Friday, February 25, 2011

SIM ன் தமிழ்ச் சொல்

கொஞ்ச நாள் முன்னாடி எங்கயோ இரண்டுபேர் SIM க்கு தமிழ்ல என்ன பேரு அப்படின்னு பேசிக்கிட்டிருந்தாங்க. அப்புறம் நேத்திக்கு எதேச்சையா ட்விட்டர்லையும் இது பத்தி பேசிக்கிட்டிருந்ததப் பார்த்தேன்.

எனக்கும் ரொம்ப நாளாவே இதுமேல கொஞ்சம் குழப்பம்தான். இதுக்கு உண்மைலேயே தமிழ்ல இன்னும் பேர் வைக்கலியா இல்ல எனக்குத் தெரியலையா ?

*.SIM : Subscriber Identification Module.

*.CDMA - Code Division Multiple Access.

*.GSM - Global System for Mobile Communications

நான் பெரிசா இழுக்க விரும்பல. இங்க நிறைய தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் இருக்காங்க. அதனால இதுவரைக்கும் SIM க்கு பேர் வைக்கப்பட்டிருந்தால் அது என்ன அப்படின்னு சொல்லுங்க , அப்படி இன்னும் வைக்கப்படலை அப்படின்னா இந்தப் பதிவுல விவாதம் பண்ணி ஒரு பேர் வைங்க.

நான் ஏன் சொல்லுறேன்னா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அதுக்குப் பேர் இல்லைனு சொல்லிட்டு இருக்குறது , நாமளா சிந்திச்சு ஒரு பேர் வைப்போமே. என்னடா கோமாளி கூப்பிட்டு நாம வரதா அப்படின்னு யாரும் நினைக்காதீங்க . தயவுசெஞ்சு ஒரு பேர் வைங்க!

இதப் படிக்கிறவங்க எல்லோரும் நீங்க SIM க்கு என்ன பேர் வைக்கலாம்னு நினைக்கிறீங்க அப்படிங்கிறத பின்னூட்டத்துல சொல்லுங்க.


45 comments:

மாணவன் said...

வடை

Pranavam Ravikumar said...

I am Pass! I am sure somebody will come up with an answer.

சக்தி கல்வி மையம் said...

Present.,நான் கணிணி ஆசிரியர்.. கிரேட் எஸ்கேப்..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

சௌந்தர் said...

செல் பேசி அட்டை....இப்படி வைக்கலாம் மச்சி

மாணவன் said...

எனக்கு தெரிஞ்சவரையும் sim க்கு தமிழ்பெயர் தொகுப்பி , தகவல் அட்டை என்று கேள்விபட்டிருக்கிறேன்....

நண்பர்கள் வேறு பெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

வடை///


சிம் = வடை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிம் அப்டின்னா கேஸ் மெதுவாக எறிவதற்கு வைக்கப்படும் மோடு

ஆர்வா said...

செல்வா மொக்கை போட்டு, மொக்கை போட்டு.. சீரியஸா எழுதுனா கூட அது மொக்கை மாதிரியே தெரியுது.. ஹி.ஹி..

நியூட்டனின் 3ம் விதி

விஜய் said...

"அலைபேசி சந்தாதாரர் அடையாளப்படுத்துதல் அட்டை" என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Unknown said...

// விஜய் said...
"அலைபேசி சந்தாதாரர் அடையாளப்படுத்துதல் அட்டை" என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.//

repeatu

எஸ்.கே said...

விக்கிபீடியாவில் SIMக்கு சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என உள்ளது.

Unknown said...

//"அலைபேசி சந்தாதாரர் அடையாளப்படுத்துதல் அட்டை" //

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Simrana
Innumaa
Marakkala

சிம்ரன இன்னுமா மறக்கல?

அன்புடன் நான் said...

மாணவன் said...
வடை//

மாணவன் தம்பி சிம்முக்கு வடைங்கிற பேரு நல்லாயில்லை.

அன்புடன் நான் said...

நம்மோட passport க்கு கடவுசீட்டுன்னு தமிழில் பேரு இருக்கு.... அது ஒரு அடையாள பேரா பொருந்தி வருவதால்...

அதைபோலவே... sim க்கு “கடவி”ன்னு வைக்கலாம் என்பது என் கருத்து.....

அன்புடன் நான் said...

”எண்குவி”

பொருந்திவருதா?

Speed Master said...

Sim என்பதற்கு அலைப்பட்டை என்று பெயர்

karthikkumar said...

மாணவன் said...
வடை////
வடைன்னு பேர் வெக்க சொல்றியா மச்சி ....:)

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிம் அப்டின்னா கேஸ் மெதுவாக எறிவதற்கு வைக்கப்படும் மோடு

Unknown said...

அப்ப 2 g க்கு தமிழ்ழ எப்படி பெயர் வைக்கலாம் ?

செல்வமுரளி said...

தகவல் செயலி

மொக்கராசா said...

வடை செல்வா தமிழ் வளர்க போறான்......மொக்க செல்வா உண்மையில் தமிழ் வளர்க போறான்....
தேர்தல் நேரத்தில் எதயோ ஞாபக படுத்துற மாதிரி இருக்குது.....

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம மொக்கைன்னு வச்சிருவாங்கன்னு பய நினைக்கிறான் போல....

MANO நாஞ்சில் மனோ said...

டிரிங் டிரிங் கார்ட்...

MANO நாஞ்சில் மனோ said...

மணி மணி அட்டை...

MANO நாஞ்சில் மனோ said...

// மாணவன் said...
வடை//

ச்சே ச்சே இந்த பேர் நல்லா இல்லை....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் said...
Present.,நான் கணிணி ஆசிரியர்.. கிரேட் எஸ்கேப்..//

நீங்க மட்டுமா எஸ்கேப்பு நாங்களும்தான்...

MANO நாஞ்சில் மனோ said...

//சௌந்தர் said...
செல் பேசி அட்டை....இப்படி வைக்கலாம் மச்சி//


செருப்பை கழத்தி அடின்னு தப்பா படிச்சுட்டேன் சாரி....

VELU.G said...

பால் கார்டு மாதிரி கால் கார்டு

okவா

MANO நாஞ்சில் மனோ said...

//மொக்கராசா said...
வடை செல்வா தமிழ் வளர்க போறான்......மொக்க செல்வா உண்மையில் தமிழ் வளர்க போறான்....
தேர்தல் நேரத்தில் எதயோ ஞாபக படுத்துற மாதிரி இருக்குது.....//

எனக்கு புருஞ்சிடுச்சி....

logu.. said...

ஹி..ஹி.. நம்ளையும் நம்பி..


எனக்கு ஒரே சிப்பு சிப்பா வருது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலீங்க..........

ரஹீம் கஸ்ஸாலி said...

சிம்முன்னா என்னன்னு தெரியாதா? வெளங்கிரும் போங்க....சிம்முன்னா சிம்முதான்

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம கடையில் இன்று தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

ஜில்தண்ணி said...

தகப்பி,தகவல் அட்டை அப்டின்னு சொல்லலாம்யா :)

இம்சைஅரசன் பாபு.. said...

சிம்ரனை கலோரி நாட்களில் ..எலேய் இன்னைக்கு சிம்ஸ் நடிச்ச படம் ரிலீஸ் ன்னு சொல்லுவோம் ..அதனால் sim என்றால் சிம்ரன் என்று இன்று முதல் அழைக்கலாம்

முகவை மைந்தன் said...

'வாடிக்கையாளர் அடையாளக் கூறு'ன்னா சரியா வருமா?

ஆனந்தமயம் said...

வாடிக்கையாளர் அடையாள தொகுப்பு தகடு-னு நெனைக்கிறேன். ஆனாலும் மாணவன் சொன்னா மாதிரி வடைனும் சொல்லலாம் :)

அன்பரசன் said...

//எஸ்.கே said...
விக்கிபீடியாவில் SIMக்கு சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என உள்ளது//

இதுவே சரி என தோன்றுகிறது.

Chitra said...

Gas Stove ல குக் பண்ணும் போது, sim ல வச்சு பத்து நிமிஷம் வச்சு குக் பண்ணுங்க என்று ரெசிபி பார்த்தேன்.... அதுக்கும் சேர்த்து கேட்டு சொல்லுங்க... ஹி,ஹி,ஹி,ஹி...

Unknown said...

கைப்பேசிக் குறுந்தகடு ??

பெசொவி said...

ரொம்ப சிரமப்பட வேண்டாம். இந்த அட்டை இல்லைனா அலைபேசியில பேச முடியாது. அதுனால, அலைபேசி அட்டைனு பொதுவா சொல்லிடலாமே!

தேவமதி said...

பயனாளர் குறியீட்டு அட்டை ...... சரியா.

தேவமதி said...

யாரவது சரின்னு sollunggappaa.

THOPPITHOPPI said...

பணம் புடுங்கி