எங்க ஆபீசுல விஸ்வா , கோகுல் அப்படின்னு இரண்டு பேரு இருக்காங்க. நம்ம நண்பர்கள் தான். அவுங்க அடிக்கடி சொல்லுவாங்க " நீ அரசியல் பதிவு எதுவும் எழுத மாட்டியா..? எதுக்குத்தான் இந்த ப்ளாக் கண்டுபிடிச்சாங்களோ " அப்படின்னு. அதனால அவுங்க சொன்னதுக்காக இந்த பதிவு. இந்த SPECTRUM SCAM அப்படின்னு இப்ப அடிக்கடி செய்தி நாம கேள்விப்பட்டிருக்கோம். அதைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க. முதல்ல அலைக்கற்றை (Spectrum) அப்படின்னா என்ன அப்படிங்கறதப் பற்றிப் பாப்போம்.
அலைக்கற்றை ( Spectrum ) :
மின்காந்த அலைகள் (Electro Magnetic Waves )அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்க. சொல்லப்போனா கண்ணுக்குத் தெரியாத அந்த அலைகளால தான் இன்றைக்கு உலகமே இயங்கிட்டிருக்கு. ஆமாங்க . மின்காந்த அலைகள Radio wave, Micro Wave, Infrared, light ,Ultraviolet, X-ray,Gamma rays. அப்படின்னு பிரிச்சிருக்காங்க . இதுல நம்ம எல்லோர்கிட்டயும் இருக்குற செல்போன் பயன்படுத்துற அலைகள் முதல்ல வர்ற ரேடியோ அலைகள் தான். செல்போன் மட்டும் இல்லாம விரைவிலேயே நான் வேலைக்குப் போகப்போற FM , அப்புறம் டிவி இந்த மாதிரியான சாதனகளுக்குத் தேவையான அலைகளும் இந்த ரேடியோ அலைகளே.! இந்த அலைக்களைப் பற்றி விரிவா தெரிஞ்சிக்க விருபுறவுங்க இங்க சொடுக்குங்க.
சரி இங்க ஊழல் நடந்தது அப்படின்னு சொல்லுறது எதுல அப்படின்னு பார்த்தா 2008 ல 2G ஏலம் விட்டுருக்காங்க. அதுலதான் நடந்தது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க . இன்னும் நிரூபிக்கப்படலை. உங்களுக்கு அந்த ஏலம் பற்றி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி தான் மூன்றாம் தலைமுறை அலைபேசிகளுக்கான ஏலம் நடந்தது. அதில் மொத்த ஏலத்தொகை 67,718.95 கோடிகளாகும். இந்த மூன்றாம் தலை முறைக்கான ஏலம் இப்ப நடக்கும் அப்ப நடக்கும் இழுத்து அடிச்சுக்கிட்டே வந்தாங்க . அப்புறம் May 19,2010 அன்னிக்கு முடிஞ்சது. இதே மாதிரி முறையா செய்ய வேண்டிய ஏலத்த யாருக்குமே தெரியாம நடத்திட்டாங்க அப்படின்னு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா மேல குற்றம்சாட்டிருக்காங்க.!
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் :
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளுக்கான ஏலம் கடந்த 2008 ல நடந்தது . அதுல அவுங்க முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அப்படிங்கிற விதிமுறையப் பயன்படுத்தி உரிமம் வழங்கிட்டோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. அதும் இல்லாம 2001 ல என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு வித்திருக்காங்க . இதுதான் இவுங்க ஊழல் பண்ணிருக்காங்க அப்படிங்கிற சந்தேகத்த வலுப்படுத்துது. அதே மாதிரி அந்த அலைகற்றைகள அடிமாட்டு விலைக்கு வாங்கின நிறுவனங்கள் எவ்ளோ சம்பாரிதாங்க தெரியுமா ..? Swan Telecom & Unitech Wireless என்ற கம்பனி 13 வட்டங்களுக்கான லைசென்சே சுமார் 1537 கோடிகள் கொடுத்து வாங்கிருக்காங்க. கொஞ்ச நாளுக்குப் பிறகு இவுங்க இவுங்களோட பங்குகளில் கொஞ்சத்த 2 பில்லியன் டாலர்களுக்கு வித்திருக்காங்க. இது அவுங்க வாங்கினதோட ஒப்பிடும் போது 700 மடங்கு அதிகம் . இதே மாதிரி மத்த கம்பெனிகள் எவ்ளவுக்கு வித்தாங்க அப்படிங்கிறத இங்க மற்றும் இங்க சொடுக்கி தெரிஞ்சுகோங்க. ஏன்னா அதப் பத்தி எழுதினா பதிவு இன்னும் நீளமா போய்டும் ..
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை :
முதலில் வருவோர்க்கு முன்னிரிமை அப்படிங்கிற நிபந்தனைகளுக்கும் TRAI அமைப்பிற்கும் சம்பந்தமே இல்ல . அதவிட ஒரு பொருள் 2001 வித்த விலைக்கேதான் 2008 லயும் விற்கும் அப்படிங்கிறது எந்த விதத்துல அப்படின்னு தெரியல ..? ஏன்னா 2001 ல இந்தியாவுல 4 மில்லியன் மொபைல் இணைப்புகள் மட்டுமே இருந்தது . ஆனா 2008 ல 300 மில்லியன் மொபைல் இணைப்புகள் இருந்திருக்கு. ஏற்கெனவே சொன்னது மாதிரி Swan Telecom நிறுவனம் 1537 கோடிகள் கொடுத்து லைசென்ஸ் வாங்கிருக்காங்க , ஆனா சில மாதங்களிலேயே 4500 கோடிகளுக்கு அவுங்களோட 45 சதவீத பங்குகள வித்திருக்காங்க. இத மேலும் விரிவா படிக்க இங்க கிளிக்குங்க. இந்த லிங்க் படிச்சாவே நிறைய உண்மைகள் உங்களுக்குத் தெரியவரும். ஆனா இதுல ஊழல் நடந்துதா இல்லையா அப்படின்னு இன்னும் விசாரிச்சுட்டு இருக்காங்க.?!?
பின்குறிப்பு : இந்தப் பதிவைப் படிச்சவுடன் நான் திருந்தி விட்டதாக யாரும் என்ன வேண்டாம். இதுவும் ஒரு மொக்கைப் பதிவே. என்னை யாரும் மொக்கைப் பதிவர் அல்ல என்று நினைத்து விட வேண்டாம். மேலும் இங்கே நான் அதிக லிங்க்கள் கொடுக்க காரணம் பதிவின் நீளம் கருதியே. மேலும் நீங்கள் என் வீட்டிற்கு ஆட்டோ அனுப்ப முடியாது. ஏனெனில் நான் இங்கே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளேன். காரணம் நான் இதழியல் படித்துள்ளேன்,. ஹி ஹி ஹி ..
37 comments:
அட நம்ப செல்வா தம்பியோட் ப்ளாக்கா இது?
நம்பமுடியவில்லை...வில்லை...இல்லை...
எல்லாமே Echo-ங்க...
செல்வா நல்லா எழுதி இருக்கப்பா! நிறைய தகவல்களை சேகரிச்சி எழுதி இருக்க. வாழ்த்துக்கள்!
//உங்க கோபத்த காட்ட://
ஏம்பா செல்வா! இப்படி எழுதி இருக்க? அதை மாத்தி எதாவது நல்ல விதமா எழுதி வைப்பா. வர்றவங்க எல்லோரும் உன் கிட்ட கோபமா படறாங்க?
ALASAL ASALA ILLA...
தம்பி விசயம் அருமை.. கடைசில பின் குறிப்பும் அருமை
தமிழ்மண ஓட்டுப்பட்டைய கீழ கொண்டு வந்து வைப்பா தம்பி! ஓட்டு போட்ட முடியல.
அலசலை உங்கள் பாணியிலேயே நடத்துங்க.... நடத்துங்க.....
வணக்கம் தம்பி, இந்த மாதிரியான பதிவுகளை சற்று விரிவாக இடையிடையே எழுதுங்கள் ...
சாரிங்க இடம் மாறி வந்திட்டேன் போலிருக்கு...
யாராவது நம்ம மொக்கை சிங்கம் கோமாளி ஏரியாவுக்கு எப்படி போகணுமுன்னு சொல்லுங்களேன்...
நல்ல பதிவு செல்வா... இப்படி அடிக்கடியாவது எழுது...
போஸ்ட் எங்க?
//இந்தப் பதிவைப் படிச்சவுடன் நான் திருந்தி விட்டதாக யாரும் என்ன வேண்டாம். இதுவும் ஒரு மொக்கைப் பதிவே. என்னை யாரும் மொக்கைப் பதிவர் அல்ல என்று நினைத்து விட வேண்டாம்.//
அதெப்புடி! எங்களுக்கு தெரியாதா என்ன?
நல்லா இருக்கு செல்வா.
காலக்கல இருக்கு செல்வா!! இருந்தாலும் இனைப்பை குறைத்து. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்களாம்... வாழ்த்துகள். நானூம் இதை பற்றி மிக விரிவாக மற்றும் விளக்கமாக ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். நான் எழுதியா ப்ளாக் விலாசம் கிடைத்ததும் சொல்லி அனூப்புகிறேன்.
எத்தனை கோடிகள்...பெருச்சாளிகள் என்ற வார்த்தை போதாது.வேணா டைனோசர்கள்'னு சொல்லலாமா...?
அதெப்புடி! எங்களுக்கு தெரியாதா என்ன?
நல்லா இருக்கு செல்வா. --repeatu..
செல்வா கேப்டன் போல கணக்கு எல்லாம் புள்ளி விவரத்தோட சொல்லி இருக்கீங்க.
படிக்குக்ம்போதே தல சுத்துது.
ம் நல்ல இருக்கு அண்ணே.
நம்ம செல்வா வா இது?!
பக்கத்தில் இருந்து இவரும் ஊழல் செய்தது போல சரியா சொல்கிறார்
Balaji saravana said...
நம்ம செல்வா வா இது?///
@@@Balaji saravana
இல்லை இது அந்நியன் செல்வா
@soundar
எனக்கு செல்வா பங்கு தந்தார் உங்களுக்கு பங்கு தரலையா?
இம்சைஅரசன் பாபு.. said...
@soundar
எனக்கு செல்வா பங்கு தந்தார் உங்களுக்கு பங்கு தரலையா?////
எவ்வளவு பங்கு கொடுத்தார் ஒரு ரூபாயா ரெண்டு ரூபாயா
//எவ்வளவு பங்கு கொடுத்தார் ஒரு ரூபாயா ரெண்டு ரூபாயா //
அவரு ஒரு ரூபாய் தந்தார் .ஏன்ப்பா கூட தரகூடாத ன்னு கேட்டதுக்கு நான் ஒரு ரூபாய் தந்தா நூறு ரூபாய் தந்த மாதிரி அப்படின்னு சொல்லிட்டாரு
நல்ல பதிவு செல்வா தொடர்ந்து அரசியல் எழுது
அரசியல் எழுது அனாலும் உன் ஸ்டைலில் கொஞ்சம் மொக்கை சேர்த்து எழுத்து அப்பா தன நல்ல இருக்கும் செல்வா
ரொம்ப நல்ல விஷயங்களா எழுதுறீங்க. வாழ்த்துக்கள். முடிஞ்சா இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதுங்க. ஏன்னா இந்த மாதிரி விஷயங்களை விளக்கமா படிச்சாதான் முழு எஃபக்ட் கிடைக்கும். எப்படியோ காமெடி, சமூகம்னு பல விஷயங்களை எழுதிறீங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு
2ஜி தொழில்நுட்ப அலைக்கற்றைகளை ஏலம் எடுத்த எட்டு நிறுவனங்கள்,ஏலம் எடுக்கும் வரை ரியல் எஸ்டேட் நிறுவங்களாகவே இருந்திருக்கின்றன.இதுதான் ஊழலின் அடிப்படை ஆதாரக்கேள்வி.தொலை தொடர்பு நிறுவங்களை ஏலத்திற்க்கு அழைக்காமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அழைத்து 2ஜி அலைக்கற்றைகளை கொடுத்தது ஏன்?இதுதான் சுப்ரீம் கோர்ட் பிரதமருக்கு நோட்டிஸ் அனுப்ப முகாந்திரமானது.
அற்புதமான பதிவு...
செல்வா, தகவல்கள் அருமை. மொக்கைகளுக்கு இடையில் நல்ல பதிவு. டிஸ்கி சூப்பர்:)
http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=101:2030&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2
இந்த இணைப்பை படித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.இந்த
ப்லொக்கிற்கு வரும் நண்பர்களும்
படியுங்கள்.உங்கள் ரத்தம் கொதிக்கும் என்பது
உண்மை.
--
ஹேய் , கோமாளி அருமையா அனலைஸ் பண்ணி எழுதி இருக்க , ரொம்ப நல்லா இருக்கு
என்னை யாரும் மொக்கைப் பதிவர் அல்ல என்று நினைத்து விட வேண்டாம். ////
அது ...... வரலாறு மிக மிக முக்கியம் கோமாளி
நல்ல முயற்சி
கொஞ்சம் அலசி இருக்கலாம், லிங்க் கொடுக்காமல்
நல்லா இருக்கு மொக்க இதே மாறி அப்பப்ப நல்ல மொக்கைபதிவுகளும் போட்டீங்கன்னா என்ன மாறி பாமர (மக்குகளுக்கும்) மக்களுக்கும் உதவியா இருக்கும் ...
இன்னும் கொஞ்சம் விரிவா போட்டு இருக்கலாம்..
அலைக் கற்றையில் இவ்வளவு ஊழலா.
ஏன் நண்பா...
ஏன் இப்படிக் கிளம்பிட்டீங்க....??
:-)
nice...!!
Post a Comment