Monday, February 28, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : அனைவருக்கும் ஒரு நற்செய்தி.  இனிமேல் நீங்க திங்கள் கிழமையை நினைத்து பயப்பட வேண்டாம். கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும்.

                                      செல்வாவும் பாட்டுப்போட்டியும் 

ஒரு முறை செல்வா ஒரு தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களும் அவர்களின் நிறைகுறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

அடுத்து செல்வாவின் முறை. செல்வாவும் தைரியமாக மேடையில் ஏறிப் பாடத்துவங்கினார். செல்வா பாட்டை முடிப்பதற்குள் நடுவர்களில் ஒருவர் போதும் நிறுத்துங்க என்று கூச்சலிட்டார். மேலும் " என்ன பண்ணுறீங்க ? " என்றார் கோபமாக.

" பாட்டுத்தான் பாடுறேங்க ?! "

" இதுக்குப் பேரு பாட்டா ? ஸ்ருதி , டெம்ப்போ , பிட்ச் எதுவுமே வரல , எதுக்கு நீங்க எல்லாம் பாடனும்னு விரும்புறீங்க ? " என்றார்.

" சாரி மேடம் , பிரிப்பர் பண்ணாம வந்திட்டேன் , ஒரு மணிநேரம் கழிச்சு பாடலாமா. ? " என்றார்.

நடுவர்களும் ஒப்புக்கொள்ள செல்வா மேடையிலிருந்து கிளம்பினார்.

சரியாக ஒரு மணிநேரத்திற்குப் பிறகு செல்வா மேடைக்கு வந்தார். கூடவே ஒரு பெண்ணும் வந்தார். 

செல்வாவைப் பார்த்த நடுவர் , " இது ஒருத்தர் மட்டுமே பாடுற போட்டி , எதுக்கு ரண்டு பேரு வந்திருக்கீங்க ? "

" மேடம் இவுங்க பேரு ஸ்ருதி , நீங்க தானே கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்ருதி வரலைன்னு சொன்னீங்க., அதான் கூட்டிட்டு வந்தேன். "

நடுவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு செல்வாவை கோபத்துடன் பார்த்தனர்.

அவர்களின் கோபத்தைப் புரிந்து கொண்ட செல்வா " டெம்போ வரலைன்னு கோபப்படுறாங்க போல " என்று தனக்குள்ள பேசிக்கொண்டு , " மேடம் , டெம்போ வெளிய நிக்குது., அப்புறம் பிட்ச் கேட்டீங்க , நேரு ஸ்டேடியம கேட்டிருக்கேன், நல்ல வேலைக்கு முடிஞ்சதும் சைக்கிள்ள கட்டியாவது இழுத்துட்டு வந்திடுவேன் " என்றார் பெருமை பொங்க.

இதைப் பார்த்த நடுவர்களில் ஒருவர் " இனிமேல் சத்தியமா எந்த போட்டிக்கும் நடுவரா போகவே மாட்டேன் " என்று சத்தியம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் மனதிற்குள் நினைத்துகொண்டார் தன்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவருக்கு திறமை பத்தாது போலும் என்று! ஆனால் அவரைப் பாடுவதற்கு அந்தத் தொலைக்காட்சி நிலையம் இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது சற்றே வேதனையான செய்தி!!


                                               OMR தாள் 


செல்வா பள்ளியில் படித்துகொண்டிருந்த போது அவரது தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் செல்வா எந்தப் பரீட்சைக்கும் பயந்தவரல்ல என்பது அவரது அறிவுத்திறமையால் நாம் அறிந்ததே!

இன்னும் சொல்லப் போனால் செல்வா எந்தப் பரீட்சை எழுதப் போகிறார் என்றே அவருக்குத் தெரியாது. சில மாணவர்கள் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கேள்வித்தாளை வாங்கினால் அது என்ன பாடம் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் செல்வாவோ கேள்வித்தாளை வாங்கினாலும் அவர் என்ன பரீட்சை எழுதிகிறார் என்பது அவருக்கோ அல்லது அவரது விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியருக்கோ ஏன் அந்தக் கடவுளுக்கோ கூடத் தெரியாது. ஆனால் கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவதில் செல்வாவை இதுவரை யாரும் மிஞ்சியதில்லை. ஒவ்வொரு பரீட்சைக்கும் குறைந்தது 30 கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவார்.

அதுமட்டும் அல்ல. ஒரு சமயம் அவர் எட்டாம் வகுப்புப் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்பதாம் வகுப்புத் தேர்வு எழுதினார் என்பதே அவரது அறிவுத்திறமையை நமக்கு உணர்த்தும்.

இப்படி இருந்த செல்வாவிடம் ஒருநாள் OMR (Optical Mark Reader) தாள் ஒன்றினைக் கொடுத்து தேர்வு ஒன்று வைக்கப்பட்டது. இதில் கொள்குறி வகையிலான கேள்விகளே இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.

அந்தத் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் செல்வா கூடுதல் விடைத்தாள் கேட்டார்.

இதைப் பார்த்த ஆசிரியர் " OMR சீட் எக்ஸாம்ல எதுக்கு உனக்கு அடிசனல் சீட் ? "

" சார் , அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை , நான் எழுதிடுவேன் , நீங்க அடிசனல் குடுங்க " என்றார்.

" என்னையப் பார்த்தா உனக்கு நக்கலாத் தெரியுதா ? ஒழுங்கா உட்கார். " என்று எரிச்சல் பட்ட ஆசிரியரைப் பார்த்த செல்வா சற்றே அச்சத்துடன் சோகமாக அமர்ந்தார்.

நீதி : மேற்கண்ட கதைகளால் செல்வா போன்ற அறிவாளிகள் தங்களது அறிவுத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் போகிறது என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.. நிச்சயம் உலகம் மாற வேண்டும்!!

பின்குறிப்பு : முன்குறிப்பால் மகிழ்ச்சி அடைந்தோருக்கு ஒரு சோகமான செய்தி. செல்வா கதைகளுக்கு என்று தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அதன் முகவரி http://www.selvakathaikal.blogspot.com/ இது எனபதையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

38 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes yes vada for me

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சாரி செல்வா மிக அவசரமா வேலைக்கு கெளம்புறேன்! அதனால ஓட்டுக்கள் மட்டும் போட்டுட்டு கெளம்புறேன்! அப்புறமா பதிவுக்கு கமெண்டு போடுறேன்!

எஸ்.கே said...

முதல் கதை செம காமெடி!

எஸ்.கே said...

ஓஎம்ஆர் சீட் நிஜத்தில் அப்படி நடந்திருக்கு. ஒருமுறை என் ஃபிரண்ட் இப்படி என்கிட்ட கேட்டான். இதுக்கு அடிசினல் சீட் தருவாங்களான்னு:-)

Anonymous said...

இங்ட்க மட்டும் வட பிடிக்க முடியலையே..உன்னால

Anonymous said...

பாட்டு க்காமெடி சூப்பர்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

“அறிவு ஜீவிகளின் அரசர்”
வாழ்க... வாழ்க..

எங்க ஊர் பக்கம் வந்தாசொல்லுங்க
கொங்சம் டிரைனிங் எடுக்கனும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

OMR தாள் //

Old Magabalipuram Road? அதுக்கெல்லாமா தேர்வு வைக்கிறாங்க. அது நம்ம பன்னி பிகரோட ஒதுங்குற இடமாச்சே

சக்தி கல்வி மையம் said...

present.,

சக்தி கல்வி மையம் said...

உங்ககிட்ட ஒரு கன்ட்டினுட்டி இல்லையே?
புரியுதா?

மாணவன் said...

//மேற்கண்ட கதைகளால் செல்வா போன்ற அறிவாளிகள் தங்களது அறிவுத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் போகிறது என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.. நிச்சயம் உலகம் மாற //

உண்மைதான் நிச்சயம் உலகம் மாற வேண்டும்... இல்லையென்றால் செல்வா போன்ற இந்திய சாக்ராடீஸ்களை உலகம் இழக்க நேரிடும் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா ஸ்ருதி கெடச்சிட்டாளா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
OMR தாள் //

Old Magabalipuram Road? அதுக்கெல்லாமா தேர்வு வைக்கிறாங்க. அது நம்ம பன்னி பிகரோட ஒதுங்குற இடமாச்சே////////

ஆமா இவருதான் மாருதி வேன்ல கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வருவாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு ரெண்டு கதையுமே நல்லாருக்குங்கோ..........

karthikkumar said...

மச்சி முதல் கதை செமையா இருக்கு.... :))

MANO நாஞ்சில் மனோ said...

//அந்தத் தொலைக்காட்சி நிலையம் இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது சற்றே வேதனையான செய்தி!!//

அன்றைக்கே அந்த தொலைகாட்சி மூடபட்டது தெரியாமல் சொல்றியே மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

// சற்றே அச்சத்துடன் சோகமாக அமர்ந்தார்.//

எலேய் அது அச்சமில்லை கொலைவெறி....

MANO நாஞ்சில் மனோ said...

//நிச்சயம் உலகம் மாற வேண்டும்!!//

அதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும்.....

MANO நாஞ்சில் மனோ said...

// அதன் முகவரி http://www.selvakathaikal.blogspot.com/ இது எனபதையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.//

எலேய் பன்னிகுட்டி எங்கலேய்.... கொக்காமாக்கா முன் குறிப்பை பார்த்து சந்தோஷ பட்டேன்....
இந்த நாதாரி அடங்காம புதுசா பிளாக் ஆரம்பிச்சி புலம்ப வச்சிட்டான் கொய்யால...கொன்னேபுடுவேன் அங்கே வந்து....

சி.பி.செந்தில்குமார் said...

முதல் கதை குங்குமத்துல வந்த

கமல் மகள் ஸ்ருதியோட ஏன் வந்திருக்காரு பாகவதரு..? அவருக்கு ஸ்ருதி வர்லையாம்

ஜோக்கோட கதை ஆக்கம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>
இன்னும் சொல்லப் போனால் செல்வா எந்தப் பரீட்சை எழுத்துப் போகிறார் என்றே அவருக்குத் தெரியாது.

இது செம காமெடி லைன்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>>>அந்தத் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் செல்வா கூடுதல் விடைத்தாள் கேட்டார்.

இதைப் பார்த்த ஆசிரியர் " OMR சீட் எக்ஸாம்ல எதுக்கு உனக்கு அடிசனல் சீட் ? "

இந்த ஜோக் அனைவருக்கும் புரிய தனி டிஸ்கியில் அந்த எக்சாம் பற்றி விளக்கவும்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>முன்குறிப்பால் மகிழ்ச்சி அடைந்தோருக்கு ஒரு சோகமான செய்தி. செல்வா கதைகளுக்கு என்று தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அதன் முகவரி http://www.selvakathaikal.blogspot.com/ இது எனபதையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

ரைட்டு.. அப்போ கவிதை, மொக்கை, கதை என 3 தளங்கள் தொடங்கப்படுமோ..?

செல்வா said...

/ சி.பி.செந்தில்குமார் said...
முதல் கதை குங்குமத்துல வந்த

கமல் மகள் ஸ்ருதியோட ஏன் வந்திருக்காரு பாகவதரு..? அவருக்கு ஸ்ருதி வர்லையாம்

ஜோக்கோட கதை ஆக்கம்//



என்னது ஏற்கெனவே வந்திடுச்சா ? ஹி ஹி .. நான் அத படிக்கலையே .. சரி விடுங்க ..

VELU.G said...

செல்வா நான் புள்ள குட்டக்காரன்

ஆள வுடுப்பா எப்பாடியாவது உயிர் பிழைச்சு ஓடிடுறேன்

சௌந்தர் said...

செமையா பயங்கரமா சிரிச்சேன் ரெண்டாவது நல்லா சிரிப்பு வந்தது.....எல்லா கதையை விட இது சூப்பர்

வைகை said...

முதல் கதை செமையா இருக்கு..

வைகை said...

OMR தாள் //

Old Magabalipuram Road? அதுக்கெல்லாமா தேர்வு வைக்கிறாங்க. அது நம்ம பன்னி பிகரோட ஒதுங்குற இடமாச்சே

வைகை said...

அனைவருக்கும் ஒரு நற்செய்தி. இனிமேல் நீங்க திங்கள் கிழமையை நினைத்து பயப்பட வேண்டாம். கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும்///


நல்ல செய்தி :))

வைகை said...

முன்குறிப்பால் மகிழ்ச்சி அடைந்தோருக்கு ஒரு சோகமான செய்தி. செல்வா கதைகளுக்கு என்று தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அதன் முகவரி http://www.selvakathaikal.blogspot.com/ இது எனபதையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.//


கெட்ட செய்தி:))

பாட்டு ரசிகன் said...

எப்படியெல்லாம் ஆபோடுரிங்கப்ப்்
இம்.. ஆகட்டும்..

பாட்டு ரசிகன் said...

/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

Unknown said...

நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரி
..

Mohamed Faaique said...

////ஒரு சமயம் அவர் எட்டாம் வகுப்புப் படித்துகொண்டிருந்தா/////

ஒரு முறையா படிச்சீங்க.... அந்த வகுப்புல மட்டுமே 9 முறை படிசீங்களே!!!

Unknown said...

// கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும்.//

பிளாக்ல எழுதுறத நிறுத்திட்டு, ஆனந்த விகடன்-ல எழுதப்போறீங்களா? எப்படியோ எழுதிக்கொண்டே இருந்தால் சந்தோஷமே...

Unknown said...

// http://www.selvakathaikal.blogspot.com/ //
விதி வலியது..

MoonramKonam Magazine Group said...

சூப்பர் மா