முன்னுரை : இது நம்ம பரிசல்காரர் இந்தப் பதிவுல கேட்டிருந்த சவால் சிறுகதை போட்டிக்கான எனது சிறுகதை இது .! பாவம் இதைப் படிப்பவர்கள் ..
குளிரூட்டப்பட்ட அந்த அறையில் காவல்துறை உயர் அதிகாரியின் முன்னாள் காமினி , சமீர் , அருண் , சதீஷ் ஆகிய நால்வரும் எதற்கு தங்களை அழைத்திருக்கிறார் என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தனர். தொண்டையை சரிசெய்தவாரே பேச தொடங்கினார் காவல்துறை IG.

" நான் உங்க நாலு பேரையும் எதுக்கு வர சொன்னேன்னு தெரியுமா .. ? "
" தெரியாது சார். " என்றனர் நால்வரும் ஒரே குரலில்.
" ஓகே , நானே சொல்லுறேன். இப்ப கொஞ்ச நாளா வைரக்கடத்தல் அதிகமாயிட்டு வருது. இதனால நம்ம நாட்டோட அந்நியச் செலாவனில பாதிப்பு ஏற்படுது.So இந்த கடத்தல தடுக்கறக்காக தனிப்படை அமைக்க முடிவு பண்ணித்தான் உங்களை வரச் சொன்னேன். நீங்க நாலு பேரும்தான் அந்த தனிப்படை. உங்கள்ள ஒருத்தர் கடத்தல்ல தொடர்புடயவங்களோட சேர்ந்து spy யா இருந்து மொத்த கேங்கையும் பிடிக்கணும். உங்க நாலு பேருல யாரு அவுங்களோட சேர்ந்து spy யா இருக்க போறீங்க.? " என்று முடித்தார் I.G. பாபு.
" சார் , காமினிதான் சரியான தேர்வா இருப்பாங்கனு நினைக்கிறேன். ஏன்னா எங்க மூணு பேரையும் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு , ஆனா காமினி இப்பத்தானே join பண்ணினாங்க. அதனால மத்தவங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. " என்றான் சுரேஷ்.
" என்ன காமினி , ஓகே வா ..? " இது I.G.
"கண்டிப்பா போறேன் சார் , ஆனா எப்படி அந்த கும்பல்ல சேர்றது .? "
" அதுக்கு சில ஐடியா இருக்கு , சொல்லுறேன் . இன்னிக்கு தேதி 12.08.2009. இன்னும் ஒரு வருசத்துக்குள்ள நாம இந்த கும்பல பிடிச்சே ஆகணும். இப்ப நீங்க கிளம்பலாம்." என்று புன்னகைத்தவாறே கூறினார் I.G.
நால்வரும் ஒரு விரைப்பான சல்யூட்டிவிட்டு அறையை விட்டு அகன்றனர்.
********************************************************************************************************
12.07.2010 காலை 9 மணி. கையில் வைரம் அடங்கிய பெட்டியுடன் காமினியும் சுந்தர், ரவி ஆகிய இருவரும் காமினிக்குப் பின்னாலும் வேக வேகமாக போய்க்கொண்டிருந்தனர். அப்பொழுது பின்னாலிருந்து வந்த தோட்டா ஒன்று காமினியின் இடது தோள்பட்டையில் பட்டதும் காமினி மயங்கி விழுந்தாள். இதனைப் பார்த்த ரவியும் , சுந்தரும் பின்னால் வந்து கொண்டிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து தெறித்து ஓடத்துவங்கினர். காமினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் அவளைப் பார்க்க வந்த சமீர் ,
" இவுங்களை ஏன்பா சுட்டீங்க ..? "
" சார் ,இவுங்க வைரம் கடத்துறது மாதிரி சந்தேகமா இருந்துச்சு சார் , நாங்க முடிஞ்ச அளவுக்கு சுடாம பிடிக்கணும்னு முயற்சி பண்ணினோம் .. ஆனா முடியல. நாங்க நினைச்சதும் சரியாப் போச்சு , அந்த பெட்டில பாருங்க " என்று காட்டினார் கான்ஸ்டபிள் ராமசாமி.
" எல்லாம் சரிதான் , ஆனா இவுங்களும் போலீஸ் தான் ., " என்று காமினியைப் பற்றி விளக்கினார் சமீர்.
" சாரி சார் , எங்களுக்குத் தெரியாது .." என்று மன்னிப்பு கேட்டார்
" சரி ,விடுங்க..ஆனா அவுங்க போலீஸ் அப்படிங்கிற விஷயம் மட்டும் வெளிய போகாம இருக்கணும் "
" கண்டிப்பா சார் .. " என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே காமினிக்கு மயக்கம் தெளிந்திருந்தது.
" சமீர் , நீங்க எப்படி இங்க..? " என்றாள் காமினி.
" யாரோ , வைரக்கடத்தல் ஆசாமிய சுட்டுட்டாங்க அப்படின்னு சொன்னதால வந்தேன்.. பார்த்த உங்களை சுட்டுருக்காங்க.."
" அத விடுங்க சமீர் , இன்னிக்கு நான் எப்படியாவது அங்க போயே ஆகணும் , ஏன்னா இன்னிக்கு அந்த கேங்கோட தலைவர பார்க்கப்போறேன். அவர பிடிசிட்டோம்னா நம்ம தனிப்படை அமைச்சதுல வெற்றி அடைஞ்சது மாதிரி ., ஆனா என்னால அங்க போக முடியுமா அப்படின்னு தெரியல. கை வலி அதிகமா இருக்கு .. " என்றாள் பரிதவித்தாள் காமினி.
" ஓ , ஒரே நிமிஷம் என்னோட பிரெண்ட் ஒருத்தர் இருக்கான் ., அவன் என்னமோ ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தான் . அவன கேட்டுப் பாக்குறேன்.. ! "
சமீர் அவரது நண்பர் சந்தோசிற்கு அழைத்தார். " சந்தோஷ் , எங்கடா இருக்க .? ஒரு ஹெல்ப் வேணும் "
" சொல்லுடா , என்ன ஹெல்ப் .? , திருடன எவனாவது பிடிச்சு தரணுமா ..? "
" அதெல்லாம் வேண்டாம் , நீ என்னமோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தீல , அது என்ன ஆச்சு ..? "
" IAIT ஆராய்ச்சியா .? அது முடிஞ்சது மச்சி , சக்சஸ்..! "
" அதுல தான் ஒரு உதவி வேணும் .."
" பண்ணலாமே . சொல்லு ..! "
சமீர் நடந்தவற்றை விளக்கினான். " ஓகே , மச்சி நான் நேரா அந்த ஹாஸ்பிடலுக்கு வந்திடறேன் .. " என்று கட் செய்தான் சந்தோஷ்.
" ஓகே , காமினி , சந்தோஷ் வந்திடுவான் , அவன் சொல்லுறத நல்லா கேட்டுக்கோங்க , அப்புறம் சதீசையும் வர சொல்லிடறேன்.! "
" சரிங்க , இன்னிக்கு அவுங்கள பிடிச்சே ஆகணும்..அதுவும் இல்லாம என் கூட வந்த ரண்டுபேரும் கண்டிப்பா இங்க வருவாங்க ,அவுங்களையும் சமாளிச்சாகனும்.."
" பார்த்துக்கலாம் காமினி ., இதோ சந்தோஷ் வந்திட்டான்."
" அவரு வந்திட்டாரா., " என்று உள்ளே வரும்போதே சதீசைப் பற்றி விசாரித்தான் சந்தோஷ்.
" வந்திட்டார் , உள்ள வெயிட் பண்ணுறார் , உன்னோட வேலைய ஆரம்பி போ ." என்றான் சமீர்.
அப்பொழுது சரியாக சுந்தரும் , ரவியும் வெளியே நின்றுகொண்டிருந்தனர்.
" டேய் எப்படியாவது காமினிய இங்க இருந்து கூட்டிட்டு போய்டணும் , போலீஸ் கைல மாட்டின அவ்ளோதான் .. " என்று அங்கலாய்த்தான் ரவி.
" டேய் டாக்டர் உள்ள போராருடா , அவரு வெளிய போனதுக்கு அப்புறம் ஏதாவது பிளான் பண்ணுவோம் , ஆனா போலீஸ்காரனுக நிக்குரானுகளே..? " இது சுந்தர்.
" உள்ளே சென்ற டாக்டர் காமினியைப் பார்த்து விட்டு சமீரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் வெளியேறினர். இதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர்.திடீரென சுந்தரின் முகம் மாறுவதைப் பார்த்த ரவியும் உள்ளே பார்க்க ஆரம்பித்தான் .
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
" டேய் அங்க பாருடா காமினி எந்திரிசுட்டாடா.," என்றான் சுந்தர்.
" ஆமாடா , சிவா சொன்னது மாதிரியே அங்க கூட்டிட்டுப் போய்டலாம். " இது ரவி.
வெளியே வந்த காமினி இவர்களைப் பார்த்ததும் எங்கே செல்வது என்பது போல கைகளில் சைகை செய்தாள். மூவரும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனில் ஏறி சிவா கூறிய இடத்திற்கு விரைந்தார்கள். அந்த இடம் பெரிய அரங்கினைப் போல காட்சியளித்தது. சிவா இருக்கும் அறையை அடைந்தனர். இவர்களைப் பார்த்த சிவா , " வாங்க , இடைல ஒண்ணும் பிரச்சினை இல்லையே .? , அடி பலமா பட்டிருச்சா காமினி..? "
" இல்ல, லேசான காயம்தான் ."
" சுந்தர், உன்னையும் ரவியையும் பரந்தாமன் வரச்சொன்னார்., எனக்கும் காமினிக்கும் ஒரு சின்ன வேலை இருக்கு .." என்றான் சிவா.
" ஓகே , சிவா நாங்க கிளம்பறோம் . " என்று விடைபெற்றனர் இருவரும்.
" தென் , காமினி அந்த வைரப் பெட்டிய எங்கிட்ட கொடுத்திடு..! "
" என்ன சிவா சொல்லுற , இது நம்ம பாஸ் பரந்தாமன் சார் கிட்ட மட்டும் தான் கொடுப்பேன்.. " என்றாள் காமினி.
"எனக்குத் தெரியும் காமினி , நீ இப்படி பண்ணுவேன்னு , அதனாலதான் என்னோட துப்பாக்கியோட வயித்த நிரப்பி வச்சேன். “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
துப்பாக்கியை வைத்ததும் அது வெறும் நிழலில் வைத்தது போன்று காமினியின் நெற்றிப் பகுதிக்குள் சென்றது. இதை பார்த்த சிவா பயத்தில் " பேய் பேய் " என்றவாறே இரண்டடி தள்ளிப் போனான் .,
" பேயெல்லாம் இல்ல சிவா , இது ஒரு டெக்னாலாஜி. இதோட பேரு IAIT (Invisible and Illusion Technology).
" டெக்னாலஜியா ..? "
" ஆமா , நீ நினைக்கிற மாதிரி இங்க இருக்கறது காமினி கிடையாது ., அவுங்களோட நிழல்.! , அதே மாதிரி உன் கண்ணுக்கு தெரியாம நான் (சதீஸ்) இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க ஆளுங்க வந்து உன்ன அரெஸ்ட் பண்ணிடுவாங்க. அதுக்கு முன்னாடி IAIT டெக்னாலஜிய பத்தி தெரிஞ்சிக்க.! "
சிவா அதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தான். எங்கிருந்து குரல் வருது .? என்று பலவாறு குழம்பிப்போயிருந்தான்.
" எந்த ஒரு பொருளுமே நம்ம கண்ணுக்குத் தெரியணும்னா நம்ம கண்ணுல இருந்து போற ஒளி அந்தப் பொருள் மேல பட்டு எதிரொளிச்சாதான் நமக்குத் தெரியும். அதுக்கு பதிலா நம்ம கண்ணுல இருந்து போற ஒளிய அந்தப் பொருள் ஈர்துடுட்சுன்னா அந்தப் பொருள் நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு கெமிக்கல் கோட்டிங் தான் என் மேல பூசப்பட்டிருக்கு. அதே மாதிரி என்கைல இருக்குற லத்திளையும் பூசப்பட்டிருக்கு.! லத்தியோட தலைப்பகுதில ஒரு சிப் இருக்கு. அந்தச் சிப்போட வேலை என்னன்னா நாங்க கம்ப்யூட்டர்ல கொடுத்திருக்கிற உருவத்தோட நிழல அடர்த்தியா அவுங்க அந்த இடத்துல இருக்குற மாதிரியான ஒரு கானல் உருவத்தைக் கொடுக்கும். அந்த உருவம் என்னோட உடல் அசைவுக்குத் தகுந்த மாதிரி இயங்குற மாதிரி பண்ணிருக்கோம். அந்த உருவம் தான் நீ பார்த்துட்டிருக்குற காமினியோட உருவம். காமினி ஹாஸ்பிட்டல்ல இருந்து இங்க என்ன நடக்குது அப்படிங்கிறத பார்த்துட்டு இருக்கா. அதோட நீ பேசுறதையும் கேட்டுக்கிட்டு இருக்குறா. நீ கேக்குற கேள்விக்கு அவ அங்கிருந்து பதில் சொல்லுவா . என்னோட உடம்புல ஒரு ஸ்பீக்கர் இருக்கு , அந்த ஸ்பீக்கர் வழியாதான் நீ காமினியோட குரலை கேட்ட. ! இதுக்குப் பேருதான் Illusion and Invisible Technology.! " என்று முடிப்பதற்கும் போலீஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்களிடம் சிவாவை ஒப்படைத்து விட்டு பரந்தாமனை சந்திக்க கிளம்பினார் காமினி (சதீஸ் ).!
**************************************************************************
காமினியைப் பார்த்ததும் பரந்தாமன் , " இப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு காமினி , உனக்கு ஒண்ணும் ஆகலையே ..? " என்றார்.
" இல்லை சார் , ஒண்ணும் பிரச்சினை இல்லை .. "
" வைரம் என்ன ஆச்சு , போலீஸ் கைல சிக்கலையே.? "
" இதோ இருக்கு சார் ., " என்று தான் எடுத்து வந்திருந்த வைரப்பெட்டியை நீட்டினான்(ள்). அதைப் பார்த்ததும் “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
" தேங்க் யூ , சார்.. "
" இன்னிக்கு நீ பண்ணிருக்கிற இந்த விசயத்தால நம்ம கேங் சார்பா இன்னிக்கு உனக்கு பெரிய ட்ரீட் காத்துட்டிருக்கு..! " என்றார் பரந்தாமன் மகிழ்ச்சியுடன்.
" மாமியார் வீட்டுல வச்சுக்கலாமா.. ? " என்ற ஆண் குரலைக் கேட்டதும் அதிர்ந்து போனார் பரந்தாமன்.
மறுநாள் காலையில் செய்தித்தாளில் பிரபல வைரக் கொள்ளைக் கூட்டம் பிடிபட்டது என்கிற செய்தியினைப் படித்தவாறே பெட்டில் இருந்து எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தாள் காமினி.
- முற்றும்.
பின்குறிப்பு : போட்டிக்கான கதை முற்றும் என்பதுடன் முடிந்தது. கதை கலக்கல் , அருமை அப்படின்னு கமெண்ட் போடனும்கறது இல்லை சும்மா கும்மி அடிச்சிட்டு போங்க ..!!

63 comments:
well done Mr. Selva kumar. You have done a very good job. Im really proud of you.........
நல்ல வந்திரு தம்பி கதை..
அப்படியே தேவா அண்ணனுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கதை நலலா இருக்கு கிரைம் நாவல் மாதிரி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தேவா அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எந்திரனுக்கு உன் கதை 100 மடங்கு சூப்பர் தம்பி
photo ல இருக்கறவருக்கு வாழ்த்துக்கள் lol
//எந்திரனுக்கு உன் கதை 100 மடங்கு சூப்பர் தம்பி //
அட அட , நன்றி அண்ணா . கதை சூப்பரா வர காரணம் நம்ம தேவா அண்ணாவுக்கு பரிசு தரனும்கறது தான் ..!!
ஹலோ 100 மடங்கு இல்ல 1000 மடங்கு. இதுல கிடைச்ச திருப்தியில கால் பங்கு கூட தேராது.
போட்டிக்கான கதை முற்றும் என்பதுடன் முடிந்தது. கதை கலக்கல் , அருமை அப்படின்னு கமெண்ட் போடனும்கறது இல்லை சும்மா கும்மி அடிச்சிட்டு போங்க .////
அட இங்க கும்மி அடிக்க படும் என்று சொல்லி இருக்கான் யாரையும் காணோம் வாங்க
அடி பலமா பட்டிருச்சா காமினி..? "////
சிரிப்பு போலீஸ் வாங்க விசாரணை நடத்துங்கள்
அருண் பிரசாத் said...
எந்திரனுக்கு உன் கதை 100 மடங்கு சூப்பர் தம்பி////
@@@@அருண்
அப்போ சன் பிக்சர் இந்த கதையா படமா எடுக்குமா?
ஜீவன்பென்னி said...
well done Mr. Selva kumar. You have done a very good job. Im really proud of you........////
ஆமா ஆமா அவர் நல்ல வேலை தான் செய்றார்
ரொம்ப டெக்னாலாஜியை யூஸ் பண்ணியிருக்கீங்க கதை கிரைம் எழுத்தாளர் கதையை படிக்கற மாதிரி இருக்கு பா நன்று!!!
தேவா இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!
ஜீவன்பென்னி said...
well done Mr. Selva kumar.You have done a very good job. Im really proud of you.......
ஜீவன்பென்னி அண்ணே என்ன சொல்றார் என்றால்
மதிப்பிற்குரிய செல்வகுமார் அவர்களே நீங்க ரொம்ப நல்ல வேலை செய்து இருகீங்க உங்களை பார்த்து நான் ரொம்ப பெருமை படுறேன்
சௌந்தர் said...
அருண் பிரசாத் said...
எந்திரனுக்கு உன் கதை 100 மடங்கு சூப்பர் தம்பி////
@@@@அருண்
அப்போ சன் பிக்சர் இந்த கதையா படமா எடுக்குமா?
நான் வேனுமின்னா கலா நிதி மாறனை கேட்டு சொல்லவா
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
போட்டோ வில் இருபவருக்கு பிறந்தநாள் ச்பவ்ச்ன்ப (கடைசில உள்ளது புரியலைன அவரிடமே கேளுங்கள் )
நானும் வாழ்த்திகிறேன் பா போட்டியில் வெற்றி பெற
sakthi said...
அப்போ சன் பிக்சர் இந்த கதையா படமா எடுக்குமா?
நான் வேனுமின்னா கலா நிதி மாறனை கேட்டு சொல்லவா///
@@@sakthi
சொல்லுங்க சொல்லுங்க ஒரு 200 கோடி வைச்சு இந்த கதையை படமா எடுப்போம்
மொக்கை தான் நல்ல போடுவீங்கன்னு நினைச்சேன்.. கதையும் சூப்பரா வந்திருக்கு.. பரிசு பெற வாழ்த்துக்கள்..
ரஜினி ரசிகனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தேன் "கவிதை" தென்றல் தேவாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :-)
///பதிவுலகத்தில் நீ கண்டெடுத்தாய் பல முத்தை ,
அதிலே நான் மட்டும் சொத்தை ,///
ஹா ஹா ஹா.. எப்படி உங்களையே நீங்க வாரிக்கறீங்க.. இந்த லைனை படிச்சவுடனே சிரிப்பு வந்துடுச்சு...
கதையும் நல்லாயிருக்கு..
@தேவா..
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
தேவா அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!
கதை நல்லாயிருக்கு செல்வா... இந்த மாதிரி தொடர்ந்து எழுது..
yyarukkuppaa piranthanaalu. sollave illai. vazhthu tamillathaana sollanum?
செல்வா என்னாடா அச்சி உனக்கு?? வர வர நல்லா எழுத ஆரம்பிச்சிட்ட.. நல்லா எழுதினாகூட தாங்கிக்களாம் ரொம்ப நல்லா எழுதர அதான் தாங்க முடியல. நீ இப்படி ஒரு கதை எழுதி இருப்ப நான் நினைக்கல.... சரி இனி மொக்கை நான் பாத்துகிறேன். நீ தொடர்ந்து எழுது... கலக்கரடா
(ஐய்யோ!! நான் என்ன தேவா மாதிரி நல்ல கமெண்ட் எழுதரேன்... )
எந்திரன் எஃபொக்ட்ல கதை எழுதி அசத்திட்ட செல்வா! கதை போட்டியில் வெல்ல வாழ்த்தறேன்.
தேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் மெய்ஞானப் பாதையில் நடந்து, மனிதர்களின் இறுதி இலக்கான மெய்ஞானத்தினை நீங்கள் அடையவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!
@அனு
//மொக்கை தான் நல்ல போடுவீங்கன்னு நினைச்சேன்.. கதையும் சூப்பரா வந்திருக்கு.. பரிசு பெற வாழ்த்துக்கள்..//
அனு!! உங்களுக்கு மனநிலை ஏதாவது பாதிக்கபட்டு இருக்கா?? வர வர எங்கள மனசு விட்டு பாராட்டறிங்க!! தப்பு மேடம் தப்பு!! கடமை தவறாதிங்க... :)
(அனு! நாங்க என்னதான் பாராட்டினாலும்.. எப்பவும் கலாய்க்கரவங்களே பாராட்டினா, பாராட்ட படுகிறவர் உன்மைலே நல்லா எழுதி இருக்காரு அர்த்தம். செல்வா பாராட்டி இருக்கதுக்கு ரொம்ப தேங்ஸ் சகோ... :)) )
@அருண் & ரமேஷ்
//பாராட்ட படுகிறவர் உன்மைலே நல்லா எழுதி இருக்காரு அர்த்தம். செல்வா பாராட்டி இருக்கதுக்கு ரொம்ப தேங்ஸ் சகோ... :)) ) //
தம்பி VKS பசங்களா!!! உங்க தலைவிக்கு நன்றி சொன்னேன் சொல்லி.. இதான் சாக்குனு நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் விஜயகாந்து மாதிரி வானத்த போல நல்ல மனசு இருக்கவங்க அப்படி, இப்படினு ஏதாவது படம் போட்டிங்க... என் ப்ளாக்ல அடுத்த பதிவு நீங்க தான்.... :))
வாழ்த்துக்கள்...
நானும் எழுதிகிட்டு இருக்கேன்...
சீக்கிரம் ரிலீஸ் பண்றேன்...
செல்வா இது நீதானா?
கதை சூப்பர்.
தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கதை சூப்பர்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!
//வெறும்பய said..
கதை நல்லாயிருக்கு செல்வா... இந்த மாதிரி தொடர்ந்து எழுது//
நீ ரொம்ப நல்லவன்பா.. வலிகாதமாதிரியே நடிக்கிற ;)
சும்மா ஒரு கும்மிக்கு.. ஹி ஹி..
ஒரு நல்ல க்ரைம் கதை உன்னால எழுதமுடியும் செல்வா!
அதுக்கு இதுதான் முதல்படி...வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா..
///நீதி : தேவா அண்ணா உங்க பிறந்தநாள் பரிசா 5 காசு கூட பெறாத ஒரு மொக்க கதைய பரிசளிச்சதுக்காக என்னைய மன்னிச்சிருங்க., பரிசோட மதிப்ப பாக்காதீங்க .. அதைய பரிசளிச்சவரோட மனச பாருங்க ..! ஹி ஹி ஹி .///
ஹலோ அவர் மன்னிக்கறது இருக்கட்டும், முதல்ல கதை படிச்ச எங்க நிலமைய யோசிச்சு பாத்தீங்களா??
(சும்மா தான் சொன்னேன்.. செல்வா.. ) :-))
உருவமில்லா உணர்வுகள்
நேசத்தோடு சேர்ந்த அன்புகள்
கட்டி வைத்திருக்கும் பாசம்
தம்பி... நெகிழ்ச்சியின் உச்சத்தில்...என் நன்றி நவிழலுக்கு பின் பாசம் என்ற கண்ணீர் துளிர்ப்பதை மறைக்க முடியவில்லை......
உனக்கும், வாழ்த்து சொன்ன எல்லா நட்புகளுக்கும் எனது நமஸ்காரம் + நன்றிகள் பா!
//தம்பி... நெகிழ்ச்சியின் உச்சத்தில்...என் நன்றி நவிழலுக்கு பின் பாசம் என்ற கண்ணீர் துளிர்ப்பதை மறைக்க முடியவில்லை......
//
நன்றி எல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம் ..
முதல்ல நான் உங்களை பாராட்டி கவிதை எழுதிருக்கேன் ,.
அத பத்தி சொல்லுங்க ..!!
I think
na vera blogkulla nulinchtenu ninaikren..
appurama varen...
very nice...annathey..
emputu thermai vachu erukenga...
valga valga 25m pulikesi..
25am pulikesh selva valga valga.
செல்வா
கிரைம் கதை நிறைய எழுதுயா ...,நல்லா இருக்குது ...,உன் மெயில் id இருந்தா கொடேன் ...,
@பனங்காட்டு நரி
//செல்வா
கிரைம் கதை நிறைய எழுதுயா ...,நல்லா இருக்குது ...,உன் மெயில் id இருந்தா கொடேன் .//
எழுத படிக்க தெரியாது?? Profile பாருடா லூசு...
செல்வா id : thamizhbarathi@gmail.com
//தம்பி... நெகிழ்ச்சியின் உச்சத்தில்...என் நன்றி நவிழலுக்கு பின் பாசம் என்ற கண்ணீர் துளிர்ப்பதை மறைக்க முடியவில்லை......//
yes... இதுதான் தேவா
i wish
வெற்றி பெற வாழ்த்துக்கள் கோமாளி
வெற்றி பெற வாழ்த்துக்கள் கோமாளி
கத சுமாராயிருக்கு ஏன்னா இத விட உன்னால சிறப்பா எழுத முடியும்னு நம்புறேன்....அதனால அடுத்த கதைய இந்த கதைய விட இன்னும் நல்லா எழுது......
நல்ல ஒரு கிரைம் கதை. கொஞ்சம் பட்டி பார்த்த இன்னும் நன்றாக இருக்கும் செல்வா.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க செல்வா...கலக்கல்..தொடர்ந்து எழுதுங்கள்
நானும் ஒன்னு எழுதியிருக்கேன் ....
யாரடி நீ காமினி ?! ( சவால் சிறுகதை )
கொஞ்சம் வந்து பாத்துட்டுப் போங்களேன் ?!
http://desandhiri.blogspot.com/2010/10/blog-post_08.html
ஆஹா லேட்டா வந்துட்டேன் போல...
கதை நல்லா கொண்டு போயிருக்கீங்க..நல்ல முயற்சி அடிக்கடி கத போடுங்க..
ஓகே , காமினி , சந்தோஷ் வந்திடுவான் , அவன் சொல்லுறத நல்லா கேட்டுக்கோங்க , அப்புறம் சதீசையும் வர சொல்லிடறேன்//
ஹை நானு கதையில இருக்கனா
தேவா அண்ணா உங்க பிறந்தநாள் பரிசா 5 காசு கூட பெறாத ஒரு மொக்க கதைய பரிசளிச்சதுக்காக என்னைய மன்னிச்சிருங்க., //
நல்லாதாய்யா இருக்கு
//ஹை நானு கதையில இருக்கனா//
ஆமாங்க ., உங்களையும் சேர்த்துக்கிட்டேன் ..
அனேகமா முதல் பரிசு உங்களுக்குத்தான்
//அனேகமா முதல் பரிசு உங்களுக்குத்தான்//
நன்றி கோபி அண்ணா .!!
வெற்றிபெற வாழ்த்துக்கள்..
(மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)
//எந்த ஒரு பொருளுமே நம்ம கண்ணுக்குத் தெரியணும்னா நம்ம கண்ணுல இருந்து போற ஒளி அந்தப் பொருள் மேல பட்டு எதிரொளிச்சாதான் நமக்குத் தெரியும். //
கண் ஒளி கொடுக்கும் source அல்ல. ஒளி எல்லா வர்ணகளும்(fundamentally VIBGYOR) கொடுக்கும் வித விதமான frequency உடையது. எந்த பொருளும் தன் மீது 'source 'ஆல் வீசப்படும் அனைத்து வகை frequency களையும் வாங்கி.. சில அல்லது எல்லா frequency களையும் கொண்ட ஒளி அலைகளை பிரதிபலிக்கும்.. அதுவே நாம் அந்த பொருளை நமது கண்ணால் காண உதவும்.
அதாவது கண் மீது ஒளி படுகிறதே தவிர.. கண் ஒளியினை அனுப்புவதில்லை.
வாழ்த்துக்கள்.
(இந்த டெக்குனாலஜ்ஜி எல்லாம் நெஜங்களா?..நம்ம மணிபர்சுல பணம் கூட இந்த டெக்குபஜ்ஜி போல தான் தெரியுதுங்க)
கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்
இப்போ இந்தக் கதைக்கு காட்சிப்பேழைன்னு பேர் வெச்சு இருக்கலாம் (நன்றி மதன் கார்க்கி)
மச்சி கத நல்லா இருக்கு.. IAIT TECH.லாம் செம.. க்ரைம் மாதிரி எழுதி இருக்குற good..
கதை 2010ல இருக்கு..
ஆனா.. எழுத்து நடை.. 80 கள்ல இருக்கே.. மொதல்ல தொடங்கும் போது.. நீங்க எல்லாரும் எதுக்கு இங்க வந்திருக்கீங்க தெரியுமா??”
தெரியலியே சார்ன்னு எல்லோரும் கோரஸாக சொன்னதாக எழுதியுள்ளாய்..
எனக்கு அந்த ஸீன நீ சொன்ன விதம் புடிக்கல.. அதற்கு அடுத்த ஸீன்ல இருந்து பட்டய கெளப்பிட்ட..
நீயே சொன்ன மாதிரி லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மேஜிக் இருக்கு கதைல.. தொடரவும்!
Post a Comment