Monday, February 14, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : சிலருக்கு என்றே சில கிழமைகள் படைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே செல்வா கதைகளுக்காகப் படைக்கப்பட்டதே திங்கள் கிழமை!

                          லேண்ட்மார்க்கும் செல்வாவும்

  ஒரு முறை செல்வா அவரது நண்பரைக் காண நண்பரின் ஊருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது செல்வாவிற்கு நண்பரின் வீடு தெரியாது என்பதால் செல்வாவை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அழைக்குமாறு கூறியிருந்தார். செல்வாவும் நண்பர் கூறியது  போல பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு அழைத்தார்.

செல்வா : நான் பஸ் ஸ்டாண்ட் வந்திட்டேன்

நண்பர் : அங்கேயே இரு , வந்திடறேன் . நீ  எந்த இடத்துல நிக்கிறனு சரியா சொல்லு.?

செல்வா : அதான் பஸ் ஸ்டாண்ட்ல..

நண்பர் : அது தெரியுது , பஸ் ஸ்டாண்ட்ல எங்கனு சொல்லு , எதாச்சும் லேண்ட்மார்க் சொல்லு.

செல்வா : இரு கேட்டு சொல்லுறேன் ., அருகில் இருந்தவரிடம் இங்க லேண்ட்மார்க் விக்கும்களா ?

அவர் : லேண்ட்மார்க் எல்லாம் விக்காது ,  தொண்டைலதான் விக்கும்!!
( அவரும் செல்வா போன்ற அறிவாளி போலும் )

செல்வா : இங்க விக்காதுன்னு சொல்லுராங்கடா..!!

நண்பர் : உஸ் , லேண்ட்மார்க் அப்படின்னு பக்கத்துல இருக்குற பெரிய கட்டிடமோ , இல்ல எதாச்சும் அடையாளம் சொல்லு.. அது எங்கயும் விக்க மாட்டாங்க!!

செல்வா : இங்க ஒரு பெரிய கட்டிடம் இருக்கு , அதுல கூட பஸ் எல்லாம் வந்து நிக்குது.

நண்பர் : பஸ் ஸ்டாண்ட்னா பஸ் வந்து நிக்கத்தான் செய்யும். வேற எதாச்சும் சொல்லித்தொலை , உசுர வாங்காத.!

செல்வா : இங்க BSNL BROADBAND @ 225 PM அப்படின்னு எழுதிருக்கு.!

நண்பர் : அது நிறைய இடத்துல இருக்கும் , வேற எதாச்சும் சொல்லு.

செல்வா : இங்க ஒரு நோட்டீஸ் ஒட்டிருக்காங்க , NO SALES , NO RISK , NO MARKETING @ 15000 PM அப்படின்னு இருக்கு. இது போதுமா ?

நண்பர் : நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் , நான் உன்னப் பார்த்திட்டேன்.

செல்வா : சரி வா.அருகில் வந்த நண்பரிடம் நான் எப்படி கரட்டா லேண்ட்மார்க் சொன்னேன் பார்த்தியா ?

நண்பர் : நீ சொன்ன லேண்ட்மார்க வச்சு நாலு நாள் ஆனாலும் கண்டு பிடிக்க முடியாது . அங்க ஒருத்தர் அழுதுட்டே போனாரு , என்னனு கேட்டதுக்கு லேண்ட்மார்க் எங்க விக்கும் அப்படின்னு ஒருத்தன் என்னைய கேட்டு கேட்டு தொந்தரவு செஞ்சான் அவன் தொந்தரவு தாங்காம தான் இங்க வந்தேன் அப்படின்னு சொன்னார். அதான் உன்ன கண்டுபிடிச்சேன்.

செல்வா : சரி நீ சொல்லு லேண்ட்மார்க் எங்க இருக்கு ?

நண்பர் : இனிமேல் உன் வாயத்தொறந்து எதாச்சும் கேட்டா கண்டிப்பா எனக்கு நான் அப்படியே போய்டுவேன்..!!!

                                                     செல்வாவும் வரட்டீயும் 


   ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் ஒருவரும் பேக்கரி ஒன்றிக்கு டீ சாப்பிடலாம் என்று சென்றனர். அப்பொழுது செல்வா நண்பரிடம் " நீங்க டீ குடிப்பீங்கதானே , எனக்கு பால் " என்றார்.

நண்பர் : எனக்கு வரட்டீ ..

செல்வா : அது இங்க கிடைக்குமா ?

நண்பர் : எல்லா டீ கடைலயும் கிடைக்கும்..

செல்வா : ஆனா அது எப்படி தயாரிப்பாங்க..?

நண்பர் : எப்பவும் போலதான் ..

செல்வா : ஆனா குடிக்கும்போது பேட் ஸ்மெல் வராதா ?

நண்பர் : டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது ?

செல்வா : டீ மனம் தான். ஆனா வரட்டி ( கவனிக்க செல்வா வரட்டீ என்ற சொல்லை வரட்டி என்று புரிந்துகொண்டுள்ளார் ) எப்படி மனம் அடிக்கும் ?

நண்பர் : நீ சொல்லுறது எனக்குப் புரியலை.

செல்வா : வரட்டி அப்படின்னா சாணி எடுத்து செவுத்துல ரவுண்டா அடிச்சு வச்சிருப்பாங்களே அதுதானே , படத்துல பார்த்திருக்கேன்..

நண்பர் : அது வரட்டி , இது வரட்டீ!! ஏன்டா இப்படி உயிரை வாங்குற ? உன்கூட டீ குடிக்க வந்தது தப்பா ? இனிமேல் எப்பவாச்சும் என்ன டீ குடிக்க கூப்பிட்டுறாத ? என்று புலம்பியவாறே அவர் செல்வாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

நீதி : அம்மா என் கால் சைக்கிள்ள மேல இருந்து கீழ வரை ஏன் எட்ட மாட்டேங்குது ? மரத்துல தொங்குற மாங்காய் என்ன ஏன் கிண்டல் பண்ணுது ? எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன் ?

பின்குறிப்பு : செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!

53 comments:

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

எப்பவும் போல...மொக்கை வென்றது

karthikkumar said...

காதலர் தினம் இன்னைக்கும் உசுர வாங்குறானே........:)

karthikkumar said...

Arun Prasath said...
எப்பவும் போல...மொக்கை வென்றது*/////

எப்பவும் போல நம்ம காதுல இருந்து ரத்தம் வந்தது......

Anonymous said...

//karthikkumar said...
காதலர் தினம் இன்னைக்கும் உசுர வாங்குறானே........:) //
பாரபட்சமே பார்க்கக் மாட்றானே செல்வா! ஐ லைக் யு! ;)

சௌந்தர் said...

மச்சி நீ ரொம்ப அறிவாளி டா இந்த உலகம் உன்னை எப்போ தான் புரிஞ்சுக்க போகுதோ

Unknown said...

அருமையான நகைச்சுவை

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

super maame!hi.......... hi......... hi.....

சி.பி.செந்தில்குமார் said...

லேண்ட் மார்க் எங்கே விக்கும்..? தொண்டைல விக்கும் வார்த்தை ஜாலம் கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

காதலர் தினம் என்பதால் கவிதை எதிர்பார்த்தேன்

Unknown said...

நீ ரொம்ப அறிவாளி ?????

எஸ்.கே said...

//காதலர் தினம் என்பதால் கவிதை எதிர்பார்த்தேன்//
செல்வா என்றாலே காதல் தானே! காதல் என்றாலே கவிதைதானே! (அய்யய்யோ!)

மொக்கராசா said...

ஏண்டா இப்படி அடுத்தவங்க அழுக வைக்குறதுல என்ன ஒரு சந்தோசமோ உனக்கு

எஸ்.கே said...

மரத்திலிருக்கிற மாங்கா கூடவா கிண்டல் பண்ணுது? எல்லோரும் மாங்கா மடையர்கள்!

எஸ்.கே said...

//செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!//

திங்களோ திங்கள்!
திங்களோ திங்கள்!
திங்களோ திங்கள்!

எஸ்.கே said...

//டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது ?//
மனநோயா இருக்குமோ?

Unknown said...

வந்தாச்சு...

Unknown said...

முதல் கதை ஜூப்பர், இரண்டாம் கதை இம்சை ரகம்..

Unknown said...

//செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!
//
சரிங்க.. "திங்க" கிழமையை கொண்டாடிடலாம்.

இம்சைஅரசன் பாபு.. said...

//டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது //

ம் ம் (பேட்)வவ்வால் இருந்தா ரொம்ப நாறும் செல்வா .....

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

இம்சைஅரசன் பாபு.. said...

//செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று//

ஆமா ஆமா .....கொண்டாட பட வேண்டிய நாள் தான் ....அப்போ எல்லோருக்கும் செல்வா ப்ளாக் படிக்க லீவ் கொடுத்துருவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா இது, இன்னிக்கு காதலர் தினத்துக்காவது விடுமுறை கிடையாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முன்குறிப்பு : சிலருக்கு என்றே சில கிழமைகள் படைக்கப்பட்டிருக்கும். ///////

அது எந்த சிலரு, எந்த கெழம?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////லேண்ட்மார்க்கும் செல்வாவும்/////

செல்வாவே ஒரு லேண்ட்மார்க்குதான் பாவம் பசங்களுக்கு இன்னும் புரியல போல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நண்பர் : அது வரட்டி , இது வரட்டீ!! ஏன்டா இப்படி உயிரை வாங்குற ? உன்கூட டீ குடிக்க வந்தது தப்பா ? இனிமேல் எப்பவாச்சும் என்ன டீ குடிக்க கூப்பிட்டுறாத ? என்று புலம்பியவாறே அவர் செல்வாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்/////

அப்போ காசு யாரு கொடுத்தா?

செல்வா said...

நானும் வந்திட்டேன் ..

செல்வா said...

//என்றா இது, இன்னிக்கு காதலர் தினத்துக்காவது விடுமுறை கிடையாதா?
//

கடமைதான் முக்கியம் , காதலர் தினம் அல்ல .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நீதி : அம்மா என் கால் சைக்கிள்ள மேல இருந்து கீழ வரை ஏன் எட்ட மாட்டேங்குது ? மரத்துல தொங்குற மாங்காய் என்ன ஏன் கிண்டல் பண்ணுது ? எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன் ?///////


மரத்துல தொங்கற மாங்கா எப்போ தேங்காவா மாறுதோ அப்போதான் கால் எட்டும்...

செல்வா said...

//மரத்துல தொங்கற மாங்கா எப்போ தேங்காவா மாறுதோ அப்போதான் கால் எட்டும்... /

மாங்காய் எப்படி தேங்காயா மாறும் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பின்குறிப்பு : செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!//////

தண்ணியும் சைடு டிஸ்சும் வாங்கிக் கொடுத்தா எல்லா நாளும் கொண்டாடப் படவேண்டிய ஒன்றுதான்...

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே said...

//செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!//

திங்களோ திங்கள்!
திங்களோ திங்கள்!
திங்களோ திங்கள்!
//

Repeattoi..

Madhavan Srinivasagopalan said...

ரன் வேயில, ஏரோபிளேன் லேண்டு ஆகுறதுக்கு லைட்டு வெச்சு பெயிண்ட்டால மார்க்கு போட்டிருப்பாங்க அதுதான் லேண்ட்-மார்க்கு..

அதெப்படி பஸ் ஸ்டாண்டுலே இருக்கும்..?

Speed Master said...

இனி திங்கள் அன்று உங்கள் பதிவிற்கு வரமாட்டேன்


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

MANO நாஞ்சில் மனோ said...

//அங்க ஒருத்தர் அழுதுட்டே போனாரு , என்னனு கேட்டதுக்கு லேண்ட்மார்க் எங்க விக்கும் அப்படின்னு ஒருத்தன் என்னைய கேட்டு கேட்டு தொந்தரவு செஞ்சான் அவன் தொந்தரவு தாங்காம தான் இங்க வந்தேன் அப்படின்னு சொன்னார். அதான் உன்ன கண்டுபிடிச்சேன்//

மொக்கையனை கண்டு பிடிக்க நல்ல ஐடியாதான் போங்க...

பாட்டு ரசிகன் said...

காதலர் தி னத்தில ஏதாவது ரொமான்ஸ் போடாது என் பாஸ் இது..
இருந்தாலும் சூப்பர்..

MANO நாஞ்சில் மனோ said...

//காதலர் தினம் இன்னைக்கும் உசுர வாங்குறானே........:)//

அவனை இப்பிடி வளர விட்டுட்டு புலம்புறதை பாரு...

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போன திங்கள் கிழமை இன்னைக்கா வரணும் அவ்வவ்வ்வ்வ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி கேரளா போகும்போது இந்த பிளாக்குக்கும் சேர்த்து செய்வினை வச்சிடேன். ப்ளீஸ்

வைகை said...

karthikkumar said...
காதலர் தினம் இன்னைக்கும் உசுர வாங்குறானே........:///

காதலர் தினத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் மச்சி?

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
காதலர் தினம் என்பதால் கவிதை எதிர்பார்த்தேன்///////////


இது வேறயா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முன்குறிப்பு : சிலருக்கு என்றே சில கிழமைகள் படைக்கப்பட்டிருக்கும். ///////

அது எந்த சிலரு, எந்த கெழம///

நம்ம போலிசுக்கு சனி மாதிரி :))

மங்குனி அமைச்சர் said...

லேண்ட்மார்க்கும் செல்வாவும்///

intha kathai sema super selva

தமிழ்மணி said...

// எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன் ? - செல்வா.... வரட்டி (வரட்டீ) சாப்பிடுங்க.....//


வரட்டீ இஸ் தி சீக்ரெட் ஆப் செல்வாஸ் மொக்கை......

Keep going thala.... :))))

Riyas said...

//தம்பி வேற நல்ல ப்ளாக் இருந்தா போய் படிங்க தம்பி . இதெல்லாம் ஒரு ப்ளாக்னு படிச்சிக்கிட்டு.!//

ஹி,,ஹி,, நாங்க சும்மா சுத்திப்பார்க்க வந்தோம்..

Riyas said...

என்ன செல்வா தொடர்ந்து கதையாவே வருது

middleclassmadhavi said...

செல்வா ரசிகர் மன்றத்தில் அங்கத்தினர் ஆக விதிமுறைகள் என்ன? :))

தமிழ்மணி said...

//நான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).//

Jockey ந குதிர ஒட்டறவங்கதானே
அப்போ ரேடியோ ஜாக்கினா குதிர ஒட்டிகிட்டே ரேடியோ கேட்பாரோ?
இல்ல ரேடியோவில குதிர ஓட்டுவாரோ?

Sathish said...

///செல்வா : இரு கேட்டு சொல்லுறேன் ., அருகில் இருந்தவரிடம் இங்க லேண்ட்மார்க் விக்கும்களா ?

அவர் : லேண்ட்மார்க் எல்லாம் விக்காது , தொண்டைலதான் விக்கும்!!
( அவரும் செல்வா போன்ற அறிவாளி போலும் )///


உண்மையாலுமே நீ பெரிய கைதிதாண்டா தம்பி

சக்தி கல்வி மையம் said...

இன்னிக்கி லீவா சார்...

சக்தி கல்வி மையம் said...

புதுசா படிவை போடு தலைவா...

சி.பி.செந்தில்குமார் said...

முடியல