Monday, December 6, 2010

சமகாலக் கல்வி

முன்குறிப்பு : சமகாலக் கல்வி குறித்து தொடர் பதிவு எழுத அழைத்த நம்ம தேவா , எஸ்.கே மற்றும் பாபு அண்ணன்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பதிவில் கூறியிருப்பது அனைத்தும் இன்றைய கல்வியின் நிலையைப் பற்றிய எனது கருத்துக்கள் மட்டுமே. அது தவறாகவும் இருக்கலாம்.!

இன்றைய காலகட்டங்களில் கல்வி என்பது மதிப்பெண்களாலேயே மதிப்பிடப்படுகிறது.
LKG முதல் PG வரை என அனைத்து நிலைகளிலும் மதிப்பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிக மதிப்பெண் வாங்குபவரே அறிவாளி என்ற என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. மதிப்பெண் பெறுவதென்பது அவரவர் நியாபக சக்தியைப் பொறுத்தே அமைகிறது.மேலும் செய்முறைத் தேர்வுகள் பெரும்பாலும் கற்றுத்தரப்படாமல்   அநேக பள்ளிகள் செயல்படுகின்றன. போதிய உபகரணங்கள் இல்லாமை மற்றொரு காரணமாகும்.!

  பள்ளிக்கல்வியைப் பற்றிப் பார்க்கலாம். பள்ளிக்கல்வியைப் பொறுத்த வரையில் தற்பொழுது தனியார் பள்ளி மோகம் பெற்றோரிடம் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும் என்ற எண்ணம் பரவிவருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஒருவித மிரட்டலுக்கு உட்பட்டே பாடங்களை  மனப்பாடம் செய்கின்றனர். பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலேயே எடுப்பதும் , பனிரண்டாம் வகுப்பு பாடங்களை பதினொன்றாம் வகுப்பிலிருந்து எடுப்பதும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது. ஒரே பாடங்களை இரண்டு வருடம் போதித்து மாணவர்களை மனப்பாட இயந்திரமாக மாற்றவும் தயங்குவதில்லை.!

  பொதுவிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் இதுதான் உனது வாழ்க்கை , இந்தத் தேர்வுகள்தான் உனது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்று மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர். பெரும்பாலும் மாணவர்கள் தேர்வுகளில் தோற்றுப்போவதற்கும் இது போன்ற அறிவுரைகள் காரணமாக அமைந்து விடுகிறது. ஏனென்றால் இது போன்ற அறிவுரைகள் அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன. மேலும் தங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் தெருவிலோ அல்லது விளையாடுவதையோ பார்த்தால் " உனக்கு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் , படிக்கறத விட்டுட்டு இங்க என்ன பண்ணுற " என்று அந்த மாணவர்களை எங்கு பார்த்தாலும் அறிவுரை மழை பொழிவதை தவிர்த்தாலே அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.!

  தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டும் அக்கறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை காலை 4 மணிக்கே எழுப்பி படிக்க சொல்லுவதும் , இரவு 11 மணிவரை படிக்கச் சொல்வதும் பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு படிக்கும் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் மனமுடைந்து போகின்றனர். இவர்கள் மாணவர்களிடம் உள்ள அக்கறை காரணமாக இருப்பதைக் காட்டிலும் இந்த வருடம் எங்கள் பள்ளியில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று விளம்பரம் செய்வதற்கே அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் சேர்வதற்கே ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே சேர்த்துக்கொள்கின்றனர். அப்பாடி மதிப்பெண்கள் இல்லாத மாணவர்களிடம் லட்சக்கணக்கில் உதவித்தொகை பெறுவதும் சில பள்ளிகளில் இருப்பதாக செவிவழி செய்தி.! பள்ளிப்படிப்பிற்கே இவ்வளவு நன்கொடையை என்று சற்று ஆச்சர்யமாகவே இருக்கிறது.

  தனியார் பள்ளிகளை குற்றம் சொல்லுவதை விட இன்றைய பெற்றோர்களின் தவறை நாம் பார்த்தால் போதுமானது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகனோ அல்லது மகளோ குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படிக்கின்றனர் என்று கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். மொத்தத்தில் இவர்களது பெருமைக்காக தங்களது பிள்ளைகளை மனப்பாட இயந்திரமாக மாற்றும் பள்ளிகளைத் தவிர்த்தாலே போதுமானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலங்களில் அரசுப் பள்ளிகள் நிச்சயம் சிறந்த கல்வியினை அளிக்கக்கூடியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வரப்போவது தற்போதுள்ள இளைஞர்களே.! நிச்சயம் இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்பட்டே இருக்கும்.!

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
  சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 2.5 வயதிலேயே PRE KG என்ற வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். சிலரைக் கேட்டால் இப்பொழுதிருந்தே பள்ளிக்குச் சென்றால்தான் படித்துப்பழகுவர்கள் என்கின்றனர். இன்னும் சிலர் வீட்டில் செய்யும் குறும்புகளுக்காகவே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்கின்றனர். பொதுவாகவே இந்த வயதில் நிச்சயம் பள்ளிக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. இதிலே சில நல்ல விஷயங்களாகத் தோன்றினாலும் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திருக்குறளை ஒப்பிக்கின்றனர் என்று பெருமைப் பட்டுகொள்வதும் உண்டு. அதைப் பார்த்து சிலர் தங்களது குழந்தைகளையும் திருக்குறள் போன்ற விசயங்களை மனப்பாடம் செய்யச் சொல்வதும் அதற்காக தனிப்பயிற்சி அனுப்புவதும் காணப்படுகிறது. பொதுவாகவே திருக்குறளை ஒப்புவிப்பதிலோ அல்லது வேறு சிலவற்றை மனனம் செய்வதிலோ குழந்தைகளின் அறிவுத்திறனோடு ஒப்பிடாதீர்கள். அதே போல உங்களது பெருமைக்காக சில பெயர்பெற்ற பள்ளிகளில் சேர்ப்பதும் ,  விடுதியில் விடுவதையும் முடிந்த அளவு தவிர்க்கப்பாருங்கள்.மொத்தத்தில் ஏட்டுக்கல்வியை விட உங்கள் வாழ்கைக்கல்வியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்களை விடச் சிறந்த ஆசியர்கள் இருக்க முடியாது.!  

நீதி : நானும் என்னால முடிஞ்சா அளவுக்கு சீரியஸ் ட்ரை பண்ணிப் பார்த்தேங்க , முடியல.! 

பதிவின் முடிவு : இங்க சமகாலக் கல்வி பத்தி எழுத சொன்னாங்க ., ஆனா நான் பள்ளிக்கல்வியப் பத்தி மட்டுமே எழுதிருக்கேன். அதனால இது பற்றி நம்ம எஸ்.கே அண்ணனும் பாபு அண்ணனும் என்னை விட ரொம்ப ரொம்ப நல்லா எழுதிருக்காங்க.போய் பார்த்துகோங்க. இந்தப் பதிவினைத் தொடர மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்களை அழைக்கிறேன் .!

பின்குறிப்பு : எனது ஐம்பதாவது பதிவில் வெறும் பத்து எழுத்துக்களை மட்டுமே கொண்டு நான் செய்த அறிய முயற்சியைப் பார்த்து நமது சௌந்தர் காறித்துப்பியதாலோ அல்லது எனது புதிய முயற்சியைக் கண்டு பலர் எனது ப்ளாக் படிக்கவே பயப்படுவதாலோ இந்த இந்தப் பதிவினை நான் எழுதவில்லை. ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் சில நல்ல(?)  பதிவுகள் எழுதலாம் என்று எண்ணத்தில் இருந்தேன். ஆயினும் எனது கனவில் தோன்றிய மொக்கயரசர் அவ்வாறு எழுதுதல் கூடாது என்றும் , வேண்டுமானால் ஒரு நல்ல பதிவு எழுதிக்கொள் என்று அனுமதி வழங்கியதுடன் ஒரு பொன்மொழியும் அருளிசென்றார். அவர் அருளிய பொன் மொழிதான் மேலே உள்ளது என்பதையும் தெரிவிக்கக்  கடமைப்பட்டுள்ளேன்.! மேலும் அவரது வேண்டுகோளுக்கினங்க அடுத்த பதிவாக மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத் தகவல் என்ற பதிவு வரும் என்பதையும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துகொள்கிறேன்.!

இதையும் படிங்க : 

111 comments:

Philosophy Prabhakaran said...

vadai

sathishsangkavi.blogspot.com said...

சுடுசோறும், வடையும் எனக்குத்தான்....

Arun Prasath said...

அடடா

Philosophy Prabhakaran said...

அட... எதிர்பார்க்கவே இல்லை... சும்மா இந்த பக்கமா வந்தேன்... பாத்தா வடை சிக்கிடுச்சு...

Philosophy Prabhakaran said...

@ சங்கவி
மிஸ் பண்ணிட்டீங்களே...

Arun Prasath said...

புள்ளைக்கு என்ன அறிவு

செல்வா said...

//
philosophy prabhakaran said...
வடை//


வடை வென்றுவிட்டார் ..!!

பெசொவி said...

நல்லாத்தான் எழுதியிருக்க................உனக்கும் சீரியஸ் பதிவு எழுத வருது! வாழ்த்துகள்!

கருடன் said...

@செல்வா

அருமையன அலசல்...

(சத்தியமா பதிவை படிக்கல...)

Philosophy Prabhakaran said...

@செல்வா

அருமையன அலசல்...

(சத்தியமா பதிவை படிக்கல...)

SAME FEELING...

செல்வா said...

//நல்லாத்தான் எழுதியிருக்க................உனக்கும் சீரியஸ் பதிவு எழுத வருது! வாழ்த்துகள்! //

அடடா .!! ஆனாலும் நான் மொக்கைதான் எழுதுவேன் .

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@செல்வா

அருமையன அலசல்...

(சத்தியமா பதிவை படிக்கல...)///

தலைவன் டா நீ

இம்சைஅரசன் பாபு.. said...

ரொம்ப நல்லைக்கு பிறகு செல்வா ப்ளோக்ல நல்ல பதிவு ..........செல்வா பின் குறிப்பு ஒன்னு போட்டு இதை யார் வேண்டும்னாலும் தொடரலாம் போட்டுரு......நல்ல பகிர்வு .

Arun Prasath said...

அருமையன அலசல்...

(சத்தியமா பதிவை படிக்கல...)//

படிகாமலயே இந்த லொள்ளு கூடாது...

செல்வா said...

நான் உள்ள வரட்டும்களா ..?

Ramesh said...

//ஒரே பாடங்களை இரண்டு வருடம் போதித்து மாணவர்களை மனப்பாட இயந்திரமாக மாற்றவும் தயங்குவதில்லை.!

உண்மைதான் செல்வ..

//மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர்.

ஆமாம்.. தோல்வியுற்றால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது இதன் காரணமாகத்தான்....

நல்லா அலசியிருக்கீங்க செல்வா... வாழ்த்துக்கள்

Arun Prasath said...

நான் உள்ள வரட்டும்களா ..?//

பீஸ் கட்டியாச்சா?

MANO நாஞ்சில் மனோ said...

//நமது சௌந்தர் காறித்துப்பியதாலோ அல்லது எனது புதிய முயற்சியைக் கண்டு பலர் எனது ப்ளாக் படிக்கவே பயப்படுவதாலோ இந்த இந்தப் பதிவினை நான் எழுதவில்லை//
sooppaar'de,
vaaztthukkal....

சௌந்தர் said...

இது வடை பத்தின போஸ்டா....நான் தலைப்பை பார்த்து சமகால கல்வி நினைத்தேன் வந்திட்டேன்.... :)

எல் கே said...

தம்பி முதலில் இந்தப் பதிவுக்கு வாழ்த்துக்கள். இண்டரிக்கு இருக்கும் கல்வி முறை குமாஸ்தாக்களை மட்டுமே உருவாகும் மெக்காலே கல்வி முறை. யாரால் அதிகம் நினைவு வைத்துக்கொள்ள முடிகிறதோ அவர்கள்தான் அறிவாளிகள் என்ற மாயத் தோற்றம் உருவாக்கப் பட்டுள்ளது.

வாழ்க்கைக்குத் தேவையான கல்வி இப்பொழுது போதிக்கப் படுவது இல்லை

NaSo said...

நல்ல அலசல் செல்வா. கல்விமுறையின் இந்த நிலைமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் என்பது உண்மையே!!

karthikkumar said...

பதிவு அருமை. ஆனா இந்த மாதிரி கமென்ட் இந்த கடைல போட எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.

NaSo said...

/Arun Prasath said...

நான் உள்ள வரட்டும்களா ..?//

பீஸ் கட்டியாச்சா?//

எவ்வளவு?

NaSo said...

// karthikkumar said...

பதிவு அருமை. ஆனா இந்த மாதிரி கமென்ட் இந்த கடைல போட எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.//

வெறெந்த மாதிரி கமெண்ட் போடுவீங்க?

செல்வா said...

எல்லோரும் ஒரு பாத்து நிமிஷம் கடைக்குல்லையே இருங்க .! வந்திடறேன் ..௧!

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

பதிவு அருமை. ஆனா இந்த மாதிரி கமென்ட் இந்த கடைல போட எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.//

வெறெந்த மாதிரி கமெண்ட் போடுவீங்க?///

சிறப்பு, வாழ்த்துக்கள், உங்கள் எழுத்து தொடரட்டும், அப்டின்னு போடலாம்னு நெனச்சேன். ( உண்மையா இது நல்ல பதிவுதான்)

Arun Prasath said...

/Arun Prasath said...

நான் உள்ள வரட்டும்களா ..?//

பீஸ் கட்டியாச்சா?//

எவ்வளவு?//

75(ஒரு பீர் அவ்ளோ தான?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

சபாஷ் தம்பி அருமையா சொல்லியிருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

//

உண்மை தான் தம்பி.. குழந்தைகளின் குறும்புகளை ரசிக்காமல் ஒதுக்குபவர்களை மனிதர்களாகவே எடுத்து கொள்ள முடியாது... கண்டிப்பாக மிருகமாக தான் இருக்க வேண்டும்..

Unknown said...

நல்ல பதிவு செல்வா.. வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

//சுடுசோறும், வடையும் எனக்குத்தான்//
அது கூட மொக்கையும் சேத்துக்கோங்க....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//புள்ளைக்கு என்ன அறிவு //
அது புள்ளைக்கு நான் கொடுத்த யானை பாலின் வினை...:]]

Unknown said...

Nalla Eluthi irukkeenga

MANO நாஞ்சில் மனோ said...

//நல்லாத்தான் எழுதியிருக்க................உனக்கும் சீரியஸ் பதிவு எழுத வருது! வாழ்த்துகள்//
சீரியஸ்ஸா எழுதி ஒரேயடியா கொன்னுட்டா பரவாயில்லை.
ஆனால் இவன் கொஞ்ச கொஞ்ச'ல்ல மொக்கைய போட்டு
கொன்னுட்டு இருக்கான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான்யா எழுதியிருக்க, இந்த நெலம என்னைக்கு மாறுமோ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உன் கடையிலேயே உனக்கு வடை கிடைக்கலியா.. என்ன கொடுமைடா இது...!

செல்வா said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@செல்வா

அருமையன அலசல்...

(சத்தியமா பதிவை படிக்கல...)//



நல்லவேளை தப்பிச்சீங்க ..!!

செல்வா said...

//ரொம்ப நல்லைக்கு பிறகு செல்வா ப்ளோக்ல நல்ல பதிவு ..........செல்வா பின் குறிப்பு ஒன்னு போட்டு இதை யார் வேண்டும்னாலும் தொடரலாம் போட்டுரு......நல்ல பகிர்வு .
//

போட்டுட்டேன் அண்ணா ..!!

செல்வா said...

/நல்லா அலசியிருக்கீங்க செல்வா... வாழ்த்துக்கள்
//

ரொம்ப நன்றி அண்ணா ..!!

செல்வா said...

// நாஞ்சில் மனோ said...
//நமது சௌந்தர் காறித்துப்பியதாலோ அல்லது எனது புதிய முயற்சியைக் கண்டு பலர் எனது ப்ளாக் படிக்கவே பயப்படுவதாலோ இந்த இந்தப் பதிவினை நான் எழுதவில்லை//
sooppaar'de,
வாழ்த்துக்கள்//


நன்றி அண்ணா ..!!

செல்வா said...

// சௌந்தர் said...
இது வடை பத்தின போஸ்டா....நான் தலைப்பை பார்த்து சமகால கல்வி நினைத்தேன் வந்திட்டேன்.... :)

//

அட பாவி ., ஏன்டா இப்படி இருக்க .?

செல்வா said...

//வாழ்க்கைக்குத் தேவையான கல்வி இப்பொழுது போதிக்கப் படுவது இல்லை//

உண்மைதாங்க அண்ணா ..!!

செல்வா said...

// நாகராஜசோழன் MA said...
நல்ல அலசல் செல்வா. கல்விமுறையின் இந்த நிலைமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் என்பது உண்மையே!!//



கண்டிப்பா தனியார் பள்ளிகள் பெருகுவதற்கு பெற்றோர்களே காரணம் ..௧!

செல்வா said...

// karthikkumar said...
பதிவு அருமை. ஆனா இந்த மாதிரி கமென்ட் இந்த கடைல போட எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.

//
எப்படி வேணா போடுங்க ..!!

MANO நாஞ்சில் மனோ said...

//(சத்தியமா பதிவை படிக்கல...)//

சைக்கிள் கேப்புல தப்பிச்சிட்டான்யா....:]]

செல்வா said...

//உண்மை தான் தம்பி.. குழந்தைகளின் குறும்புகளை ரசிக்காமல் ஒதுக்குபவர்களை மனிதர்களாகவே எடுத்து கொள்ள முடியாது... கண்டிப்பாக மிருகமாக தான் இருக்க வேண்டும்..
/

ஆனா குறும்பு பண்றாக அப்படின்னு பள்ளிக்கூடத்த்க்கு அனுப்பற பெற்றோகளும் இருக்காங்க அண்ணா .!!

செல்வா said...

// பதிவுலகில் பாபு said...
நல்ல பதிவு செல்வா.. வாழ்த்துக்கள்..

//

நன்றிங்க .!

செல்வா said...

// இரவு வானம் said...
Nalla Eluthi இருக்கீங்க//


வாங்க ., நன்றிங்க ..!!

MANO நாஞ்சில் மனோ said...

//நான் உள்ள வரட்டும்களா ..? //
இங்கே என்னலே இண்டர்வியூ'வா நடக்குது...?

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
உன் கடையிலேயே உனக்கு வடை கிடைக்கலியா.. என்ன கொடுமைடா இது...!

//

இப்போ வாங்குறேன் பாருங்க .!!

செல்வா said...

// நாஞ்சில் மனோ said...
//நான் உள்ள வரட்டும்களா ..? //
இங்கே என்னலே இண்டர்வியூ'வா நடக்குது...?

//

சும்மா ஒரு கேள்வி ., பெரிய ஆளுங்க எல்லாம் பேசிட்டு இருக்கீங்க ., அதான் ..!!

MANO நாஞ்சில் மனோ said...

//நல்லாத்தான்யா எழுதியிருக்க, இந்த நெலம என்னைக்கு மாறுமோ...?//


அவனை மாற சொல்லு நான் மாறுறேன்.....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//நல்ல பதிவு செல்வா.. வாழ்த்துக்கள்//
நல்ல பிள்ளையா தப்பிச்சி போயிரலாம்னு நினைப்போ.....:]]

செல்வா said...

//அவனை மாற சொல்லு நான் மாறுறேன்.....:]] ///

நீங்க பள்ளிக்கூடம் போயிருக்கீங்களா அண்ணா ..?
ஹி ஹி ஹி ..

MANO நாஞ்சில் மனோ said...

//Nalla Eluthi irukkeenga //
இவரு சத்தியமா இந்த பதிவ படிக்கவே இல்லை ஹா ஹா ஹா.......

MANO நாஞ்சில் மனோ said...

//சபாஷ் தம்பி அருமையா சொல்லியிருக்கே.//
பேசாம ''சபாஷ்'' சந்திர போஸ்'ன்னு சொல்லியிருக்கலாம்....:]]

அருண் பிரசாத் said...

என்னது சமகால கல்வி முறைய்யா? ஏய்ய்ய்ய்... யாருய்யா உன்னை திருந்த சொன்னது... ஒரு வாரம் வலைசரத்துல பிஸியா இருந்தா இப்படியா செய்வ நீ...

MANO நாஞ்சில் மனோ said...

// ( உண்மையா இது நல்ல பதிவுதான்)
//
ஹேய் இது உள்குத்து....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//என்னது சமகால கல்வி முறைய்யா? ஏய்ய்ய்ய்... யாருய்யா உன்னை திருந்த சொன்னது... ஒரு வாரம் வலைசரத்துல பிஸியா இருந்தா இப்படியா செய்வ நீ... //
அதானே, தூக்கி போட்டு மிதிங்க அவனை........:]]

MANO நாஞ்சில் மனோ said...

//வாழ்க்கைக்குத் தேவையான கல்வி இப்பொழுது போதிக்கப் படுவது இல்லை
//
மிக சரியாக சொன்னீர்கள்...

வினோ said...

உனக்கும் நல்ல விசயங்களை எழுத வருது செல்வா..

ஜோக்ஸ் அபார்ட்.. நல்ல பதிவு..

MANO நாஞ்சில் மனோ said...

//உலகின் சில சிறந்த மொக்கைகள் இங்கே உருவாக்கப்படுகின்றன.!
- மொக்கையரசர்//
எலே என்ன லொள்ளா?
மொக்கைய படிச்சுட்டு ரத்தகளரி ஆவுறது யாரு....
தெரியுமில்ல?
தலைப்பு வச்சிருக்கான்.....:]]

அருண் பிரசாத் said...

//வினோ said...

உனக்கும் நல்ல விசயங்களை எழுத வருது செல்வா..//
அப்போ செல்வாக்கு நல்லா எழுதவராதுனு சொல்லுறீங்களா?

செல்வா said...

//எலே என்ன லொள்ளா?
மொக்கைய படிச்சுட்டு ரத்தகளரி ஆவுறது யாரு....
தெரியுமில்ல?
தலைப்பு வச்சிருக்கான்.....:]] //

அவரு வந்து சொல்லிட்டு போனாருங்க அண்ணா ..!
மொக்கை அரசர பாத்திருக்கீங்களா ..? பாத்திருக்க மாட்டீங்க .. அவரப் பத்தி சொன்னா சொல்லிட்டே இருக்கலாம் ..

செல்வா said...

// அருண் பிரசாத் said...
என்னது சமகால கல்வி முறைய்யா? ஏய்ய்ய்ய்... யாருய்யா உன்னை திருந்த சொன்னது... ஒரு வாரம் வலைசரத்துல பிஸியா இருந்தா இப்படியா செய்வ நீ...//

வாங்க வாங்க ., இந்த ஒரு வாரத்துல என் பேர கூட மாத்திருக்கேன் பாருங்க ..!!

செல்வா said...

// அருண் பிரசாத் said...

//வினோ said...

உனக்கும் நல்ல விசயங்களை எழுத வருது செல்வா..//
அப்போ செல்வாக்கு நல்லா எழுதவராதுனு சொல்லுறீங்களா?

//

ஹி ஹி ஹி .! அது அவர் சொல்லித்தான் உங்களுத் தெரியுமா அண்ணா ..?

அருண் பிரசாத் said...

//இந்தப் பதிவினைத் தொடர மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்களை அழைக்கிறேன் .!//
அது மாணவியர்... என்னத்த படிக்கிறயோ....


சரி அவங்க கூப்பிட்ட பெண்குரல் பாடல்கள் டொடர்பதிவு எழுதினியா முதல்ல....

செல்வா said...

//சரி அவங்க கூப்பிட்ட பெண்குரல் பாடல்கள் டொடர்பதிவு எழுதினியா முதல்ல.... //

இனிமேல் தான் அண்ணா எழுதணும் .. அவ்ளோ நியாபக சக்தியா உங்களுக்கு ..?

அருண் பிரசாத் said...

//இனிமேல் தான் அண்ணா எழுதணும் .. அவ்ளோ நியாபக சக்தியா உங்களுக்கு ..?//

ஹி ஹி ஹி.. நானும் இன்னும் எழுதல் அதான் கேட்டேன்

வைகை said...

பாரேன்!! இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்துருக்கு!!

வைகை said...

நல்ல அலசல் செல்வா!! வாழ்த்துக்கள்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நல்லா அலசியிருக்கீங்க செல்வா... வாழ்த்துக்கள்///

அப்போ ரமேஷ் யாரு காயப் போடுறது?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(;

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//நல்லா அலசியிருக்கீங்க செல்வா... வாழ்த்துக்கள்///

அப்போ ரமேஷ் யாரு காயப் போடுறது//////

இன்னும் கொஞ்சம் மொக்க போடட்டும், நம்மளே காயப்போட்ருவோம்

Anonymous said...

இந்தப் பதிவில் கூறியிருப்பது அனைத்தும் இன்றைய கல்வியின் நிலையைப் பற்றிய எனது கருத்துக்கள் மட்டுமே. அது தவறாகவும் இருக்கலாம்//
தப்பிச்சிட்டான்யா

Anonymous said...

இந்த பய புள்ளைய விட்றாதீங்க இது கிட்ட நிறைய அறிவு இருக்கு.மண்டைய தட்டி ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்குங்க

வைகை said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்த பய புள்ளைய விட்றாதீங்க இது கிட்ட நிறைய அறிவு இருக்கு.மண்டைய தட்டி ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்குங்////////////////

எங்க வீட்ல ஏற்க்கனவே தோட்டம் இருக்கு

Anonymous said...

நல்ல அலசல்..காயப்போட ஸ்கூல் வேன் அடியாளோடு வருது

Anonymous said...

79

Anonymous said...

80 தாவது வடை

வைகை said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்ல அலசல்..காயப்போட ஸ்கூல் வேன் அடியாளோடு வருது//////

ஏன்? வீட்ல காயப்போட இடம் இல்லையா?

Anonymous said...

உள்ளேன் ஐயா

அன்பரசன் said...

நல்லா இருக்கு செல்வா பதிவும் பெயர்மாற்றமும்.

எஸ்.கே said...

அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

பொதுவிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் இதுதான் உனது வாழ்க்கை , இந்தத் தேர்வுகள்தான் உனது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்று மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர்.///


இது உண்மைதான்! நான் பத்தாவது. பனிரெண்டாவது படிக்கும்போது ஸ்பெஷல் கிளாஸ் என்றெல்லாம் விடுமுறை நாளிலும் பள்ளி விட்ட பிறகு நீண்ட நேரமும் மாணவர்களை இருக்க வைப்பார்கள்!

(பலர் அப்போது கிடைக்கும் பிரெட், பிஸ்கட்டுகாக வருவார்கள் என்பது வேறு விஷயம்!)

எஸ்.கே said...

சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 2.5 வயதிலேயே PRE KG என்ற வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். சிலரைக் கேட்டால் இப்பொழுதிருந்தே பள்ளிக்குச் சென்றால்தான் படித்துப்பழகுவர்கள் என்கின்றனர். இன்னும் சிலர் வீட்டில் செய்யும் குறும்புகளுக்காகவே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்கின்றனர். பொதுவாகவே இந்த வயதில் நிச்சயம் பள்ளிக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வது நல்லது.//

உண்மைதான்! குழந்தை அனுபவிக்க வேண்டிய குழந்தைப் பருவத்தை இழக்கின்றது!

Unknown said...

எம்மை தொடர் பதிவு எழுத அழைத்த செல்வக்குமார் அவர்களுக்கு நன்றிகள்..
கொஞ்சம் அவகாசம் தாருங்கள்..
இந்த தொடர் பதிவு உருவாக காரணமாக இருந்த எஸ்.கே. மற்றும் அனைத்து சிந்தனையாளர்களுக்கும் நன்றிகள்..

Unknown said...

மாணவர்களை வெறும் மதிப்பெண்களால் மதிப்பிடுவதும், ஒரு போர்க்களம் செல்லும் வீரனைப் போல் அவர்களை தயார்படுத்துவதும் நிகழ்கால சோகங்கள்.
செல்வா-வின் எழுத்தாக்கம் அருமை.
நிறைய விஷயம் இருக்கிறது.
வாரத்திற்கு இரு பதிவுகளில் சமூக பற்றிய உங்கள் கருத்துக்களை வெளியிடலாமே.(மற்ற நாள்களில் வழக்கம் போல் கும்மாங்குத்தும், கும்மியும் இருக்கட்டுமே )

சிவராம்குமார் said...

சீரியஸ் பதிவு கூட நல்லாத்தான் இருக்கு!

Chitra said...

நல்ல பகிர்வு - நல்ல பதிவு. :-)

Riyas said...

நல்ல பதிவு செல்வா...

ஆஹா இது நல்லாருகே
//தம்பி வேற நல்ல ப்ளாக் இருந்தா போய் படிங்க தம்பி . இதெல்லாம் ஒரு ப்ளாக்னு படிசிகிட்டு.!//

Unknown said...

92..

Unknown said...

@செல்வா

அருமையன அலசல்...

(சத்தியமா பதிவை படிக்கல...)

SAME FEELING...

பட் நான் வாசித்தேன்

மிக நன்றாக உள்ளது..

Unknown said...

94....

Unknown said...

VANTHEN
LATE-A VANTHALUM VADAI ENAKUTHAN

NOORU ENAKKEY

Unknown said...

சுடுசோறும், 100 METHUவடையும் எனக்குத்தான்...

Unknown said...

97...

Unknown said...

அடடா .!! ஆனாலும் நான் மொக்கைதான் எழுதுவேன் ---

nee singamda,....

Unknown said...

எங்கள் சங்க தலைவர்
terror பாண்டியன்
மெகா கவி வாழ்க

Unknown said...

ஹே நூறு எனக்குதான்..
மொக்கை மன்னன் கோமாளி
செல்வா வாழமொக்கை மன்னன் கோமாளி
செல்வா valga ஹே நூறு எனக்குதான்

Mathi said...

செல்வா நீ சொன்னது கரெக்ட் தான்.பெற்றோர்கள் சில பேர்.அவங்க பிள்ளை அபப்டி பண்றான் ..நீயும் அபப்டி தான் பண்ணனும் என்று வற்புறுத்தி கச்டபடுத்ரங்க ..பாவம் பிள்ளைகள் தான் ..அவங்களுக்கும் ஒரு தனி திறமை இருக்கும்
என்று நினைபதே இல்ல அது போல நீ சொன்ன ..பள்ளி சண்டைகளும் பார்த்திருக்கேன்.நான் இவ்ளோ பீஸ் கடி படிக்கச் வைக்கிறேன் பார் என்று பெருமை வேற...நல்ல அலசல் !! மொக்கை காக வைடிங் ......

மாணவன் said...

//மேலும் அவரது வேண்டுகோளுக்கினங்க அடுத்த பதிவாக மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத் தகவல் என்ற பதிவு வரும் என்பதையும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துகொள்கிறேன்.!//

செம கலக்கல் அண்ணே,

"சமகாலக் கல்வி" நல்ல ஒரு விரிவான பார்வை சிறப்பாக எழுதியுள்ளீர்கள் அருமை வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்க வளமுடன்

பனித்துளி சங்கர் said...

//மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர்.//

தேர்வுக்கு = போருக்கு.
தம்பி உனக்கு அடுக்குமொழி வருதுப்பா.!!!
ஹி..ஹி..ஹி... கலக்கல்.

Anonymous said...

வணக்குமுங்க வணக்கம் .
வந்த சனங்களுக்கொள்ளாம் வணக்கம் .
நான் கலந்துக்கறேன் .
ஆனா ,சங்கமம் கிங்கமம் சொல்லீட்டு மறைந்திருந்து ஆரூரானை இப்படி பேசு அப்படி பேசு நான் கால்மேல ...
சரி விசயத்திற்கு நேரா வரேன் .
அங்க உங்க சங்கமத்தில ஏல்லாரும் பணக்காரப் பசங்க .
ஏழைகளுக்கு எதிரானவர்கள்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு துரோகிகள் .
ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த பொழுது இவங்களின் பதிவ பாருங்கப்பா ...ஈழத்தமிழர்கள் மீது இவர்களின் பாசம் புரியும்.
ஷோபா சக்தியின் உயிருக்குயிரான நண்பரும் ஈழப்போராட்டத்தை எதிர்த்த மனிதர் பாலமுருகனின் சோலகர்தோட்டியை இவங்க தலைமேல ஆடி கூத்துக்கு எப்படித்தான் ஈழ நண்பர்கள் ஆகா ஓகோனு புகழ்ந்து ஆதரித்து இலங்கை பயணத்தின் போது மதித்தனரோ தெரியவில்லை . தமிழன் இப்படித்தான் புத்திகெட்டு கழிசடைகளை ...
விடுங்கப்பா வரலாறு படிங்கப்பா இலங்கை பதிவர்களே ...
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த பிளாக்கர் நாட்டிலே ...

கருடன் said...

@செல்வா

பதிவு நல்லா எழுதி இருக்கடா. ரொம்ப யேசிச்சி இருக்க போல... ஆன சீரியஸ் போஸ்ட பாத்தாலே படிக்க தோன மாட்டுது... :(.

Paragraph Allignment நல்லா இருக்கு. உன் மத்த பதிவு எல்லாம் கன்னா பின்னானு இருக்கும். இது Neatஅ இருக்கு.. குட்... :))

Anonymous said...

சங்கவி சந்ரு கிட்ட பணம் வாங்கிட்டான் ...இனி அவனை நம்பாதிங்க ..,.

Anonymous said...

சங்கவி ஒரு சந்தர்ப்பவாதி

Anonymous said...

இனி யாரும் சங்கவியை நம்பாதிங்க

ம.தி.சுதா said...

எலெ சின்ராசு... ரொம்பா ஜோரா ஈய்க்கூதப்பா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

paravai said...

சம கால கல்வி பத்தி நீங்க...
பிள்ளையார் சுழி தான் போட்டு இருங்கீங்க ...
-புதிய பார்வை

Unknown said...

சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_15.html

பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கிறோம்..