்னு ஏன் இப்படி....

vinu said...

sakthi said...
நல்ல பகிர்வு

itthulla eathaavathu ullkuthu irunnthaa me repittttttttuuuuuuuuuuuu

எஸ்.கே said...

நல்ல தகவல்கள்! நிச்சயம் இதை சேகரிக்க கஷ்டப்பட்டிருப்பீர்கள்! நன்றி!