Saturday, February 5, 2011

மொபைல் அப்ளிகேசன்ஸ்

முன்குறிப்பு: கண்டிப்பா எல்லோரும் மொபைல் வச்சிருப்பீங்க. அதுல சிலது மல்டிமீடிய மொபைலா இருக்கும் , சிலது சாதாரண போனா இருக்கும். இந்தப் பதிவு மல்டிமீடியா மொபைல் அப்ப்ளிகேசன்ஸ் பத்தினதுதான். ஏற்கெனவே இங்க இத பத்தி எழுதிருக்கேன். அதுல நிறைய அப்ப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருந்தேன். இன்னும் சிலத இங்க பார்க்கலாம்.

ஆல் இன் ஒன் அப்ளிக்கேசன் :
biNu அப்படிங்கிற அப்ப்ளிகேசன் ஒண்ணு இருக்குது. சொல்லப்போனா இதுல இல்லாத வசதிகளே கிடையாது. அத விட இதுபத்தி சொல்லனும்னுதான்  இந்தப் பதிவே. அப்படி என்ன அதுல இருக்குதுன்னு பார்த்தா , முதல்ல கிரிகெட் ஸ்கொர்ஸ் தெரிஞ்சிக்கலாம். அதாவது இப்ப லைவ்ல எந்த டீம் விளையாடிட்டு இருக்காங்க ,எந்த மேட்ச் அப்படிங்கிற  எல்லா தகவல்களும் வந்திடும்.

  அடுத்த விசயம் செய்திகள். அதுவும் தமிழ்ல செய்திகள் படிசிக்கிலாம்.இதுல தினகரன் பேப்பரோட செய்திகள் அப்படியே வரும் . கூடவே BBC தமிழ் செய்திகளும் படிச்சிக்க  முடியும். அதே மாதிரி ஆங்கிலத்திலையும் செய்திகள் படிசிக்கிலாம். அதவிட படிப்பதற்கும் ரொம்ப எளிமையா இருக்குறது இதோட சிறப்பு.

  அடுத்து Dictionary. இதுவும் biNu ல இருக்கு. பொதுவா நிறைய dictionary கிடைக்குது. ஆனா இதுல ஒரே அப்ப்ளிகேசன்ல இருக்குறது சிறப்பு. இதுல விக்கிபீடியாவும் இருக்கு. அதனால அதையும் பயன்படுத்திக்கலாம்.

   அடுத்து weather . இதுவும் ஒரு பயனுள்ள விசயம்தான். அடுத்து கூகுள் சர்ச்ம் இருக்கு. கூடவே Astrology , Forex இதெல்லாம் இருக்கிறதால நான் என்ன சொல்லவரேன் அப்படின்னா நீங்க போன் வச்சிருந்தா கண்டிப்பா இந்த அப்ப்ளிகேசன முதல்ல டவுன்லோட் பண்ணுங்க. பண்ணி பயன்படுத்திப் பார்த்துட்டு சொல்லுங்க. அதோட இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். அங்க போய் உங்க மொபைல் நம்பர் கொடுத்த உங்க மொபைலுக்கு டவுன்லோட் லிங்க் தருவாங்க. அதுல இருந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.  

அந்த முகவரி : http://www.binu.com 

அடுத்து skype :

  இது எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். கம்பியூட்டர்ல பயன்படுத்திருப்பீங்க. ஆனா மொபைல்ல கூட பயன்படுத்த முடியும். அதுக்கு நீங்க www.sharejar.com போய் டவுன்லோட் பண்ணிகோங்க. கண்டிப்பா பயன்படும்னு நினைக்கிறேன். என்னோட மொபைல்ல பேசிருக்கேன். ஆனா எல்லோருக்கும் சரியா வருமா அப்படின்னு தெரியல.

நீதி : இதுக்கெல்லாம் என்ன நீதி சொல்லுறது.

பின்குறிப்பு : மொக்கையின் வளர்ச்சி நிலை விரைவில். 

28 comments:

சௌந்தர் said...

இது எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். கம்பியூட்டர்ல பயன்படுத்திருப்பீங்க. ஆனா மொபைல்ல கூட பயன்படுத்த முடியும். அதுக்கு நீங்க www.sharejar.com போய் டவுன்லோட் பண்ணிகோங்க. கண்டிப்பா பயன்படும்னு நினைக்கிறேன். என்னோட மொபைல்ல பேசிருக்கேன். ஆனா எல்லோருக்கும் சரியா வருமா அப்படின்னு தெரியல.///

டேய் யார் கூட பேசினேன் சொன்னியா அந்த பொண்ணு கிட்ட பேசியது...

karthikkumar said...

நீதி : இதுக்கெல்லாம் என்ன நீதி சொல்லுறது.///
இது அநியாயமில்லையா எதாவது சொல்லிருக்கனும்ல
இப்போ நான் சொல்றேன்.

நீதி : இந்த அப்ப்ளிகேசன் இல்லாதவங்க இதை டவுன்லோட் பண்ணுங்க. செல்போனே இல்லாதவங்க செல்போன வாங்குங்க

karthikkumar said...

@ சவுந்தர்
டேய் யார் கூட பேசினேன் சொன்னியா அந்த பொண்ணு கிட்ட பேசியது.///

இவன் யார் கூட பேசிருப்பான் இவனோட எதிர்வீட்டு ஆயா கூட பேசிருப்பான்.... :)

Speed Master said...

நன்றி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

selva, i use Nokia N 8 . i use the app you mentioned here and skype too.what kind of mobile do you use? i use mymobile to comment and vote. actually, i write this comment from my mobile.thank you somuch.

Anonymous said...

ம்...இதெல்லாம் சைனா ஃபோன் வெச்சிருக்கவங்களுக்கு ஆகாது

Anonymous said...

அப்ளிகேசன்ஸ் நல்லா இருக்கு கீப் இட்

மாணவன் said...
This comment has been removed by the author.
மாணவன் said...

மொபைல் போன் வச்சிருக்குறவங்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்... :)))

பகிர்வுக்கு நன்றி

தொழிநுட்ப பதிவிலும் கலக்குறீங்க...

வாழ்த்துக்கள்

Anonymous said...

மோக்கையில என்னய்யா வளர்ச்சி...மொக்கை போடாம இருக்கிறதுதான் வளர்ச்சி

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

Prabu Krishna said...

//பின்குறிப்பு : மொக்கையின் வளர்ச்சி நிலை விரைவில். //

நல்லாதானே போயிட்டு இருக்கு அப்புறம் ஏன் இந்த திடீர் முடிவு??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

STD நா வரலாறுதான?

அன்புடன் நான் said...

நம்பி வந்தேன்... ஏமாந்திட்டேன்...
இருந்தாலும் இந்த தகவலுக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

//அடுத்து Dictionary. இதுவும் biNu ல இருக்கு. பொதுவா நிறைய dictionary கிடைக்குது. ஆனா இதுல ஒரே அப்ப்ளிகேசன்ல இருக்குறது சிறப்பு. இதுல விக்கிபீடியாவும் இருக்கு.//

Good application.


// முதல்ல கிரிகெட் ஸ்கொர்ஸ் தெரிஞ்சிக்கலாம். //

// இதுல தினகரன் பேப்பரோட செய்திகள் அப்படியே வரும்.//

ரொம்ப முக்கியம்.. ம்ம் என்னத்தச் சொல்ல..!

Praveenkumar said...

good information selva..!!

MANO நாஞ்சில் மனோ said...

நீ புதுசா ஒரு மொபைல் களவாண்டுட்டு வந்துட்டியோ மக்கா......
அந்த மொபைல் கடைக்காரன் என்கிட்டே உன்னை கேக்கும் போதே நினைச்சேன் என்னமோ பண்ணியிருக்கேன்னு நடத்து நடத்து தம்பி....

MANO நாஞ்சில் மனோ said...

//இவன் யார் கூட பேசிருப்பான் இவனோட எதிர்வீட்டு ஆயா கூட பேசிருப்பான்.... :)///

ஆயாவுக்கு அவ்வளவு சின்ன வயசா....

MANO நாஞ்சில் மனோ said...

//வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.///

இது எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே ஹா ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

//நல்லாதானே போயிட்டு இருக்கு அப்புறம் ஏன் இந்த திடீர் முடிவு??//

அவன் நல்ல மூட்ல இருக்கும் போது கொஞ்ச கொஞ்சமா அவனை மாதிரனும்னு நினச்சாலும் நீங்க விடமாட்டீங்க போல....அவ்வ்வ்வவ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

//நம்பி வந்தேன்... ஏமாந்திட்டேன்...
இருந்தாலும் இந்த தகவலுக்கு நன்றி//

வெளங்குச்சி போ....

MANO நாஞ்சில் மனோ said...

//மோக்கையில என்னய்யா வளர்ச்சி...மொக்கை போடாம இருக்கிறதுதான் வளர்ச்சி//

நீங்க என்னத்தை சொன்னாலும் உடனே கேட்டுற கீட்டுற போறான் போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//STD நா வரலாறுதான?//

இது நல்ல ஒரு கேள்வி......ஹே ஹே ஹே....

மதுரை சரவணன் said...

nanri

Unknown said...

new info selva.

சி.பி.செந்தில்குமார் said...

மொக்க பார்ட்டி கிட்ட சக்க சரக்கு இருக்குப்போவ்

Unknown said...

அண்ணாச்சி கலக்கிடீங்க ...
என்கிட்ட நோக்கியோ N1100௦௦ இருக்கு..
Ithila ஏதும் நீங்க சொன்ன சிறப்பு அம்சம் இருந்த சொல்லுங்க...

எஸ்.கே said...

உங்க முந்தைய மொபைல் அப்ளிகேஷன்ஸ் ரொம்பவே பயனுள்ளதா இருந்தது. அந்த டிக்‌ஷ்னரி சூப்பர். இதுவும் பயனுள்ளதாக இருக்கு! ரொம்ப நன்றி! ரொம்ப நன்றி!