Friday, December 31, 2010

மொபைல் அப்ளிகேசன்ஸ்

முன்குறிப்பு : எல்லோரும் கண்டிப்பா போன் வச்சிருப்போம். அதுல நிறைய அப்ளிகேசன்ஸ் வச்சிருப்போம். சிலது நமக்கு தெரிஞ்சிருக்கும் , சிலது தெரிஞ்சிருக்காது. இங்க நான் பயன்படுத்துற சில பயனுள்ள அப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருக்கேன் பாருங்க .!

முதல்ல பிரவுசர் பத்தி பார்க்கலாம் 

*.Opera Mini : இது பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துற ஒரு உலவி, பெரும்பாலும் நோக்கியா மொபைல்ல கூடவே வருது.!

*.Bolt Browser : இதுவும் ஒரு நல்ல உலவிதான். இதுல யுடியூப் வீடியோக்கள தரவிறக்கம் செய்யாம பார்க்கலாம்.!

*.UC Browser : இதுவும் ஒரு உலவிதான். இருந்தாலும் ஒபேரா அளவுக்கு வராது.!

மின்னரட்டை  ( சாட்டிங் ) :

*.e-Buddy : பெரும்பாலோர் பயன்படுத்துற அப்ளிகேசன் இதுதான். இதுல சாட் பண்ணுறது சுலபமா இருக்கும்.

Nimbuzz : இதுவும் ஒரு அருமையான அப்ளிகேசன் தான். இதுல நம்ம மொபைல்ல இருந்து போட்டோஸ் கூட சாட்டிங் போதே அனுப்ப முடியும். e-Buddy ய விட எனக்கு இது சிறப்பா தெரியுது.

இது தவிர mig33 , MGtalk, Palringo,RocketTalk, WeBuzz இப்படி எக்கச்சக்க அப்ளிகேசன்ஸ் இருக்கு. இது எல்லாத்திலையும் எனக்கு ரொம்ப பிடிச்சது Nimbuzz தான்.!

Dictionary :
நமக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாம இருக்கும் . அதுக்காக நிறைய Dictionary's இருக்கு.இங்க எனக்கு தெரிஞ்சா ரொம்ப ரொம்ப வாய்ப்பே இல்லாத ஒரு Dictionary பத்தி சொல்லுறேன்.

AROMA : அரோமா அப்படின்னு ஒரு Dictionary இருக்குங்க. உண்மைலேயே வாய்ப்பே இல்ல. அவ்ளோ நல்லா இருக்கு. அதில நிறைய விசயங்கள் இருக்கு .அதுல இருக்குற அதாவது ஒரே அப்ளிகேசன்ல இருக்குற விசயங்கள் என்னனு பார்த்தா  Jokes , Wikipedia , Local , Funstuff , Lifestyle இப்படி எல்லா விஷயங்களுமே இருக்கு . இதுல Local அப்படிங்கிற Tab ல நம்ம லோக்கல்ல இருக்குற எல்லா விசயங்களையும் அதாவது Pizza கடை எங்க இருக்குது அப்படின்னு கூட தேட முடியும் . உண்மைலேயே ரொம்ப கலக்கலா அப்ளிகேசன் இது . அதே மாதிரி Funstuff அப்படிங்கிற Tab ல Quotes, Facts, Proverbs, Story இப்படி நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கு . அதுவும் On this Day அப்படின்னு ஒண்ணு இருக்கு , அதுல போய் பார்த்தீங்க அப்படின்னா வரலாற்றுல அந்த தினத்துல நடந்த விசயங்கள சேர்த்து வச்சிருக்காங்க. சரி இன்றைய தினத்தோட சிறப்பு என்னனு பார்க்கலாம்னு பார்த்தேன் , கி.பி 600 ல ஆரம்பிச்சு ஒரு 26 நிகழ்வுகள் இருந்துச்சு.! ஆனா இந்த அப்ளிகேசனோட ஒரே பிரச்சினை என்னனா இது ஒரு ஆன்லைன் அப்ளிகேசன்.!

*.Dictionary v3.1 : இது ஒரு offline dictionary . உண்மைலேயே இது ரொம்ப நல்லா இருக்கு . ஆனா அரோமா ல இருக்குற அளவுக்கு நிறைய விசயங்கள் இல்லனா கூட ஒரு Dictionary அப்படிங்கிற அளவுக்கு பயனுள்ளதா இருக்கு. அது உருவாகினது கூட Vikrant Prakash Chavan அப்படின்கிற மகராஷ்டிரா காரர்.!

*.Window XP : என்னடா இது WindowsXp அப்படின்னு பார்க்காதீங்க , அப்படி ஒரு அப்ளிகேசன் இருக்கு. அத ஓபன் பண்ணினா நம்ம WindowsXp கம்பியூட்டர்ல எப்படி தெரியுதோ அதே மாதிரி உங்க மொபைல்ல தெரியும். ஆனா இது எதுக்கு பயன்படுதுன்னு தெரியல . ஒரு அழகுக்காக வச்சிக்கலாம்.!

சரி இவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருக்கே இதெல்லாம் எங்க போய் வாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.com , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.!


நீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.!

சந்தேகம் : இதுக்குப் பேர்தான் நல்லா பதிவா ..?


பின்குறிப்பு : என்னடா கோமாளி கூட நல்லா பதிவு எழுதிருக்கானே திருந்திட்டானோ அப்படின்னு நினைக்க வேண்டாம் .. 2011 வாழ்த்து சொல்லுறதுக்காக ஒரு உருப்படியான பதிவு போடணும்னு நினைச்சேன்.. அதான்.. நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க , வரப்போற ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் அப்படின்னு சொல்லி எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.!

42 comments:

எஸ்.கே said...

இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

ஓஹோ ..இதுக்கு பேர் தான் நல்ல பதிவா ??????

இம்சைஅரசன் பாபு.. said...

wish u happy new year to u and to u r family selva

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.cim , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.!


//

அப்படியே போனையும் டவுண்லோட் பன்ணமுடியமா தொரை?

r.v.saravanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

கேம்ஸ் பற்றி சொல்லவில்லையே!

r.v.saravanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட..இங்கிலீஸ் அரைகுறையா?..

இரு.. நோட் பண்ணிக்கிறேன்..

எஸ்.கே said...

எங்கிட்ட nokia 1110 இருக்கே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Getjar.cim
//

நல்லாத்தான் இருக்கு.. CIM or COM
ஒழுக்கமா அட்ரஸ் கொடுங்கய்யா முதல்லே..
அப்புறம் நல்ல பதிவா..இல்ல நாற பதிவானு சொல்றோம்.. ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ............... மொபைல் வாங்குற அப்பிளிகேசன் எங்க கிடைக்கும் ........ அத பில்அப் பன்னி எங்க குடுக்கணும் ........

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்கும்...
Wish You Happy New Year

http://sakthistudycentre.blogspot.com

சௌந்தர் said...

இன்னை தாண்டா உருப்படியா எழுதி இருக்கே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தம்பி, என்னோட நோக்கியா 5800 வுக்கு இந்த ஓபெரா மினி சரியா வேலை செய்ய மாட்டெங்குது.... என்னான்னு சொல்லேன்?

Praveenkumar said...

ஹெ..ஹெ.. செல்வா..
கலக்கிட்ட அப்பு.,!!
இப்படியெ... மொக்கைக்கு நடுவுல.. ஏதாவது இதுமாதிரி உருப்படுறா.. மாதிரி... சொல்லி மயின்டெயின் பண்ணு..!! ஒகே... ரைட்டு.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

இதுக்குகெல்லாம் மொபைல்ல சிம் போடனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Speed Master said...

ஓஹோ ..இதுக்கு பேர் தான் நல்ல பதிவா ?????

Unknown said...

அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .........
நல்ல பதிவு :)

Praveenkumar said...

//நீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.!//

அப்படியா.. மக்கா.,!!?? நான் இப்ப அதுலதான் டவுண்லோட் பண்ண ஐடியா.. குடுத்துனே.. நெனச்சேனே...!!! ஹி..ஹி.ஹி..

செல்வா said...

சில ஆணிகள் இருக்கு , புடுங்கிட்டு வரேன் .!

ஜில்தண்ணி said...

இந்த windows xp-ய தவிர எல்லாம் நான் ரெகுலரா யூசு பண்றதுதான்

Opera mini latest version 5-ல தமிழ் படிக்கலாம் தெரியும்ல

ஆனாலும் இந்த ஓபேரா மினி அடிக்கடி கிராஷ் ஆகுது :)

அப்பரம் snaptu அப்லிகேசனும் நல்லாத்தான் இருக்கு, ஆல்-இன்-ஆல் மூஞ்சிபுத்தகத்துலேந்து, செய்திகள்,கிரிக்கெட் ஸ்கோர் எல்லாத்தையும் ஓரே இட்த்தில பாத்துக்கலாம் :) #ட்ரை பண்ணி பாருங்க

MANO நாஞ்சில் மனோ said...

///எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.!///

எனக்கு கோமாளியின் எல்லா எழுத்துலயும் பிடிச்ச வார்த்தை இதுதான் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....

Madhavan Srinivasagopalan said...

// நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க ,//

எப்படி.. நீ மொக்கையை ஸ்டாப் செஞ்சிட்டியா ?

மாணவன் said...

//"மொபைல் அப்ளிகேசன்ஸ்"//

பகிர்வுக்கு நன்றி அண்ணே

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

karthikkumar said...

மாணவன் said...
//"மொபைல் அப்ளிகேசன்ஸ்"//

பகிர்வுக்கு நன்றி அண்ணே

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்///

எது அண்ணனா....

Speed Master said...

மாணவன் said...
//"மொபைல் அப்ளிகேசன்ஸ்"//

பகிர்வுக்கு நன்றி அண்ணே

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்///

எது அண்ணனா..

ஆமாம் அண்ணன் அல்ல ஐயா

karthikkumar said...

@ செல்வா
இனிமேல் நல்ல இருப்பீங்க அப்டின்னு சொல்லிருக்க... சோ நீ எழுதுறத நிறுத்த போறியா.... டவுட்டு....

NaSo said...

எல்லா மொபைலுக்கும் இந்த அப்ளிகேசன்ஸ் பயன்படுமா?

என்னோடது நோக்கியா 3310??

Kousalya Raj said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

அனு said...

அப்படியே என்னை மாதிரி சோம்போறிகளுக்காக லிங்க்ஸையும் குடுத்திருக்கலாம்ல?? At last, ஒரு உருப்படியான பதிவு போட்டுட்டீங்க!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

arasan said...

வாழ்த்துக்கள் ... புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

வைகை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

logu.. said...

wish u happy new year 2011

வால்பையன் said...

www.getjar.com போனா இன்னும் டவுன்லோடு பண்ணலாம் தல!

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Sathish said...

Happy new year wishes from sathish to you and your family...~!

Anonymous said...

ithu than nalla pathiva

Unknown said...

எப்போதும் எங்கள் வலைப்பூவின் தோழன் செல்வா அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம பக்கம் வாங்கபிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி

ஆர்வா said...

நண்பா... அருமையான பதிவு.. E-Buddy, Mig33, எல்லாத்துலேயும் வெறுத்து போயிருக்கேன். Nimbuzz அருமையான அப்ளிகேஷன். எனக்கு என்னவோ இப்ப வெளியிட்டு இருக்கிற 3.0 வை விட, இதுக்கு முன்னாடி இருந்த வெர்ஷன் நல்லா இருந்ததா தோணுது..