Friday, February 18, 2011

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?


அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை 
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம் 
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி 
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய 
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட 
WORDSWORTH யும் SHAKESPHERE யும் 
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும் 
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று  
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம் 
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES " 
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம் 
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை 
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி 
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம் 
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? 

பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!




65 comments:

Arun Prasath said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

Madhavan Srinivasagopalan said...

நீ போயி ஒன்னோட வேலையைப் பாரு.. (மொக்கைய மட்டும் போடுன்னு சொன்னேன்).

Arun Prasath said...

பட்டய கெளப்பீட்ட

Arun Prasath said...

நீ போயி ஒன்னோட வேலையைப் பாரு.. (மொக்கைய மட்டும் போடுன்னு சொன்னேன்).//

பையன் எவ்ளோ பீல் பண்ணி சொல்லி இருக்கான்... நீங்க என்ன தல

எஸ்.கே said...

Sorry to say, this mentality is very bad. You know, the parents also responsible!

Madhavan Srinivasagopalan said...

//அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்று//

Wrong Comparison..?

ஓஹோ... இதுதான் தமிழ 'வா.. வா..' னு கூப்பிட்டு,
ஆங்கிலத்த ' போ.. போ..' னு சொல்லுறதோ ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

who told u? tamil is a funni language. we can speak,walk run english...

மாணவன் said...

சூப்பர் செல்வா :))

மாணவன் said...

//இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!//

“அனைத்து மொழிகளையும் கற்போம்...
அன்னைத் தமிழை காப்போம்”

சௌந்தர் said...

நான் படிக்கும் போது ஆங்கில வார்த்தையை தமிழில் எழுதி மனப்பாடம் செய்வேன்....

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
who told u? tamil is a funni language. we can speak,walk run english...//

அண்ணே, எதா இருந்தாலும் தமிழ்லேயே சொல்லுங்க ஒன்னுமே புரியல...ஹிஹி

சௌந்தர் said...

மாணவன் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
who told u? tamil is a funni language. we can speak,walk run english...//

அண்ணே, எதா இருந்தாலும் தமிழ்லேயே சொல்லுங்க ஒன்னுமே புரியல...ஹிஹி//

அவருக்கும் தெரியாதாம் அதை சொல்றார்....பன்னி மேய்க்குறவன் தான் தமிழ் பேசுவாங்க சொல்றார்

சக்தி கல்வி மையம் said...

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழை மறந்தவர்களுக்கு சவுக்கடி இந்தப் பதிவு.. தொடருங்கள்...

வைகை said...

தாங்கள் சொல்லவந்த கூற்று முற்றிலும் சரியானதே நண்பரே!

வைகை said...

மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
who told u? tamil is a funni language. we can speak,walk run english..////

who is this guy? very funny..ha ha... note- funny not a panni

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான இடுகை நண்பா.

karthikkumar said...

அருமை நண்பா..:))

முனைவர் இரா.குணசீலன் said...

http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_28.html

தொடர்புடைய இடுகை..

எஸ்.கே said...

பீட்டர்னு ஒரு பையன். அவன் ஸ்கூல்ல இங்கிலீஷ் கற்றுக்கவே முடியலை. மிஸ் அடுத்த நாள் நாலு இங்கிலீஸ் வார்த்தையாவது கற்றுகிட்டு வரனும். அதை மொதல்ல சொல்லிட்டுதான் கிளாஸ்குள்ளேயே வரணும்னு சொல்லிட்டாங்க.
அவனுக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அவன் பிரண்டு ஒரு ஐடியா சொன்னான். பீச்சு பக்கம் போடா அங்க யாரவது இங்கிலீஷ் பேசுவாங்க அதில் நாலு வார்த்தை மனப்பாடம் பண்ணிகிட்டு பேசிடுன்னா.
அவனும் போனான்.

பீட்டர் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தான். பீச்சில ஒரு பொண்ணு உக்கார்ந்து இருந்தது. “எங்கே அவரை காணோம்.” அப்படின்னு புலம்பின்னப்ப ஒருத்தன் வந்தான். ”I AM HERE HONEY”. கொஞ்சம் பேசிகிட்டு இருந்தப்ப. அந்த பொண்ணு சொன்னது “I LOVE YOU DARLING”. அப்புறம் பேசிட்டு கிளம்புச்சு அந்த பொண்ணு பையன் சொன்னான் “WAIT SWEET HEART”.
அப்புறம் டைமாச்சுன்னு அந்த ”GOOD BYE DEAR” னு சொல்லிட்டு கிளம்பிடுச்சு.

பீட்டர் அந்த நாலு வார்த்தையும்(வாக்கியம்) மனப்பாடம் பண்ணிகிட்டான்.

அடுத்த நாள் கிளாசுக்கு கொஞ்சம் லேட்டா போனான். மிஸ் அப்பதான் அட்டண்டஸ் எடுத்துகிட்டு இருந்தாங்க. அவன் பேர் கூப்பிட்டாங்க. அவன் கிளாஸ் வசல்ல இருந்துகிட்டு சொன்னான். ”I AM HERE HONEY”. மிஸ் கோபமாகி, “என்னடா சொன்னே?” அப்படின்னாங்க. “I LOVE YOU DARLING” அதுக்கு. “உன்னையெல்லாம்... இப்பவே வா டிசி வாங்கி கொடுத்து அனுப்புறேன்.”
”WAIT SWEET HEART” னு சொன்னான். கடைசியா டிசியே கொடுத்துட்டாங்க. அவன் கடைசியா அதை வாங்கிட்டு ”GOOD BYE DEAR” னு சொல்லிட்டு போய்ட்டான்.

Speed Master said...

அருமையான பதிவு நண்பரே

logu.. said...

agggaa... nee engiyo poitta....

middleclassmadhavi said...

எப்படிங்க தமிழ் சாகும்- ஆங்கிலம் மூலம் தமிழ்ல ன, ண, ர, ற எல்லாம் சரியா அடிக்கற போது?! அதெல்லாம் எட்டுத் திக்குகளிலேயும் வளரும்!!

ஈரோடு கதிர் said...

அருமை

NaSo said...

தமிழ் எப்போதும் சாகாது செல்வா. ஏற்கனவே இதுபோல பல இடர்ப்பாடுகளை தாண்டி வந்துள்ளது. உனக்கு ஒன்று தெரியுமா உலகிலேயே அதிக மக்கள் பேசும் மிகப் பழமையான மொழி தமிழ் தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட பார்ரா... நம்ம செல்வா என்னமா பீல் பண்ணி இருக்கான்...... ! சேம் பீலீங்ஸ்......

பெசொவி said...

//எஸ்.கே said...
Sorry to say, this mentality is very bad. You know, the parents also responsible!
//

இதைத் தமிழில் சொல்லியிருக்கலாம், எஸ்கே!
:)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னங்க இப்படி திடிர்ன்னு சமூக அக்கறை.. என்னால் நம்மபவே முடியவில்லை..

என்ன இருந்தாலும் மற்ற மொழியோடு தாய் மொழி வளர்ச்சிக்கும் நாம் படுபட வேண்டும்..

பெசொவி said...

உண்மையான அக்கறையுடன் எழுதப் பட்ட பதிவு, வாழ்த்துகள், செல்வா!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃமம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும்
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ஃஃஃஃஃ

கொடுமை சகோதரா... ஹ..ஹ..ஹ..

ம.தி.சுதா said...

சகோதரா மட்டக்களப்பில் இப்போதும் இங்க வந்த பறங்கியர் (போர்த்தக்கேயர்) இருக்கிறார்கள் ஆனால் இப்பவும் அவர்கள் தம் மொழியில் தான் தமக்குள் கதைக்கிறார்கள்... தமிழரே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம் இது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

எஸ்.கே said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எஸ்.கே said...
Sorry to say, this mentality is very bad. You know, the parents also responsible!
//

இதைத் தமிழில் சொல்லியிருக்கலாம், எஸ்கே!
:)//

என்கி டமில் வரோது!:-)

(வேண்டுமென்றுதான் ஆங்கிலத்தில் எழுதினேன். தெரிந்த கருத்தை கூட இங்கே தமிழில் சொல்வதை ஒரு அவமானமாக கருதுபவர்கள் இருக்கிறார்கள்!. ஆங்கிலம் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவர்கள் இருக்கலாம் ஆனால் தாய்மொழியில் பேசுவதை ஏதோ தவறான செயலாக கருதுவது???)

தமிழ்மணி said...

அச்சச்ச்சோ..... செல்வா "வாழ்வை தேடி வடக்கே நீ போனால் நாங்கள் போவதெங்கே...." திடிர்னு இப்பிடி ஒரு பதிவு.... கோமாளி ப்ளாக் ல இருக்கம இல்லே வேற ப்ளாக் எதுனா வந்துட்டமான்னு முகவரி பட்டைய பாக்க வச்சுடிங்க.....

அருமையான பதிவு செல்வா.... தாயை மறப்பதும் தமிழை மறப்பதும் ஒன்னுதாணு பெத்தவங்களுக்கு புரியணும்... அப்போதான் குழந்தைங்களுக்கு புரியும்

Chitra said...

உங்களுக்கு காய்ச்சல்னு நினைக்கிறேன்... சீக்கிரம் குணமாகட்டும்! இப்படியெல்லாம் "பேச" - கவலைப்பட ஆரம்பிச்சிட்டீங்களே!

புகல் said...

வணக்கம் செல்வா,
தங்களைபோல் நானும் வருத்தபடுபவன்தான் ஆனால் இதை ஒரே நாளில் சரி செய்ய இயலாது, ஏன் ஆங்கிலம் கூட நம் மொழியில் ஒரே நாளில் கலக்கவில்லை படி படியாகத்தான் கலந்திருக்கிறது என்பதை நினைவுகொள்ள வேண்டும்.
தமிழ் நம் தாய்மொழியாக இருந்தும் கூட நாம் அதை மிக மிக வெறுக்கிறோம். இதை நாம் முதலில் வேரருக்க வேண்டும், தமிழ்பற்றை சிறுவயது முதல் அவர்களின் அடிமனதில் வளர்க்க வேண்டும், தாய்மொழியில் கற்பதால், எதையும் நம்மால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும், படித்ததை மறக்கமாட்டோம், தன்னம்பிக்கை வளரும், அறிவுசார்ந்த கற்பனை வளரும் இப்படி பல நன்மைகள் சொல்லலாம்.
தமிழை வளர்க்க,பாதுகாக்க வேண்டுமானால் முதலில் தமிழுக்கென்று தனிநாடு வேண்டும் இல்லையேல் மிக மிக கடினம், தமிழக அரசால் எந்த காரியாத்தையும் தில்லியின் அனுமதி இல்லாமல் செய்ய இயலாது,
எ-டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்குமொழியாக்க நடுவன அரசை கெஞ்ச வேண்டிய அவலநிலை கெஞ்சியும் உரிமைகளை மறுக்கிறது இந்திய அரசு, இந்திமொழியின் ஆதிக்கம் ஆம் இந்திமொழி இந்திய அரசின் செல்லபிள்ளை, அனைத்து மாநிலத்திலும் இந்தியை ஏகபோகமாக வளர்க்கிறது,
இரேயில்வே துறை, தபால் நிலையம், தேசிய வங்கி, விமான நிலையம்,எண்ணெய் நிறுவனங்கள், எல்.ஐ.சில், கடவுசிட்டில்(Passport), காஸ் துறைகளில், தொலைதொடர்பு துறையில், பாரளுமன்றத்தில், இப்படி பல துறையில் ஆங்கிலமும் இந்தியுமே பிரதானமாக செயல்படுகிறது, வங்கியில் கொடுக்கபடும் பாரங்களில்(form), இரெயில்வே பயண சீட்டில், பல அறிவிப்பு பலகைகளில், என இப்படி சொல்லிகொண்டே போகலாம்... ஆக தமிழகமக்களுக்கு அனைத்தையும் தமிழில் வழங்க வேண்டும் என்கின்ற அடிபடை அறிவுகூட இல்லாத ஒரு அரசு எப்படி நம் அரசாக இருக்க முடியும், இந்தி மக்களுக்கு தெரியுதோ இல்லையோ அதை திணிக்கிறது மொழிவெறிபிடித்த இந்திய அரசு ஆக இந்திய அரசாங்கம் இந்தியை இந்தி அல்லாத மாநிலங்களில் அதை ஒரு தேவையுள்ள, இன்றியமையான மொழியாக மாற்ற முயல்கிறது
தமிழுக்கு அனைத்து தகுதியும் இருந்தும் நடுவன அரசு தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக எற்க மறுக்கிறது
பேச இன்னும் நிறைய உள்ளது நேரம் இன்மையால் உரையை முடித்துகொள்கிறேன், மீண்டும் அடுத்த பின்னுட்டத்தில் பார்க்கலாம்

Unknown said...

ஒரு நல்ல கவிதைக்கான இலக்கணத்துடன் இருக்கும் கட்டுரை...

Riyas said...

//பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்//

mmm selva good post..

தினேஷ்குமார் said...

செல்வா அருமையான பதிவு....
உணர்வார்களா நம் மக்கள் உடமை இழந்து ஈனமானாலும் நம்மவர்கள் திருந்த வாய்ப்பில்லை .........

Anisha Yunus said...

நச் பதிவுங்ண்ணா... :)

Angel said...

i dont have tamil fonts .please forgive me.
engal 10 vayadhu magal veetil pesuvadhu thamizh.(EU/ british nri)
so its the parents who are responsible TO TEACH THEIR MOTHER TONGUE.

Unknown said...

தமிழ் செத்தா அடக்கம் பண்ண தமிழன் தான் மீண்டும் வரணும்

Unknown said...

actually this post was very nice yaa...

பாலா said...

என் பக்கத்து வீட்டில் குழந்தை ஒன்று இருக்கிறது. அவள் பெயர் ஜனனி. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி இது என்ன என்றேன். ஆங்கிலத்தில் இருக்கும் அவள் பெயரை காட்டி இது மை நேம் என்றாள். தமிழை காட்டி இது என்னான்னு தெரியலண்ணு சொன்னா. நான் இதுவும் உன் பெயர்தான்னு சொன்னேன். கடைசிவரை நம்ப மறுத்து இல்லை இதுதான் என் நேம் என்று ஆங்கில ஜனனியையே காட்டி கொண்டிருந்தாள்.

சிரிப்பதா அழுவதா?

Madhavan Srinivasagopalan said...

// இந்திய அரசு, இந்திமொழியின் ஆதிக்கம் ஆம் இந்திமொழி இந்திய அரசின் செல்லபிள்ளை, அனைத்து மாநிலத்திலும் இந்தியை ஏகபோகமாக வளர்க்கிறது, //

தமிழை நாம் வளர்ப்போம்.. ஆனால் மற்ற மொழியையும் வாய்ப்பிருந்தால் கற்போம்.
இல்லேன்னா, தமிழ் நாட்ட விட்டு வேற மாநிலத்துல (முக்கியமா வட மாநினத்துல ) வேலை கெடைச்ச.. போய் முழி.. முழின்னு முழிக்க வேன்டியதுதான்.

ஹிந்தி படிக்காததுனால ஆரம்பத்தில் நான் பட்ட கஷ்டம் அதனை அனுபவித்தவர்களுக்கே வெளிச்சம்.

என்னமோ தமிழ் நாட்டுல இருக்குற எல்லாருக்கும் இங்கயே வேலை கேடைக்குராமாதிரி பேசவேணாம்.. எத்தனை மொழி ஒருவருக்குத் தெரிகிறதோ அவர் அதற்கேற்ப பயன் பெறுவார்...

தமிழ் எனது தாய் மொழி.. நா அதை நேசிக்கிறேன்.... இல்லையென்றால் ஆங்கிலத்தில் பிளாக் ஓபன் பண்ணி இருப்பேனே..

Anonymous said...

ஆமா 85 வயச்சாயிடுச்சு இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

ஹலோ டாக்டர் வீடுங்களா? கோபிச்செட்டிபாளையம் வரை வர முடியுமா? ப்ளீஸ்.. சீரியஸ்

சி.பி.செந்தில்குமார் said...

சும்மா ஜாலிக்கு.. நல்லாருக்கு செல்வா...

புகல் said...

வணக்கம் திரு சீனிவாசன் அவர்களே,
ஒருவன் எத்தனை மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை பற்றி பேசவரவில்லை, அனைத்து மொழிக்கும் சொந்தமான ஒரு இந்திய அரசு எதற்காக ஒரு மொழியை மட்டும் வளர்க்க வேண்டும்.இந்தியை இந்தி மாநிலங்களில் வளர்த்தால் பரவாயில்லை ஆனால் மற்ற மாநிலங்களிலும் இந்தியை திணிக்கிறதே அதைதான் ஆதிக்கம் என்கிறேன்,
வளர்ந்த மாநிலங்கள், அதன் மொழிகள் என்று எடுத்துகொண்டால் மகராஸ்ட்ரா(மராத்தி),தமிழ்நாடு(தமிழ்),வங்களாம்(பெங்காலி),பெங்களுரு(கன்னடம்)
ஐதராபாத்(தெலுங்கு), குஜாராத்(குஜாராத்தி) ஆனால் பிழப்பு தேடிபோகும் இந்திமாநிலத்தவர்கள் இந்திய அரசின் ஆதரவால் அந்த அந்த மக்கள் மீது இந்தியை திணித்துகொண்டிருக்கிறார்கள்
அவர்கள் எந்த இரேயில்வே ஸ்டேசன் போனாலும் அங்கு அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல அந்த அந்த மாநில இயில்வே பணியாட்களுக்கு இந்தி கட்டாயமாக கற்பிக்கபடுகிறது.
இயில்வே துறையில் மட்டும் அல்ல தேசிய வங்கி என அனைத்து நடுவன அரசுக்கு உட்பட்ட துறையிலும் இந்திகட்டாயமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ திணிக்கபடுகிறது. இந்திய அரசால் நடத்தபடும் அனைத்து தேர்வுகளும் ஆங்கிலத்திலும், இந்தியிலுமே உள்ளது, இதனால் தமிழ்மக்கள் இதில் ஒன்றை கற்றுகொள்ள வேண்டிய கட்டாயம் எற்படுகிறது, ஏன் தமிழில் தேர்வுநடத்தபடுவதில்லை என்று கேட்பதற்கு பதிலாக எனக்கு ஆங்கிலம் தெரியலைய, இந்தி தெரியலைய வருத்தபட்டுகொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞானம், அறிவியல், கணிதம், கணினி, இலக்கிய வளம் இப்படி எதுவும் இல்லாத ஒரு மொழியில் தேர்வுகள் நடத்தமுடியும், அரசாங்கம் செய்யமுடியும் ஆனால் அனைத்து தகுதியும் இருந்தும் தமிழுக்கு உரிமைகள் மறுக்கபடுகின்றன. வேடிக்கை என்னவென்றால் நாம் இந்திய அரசால் எமாற்றபடுகிறோம் என்பதுகூட இங்கு உள்ள மக்களுக்கு புரியவில்லை
do u know how many hindi speaking flooding to chennai,bangalore,mumbai without knowing the local language and the worst part is they complained the local people doesn't know hindi
ஏன் இப்படி நடக்குது,
அவன் தன்னை பெருமையாக நினைக்கிறானோ இல்லையோ அவன் தன் மொழியை பெருமையாக கருதவேண்டும் அல்லது அந்த மக்களையும் அந்த மக்களின் மொழியை பற்றி தாழ்வான மனப்பான்மையாக இருக்கலாம், அல்ல திமிர் இன்னொன்று தமிழ் ரொம்ப கடினம்
non tamilains especially hindians always use say "i agree tamil is very ancient langauge but it's very tough to learn", i least bother if u say this in ur state, i can't tolerate if u saying it in tamilnadu, the palce where you guys having ur livelihood, alas! that too u are staying saying it even morethan 1yr, i can show lots of people who r staying over here and without learning tamil, each time there is someone to help them to move in public
மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வரகூடாது என்று சொல்லவில்லை, அப்படி வருபவர்கள் நம்மேல் ஆங்கிலம் திணித்துகொண்டிருந்தால் அதைநாம் பொருட்படுத்தாமால் இருந்தால் தமிழ்நாட்டில்கூட வளர்க்கமுடியாது, பிழப்புதேடி வருபவர்களின் உடைமைகளை பறித்தால்தான் குற்றம் தமிழை படிக்க வற்புற்த்துவது நம் கடமை அதுதான் நம் உரிமை
//**என்னமோ தமிழ் நாட்டுல இருக்குற எல்லாருக்கும் இங்கயே வேலை கேடைக்குராமாதிரி பேசவேணாம்.. எத்தனை மொழி ஒருவருக்குத் தெரிகிறதோ அவர் அதற்கேற்ப பயன் பெறுவார்...
**//
பெருமான்மையான மக்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்கிறது, சில பேருக்கு வேறுமாநிலங்களிலும், வேறுநாடுகளிலும் கிடைக்கிறது, இந்திமக்களுக்கு அவர்கள் மாநிலத்திலேயே வேலை வாய்ப்பு கிடையாது.
பின்பு அவர்கள் மட்டும் எப்படி பிழப்பு நடத்துகிறார்கள்.
**தமிழ் நாட்ட விட்டு வேற மாநிலத்துல (முக்கியமா வட மாநினத்துல ) வேலை கெடைச்ச.. போய் முழி.. முழின்னு முழிக்க வேன்டியதுதான். ஹிந்தி படிக்காததுனால ஆரம்பத்தில் நான் பட்ட கஷ்டம் அதனை அனுபவித்தவர்களுக்கே வெளிச்சம்**//
இதற்கு விடை பல தளங்களில் கொடுக்கபட்டுள்ளது, ஒரு சில பேர் வேற மாநிலத்துக்கு போவதற்காக ஒட்டுமொத்த மக்களும் இந்திபடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெள்ளகாரன்,பிரஞ்சுகாரர்கள்,போர்த்துகிசியர்கள் போன்றவர்கள் பலநாடுகளை பிடித்து அரசாங்கம் அமைத்து ஆண்டார்கள் அவர்கள் எல்லாம் மொழிதெரியாமல் முழி.. முழின்னு முழித்துகொண்டாயிருந்தார்கள், உட்டா ஒங்க விட்டு நாய்,ஆடு மாடு கிட்ட பேசுகூட நாய் மொழி, ஆடுமொழி, மாட்டுமொழி கேட்பிங்க போல இருக்கு. அப்பறம் அண்ணாதுரை, பெரியார் இன்னும் பல தலைவர்கள் போகாத வெளிமாநிலங்களே இல்லை அவர்கள் எல்லாம் என்ன பயந்தா போய்விட்டார்கள், ஏன் நான் கூட பல வேலை நமித்தமாக பல ஊர் போயியுள்ளேன்
அந்த மக்களின் மொழியை ஒரளவுக்கு தெரிந்துகொள்ள ஒருவாரம் போதும், தன்னம்பிக்கை இல்லாதவன்தான் தானும் பயந்து தன் இனத்தையும் அழித்துவிடுவான்

புகல் said...
This comment has been removed by the author.
புகல் said...

பகுதி - 2
/*Madhavan Srinivasagopalan said...
தமிழ் எனது தாய் மொழி.. நா அதை நேசிக்கிறேன்**/
தங்களின் பெயர் தமிழ் பெயரா? நான் இல்லையென்றே நினைக்கிறேன்.
ஒரு பெயரில் கூட தமிழுக்கு உரிமை தர மாட்டிர்கள்.
மக்களாகிய நாம் தமிழில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், நான் என்ன கோடிகணக்கில் பணமா வைத்துள்ளேன் என்று கேட்க வேண்டாம்,
நாம் செலவிடும் ஒவ்வொறு பணத்துக்கும் நாம் தான் முதலாளி,
எ-டு ஒட்டல்/உணவகம் மெனுகார்டில் தமிழில் இல்லையென்றால் தட்டி கேட்கலாம், பயண சீட்டு, திரையரங்க சீட்டு, வங்கியில் இருக்கும் விண்ணப்பம், பற்றுச்சீட்டு/RECEIPT , சான்றுச்சீட்டு/VOUCHER, வரைவோலை/DEMAND DRAFT இப்படி அனைத்திலும் தமிழ் இருக்கவேண்டும் இல்லையென்றால் நாம் தட்டிகேட்க வேண்டும் இதை கேட்க நாம் என்றுமே அஞ்சவோ, யாராவது தப்பா நினைப்பாங்களோ என்ற தாழ்வுமனப்பான்மையோ இருக்க கூடாது, அப்பறம் எந்த விண்ணப்பம் பூர்த்தி செய்தாலும் கூடுமானவரை தமிழை பயன்படுத்துங்கள்,
இனி தமிழக அரசாங்கம் செய்யவேண்டியது,
அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும், அதை மேலும் பல கட்டங்ளாக வகுத்து நடத்த வேண்டும் முதலில் இது கடினமாக இருக்க கூடும் போக போக மக்கள் தமிழின் இலக்கண வளம், அதன் தனித்தன்மை என புரிந்துகொண்டு அதை மேலும் வளர்ப்பார்கள் என்பதில் அய்யம் இல்லை, பிறகு கல்லூரி பாடங்கள் அனைத்தும் தமிழில் கற்பிக்க படவேண்டும்(தற்சமயம் முடியாமல் போனாலும் பின்னாளில் சாத்தியமாகும்), பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கலாம் ஆனால் அவர்கள் அடிப்படை தமிழ் பாடம் கூடுதலாக படிக்க வேண்டும், அப்பறம் தமிழ் அலுவலக மொழி அல்லது பணிமொழி என்ற ஒன்றை உருவாக்கி அதை அரசு சார்ந்த துறையில் அமல்படுத்த வேண்டும்,
கோயில்களில் தமிழிலும் பூசெய்(புசை) செய்யலாம் என்று இல்லாமல் தமிழில் மட்டும் தான் கோயில்களில் வழங்கபட வேண்டும், சமற்கிருதம் தெய்வமொழி அப்படினு போலியா பரப்புபவர்கள் தண்டிக்கபடவேண்டும், தமிழ் அல்லாத வேறு மொழியில் பேசி பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து குழப்பத்தை எற்படுத்துபவர்களை அரசாங்கம் விசாரித்து தக்க தண்டனை கொடுக்கலாம் அல்லது அவர் நாட்டுக்கு திரும்ப அனுப்பலாம், தமிழ் மொழிக்கென்று தனி பாதுகாப்பு சட்டம் இருத்தல் வேண்டும், தமிழ் மொழியை ஏளனம் செய்பவர்கள், தூற்றபவர்கள் தண்டிக்க படவேண்டும்.
வாழ்கையில் நம்மளை யாராவது தட்டிகொடுக்க மாட்டார்களா என எதோ ஒரு சமயத்தில் நிச்சயமாக ஏங்கிருப்போம், அல்லது தன்னை மட்டம் தட்டாமலாவது இருப்பார்களானு கண்டிப்பாக ஏங்கிருப்போம். அப்படிதானே தமிழ்மொழியும், எல்லா மொழியுமே தானாக வளரவில்லையே,
அந்த இன மக்கள் அதை வளர்த்து நாடு முழுவதும் பரப்பியிருக்கிறார்கள், நம் தமிழ்மொழியை வளர்க்க எந்த் முயர்ச்சியும் எடுக்காமல், மேலும் அதை எதற்கும் உதவாத மொழி என சொல்லி சொல்லி வளர்கிறார்கள்.
சிந்தித்து செயல்படுங்கள், நம் தாய் மொழியான, உலகத்தின் மூத்தமொழிகளில் ஒன்றான, எந்த மொழியில் இருந்தும் திரிந்து வராமல் தான்தோன்றிய மொழி நம் மொழி நம் தமிழ்மொழி.

செல்வா said...

@ புகல்
வாங்க புகல் வணக்கம். தங்களின் மேலான பின்னூட்டத்திற்குத் தலை வணக்குகிறேன். அலுவலக வேலை காரணமாக பதில் சொல்ல இயலாமல் போனது. என்னைப் பொறுத்த வரையில் வெளி இடங்களில் வளர்க்கிறோமோ இல்லையோ நமக்குள் நாம் பேசுகையில் அதாவது தமிழர்களுக்குள் பேசுகயிலாவது தமிழில் உரையாட வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். இந்தப் பதிவின் நோக்கமே அதுதான். காரணம் என்னன்னா கொஞ்ச நாளுக்கு முன்னாடி பொறியியல் படிக்கிற மாணவர் ஒருவர் எங்கிட்ட அவர் பேருக்கு தமிழ்ல எப்படி எழுதுறது அப்படின்னு கேட்டார் ..! பொறியியலில் தமிழ் இல்லை என்பதைப் பற்றி நான் கூற வரவில்லை .. அவர் பேருக்கு கூட தமிழ்ல எழுத தெரியலைனா எப்படி ? அதான் வருத்தம் .

ஜில்தண்ணி said...

கண்டிப்பா சாகாது மச்சி :) அதான் நாம இருக்கோம்ல

ப்ரியமுடன் வசந்த் said...

பதிவை படித்து முடித்து சந்தோசப்பட்டு பின்னூட்டம் இட வந்தால் முதல் பின்னூட்டமே தங்லீஷ்ல் ஆரம்பித்தது வருத்தமே

புகலின் பின்னூட்டம் படித்து வியப்பு ஏற்பட்டது..

//சமற்கிருதம் தெய்வமொழி அப்படினு போலியா பரப்புபவர்கள் தண்டிக்கபடவேண்டும், தமிழ் அல்லாத வேறு மொழியில் பேசி பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து குழப்பத்தை எற்படுத்துபவர்களை அரசாங்கம் விசாரித்து தக்க தண்டனை கொடுக்கலாம் அல்லது அவர் நாட்டுக்கு திரும்ப அனுப்பலாம், தமிழ் மொழிக்கென்று தனி பாதுகாப்பு சட்டம் இருத்தல் வேண்டும், தமிழ் மொழியை ஏளனம் செய்பவர்கள், தூற்றபவர்கள் தண்டிக்க படவேண்டும்.//

இதுவே என்னுடைய கருத்தும்...

Madhavan Srinivasagopalan said...

//@ புகல் //

எனது பெயர் தமிழில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது சிரிப்பை வரவழைக்கிறது..

'பெயர்' -- ஒரு அடையாளம்..... 'பெயர்ச்சொல்' ஓரளவுக்கு தெரிந்ததாக இருக்கும். மேலும் வழி வழியாக குடும்பத்தில் மாறி மாறி வரும் பெயராகவும் இருக்கும். ஒருவர் தனது தந்தை, தாத்தாவின் மேலிருக்கும் பந்த பாசத்தால் வந்த பெயரை தமிழாக இல்லையென்றால், அதை 'மொழி' சார்ந்த விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை. எனது தாய்க்கு பின் தான் எந்த ஒரு மொழியும்... சரியாகச் சொல்லவேண்டுமென்றால்.. எனது தாய் சொல்லிக் கொடுத்ததாலேயே அந்த மொழி எனக்குத் தெரிய வந்தது.. எனவே தாய்மொழி எனப் பெயர் பெற்றது. அந்த மொழியை நானும் மதிக்கிறேன்.

வேறு மாநிலத்தில் இருந்தாலும், வீட்டில் கண்டிப்பாக தாய்மொழி - தமிழ்தான் பேசுகிறோம்.. குழந்தைகளும் தமிழ் நன்றாக பேசி வருகிறார்கள் (வீட்டிற்கு வெளியே தமிழில் பேசினால், வேலைக்கு ஆகாது.. பள்ளிக் கூடத்தில் தமிழ் இல்லை.. ஆங்கிலம் ஹிந்தி தான்..)

எல்லாவற்றிகும் மேலாக, மொழி என்பது ஒருவர் மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவருக்குப் புரிய வைக்கவே... ..

இதயெல்லாம் மொழிப் பிரச்சனையாக்கி, நாம்தான் நமது வாழ்வில் தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தான் பல இன்னல்கள் விலகும்.

மொழி என்பது... முழுவதுமாக அழிந்துவிடாது, நாம் அதை நினைத்து கவலைப் படுவதற்கு.

காலப் போக்கில் மாற்றம் நிகழும்.. அது இன்றியமையாதது.. நீங்களும் நானும் பேசும் இன்றைய தமிழ் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழில்லை...... யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு வாழ்ந்தால்தான் வாழ்வு சுவைபடும்.

கடைசியாக ஒரே ஒரு கேள்வி..
எண்களை, எண்களாக(1,2,3,4,5,6..) எழுதும் பொது நீங்கள், தமிழ் குறியீடான ௧, ௨, ௩, ௪, ௫, ௬,௭, ௮,.... இப்படித்தான் எழுதும் வழக்கமா ?

Madhavan Srinivasagopalan said...

// எ-டு ஒட்டல்/உணவகம் மெனுகார்டில் தமிழில் இல்லையென்றால் தட்டி கேட்கலாம், //

எத்துனை முறை அப்படி நீங்க தட்டிக் கேட்டுள்ளீர்கள்..
கேட்டுத்தான் பாருங்களேன்.. உங்களுக்கு கிடைக்கும் மரியாதையை.

அனைத்து கடை பெயர்ப் பலகையும் தமிழில் முதலிலும் வேண்டுமானால வேறு மொழியில் அதன்பின் இருக்கலாம் -- தமிழ் நாட்டில் இப்படி இருப்பதை நானும் வரவேற்கிறேன்.

திரைப்படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால்.. வரி விலக்கு...?
--- இது தேவையா.. வரிப் பணம் என்பது மக்களுக்கு சேவை செய்ய அரசிற்குத் தேவை.. வரும் வரிகளை இப்படி இழப்பதால் நீங்கள் சொல்லும் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன பயன். மக்களுக்கு என்ன இன்னல்கள் வந்தால் நமக்கென்ன.. -- இதுவா யதார்த்தம்.

நான் சொல்ல வருவது ஒன்றுதான்.. ---- யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்..

Madhavan Srinivasagopalan said...

// அந்த மக்களின் மொழியை ஒரளவுக்கு தெரிந்துகொள்ள ஒருவாரம் போதும், //

யதார்த்தம்னா என்னவென்று தெரியாதவர் இப்படித் தான் சொல்லுவார்.
நடைமுடை சிக்கல் -- practical difficulty - இப்படி ஒன்று உள்ளது.
ஆங்கிலத்திலும் சொல்லியுள்ளேன்.. அப்படியும் புரியவில்லை என்றால்.. நீங்கள் அனுபவித்தால் தான் புரியும்.. இதுக்கு மேலே என்னாத்த சொல்ல..

Unknown said...

கரீட்டு..........அதே மாதிரி ஓட்டும் பின்னூட்டமும் போடும் அனைவரின் ப்ளோகுக்கும் போவோம் நாமளும் நம் நன்றிய காட்டுவோம்னு ஒரு வரி சேர்த்து இருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு ஒரு டவுட்டு!

புகல் said...

வணக்கம் திரு சீவாசன் அவர்களே,
தங்களின் நேரத்தை ஒதுக்கி என கருத்து பதில் அளித்ததற்கு நன்றி.
/** எனது பெயர் தமிழில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது சிரிப்பை வரவழைக்கிறது..
'பெயர்' -- ஒரு அடையாளம்....**/
வாழ்கையின் தொடக்கத்திலேயே தமிழ் மொழி, இனத்தின் மிதான அலட்சியத்தை காட்டுகிறது,
'பெயர்' -- ஒரு அடையாளம் என்று மிக சாதரணமாக சொல்லிவிட்டிர்கள், முதன்மதலில் தன் பெயரைத்தான் ஒருவன் மிக மிக நேசிக்கிறான், சிறுவயதில் தன் பெயரை கிறுக்கி எழுத தொடங்கி, புது பேனா, நூல்/நோட் .. என அனைத்திலும் தன் பெயரையே எழுதி மகிழ்ச்சி அடைகிறான் வியாபாரம்/தொழில் என எது தொடங்கினாலும் பெரும்பாலும் தன் பெயரிலேயே பதிவு செய்கிறான், அது செழிப்படைந்து பலநாட்டில் பரவும் போது அவனுடன் தமிழும் அல்லவா வளரும் (உதாரணத்துக்கு ஜப்பான்,ஜெர்மனிய மகிழ்வுந்துகள்/கார்கள் பாருங்கள் அவர்கள் இனத்தின் பெயரையே பறைசாற்றும்,) மேலும் அந்த பெயரை சொல்லிதான் அவனின் தொடக்கம் முதல் முடிவுவரை, முடிந்த பிறகும் அழைக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் மேல் அது ஒரு இனத்தின் அடையாளம் என்பதை மறந்துவிட்டிர்கள் போல, ஒருவன எவ்வளவு பேரும் புகலும் அடைந்தாலும் அவரின் மறைவுக்கு பின் அவர் பெயர் மட்டும்தான் நிலைக்கும், அந்த பெயர் தமிழில் அல்லவா நிலைக்க வேண்டும், உறவு பாசத்தால் தாத்தா,தந்தை பெயர்களை வைப்பதில் தவறுயில்லை அந்த பெயர்கள் தமிழில் இல்லாதபோது அதை மாற்றி நல்ல தமிழ் பெயரை தமிழில் வைத்தால் தவறு இல்லை, தாத்தா, பாட்டன் அடிமையாக இருந்தார்கள் என்பதற்காக நாமும் அடிமையாக இருக்கவேண்டும் என்று கருதுவது மடமை.
அது என்னனு தெரியல தமிழ்நாட்ல இந்துனா சமற்கிருதத்தல பெயர் வைப்பது, கிருத்தவர்கள் என்றால் ஆங்கில பெயரை பறைசாற்றுகின்றன, முகதியர்கள் என்றால் அரேயித்துல பெயர் வைப்பது, நாம எல்லாரும் தமிழர்கள்தானே அப்பறம் தமிழ்ல பெயர் வச்சா கடவுள் என்ன கோச்சுபாரா,
/*எல்லாவற்றிகும் மேலாக, மொழி என்பது ஒருவர் மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவருக்குப் புரிய வைக்கவே... ..*/
மொழி, இனம் என்பது ஒன்றும் அல்ல போன்ற பசப்பு வார்தைகளை பயன்படுத்தி அவர்களின் மொழியையும் கலாசாரத்தையும் நம்மிது திணிக்க பயன்படுத்தும் உக்தியாகும்.
/*மொழி என்பது... முழுவதுமாக அழிந்துவிடாது, நாம் அதை நினைத்து கவலைப் படுவதற்கு.*/
சமற்கிருதம் ஏன் அழிந்தது, ஹிப்ரு என்ன ஆனது
/*நீங்களும் நானும் பேசும் இன்றைய தமிழ் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழில்லை*/
கண்டிப்பாக இதை நான் ஆமோதிக்கிறேன் ஆனால் ஆந்த வார்தைகள் தமிழில் இருந்து திரிந்து வந்த வார்த்தைகளே என்பதை மறுக்க இயலாது, ஒரு தமிழ் வார்த்தை மறைந்து வேறு ஒரு தமிழ்வார்தை தோன்றி அதைநாம் பயன்படுத்துவது தவறில்லை ஆனால் ஒரு தமிழ்வார்த்தையை அழித்து அதற்கு பதிலாக ஆங்கிலம், பிற மொழி வார்தைகளை பயன்படுத்தும் போது அது தமிழ் மொழிக்கு ஊறுவிளைவிப்பது ஆகும்.
முன்தைய பதிவில் குறிப்பிட்டது போல, தமிழில் தேர்வுகள்,கலந்துரையாடல்கள் நடக்கும் போது பண்டைய தமிழுக்கு உயிர் நிச்சயமாக கிடைக்கும்.

புகல் said...

/*எத்துனை முறை அப்படி நீங்க தட்டிக் கேட்டுள்ளீர்கள்..
கேட்டுத்தான் பாருங்களேன்.. உங்களுக்கு கிடைக்கும் மரியாதையை.*/
இதற்கான விடை என் முந்தைய பதிவில் இருந்து
--தமிழ் மொழிக்கென்று தனி பாதுகாப்பு சட்டம் இருத்தல் வேண்டும். இதன் கீழ் கண்டிப்பாக தண்டிக்க முடியும் அவர்களின் உணவகம்/வணிகம்/தொழில் ஆகியவற்றை முடக்க முடியும்
தற்சமயம் இந்த சட்டம் இருக்கிறதா என்ற தெரியவில்லை,
நான் பல கடைகளில் நக்கலாகவும், வேடிக்கையாகவும் பலமுறை எடுத்துறைத்துள்ளேன், திரையரங்கில் கூட கேட்டது உண்டு, அவர்களிடம் நான் கேட்டது குறைந்த பட்சம் தமிழில் என்ன படங்கள் என எழுதியாவது ஒட்டுங்கள் என்றுதான்.
பெரிய ஒட்டல்களில், அங்காடிகளில், குரோமா போன்றவற்றில் என்னிடம் ஆங்கிலம் பேசும் போது, மன்னிகனும் நிங்க சொன்னது புரியலைனு சொல்லிருக்கிறேன் எனக்கு நூறு விழுக்காடு தமிழிலேயே பதில்கள் கிடைத்துள்ளன, ஏன் தமிழ்ல கேட்டாதான் பேசுவிங்களானு கேட்டன் இல்ல சார் நிறைய வெளிமாநிலத்தவங்க வருறாங்கனு சொன்னார் அதுக்கு எங்களுக்கு தண்டனையா என்று கேட்டேன், பேப்பரப்பனு ஒரு சிரிப்புதான் பதிலா வருது(மேலே நான் குறிப்பிட்டதை எல்லாம் நான் பெரியார், அண்ணாதுரை, பாவலேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மொழியின் வரலாறு அதன் தன்மை போன்றவற்றை படித்த ஒரேநாளில் மாறவில்லை கொஞ்சம், கொஞ்சம் அதை உள்வாங்கி அதன்பின்பு தான் இந்த மாற்றங்கள்)
/*திரைப்படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால்.. வரி விலக்கு...?
--- இது தேவையா.. நீங்கள் சொல்லும் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன பயன்*/
ஒரு சின்ன திருதத்துடன் தங்கள் கருத்துடன் ஒத்துபோகிறனேன்
தமிழ்படத்திற்கு கண்டிப்பாப தமிழில்தான் பெயர் வைக்கபட வேண்டும், தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதை விட,பிறமொழியில் வைப்பவர்களிடம் இருந்து பல மடங்கு வரி அபதாரமாக விதிக்கபடலாம்.
நம் தமிழ் படங்கள் பல வெளிநாடுக்கு செல்லும் போது நம் மொழியை தாங்கி செல்லவேண்டும்
எ-டு, பாருங்கள்
எந்திரன்,அங்காடித் தெரு,களவாணிஆடுகளம்,மைனா, விண்ணைத்தாண்டி வருவாயா,பயணம், தென்மேற்கு பருவக்காற்று.

புகல் said...

--@ ப்ரியமுடன் வசந்த்--
தங்களின் பாராட்டுக்கு நன்றி!!!

புகல் said...

திரு செல்வா அவர்களே வணக்கம்
/*@ புகல்
வாங்க புகல் வணக்கம். தங்களின் மேலான பின்னூட்டத்திற்குத் தலை வணக்குகிறேன். அலுவலக வேலை காரணமாக பதில் சொல்ல இயலாமல் போனது.*/
தங்கள் வேலை பளுக்கிடையே, இப்படி ஒரு நல்ல சிந்தைனையுள்ள விவாதத்தை வைதத்தற்கு
நான் உங்களுக்கு என் நன்றி இங்கே சமர்பிக்கிறேன்

Madhavan Srinivasagopalan said...

பொறுமையுடன் பதில் எழுதிய 'புகல்' அவர்களுக்கு..
நீங்கள் சொல்லி செய்திகள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

நான் சொல்ல நினைத்தது "பல மொழிகள் தெரிந்து கொள்வதால் நன்மையே, அன்றி தீமை அல்ல". ஆனாலும், தாய் மொழி ஒருவனுக்கு மிகவும் முக்கியமானது.. தனது வாரிசு மூலம் அந்த மொழி தொடர்வதை (எழுத்து, பேச்சு வடிவத்தில்) உறுதி செய்வது அவன் கடமையாகும். நம்மைப் பொறுத்தவரை அந்த தாய்மொழி, தமிழ்.

அவரவர்கள் தத்தமது தாய் மொழியினை தொடர்ந்து பேசி பரவச் செய்யவேண்டும்.. ஒரு கடமையாக.

அம்பாளடியாள் said...

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும்
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;
இன்றைய தமிழ் சமூகத்தின் உண்மையான
சுயரூபத்தை அப்படியே தத்துரூபமாய் தங்கள்
கவிதைவரிகளில் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்களுடன்
எனது ஓட்டுக்களும் தங்களிர்ற்கு இதோ...

Mathi said...

well said...good post.

Nanjil Siva said...

அருமை ....